World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

For a united movement of the working class to oppose concessions and job cuts!

An open letter from the Indianapolis GM Stamping Rank-and-File Committee

வேலை மற்றும் சலுகைகள் குறைப்பை எதிர்ப்பதற்கான உழைக்கும் வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்திற்காக!

இண்டியானாபோலீஸ் GM Stamping அடிமட்ட தொழிலாளர் குழுவிடமிருந்து ஒரு பகிரங்க கடிதம்

11 October 2010

Back to screen version

இண்டியானாபோலீஸ் GM Stamping அடிமட்ட தொழிலாளர் குழுவிடம் (Rank-and-File Committee) இருந்து கீழ் காணும் வேண்டுகோள் உலக சோசலிச வலை தளத்திற்கு அனுப்பப்பட்டது. இண்டியானாபொலீஸில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் தகட்டு பாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலையில் உள்ள கார்த் தொழிலாளர்கள், ஆலையின் 650க்கும் அதிகமான தொழிலாளர்களின் எதிர்ப்புக்கிடையேயும் 50 சதவிதித சம்பள குறைப்புக்கு தள்ளக்கோரும் ஐக்கிய கார் தொழிலாளர்களுக்கு எதிராக சுயாதீனமான எதிர்ப்பை தொழிலாளர்களிடையே திரட்டுவதற்காக கடந்த மாதம் இந்த குழுவை அமைத்தனர். அடுத்த ஆண்டு தங்களது ஆலை மூடப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை தொழிலாளர்கள் தற்போது எதிர்கொண்டுள்ளனர்.

டெட்ரோயிட் புறநகரில் உள்ள GM இன் Lake Orion ஆலையில் ஏறக்குறைய தொழிலாளர்களில் பாதிபேருக்கு 50 சதவிகித சம்பள குறைப்பு செய்வதை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாக கடந்த வாரம் தெரிவித்த UAWக்கு எதிரான கிளர்ச்சி அதிகரித்து வருகிறது. தங்களது வேலைளையும், வாழ்க்கைத் தரங்களையும் பாதுகாத்துக்கொள்வதற்கு கார்த்தொழிலாளர்கள் ஒன்றுபடுவதற்கு, தங்களது பகிரங்க கடிதத்தை விநியோகித்து தமது சொந்த அடிமட்ட தொழிலாளர் குழுக்களை உருவாக்குமாறு தொழிலாளர்களை குழு வலியுறுத்தியிருந்தது.

டெட்ரோயிட் இல் உள்ள Chryslerஇன் வாரன் டிரக் ஆலையில் அறிக்கையை விநியோகித்துக்கொண்டிருக்கும்போது, தொழிலாளர்கள் UAW வை " நிர்வாகத்தின் சங்கம்" என்று விமர்சித்ததோடு, இண்டியானா தொழிலாளர்களுடைய கடித நகல்களை ஆர்வமுடன் எடுத்துக்கொண்டனர். இண்டியானாவிலுள்ள மேரியானில், அந்த கடிதத்தை பெற்ற ஒரு தொழிலாளர், கூறுகையில், "UAW விலைக்கு வாங்கப்பட்டுவிட்டது. எங்களுக்கு எவ்வித பிரதிநிதித்துவமும் இல்லாதபோது, நாங்கள் ஏன் தொழிற்சங்க சந்தாக்களை கட்ட வேண்டும்? GM அவர்கள் விரும்புகிற படி ஆலைகளை நடத்திக்கொண்டிருக்கையில் நாங்கள் சொல்வதற்கு ஏதுமில்லை. இண்டியானாவில் நடந்துகொண்டிருப்பது எங்கள் எல்லோருக்காகவும் சுவற்றில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஒரு மணி நேரத்திற்கு 14 $ க்காக GM ஆலையில் நான் வேலை செய்யப்போவதில்லை. அதுதான் அவர்களுக்கான வழி என்று நாங்கள் அனைவரும் உணருகிறோம். அது நிர்வாகத்தின் பேராசை அல்லாமல் வேறேதும் இல்லை. எங்களது குடும்பங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. UAW இனை பொறுத்தவரையில் UAW செய்யும் ஒவ்வொன்றுக்கும் எதிராகவும் அவற்றை திரும்பபெற வைப்பதற்காக தொழிலாளர்கள் அப்போது போராட வேண்டியதிருந்ததன் காரணமாகத்தான் தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றை நாங்கள் தெரிந்துகொள்வதை அவர்கள் விரும்பவில்லை."

இந்த அறிக்கையை பதிவிறக்கம் செய்து அதனை உங்களது ஆலையில் விநியோகிக்க அனைத்து தொழிலாளர்களையும் உலக சோசலிச வலைத் தளம் ஊக்குவிக்கிறது.

அன்பான சகோதர சகோதரிகளே,

சலுகைகள், வேலை, மற்றும் வறுமை மட்ட கூலிகள் குறைப்புகளுக்கு எதிரான எங்களது போராடத்தில் இணையுமாறு அனைத்து கார் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் இண்டியானாபோலிஸ் GM தகட்டு பாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலையின் அடிமட்ட தொழிலாளர் குழு ஒரு அவசர வேண்டுகோளை விடுக்கிறது.

50 சதவிகித சம்பள குறைப்பை நாங்கள் ஏற்கவேண்டும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் JD Norman - எங்களது ஆலையை வாங்க விரும்பிய நிர்வாகத்திடமிருந்து வந்த கோரிக்கைகளை எதிர்ப்பதற்காக கடந்த மாதம் நாங்கள் குழுவை அமைத்தோம்.

நாடு முழுவதும் கார்த்தொழிலாளர்களுக்கு செய்ததைப் போன்று, விட்டுக்கொடுப்புகளை திணிப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் UAW செய்துகொண்டிருக்கிறது என்ற காரணத்தினால், ஒரு புதிய அடிமட்ட தொழிலாளர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்தோம். முதலில், JD Norman உடனான வேச்சுவார்த்தையிலிருந்து UAWவை தடுப்பதற்கு நாங்கள் கூட்டாக வாக்களித்தோம். எங்கள் முதுகுகளுக்கு பின்னால் அவர்கள் அவ்வாறு செய்தபோது, சர்வதேச பிரதிநிதிகளை கீழிறக்கி அவர்களை எங்களது உள்ளூர் தொழிற்சங்க அரங்கத்திலிருந்து வெளியே தூக்கி எறியுமாறு நாங்கள் முழக்கமிட்டோம். ஒப்பந்தத்திற்கு எதிராக "சிறிய அளவிலான வாய்மொழி" எதிர்ப்பு மட்டுமே உள்ளதாக கூறி தபால்மூல வாக்களிப்பில் அவர்கள் மீண்டும் வந்தபோது, நாங்கள் கூட்டாக வாக்களித்து அதனை மீண்டும் நிராகரித்தோம்.

ஆனாலும், போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை. தற்போது, GM ஆலையை மூட திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது, அதனை தடுக்க UAW எதுவும் செய்யப்போவதில்லை. நிறுவன நிர்வாகத்துடனான அவர்களது கூட்டணியை தைரியமாக எதிர்த்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு பாடம் கற்பிக்கும்விதமாக ஆலை மூடப்படுவதை பார்க்க "தொழிற்சங்கங்கள்" விரும்புகின்றன என்பதே இதன் காரணமாக இருக்கலாம் என்பது தெளிவாகிறது.

ஆலையை மூடுவது தீர்வாக இருக்காது என்று அடிமட்ட தொழிலாளர் குழு எதிர்க்கிறது. அது தொழிலாளர்களை அந்தரத்தில் தவிக்கவிடுவதோடு மட்டுமல்லாது, பிராந்தியத்தின் பொருளாதாரத்தையும் மேலும் நாசமாக்கிவிடும். இண்டியானாபோலிஸில் உள்ள English Avenue Ford ஆலையில் 249 தொழிலாளர்களை குறைக்கப்போவதாகவும், மேலும் பல ஆட்குறைப்புகள் வரவிருப்பதாகவும் கடந்த மாதம்தான் Ford தெரிவித்திருந்தது.

தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் உள்ளன என்று நாங்கள் நம்புவதால், இந்த போராட்டத்தை நாங்கள் மேற்கொண்டோம். நமக்கு வேலைக்கான உரிமை உள்ளது. வாழ்வதற்கு போதுமானவற்றை உருவாக்குவதற்கான உரிமை நமக்கு உள்ளது. நாம் பயன்படுத்தி முடிந்தவுடன் தூக்கி எறியும் பல கந்தல் துணிகளை போன்று எலும்பு தேய வேலை செய்வதற்கு மட்டுமே இருக்காமல் இருப்பதற்கான உரிமை நமக்கு உள்ளது.

தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகள் உள்ளன என்று நாங்கள் நம்புவதால், இந்த போராட்டத்தை நாங்கள் மேற்கொண்டோம். நமக்கு வேலைக்கான உரிமை உள்ளது. வாழ்வதற்கு போதுமானவற்றை உருவாக்குவதற்கான உரிமை நமக்கு உள்ளது. நாம் பயன்படுத்தி முடிந்தவுடன் தூக்கி எறியும் பல கந்தல் துணிகளை போன்று எலும்பு தேய வேலை செய்வதற்கு மட்டுமே இருக்காமல் இருப்பதற்கான உரிமை நமக்கு உள்ளது.

இந்த உரிமைகளுக்காக நாம் எழுந்து நின்று போராடுவதற்கான நமக்கான தருணம் இது. நமக்காக மட்டுமே அல்லாமல் அனைத்து தொழிலாளர்களுக்காகவும் நாம் போராட வேண்டும். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகளுக்காகவும் நாம் போராட வேண்டும். இண்டியானாபோலிஸில் நிறுவனங்கள் வெற்றிபெற்றுவிட்டால் Marion, Flint, Parma மற்றும் இதர தகட்டு பாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலைகளிலும் அவர்கள் அதையே செய்வார்கள். கார்த்தொழில் முழுவதும் மேலும் சம்பளக் குறைப்பு செய்வதற்கு ஒரு வெற்றியை அவர்கள் இங்கே பயன்படுத்திக்கொள்வார்கள்.

உண்மையில் Lake Orion இல் உள்ள ஒவ்வொருவரும் 11 ஆண்டுகளுக்கு குறையாத பணி அனுபவமுடைய ஆலைத் தொழிலாளர்களில் 40 சதவிகிதத்தினர் ஒரு மணி நேரத்திற்கு 14$ என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாக UAW அறிவிப்பு மட்டுமே செய்துள்ளது. தொழிலாளர்களுக்கு வாக்களிக்கக்கூட ஒரு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

நமது போராட்டத்தை தொடர, நாம் சில அடிப்படை உண்மைகளை ஒப்புக்கொள்ளவேண்டும்.

முதலில், கார் நிறுவனங்களுக்கு எவ்விதத்திலும் குறையாத ஒரு எதிரியான UAW இனை நாம் எதிர்கொள்ள வேண்டும். UAW கார் நிறுவனங்களில் பெருமளவிலான உரிம பங்குகளை கொண்டிருக்கும் மற்றும் நம்மை சுரண்டுவதை அதிகரிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் ஒரு தொழிலாக கொண்டுள்ளது. எந்த கொள்கைகள் மீது அது தோற்றுவிக்கப்பட்டதோ அவற்றுக்கு விரோதமாக நீண்ட காலத்திற்கு முன்னரே அது நடந்துகொண்டது. இராஜினாமாவை பற்றி பேசுவதும், போராட்டம் இல்லாமலேயே நம்மை சரணாகதி அடையச் செய்வதுமே பிரதான பணியாகக் கொண்ட அதிகாரிகளை நல்ல சம்பளம் கொடுத்து அது வைத்துள்ளது.

UAW "நமது நிறுவனம்" என்பதால் அதனை சீரமைக்க நாம் வேலை செய்ய வேண்டும் என்று கூறுகின்ற அனைவருக்கும், நாங்கள் கூறுவது - அது நமது நிறுவனமாக இருந்தால், அது நமது முதுகுக்கு பின்னால் குத்தாது! இந்த விதமாக தர்க்கம் செய்பவர்கள், பழைய AFL க்கு எதிரான தொழிலாளர்களின் கிளர்ச்சி மூலமாகத்தான் UAW வே உருவானது என்பதையும் மறந்துவிடுகிறார்கள்.

இரண்டாவதாக, ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய இரண்டு கட்சி அரசியல்வாதிகளுமே நமக்கு எதிராக உள்ளனர். GM க்கு ஆதரவாக குடியரசு ஆளுனர் மிட்ஸ் டானியல்ஸ் மற்றும் ஜனநாயக காங்கிரஸ்வாதி அன்ரூ கார்ல்ஸன் கைகோர்த்துள்ளனர். "மாற்றத்தின்" வேட்பாளர், ஒபாமாவை பொறுத்தவரை, பொதுத்துறை மற்றும் தனியார் தொழில்துறை முழுவதும் தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் சம்பளங்களை குறைக்க ஒரு முன்னோடியாக பயன்பட்டவர்களான GM, Chrysler இன் திவாலுக்கான ஒரு பகுதியாக அவர் விட்டுக்கொடுப்புகளை கோருகிறார்.

சகோதர சகோதரிகளே, நாம் அதே போராட்டத்தைத்தான் எதிர்கொண்டிருக்கிறோம். தங்களது ஆதாயங்களை பெருக்கிக்கொள்வதற்காக நமது சம்பளங்களை குறைக்கும் நிறுவனங்களின் அநியாயங்களை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். நாம் கஷ்டப்பட்டு பெற்ற மருத்துவ நலன் மற்றும் ஓய்வூதிய பலன்கள் நாசமாகிக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். வேலையின்மை, வீடுகள் ஏலத்திற்கு விடப்படல், மற்றும் மூடல்கள் ஆகியவற்றின் பயங்கர வளர்ச்சியை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.

குழுவை அமைத்ததிலிருந்தே அமெரிக்கா முழுவதுமிருந்தும், உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளிடமிருந்தும் நமக்கு கடிதங்கள் கிடைத்தன. மற்ற நாடுகளுக்காக வேலை பார்க்கும் தொழிலாளர்கள்தான் நமது எதிரிகள் என்று நமக்கு ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட பின்னரும், அதே எதிரிகளுடன், அதே போராட்டத்தை அனைத்து இடத்திலும் தொழிலாளர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டோம். அவர்கள் கூட அவர்களது தொழிற்சங்கங்களால் விற்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பணக்காரர்களின் நலனில் அரசாங்கமும், நிறுவனங்களும் அக்கறைப்பட்டுக்கொண்டிருக்கையில், அவர்கள் தங்களது வேலைகளையும் கூட இழந்துகொண்டிருக்கிறார்கள்.

விட்டுக்கொடுப்புகளை நிராகரித்து, போராடுவது சாத்தியமானதுதான் என்று நாம் காண்பித்துவிட்டோம். ஆனாலும், நமது சொந்த முயற்சிகள் மீது நாம் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். நாடு முழுவதுமுள்ள மற்றும் ஒவ்வொரு தொழிற்சாலைககளிலும் உள்ள தொழிலாளர்கள் தாங்களாகவே சுயமாக அடிமட்ட தொழிலாளர் குழுக்களை அமைக்கவேண்டும். இந்த குழுக்களால், ஒபாமா நிர்வாகம் மற்றும் UAW வால் திணிக்கப்படுகின்ற ஒப்பந்தத்தை தோல்வியடையச் செய்வதற்கான ஒரு பொது போராட்டத்தை ஒன்றிணைக்க முடிவதோடு, இரண்டு மட்ட சம்பளங்களை ஒழிக்கவும், அனைத்து ஆலைகளையும் மூடுவதை தடுத்து நிறுத்தவும் முடியும்.

விட்டுக்கொடுப்புகள் வேண்டாம்! வேலை குறைப்புகள் வேண்டாம்! பழைய சலுகைகளை மீண்டும் கொண்டுவா!

இண்டியானாபோலிஸ் அடிமட்ட தொழிலாளர் குழுவை ஆதரிப்போம்! உங்களது தொழிற்சாலையில் அடிமட்ட தொழிலாளர் குழுக்களை அமைப்போம்!

அனைத்து தொழிலாளர்களுக்கான ஒன்றிணைந்த போராட்டத்திற்காக!

கையொப்பமிட்டவர்
இண்டியானாபோலிஸ் அடிமட்ட தொழிலாளர் குழு