World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Thilo Sarrazin and the preparations for a new right-wing party in Germany

திலோ சராஸினும், ஜேர்மனியில் ஒரு புதிய வலதுசாரிக் கட்சிக்கான தயாரிப்புக்களும்

Peter Schwarz
11 September 2010

Back to screen version

ஒரு இரு வார காலத்திற்குள் ஜேர்மனியில் திலோ சராஸின் தன்னுடைய புதிய புத்தகமான ஜேர்மனி தன்னை அழித்துக்கொள்கிறது (Germany Abolishes Itself) என்ற புத்தகத்தில் எழுதியுள்ள இனவெறிக் கருத்துக்களைக் பாதுகாப்பதற்கு ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் வளர்ச்சியடைந்துள்ளது. சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) முன்னாள் நிர்வாகியும் உறுப்பினரும், சமீப காலம் வரை ஜேர்மனி மத்திய வங்கியின் (Bundesbank-Germany’s central bank) நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்த இவருக்குப் பின்னால், முக்கிய சமூக ஜனநாயகவாதிகளில் ஆரம்பித்து முக்கிய அறிவுஜீவிகள் மற்றும் செய்தி ஊடகத்தினரும் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளின் நபர்களும் வெளிப்பட்டுள்ளனர். அவர்களுடைய நோக்கம் நீண்டகாலம் மதிப்பிழந்த இனவாத தப்பெண்ணங்களை கடப்பதும், ஒரு புதிய வலதுசாரிக் கட்சிக்கு அடித்தளத்தை தயாரிப்பது ஆகும்.

அவருடைய புத்தகத்தில் சராஸின் இப்பிரச்சாரத்திற்கு முக்கிய கருத்துக்களை கொடுத்துள்ளார். சமூகப் பிரச்சினைகள் உண்மையிலேயே இனப் பிரச்சினைகள் என்று அவர் அறிவிப்பதுடன், இப்பிரச்சினைகளுக்கான பொறுப்பு முஸ்லிம் குடியேறியவர்கள் மீது சுமத்துகிறார். தன்னுடைய வாதத்திற்கு ஆதரவைக் கொடுக்கும் வகையில், அவர் தவறான விளக்கம் காணப்படும் புள்ளிவிவரங்கள் மற்றும் போலித்தன உயிரியல் வாதங்களையும் முன்வைக்கிறார். இவை நூரெம்பேர்க் இனவெறிச் சட்டங்களினதும் மற்றும் நாஜிக்களின் இனச்சுத்திகரிப்புத்திட்டத்தின் பின்னர் பல நவ-நாஜிக்குழுக்களின் இழிந்த பிரச்சாரத்தில்தான் நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளன.

பேர்லின் நகர அரசாங்கத்தில் நிதி செனட்டராகப் பல ஆண்டுகள் பணியாற்றி, முழு புறநகர்ப்பகுதிகளின் சமூக அழிவிற்கும் முக்கிய பொறுப்பு கொண்டுள்ள சராஸின் வறுமை மற்றும் அது தொடர்புடைய பிரச்சினைகள் அதிகமாகியிருப்பதற்கு காரணம் குடியேறியுள்ளவர்களின் சராசரி மட்டத்திற்கு கீழே உள்ள அறிவு இந்த சமுதாயத்தில் ஒருங்கிணைத்துக் கொள்வதில் விருப்பமின்மை என்ற காரணங்களை காட்டுகிறார். “பொருள் என்பது பிரச்சினை அல்ல, புத்திஜீவித தன்மை, அறநெறி ஆகியவற்றின் வறிய நிலைதான் இது” என்று அவர் எழுதுகிறார்.

இவருடைய புத்தகம் சமூக நிலைமைகள் மோசமாகியுள்ளதால் பெருகியுள்ள கோபத்தை அதற்குப் பொறுப்பான அரசியல், பெருநிறுவன நபர்களிடம் இருந்து சமூகத்தில் பாதிப்பிற்கு உட்படக்கூடிய பிரிவினருக்கு எதிராகத் திசை திருப்புவது ஆகும்.

சராஸினின் புத்தகம் வெளியிடப்பட்டது செய்தி ஊடகத்தில் நன்கு முன்னெடுக்கப்பட்ட ஒரு பிரச்சாரத்தை தொடர்ந்து வந்தது. Der Spiegel மற்றும் Bild ல் பத்திரிகைகளில் இப்புத்தகத்தில் இருந்து நீண்ட பகுதிகள் முன்னதாகவே வெளியிடப்பட்டன. சமீப வாரங்களில் சராஸினோ அல்லது அவருக்கு ஆதரவு கொடுப்பவர்களில் ஒருவரோ இல்லாத தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சி ஏதும் இல்லை எனலாம்.

ஆரம்பத்தில் பல வர்ணனையாளர்கள் சராஸின்னின் பெரும் ஆத்திரமூட்டும் தன்மையுடைய கருத்தாய்வுகளில் இருந்து தங்கள் ஒதுக்கி வைத்துக் கொண்டாலும், அவர் ஒரு “நியாயமான விவாதத்தை” தொடக்கியுள்ளார், ஆனால் துரதிருஷ்டமாக விதத்தில் என்று கூறினர்: ஆனால் இப்பொழுது முக்கிய அரசியல்வாதிகளும் செய்தியாளர்களும் வெளிப்படையாக அவருடைய இனவெறிக் கருத்துக்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

திங்களன்று ஒரு முக்கிய சமூக ஜனநாயகவாதியும் முன்னாள் கூட்டாட்சிக் கல்வி மந்திரியும் தற்போதைய ஹாம்பேர்க் நகரசபை தலைவருமான கிளவுஸ் வொன் டோனான்னி, Süddeutsche Zeitung பத்திரிகையில் தான் அவரைக் கட்சியில் இருந்து விலக்கும் விசாரணையில் அவருக்கு ஆதரவாக பேசத்தயார் என்று கூறியுள்ளார்.

“சராஸினுடைய அடிப்படை கருத்தாய்வை” அவர் நியாயப்படுத்தியுள்ளார். இதைச் சுருக்கமாகக் கூறுகையில் அவர் “ஜேர்மனி அதன் புத்திஜீவி உயரடுக்குகள் கரைந்து போவதைக் காண்கிறது” என்றார். ஏனெனில் அவர்களுக்கு மிகக் குறைந்த குழந்தைகள்தான் உள்ளன. அதே நேரத்தில் “தங்கள் பணி அல்லது திறன் மூலம் “சிறப்புப் பெற்றிராத குழுக்கள் கூடுதல் குழந்தைகளைப் பெற்று, அதையொட்டி “நாட்டின் நீண்டகால செயல்திறனைக்” குறைத்துள்ளன.

“இனவழிக் குழுக்களில் சில சிறப்பு கலாச்சாரக் கூறுபாடுகள் உள்ளன. யூதர்கள் சற்றே மாறுபாட்ட மரபணுக்கட்டமைப்பை கொண்டிருந்தனர்” என்னும் சராஸினின் இனவெறிக் கொள்கையையும் டோனான்ஜி வெளிப்படையாக ஆதரித்துள்ளார். அவருடைய கருத்து கீழ்க்கண்டவாறு முடிவுற்றது: ''இனம், யூதர், முஸ்லீம்கள் போன்ற வார்த்தைகளால் தயவு செய்து திகைப்படைந்துவிடாதீர்கள்''.

Spiegel Online வலைத் தளத்தில் அதன் கலாச்சாரத் துறையின் முன்னாள் தலைவர் மத்தியாஸ் மற்றூஷெக் இதே கருத்தைத்தான் முரசு கொட்டினார். “தொந்திரவு கொடுத்த கூச்சல் போடுபவர்களை அறையில் இருந்து கட்டிவெளியேற்றும் காவலரைபோல் சமூக ஒற்றுமை பற்றி தன்னொழுக்க முனைப்புணர்வுள்ளவர்களுக்கு சராஜின் அடையாளமானார்.” என்று அவர் எழுதினார்.

இதன்பின் மற்றூஷெக் அனைத்து இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுகளையும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுக்கு எதிரான போர்த்தயாரிப்புக்களை நியாயப்படுத்திக் கூறுவதையும் ஒன்று திரட்டினார். “சராஸின் மீண்டும் தங்கள் சமூகம் மத்திய காலத்தினுள் திரும்புவதை பார்த்து சலித்துவிட்ட மக்களின் சீற்றத்தின் உருவகமாக உள்ளார். இதன்பின் நீண்ட கடினமான புத்தெழுச்சிக்காலத்திற்கான வழிவகை உள்ளது…. அவர்கள் பயங்கவாதத்திற்கு ஆதரவான இஸ்லாமிய சங்கங்கள், கௌரவக் கொலைகள், கேலிச்சித்திரம் போடுபவர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எதிரான கொலை அச்சுறுத்தல்கள் பற்றி படிப்பதில் சலிப்பு அடைந்து விட்டனர். …மேற்குநாட்டு மூத்த அரசியல்வாதிகள் இஸ்லாமிய நாட்டின் மகளிர் சார்பாகக் குறிக்கிடுவது பற்றி படிக்கையில் சீற்றம் அடைகின்றனர்; ஏனெனில் மகளிர் பிற ஆடவருடன் தொடற்பிற்காகக் கல்லால் அடித்துக் கொல்லப்படுகின்றனர்.” என்றும் அவர் எழுதினார்.

இறுதியாக, டோனான்னியைக் குறிப்பிட்டு, மற்றூஷெக், “ஜேர்மனியில் யூத படுகொலைகளின் பின்னணியில், அறிவார்ந்த சந்தேகம் என்னும் கலாச்சாரம் மலர்ந்து கொண்டிருக்கிறது; இதன் பொருள் எவரும் “மரபணு”, “யூதர்” என்ற சொற்களை அபூர்வமாகத்தான் பயன்படுத்துகின்றனர்.” என்று புகார் கூறியுள்ளார்.

சராஸின்னுக்கு பாதுகாப்பு மந்திரி கன்சர்வேடிவ் கிறிஸ்துவ சமூக ஒன்றித்தின் (CSU) கார்ல் தியோடோர் சூ கூட்டன்பேர்க் உடைய ஆதரவும் கிடைத்துள்ளது. ஒரு பவேரிய பியர் கூடாரத்தில் 2,000 பார்வையாளர்களிடையே பேசிய கூட்டன்பேர்க் சராஸின் சரியான விவாதத்தைத் தொடக்கியுள்ளார் என்றும் தன்னை குடியேறுவோரின் ஒருங்கிணைப்பு பற்றி “கருத்துரீதியான விவாதத்திற்கு” தயாராக இருப்பதாக கூறிக் கொண்டார்.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) உள்துறை வல்லுனர் வொல்ப்காங் போஸ்பாக் மற்றும் அவருடைய சமூக ஜனநாயக் கட்சி நண்பர் டீட்டர் வீவெல்புட்ஸ் இருவரும் இதே போன்ற கருத்துக்களை வெளியிட்டு, ஒருங்கிணைப்பு என்பது “அடுத்து சில ஆண்டுகளில் முக்கிய கருத்தாய்வாக இருக்கும்” என்றனர்.

அதன் சமீபத்திய பதிப்பில் Der Spiegel சராஸின் ஒரு “தேசிய வீரர்” என்று பிரகடனப்படுத்துகிறது. செய்தி இதழின் அட்டைப்படத்தில் “மக்கள் வீரர் சராஸின். ஒரு ஆத்திரமூட்டுபவரிடம் ஏன் பல ஜேர்மனியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்” என்ற தலைப்புடன் அவருடைய புகைப்படமும் வந்துள்ளது.

உண்மையில், சராஸின் பற்றிய பரபரப்பு செய்தி ஊடகம் எரியூட்டிய பிரச்சாரம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதற்குத்தான் சான்று உள்ளது. அதேபோல் அவருடைய இனவெறிக் கருத்தாய்வுகள் மக்களின் பரந்த ஆதரவைக் கொண்டுள்ளன என்று கூறுவதற்கும் சான்றுகள் இல்லை. ஒரு ஆழ்ந்த செய்தி ஊடகப் பிரச்சாரம், சிதைவுகளும் பொய்களும் நிறைந்தவை ஏற்பட்டபின்தான் Emind Institute, Blid am Sonntag ஆகியவை ஏற்பாடு செய்திருந்த கருத்துக் கணிப்பில் கிட்டத்தட்ட 18 சதவிகித ஜேர்மானியர்கள் சராஸின் தலைமையிலான ஒரு எதிர்ப்புக் கட்சிக்கு (protest party) வாக்களிக்கத்தயார் என்று கூறியது தெரிய வந்துள்ளது.

ஆனால், SPD, CDU/CSU வில் இருந்து முக்கிய அரசியல்வாதிகள் சராஸினுக்கு ஆதரவளித்து, நாஜி ஆட்சியின் குற்றங்களின் விளைவினால் சுமை கொண்டுள்ளதாகக் கூறப்படும் ஜேர்மனியின் போருக்குப் பிந்தையகால அரசியலில் “விலக்கிவைக்கப்பட்ட'' அரசியல் நிலைப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது குறிப்பிடத்தக்கத்து ஆகும்.

SPD தலைமை சராஸனுக்கு எதிராக வெளியேற்றும் நடவடிக்கையை தொடக்கினாலும், விரைவாக அதை செய்யும் நடைமுறையை அது நிராகரித்தது. இதன் பொருள் இந்த வழிவகை முடிய பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூடப் பிடிக்கும் என்பதாகும். கட்சிச் சட்டங்களின்படி, இப்பொழுதில் இருந்து 6 மாத காலம் முடிய முதல் தீர்ப்பிற்கான விசாரணை கூட நடத்தப்பட வேண்டியதில்லை.

இடது கட்சியும் மௌனமாகத்தான் உள்ளது. அவர்களுடைய தரப்பில் இருந்து சராஸன் உடைய கருத்தாய்வுகள் பற்றிப் பூசல்கள் ஏதும் இல்லை.

ஒரு சுருக்கமான அறிக்கையில் இடது கட்சித் தலைவர் கெஸீன லொட்ச் சராஸின் மத்திய வங்கி நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கப்பட்டதை வரவேற்றுள்ளார். ஆனால் இதை மத்திய வங்கியின் புகழைக் காக்கும் நிலைப்பாட்டில் இருந்துதான் நியாயப்படுத்தியுள்ளார். சராஸினின் கருத்தாய்வுகளில் உள்ள பொருளுரைகளை பற்றி இவ்வம்மையார் ஏதும் கூறவில்லை. Emnid கருத்துக் கணிப்பின்படி, சராஸின் இடது கட்சி ஆதரவாளர்களின் பெரும்பாலவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

ஆஸ்திரியா (Jorg Haider), நெதர்லாந்து (Pim Fortuyn, Geert Wilders) அல்லது இத்தாலி (Lega Nord) போல் முன்னர் ஜேர்மனியில் நகர்ப்புற நடுத்தர வர்க்கங்களின் செல்வாக்கைப் பெறுவதற்கு ஒரு இனவெறிக் கட்சியின் தேவை இருக்கவில்லை. நவநாஜி கட்சிகளான NPD, DVU போன்றவை தனித்த தேர்தல் வெற்றிகளைப் பெற முடிந்தது. ஆனால் இவை விரைவில் கரைந்துவிட்டன. சில கிராமப்புறப் பகுதிகளான சாக்சனி ஷ்விஸ் அல்லது மேற்கு போமெரேனியா ஆகியவற்றில்தான் பெற்ற வெற்றிகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

சமூக நெருக்கடி மோசமாவதை ஒட்டி இது இப்பொழுது மாறக்கூடும். முதலாளிகள் சங்கங்கள் மற்றும் அவற்றின் குரலை எதிரொலிக்கும் செய்தி ஊடகங்களும் நீண்ட காலமாக மேர்க்கெல் அரசாங்கத்தில் வலுவற்ற தன்மை பற்றி குறைகூறியுள்ளன. அவை சீக்மார் காப்பிரியேலின் கீழ் உள்ள சமூக ஜனநாயக கட்சி, ஹெகார்ட் ஷ்ரோடர் ஆரம்பித்த செயற்பட்டியல் 2010 சமூக நல, தொழிலாளர்துறை “சீர்திருத்தங்களை” தொடரும் என்று நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

இச்சூழலில், சராஸினுடைய புத்தகமும் அதைத்தொடர்ந்துள்ள செய்தி ஊடகப் பிரச்சாரமும் ஒரு புதிய வலதுசாரி, இனவெறிக் கட்சிக்குத் தளம் அமைக்கத் தயாரிக்கும் முயற்சியில் வேண்டும் என்றே ஈடுபடுவதுதான் பிரதிபலிப்பாகிறது. அத்தகைய கட்சி அரசியல் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு ஒரு நெம்புகோல் போல் பயன்படுத்தப்படலாம். நீண்டகாலமாக CSUவின் வலதுசாரி மேர்க்கெலிடம் இருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கிறது. அத்தகைய கட்சி சமூக ஜனநாயக கட்சி, இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவையும் நம்ப இயலும்.

இந்த ஆபத்து மற்றும் சராஸினுடைய இனவெறி ஆகியவை ஒரு புதிய தொழிலாள வர்க்கக் கட்சியை கட்டமைப்பதின் மூலம்தான் எதிர்க்கப்பட முடியும். அது சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராட்டுவதோடு, சமூக ஜனநாயகக் கட்சி, இடது கட்சி ஆகியவற்றில் இருந்து சுயாதீனமாகவும், அவற்றை எதிர்த்துப் போராடுவதாகவும் இருக்கவேண்டும். இதுதான் நான்காம் அகிலத்தின் ஜேர்மனிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Partei for Soziale Gleichheit) வேலைத்திட்டமாகும்.