WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
சமூகப் பாதுகாப்பின் மீது அமெரிக்க ஆளும் வர்க்கம் தாக்குதலை நடத்த தயாரிப்பை மேற்கொள்கிறது
Tom Eley
8 September 2010
Use
this version to print | Send
feedback
வயதானவர்களுக்கும் இயலாத தொழிலாளர்களுக்கும் கூட்டாட்சிக் காப்பீட்டு பாதுகாப்பு உரிமைகளின் தளத்தைக் கொண்ட சமூகப் பாதுகாப்பு உட்பட பல சமூக நலச் செலவுகளில் பெரும் வெட்டுக்கள் கொடுக்கப்போவது பற்றிய தொடர்ந்த அறிவிப்புக்களை அமெரிக்க ஆளும் மேற்தட்டின் முக்கிய நபர்கள் சமீபத்தில் கொடுத்துள்ளனர்.
நவம்பர் 7ம் தேதி இடைக்காலத் தேர்தல்களின் துல்லிய விளைவு எப்படி இருந்தாலும், அவை இரு கட்சிகளும் சேர்ந்து “கருவூலகப் பொறுப்பு” என்ற பெயரில் கடந்த நூற்றாண்டில் எஞ்சியிருந்த சமூகச் சீர்திருத்தங்கள் மீது தாக்குதலுக்கு அரங்கு அமைக்கும் என்பதைத்தான் இக்கருத்துக்கள் புலப்படுத்துகின்றன.
சமூகப் பாதுகாப்புகள் மீது நீண்ட காலமாகக் காத்திருக்கும் தாக்குதலுக்காக கத்திகள் ஏற்கனவே கூர்மைப்படுத்தப்படுகின்றன. ஆகஸ்ட் 3ம் தேதி முதிய பெண்கள் குழுவின் தலைவருக்கு நயமற்ற தூண்டிவிடும் வகையில் எழுதப்பட்ட ஒரு மின்னஞ்சலில் குடியரசு செனட்டர் ஆலன் சிம்சன்—ஜனாதிபதி ஒபாமாவால் கருவூலப் பொறுப்பு மற்றும் சீர்திருத்த தேசியக் குழுவின் இணைத்தலைவர் என்று நியமிக்கப்பட்டவர்—சமூகப் பாதுகாப்பு மற்றும் அதை நம்பியுள்ள தொழிலாளர்கள் மீது தன்னுடைய ஆழ்ந்த வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
“310 மில்லியன் மடிகள் இருக்கும் கறவைப் பசு போன்ற நிலையை சமூகப் பாதுகாப்பு இப்பொழுது அடைந்துள்ளது” என்று சிம்சன் கூறியுள்ளார். ஓய்வுபெற்றவர்கள், உறுப்பு இழந்தவர்கள், பணியின் போது நோய்வாய்ப்பட்டவர்கள், இறந்துவிட்ட தொழிலாளர்களை நம்பியிருந்த உயிரோடு இருப்பவர்கள் என்று இதைப்பெறும் அனைவரையும் அவர் தாக்கியுள்ளார்—“கடைசி வரைக்கும் அதைக் கறக்க இவர்கள் விரும்புகின்றனர்” என்று கூறிய விதத்தில்.
ஒரு முந்தைய சீற்ற வெடிப்பில்—சிம்சன் ஜூன் மாதம் ஒரு தனிச்செய்தியாளரை விரட்டும் விதத்தில் பேசி அது ஒலிநாடாவில் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது—அவர் ஆளும் வர்க்கத்தின் வெட்டுக்களின் பின்னணியில் உள்ள இரக்கமற்றத் தர்க்கத்தை வெளிப்படுத்தினார். “குறைந்த வசதியுடைய மக்கள்” என்று அவர் பெயரிடப்பட்டவர்கள் நீண்டகாலம் வாழ்வதாகக் கூறினார். சமூகப் பாதுகாப்பு முறை தோற்றுவிக்கப்பட்டபோது, “அவர்கள் வாழ்நாள் காலம் 57ல் இருந்து 78 அல்லது 75 வயது வரை போகும் என்று கனவுகூடக் காணவில்லை. யார் அப்படிக் கனவு காணமுடியும்? எவராலும் முடியாது. அவர்கள் பொதுவாக இறந்துவிடுவர்.”
முன்னதாக வரவு-செலவுப் பற்றாக்குறைகளைக் கட்டுப்படுத்த ஒரு நிர்வாக ஆணையின் மூலம் இந்த ஆண்டு நிறுவப்பட்ட சிம்சன் குழுவானது ஓய்வூதியம் பெறும் வயதை ஒருக்கால் 70 என்றுகூட உயர்த்துவது, நலன்களைக் குறைத்தல், செலவுகள் பெருகும்போது அதற்கான நலன்களை அகற்றுதல் உட்பட பல நடவடிக்கைகளைப் பரிசீலிக்கிறது. தன்னுடைய பரிந்துரைகளை இது டிசம்பர் மாதம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது—நவம்பர் தேர்தல்களுக்கு பிறகு என்று இது உள்ளதும் தற்செயல் நிகழ்வு அல்ல.
சமூகப் பாதுகாப்பின் மீதான தாக்குதலுக்கு ஆளும் வர்க்கத்திடையே ஒருமித்த உணர்வு உள்ளது. கருவூல பொறுப்புக் குழுவிற்கு இணைத் தலைவராக ஒரு கிளின்டனின் முன்னாள் வெள்ளை மாளிகை பணியாளர்கள் தலைவரும் மற்றொரு நீண்டகாலமாக சமூகப் பாதுகாப்பு “சீர்திருத்தம்” பற்றி வாதிடும் எர்ஸ்கின் பௌல்ஸும் உள்ளார். தொழிற்சங்க அதிகாரத்துவம் இதற்கு தீவிர ஒத்துழைப்பு கொடுப்பதை அடையாளம் காட்டும் விதத்தில், SEIU ஆட்சித்துறை ஊழியர்கள் சர்வதேசச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆண்டி ஸ்டெர்னும் குழு உறுப்பினராக உள்ளார்.
“பெறப்படும் அனைத்து உரிமைத் திட்டங்களும் விவாதத்திற்கு வரவேண்டும் என்று கூறும் பல குழு உறுப்பினர்கள் கருத்துக்களுடனும் நான் உடன்படுகிறேன். நம்முடைய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக ஓய்வுப் பாதுகாப்பு முறையில் தனிப்பகுதிகளை வலுப்படுத்துவதற்கான கருத்துக்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும், அதேபோல் சமூகப் பாதுகாப்பு முறையின் போதுமான தன்மை, திவாலற்ற நிலை, அனைவரக்கும் பொருந்தும் ஓய்வுதிக் கணக்குகளைச் சேர்த்தல் ஆகியவையும் பரிசீலிக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர் வர்க்கத்தின் மீது நிதியத் தாக்குதலை ஆழப்படுத்துதலில் கடந்த வாரம் இத்தாலிய Lake Como என்னும் உல்லாச இடத்தில் நடைபெற்ற Ambrosetti Forum லும் விவாதத்திற்கு முக்கிய தலைப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஸ்பெயினின் ஜோசே மரியா அஜ்நர், இத்தாலியின் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி, அமெரிக்காவில் இருந்த ஹென்ரி கிஸ்ஸிங்கர், இஸ்ரேலிய ஜனாதிபதி ஷைமன் பெரஸ் மற்றும் ஏராளாமான ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள், உயர்மட்ட வங்கியாளர்கள், உயர்கல்விக்கூடத்தினர் ஆகியோர் பங்கு பெற்ற இந்த அரங்கம் பகிரங்கமாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள முடியாத அரசியல்வாதிகளின் கொள்கைகளை வகுக்கும் குழுவாக அமைந்தது.
ஒரு குழுநிலைக் கூட்டத்தில் மூனிச் பல்கலைக்கழகத்தின் Hans Werner Sinn அமெரிக்கர்கள் “வெளிநாட்டு நாணய இருப்பை ஓரளவுத் தளமாகக் கொண்டிருந்த, இப்பொழுது இல்லாத நிலையில், அவர்கள் வாழ்க்கைத் தரங்கள் பல ஆண்டுகள் உயர்ந்து நின்ற போது கண்டிருந்த வாழ்க்கைத் தரங்களில் சரிந்தாக வேண்டும்” என்று அறிவித்தார். JP Morgan Chase International ன் தலைவர் Jacob Frankel, “உண்மை நிலையை உணரும் “அரசியல் உடன்பாட்டின்” ஒரு பகுதியாக சமூக நல உரிமைகளைக் கட்டுப்படுத்துதலை அமெரிக்கா மேற்கோள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார் என்று மாநாட்டைப் பற்றிய Associated Press ன் தகவல் குறிப்புத் தெரிவிக்கிறது. JP Morgan நிறுவனமோ பல பில்லியன்களை கடன்கள், கடன்கள் நிறைந்த சொத்துக்களை வாங்குதல், நேரடியான ரொக்க உட்செலுத்தல்கள் ஆகியவற்றை கூட்டாட்சி அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ளது.
சமூக நல உரிமைகள் மற்றும் சமூக நலச் செலவுகள் மீது தாக்குதல் என்பது முழுத் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களுக்கு எதிரான பரந்த தாக்குதலின் இரண்டாவது பகுதியாகும்—இது கார்த் தொழிலைக் கட்டாயப்படுத்தி மறுசீரமைப்பிற்கு உட்படுத்திய ஒபாமா நிர்வாகத்தின் முன்னோடியில்லாத வகையில் வேலைகள், ஊதியத் தாக்குதலை அடுத்து விரைவில் தொடர்ந்து வந்துள்ளது.
“புதிய வளமை” என்று அழைக்கப்படுவதை ஏற்பதற்குத் தொழிலாளர்கள் தயார் செய்யப்படுகின்றனர். இது குறைந்த ஊதியங்கள் மற்றும் நலன்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதுடன், எந்தவித சமூகப் பாதுகாப்பு முறையும் முற்றிலும் கொண்டிருக்கவில்லை. இன்னும் அப்பட்டமான சொற்களில் Fiat தலைவர் Sergio Marchionne, அமெரிக்கத் தொழிலாளர்கள் “வறுமை நிலைக் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும்”, என்றார். “உரிமைகள் கோரும் கலாச்சாரத்தைக்” கைவிட வேண்டும் என்றும் இழிந்த முறையில் அது பற்றி அவர் குறிப்பிட்டார்.
“தியாகம்”, “பொறுப்பு” ஆகியவற்றிற்கான அழைப்புக்களில் உள்ள வர்க்கத் தன்மை பெருகிய முறையில் அப்பட்டமாகி வருகிறது. சமூகப் பாதுகாப்பு மற்றும் அனைத்துவிதச் சமூக நலச் செலவினங்களிலும் பெரும் வெட்டுக்களுக்கு வாஷிங்டன் தயாரிப்புக்கள் நடத்துகையில், காங்கிரசோ புஷ் சகாப்தத்தில் இருந்த பெரும் செல்வந்தர்கள் மீது கொடுக்கப்பட்ட வரிக் குறைப்புக்களை நீடிக்க அல்லது நிரந்தரமாக்கவும் தயாரிக்கிறது—இவற்றினால் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு பல டிரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 30 வரை ஒபாமாவின் அலுவலக மேலாண்மை, பற்றாக்குறைப் பிரிவின் இயக்குனராக இருந்த Peter Orszag நியூ யோர்க் டைம்ஸில் செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் பெரும் செல்வந்தர்களுக்கான புஷ் சகாப்த வரிக் குறைப்புக்கள் இன்னும் இரு ஆண்டுகள் நீடிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். சமூகப் பாதுகாப்புச் “சீர்திருத்தம்”, விருப்புரிமை சமூக நலச்செலவுகளில் 5 சதவிகிதக் குறைப்பு, மதிப்புக்கூட்டு விற்பனை வரி 6 சதவிகிதம், “மத்தியதர வர்க்க மற்றும் கீழ் வர்க்க குடும்பங்களுக்கு” உயர்ந்த வரிகள் ஆகியவை தேவை என்று அவர் கூறியுள்ளார். இவை “உளைச்சல் தருபவை” ஆனால் “தவிர்க்க முடியாதவை” என்றும் கூறினார்.
கடும் சிக்கன நடவடிக்கை மற்றும் தாக்குதலுக்கான தீவிரத் தயாரிப்பு சமூகப் பாதுகாப்பின் கீழ் நடத்தப்பட வுள்ளதானது அமெரிக்க ஜனநாயகத்தின் திவால்தன்மைக்கு சான்றாக உள்ளது. வரவிருக்கும் தேர்தலும் அதைச் சுற்றியுள்ள அரசியல் விவாதமும்—இதில் ஒபாமாவின் சமீபத்திய தொடர்ந்த அடையாள முறை வேலைகள் பற்றிய திட்டங்களும் அடங்கும்—மக்கள் நோக்குநிலை சிதைக்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன.
அமெரிக்கக் கொள்கையின் அடிப்படை நோக்கம் ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டு விட்டது. ஆளும் வர்க்கமானது நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது மாற்றுவதில் உறுதியாக உள்ளது. இந்தப் பின்னணியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஆதாயம் என்பது மக்களிடத்தில் இருந்தே சமூக நலச் செலவுகள் மீதான தாக்குதலுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன என்பதற்கு சான்று என்னும் அளிப்பிற்குத் தயாரிப்பு உள்ளது.
இது ஒரு பொய். உண்மையில், பெரும்பாலான மக்களின் புறநிலை நலன்கள்—பல தலைமுறைகளில் இல்லாத மோசமான சமூக நெருக்கடியில் இடருற்றிருக்கும் மக்கள் நிலைமை—பெரும் வேலைகள் திட்டம், இலவசமாக அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, பாதுகாப்பான ஓய்வு காலம், கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றிற்கு முன்னேற்றமான தரத்தில் வாய்ப்புப் பெறுதல், தற்காலத்திய வெகுஜன சமூகத்திற்கு உகந்த சமூக உரிமைகள் ஆகியவை தேவையாகும்.
ஆளும் நிதியப் பிரபுத்துவம் நிர்ணயித்துள்ள போக்கு இதற்கு முற்றிலும் எதிர்த் திசையில் தான் துல்லியமாக உள்ளது. வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல் தொடரும், ஆழமாகும்—தொழிலாளர் வர்க்கம் அதை நிறுத்துவதற்குத் தன் சுயாதீன அரசியல் வலிமையை அணிதிரட்டி நிறுத்தும் வரை. |