சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Socialist Party leaders call for increased state repression of youth and workers

பிரான்ஸ்: சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது பெருகிய அரச அடக்குமுறைக்கு அழைப்பு விடுகின்றனர்

By Antoine Lerougetel
1 September 2010

Use this version to print | Send feedback

தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் எதிராக அரச அடக்குமுறை அதிகாரங்களில் அதிக அதிகரிப்புத் தேவை என்று சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஏராளமான ரோமாக்களை நாடு கடத்தி வெளியேற்றி வருவதுடன், குடியுரிமை அங்கீகாரம் பெற்றுவிட்ட குடியேறியவர்களின் தேசியக் குடியுரிமையை நீக்கும் அதிகாரங்களை விரிவாக்கும் திட்டங்களுக்கும் இதுதான் சோசலிஸ்ட் கட்சியின் விடையிறுப்பு ஆகும்.

ஜூலை 30 அன்று கிரனோபிளில் சார்க்கோசியின் பேச்சு இனவெறிப் பிரச்சாரத்தை ஆரம்பித்ததிலிருந்து 900க்கும் மேற்பட்ட ருமேனிய ரோமாக்கள் நாடு கடத்தப்பட்டுவிட்டனர். 100க்கும் மேற்பட்ட அவர்களுடைய முகாம்கள் கடும் துன்பம் கொடுக்கும் வகையில் மூடப்பட்டுவிட்டன.

ஜூலை மாதம் ஒரு ரோமா மற்றும் வேறு ஒரு குடியேறிய இளைஞர் இரு தனித்தனிப் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவங்களினால் தூண்டப்பட்ட கலகங்களைப் பயன்படுத்தி, சார்க்கோசி தன்னுடைய இஸ்லாமிய எதிர்ப்பு வெறியையும் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளையும் தீவிரப்படுத்தி தன் அரசியல் தளத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளார். ஆளும் UMP க்கு பிராந்தியத் தேர்தல்களில் அவமானகரமான தோல்வியை அடுத்து, அவருடைய சிக்கனக் கொள்கைகளுக்கு வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுக்கும் நிலையில் அவருக்கான ஆதரவு கருத்துக்கணிப்பில் 34 சதவிகிதம் எனச் சரிந்துவிட்டது. இதைத்தவிர அவர் ஊழல் அம்பலங்களாலும் அவரும் அவருடைய கட்சியும் சட்டவிரோதமான நிதி உதவியை வோர்த்/பெத்தன்கூர் விவகாரத்தில் வரி விதிப்பிற்காகப் பெற்ற குற்றச்சாட்டுக்களினாலும் வலிமை குன்றியுள்ளார்.

சார்க்கோசியின் கொள்கைகள் பற்றிய மாறுபட்ட கருத்துக்களுக்கு சோசலிஸ்ட் கட்சி இன்னும் வலதிற்குத் திரும்பிய விதத்தில் விடையிறுப்பைக் காட்டியுள்ளது. La Rochelle ல் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அதன் கோடைக் கால பள்ளி முடிந்த பின், சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய முறையீடுகளை அது செய்தது. அவற்றுடன் சார்க்கோசி பற்றிய மிருதுவான வலதுசாரிக் குறைகூறல்களையும் இணைத்தது. இத்தகைய விடையிறுப்பு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபனத்தில் ஜனநாயக உரிமைகளுக்கு பாதுகாப்பு பற்றி குறிப்பிடத்தக்க இன்றியமையாத தளம் ஏதும் இல்லை என்பதைத்தான் உயர்த்திக் காட்டுகிறது.

சோசலிஸ்ட் கட்சியின் முதன்மைச் செயலாளர் Martine Aubry சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றி, “நம்பகத்தன்மை பக்கம் மாறிவிட்டது” என்றார். லீல் இன் மேயராகவும் இருக்கும் ஆப்ரி, “நம்முடைய நகரங்களில் நாம் முன்னணியில்தான் உள்ளோம். நாம் என்ன பேசுகிறோம் என்பதை நன்கு அறிவோம்” என்றார். பாதுகாப்பு பற்றி உட்கட்சி விவாதம் இருக்கும் என்று அறிவித்த இவர், அக்டோபர் 2ல் அதையொட்டி ஒரு “தேசிய உடன்பாடு” பற்றிய வெளியீடு வரும் என்றார்.

கட்சியில் செல்வாக்குடைய François Rebsamen, Dijon ன் மேயராகவும் செனட்டராகவும் உள்ளவர், தெளிவாகக் குறிப்பிட்டார்: “PS [Parti Socialiste] , இது மனித உரிமைகள் கழகம் அல்ல.” ரெப்சமனின் கருத்து PS ஆனது சார்க்கோசியின் கொள்கைகள் பற்றி “அறநெறிக் கண்டனத்தில்” ஈடுபடவில்லை, மாறாக “தற்போதைய கொள்கைகள் போதுமானவை அல்ல என்ற குறைகூறலாக உள்ளது” என்று Le Monde கருத்துக் கூறியுள்ளது.

இத்தகைய கருத்துக்கள் பரந்த அளவில் PS தலைமைக்குள் உள்ளன. முன்னாள் சோசலிஸ்ட் கட்சி பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் கீழ் சோசலிஸ்ட் கட்சியின் முதன்மை செயலராகவும் 1997-2002ல் பிரதம மந்திரியாகவும் இருந்த லியோனல் ஜோஸ்பன், ஆகஸ்ட் 23ம் திகதி Le Monde இல் “அரசாங்கம் சட்டமீறலைச் சமாளிக்கப் போதுமான ஆதாரங்களை அதிகரிக்கவில்லை: அவர்கள் அதைக் குறைத்துக் கொண்டுதான் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 9,000 gendarme மற்றும் பொலிஸ் பதவிகள் குறைக்கப்பட்டுவிட்டன. என்னுடைய அரசாங்கத்தின்கீழ் 20,000 பாதுகாப்புத் துணை படையினரைத் தவிர, பொலிஸ்காரர்கள் எண்ணிக்கை மட்டும் 5,000 ஆல் அதிகரிக்கப்பட்டது.” என்றார்.

2007ல் சட்டம் ஒழுங்கு பற்றி சார்க்கோசியுடன் வாதிட்ட, PS ன் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக இருந்தபோது தன் கொள்கைகளை நினைவு கூர்ந்த செகோலீன் ரோயால், “நீடித்த சட்டம் மற்றும் ஒழுங்கு, ஒரு நியாயமான நிலைப்பாடு” ஆகியவை பற்றிய தன் அழைப்பை வலியுறுத்தினார். மேலும் இராணுவம் சட்டத்தை மீறும் இளைஞர்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். அவருடைய அறிக்கையை Parisien-Aujourd’hui en France மேற்கோளிட்டு, “இப்பொழுது அரசாங்கம் செய்துவருவது போல் இராணுவப் பிரிவுகளைக் கலைப்பதற்குப் பதிலாக, நாம் மறு சிந்தனை செய்து இவ்விடங்களை இளைஞர்கள் மீண்டும் சீராக வருவதற்கான வழிவகைக்கு மேற்பார்வைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்பதாகத் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 27ல் Liberation க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், அவ்வம்மையார் அறிவித்தார்: “சட்டம் ஒழுங்கு பிரச்சினை வலதுசாரிப் பிரச்சினை என்று நினைப்பது தவறாகிவிடும். சட்டம் மற்றும் ஒழுங்கு சமூகப் பிரச்சினையின் ஒரு பகுதி ஆகும்; யார் இந்த சீர்குலைவால் ஒவ்வொரு நாளும் அதாவது அயலவர்கள், பொதுப் போக்குவரத்தில் , பள்ளியில் அத்தோடு பொருளாதார, சமூகப் பாதுகாப்பின்மை கிடைக்காமலும் பாதிக்கப்படுகிறார்கள்.”

சார்க்கோசியின் கொள்கைகளுக்கு பரந்த விரோதப் போக்கு வேண்டும் என்று PS முயல்கிறது –இவை இரண்டாம் உலகப் போரின் போது நாஜி சார்பு விஷி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணையாக உள்ளன என்பது பரந்த அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது—அதே நேரத்தில் இவர்கள் தங்களுடைய சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய கருத்துக்களையும் முன்வைக்கின்றனர். ஆயிரக்கணக்கான யூதர்களை மரண முகாம்களுக்கு அனுப்பி வைத்ததற்கு முன் 7,000 யூதர்கள் உட்பட 15,000 பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் தேசிய குடியுரிமை பறிக்கப்பட்டிருந்தது. விஷி ஆட்சியில் பல அரசியல் எதிர்ப்பாளர்கள், தளபதி சார்ல்ஸ் டு கோல் உட்பட, தங்கள் குடியுரிமையை இழந்திருந்தனர்.

சார்க்கோசியின் திட்டங்களைக் குறைகூறும் சிலர் இளம் குற்றம் புரியும், குடியுரிமை பெற்றுவிட்ட குடியேறியவர்களின் குடியுரிமையை நீக்குவதற்கான சட்டத்தை இயற்றுவது இயலாது என்று கூறுகின்றனர். ஏனெனில் இது பிரெஞ்சு அரசியலமைப்பை மீறுவதாகும். அது பிறப்பு மூலம், இனம் எப்படி இருந்தாலும் சட்டத்தின் முன்னிலையில் சமத்துவத்திற்கு உறுதியளிக்கிறது.

ஆனால் குடியேற்றம், தேசிய அடையாளத் துறையின் மந்திரியான எரிக் பெசோன், ஒரு முன்னாள் PS செய்தித் தொடர்பாளர், நம்பிக்கையுடன் Le Parisien ல் “1998ல் நிலவிய சட்ட நிலைமைக்குத் திரும்பினால் போதுமானது; இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், அந்த நேரத்தில் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனையாக 5 ஆண்டுகளுக்கு மேலான சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும், அவர்கள் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக குடியுரிமை பெற்றவர்கள், பிரெஞ்சுக் குடிமகன் என்னும் உரிமையை இழந்தனர்.” என்று கூறியுள்ளார்.

Le Monde பேட்டி ஒன்றில் நன்கு புகழ் பெற்ற வக்கீல் Patrick Weil குறிப்பிட்டார்: “1998ல் இருந்து குடியுரிமையை இரத்து செய்து நாடற்ற நபர்களாகச் செய்வது சட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது. எனவே இது இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் மீது தான் சுமத்தப்படும். நிக்கோலா சார்க்கோசி இக்கொள்கையில் இருந்து பின்வாங்கினால், அது ஏற்கப்படமுடியாத பிற்போக்குத்தனம் ஆகும். நம் எல்லைக்கு அப்பால் இருக்கும் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்.” ஆனால், “இரு சர்வதேச உடன்படிக்கைகளில் பிரான்ஸ் கையெழுத்திட்டது, பின்னால் ஒப்புதல் கொடுக்கவில்லை, என்பதையும் நாம் மறக்கக் கூடாது. ஒரு உடன்படிக்கை 1961ல் ஏற்பட்டது, நாடற்ற நிலையை அது ஏற்கவில்லை. 1997ல் ஐரோப்பிய சபை கொண்டுவந்த உடன்பாட்டின்படி குடியுரிமை நீக்கத்தின் மூலம் நாடற்றவராகச் செய்தலைத் தோற்றுவிக்கும் முறையையும் ஏற்கவில்லை.” என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தில் இருந்தபோது PS இந்த உடன்படிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை, என்பது அதன் வலதுசாரிக் கொள்கைகளுக்கு இன்னும் கூடுதலான சான்று ஆகும். உண்மையில், சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றிய அதன் வலதுசாரி நிலைப்பாடுதான் அதை வலதுசாரி அரசியல் சக்திகளுடன் இணைத்துள்ளது. அவர்கள் தந்திரோபாயக் காரணங்களுக்காக சார்க்கோசி பற்றி குறைகூறுகின்றனர்.

Le Monde அதன் ஆகஸ்ட் 2ம் திகதி தலையங்கத்தில் UMP யில் சார்க்கோசி பற்றிய குறைகூறலைக் குறிப்பிட்டு, “வலதிற்குள் இருக்கும் பிளவு உச்சக்கட்டத்திற்கு வந்துள்ளது” என்று எழுதியுள்ளது. “ஒருவித ‘ சார்க்கோசியைத் தவிர மற்றவை’ என்ற இயக்கம் வலது-இடது வழிக்கும் அப்பால் தோன்றுவதற்கான தளங்கள் உள்ளன” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

வலதுசாரிப் புள்ளிகள் பலர், முன்னாள் கோலிச ஜனாதிபதி ஜாக் சிராக்கின் கீழ் பணியாற்றிய மூன்று பிரதம மந்திரிகள் உட்பட, சார்க்கோசியின் கிரநோபிள் திட்டங்களில் இருந்து தங்களை ஒதுங்கி வைத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் Alain Juppé , Jean-Pierre Raffari மற்றும் Dominique de Villepin ஆவார்கள். அவர்கள் சார்க்கோசியின் நடவடிக்கைகள் பிரான்ஸின் கடந்த கால பாசிசத்தை பெரிதும் நினைவுபடுத்துவதாகவும், சமூக ஒழுங்கிற்கு அவை தீமை என்பது மட்டுமின்றி, பிரான்ஸின் சர்வதேச நிலைப்பாட்டிற்கும் ஒவ்வாதது என்று குறைகூறியுள்ளனர்.

Le Monde யில் கருத்து தெரிவிப்புக் கட்டுரை ஒன்றில், சார்க்கோசியின் கிரநோபிள் உரையை “பிரெஞ்சுக் கொடியில் ஒரு களங்கம்”, “மனித உரிமைகளைத் தோற்றுவித்த நாட்டிற்கு ஒரு இழுக்கு” என்று வில்ப்பன் விவரித்தார். பிரான்ஸின் தற்பொழுதைய ஆட்சி பற்றியும் அவர் கவலை தெரிவித்தார். ஏனெனில் “அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கும் நாட்டிற்கும் இடையே பிளவு ஏற்பட்டுவிட்டது.” “சக்திகள் ஒன்றுகூடிய ஒரு குடியாட்சி மாற்றீட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்”.

போப்பும் பல பிரெஞ்சு கத்தோலிக்க பெருந்தகைகளும் சார்க்கோசியைக் குறைகூறியுள்ளனர். குறிப்பாக ரோமா மக்கள் நாடு கடத்தல்கள், அவர்கள் முகாம்கள் அகற்றப்பட்டது குறித்து.

சார்க்கோசியின் நடவடிக்கைகளைக் குறைகூறினாலும், PS ஆனது சார்க்கோசி நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு முழுப் போராட்டத்தை நடத்தவில்லை. வலதுசாரிப் பற்று நிறைந்த ஆளும் வர்க்கத்தின் பிற பிரிவுகளின் அரசியல் விழைவுகளைத்தான் பிரதிபலிக்கிறது. Le Monde பேட்டியில் Patrick Weil கூறியபடி, “குடியரசுத் தலைவர் மீது பெரும் குற்ற விசாரணை முறையும் உள்ளது; ஆனால் அதை எவரும் பயன்படுத்துவதில்லை—நிக்கோலா சார்க்கோசியை வெளியேறு என்று சொல்வதற்கு.”