WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பாராளுமன்றம் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு ஒப்புதல் கொடுக்கையில், பிரெஞ்சு வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன
By Alex Lantier
28 October 2010
Use
this version to print | Send
feedback
செவ்வாயன்று செனட்டானது இறுதியான ஓய்வூதிய சட்டத்தை இயற்றியதற்கு, தேசிய சட்ட மன்றம் ஒப்புதல் கொடுத்தபோதிலும், ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் நேற்று தொடர்ந்தன.
கருத்துக் கணிப்புக்கள் ஓய்வூதியச் “சீர்திருத்தத்திற்கு” எதிராகத் தொடர்ந்து மக்கள் அணிதிரள்தலுக்கு 63 சதவிகித மக்கள் ஆதரவு கொடுப்பதாகக் காட்டுகின்றன. இது பரந்த முறையில் செல்வந்தர்களுடைய நலன்களுக்காக உழைக்கும் மக்கள் மீது நடத்தப்படும் சட்டவிரோதத் தாக்குதல் என்றுதான் கருதப்படுகிறது. ஆயினும்கூட, தொழிற்சங்கத் தலைமை வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தி முதலாளிகள் குழுக்களுடன் இன்னும் சலுகைகள் கொடுப்பதற்காகப் பேச்சுவார்த்தைகளுக்கு நகர்கின்றன.
எண்ணெய் இருப்புக்களில் மறியலை பொலிசார் தாக்குதலினால் முறியடிப்பது மீண்டும் தொடர்ந்தாலும் எண்ணெய் மற்றும் துறைமுக வேலைநிறுத்தம் தொடர்வதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கிறது. மொத்த 12 சுத்திகரிப்பு நிலையங்களில் 5 நிலையங்கள் வேலைசெய்ய திரும்புவதற்கு வாக்களித்துள்ளன - அதாவது La Mède, Port-Jérôme-Gravenchon, Fos-sur-Mer, Petit-Couronne, மற்றும் Reichstett – மிகுதியானவை முழுமையாகவோ பகுதியாகவோ வேலை நிறுத்தத்தில் உள்ளன.
ஐந்து சுத்திகரிப்பு ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாட்டை தீர்க்கப் போதுமானதாக இல்லை. நடந்து கொண்டிருக்கும் மார்செய் மற்றும் Le Havre எண்ணெய் இருப்பு நிலையங்களின் வேலைநிறுத்தங்கள் கிட்டத்தட்ட சுத்திகரிப்பு ஆலைகளுக்கு வரும் கச்சா எண்ணெய்ப் பாய்வை நிறுத்திவிட்டன. செய்தி ஊடகத் தகவல்களின்படி, ஒரே ஒரு எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் போதிய கச்சா எண்ணெய் இல்லாதது ஆகும். பிரான்ஸின் மூலோபாய இருப்புக்களிலிருந்து கச்சா எண்ணெயை ஆலைகளுக்கு வழங்க அரசாங்கம் முயல்வதாகத் தெரிகிறது.
பிரான்சின் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 20 சதவிகிதம் இன்னமும் பெட்ரோலியப் பொருள் இல்லாமல் இருப்பதாக அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர். எப்பொழுது தட்டுப்பாடு இன்மை முடியும் என்ற ஒரு மதிப்பீட்டையும் அவர்கள் கொடுக்க மறுக்கின்றனர். எண்ணெய் தட்டுப்பாடுகளின் பாதிப்பு பற்றி அரசாங்கம் குறைமதிப்பு கொண்டுள்ளதாக தோன்றுகிறது. Carbeo.com என்னும் வலைத் தளம், செய்தி ஊடகத்தில் பரந்த முறையில் செல்வாக்கு பெற்ற எரிவாயு நுகர்வு பற்றிய வலைத் தளமாக கருதப்படுவது, பிரான்ஸின் 12,300 விற்பனை நிலையங்களில் 3,936 (32சதவிகிதம்) மூடப்பட்டுவிட்டன அல்லது நேற்று எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டது என்று பட்டியலிட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துத்துறை மற்றும் குப்பைச் சேகரிப்பு போன்றவற்றில் இன்னும் வேலைநிறுத்தங்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன. ஆனால் சில சிறு தெற்குப்புற நகரங்கள் Pau, Agen போன்றவற்றில் நகரசபை தொழிலாளிகள் வேலைக்குத் திரும்புவதற்கு வாக்களித்துள்ளனர்.
வேலைநிறுத்தங்கள் சர்வதேசப் பாதிப்பையும் கொண்டுள்ளன. செவ்வாயன்று Setca சமூக ஜனநாயகத் தொழிற்சங்கத்தின் தொழிலாளர்கள், பிரான்ஸில் இருந்து வரும் பார வாகனங்கள் வேலை நிறுத்தத்தைத் தவிர்க்கும் வகையில் பெல்ஜியத்திற்கு மீண்டும் விநியோகம் செய்ய முற்படுகின்றன என்ற முடிவிற்கு வந்தபோது, பெல்ஜியத்தில் Feluy மற்றும் Tertre என்னும் இடங்களில் இரு எண்ணெய்க் கிடங்குகளை முற்றுகையிட்டனர். Setca தொழிற்சங்கம் இந்த நடவடிக்கைகள் “வேலைநிறுத்தத்திலுள்ள பிரெஞ்சுத் தொழிலாளர்களுடன் ஒற்றுமையைக் காட்டுவதற்காக” என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளனர்.
செவ்வாயன்றே கரிபியனிலுள்ள பிரெஞ்சு வெளிநாட்டுப் பகுதியான Guadeloupe ல் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட அணிவகுப்பு நடத்தப்பட்டு அதில், 25,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொண்டனர்.
இன்றைய தேசிய நடவடிக்கை தினத்திற்கு முன்னதாக, நாடெங்கிலும் உள்ள 29 பொதுப் போக்குவரத்து இணையங்கள் வேலைநிறுத்த முன்னறிவிப்புக்களைக் கொடுத்துள்ளன. DGAC எனப்படும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககம் விமான நிறுவனங்களை அறிவிக்கப்பட்ட பயணங்களில் நாடு முழுவதும் 30 சதவிகிதம் குறைக்குமாறும், பாரிஸின் ஓர்லி விமான நிலையத்தில் 50 சதவிகிதம் குறைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய எதிர்ப்புக்களில் பங்கு பெறுபவர்கள் எண்ணிக்கை குறையலாம். ஏனெனில் பல உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் All Saints Day வார விடுமுறைகளுக்காகச் சென்றுவிட்டனர்.
பிரச்சாரத்தின் முக்கியமான பகுதி, தொழிலாளர்களின் எதிர்ப்பை உளச்சோர்விற்கு உட்படுத்தும் விதத்தில், நேற்றைய பெயரளவிற்கு நடந்த ஒப்புதல் பற்றிய விரிவான தகவல்கள் வெளிவந்தது ஆகும். செனட் மற்றும் தேசிய சட்டமன்றம் முன்னதாகக் கொண்டுவந்திருந்த மாற்றங்கள் ஓய்வூதிய வெட்டுச் சட்டத்தின் இறுதி வடிவத்தில் தேசிய சட்டமன்றத்தில் ஒப்புதலைப் பெற்றது என்பதே அது.
இச்சட்ட வரைவு நவம்பர் 15 அளவில் பிரகடனம் செய்யப்படும். அதற்கு முன் PS எனப்படும் எதிர்த்தரப்பு சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் இது அரசியலமைப்புக் குழுவின் ஒப்புதலுக்குச் செல்ல வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இச்சட்ட வரைவு குறைந்தபட்ச ஓய்வூதிய வயதை 60ல் இருந்து 62க்கு உயர்த்துகிறது. மேலும் முழு ஓய்வூதியத்தோடு ஓய்வு பெறும் வயதை 65ல் இருந்து 67 க்கு உயர்த்தியுள்ளது. இதேபோல் பணியில் இருக்க வேண்டிய காலம் 2012 ஆண்டளவில் 41 ஆண்டுகள் என்று உயர்த்தப்படும், பின்னர் 2013 ஆண்டளவில் 41.25 என்றும் அதன் பின் வாழ்நாள் எதிர்பார்ப்புக் குறியீட்டிற்கு ஏற்ப அதிகரிக்கப்படும். இச்சட்டவரைவு பணிக்கால காயங்களால் பாதிக்கப்படுவோர் ஓய்வு பெறுவதையும் கடினமாக்கியுள்ளது. பெரும்பாலானவற்றில் 20 சதவிகிதம் இயலாது என்ற மருத்துவச் சான்றிதழ் தேவை. மற்றவற்றிற்கு 10 சதவிகிதம் என்பது தக்க வைக்கப்பட்டுள்ளது.
இச்சட்ட வரைவு, ஓய்வூதியத்திற்காக அளிக்கப்படும் தொகையை 18 பில்லியன் யூரோக்கள் என்று ஒராண்டிற்குக் குறைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Le Monde இந்த நடவடிக்கையை “பிரான்ஸின் கடன் தரத்தைப் பாதுகாக்கும்” என்றும் சமூகநலச் செலவுகள், கடன்கள் ஆகியவற்றைக் வெட்டுவதால் இது ஏற்பட்டுள்ளது என்றும் பாராட்டியுள்ளது.
பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் சட்டவரைவிற்கு அனைத்து எதிர்ப்புக்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு அறிக்கை விடுத்துள்ளார். “குடியரசின் சட்டம் இப்பொழுது அனைவராலும் ஏற்கப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
ஆளும் கன்சர்வேட்டிவ் UMP பொதுமக்கள் கருத்துக்களை தூண்டாமல் இருப்பதில் சற்றே கவனத்துடன் உள்ளது. தேசிய சட்டமன்றத் தலைவர் பெர்னார்ட் அக்கோயே வாக்கு ஒரு “வெற்றி” என்று கருதப்படக்கூடாது என்றார், ஏனெனில் பாராளுமன்றத்தின் பணி சட்ட நூல்களை ஆராய்தல் என்று இருக்க வேண்டும்”. நாளேடான Liberation, “UMP தேசிய சட்டமன்றத்தில் வெற்றிக் கோலத்தை தவிர்க்கிறது” ஏனெனில், “அரசாங்கம் அதன் சீர்திருத்தங்களை எதிர்க்கும் இயக்கத்தின் முடிவை இன்னும் காணவில்லை.” என்று எழுதியுள்ளது.
இந்த அறிக்கைகள் செய்தி ஊடகத்தின் பிரச்சாரமான சட்டத்திற்கான அனைத்து எதிர்ப்பையும் இழந்துவிட்ட நோக்கத்திற்கு என்று சித்தரிப்பதின் இழிந்த தன்மைக்கு சான்று ஆகின்றன. உண்மையில் அரசாங்கம் ஆழ்ந்த செல்வாக்கற்ற நடவடிக்கை பற்றிய வெகுஜனச் சீற்றம் வெடிக்கக் கூடும் என்று பெரும் கவலை கொண்டுள்ளது.
தொழிற்சங்கங்களும் அவற்றின் “இடது” கட்சி ஆதரவாளர்களும் கொண்டுள்ள அழுகிய பங்கையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவை சார்க்கோசி அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட மறுக்கின்றன.
தொழிற்சங்கத் தலைவர்கள் பரந்த வேலைநிறுத்தங்களுக்கு அல்லது வேலைநிறுத்தம் செய்யும் எண்ணெய்த்துறை தொழிலாளர்கள் மீதான பொலிஸ் தாக்குதலுக்கு எதிராக எதிர்ப்புக்களை அமைக்கவோ மறுக்கின்றன. நேற்று Le Point கூறியது: “இப்பொழுது பல நாட்களாக [தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் தலைவர்] பேர்னார்ட் தீபோ வேலைநிறுத்தங்களுக்கு ஊக்கம் தருவதில்லை. திங்களன்று France 2 தொலைக்காட்சியில் அவர் “அத்தகைய இயக்கங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுக்கவில்லை…”
உண்மையில், தொழிற்சங்கங்கள் விரைவில் Movement of French Enterprises (Medef) என்னும் பிரான்ஸின் முக்கிய வணிகக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளுக்காக மேசைக்குத் திரும்புகின்றன. CGT மற்றும் பிரெஞ்சு ஜனநாயக உழைப்பாளர் கூட்டமைப்பு (CFDT) ஆகியவை இளந்தொழிலாளர்களுக்கும் ஓய்வு பெறவிருக்கும் தொழிலாளர்களுக்கும் பணி நிலைமைகளில் இன்னும் மாறுதல்களை முன்வைத்துள்ளன. பேச்சுக்களின் வலதுசாரித் தன்மையை வலியுறுத்தும் விதத்தில் CGT நிதியங்களில் மாறுதல்களில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறது—சமூகநலச் செலவுகளுக்காக செல்லும் பெருநிறுவனங்களின் மீதான வரிகளைக் குறைக்க வேண்டும் என்று கூறுகின்றன.
ஓய்வூதிய வெட்டுக்களின்போது எதிர்ப்புக்களில் போலிசார் மாறுவேடத்தில் இருந்தது பற்றிய மற்றொரு பெருகிய சர்ச்சையையும் தொழிற்சங்கங்கள் எதிர்கொண்டுள்ளன. மாறுவேடப் பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கி அருகில் இருந்த கட்டிடங்களையும் செய்தி ஊடகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை இழிவுபடுத்துவதற்காக சேதப்படுத்தினர் என்று சாட்சிகள் கூறுகின்றனர். நேற்று Liberation க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், தீபோ “CGT அடையாள அட்டைகளை அணிந்திருந்த பொலிசாரை நாங்கள் பார்த்தோம், இவர்கள் பாரிசிலும் லியோனிலும் கலகத் தடுப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையை அடைந்தனர்” என்று குறைகூறியுள்ளார்.
ஆனால் CGT தலைமைக்கு பொலிசார் அந்த அணிகளில் இருந்தது பற்றி நன்கு தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைதியான ஆர்ப்பாட்டங்களில் பொலிசார் ஊடுருவது “அதிர்ச்சி தரவில்லை” என்று Synergy-Officers தொழிற்சங்கத் தலைவர் Mohamed Doune, France 2 தொலைக்காட்சியில் நேற்று இரவு கூறினார். “இந்த வழிவகைகள் அனைத்து அரசியல், தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் நன்கு தெரியும், சிலர் இதுபற்றித் தெரியாதது போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்கள் போல் கோபப்படும்போது, அது இரக்கத்திற்கு உரியது, அபத்தமானது” என்றார்.
லியோனைச் சுற்றியுள்ள Rhône பகுதிக்கு பொலிஸ் தலைவரான Jacques Gerault ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்: “மக்களிடையே ஊடுருவும் பாரம்பரியம் பொலிசிற்கு உள்ளது. அவர்கள் சாதாரணமாக, அமைதியாக இதைச் செய்கின்றனர்.” லியோன் பொலிசின் இரகசியப் பொலிசார் CGT அடையாள அட்டைகளைக் கொண்டிருந்தனர் என்ற தகவல்களைத் தான் கேட்டபோது, “இதைப்பற்றி CGT இன் பிரதிநிதிக்குக் கூறினேன், ஆனால் அது பற்றி அவர் முன்னமே அறிந்திருந்தார்” என்றார்.
பொலிசாரின் கூற்றுக்களில் எந்த அளவு உண்மை இருந்தாலும், தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான பரந்த சீற்றத்திற்கு தங்கள் முதுகைத்தான் காட்டுகின்றன. இதற்குக் காரணம் அவை முதலாளிகள் அமைப்புக்களுடன் தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் அதிக தாக்குதல்கள் நடத்த ஒத்துழைப்புத் தருவதற்குத்தான். உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் “இடது” கட்சிகளில் இருந்து சுயாதீனமாக நடவடிக்கைக் குழுக்கள் அமைக்க வேண்டும் என்ற அழைப்பை, சார்க்கோசி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு வேலைநிறுத்தங்களை விரிவுபடுத்தி ஒரு பொது வேலை நிறுத்தத்திற்குத் தயாரிப்பு நடத்த வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தை இது உயர்த்திக் காட்டுகிறது.
|