World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Struggle against Sarkozy’s austerity measures requires a new socialist perspective

சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு புதிய சோசலிச முன்னோக்கின் அவசியம்

By Alex Lantier
6 September 2010

Back to screen version

தொழிலாளர்கள் அணிவகுத்து செல்லும் செப்டம்பர் 7ம் தேதி தொழிற்சங்கத்தால் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்களில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதியக் குறைப்புக்களுக்கு எதிரான ஒரு அரசியல், முட்டுச்சந்தியில் இருக்கின்றது. எவ்வளவு பேர் அணிவகுப்பில் சேர்ந்தாலும், அதுவே நிதியப் பிரபுத்துவத்துவம் அவர்களைக் கொள்ளையடிப்பதற்கு எதிரான அவர்களுடைய முறையான சீற்றத்தின் திறமையான அரசியல் வெளிப்பாட்டைத் தோற்றுவிக்காது. 1930 களில் இருந்து உலக முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய நெருக்கடிக்கு இடையே, தொழிலாள வர்க்க அரசியல் மற்றும் சமூக அணிதிரள்வில் புதிய வடிவங்கள் அவசியமாகின்றன.

மீண்டும் மீண்டும் நடத்தப்படுகின்ற பல ஒரு நாள் சர்க்கோசிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அவரை ஒன்றும் ஓய்வூதியங்களைக் குறைப்பதையோ, பணி வார நேரத்தை அதிகமாக்குவதையோ, சமூக நலச் செலவுகளைக் குறைப்பதையோ நிறுத்தப்போவதில்லை. அவருடைய பாசிச வகைப்பட்ட சட்டம்-ஒழுங்கு சட்ட திட்டங்கள் காட்டுவது போல், இதில் குடியேறியிருப்பவர்களை பெரிய அளவில் சிறையிலடைத்து, நாட்டை விட்டுத் துரத்துவதும் அடங்கும், ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயக உரிமைகள் மீது ஆபத்தான அரிப்பைத் தடுக்க இயலவில்லை, பாரிய அளவிலான பொலிஸ் அடக்குமுறைக்குத்தான் வழிவகுத்துள்ளன.

சமீபத்திய ஐரோப்பிய நிதிய நெருக்கடியில், தொழிலாளர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக வைத்துள்ளதில் தான் ஒரு நாள் எதிர்ப்புக்கள் அதனுடைய பங்கை குறிப்பாகத் தெளிவுபடுத்தியுள்ளன. கிரேக்கத் தொழிற்சங்கங்களும் சமூக ஜனநாயக பிரதம மந்திரி ஜோர்ஜியோஸ் பாப்பாண்ட்ரூவும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை (IMF) பிரதிநிதித்துவப்படுத்தும் நிதியாளர்கள் விடுக்கும் உத்தரவுகளுக்கு தாழ்ந்துதான் செயல்பட்டனர். பாப்பாண்ட்ரூவின் PASOK கட்சித் தொழிற்சங்கங்கள் பயனற்ற ஒரு நாள் வேலைநிறுத்தங்களை நடத்தியிருக்கையில், அரசாங்கம் தொடர்ச்சியாக பல தாக்குதல்கள் கொடுக்கும் சட்டங்களை இயற்றியது—கிரேக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களில் இவை மாபெரும் 30 சதவிகிதச் சராசரிக் குறைப்புக்களை பெருக்கியுள்ளன.

இந்த EU-IMF திட்டம் கிரேக்கத்திற்கு மட்டும் இல்லாமல், பிரான்ஸ் உட்பட அனைத்து முன்னேறிய நாடுகளுக்கும் செயல்படுத்தப்படுகிறது. சமீபத்தில் பிரதம மந்திரி பிரான்சுவா பியோன், ஸ்ராலினிச தொடர்புடைய CGT தொழிற்சங்கத்தின் தலைவரான பேர்னார்ட் திபோவை செப்டம்பர் 7 அணிவகுப்புக்களை நடத்துவதற்கு “அவருடைய பங்கிற்காகப்” பாராட்டினார். அந்த உரையை விரிவுபடுத்தும் முறையில், பிரான்ஸுக்கு நிதியளிக்கும் முக்கிய வங்கியாளர்களினால் அங்கீகாரம் பெற்று சார்க்கோசியினால் எழுதப்பட்ட உரையிலிருந்து திபோவின் வரிகள் வாசிக்கப்பட்டிருக்கும் என்று பியோனால் சேர்க்க முடிந்திருந்தது.

தொழிற் துறை மந்திரி எரிக் வோர்த்துடன் திபோ தொடர்ந்து ஓய்வூதியக் குறைப்புக்கள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார். அதே நேரத்தில் பில்லியனர் லிலியன் பெத்தென்கூருடனான அவருடைய ஊழல் உறவுகள் பற்றிய புதிய வெளிப்பாடுகளால் அவமதிப்பு பெற்றுள்ளதைப் பற்றியும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் CGT சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுக்கிறது—அது பிரெஞ்சு முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கான உறையவைக்கும் CGT யின் பொருளாதார தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 2008 பொருளாதார நெருக்கடியின் வெடிப்பை அடுத்து உலகம் முழுவதும் இலாபங்கள் மற்றும் சந்தைகளுக்கான போட்டியில், பிரெஞ்சு முதலாளித்துவத்தை தொடர்ந்து நீடிப்பதற்கு ஒரே வழி ஊதியங்களையும் சமூகச் செலவுகளையும் குறைப்பதுதான்.

ஒரு நாள் எதிர்ப்புக்கள் வலதுசாரிக் கொள்கைகளை கைவிடும்படி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் என்ற போலித் தோற்றங்களை கசப்பான அனுபவங்கள் சிதைத்துள்ளன. ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு கருத்துக் கணிப்பு மக்களில் 58 சதவிகிதத்தினர் இவற்றினால் எந்த விளைவும் ஏற்படாது என்று கருதியதாக தெரிவிக்கிறது. ஆனால் 67 சதவிகிதத்தினர் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவைக் கொடுத்துள்ளனர். ஐரோப்பாவில் வங்கிகளின் சிக்கன நடவடிக்கை உந்துதலைத் தீவிரமாக அச்சுறுத்திய ஒவ்வொரு தொழிலாள வர்க்கப் போராட்டமும் மிருகத்தன அடக்குமுறையைத்தான் எதிர்கொண்டன. கிரேக்கத்தில் பாரவண்டி சாரதிகளின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவம் பயன்படுத்தப்பட்டது. ஸ்பெயினில் மாட்ரிட் மெட்ரோ தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வேலைநிறுத்தங்கள் இராணுவத் தலையீடு என்ற அச்சுறுத்தல் இடரை எதிர்கொண்டன.

தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் வினா இதுதான்: ஒரு முன்னேறிச் செல்லும் பாதைக்கு எந்தப் புதிய முன்னோக்கும் எந்தப் புதிய நடைமுறைகளும் வழிவகுக்கும்?

முதலாளித்துவம்—ஆங்கிலோ-அமெரிக்க “புதிய தாராளவாத” நிலையும் அதன் பயனற்ற ஐரோப்பிய உறவான “சமூகச் சந்தைப் பொருளாதாரம் இரண்டும்”—தோற்றுவிட்டது. தொழிலாளர்கள் சோசலிசத்திற்காக ஒரு புரட்சிகர போராட்டத்தை நடத்த வேண்டும்—அதாவது அரச அதிகாரத்திற்கும், உற்பத்தியை ஜனநாயக முறையில் தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் கைப்பற்றுவதற்கும். நிதியப் பிரபுத்துவத்தின் சர்வாதிகாரம் பெரும்பான்மையினரின் ஆட்சியால் தகர்க்கப்பட வேண்டும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” கட்சிகளும் அவற்றின் நட்பு அமைப்புக்களும் திவால்தன்மையில் இருப்பது, ஸ்ராலினின் உத்தரவின் பேரில் 1940ல் கொலை செய்யப்பட்ட லெனினுடன் இணைத்தலைவராக 1917ப் புரட்சியில் இருந்து நான்காம் அகிலத்தை நிறுவிய ட்ரொட்ஸ்கியின் வரலாற்று மரபியப் பிரச்சினையை முன்னுக்கு வைக்கிறது. தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிசத்தின் பலவித முத்திரைகளிலும் உள்ள வர்க்க ஒத்துழைப்புக் கொள்கைகள் பற்றிய மார்க்சிச திறனாய்வுடன் அவருடைய பெயர் அழிக்க முடியாமல் தொடர்புடையது, உலக சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்துடனும் பிணைந்துள்ளது.

பிரான்சில் இப்பொழுதுள்ள ட்ரொட்ஸ்கிச மரபு உடையதாகக் கூறிக்கொண்டிருக்கும் குட்டி முதலாளித்துவ அரசியலை எதிர்த்து, அம்பலப்படுத்தும் போராட்டத்தில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கான ட்ரொட்ஸ்கிச போராட்டம் பிரிக்கப்பட முடியாதது. இவை போலிப் புரட்சிகர சொற்றொடர்களை பயன்படுத்துவதில் வல்லுனர்கள், அரசியல் ஸ்தாபனத்துடன் அதன் சமூக விரோதக் கொள்கைகளை மீறியும் கொண்டுள்ள உடன்பாடுகளை நியாயப்படுத்துவதில் வல்லுனர்கள்.

இத்தகைய அரசியல் நிலைப்பாட்டிற்கு தக்க உதாரணம் NPA யின்—ட்ரொட்ஸ்கிசத்துடன் தொடர்புடையது என்று ஒரு காலத்தில் கூறிய Ligue Comuniste Revolutionnaire (LCR)ஆல் நிறுவப்பட்டது—ஒலிவியே பெசன்சஸநோ Port Leucast கோடைப் பள்ளியில் நிகழ்த்திய உரைதான். பெசன்ஸநோவைப் பொறுத்தவரை, முதலாளித்துவ சார்பு அரசியல் தலைமைகள் என்று இல்லாமல், தொழிலாளர்கள் தான் சார்க்கோசியின் வெட்டுக்கள் மற்றும் சட்டம் இயற்றப்படக் காரணம் ஆகும். “பொதுமக்கள் உடனே கொடுக்கும் விடையிறுப்பு தொடக்கத்தில் கூட்டு எழுச்சியாக இருப்பதில்லை. பல நேரமும், ஒவ்வொருவரும் தனக்கே, தனிவழிவகை, பொறாமை என்றுதான் உள்ளது. மற்றவர்களின் சமூக நலன்களைப் பார்த்து மக்கள் அவை சலுகைகள், அதையும்விட மோசம் என்று நினைக்கிறார்கள்.” என்றார்.

அதிகாரத்தில் இல்லாத ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள், குறிப்பாக PS உடன் நட்பு கொள்ள வேண்டும் என்னும் தன் நீண்டகாலத் திட்டத்தை பெசன்ஸநோ மீண்டும் கூறினார். சார்க்கோசிக்கு வலதுசாரிக்குள்ளேயே எழுந்துள்ள குறைகூறல்கள் பற்றியும் குறிப்பிட்டு, “சொத்துக்கள் வைத்துள்ள வர்க்கங்களின் பிளவுத்திறன்” வெற்றிக்கு வழிவகுக்கக்கூடும் என்றார். இன்றைய நிலைமைக்கும் 1936 ல் நடந்த “பெரிய வேலைநிறுத்தக் காலத்திற்கும்” இடையே தொடர்பை அவர் காட்டி, பிரான்சில் மக்கள் முன்னணியானது தொழிற்சங்கங்கள் மற்றும் இடது கட்சிகளுக்கு எதிரான ஒருமித்த பிரச்சாரம் வேண்டும் என்று விடுத்த அழைப்பையும் கூறினார்.

இத்தகைய கருத்துக்கள் ட்ரொட்ஸ்கிசம் ஒரு அரசியல் நோக்குநிலை என்பதை நிராகரித்த முறையில் NPA என்பது நிறுவப்பட்டது என்பதை மிகவும் தெளிவாக்குகின்றன. முதலாளித்துவ தீவிரவாத கட்சி (Radical Party), சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டானது 1936ல் மக்கள் முன்னணி பற்றி ட்ரொட்ஸ்கி எழுதியவைகள் பெசன்ஸநோவின் கருத்துக்களால் குற்றத்திற்கு உட்படுத்துபவை.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன போராட்டத்தை தடுக்கும் கூட்டணி என்று மக்கள் முன்னணியை ட்ரொட்ஸ்கி இரக்கமின்றித் தாக்கினார். அவர் எழுதியதாவது: “மக்கள் முன்னணி ஒரு கூட்டணி அல்ல, வெகுஜன இயக்கம் என்று இழிந்த முறையில் கூறப்படுகிறது. ஆடம்பரமான வரையறைகளுக்குக் குறைவில்லை, ஆனால் இவை நிலைப்பாட்டின் தன்மையை மாற்ற முடியாது. கூட்டணியின் வேலை எப்பொழுதும் வெகுஜன இயக்கத்தின் மீது தடைகளை ஏற்படுத்தி அதை சமூக ஒத்துழைப்புப் பாதைகளில் இயக்குவதுதான்….கூட்டான கூட்டங்கள், அணிவகுப்புக்கள், உறுதிமொழி எடுத்தல், கம்யூன் மற்றும் வெர்சாயின் பதாகைகளை கூச்சல், பெரும் குழப்பம், ஜனரஞ்சகப் பேச்சுக்களுடன் கலத்தல் ஆகியவை அனைத்தும் ஒரே ஒரு இலக்கைத்தான் கொண்டவை: வெகுஜன இயக்கத்தைத் தடுத்து, மனத் தளர்ச்சியை ஏற்படுத்துதல்.”

முதலாளித்துவ பிரிவுகளுடன் “ஐக்கியப்படுத்தப்பட்ட” போராட்டங்களை பாட்டாளி வர்க்கப் புரட்சி என்று இல்லாமல் அரசியல் குற்றவாளிகள் என்று இணைத்துத்தான் ட்ரொட்ஸ்கி முத்திரைகுத்தி வாதிட்டார். “மக்கள் முன்னணியின் தலைமை (Herriot-Blum-Cachin-Thorez-Zyromsky-Pivert) வரவிருக்கும் முக்கியமான காலப்போக்கில் ஒன்றாக இருப்பதில் வெற்றிபெற்றால், இருக்கும் ஆட்சி தவிர்க்க முடியாமல் பாசிசத்திற்கு வழிவகுக்கும்” என்று ட்ரொட்ஸ்கி எச்சரிக்கை கொடுத்தார். அவர் தொடர்ந்தார்: “பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கான நிபந்தனை தற்போதைய தலைமையை கலைத்துவிடுவது. “ஐக்கியம்” என்னும் கோஷத்தின் பொருள் இச்சூழ்நிலையில் முட்டாள்தனம் அல்ல, ஒரு குற்றத்தன்மை உடையதாகும்.”

ட்ரொட்ஸ்கியின் கணிப்புக்கள் துன்பியலான வகையில் உண்மையென்று நிரூபிக்கப்பட்டுள்ளன. 1936 பொது வேலைநிறுத்தத்தின் போது வந்த புரட்சிக்கான வாய்ப்பை ஊதிய உயர்விற்காக விற்ற பின்னர், மக்கள் முன்னணியானது 1938ல் அது சரியும் வரை மிருகத்தனமாக தொழிலாள வர்க்க வேலை நிறுத்தங்களை அடக்கி வந்தது. முதலாளித்துவ முறை முழுவதும் பாசிச உணர்வு பரவி நின்ற நிலையில், அதன் மந்திரம் “ப்புளுமை விட ஹிட்லர்” என்று போன பின்னர், பிரான்ஸ் 1939ல் நாஜி ஜேர்மனியால் படையெடுப்பிற்கு உட்பட்டு, விரைவில் சரணடைந்தது.

ஐரோப்பாவும் உலகமும் இன்று பெரும் வர்க்கப் போராட்டங்களின் விளிம்பில் நிற்கின்றன. இது இறுதியில் 1930களின் வெடிப்பிற்கு சற்றும் குறைந்தவையாக இருக்காது. தொழிலாளர்களை பெரும் வறுமையில் தள்ளும் ஆளும் வர்க்கத்தின் உந்துதல் கடுமையான எதிர்ப்பிற்கு உட்படும். தொழிலாளர்களையும், சோசலிச எண்ணமுடைய அறிவுஜீவிகளையும் எதிர்கொள்ளும் பிரச்சினையானது எந்த அரசியல் முன்னோக்கு இப்போராட்டங்களை வெற்றிக்குக் கொண்டு செல்லும் என்பதுதான். PS,CGT மற்றும் NPA போன்றவை பரப்பும் போலித் தோற்றங்களுக்கு உட்பட்டிருந்தால் பெரும் சோக தோல்விகளைத்தான் தழுவுவம் என்று உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுகிறது. இது தொழிலாளர்களை ICFI யின் வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தைப் படிக்குமாறும், ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில் இணையுமாறும் அழைப்பு விடுகிறது.