சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government, unions seek to limit strikes against pension cuts

பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை வரம்பிற்கு உட்படுத்த முயல்கின்றன

By Alex Lantier
26 October 2010

Use this version to print | Send feedback

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதியச் “சீர்திருத்தத்திற்கு” எதிராக நடந்துவரும் வேலைநிறுத்தங்களைக் குறைப்பதற்கு நேற்று அரசாங்க அதிகாரிகள் திணறினர். எண்ணெய் முற்றுகைகள் மீது பலமுறையும் பொலிஸ் தாக்குதல்கள், மற்றும் அனைத்து புனிதர்கள் வாரம் (All Saints Week) விடுமுறையையொட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எதிர்ப்புக்களை நிறுத்தியுள்ள நிலையில், மந்திரிகள் வேலைநிறுத்தங்கள் முடிந்துவிட்டன என்று அறிவித்து தொழிலாளர்களை மனச்சோர்விற்கு உட்படுத்த முற்பட்டுள்ளனர்.

வேலைநிறுத்தங்களை எண்ணெய்த் துறையிலும் போக்குவரத்துப் பிரிவுகளிலும் பிரெஞ்சுத் துறைமுகங்களிலும் தனிமைப்படுத்திய விதத்தில் தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு உதவி புரிகின்றன.

கிட்டத்தட்ட 18 பில்லியன் யூரோக்கள் என்று தொழிலாளர்களுக்கு ஆண்டுக்குக் கொடுக்க வேண்டிய தொகைகளைச் சேமிக்கும் நோக்கம் கொண்ட ஓய்வூதியச் சட்டவரைவு செனட்டில் சமீபத்தில் வாக்களிக்கப்பட்டதால், அரசாங்கம் அதைப் பெரிதும் பயன்படுத்த முற்பட்டுள்ளது. அந்தச் சட்டவரைவு பெரும் மக்கள் எதிர்ப்பை மீறியும் இயற்றப்பட்டுவிட்டது.

ஞாயிறன்று France 3 தொலைக்காட்சியில் தொழிலாளர்துறை மந்திரி எரிக் வொர்த் திமிர்த்தனமாக, “இனி வேலைநிறுத்தம் செய்வதில் அர்த்தம் இல்லை. சட்டம் வாக்களிக்கப்பட்டபின், அது சட்டமாகிவிட்டது, அது மதிக்கப்பட வேண்டும்” என்று திமிர்த்தனமாக அறிவித்தார்.

நேற்று செய்தி ஊடகத் தகவல்கள் மூன்று சுத்திகரிப்பு ஆலைகளான Fos-sur-Mer, Port-Jerome-Gravenchon மற்றும் Reichstett ஆகியவற்றில் வேலைக்கு மீண்டும் திரும்புதல் குறித்து வாக்களிப்புக்கு குவிப்புக் காட்டின. இதுவரை பிரான்சில் அனைத்து 11 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் வேலைநிறுத்தத்தில் உள்ளன. சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், எண்ணெய்க் கிடங்குத் தொழிலாளர்கள் மற்றும் பாரவண்டி சாரதிகள் ஆகியோருடன் எரிபொருள் விநியோகத்தைத் தடைக்கு உட்படுத்தி நாடெங்கிலும் பெட்ரோல் மற்றும் டிசல் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

கலகத்தடுப்புப் பொலிஸ் பிரிவினரை அரசாங்கம் திரட்டி பிரான்ஸ் முழுவதும் நிலையங்களில் நடக்கும் முற்றுகைகளை முறியடிக்க முயல்கிறது. UFIP எனப்படும் பிரெஞ்சுப் பெட்ரோலியத் தொழில்துறை சங்கம் எண்ணெய்க் கிடங்குங்களில் அனைத்து முற்றுகைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால் சுத்திகரிப்பு ஆலைகளுக்குள் இருக்கும் 9 எண்ணெய்க் கிடங்குகள் இதில் இல்லை என்று கூறியுள்ளது. தென்கிழக்கு பிரான்ஸில் Drome பிராந்தியத்தில் பொலிஸ் தாக்குதல்கள் இரு முற்றுகைகளை எண்ணெய்க் கிடங்குகளில் முறித்துள்ளன—ஒன்று Savoy லும் மற்றொன்று Saint-Pieere-des-Corps என்று மத்தியப் பிராந்தியத்தில் Tours க்கு அருகேயுள்ள இடத்தில்.

பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CFDT) தொழிற்சங்க அதிகாரிகள் பார வண்டி சாரதிகள் இருப்பினும் முற்றுகைகளைத் தொடர்வர் என்று எச்சரித்துள்ளனர். ஆனால் தேசிய அளவிலுள்ள தொழிற்சங்கங்கள் பொலிஸ் வேலைநிறுத்த முறிப்பிற்கு எதிராக எவ்வித தொழில்துறை நடவடிக்கைக்கும் ஏற்பாடு செய்யவில்லை.

வேலைநிறுத்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்று வொர்த் அறிவித்திருந்தாலும், வேலைநிறுத்தங்கள் பொருளாதாரத்தை பெரும் ஆற்றலுடன் தொடர்ந்து பாதிக்கின்றன. எரிபொருள் விற்பனை நிலையங்களுக்குத் தேவையானவற்றை விநியோகிக்க அரசாங்கம் இன்னும் திணறுகிறது. நேற்று பிரான்ஸில் மூன்றில் ஒரு எண்ணெய் நிலையத்தில் இருப்பு இல்லை என்று அரசாங்கப் புள்ளிவிபரங்களே கூறுகின்றன. சுற்றுச்சூழல் மந்திரி Jean-Louis Borloo தான் 80 சதவிகித நிலையங்கள் “இன்று செயல்படும்” என்பதற்கான இலக்கை நிர்ணயித்திருப்பதாகக் கூறினார்.

மேற்கு பிரான்ஸிலும் பாரிஸிலும் மோசமான பிரச்சினைகள் தகவல்களாக வந்துள்ளன. ஆனால் தென்கிழக்கிலுள்ள லியோனைச் சுற்றியுள்ள Rhône பகுதியில் 250 நிலையங்களில் 87ல் முற்றிலும் பெட்ரோலிய இருப்பு இல்லை என்றும் மூன்றில் இரு பங்கு விற்பனை நிலையங்களில் விநியோகப் பிரச்சினைகள் உள்ளதாகவும் பொலிஸ் அதிகாரிகள் கூறினர்.

பிரெஞ்சுத் துறைமுகங்களில் வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன. இவற்றுள் முக்கிய எண்ணெய் வழங்கல் நிலையங்களான மார்செய் மற்றும் Le Havre ஆகியவை அடங்கும். மார்செய் துறைமுகத்திலும் இறுதிப் பகுதியிலும் தளத்திற்கு வரமுடியாத கப்பல்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 76 கப்பல்களும் 4 barges உம் நேற்று இருந்தன. அதற்கு முந்தைய தினம் 73 கப்பல்களும் 4 barges ம் இருந்தன.

நேற்று நகரசபைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தனர். பாரிஸுக்கு அருகே உள்ள Ivry-sur-Seine ல் உள்ள முக்கியக் குப்பைத் துப்பரவு நிலையத்தில் குப்பை சேகரிக்கும் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். பல நகரங்களிலும் பஸ் சாரதிகளும் போக்குவரத்துத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் உள்ளனர்.

எட்டு பல்கலைக்கழகங்கள் இன்னும் முற்றுகையில் உள்ளன. பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் நவம்பர் 4ம் தேதியன்று உயர்நிலைப்பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ஒரு தேசிய வேலைநிறுத்த தினத்திற்கு அழைப்பு வடுத்துள்ளனர். அன்றுதான் பள்ளி விடுமுறை முடியும் நாள். ஒரு தேசிய இளைஞர் எதிர்ப்பும் நாளை நடைபெறவுள்ளது.

வணிக ஏடான Les Echos நடத்திய கருத்துக் கணிப்புக்கள் மக்களில் 61 சதவிகிதத்தினர் வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதைக் காட்டியுள்ளன.

வேலைநிறுத்த இயக்கத்தை எதிர்கொண்டுள்ள முக்கிய பலவீனம் ஒரு புரட்சிகர முன்னோக்கு இல்லாததுதான். அரசு மற்றும் முழு ஆளும் வர்க்கத்திற்கும் எதிரான ஒரு போராட்டத்தில் தொழிலாளர்கள் இணைந்துள்ளனர். ஆனால் தொழிற்சங்கங்களும் அவற்றின் “இடது” அரசியல் நட்புக்களும், அதாவது சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஆகியவை இயக்கத்தை எதிர்ப்புத் தரத்துடன் கட்டுப்படுத்த உறுதிபூண்டுள்ளன—அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து ஓய்வூதிய “சீர்திருத்தத்தை” கைவிடலாம் அல்லது கணிசமாக மாற்றலாம் என்னும் போலி உறுதிகளைக் கூறும் விதத்தில்.

சார்க்கோசியைப் பதவியில் இருந்து இறக்கி ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்தை நிறுவ முழு நனவுடன் கூடிய அரசியல் போராட்டம் தேவை; இதில் முழுத் தொழிலாளர் வர்க்கமும் ஐக்கியப்படுத்தப்பட்டு இயக்கம் விரிவாக்கப்படுதல் முக்கியமாகும். இந்த முன்னோக்கிற்கு போராட ஒரு புதிய தலைமை கட்டமைக்கப்பட வேண்டும்.

ஆனால் இவ்முன்னோக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் “இடது” ஆதரவு அமைப்புக்களால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது.

CGT என்னும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் தலைவர் பெர்னார்ட் திபோ France 5 TV யிடம் கூறினார்: “அரசாங்கத்துடன் ஓய்வூதியங்களின் வருங்காலம் பற்றிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவது தொழிற்சங்கங்களின் நோக்கமாகும்.”

இத்தகைய சரணாகதி நிலைப்பாடு வேலைநிறுத்தங்களைப் பல தொழில்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக முறிப்பதற்கு அரசிற்கு பச்சை விளக்கு காட்டுவதற்கு ஒப்பாகும். மற்ற CGT அதிகாரிகளும் தோல்வித் தன்மை நிறைந்த அறிக்கைகளைத்தான் கொடுக்கின்றனர். இவை போராட்டங்களை முடிப்பதற்கான முயற்சிகளாகும். ESSO Laurent Delaunay ல் உள்ள CGT அதிகாரி ஒருவர், “நாம் போராட்டத்தை இழந்துவிட்டோம், ஆனால் முக்கியக் கருத்தை அல்ல: அதாவது இச்சீர்திருத்தங்களுக்கு எதிரான நம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதில்.” என்றார்.

CGT Total அதிகாரி Charles Foulard விளக்கினார்: “இந்த இயக்கத்தில் சுத்திகரிப்பு ஆலைகள் பெரும் பங்கைக் கொண்டவை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் பிரான்ஸில் நாங்கள்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று உணர்த்த நாங்கள் விரும்பவில்லை.” போராட்டத்திற்கு “தாங்கள் தலைமை தாங்குவதாக சுத்திகரிப்பு ஆலைகள் தங்களைக் காணவில்லை” என்றும் அவர் கூறினார்.

ஆனால் ஆளும் வர்க்கம் சுத்திகரிப்புத் துறைத் தொழிலாளர்களை முக்கிய அரசியல் இலக்காக அடையாளம் கண்டுள்ளது. அவர்களுக்கு எதிராகச் சிறிதும் இரக்கமின்றிச் செயல்படும். முன்னதாக இரு சுத்திகரிப்பு ஆலைகள், Dunkirk மற்றும் Reichstett இருப்பவற்றை மூடும் திட்டத்தை முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்ததது. இத்துறை உலகப் பொருளாதாரச் சரிவினால் கூடுதல் உற்பத்திக் கொள்ளளவைக் கொண்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் 12 சுத்திகரிப்பு ஆலைகள் பெட்ரோலியப் பொருட்களை 97 மில்லியன் டன்கள் என்ற அளவிற்குச் சுத்திகரிக்க முடியும். ஆனால் கடந்த ஆண்டு அவை 74 மில்லியன் டன்கள் மட்டுமே சுத்திகரித்தன. இது 2008ல் இருந்து 13 சதவிகிதம் சரிவாகும்.

சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் மீதான தாக்குதல் தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் மீதான பரந்த தாக்குதல் திட்டங்களின் ஒரு பகுதிதான். ஓய்வூதிய வெட்டுக்கள் சிக்கன நடவடிக்கை வரவு-செலவுத் திட்டத்துடனும் சமூகப் பாதுகாப்பு நலன்கள் வெட்டுக்களுடனும் ஒன்றாக இயற்றப்படும். Le Monde கருத்துப்படி, “இந்த மூன்று வாசகங்களும், கிரேக்க கடன் நெருக்கடியைத் தொடர்ந்து பெரும் கடனில் இருந்த ஐரோப்பா வசந்தகாலத்தில் தயாரிக்கப்பட்டவை” இன்று தேசியச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்கள் ஊதியங்களைக் குறைக்க, சமூகநலச் செலவுகளைக் குறைக்க போட்டிபோடுகின்றன. இலாபங்களையும் போட்டித்தன்மையையும் அதிகரிக்கப் போட்டியிடுகின்றன. இவ்வழிவகை இப்பொழுது பிரான்ஸுக்கும் வந்துள்ளது. Le Monde விளக்குகிறது: “பிரான்ஸின் அனைத்துப் பொருளாதார, நிதியக் கொள்கைகளும் நிதியச் சந்தைகளின் பார்வையில்தான் நடைபெறுகின்றன. அவர்கள் ஒரு சிறு தவறான நடவடிக்கையையும் கண்காணிக்கின்றனர். ஜேர்மனியல் உறுதியான நடவடிக்கை, இப்பொழுது பெரிய பிரிட்டனிலும் அவ்வாறு என்று தங்கள் பற்றாக்குறைகளைக் குறைக்கும் நடவடிக்கை, அழுத்தங்களை அதிகரிக்கிறது. பிரான்ஸ் சற்றேனும் பலவீனம் என்ற அடையாளத்தைக் காட்டினால், கடன்களுக்காக அது கொடுக்க வேண்டிய வட்டிச் செலவுகள் உடனடியாக உயர்த்துப்படும் விளைவைச் சந்திக்கும்.”

சார்க்கோசி இதுகாறும் குறிப்பிட்டதை விட மிக அதிகமான வகையில் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்குத்தான் தயாரிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. பிரிட்டனில் வெட்டுக்கள் 81 பில்லியன் பவுண்டுகள் ஆகும். இது பொது மற்றும் தனியார் துறைகளின் சமமாக மொத்தம் ஒரு மில்லியன் வேலைகள் இழப்பிற்கு வகைசெய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. (See: “பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னோடியில்லாத விதத்தில் சமூகநல வெட்டுக்களை அறிவிக்கிறது”)

சார்க்கோசிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்னும் முன்னோக்கு, CGT மற்றும் அதன் ‘இடது’ என்று கூறப்படும் நட்பு அமைப்புக்களால் வாதிடப்படுவது, ஒரு திவால் தன்மை உடையது ஆகும். பிரான்ஸிலும் ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் தங்களை அபகரிக்க முற்படும் சர்வதேச நிதியப் பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டத்தைக் காண்கிறது. அப்பிரபுத்துவமோ இதை சமூக அழிவிற்குள் தள்ள அச்சுறுத்துகிறது. அதன் நலன்களுக்காகத்தான் சார்க்கோசி அரசாங்கம் ஆட்சி நடத்துகிறது.

29 சதவிகிதம் என்று மட்டுமே, இப்பொழுது கருத்துக் கணிப்புக்களில் மிகக் குறைவான ஆதரவைக் கொண்டுள்ள சார்க்கோசி, வலதுசாரி வாக்காளர்களை “மீண்டும் வெல்லுவதற்கு” பாடுபடுவார் என்று Le Monde கூறுகிறது. அவருடைய அத்தகைய போராட்டத்தை அவர் “இக்கோடையில் ஒரு தீவிர சட்டம் மற்றும் ஒழுங்கிற்கான தாக்குதல் தேவை” என்ற முறையீட்டுடன் துவங்கினார்.”

அதாவது பாசிசச் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் இனரீதியாக ரோமாக்களை இக்கோடையில் இலக்கு வைத்தது, ஒரு நீண்ட கால மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கம் அரசியலில் ஒரு நச்சுச் சூழலைத் தோற்றுவித்து தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஒரு முன்னோடியில்லாத தாக்குதல்களை நடத்துவது ஆகும்.

கடந்த வாரம் பிரதிநிதி Christian Vanneste, சார்க்கோசியின் UMP கட்சியைச் சேர்ந்தவர், தான் UMP க்கும் நவ பாசிச தேசிய முன்னணிக்கும் (FN) இடையே தேர்தல் கூட்டிற்கு வாதிடுவதாக Le Monde இடம் ஒப்புக் கொண்டார். முன்னரே இவர் இத்திட்டத்தை தீவிர வலது Radio Courtoisie இடம் முன்வைத்துள்ளார்.

இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ஒரு மாதிரியாக அவர் மேற்கோளிட்டார். அவரோ Gianfranco Fini ஆல் தலைமை தாங்கப்படும் நவ பாசிசக் கூட்டணியான தேசியக் கூட்டணியுடன் ஒரு கூட்டரசை நடத்துகிறார்.

தொழிலாளர்களை சுயாதீன நடவடிக்கை குழுக்கள் அமைக்குமாறு உலக சோசலிச வலைத்தளம் அழைப்பு விடுப்பது வேலைநிறுத்தங்களை விரிவாக்கி ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தயாரிப்பு நடத்தி சார்க்கோசி அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்பதின் முக்கியத்துவத்தை உயர்த்திக் காட்டுகிறது.