WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
WSWS speaks to French workers on protests
ஆர்ப்பாட்டத்தில் பிரெஞ்சு தொழிலாளர்களுடன் உலக சோசலிச வலைத் தளம் பேசுகிறது
By Antoine Lerougetel
19 October 2010
Back to
screen version
ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் சிக்கனத் திட்டங்களுக்கு எதிராக சமீபத்தில் அக்டோபர் 16ல் பிரான்ஸ் முழுவதும், 250 க்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்த போராட்டத்தில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும், மாணவர்களும் வீதிகளில் திரண்டனர்.
பாரிசில் 310,000 பேர் திரண்டதாக தொழிற்சங்கங்கள் மதிப்பிட்டதற்கு மாறாக போலீஸ் அந்த எண்ணிக்கையை 63,000 என்று கூறியது.
நீசில் 25,000 பேரும், மார்செயில், 180,000 பேரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இரயில் சேவைகளை கடுமையாக பாதிக்கச் செய்த இரயில்வே தொழிலாளர்களின் காலவரையறையற்ற போராட்டம் நான்காவது நாளாக தொடர்ந்த நிலையில், பேரணிகள் நடைபெற்றன. கப்பல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் தடைகளானது பெட்ரோல் நிலையங்கள் விநியோகம் இல்லாமல் ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு நாடு தள்ளப்படும் அபாயகரமான நிலையை ஏற்படுத்தின. Roissy மற்றும் Orly போன்ற பாரிஸின் முக்கியமான விமான நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட திணறல், விமான போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கடந்த வாரங்களில் பல்லாயிரக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பள்ளிகள் மூடப்பட்டன.
வெள்ளிக்கிழமை அதிகாலை, பார ஊர்திகள் பெட்ரோல் கிடங்குகளுக்கு சென்று மீண்டும் நிரப்புவதையும், பெட்ரோல் நிலையங்களில் விநியோகிப்பதையும் தடுத்த மறியல்காரர்களை, பெருமளவிலான கலக தடுப்பு போலீஸாரின் தலையீட்டினால், கலைந்துபோகச் செய்தது. பெட்ரோல் விநியோக கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களின் பெரிய தொழிற்சங்கமான CGT, சுத்திகரிப்பு நிலைய போராட்டக்காரர்களுக்கு ஆதரவான வெகுஜன நடவடிக்கைக்காக வேண்டுகோள் எதையும் விடுக்காமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைதியாக கலைந்து செல்லுங்கள் என்று மட்டுமே கேட்டுக்கொண்டது. ஒரு பிரிவு தொழிலாளர்களுக்கு எதிராக அரசும், போலீசும் தலையிட்ட பிரச்சனையை, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ இடதுசாரி கட்சிகளால் சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் கொண்டுவரப்படவில்லை.
இரயில் பராமரிப்பு இடங்கள் மற்றும் பணிமனைகள் கொண்ட இடமான வடக்கு பிரான்சிலுள்ள இரயில்வே நகரான Amiens லிருந்து வந்த பல்வேறு இரயில்வே தொழிலாளர்களுடன் உலக சோசலிச வலைத் தளம் சனிகிழமையன்று பேசியது. முதலாளித்துவ நெருக்கடியின் தீவிரத்தை குறைத்து, போராட்டத்தை ஓய்வூதியங்களின் ஒரே பிரச்சனையாக மட்டுப்படுத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் முன்னாள் இடதுசாரிகளின் பங்கை அம்பலப்படுத்துவதன் அவசியத்தை இந்த பேச்சுக்கள் தெளிவாக்கியது.
சார்க்கோசியால் "மசோதாவை திரும்ப பெற" செய்துவிட முடியும் என்ற மாயையை பல தொழிலாளார்கள் இன்னமும் கொண்டிருக்கிறார்கள் அல்லது அப்படி நம்ப விரும்புகிறார்கள். தொழிற்சங்கங்கள் அல்லது "அதி தீவிர இடதுசாரி" களில் உள்ள யாருமே தொழிலாள வர்க்கத்தினரின் நடவடிக்கையால் சார்க்கோசி வெளியேற்றப்பட வேண்டும் என்றோ, அல்லது தொழிலாளர்களின் சுதந்திரமான சமூக நலன்களை அடைப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் முன்னோக்கு அவர்களுக்கு தேவை என்றோ கோரிக்கை எழுப்பவில்லை.
24 வயதுடைய ஆர்னாட் என்ற சிக்னல்மேன் Amiens போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இவர் 18 வயதில் பயிற்சியாளரானதிலிருந்தே, ஆறு ஆண்டு காலம் இரயில்வே தொழிலாளராக உள்ளார். இவர் ஒரு CGT உறுப்பினர், ஆனாலும் தொழிற்சங்க தலைவர்கள் தங்களது "கீழ்மட்டத் தொழிலாளர்களிலிருந்து விலகி நின்றதை" உணர்ந்துகொண்டுள்ளார். பொருளாதாரத்தை நாம் தடுக்க வேண்டும். இந்த அமைப்பு முறையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை அனைத்து தொழிலாளர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். Fos ல் உள்ள சுத்திகரிப்பு நிலைய தொழிலாளர்கள் மற்றும் கப்பல்துறை தொழிலாளர்களுக்கு நான் முற்றிலும் ஆதரவாக உள்ளேன்.
பிரான்சில் சில தொழிலாளர்களிடையே பிரபலமாக உள்ள அராஜக சின்டிக்கலிச எண்ணங்களை வெளிப்படுத்திய அவர், உதாரணமாக சுத்திகரிப்பு தொழிலாளர்களின் போராட்டத்தை உடைக்க தேசிய போலீஸ் பயன்படுத்தப்பட்டதற்கிடையேயும், முதலாளித்துவ அரசை தொழிலாள வர்க்கத்தினர் எடுக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை என்றார். "தொழிலாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றக்கூடாது, பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை மட்டுமே எடுத்தால் போதும்" என்று அவர் வாதிடுகிறார்.
Geoffry, ரயில்வே தொழிலாளர்கள் அணியுடன் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டவர், தனது தந்தை ஒரு இரயில்வே தொழிலாளர் என்றும், தான் ஒரு மாணவர் என்றும் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். பிரான்ஸ் தனது பொருளாதார எதிரிகளுடன் போட்டிபோட கோரும் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் குறித்து விவாதித்தபடியே அவர் சொன்னது:" பொருளாதார தேசியவாதத்தை நான் எதிர்க்கிறேன். ஒரு வர்த்தக சண்டையில் நான் தீனியாக இருக்கவிரும்பவில்லை".
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், அமியானில் உள்ள SNCF (national rail company - தேசிய இரயில் கம்பெனி) இடங்களின் நுழைவாயிலில் நடைபெற்ற மறியலுக்கு சென்றனர். தொழிலாளர்கள் தங்களது உறுதியை வெளிப்படுத்துவதற்காக சாலையின் நடுவே சாலை தடுப்புகளை ஏற்படுத்தி, டயர்கள் மற்றும் இரயில்வே கயிறுகளைக் கொண்டு தீ வைத்தனர். நுழைவுவாயிலுக்கு உள்ளே மற்றொரு தீவைப்பும் காணப்பட்டது.
Aurélien, ஒன்பது ஆண்டுகள் SNCF இல் பணியாற்றியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகிறார். "போராட்டத்தை நாங்கள் பரவச்செய்யப்போகிறோம். சார்க்கோசியை கைவிடச் செய்ய ஒரு பொதுவேலை நிறுத்தப் போராட்டம் தேவையாக இருக்கும். தொழிற்சங்கங்கள் அதற்கு அழைப்பு விடுக்காது. நாட்டை செயல்பட வைக்கும் தொழிலாளர்களான நாம் தான் அதனை செய்ய வேண்டும். பேர்னாட் தீபோ CGT பொதுச் செயலாளர் துரோகியாக உள்ளார்.
அவர் மேலும் கூறுகிறார்: " சார்க்கோசி எது குறித்தும் பேசப்போவதில்லை - அவரது சீர்திருத்தம் அநியாயமானது."
போராட்டங்களில் அரசாங்கத்தை இராஜினாமா செய்ய வைப்பதற்கான அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லையே என்று உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சுட்டிக்காட்டியபோது, இலேசான உலுக்கலுடன் ஒரு கணம் யோசித்த Aurélien கூறினார்: "நீங்கள் சொல்வது சரிதான். நாங்கள் அதைச் செய்திருக்க வேண்டும். பிரச்சினை என்னவென்றால் நமக்கு அதிகமான வாய்ப்பு இல்லை, 2012 ல் உள்ள வாய்ப்பு, தொழிலாள வர்க்கத்தினருக்காக உறுதியளிக்காத (ஜனாதிபதித் தேர்தல்கள்) சார்கோசிக்கும், டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் (சோசலிச கட்சிக்கான சாத்தியமான வேட்பாளர், இப்போதைய சர்வதேச நாணய நிதியத்தின் பொதுச் செயலாளர்) க்கும் இடையேதான் உள்ளது. நான் ஒரு புரட்சியாளன் மற்றும் ஒரு அராஜகவாதி. நான் தொழிற்சங்கமல்ல - அவர்கள் எனது எண்ணங்களை பிரதிபலிப்பதில்லை.
ஜோனாதான் ஒரு ரயில்வே பயிற்சித் தொழிலாளி. வேலை தேடுவதற்காக அவர் தனது சொந்த ஊரான Calais ஐ விட்டு வந்திருந்தார். "அங்கே செய்வதற்கு எந்த வேலையும் இல்லை".
"எனது எதிர்காலம் சூனியமாக தெரிகிறது. இந்த போராட்டத்தில், நாங்கள் பெற்றது எதுவோ அதை தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறோம். தனியார் துறையில் உள்ளவர்களும் எங்களுடன் கைகோர்க்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையங்களின் மறியல் நல்ல விடயம்தான். மறியல்களை உடைக்க போலீஸ் மேற்கொள்ளும் நடவடிக்கை, நிலைமையை மேலும் மோசமாக்கத்தான் செய்யும். இந்த தொழிலாளர்களுடன் இணைந்து உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. நாம் இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறோமோ அதை அவர்களுடன் இணைந்து போராட வேண்டும். அவர்களுக்கான எனது செய்தி என்னவென்றால் போராட்டத்தை கைவிடக்கூடாது என்பதுதான். சார்க்கோசி பின்வாங்கப்போவதில்லை. அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று நடைமுறையில் எவ்வித கோரிக்கைகளும் இல்லை என்பது உண்மைதான்.
Loïc கூறுகிறார்:" தற்போது நமது போராட்டங்கள் மீது சோசலிஸ்ட் கட்சி சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் (ஓய்வூதியங்களுக்காக) நீண்ட கால வேலை செய்யவேண்டியதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். போராட்டங்களால் அவர்கள் தூக்கியெறியப்பட வேண்டும்.
|