WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
அகதிகளுக்கு எதிராக ஜேர்மன் அதிபர் ஆத்திரமூட்டல்
By Peter Schwarz
22 October 2010
Use
this version to print | Send
feedback
இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஜேர்மன் அதிபரும், கன்சர்வேட்டிவ் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) தலைவருமான அங்கேலா மேர்க்கெல், ஜேர்மனி தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கிறது என்று தனது புத்தகத்தில் எழுதிய அப்போதைய ஜேர்மன் மத்திய வங்கி அதிகாரி திலோ சராஸினால் முன்னெடுக்கப்பட்ட இனவாத நிலைகளிலிருந்து தம்மைத்தாமே விலகியிருக்க கோரியிருந்தார். அந்தச் சமயத்தில், சராஸினின் சித்தாந்தங்கள் "சிறிது உதவக்கூடிய மற்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை" என்று மேர்க்கெல் அறிவித்தார்.
அப்போதிருந்தே, சராஸினின் பிரச்சாரத்தில் மேர்க்கெல் இணைந்துகொண்டார். கடந்தவார இறுதியில் நடந்த கிறிஸ்துவ ஜனநாயக இளையோர் மாநாட்டில் பேசிய அவர், ஜேர்மனியில் பன்முக கலாச்சார சமூகம் இறந்துவிட்டது என்று கூறினார். "இந்த பன்முக கலாச்சார அணுகுமுறை தோற்றுவிட்டது, முற்றிலும் தோற்றுவிட்டது" என்று கலந்துகொண்ட CDU வின் இளையோர் இயக்கத்தின் பிரதிநிதிகளான சமூக பதவி ஆசைகொண்ட மற்றும் உற்சாகமான பணியாளர்களிடையேயும் அவர் கூறினார்.
பவேரியனை சேர்ந்த கிறிஸ்தவ சமூக யூனியனின் (CSU) தலைவர் ஹார்ஸ்ட் சீஹோவர் இன்னும் அதிகமாகவே ஜேர்மனி, அகதிகளுக்கு ஆதரவான நாடு அல்ல என்றும், அகதிகளை கட்டுப்படுத்தும் அதன் கொள்கையில் தளர்வு கூடாது என்றும் கூறினார். "CSU ஆகிய நாங்கள்"," ஜேர்மனிய ஆதிக்கத்திற்கு ஆதரவாகவும், பன்முக கலாச்சாரத்திற்கு எதிராகவும் உள்ளோம். பன்முக கலாச்சாரம் செத்துவிட்டது.
வெவ்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் தேசிய பிறப்பிடங்களைக் கொண்ட மக்கள் சமத்துவ அடிப்படையில் ஒன்றாக வாழ்வதற்கான இந்த உரிமை மறுப்பு, ஜேர்மனின் பழைய கறுப்பு அத்தியாயத்தை நினைவூட்டுகிறது. 1920 களில், "ஜேர்மன் மக்களின் உடலில் அந்நியமானவர்களுக்கு" எதிராக போராடிய நாஜிக்கள் மட்டுமல்லாது, பாட்டாளி வர்க்கத்தின் பாரம்பரிய பிரிவினரையும் பல தேவாலய பெருமக்கள் உள்ளிட்டவர்களையும் அது கொண்டிருந்தது. இவ்வாறு கருதப்பட்ட யூதர்கள் "களங்கப்பட்டவர்களாக" கருதப்பட்டு, பிற்காலத்தில் இனவாத சட்டங்களின் அடிப்படையில் இழிநிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் அழிக்கப்பட்டார்கள்.
வார்த்தைகள்தான் இங்கு மாறியுள்ளது. "ஜேர்மன் மக்களின் உடல்" ஜேர்மன் ஆதிக்க கலாச்சாரத்தால் மாற்றப்பட்டது. யூதர்களுக்குப் பதிலாக, இஸ்லாமியர்கள் அவமதிப்புக்கு ஆளானார்கள். ஆனால் உள்ளடக்கம் அதுவாகவேதான் இருந்தது. ஜேர்மனிய ஆதிக்க கலாச்சாரத்திற்கு (அது என்ன அர்த்தமாகவேனும் இருந்துவிட்டுபோகட்டும்) அடிபணிய தயாராக இல்லாத அகதிகள், அபராதங்களையும், நாடு கடத்தலையும் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.
CSU வின் பொதுச் செயலாளர் அலெக்சாண்டர் டாப்ரின்ட், "ஒரு மில்லியன் மக்கள் ஜேர்மனியுடன் ஒன்றிணைய தயாராக இல்லை" என்று கூறுகிறார். CSU தலைவர் ஸீஹோவர், இத்தகைய அகதிகள் சமூகநல உதவிகளை திரும்பபெற்றுக்கொள்வது வரை பல்வேறு அபராதங்களையும்" பெறவேண்டும் என்கிறார். "ஜேர்மன் சமூகத்தில் இணைந்துகொள்ள விரும்பும் தங்களது குடும்ப உறுப்பினர்களை" தடுப்பவர்களும் கூட தண்டிக்கப்படுகிறார்கள்.
இவைகள் வெற்று மிரட்டல் அல்ல. எதிர்வரும் வாரத்தில், கட்டாய திருமணங்கள் மீதான சட்டம் குறித்தும், "ஒன்றிணைய" மறுப்பவர்கள் குறித்தும் ஜேர்மனிய அமைச்சரவை முடிவு செய்யும். தற்போதுள்ள சட்டத்தின் கீழே இவற்றுக்கு எதிராக ஏற்கனவே வழக்கு தொடர வசதியுள்ள கட்டாய திருமணங்கள் பிரச்சனை வேலைவாய்ப்பின்மை, வறுமை அல்லது மொழித் திறன் குறைவு போன்றவற்றின் காரணமாக ஏற்கனவே சமூகரீதியில ஓரம்கட்டப்பட்டவட்டர்களுக்கு எதிரான சட்டபூர்வமான திட்டமிட்ட அவமதிப்பு மூடிமறைப்பதற்காக எழுப்பப்படுகிறது.
குடியேறியவர்களை விட வெளிநாட்டில் சென்று குடியேறியவர்களின் எண்ணிக்கையை ஜேர்மன் அதிகம் கொண்டுள்ளதாக ஒருவர் கருதும்போதுதான், குடியேற்றம் மற்றும் "ஒன்றிணைப்பு" மீதான விவாதத்தைக் காட்டிலும் அது இன்னும் அதிக அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜேர்ம்னிக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், அதிகம் பேர் நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் அதிக தகுதிவாய்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களை நாடவேண்டியதுள்ளதாகவும் தொழிற்துறை அமைப்புகள் புகார் கூறிக்கொண்டிருக்கின்றன.
"ஒன்றிணைப்பு" தோல்வி ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுவதால், சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் பேட்டியெடுத்த பத்திரிகையாளர்கள், ஜேர்மன் மொழி மற்றும் வரலாறு குறித்த வகுப்புகளில் மிகச்சிறிய சதவிகித குடியேறியோரே கலந்துகொள்ள மறுப்பதாக தெரிவித்துள்ளனர். ஜேர்மன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு அனுமதிகோருவோருக்கு கிடைக்கும் இடங்கள் பற்றாக்குறையாக உள்ளன. மற்றைய பலவற்றைப் போன்றே வரவுசெலவுத்திட்ட குறைப்புக்கு இந்த வகுப்புகளும் பலியாகிவிட்டன.
ஆக மேர்க்கெலின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணமென்ன? எப்போதும் இல்லாத அளவில் நாட்டில் "அன்னிய ஊடுருவல்" ஏற்படப்போகிறது என்று கூறப்படுகின்ற இந்த பிரச்சாரம் எதற்காக?
கருத்துக்கணிப்பில் CDU வின் பரிதாபகரமான நிலையை சில விமர்சர்கள் சுட்டிக்காட்டினார்கள். குடியேறியவர்களுக்கு எதிரான அவருடைய குரூரமான தாக்குதலுடன், சமீபகாலமாக தோல்வி அறிகுறிகளைக் காட்டும் தனது சொந்த வலதுசாரி கட்சியை மீண்டும் வெற்றியடையச் செய்யுமாறு மேர்க்கெல் கோரி வருகிறார். மேர்க்கெலின் இந்த பல்டி முற்றிலும் கட்சிக்கான தந்திரோபாயங்களாகவே விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இது ஒரு பங்கு வகிக்கலாம் என்றபோதிலும், அதுபோன்ற பிரச்சனைகளை வெளிப்படுத்தும் விளக்கங்கள் மேலெழுந்தவாரியாக இருக்கின்றன. மேர்க்கெலும் சமூக ஜனநாயக் கட்சி (SPD) உள்ளடங்கலான அவரது ஜேர்மன் ஆளும் தட்டின் செல்வாக்குமிக்கவர்களின் பெரிய படையும் சமூகத்தில் அடிப்படை மாற்றங்களுக்கு பிரதிபலிக்கின்றனர்.
2008 செப்டம்பரில் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதிலிருந்தே ஐரோப்பா முழுவதும் வர்க்க பதட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கூர்மைப்பட்டன. கிரேக்கம் பிரெஞ்சு மற்றும் ஸ்பெயினில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், தங்களது அரசுகள் திணிக்கும் பயங்கரமான திட்டங்களுக்கு எதிராக வீதிகளில் திரண்டு போராடினர்.
ஜேர்மனியில், தொழிற்சங்கங்களிடமிருந்து கிடைத்த உறுதியான ஆதரவு காரணமாக அதுபோன்ற போராட்டத்தை அரசாங்கத்தால் இவ்வளவு தூரத்திற்கு தவிர்க்க முடிந்தது. ஆனால் நிலைமைகள் மாறுவதற்கு முன்னர் அது எவ்வளவு காலத்திற்கு என்ற ஒரு கேள்வியாக மட்டுமே அது உள்ளது. Hartz IV நல ஊதியங்களையும், ஆட்டம் காணும் வேலைகளையும் நம்பியிருக்கும் மில்லியன் கணக்கான மக்களால் ஏற்கனவே தெருமுனை கூட்டங்களை மட்டுமே நடத்த முடிந்தது. ஸ்ருட்கார்ட்டில் ஏராளமான முன்னாள் CDU ஆதரவாளர்கள் உள்பட மத்திய தர வர்க்கத்தின் பிரிவினர் உள்ளடங்கலாக கலகத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலைகளின் கீழ்தான், ஆளும் வர்க்கம் முயற்சித்து பார்த்த மற்றும் உண்மையான தந்திரோபாய முறைகளின் மீது மீண்டும் திரும்புகின்றது. இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான எந்த ஒரு வழியையும் அளிக்க திறனற்று, சமூக வாழ்க்கையினுள் தேசியவெறி மற்றும் இனவாத நச்சை புகுத்த அது கோருகிறது.
ஸ்ராலினிச கிழக்கு ஜேர்மனி ஆட்சியை எதிர்ப்பவர்களின் தைரியத்தை புகழ எப்போதுமே தயாராக இருக்கும் கிழக்கு ஜேர்மனியிலிருந்து வந்த மதகுருவின் மகளான மேர்க்கெல், நாஜிக்களின் ஆதரவை பெறுவதற்கு தயங்கியதே இல்லை.
மேர்க்கெல்லின் தேசியவாத புலம்பலுக்கு சர்வதேச காரணங்களும் உள்ளன. மற்ற கலாச்சாரங்கள் மீதான அவரது தாக்குதல், சொந்த நாட்டிலுள்ள குடியேற்றவாசிகள் மீது மட்டுமே ஆனது அல்ல, உலக அரங்கில் உள்ள ஜேர்மனியின் பொருளாதார மற்றும் அரசியல் எதிரிகள் மீதும்தான். இது ஜேர்மன் தேசியவாதத்தின் பாரம்பரிய கூக்குரலான "ஜேர்மனியின் ஆத்மா உலகை குணப்படுத்தும்." என்பதை நினைவூட்டுகிறது.
ஜேர்மனிய ஆளும் வர்க்கம், தனது பலத்தை பயன்படுத்துவதற்கு தயங்காது, உலக அரசியலில் ஒருவித அதிக ஆவேசமான முறையில் தலையிட்டுக்கொண்டிருக்கிறது. கட்டுப்பாடுடன் கூடிய அன்னிய கொள்கையையுடன் இணைந்த ஜேர்மன் பொருளாதார விரிவாக்க நோக்கங்களை சாத்தியமாக்கிய சர்வதேச அமைப்புகள் உடைந்துகொண்டிருக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட தனது இராணுவ தோல்வியால் NATO பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பதோடு, ஐரோப்பா மற்றும் அமெரிக்கவுக்கு இடையேயான நாணய மற்றும் வர்த்தக பதட்டங்களும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயே, பேர்லின் அதன் பலவீனமான எதிரிகளை அழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்திக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலுக்கு அனுமதிக்கும் வகையில் ஒரு பயங்கரமான வர்க்கப் போராட்டங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
மற்றைய கலாச்சாரங்களுக்கு எதிரான மேர்க்கெல்லின் பிரச்சாரம் ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்பட வேண்டும். அது வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எதிராக மட்டுமே அல்லாமல், ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராகவும் வழிந்டத்துப்படுகிறது. அது சர்வாதிகார வடிவிலான ஆட்சிக்கும், இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவும் மற்றும் போருக்கும் தயார்ப்புசெய்யவும் சேவை செய்கிறது.
நாஜிக்களின் யூத எதிர்ப்பு, தொழிலாளர்கள் இயக்கத்திற்கு எதிரான அவர்களது தாக்குதலுடன் நெருக்கமான தொடர்புடையது என்பதை நினைவுகூர வேண்டும். முதல் தடுப்புமுகாம்கள் யூதர்களுக்காக அமைக்கப்படவில்லை, ஆனால் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் தலைவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. தொழிலாளர் அமைப்புகள் நாஜிக்களால் அழிக்கப்பட்டதுதான், இரண்டாம் உலகப் போர் மற்றும் யூத படுகொலைகளுக்கு வித்திட்டது. |