WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள், இடது நட்புக் கட்சிகள் ஓய்வூதியக் குறைப்புக்களுக்கு எதிர்ப்பை கீழறுக்கின்றன
By Kumaran Ira and Alex Lantier
17 September 2010
Use
this version to print | Send
feedback
செப்டம்பர் 15ம் தேதி, பிரான்சின் தேசிய சட்டமன்றம் பொதுமக்களின் எதிர்ப்பபைபெற்ற ஓய்வூதிய சீர்திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இதில் ஓய்வூதியம் பெறும் ஆகக்குறைந்த வயது 60ல் இருந்து 62க்கு உயர்த்தப்பட்டமை, முழு ஓய்வூதியம் பெறும்வயது 65 ல் இருந்து 67 ஆக வயது உயர்த்தப்படுவது ஆகியவை அடங்கும். இச்சட்டவரைவு 329-233 என்ற கணக்கில் இயற்றப்பட்டது. இது அக்டோபர் கடைசியில் சட்டமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியச் சீர்திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பு செப்டம்பர் 7ம் தேதி தொழிற்சங்கம் ஏற்பாடு செய்திருந்த தேசிய நடவடிக்கை தினத்தில் 2.5 மில்லியன் தொழிலாளர்களும், இளைஞர்களும் பங்கு பெற்றது, அதே அளவினர் அரசாங்கத்தின் குறைப்புக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தபின் நடந்தது.
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்த தினத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் தொழிற்சங்கப் போராளிகளும் தேசியச் சட்டமன்றத்திற்கு அருகே உள்ள செயின் நதிக்கு மறுபுறமுள்ள Place de la Concorde ல் சட்டத்தை எதிர்த்துக் கூடியிருந்தனர். சீர்திருத்தத்தை எதிர்த்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஒரு நடவடிக்கை தினத்தை இதன்பின் செப்டம்பர் 23ம் தேதி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளன.
ஒரு அரசியல் போராட்டத்தை நடத்த தொழிலாள வர்க்கத்தைத் அணிதிரட்டும் முயற்சி இல்லாததால்தான் வெகுஜன எதிர்ப்பையும் மீறி அரசாங்கம் இக்குறைப்புக்களைச் சுமத்த முடிகிறது. சீர்திருத்தத்தின் எதிர்ப்பாளர்கள் என்று காட்டிக் கொள்ள முற்படும் விதத்தில் தொழிற்சங்கங்களும் போலி இடதுகட்சிகளான புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்றவை, இழிந்த முறையில் மக்களைத் தவறாக பாதையில் கொண்டுசெல்கின்றன. உண்மையில் இவை குறைப்புக்களை இயற்றும் சட்டத்திற்கு உதவும் வகையில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர் எதிர்ப்பை திசைதிருப்பும்வகையில் பயனற்ற அதிக அளவு ஒருநாள் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றன.
உண்மையில், தொழிற்சங்கங்கள் வெட்டுகளுக்கு ஆதரவு கொடுக்கின்றன. குட்டி முதலாளித்துவப் போலி இடது கட்சிகளும் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றன. இந்த அரசியல் முடிவினைத்தான் பலமுறை நிகழும் ஒருநாள் எதிர்ப்பு நடவடிக்கைளினால் எடுக்கப்பட முடியும். இவற்றால் பிரான்சில் சமூகநலக் குறைப்புக்களை நிறுத்த முடியாது. இந்த அமைப்புக்களின் அறிக்கைகள் மூலமும் இது தெரிய வருகிறது.
ஜூலை மாதம் Le Monde கட்டுரையாளர் மைக்கேல் நோபிள்கோர்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) பொதுச் செயலாளர் பெர்னார்ட் திபோவை மேற்கோளிட்டுள்ளார். “திபோ திட்டமிடப்பட்டுள்ள சீர்திருத்தம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோர மறுக்கிறார், ஏனெனில் “நடவடிக்கைகள்” ஓய்வூதியத் திட்டத்தின் நிதியச் சீர்த்தன்மையை உறுதிப்படுத்த தேவை என்று அவர் கருதுகிறார்.” “அனைத்தும் வேண்டும் இல்லாவிடில் ஒன்றும் வேண்டாம் என்னும் மூலோபாயத்தை நான் ஏற்கவில்லை. பொது வேலைநிறுத்தம் பற்றிப் பேசுவது முட்டாள்தனமாகும்” என்று அவர் கூறியுள்ளார்.
திபோ போன்ற அதிகாரத்துவத்தினர் அரசாங்கத்தினை முதலாளித்துவச் சார்புடைய முன்கருத்துக்களை முற்றிலும் ஏற்கின்றனர். அரசாங்கப் பற்றாக்குறைகளுக்கு நிதி வழங்கும் செலவு தொழிலாளர் வர்க்கத்தால் ஏற்கப்பட வேண்டும் என்று திபோ விரும்புகிறார். அது சமூகச் செலவுகளைக் குறைக்கும் வகையில் தொழிலாளர்களின் செலவுகளைக் குறைத்து, பிரெஞ்சு முதலாளித்துவத்தின் போட்டித்தன்மையை உலகச் சந்தைகளில் அதிகரிக்க உதவும் என்கின்றனர். ஆனால் பிரச்சினையை இது அணுகவில்லை. அப்படியானால் அவர்கள் ஆதரிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவை ஏன் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுகின்றன?
சமூகச் செலவுக் குறைப்புக்கள் பற்றி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தும் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் ஒரு நாள் வேலைநிறுத்தங்கள் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முக்கியம் என்று கருதுகின்றனர். ஏனெனில் மக்கள் சீர்திருத்தத்திற்கு காட்டும் எதிர்ப்பு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை காட்ட அவை உதவுகின்றன. France 2 தொலைக்காட்சியில் பிரதம மந்திரி Francois Fillon கூறினார்: “ஒவ்வொரு கடந்தகால சீர்திருத்தத்தின் போதும், எதிர்ப்பு இருந்திருக்கிறது; ஆர்ப்பாட்டங்கள் இருந்திருக்கின்றன…..இறுதியில் ஒவ்வொரு கடந்தகால சீர்திருத்தமும் நம் நாட்டின் சமூக மரபியத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது.”
செப்டம்பர் 11ம் தேதி Le Monde க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் Institute of Political Stufdies (Sciences-Po) வின் Jean-Marie Pernot இந்த எதிர்ப்புக்கள் “சீர்திருத்தத்தைத் தோற்றுவிக்கும் நிகழ்போக்கின் ஒரு இடைக்காலகட்டமாகும்” என்று அப்பட்டமாகக் கூறியுள்ளார். விட்டுக்கொடுக்காத வேலைநிறுத்த நடவடிக்கைகள் பிரெஞ்சு பொருளாதாரத்தை நிறுத்தத்திற்கு கொண்டுவந்து அரசாங்கத்தின் குறைப்புக்களைத் தடுக்கும் என்று குறிப்பிடும் Perriot, “ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் சமூக ஆலோசகரான ரேமண்ட் சௌபி ஆர்ப்பாட்டங்களைவிட வேலைநிறுத்தங்களுக்கு அதிக கவனம் கொடுக்கிறார்” என்றார்.
ஆனால், “பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு கொடுக்கும் இயலுமையை கைவிடமுடியவில்லை என்று தோன்றுகிறது” என்று PERNOIT கூறியுள்ளார். இது ஓரளவிற்குத் தவறான கருத்தை முன்வைப்பது ஆகும். ஏனெனில் தொழிற்சங்கங்கள் இன்னும் சட்டப்பூர்வ வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. தொழிற்சங்கங்களின் செயலற்ற தன்மைக்கு அரசியல் காரணங்களே தவிர சட்டரீதியான காரணங்கள் அல்ல. தொழிற்சங்கங்கள் பெரிய தொழில்துறை நடவடிக்கைக்கு அழைப்பு விடாத காரணம் தொழிற்சங்கத் தலைமை ஆதரவு கொடுக்கும் சமூகக் குறைப்புக்களுக்கு அவை எதிரானவை ஆகும்.”
கிரேக்கத்தில் சமீபத்தில் நடந்த பொருளாதார நடவடிக்கையின் அனுபவமும் இதுதான். கடந்த ஆண்டு PASOK யின் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் சமூக ஜனநாயக அரசங்கம் போலி உறுதிமொழிகளை அடுத்துத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர் 3 பில்லியன் யூரோக்கள் சமூகநலத் திட்டங்களை தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்களை உயர்த்த இயற்றுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் அதிகாரத்திற்கு வந்தவுடன் அவர் சமூகநலச் செலவுகளைக் குறைத்து, பொதுத்துறை ஊதியங்களைக் குறைத்து ஓய்வூதிய வயதையும் உயர்த்தினார். இதனால் கிரேக்கத் தொழிலாளர்களின் வாங்கும்திறனின் சராசரிக் குறைவு மிகஅதிகமான 30 சதவிகிதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
PASOK கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் GSEE, ADEDY தொழிற்சங்கங்கள் PASOK அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து தொழிலாளர் வர்க்கத்தை நிலைகுழம்ப செய்தன. ஊதியங்களைக் குறைப்பதில் கடுமையான வெட்டுக்களைச் செயல்படுத்தியதிலும், சமூகநலச் செலவுகளைக் குறைப்பதிலும் வெற்றிகரமாக உதவின. பல தேசிய நடவடிக்கை தினங்களுக்கு அவை அழைப்பு விடுத்த போதும், அதே நேரத்தில் பாப்பாண்ட்ரூவுடன் குறைப்புக்களுக்கான பேச்சுவார்த்தைளையும் நடத்தின. கிரேக்க பாரஊர்தி சாரதிகள் கிரேக்கப் பொருளாதாரத்தை சுயாதீன வேலைநிறுத்தம் மூலம் முடக்கி பாப்பாண்ட்ரூவின் குறைப்புக்களை கேள்விக்குட்படுத்த முயன்றபோது, தொழிற்சங்க அதிகாரத்துவம் பாப்பாண்ட்ரூ வேலைநிறுத்தத்தை நசுக்க இராணுவத்தைப் பயன்படுத்தியதற்கு ஆதரவு கொடுத்தது.
குறைப்புக்களை எதிர்ப்பதால் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுவதில்லை, மாறாக அரசாங்கம், நிதியத் தன்னலக்குழுவுடன் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகத் தாங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பை மூடி மறைப்பதற்காகத்தான். தற்போதைய ஓய்வூதியக் குறைப்பு தொழிலாளர் வாழ்க்கைத் தரங்கள் மீது ஐரோப்பிய ஆளும் வர்க்கம் நடத்தும் பரந்த தாக்குதலின் ஒரு பகுதிதான். ஏனெனில் வங்கிகளும் நிதியச் சந்தைகளும் ஐரோப்பாவின் பல தேசிய அரசாங்கங்களுக்குக் கொடுக்கும் வட்டி விகிதத்தை உயர்த்தும் அச்சுறுத்லைக் கொடுக்கின்றன.
அது செலவுகளைக் குறைக்காவிட்டால் கடன்தரம் மதிப்பிடும் அமைப்புக்கள் (credit-rating agencies) பிரான்சின் உயர்ந்த AAA கடன்தர மதிப்பீட்டை அகற்றிவிடும் என்று அச்சுறுத்துவதாகப் பிரெஞ்சு அரசாங்கம் பரந்த அளவில் நிதியச் செய்தி ஊடகத்தில் தன்னுடைய அச்சங்களைத் தெரிவித்துள்ளது. பொதுச் செலவுகளை 100 பில்லியன் யூரோக்களை குறைக்க இது திட்டமிட்டுள்ளது. இது பிரான்ஸின் பொதுப் பற்றாக்குறையை 8%இல் இருந்து யூரோப்பகுதி கட்டாயப்படுத்தும் 3%இற்கு 2013க்குள் கொண்டுவரும். திட்டமிடப்பட்டுள்ள ஓய்வூதிக் குறைப்புக்களுடன் இணைந்து, அரசாங்கம் ஓய்வூதிய வயதை உயர்த்தும் அதன் திட்டம் 2018க்குள் 19 பில்லியன் யூரோக்களை சேமிக்க உதவும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
சார்க்கோசி அரசாங்கத்தை அதிர்விற்கு உட்படுத்தியுள்ள ஒரு நிதிய ஊழலுக்கு இடையே ஓய்வூதியக் குறைப்புக்கள் திட்டமிடப்பட்டு வருகின்றது. சார்க்கோசியும் ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்டத்திற்கு பொறுப்பான அவருடைய தொழில்துறை மந்திரி எரிக் வோர்த்தும் பிரான்ஸின் பெரும் பணக்காரப் பெண்மணியான லில்லியன் பெட்டன்கோரிடிம் இருந்து சட்டவிரோத தேர்தல் நிதிப் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அவருக்கு இதனால் சார்க்கோசியின் செல்வந்தர்களுக்குவரி விலக்குகள்மூலம் 100 மில்லியன் ஆதாயம் கிடைத்தது.
தொழிற்சங்கங்களுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பிற்கான உயரும் அடையாளங்களும் தெரிகின்றன. பிரான்சில் ஒரு கருத்துகணிப்பெடுப்பு செப்டம்பர் 7 ஆர்ப்பாட்டங்களின் போது 62 சதவிகித மக்கள் “இதைத் தொடர்ந்து செயற்பாடுகள் வேண்டும்” என்று கருதியாதாகத் தெரிவித்துள்ளது. இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் தினம் வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஆனால் மற்றொரு கருத்துக்கணிப்பின்படி 63 சதவிகிதத்தினர் ஒருநாள் எதிர்ப்புக்கள் ஓய்வூதியக் குறைப்புக்களில் எந்தப் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற நம்பியதைக் காட்டுகிறது. இந்த நிலைப்பாடு ஒரு சில ஒரு நாள் எதிர்ப்புக்களுக்குப் பின்னர் சார்க்கோசி இயற்றிய பல சமூகநலக் குறைப்புக்களின் கசப்பான அனுபவத்தால் உறுதியாகிறது.
தொழிலாளர் வர்க்கம் தொழிற்சங்கங்களுடன் புறநிலையாக எதிர்ப்பிற்கு வந்துள்ள சூழ்நிலையில், போலி இடது கட்சிகளான NPA போன்றவை மக்களின் நிலைகுழப்புவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. அவை தொழிற்சங்கக் கட்டுப்பாட்டிற்குள் நடக்கும் எதிர்ப்புக்களை உண்மையான சமூகப் போராட்டம் என்று சித்தரிக்கின்றன. ஆனால் இது உண்மையில் அரசியல் நடைமுறையின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்தும் முயற்சி மட்டுமல்லாது அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்தும் தன்னலக்குழுக்களுக்கு எதிரான தொழிலாளர்கள் இயக்கத்தை தடைக்கு உட்படுத்தப்படுத்துவதாகும்.
NPA நடைமுறை முதலாளித்துவ “இடது” கட்சிகளான சோசலிச கட்சி (PS) மற்றும் அதன் துணைக்கோள்களான PCF, பசுமை வாதிகள் ஆகியவற்றுடன். நெருக்கமாக ஒத்துழைக்கிறது. தொழிற்சங்கங்களின் நடவடிக்கை தினத்தில் முழு இடதின் ஒற்றுமையான ஆதரவும் குறைப்புக்களுக்கு எதிரான போராட்டத்திற்கு முக்கியம் என்று அது வலியுறுத்துகிறது.
ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற NPA உடைய கோடைக்கால கல்லூரியில், NPA உடைய செய்தித் தொடர்பாளர் ஒலிவியர் பெசன்சிநோ கூறினார்: “சமூக நெருக்கடி ஒரு அரசியல் நெருக்கடியாகவும், பின்னர் முழு ஆட்சியின் நெருக்கடியாகவும் மாறக்கூடும். ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில்தான் இது நடக்கும். அதாவது இடதில் பக்கமுள்ள எவரும் நடுங்கக் கூடாது. நாம் உறுதியாக இருக்க வேண்டும், சட்ட வரைவு மாற்றி எழுதப்பட வேண்டும் என்று இல்லாமல் திரும்பப் பெற வேண்டும் என்று கோருவதில் உறுதியாக இருக்க வேண்டும்.” பின்னர் அவர் ''ஒரு ஒன்றிணைந்த இயக்கத்தின் பொது வேலைநிறுத்தத்திற்கு'' அழைப்புவிட்டார்.
ஒரு “பொது வேலைநிறுத்தத்திற்கு” பெசன்ஸநோவின் அழைப்பு தவறானதும் பொய்யானதும் ஆகும். அரசியல் நடைமுறையில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் தொழிலாளர்களின் சுயாதீன இயக்கத் திட்டத்தை முன்வைக்கவில்லை. மாறாக தொழிற்சங்கக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இயக்கம் ஒன்றை முதலாளித்துவ “இடது” கட்சிகளுடனை இணைந்து நடத்தவேண்டும் என்கிறார். LCI-RTL தொலைக்காட்சியில் பெசன்சிநோ, “சோசலிச கட்சியுடன் நாங்கள் சேரமுடியும், எங்கள் வேலைத்திட்டங்களைக்கூட இணைத்துக் கொள்ள முடியும்” என்று விளக்கினார்.
இது வெற்றியடைய வேண்டும் என்றால், அத்தகைய இயக்கத்தின் தவிர்க்க முடியாத விளைவு சோசலிஸ்ட் கட்சி அதிகாரத்திற்கு மீண்டும் திரும்பி வருவதுதான். இது பாப்பாண்ட்ரு வகையில் சிக்கன நடவடிக்கை வருவது போல்தான் இருக்கும்-அதாவது, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சோசலிச கட்சி தலைவர் பிரான்சுவா மித்திரோன் மற்றும் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் உடைய செல்வாக்கற்ற சிக்கன மற்றும் தனியார்மயமாக்கும் கொள்கைகள் மீண்டும் தொடரப்படும் என்பதுதான்.
இது வெளிப்படையாக முக்கிய சோசலிச கட்சி பிரதிநிதிகளால் ஆண்டின் தொடக்கத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தாலும், இப்பொழுது அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை NPA, PCF உடன் ஒத்துழைப்பை வசதிப்படுத்த மாற்றுகின்றனர். ஓய்வூதிய வயது 60 ஆகத் திரும்பு ஆதரவு கொடுப்பதாக அவர்கள் கூறுகின்றனர். மற்ற கொள்கைகள் எவை ஏற்கப்படும் என்ற விவாதத்தைக் கட்சிக்குள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
இத்தகைய நிலைப்பாட்டை ஏற்ற முக்கிய “இடது” பிரதிநிதிகள், உண்மையில் சோசலிச கட்சி இன்னும் சமூகச் சிக்கன நடவடிக்கைகளுக்க ஆதவு தருகிறது என்பதை ஒப்புக் கொள்கின்றனர். ஒரு முன்னாள் சோசலிச கட்சி உறுப்பினர், இப்பொழுது அரசியல்ரீதியாக PCF உடன் இணைந்தவரான JEAN-LUC MELENCHON, விளக்கினார், “நான் எவ்வளவிற்கு வஞ்சனையாக பதிலளிக்க முடியுமோ அவ்வாறு பதிலளிப்பேன். எங்களுக்குள் உடன்பாடு இருப்பதாக நாங்கள் பாசாங்குத்தனமாக முடிவெடுத்துள்ளோம். ஆனால் அத்தகைய நிலை இல்லை என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.”
கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான உண்மையான போராட்டத்திற்கு முன்னிபந்தனை தொழிலாள வர்க்கம் சுயாதீனமாகவும், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் நடைமுறைக்கு எதிராகவும் அபிவிருத்தியடைய வேண்டும். அத்தகைய போராட்டத்திற்கு முன்னிபந்தனை வர்க்க கூட்டுழைப்புக் கருத்துக்களை கொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் குட்டி முதலாளித்துவக் கட்சிகள் முற்றிலும் மதிப்பிழந்துபோக வேண்டும் என்பதுதான். |