சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China-South Africa deals highlight great-power rivalry in Africa

சீன-தென்னாபிரிக்க உடன்படிக்கைகள் ஆபிரிக்காவில் பெரும் சக்திகளின் போட்டியை எடுத்துக்காட்டுகிறது

By Zac Hambides
13 September 2010

Use this version to print | Send feedback

ஆகஸ்ட் 24ல் இருந்த 26 வரை 400 வணிகப் பிரதிநிதிகள் மற்றும் 11 அரசாங்க மந்திரிகள் கொண்ட குழுவுடன் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகப் ஜுமா பெய்ஜிங்கிற்கு வருகை தந்தது ஆபிரிக்க கண்டத்திற்குள் சர்வதேசப் போட்டி தீவிரமாகியுள்ளதற்கு மற்றொரு அடையாளமாகும்.

மொத்தம் 12 உடன்படிக்கைகள் கையெழுத்திட்டமை உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரத்துடன் பொருளாதார, அரசியல் பங்காளித்தனத்தை வளர்க்க விரும்பும் தென்னாபிரிக்காவின் முயற்சிகளைக் காட்டுகிறது. முக்கிய உடன்படிக்கைகளில், ஒரு புதிய டைட்டானியம் சுரங்கம் கட்டமைத்தல், தென்னாபிரிக்காவில் வார்ப்பு இரும்புத் தயாரிப்புத்தளம் அமைத்தல் அடங்கும். இவற்றை கட்டுவதில் சீன நிறுவனங்கள் முக்கிய பங்கைக் கொள்ளும். மேலும் தென்னாபிரிக்கா முழுவதும் புதிய புகையிரதபாதைகள், மின்சார இணைப்புக்கள் அமைப்பதும் அடங்கும். அணுசக்தி தொழில்நுட்பப் பறிமாற்றத்திற்கான பத்திரங்களும் கையெழுத்திடப்பட்டன.

பெய்ஜிங் இதேபோன்ற உள்கட்டுமானத் திட்டங்களை ஆபிரிக்கா முழுவதும் தொடர்ந்துள்ளது. இது முக்கியமாக சீனாவிற்கு தாதுப்பொருட்கள் இருப்புக்களை அனுப்ப வசதியளிப்பதுடன், அதைத்தவிர, புதிய மூலப்பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புக்களும் பெருகும். ஆண்டுப் பொருளாதார வளர்ச்சியை 10% க்கும் மேலாக தக்கவைத்துக்கொள்வதற்கு சீன ஆட்சி ஆபிரிக்காவின் பரந்த இயற்கை வளங்கள், குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு, புதிய சந்தைகள் ஆகியவற்றை தென்னாபிரிக்கா மூலம் பயன்படுத்த முற்படுகிறது. சீனாதான் அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு அடுத்தாற்போல் இக்கண்டத்தில் பெரும் முதலீடு செய்யும் நாடு ஆகும்.

கடந்த தசாப்தத்தில் சீன-ஆபிரிக்க வணிகம் 10 மடங்காக 2001ல் $10 பில்லியனிலிருந்து 2008ல் $107 பில்லியனாக அதிகரித்துள்ளது. சீனாவின் துணை வணிக மந்திரி ப்ஊ ஜியிங் இந்த ஆண்டு ஆபிரிக்காவுடனான வணிகம், ஒப்புமையில் 2009ல் $91 பில்லியன் எனக் குறைந்த பின்னர் $100 பில்லியனையும்விட அதிகரிக்கும் என்று கணித்துள்ளார்.

ஆபிரிக்காவில் மொத்தச் சீன முதலீடு ஐரோப்பிய அமெரிக்க மூலதனத்துடன் ஒப்பிடும்போது சிறியது என்றாலும், இதன் ஆண்டுவளர்ச்சி 10 மடங்காக 2003ல் $80 மில்லியனில் இருந்து 2009ல் $1.36 பில்லியன் என்று உயர்ந்துள்ளது.

தென்னாபிரிக்காவை பொறுத்தவரை, சீன இப்பொழுது அதன் மிகப் பெரிய வணிகப் பங்காளி ஆகும். 2006ல் $4.87 பில்லியனில் இருந்து 2008ல் $15.2 பில்லியன் என்று மும்மடங்கு இது உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, சீனா அமெரிக்காவை விட தென்னாபிரிக்காவின் அதிக ஏற்றுமதிச் சந்தை என்ற நிலைக்கு வந்தது. தென்னாபிரிக்கா $6.7 பில்லியன் மதிப்புடைய இரும்புத் தாதுப் பொருள், பித்தளை, க்ரோம், உயர்ரக மரங்கள், காகிதக்கூழ் ஆகியவற்றை ஒவ்வொரு ஆண்டும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. பெரும்பாலும் மலிவான உற்பத்திப் பொருட்களை $9.45 பில்லியன் மதிப்பிற்கு இறக்குமதி செய்கிறது.

ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியில், ஜுமாவின் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் (ANC) உடைய அரசாங்கம் வளர்ச்சியை அதிகப்படுத்தி சீனாவுடன் $2.7 டிரில்லியன் வணிகப் பற்றாக்குறையை குறைப்பதற்கு அதிக ஏற்றுமதி செய்ய முயல்கிறது. இந்த ஆண்டு தென்னாபிரிக்கா நிதானமாக 2.8 சதவிகித பொருளாதார வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜுமா பெய்ஜிங்கிற்குச் சென்றிருந்தது நான்கு “எழுச்சிபெறும் பொருளாதாரங்களான” பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா (BRIC) ஆகியவற்றிற்குப் பயணித்ததில் கடைசி நாடு ஆகும். இங்கு ஜுமா உடன்படிக்கைகளை தென்னாபிரிக்கா BRIC யில் சேரும் முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொண்டார். இக்குழு ஒரு தளர்ச்சியான கூட்டணி, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் போல் நன்கு நிறுவப்பட்டுள்ள சக்திகளில் உலகச் செல்வாக்கை எதிர்த்து நிற்க முயல்கிறது.

BRIC யில் சேருவதின் மூலம் தென்னாபிரிக்கா தன்னை ஆபிரிக்காவில் ஒரு முக்கிய பிராந்திய சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறது. பெய்ஜிங்கில் கையெழுத்திடப்பட்ட சில உடன்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபை போன்ற ”உலக அரங்கில் கூட்டு முயற்சிகளை” உள்ளடக்குகின்றன. தென்னாபிரிக்கா ஐ.நா.பாதுகாப்புக்குழுவில் இடம் பெற முயல்கிறது. இதற்கு பெய்ஜிங்கின் ஆதரவை நாடவும் முயல்கிறது. 2008ல் தென்னாபிரிக்கா மேலைச் சக்திகளால் சீனா, ரஷ்யாவுடன் சேர்ந்து கொண்டு ஒரு ஐ.நா.தீர்மானம், சீனாவின் நெருக்கமான நட்பு நாடான பர்மிய ஆட்சியைக் கண்டிப்பதற்கு எதிராக வாக்களித்தற்குப் பரந்த அளவில் குறைகூறப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் தென்னாபிரிக்காவில் உள்ள வெளிநாட்டு முதலீட்டில் பாதிக்கும் மேலாகக் கொண்டிருக்கையில், சீனா ஆபிரிக்க பொருளாதாரத்தில் பெற்றுள்ள பெருகிய பொருளாதார கனம் தென்னாபிரிக்க ஆளம் உயரடுக்கினருக்கு அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகளுடன் பேரம் பேச கூடுதல் நிலைப்பாட்டைக் கொடுத்துள்ளது. “ஜுமாவின் சீனக் கொள்கை: நமக்கு நல்லதா அல்லது கெட்டதா?” என்று தென்னாபிரிக்க Times Live ல் செப்டம்பர் 5ம் தேதி வந்த கட்டுரை பின்வருமாறு கூறுகிறது: “தென்னாபிரிக்கா அதன் கொடியை மற்ற சக்திகளுடன் ஒன்றாக இணைத்து கம்பத்தில் ஏற்ற எதிர்ப்புக் காட்டியுள்ளது; உலக விவகாரங்களில் தனக்கென ஒரு பாதையை செதுக்கிகொள்ள விரும்பும் ஒரு நாடாக விளங்குகிறது.”

ஜுமாவின் அரசாங்கம் மேலை அரசுகள் சீனாவைக் குறைகூறியிருப்பதை மீறிச் செயல்படுகிறது. ஆபிரிக்காவில் சீனா விரைவாக செல்வாக்கை வளர்த்துக் கொள்வது பற்றி கவலை கொண்ட மேலை வர்ணனையாளர்கள் அவநம்பிக்கையுடன் சீனா ஆபிரிக்க மக்களையும் இருப்புக்களையும் ஒரு காலனித்துவ சக்தி போல் சுரண்டுகிறது என்று வாதிட்டுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், ஜுமாவிற்கு முன் பதவியில் இருந்த தாபோ மெபெகி ஆபிரிக்கா சீனாவுடன் “ஒரு காலனித்துவ வகை உறவில்” விழக்கூடும் என்ற ஆபத்தைக் கொண்டுள்ளது என்று எச்சரித்தார்.

ஆனால் ஜுமாவின் கீழ் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜுமாவுடன் பெய்ஜிங்கிற்குச் சென்றிருந்த வணிக மந்திரி ரோம் டேவிஸ் ஆபிரிக்காவில் சீனா “புதிய காலனித்துவ செயலில்” ஈடுபடுகிறது என்பதை மறுத்தார். சீனாவினால் தென்னாபிரிக்கா இப்பொழுது மேலை நாடுகளுடன் கூடுதலான பேரம் பேசும் சக்தியை கொண்டுள்ளது என்றும் டேவிஸ் அறிவித்தார். “எங்கள் மூக்கிற்குக் கீழே வைக்கப்படும் காகிதங்களில் இடைவெளி விடப்பட்ட இடங்களில் இனி நாங்கள் வேறு வழியின்றிக் கையெழுத்திடத் தேவையில்லை; இப்பொழுது எங்களுக்கு மாற்றீடு கிடைத்துள்ளது, அது எங்களுக்கு நன்மைதான்.”

ரெனிம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜுமா சீனப் பொருளாதாரச் செல்வாக்கிற்கும் பழைய மேலை சக்திகளுக்கும் இடையே வேறுபாட்டைக் காண முற்பட்டார். “சீன உதவி, உள்கட்டுமான வளர்ச்சியில், ஆபிரிக்காவில் சில குறைந்த வளர்ச்சியுடைய பகுதிகளில், வருங்கால ஆபிரிக்க வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிப்பை கொண்டுள்ளது.” என்றார் அவர். “நாங்கள் இப்பொழுதுதான் ஒரு பரபரப்பான பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம், இந்தப் பயணம் சீனாவிலும், ஆபிரிக்க கண்டத்திலும் எங்கள் மக்களின் வாழ்வில் நிலைத்த முன்னேற்றங்களை ஏற்படுத்தும்.”

ஜுமா சீனாவிற்கு ஆதரவு தருவது ஆபிரிக்க முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் ஸ்ராலினிசத்தின் திவால் தன்மையைப் பிரதிபலிக்கிறது. பனிப்போர்க் காலத்தில், இப்பொழுது ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) இனவெறி கொள்கைக்கு எதிராக அரசியல்ரீதியாக ஸ்ராலினிச சோவியத் ஒன்றியம், சீன ஆட்சிகளால் ஆதரவு பெற்றது. பல ஆபிரிக்க தேசிய இயக்கங்களைப் போலவே, ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் முன்னோக்கு, தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியால் ஆதரவளிக்கப்பட்டது. தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் ஜுமா 1963ல் சேர்ந்தது, முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்காக அல்ல, ஆனால் ஆபிரிக்க முதலாளித்துவத்தின் சில பிரிவுகளுக்கு உலக முதலாளித்துவத்தில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுத் தருவதற்காகவாகும்.

மாவோவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு வார்த்தைஜாலங்களும், “மூன்றாம் உலகத்தின்” கெரில்லாப் போர் முன்னோக்கும் சீனத் தொழிலாள வர்க்கத்தை அப்பட்டமான முதலாளித்துவச் சுரண்டலுக்கு உட்படுத்தும் அரசாங்கமாக அபிவிருத்தியடைய செய்தன. அதேபோல் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தென்னாபிரிக்க முதலாளித்துவத்தின் முக்கிய கருவியாக 1990ல் இனப்பிரிவினை முடிந்த பின் வந்துள்ளது. தொடக்கத்தில் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா பெய்ஜிங், தைப்பே ஆகிய இரண்டு இரு சீன அரசாங்கங்களுடனும் இராஜதந்திர உறவுகளை தக்க வைத்துக் கொள்ள முற்பட்டார். ஆனால் 1996ல் உறுதியாக சீனாவின் பக்கம் திரும்பிவிட்டார்; ஏனெனில் அது உலக முதலாளித்துவத்திற்கு குறைவூதியத் தொழிலாளர் பிரிவின் அரங்கமாக வெளிப்பட்டுவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையே முழு இராஜதந்திர உறவுகள் 1998ல் நிறுவப்பட்டன.

சீனா இப்பொழுது கணிசமான மூலதனத்தையும் ஏற்றுமதி செய்யும் நிலையில் இருக்கும்போது, அதன் முதலாளித்துவ உயரடுக்கு ஆபிரிக்காவில் உள்ள முக்கிய மூலப்பொருட்களை அடைவதில் ஆக்கிரோஷமாகச் செயல்படுவதில் தயக்கத்தை காட்டவில்லை. சீன காலனித்துவமயமாக்கல் என்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சீனாவில் உள்ள வர்ணனையாளர்கள் அதன் செயற்பாடுகள் முன்னைய காலனித்துவ சக்திகளிடம் இருந்து மாறுபட்னவாக இல்லை என்றுதான் குறிப்பிடுகின்றனர். அரசாங்கம் நடத்தும் Global Times சமீபத்தில் பின்வருமாறு அறிவித்தது: “ஆபிரிக்காவில் சீனாவின் நடத்தை மேற்கு சக்திகள் உருவாக்கிய நடைமுறைகளின்படியே நடந்து கொள்க.”

ஐரோப்பிய சக்திகளும் அமெரிக்காவும் சீனாவுடன் நட்புக் கொண்டுள்ள சூடான் போன்ற பல ஆபிரிக்க ஆட்சிகளை “மனித உரிமைகள் மீறப்படுதல்'' என்று குற்றம் சாட்டியிருக்கையில், இக்குற்றச்சாட்டு பல நூற்றாண்டுகள் ஆபிரிக்க மக்களை மேற்கு அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் சுரண்டியது, குற்றங்கள் புரிந்தது ஆகியவற்றை கவனதிற்கொள்ளவில்லை.

ஆகஸ்ட் 25ம் தேதி Financial Times தலையங்கம், “ஆபிரிக்காவில் சீனாவின் புதிய பரபரப்புச் செயல்கள்” என்ற தலைப்பில் எச்சரித்தது; “முன்னாள் காலனித்துவ சக்திகள் ஆபிரிக்கா பற்றி சீனாவிற்கு உபதேசம் செய்வதில் வலுவற்ற நிலையில் உள்ளன. போட்டியின் சிறப்புக்களை உபதேசித்தபின், மேற்கு இப்பொழுது ஆபிரிக்காவின் இயற்கை வளங்களுக்கான போட்டியில் சீனா ஏற்றம் பெற்றுள்ளது பற்றி முணுமுணுக்கவும் முடியாது.” ஆயினும்கூட தலையங்கம் முன்னைய காலனித்துவ சக்திகள் சீனாவை எதிர்த்து நிற்க ஒரு வழிகாண வேண்டும் என்றுதான் அழைப்புவிடுத்துள்ளது.

ஒரு ஆபிரிக்க-பிரான்ஸ் உச்சமாநாடு ஜூன் மாதம் நீஸ் நகரில் நடைபெற்றபோது, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி உள்கட்டுமானம் மற்றும் உதவியளித்தல் மூலம் சீனப் பெருநிறுவனங்களுடன் நேரடிப் போட்டிக்கு ஊக்கம் கொடுத்தார். உண்மையில் சீனா பற்றி அவர் குறிப்பிடவில்லை. “ஆபிரிக்காதான் நம் வருங்காலம்” என்றார் சார்க்கோசி. “ஆபிரிக்க கண்டம் சர்வதேச வாழ்வில் ஒரு முக்கிய பங்கு கொண்டதாக தன்னை உறுதியாக வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது.” தன்னுடைய தகவல் கேட்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், சார்க்கோசி பெரிய பிரெஞ்சு நிறுவனங்கள், அணுசக்திப் பெருநிறுவனம் Areva, எண்ணெய் நிறுவனம் Tofal, France Telecom, உலகின் மிகப் பெரிய நீர் அளிக்கும் நிறைவனம் Veolia ஆகியவற்றின் தலைமை அதிகாரிகளையும் அழைத்து வந்திருந்தார்.

மிக ஆக்கிரோஷமான மூலோபாயம் அமெரிக்காவிடம் இருந்து வருகிறது. இதுதான் ஆபிரிக்காவில் தன்னுடைய இராணுவ வலிமைத் திறனுக்கு ஏற்றம் கொடுத்துள்ளது. புஷ் நிர்வாகம் ஒரு தனி AFRICOM பென்டகன் ஆபிரிக்கக் கட்டுப்பாடு என்பதை 2007ல் வாஷங்டன் தன்னுடைய பொருளாதாரச் சரிவை இராணுவ வலிமையின்மூலம் ஈடுகட்டும் உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக நிறுவியது. இந்த ஆண்டு ஒபாமா நிர்வாகம் AFRICOM க்கு $278 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இதில் கண்டத்தில் “பயங்கரவாதத்தை” எதிர்ப்பதற்கு என்ற பெயரில் உள்ள பிற அமெரிக்க இராணுவத் திட்டங்கள் அடங்கவில்லை. ஆபிரிக்காவில் அமெரிக்க சார்புடைய ஆட்சிகளுக்கு இராணுவ நிதியளிப்பது இந்த ஆண்டு 300 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது $8.2 மில்லியனில் இருந்து $25.5 மில்லியனாக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய ஆதாயம் பெறுபவை தென்னாப்பிரிக்கா, போரில் சிக்கியுள்ள சட், காங்கோ குடியரசு, ஜிப்புட்டி, எதியோப்பியா, கென்யா, லைபீரியா, மொரொக்கோ மற்றும் நைஜீரியா ஆகியவை அடங்கும்.

வாஷிங்டனின் இராணுவவாதக் கொள்கை மேற்குசக்திகள் ஆபிரிக்காவில் இவற்றின் உரிமைகளை சீனா மோதுவதை எதிர்ப்பின்றி கைவிடாது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தென்னாபிரிக்காவின் புதிய சீனப்பிணைப்புக்கள், புதிய பூகோள-அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டுவருவதற்குப் பதிலாக பெரும் வல்லரசுப் போட்டியை தீவிரப்படுத்தத்தான் செய்யும்.