WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
“எமது தேசிய விவகாரங்களில் பெரும் பலம் : இராணுவத்தின் முன் ஒபாமா நடுங்குகிறார்
Bill Van Auken
2 September 2010
Use
this version to print | Send
feedback
செவ்வாய் இரவு ஓவல் அலுவலகத்தில் இருந்து ஜனாதிபதி பாரக் ஒபாமா வழங்கிய உரையில் “எமது தேசிய விவகாரங்களில் பெரும் பலம்” என்ற துருப்புக்களைப் பற்றிய அசாதாரண குறிப்பு, அதிகார விரிவாக்கத்தைக் கொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் முன்னே நிர்வாகத்தின் நடுக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
மில்லியன் ஈராக்கிய மக்களின் உயிரைக் குடித்த ஒரு போரைப் புகழ்ந்தது, இப்போர்க் குற்றத்தைப் புரிந்தவருக்குச் சுற்றிவளைத்துப் பாராட்டுதல் ஆகியவற்றைக் கொண்ட இந்தப் பேச்சு ஐயத்திற்கு இடமின்றி ஒபாமாவின் அரசியல் வாழ்வில் பெரும் கோழைத்தன, போலித்தனமான கணங்களில் ஒன்றாக இடம் பெறும்.
ஆனால் தன்னுடைய 19 நிமிட உரையை அவர் முடித்துக் கூறிய சொற்றொடர்தான் ஒருவேளை ஜனாதிபதியின் முக்கிய கருத்தாக இருந்தது.
“நம்முடைய துருப்புக்கள் எமது தேசிய விவகாரங்களில் பெரும் பலம் ஆகும். நம் தேசம் கடின நிலையைக் கடந்து கொண்டிருந்தாலும், துருப்புக்கள் நமது பாதையில் உண்மையில் நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன, விடியலுக்கு முன்னால் உள்ள இருட்டிற்குப் பின்னர் சிறந்த நாட்கள் வரவுள்ளன.” என்று அவர் கூறினார்.
இந்த பொருள்பொதிந்த உரையின் வனப்புரை காட்டும் பிற முயற்சிகளைப் போல், முடிவுரைச் சொற்றொடரும் போலித்தனத்தைக் காட்டியது. இதற்குக் காரணம் அது வெள்ளை மாளிகை தொடரும் கொள்கைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அமெரிக்க மரபுகளைத் பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியைத்தான் பிரதிபலித்தன. ஒபாமாவின் பேச்சு எழுதுபவர்கள் பயன்படுத்திய உவமை, 1850ம் ஆண்டு ஹென்ரி வாட்ஸ்வோர்த் லாங்பெலோவின் “கப்பல் கட்டுதல்” என்னும் பாடலில் முக்கியமாக வந்துள்ளது.
ஓ! அரசின் கப்பலே, நீயும்கூட மிதந்து செல்வாயாக!
கூட்டாட்சியே, வலுவாகவும், பெரும் ஆற்றலுடனும் மிதந்து செல்வாயாக!
மனித குலம், அதன் அனைத்து அச்சங்களுடனும்,
வருங்கால ஆண்டுகளினை அனைத்து நம்பிக்கைகளுடனும்,
நின் விதியின் போக்கில் மூச்சுவிடாமல் பரபரப்புடன் தொங்குகின்றன!
உன்னுடைய போக்கை எந்த எஜமானர் தளமைத்தார் என்பதறிவோம்!
உன்னுடைய எஃகு போன்ற விலா எலும்புகளை எவர் அமைத்தனர் என்பதை.
19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பெரும் கவியாக இருந்த லாங்பெலோ, அடிமை முறையை அகற்ற வேண்டும் என்று வாதிட்டவரின் நோக்கம் மிகத் தெளிவுதான். அடிமைத்தன முறை நாட்டையே ஏற்கனவே துண்டாடிவிடும் அச்சம் இருந்த நிலையில் அவர் கூட்டரசிற்கு ஆதரவு வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தேசிய விவகாரங்களில் பெரும் பலம் அமெரிக்கக் குடியரசின் நிறுவனக் கொள்கைகளில் இருந்தது, அமெரிக்கப் புரட்சியிலும், சுதந்திரப் பிரகடனம் மற்றும் அரசியலமைப்பில் பிணைந்து உருவாக்கப்பட்டது.
ஒபாமாவைப் பொறுத்தவரை, “பெரும் பலம்” ஜனநாயகக் கோட்பாடுகளில் என்று இல்லாமல், அதன் இராணுவ வலிமையில் உள்ளது.
அமெரிக்கக் குடியரசின் நிறுவனத் தந்தையர் பல முறையும் 1789ல் தோமஸ் ஜெபர்சனால் குறிக்கப்பட்ட “நிலையான இராணுவத்தின்” மூலம் வரக்கூடிய ஆபத்தை “நாட்டின் உரிமைகளுக்குப் பெரும் ஆபத்துக் கொடுக்கும் கருவி என்றும், அவற்றை இயக்குபவர்களின் தயவில் மக்களை முற்றிலும் இருத்திவிடக்கூடும்” என்றும் எச்சரித்தார்.
Federalist Papers ல் அலெக்சாந்தர் ஹாமில்டன் எழுதினார்: “அவருடைய தொடர்ச்சியான பணிகள் துருப்புக்களின் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றன, அதற்கேற்ற விகிதத்தில் குடிமக்களுடைய நிலையையும் கீழ்ப்படுத்துகிறது. இராணுவ அரசு குடிமக்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டு உருவாகிறது. போர் அரங்கில் வசிக்கும் மக்களின் பிரதேசங்கள் அடிக்கடி தவிர்க்க முடியாமல் தங்கள் உரிமைகள் அடிக்கடி பறிபோவதற்கு உட்பட வேண்டும்; போர் இவர்கள் உரிமைகள் பற்றிய உணர்வை வலுவிழக்கச் செய்துவிடும்; சிறிது சிறிதாக மக்கள் துருப்புக்களை தங்கள் காவலர்கள் என்று நினைப்பதுடன் தங்களைவிட உயர்ந்தவர்கள் என்றும் நினைப்பர்.”
குறைந்தது பல மாநிலங்களின் அரசியல் யாப்புக்களில் இப்பொழுதும் “இராணுவம் பொது அதிகாரத்திற்குத் தாழ்ந்துதான் இருக்கும்”, “சமாதானக் காலத்தில் இந்த மாநிலத்தில் நிரந்தர இராணுவம் வைக்கப்பட மாட்டது” போன்ற விதிகள் அடங்கியுள்ளன. Posse Comitatus என்னும் முக்கிய சட்டக் கொள்கை--அமைதியைக் காக்கும் உரிமை பெற்ற அமைப்பு பற்றியது--உள்நாட்டுச் சட்டங்களைச் செயல்படுத்த இராணுவப் பயன்பாடுகூடாது என்று முறையாகத் தடுத்துள்ளது.
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு உணரப்பட்ட அச்சுறுத்தல் சமீபத்திய ஆண்டுகளில் பெரிதும் வளர்ந்துவிட்டது. ஜனாதிபதி ட்வைட் டி. ஐசனோவர் “இராணுவத் தொழில்துறை ஸ்தாபனங்கள்” ஜனநாயகமுறைக்கு ஒரு எச்சரிக்கை என்று அரை நூற்றாண்டிற்கு முன் விவரித்தது முன்னாள் இரண்டாம் உலகப் போர் தளபதி கற்பனை செய்ததைவிடவும் மகத்தான தன்மையைக் கொண்டுள்ளது.
இராணுவச் செலவுகளில் ஆண்டு ஒன்றிற்கு 1 டிரில்லியனைக் கிட்டத்தட்ட விழுங்கும் நிலையில், இதன் முக்கிய தளபதிகள் பேரரசின் தூதர்கள் போல் நடந்து கொண்டு, உலகின் பல பகுதிகளிலும் எந்த பொதுத்துறை அதிகாரியையும் விட மிக அதிக அதிகாரங்களைச் செலுத்துகின்றனர். மேலும் இதற்குத் துணையாக பெரும் தனியார் ஒப்பந்தக்காரர்கள் பல பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுத முறைகளில் இருந்து, எரிபொருட்கள், பிற விநியோகங்கள் மற்றும் கூலிப்படையினரையும் வழங்குகின்றனர்.
இன்றைய “நிலையான இராணுவம்” தற்பொழுதைய வடிவமைப்பில் 35 ஆண்டுகள்தான் தொடர்ந்துள்ளது; ஆனால் அமெரிக்கச் சமூகத்தில் இது முன்னோடியில்லாத நிகழ்வு ஆகும். அமெரிக்கக் குடியரசின் நிறுவனர்கள் கவலை கொண்டிருந்த மோசமான தீய கனாக்கள் நடைமுறைப்பட்த்த ப்பட்டுள்ள நிலையாகும்.
வியட்நாமில் அமெரிக்க கொண்ட தோல்வியை அடுத்து, இராணுவம் “தொழில்நேர்த்தி உடைய, தன்னார்வப் படை” ஆக மறுகட்டமைக்கப்பட்டது. அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகத்தினர் உதவியுடனும், தூண்டுதலுடனும், இராணுவம் தன்னை கிட்டத்தட்ட ஒரு தனிப்பிரிவாக மாற்றிக் கொண்டுள்ளது. தளபதிகளும் சிப்பாய்களும் “மாவீரர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்: இந்த அடைமொழி முந்தைய தசாப்தங்களில் நினைத்தும் பார்த்திருக்க முடியாதது ஆகும்.
இரண்டாம் உலகப் போரில் பணிபுரிந்த அந்த தலைமுறை இராணுவத்தையும் குறிப்பாக அதன் உயரதிகாரக் குழுவையும் சந்தேகம், ஏன் அப்பட்டமான இழிவுடன்கூடக் கண்டது. இந்த உணர்வுகள் SNAFU and Whiskey Tango Foxtrot போன்ற சொற்றொடர்களில் கேலியாகப் பிரதிபலித்தன.
பெரும்பாலான படையினர்கள் தற்காலிகமாக குடிமக்களிடம் இருந்து சேர்க்கப்பட்ட சூழ்நிலையில், இராணுவம் சமூகத்தில் இருந்து பெரும்பாலும் சமூக மற்றும் அரசியலால் வரும் அழுத்தங்களைக் கணக்கில் எடுக்கும் கட்டாயத்தில் இருந்தது. இப்பொழுது அப்படியில்லை. அதன் அமைப்பிலேயே இராணுவம் கூடுதலான, வெளிப்படையான முறையில் ஒரு சுயாதீன சக்தியாக வெளிப்பட்டுள்ளது.
ஈராக்கில் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போர் மற்றும் “பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போர்”--இரண்டையும் ஒபாமா தன் செவ்வாய் உரையில் நியாயப்படுத்தி, நிலைநிறுத்த முற்பட்டார்--இந்த வழிவகைக்குத்தான் பெரிதும் உதவியுள்ளன. இராணுவம் முழு மக்கட்தொகுப்பின் மீது காலனிய ஆட்சியைச் சுமத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நீதிக்குப் புறம்பான தூக்கிலிடல்கள், சித்திரவதை, இராணுவ முரசு முறைப்படி குடிமக்கள் மீது விசாரணை நடத்துதல், குவான்டாநாமோவில் நடப்பது போல் ஆகியவையும் நடைமுறையில் உள்ளன.
தேசிய விவகாரங்களில் பெரும் பலம் என்னும் கருத்தைக் கூறிய விதத்தில், அமெரிக்க அரசாங்கத்திற்குள் இராணுவம் மேலாதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறிவிட்டது என்பதை அடிப்படையில் ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் அவருடைய அறிக்கையின் மற்ற பிரிவுகளைப் பற்றி என்ன கூறுவது? துருப்புக்கள் “நமக்கு நம்முடைய போக்கு சரியானது என்ற நம்பிக்கையைக் கொடுக்கின்றனர்” என்று ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது. இது இராணுவத்திற்கு அமெரிக்கக் கொள்கையின் சரியான தன்மையை நிர்ணயிக்கும் ஒரே தீர்ப்பாளர் என்ற தகுதியைக் கொடுக்கிறது. உண்மையில் இந்த அதிகாரத்தைத்தான் ஒபாமா நிர்வாகம் தளபதிகளுக்குக் கொடுத்துவிட்டது.
போருக்கு எதிரி என்று காட்டிக் கொண்டு தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, துவக்கத்தில் இருந்தே ஒபாமா தன் ஜனாதிபதிப் பதவியில் இராணுவத்திற்கு முன் நடுங்கி நிற்கிறார். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இராணுவம் இவருடைய கொள்கைகளை வகுக்க அனுமதித்துள்ளார். அதே நேரத்தில் முன்னோடியில்லாத எண்ணிக்கையில் தன்னுடைய மந்திரிசபைக்கு நான்கு நட்சத்திர அந்தஸ்து உடைய தளபதிகளை நியமித்துள்ளார்.
ஜனநாயக விரோத மற்றும் இராணுவவாதப் போக்குகள் புஷ்ஷின் கீழ் தீவிரமாயின. ஆனால் அவருடைய நிர்வாகத்திற்கு முன்பும் அவை இருந்ததுடன், ஒபாமாவின் கீழ் தடையற்று பெருகியுள்ளன. இவை குறிப்பிட்ட அரசியல்வாதி அல்லது கொள்கையைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடித்தன்மையை வெளிப்படுத்துகின்றன. அது தன் உலகப் பொருளாதாரச் சக்தியின் சரிவை ஈடுகட்டுவதற்கு இராணுவவாதத்தைத்தான் பெருகிய முறையில் நம்பியிருக்கிறது.
அதே நேரத்தில் இராணுவச் சக்தியைக் கட்டமைப்பது, தேசியப் பாதுகாப்பு முறையை உயர்த்துவது ஆகியவை வெளிநாட்டு நிகழ்வுகளைவிட அமெரிக்காவிற்குள் நடப்பதுடன் தொடர்புடையவை ஆகும். இந்த வழிவகைகள் அமெரிக்காவில் முன்னோடியில்லாத அளவிற்கு சமூகச் சமத்துவமின்மை பெருகியுள்ள நிலையில் வெளிப்பட்டுள்ளன. செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி இப்பொழுது பெருமந்த காலத்தைவிட மிக அதிகம் ஆகும். இந்தச் சமூக துருவப்படுத்தல் ஜனநாயக வழி ஆட்சியை ஆழ்ந்த நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.
1930 களில் இருந்து வேலையின்மை மிக உயர்ந்து உள்ள நிலையில், ஊதியங்களும் சமூக நிலைமைகளும் இடைவிடாத் தாக்குதலுக்கு உட்பட்ட நிலையில், ஒபாமாவும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நிதியப் பிரபுத்துவமும் இராணுவத்தை அவர்கள் தேசிய விவகாரங்களில் பெரும்பலமாகக் காண்பதற்கு நல்ல காரணங்கள் உண்டு. இறுதியில், ஒரு மிகச்சிறிய சிறுபான்மை பெரும் செல்வத்தைச் சேகரித்தல் அதே நேரத்தில் பெருகிவரும் வறுமை தொழிலாளர் வர்க்கத்திற்கு அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் என்ற நிலைமை இராணுவ சக்தியால்தான் தக்க வைக்கப்பட முடியும் என்பதை அவர்கள் அறிவர். எனவேதான் ஜனாதிபதி ஒபாமா இராணுவத்திற்கு தன் கடப்பாட்டைத் தொடர்ந்து அளிக்கும் கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்துள்ளார். |