WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
The NPA and the French regional elections: A case history of opportunism
NPA மற்றும் பிரெஞ்சு பிராந்திய தேர்தல்கள்: சந்தர்ப்ப வாதத்தின் வரலாற்றுச் சான்று
By Anthony Torres
15 September 2010
Back
to screen version
கடந்த மார்ச் மாத பிரெஞ்சுப் பிராந்திய தேர்தல்களில், புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) ஒரு இளம் முஸ்லிம் வேட்பாளர், இல்ஹம் மௌசைட்டை அதன் பட்டியலில் Vaucluse தொகுதிக்காக தென்கிழக்கு பிரான்சில் நிறுத்தியது. மௌசைட் முஸ்லிம்களுக்கான தலை மறைப்பு அணிபவர்.
குடியேற்றப் புறநகர்ப் பகுதிகளில் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் பர்க்கா-எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு செல்வாக்கு இல்லை என்பதை நன்கு அறிந்த NPA ஆனது தங்கள் வேட்பாளரை நிறுத்தியதற்குக் காரணம் இப்பகுதிகளில் ஆதரவைத் திரட்டுவதற்குத்தான். பிராந்தியத் தேர்தல்கள் முடிவடைந்தபின் NPA அவரைக் கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டது.
மௌசைட்டின் வேட்பு மனு குறித்து NPA ன் நடவடிக்கை முற்றிலும் கொள்கையற்றதாகும். இது மத சுதந்திரத்தை கோட்பாட்டு ரீதியாக பாதுகாப்பது மற்றும் மதம் குறித்த மார்க்சிச ஆய்வு இரண்டையும் NPA நிராகரிப்பதைப் பிரதிபலிக்கிறது. மத அடிப்படையில் முஸ்லிம் மக்களிடையே செல்வாக்கை பெற முயற்சித்ததுடன், NPA ஆனது விரைவில் முதலாளித்துவ செய்தி ஊடகம் ஆரம்பித்த மௌசைட்-எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் NPAக்குள் பெண்ணியல்வாதிகள் பிரதிபலித்த எதிரொலிக்கு அடிபணிந்தது.
மௌசைட்டின் வேட்பு மனு அறிவிக்கப்பட்டபோது, முதலாளித்துவ செய்தி ஊடகம் அவருக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தைத் தொடக்கியது. செய்தி ஊடகத்தின் பிரிவுகள் தலை மறைப்பை அணிந்த ஒரு பெண் தேர்தல்களில் பங்கு பெறுவதை “ஜனநாயக-விரோதச் செயல்” என்று கண்டித்தன. NPA உறுப்பினர்களே மௌசைட்டிற்கு எதிரான இப்பிரச்சாரத்தில் பங்கு கொண்டனர்.
பெப்ருவரி 18ம் தேதி Liberation ல் “Out With Every Veil’ என்ற தலைப்பில் வந்த கட்டுரையொன்று மௌசைட்யின் வேட்பு மனுவை செய்தி ஊடகத்தில் கையாண்டது குறித்து பரிசீலித்தது. “பெப்ருவரி 2ம் தேதி செவ்வாயன்று Figaro இல் வந்த கட்டுரையுடன் இவைகள் அனைத்தும் ஆரம்பித்தன. விரைவில் இரு செய்திக்குறிப்புக்களில் அன்றே வெளியிடப்பட்டதுடன் Vaucluse NPA தெரிவென்பது தீவிர, சிக்கல் வாய்ந்த விவாதத்திற்கு பின்னர் அதன் பட்டியலில் ஒரு சர்வதேசியவாதி, முதலாளித்துவ-எதிர்ப்பாளர், பெண்ணியல்வாத உறுப்பினர், இருப்பினும் தன் மத நம்பிக்கைகளினால் தலை மறைப்பை அணிபவரைச் சேர்க்க வேண்டும் என்று விளக்கப்பட்டது.”
TF1 தொலைக்காட்சிப் பிரிவானது வலதுசாரி பெண்ணியல்வாத அமைப்பான Ni Putes ni soumises (Neither Whores Nor Submissive) இன் தலைவர் Sihim Habchi அறிக்கையை தகவலாகக் கொடுத்தது. Habchi தான் “NPA பட்டியலுக்கு எதிராக புகார் கொடுக்கப்போவதாகவும், அப்பட்டியலில் தலை மறைப்பு அணிந்த இல்ஹம் மௌசைட் உள்ளார் என்று அவர் அறிவிக்கப்பட்டதன் நோக்கம் தலை மறைப்பு அணிவதை அவர் தொடரப் போவதாகவுள்ளது” என்று அறிவித்தார். அவர் Agence France Presse (AFP) ஐ, “குடியரசு-எதிர்ப்பு, மதசார்பற்ற தன்மைக்கு-எதிர்ப்பு மற்றும் பெண்ணியல்வாத-எதிர்ப்பு அணுகுமுறைக்காக” கண்டித்தார்.
ஒரு முஸ்லிம் பெண் மத உடையை அணியும் உரிமைக்காக தேர்தலில் அவர் நிற்பதை Habchi நிராகரித்தார். “மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு பெண் தேர்தலில் நிற்கக் கூடாது, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர் என்ற முறையில் நடுநிலை, நிதானம் ஆகியவை கட்டாயம் தேவை” என்றார் அவர்.
Le Monde ல் வந்த கட்டுரை ஒன்றில் Caroline Fourest “தொழிலாளர் வர்க்க புறநகர்ப் பகுதிகளில் அடிப்படைவாதம் பெரிதும் உள்ளது” என்று கண்டித்து, NPA “இஸ்லாமியர்களுக்கு பயனளிக்கும் முட்டாளின் பங்கைக் கொண்டுள்ளது” என்றும் குற்றம் சாட்டினார்.
Le Monde, Frederi Bourgade உடைய கருத்துக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இவர் ஒரு “NPA க்கு பரிவு காட்டுபவர், அதற்கு வாக்களிப்பவர்.” அவர் மௌசைட் அணியும் தலை மறைப்பைக் கண்டித்துக் கட்டுரையைத் தொடங்கினார். “ஒன்றாகக் கூடுதல், கலந்து பேசுதல் என்பவற்றை மத மாற்றம் தவிர அவர் நிராகரிப்பதைத்தான் இது தெளிவாக வெளிப்படுத்துகிறது. எனவே இது அவருக்கு அன்பின் தடையற்ற விருப்பத்திற்கு எதிராக மதப் பரிமாணத்திற்குத்தான் முன்னுரிமையைக் கொடுக்கிறது. இப்பரிமாணம் கருக்கலைப்பு உரிமையை ஒதுக்குகிறது, ஏனெனில் குழந்தைகள் கடவுளின் கொடை எனக் கருதப்படுகின்றன. நம் தோழர் கூறும் பெண்ணியல்வாதம் எங்கே, என்பது எனக்குப் புலப்படவில்லை.”
Le Monde அதன் பெப்ருவரி 9ம் தேதி பதிப்பில் மார்செய்யின் NPA ஒரு தலைவரான Samuel Joshua வை மேற்கோளிட்டுள்ளது. அவரும் “சந்தேகத்திற்கு உரியவர்தான்”. செய்தியாளரிடம் அவர் கூறியது: “இது ஒரு நல்ல தெரிவா? தலை மறைப்பு பெண்களை அடக்குவதின் அடையாளம் ஆகும். இல்ஹம் அதை அப்படிப் பார்க்கவில்லை, ஆனால் நாம் அது சாதாரணமானது என்று எடுத்துக் கொள்ள முடியாது.” மேலும் NPA இப்பிரச்சினையில் “வெடிப்புத்தன்மை” பெறும் என்றும் அவர் அஞ்சினார்.
NPA மௌசைட்டின் பாதுகாப்பிற்கு வந்தது அதிகபட்சம் அரை மனதுடன்தான். NPA செய்தித் தொடர்பாளரான ஒலிவியே பெசன்ஸிநோ மௌசைட்டின் வேட்பு மனு “புறநகர்ப் பகுதிகளில் நம் வேர்கள் இருப்பதின் பிரதிபலிப்பு” என்றார்.
“உணர்ச்சியான” புறநகர்ப் பகுதிகளில் NPA இன் வேலைகளுக்கு பொறுப்பான Omar Slaouti கூறினார்: “நம் திட்டத்தை ஏற்கும் உறுப்பினர் அவர். அவரும் பெண்ணியல்வாதிதான். உறுப்பினர் தகுதியில் இரு தரங்கள் வேண்டும் என்னும் பேச்சுக்கு இடமில்லை.”
பெப்ருவரி மாதம் Ni putes ni soumises மற்றும் எகிப்தைத் தளமாகக் கொண்ட Arab Women/s Solidarity Organization மார்செய் நிர்வாக நீதிமன்றத்தில் ஒரு வேண்டுகோளைப் பதிவு செய்தது. அதில் NPA பட்டியில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்வதை Prefet நிராகரிக்க வேண்டும், ஏனெனில் ஒரு தலை மறைப்பு பெண்மணி வேட்பாளராக உள்ளார் என்று கோரப்பட்டிருந்தது. ஆனால் மாவட்ட அரச நிர்வாக உயர்அதிகாரி (Prefet) பட்டியலை ஏற்றுவிட்டார்.
அரசாங்கமானது வேட்பாளரின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அணிதிரட்ட முற்படும் பிற்போக்குத்தனத்தைக் கண்டித்து NPA எந்தப் பிரச்சாரத்தையும் நடத்தவில்லை. வேட்பாளருக்கு ஆதரவாக பகிரங்க அறிக்கையையும் வெளியிடவில்லை.
மௌசைட்டின் வேட்பு மனுவும் NPA யின் தன்மையும்
பெப்ருவரி ஆரம்பத்தில் Figaro மௌசைட்டைப் பேட்டி கண்டு அவரைப் பற்றியச் சித்திரத்தையும் கொடுத்தது. 2006ல் இருந்து அவர் AJCREV அமைப்பில் பங்கு பெற்று வருகிறார், Avignon ல் குழந்தைகளுடன் பணிபுரிகிறார். ஈராக் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார், காசாப் படுகொலைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திலும் பங்கு பெற்றார். அங்கு அவர் NPA உறுப்பினர்களைச் சந்தித்தார்.
2007 ஜனாதிபதித் தேர்தலில் சோசலிஸ்ட் வேட்பாளர் செகோலீன் ரோயலுக்கு வாக்களித்தபின், அவர் Avignon ல் “மக்கள் குழு” எனப்பட்ட NPA அமைப்பில் 10 செயற்பாட்டாளர்களுடன் சேர்ந்திருந்தார்.
Figaro விளக்குகிறது: “மார்க்ஸ்? இவருக்கு அவரைப் பற்றித் தெரியாது. அவர் நூல்களில் ஒன்றைப் படிக்கத் தொடங்கினார், ஆனால் அதன் தலைப்பு நினைவில் இல்லை. நம்பிக்கையுடையவர் அவருடைய “ கடவுள் நம்பிக்கை” அவரை NPA இடம் கொண்டுவந்துள்ளது என்று கூற அச்சப்படவில்லை—அநீதிக்கு எதிராக, “பண ஆட்சிக்கு” எதிராக.”
மௌசைட் கருத்துப்படி “மார்க்ஸ் மார்க்ஸ் தான், ஆனால் 2010 இல் NPA உறுப்பினர்கள் அப்படி அல்ல! LCR ல் இருந்து NPA க்கு நாங்கள் ஏன் சென்றோம் என்பது பற்றி நீங்கள் நினைவிற் கொள்ள வேண்டும். தொழிலாள வர்க்கப் பகுதிகளிலும் ஆதரவு திரண்டதால். நாம் ஒரு புரட்சிகரக் கட்சி, இல்லையா? நன்று, புரட்சியுடன் தொடங்குவோம்.”
மௌசட்டுடன் நடந்த பேட்டி NPA யின் தன்மை பற்றி மிகச் சரியாகப் பிரதிபலிக்கிறது. “மௌசட்டிடம் மார்க்சிச பயிற்சி ஏதும் கிடையாது, மார்க்சிடமோ ட்ரொட்ஸ்கியிடமோ அதிக ஆர்வம் கிடையாது. NPA ஐ நோக்கி ஈர்த்த காரணம், அதன் மூலம் போராடலாம் என்று நம்பியதும், பிரெஞ்சு அரசாங்கம் துன்பத்திற்கு உட்படுத்தும் மதமாக அவர் கருதும் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு போராடுவதுதான்.
NPA ஆனது அதன் உறுப்பினர்களுடன் ஒரு சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கிற்காகப் போராட விரும்பவில்லை, மக்களிடையே செய்தி ஊடகம் மற்றும் முதலாளித்துவக் கட்சிகள் தன்னார்வத்துடன் தோற்றுவித்திருந்த மதக் கருத்துக்கள், சிந்தனைகளை ஏற்றல் என்ற முறையில்தான் செயல்படுகிறது.
NPA ஒரு மதச் சார்பற்ற கட்சி என்னும் கருத்து பற்றிச் சிறப்பாகக் கூறவேண்டும். நடுநிலை மற்றும் மதப் பிரச்சினைகளில் அரசு தலையிடாது என்ற கொள்கையை பிரதிபலிக்கையில், மதச் சார்பற்ற தன்மை என்பது ஒரு ஜனநாயகக் கொள்கை ஆகும், சோசலிச இயக்கத்தின் ஆதரவிற்கு உட்பட்டது. ஆனால் NPA தன்னை மதச் சார்பற்றது என்று கூறிக் கொள்கையில், அடிப்படை அரசியல் பிரச்சினைகளில் அது தெளிவான அரசியல் நெறிக்குப் போராடுவதாக குறிப்பைக் காட்டவில்லை.
ஒரு புரட்சிகரக் கட்சி ஒன்றும் ஒரு கதம்பக் கட்சி அல்ல. மார்க்சிச கட்சியானது தன்னை தத்துவார்த்த வரலாற்றுச் சடவாதம் மற்றும் 20ம் நூற்றாண்டு முழுவதும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கப் போராட்ட மரபியத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது. அதன் அரசியல் மற்றும் மெய்யியலில் NPA அத்தகைய கட்சிக்கு எதிரான தன்மையைக் கொண்டுள்ளது, இது மௌசைட்டை அது நடத்திய விதத்திலேயே நன்கு தெரிய வருகிறது.
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மரபியத்தை நிராகரித்த அடிப்படையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட விதத்தில் —அதன் நிறுவன காங்கிரஸில் அது “கம்யூனிஸ்ட்” (அதாவது ஸ்ராலினிச அல்லது மாவோயிச பிரிவிடம் இருந்து) சமூக ஜனநாயக மற்றும் அனார்க்கிஷப் போக்கிலிருந்து “சிறந்ததையே” விரும்புவதாக அறிவித்தது— NPA பல பிற்போக்குத்தன சிந்தனைகளுக்கு ஆதரவு கொடுத்தது. அதில் தொழிலாள வர்க்கத்தின் விடுதலை ஒரு மத நம்பிக்கையுடன் பொருந்தும் என்ற கருத்தாய்வும் இருந்தது.
மௌசைட்டை வெளியேற்றல்
பிராந்திய தேர்தல்கள், அவற்றில் NPA யின் மோசமான நிலைப்பாடு ஆகியவற்றை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் ஒரு செய்தி ஊடகத்திற்கான அறிக்கையை வெளியிடப்பட்டது. Liberation மேற்கோளிட்டுள்ளபடி, அது கூறியது: “மற்றவற்றுடன், ஒரு வேட்பாளராக இருந்திருக்க வேண்டிய ஒரு தலை மறைப்பு அணிந்த வேட்பாளரை இலக்கு கொண்டு NPA க்கு எதிரான செய்தி ஊடகப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, Vaucluse NPA தன்னை மறுசீரமைத்துக் கொள்கிறது.”
இந்த அறிக்கை NPA ன் பிராந்தியத் தேர்தல்களின் வேட்பாளர் பட்டியலின் தலைவர் Jacques Hauyé யால் கையெழுத்திடப்பட்டது. அது தொடர்ந்து கூறுவது: “பெண்ணியல்வாதம், மத சார்பற்ற தன்மை பற்றிய குழுக்கள் இஸ்லாமைப் பயன்படுத்துவது பற்றி வருந்துகின்றன. வேட்பாளரே இதற்கு உடந்தையாக இருந்துள்ளார். அவருடன் இணைந்து ஒரு சுயாதீனக் குழுவின் தீவிர ஆதரவுடன் இது நடந்துள்ளது.”
ஒரு மதச் சார்பற்றவர், முதலாளித்துவ எதிர்ப்புப் போராளி என்று பிராந்தியத் தேர்தல்களின் போது அறிமுகப்படுத்தப்பட்டவர் ஒரு மாதத்திற்குள்ளாகவே “இஸ்லாமைப் பயன்படுத்திக் கொண்டார்” என்ற காரணத்தைக் காட்டி கட்சியை விட்டு அகற்றப்பட்டுள்ளார்.
மே மாதம் ஒரு NPA கருத்துக் கட்டுரை ஒன்றில் சமூகவியல் பேராசிரியர் Josette Trat, இன்னும் கட்சியின் தேசியத் தலைமை உறுப்பினர்கள் மற்றவர்களும் மௌசைட்டை கண்டித்தனர். “இல்ஹம் வேட்பு மனுவைப் பொறுத்தவரை Vaucluse உறுப்பினர்கள் முடிவுகளின் மாறுபட்ட விதத்தில், NPA ஆனது ஒரு தேசியப் பரிமாணம் கொண்ட முடிவெடுக்க வேண்டிய பொருளில் ஒரு கூட்டு விவாதமானது மிகக் குறைந்த தன்மையைக் கொண்டிருந்ததாக நாங்கள் கருதுகிறோம். அதுவும் விவாதம் தொடங்கு முன்னரே அது முடிக்கப்பட்டுவிட்டது. முதலில் NPA மதச் சார்பற்ற நிலைக்கு தன்னை அளித்துள்ளது என்பதை நினைவிற் கொள்வோம்.”
மௌசைட் ஒன்றும் இஸ்லாமைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தனக்கு ஒரு இடது மறைப்பு தேவை என்பதற்காக, NPA ஏற்றுக் கொள்கிற பிற்போக்குத்தன பர்க்கா-எதிர்ப்புக் கொள்கைகளுக்கு எதிராக குடியேறியவர்கள் மற்றும் தொழிலாளர்களின் சீற்றத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியாக NPA தான் மௌசைட்டைப் பயன்படுத்திக் கொண்டது. |