WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரான்ஸில் மில்லியன் கணக்கானவர்கள்
ஆர்ப்பாட்ட அணிவகுப்பு
By Alex Lantier
20 October 2010
Use
this version to print | Send
feedback
நேற்று பிரான்ஸ் முழுவதும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி கோரியுள்ள ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக நடந்த நடவடிக்கை தினத்தில் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர்களும் மாணவர்களும் அணிவகுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓய்வூதிய “சீர்திருத்தத்தின்” மிக முக்கியமான விதிகள்—ஓய்வூதியத் தகுதி பெறும் வயது 2 ஆண்டுகள் உயர்த்தப்படல், அதற்கிணங்க பணிக்காலத்தில் அதிகரிப்பு என—இயற்றப்பட்டுவிட்டபோதிலும், சட்டம் இன்னும் செனட்டினால் முறையாக வாக்களிக்கப்பட வேண்டும்.
இத்தகைய பெரும் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சார்க்கோசியின் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்குக் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் சான்று ஆகும். ஒரு வாரத்திற்கும் மேலாக வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.
செனட் தன்னுடைய சட்டவரைவின் மீதான இறுதி வாக்கெடுப்பை செவ்வாய் வரை ஒத்திவைக்கக்கூடும் என்று கூறப்பட்டாலும், சிலவேளை வாக்களிப்பை இன்னும் கூடுதலான நாட்களுக்கு ஒத்தி வைக்கலாம் என்று இருந்தாலும், சில செய்தி ஊடகங்கள் முதலில் திட்டமிட்டபடி வாக்களிப்பு இன்று நடைபெறக்கூடும் என்றும் தகவல் கொடுத்துள்ளன.
வேலைநிறுத்தங்களானது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் இருப்புக் கிடங்குகள் மற்றும் பரா ஊர்திகள் நிறுவனங்கள் என்று விரிந்து பிரான்ஸ் முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் போராளித்தன எழுச்சி மற்றும் வேலைநிறுத்த அலையின் பொருளாதாரப் பாதிப்பு பரந்துள்ளதற்கு முக்கியத் தொழிற்சங்கத் தலைவர்களின் விடையிறுப்பு, வெகுஜன இயக்கமானது, செனட் ஓய்வூதியச் சட்டத்தை இயற்றியபின் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான்—ஆனால் கருத்துக் கணிப்புக்கள் மக்களில் 70 சதவிகித வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு தருவதாகக் காட்டியுள்ளன.
ஆரம்பத்திலிருந்தே தொழிற்சங்கத் தலைமைகள் வேலைநிறுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் ஒரு நெம்புகோலாகப் பயன்படுத்தி அரசாங்கத்திடமிருந்து மேல்பூச்சு வகையில் சில சலுகைகளைப் பெறத்தான் முயற்சித்துள்ளன. அதே நேரத்தில் அவை “சீர்திருத்தங்களில்” உள்ள முக்கிய வெட்டுக்களை ஏற்கின்றன. சார்க்கோசி அரசாங்கத்தை அகற்றும் எந்தப் போராட்டத்தையும் அவர்கள் நிராகரிக்கின்றனர் என்பதோடு இயக்கமானது ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் மீது அழுத்தம் கொடுப்பதுடன் நின்றுவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
பல ஒரு நாள் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடைய எதிர்ப்பைக் குலைத்து, அவர்களைக் களைப்படையச் செய்துவிடும் என்று அவர்கள் நம்பியிருந்தனர். ஆனால் இன்றுவரை இயக்கத்தின் தீவிரம் அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது.
எண்ணெய் இருப்பு கிடங்குத் தொழிலாளர்கள் ஏராளமாக முற்றுகையிட்டுள்ளதை முறியடிப்பதற்கு சார்க்கோசி பொலிசைப் பயன்படுத்த முற்படுகிறார். கடந்த வாரம் ஏராளமான கலகப் பிரிவுப் பொலிசார் மார்செயிக்கு அருகேயுள்ள ஒரு மூலோபாயக் கிடங்கில் நடந்த முற்றுகையை முடிவிற்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்டனர். இக்கட்டுரை எழுதப்படுகையில், தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் எண்ணெய்க் கிடங்குகளை ஆக்கிரமித்துள்ள தொழிலாளர்களுக்காக எந்தப் பொதுப் பாதுகாப்பையும் ஏற்பாடு செய்யவில்லை.
பிரான்ஸின் மிகப் பெரிய நகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் அக்டோபர் 12ம் தேதி முந்தைய நடவடிக்கை தினத்தில் வந்த எண்ணிக்கையை விட அதிகமாகவும் அல்லது அதையும்விட அதிகமாகவும்தான் இருந்தன. தொழிற்சங்க மதிப்பீடுகளின்படி, பாரிஸில் 330,000, மார்செயில் 240,000, துலூசில் 155,000, போர்தோவில் 140,000, Clermont-Ferrand, Rouen, Le Havre மற்றும் Caen தலா 60,000, ரென்னில் 50,000, லியோனில் 45,000 என்று எண்ணிக்கைகள் இருந்தன.
சிறிய பிராந்தியத் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களும் ஒரு பரந்த வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வலியுறுத்துகின்றன. Ardenneல் அனைத்துத் தொழிற்சங்க கூட்டு புதுப்பிக்கப்படக்கூடிய பொது வேலைநிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்து “இதில் அனைத்து பொருளாதார நடவடிக்கைப் பிரிவுகளும் கலந்து கொள்ள வேண்டும்” என்ற தீர்மானத்தையும் இயற்றியுள்ளது. இரயில்வேத் தொழிலாளர்களும் Peugeot கார்த் தயாரிப்புத் தொழிலாளர்களும் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும் எண்ணிக்கையில் வாக்களித்தனர்.
France 3 தொலைக்காட்சிக்குப் பேசிய Ardenneஸின் CGT (தொழிலாளர்கள் பொதுக் கூட்டமைப்பு) அதிகாரி Patrick Lattuada தம் உறுப்பினர்கள் “முற்றிலும் ஏமாற்றப்பட்டுவிட்டனர்”, “அரசாங்கம் மக்களின் கோரிக்கைகள் எதிர்பார்ப்புக்களுக்குக் கவனம் செலுத்துவதில்லை” என்ற உண்மையில் “வெறுப்புற்றுவிட்டனர்” என்றும் விளக்கினார். Charleville-Mezieres ல் 10,000 பேர் பங்கு பெற்ற அக்டோபர் 12 ஆர்ப்பாட்டம் அப்பகுதியில் மே-ஜூன் 1968 பொது வேலைநிறுத்தக் காலத்திற்குப் பின்னர் நடைபெற்ற ஏராளமான எண்ணிக்கையானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் ஆகும்.
மாணவர்கள் எதிர்ப்புக்கள் மிக அதிக எண்ணிக்கையைக் கொண்டிருந்தன என்று உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சங்கங்கள் அளித்துள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. FIDL (சுதந்திர ஜனநாயக உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்கம்) பிரான்ஸிலுள்ள 4,302 உயர்நிலைப் பள்ளிகளில் 1,200 வேலைநிறுத்தத்தில் உள்ளதாகவும், 850 பள்ளிகள் முற்றுகைக்கு உட்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளது. பத்து பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பொது மன்றத்தில் கூடித் தங்கள் நிறுவனங்கள் முற்றுகைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வாக்களித்தனர். ஆர்ப்பாட்டங்களில் அணிவகுத்தவர்கள் “வேலையின்மை 25 வயதில், சுரண்டப்படுதல் 67 வயதில், ஏற்க முடியாது, ஏற்க முடியாது, ஏற்க முடியாது!” என்று குரல் எழுப்பினர்.
பொலிசார் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்களோடு மோதலில் ஈடுபட்டனர். லியோனில் பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டை Bellecour Square மற்றும் அருகே பரபரப்பான பகுதிகளிலும் வீசி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். பல டஜன் கார்கள் தலைகீழாகக் கவிழ்கப்பட்டன, கடை ஜன்னல்கள் உடைத்து நொருக்கப்பட்டன. பொலிசார் “1,300 வன்முறையில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்களைக்” குற்றம் சாட்டினர்.
லியோன் பல்கலைக்கழக-2 ன் நிர்வாகம் மாணவர்கள் அதை முற்றுகையிடப்போவதாக வாக்களித்தபின், அதைக் “காலவரையற்று” மூடிவிட்டனர். இதேபோல் Toulouse-Le Mirail பல்கலைக்கழக நிர்வாகமும் 2,000 மாணவர்கள் கொண்ட பொது மன்றத்தில் 75 சதவிகிதம் பேர் முற்றுகைக்கு வாக்களித்தபின், பல்கலைக்கழகத்தை மூடியது. ரென்-2ம் மூடப்பட்டது.
பாரிஸ் புறநகரங்கள் முழுவதும் இளைஞர்கள் கலகப் பிரிவுப் படைப் பொலிசுடன் மோதினர். Argenteuil ல் இளைஞர்கள் நகரவையால் முன்கூட்டியே திட்டமிட்டிருந்த விதத்தில் ஒரு மோதலை பொலிசார் மேற்கொண்டனர். நகரவை அதிகாரி நிக்கோலா Bougeard Le Parisien இடம் கூறினார்: “இது இன்னும் மோசமாகப் போயிருக்கலாம். இது போன்ற நிகழ்வுகளுக்கு ஆறுமாத கால தயாரிப்புக்கள் தேவை. நாங்கள் அனுபவம் மிகக்குறைந்த 20 நபர்களை உரிய இடத்தில் நிறுத்தி வைத்தோம் [உத்தியோகப்பூர்வ நடுவர்கள், உத்தியோகப்பூர்வ சீருடைகளை அணிந்து என்று செய்தித்தாள்கூறுகிறது], அவர்களுக்கு அப்பகுதி மற்றும் இளைஞர்கள் பற்றி நன்கு தெரியும்.” பொலிஸ் ஹெலிகாப்டர்கள் மோதலைக் கண்காணிக்க தலைக்கு மேலே பறந்தன.
நேற்று மாலை Deauville கடலோர சுற்றுலாப் பகுதியில் பேசிய சார்க்கோசி (அங்கு அவர் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மெர்க்கேல் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவுடன் உச்சிமாநாடு நடத்திக் கொண்டிருந்தார்) தான் “சட்டம் மற்றும் பொது ஒழுங்கு பாதுகாக்கப்படும் விதத்தில் செயல்படுவேன்” என்றார். நிலைமை பற்றித் தன் கவலையைக் குறிப்பிட்ட சார்க்கோசி தான் வெட்டுக்களைக் குறைப்பதாக இல்லை என்று கூறிவிட்டார். “அதிக வன்முறையைக் கண்டு நான் அச்சம் கொள்ளுகிறேனா? ஆம், ஆனால் இலாசான மனத்துடன் நான் எதிர்கொள்ளவில்லை. ஆனால் இதைவிட அதிக வன்முறை நான் என் கடைமையைச் செய்யாவிட்டால் ஏற்படும், அதாவது ஓய்வுதியங்களுக்குத் தேவையான நிதியை அளிக்காவிட்டால்.”
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் இருப்பு கிடங்குகளை ஆக்கிரமித்துள்ள தொழிலாளர்களை, “வேலை செய்ய வேண்டும் என்று விரும்பும் மக்கள் உள்ளனர், அவர்கள் பெட்ரோல் இல்லாமல் திணறக்கூடாது” என்று கூறிய விதத்தில் எச்சரித்தார். பாரிஸுக்குத் திரும்பிய பின் சார்க்கோசி பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன், உள்துறை மந்திரி Brice Hortefeux மற்றும் பல முக்கிய அதிகாரிகளைச் சந்தித்தனர். இக்கூட்டம் “சில நிலைமைகளைச் சீராக்குவதை” நோக்கம் கொண்டிருந்தது என்று விளக்கினார்.
பிரான்ஸ் பெருகிய அளவில் பெட்ரோலியப் பொருள் பற்றாக்குறைப் பிடியில் உள்ளது என்பதை அரசாங்கம் நேற்று ஒப்புக் கொண்டது. சுற்றுச் சூழல் மற்றும் போக்குவரத்து மந்திரி Jean-Louis Borloo பிரான்ஸிலுள்ள 12,500 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 4,000 வரண்டுள்ளன என்று ஒப்புக் கொண்டார். பிரதம மந்திரி பிய்யோன் எரிபொருள் விநியோகம் வழமையான நிலையை அடைவதற்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் பிடிக்கும் என்றார்.
பரா ஊர்திகள் நிறுவனக் கூட்டமைப்புக்கள் பல நிறுவனங்களிலும் பெட்ரோலியப் பொருட்கள் இல்லை என்றும் தங்கள் தொழிலாளர்களை பணியில் அனுப்ப இயலாத நிலைமை வந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளன. Agence France Presse கருத்துப்படி, Caen இன் Chamber of Commerce & Industry நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது: “இப்பொழுது எங்கள் பகுதியில் எரிபொருள் கிடைப்பதில்லை. பொருளாதார நடவடிக்கை மந்தமாவதை இப்பொழுது காண்கிறோம்... இது “விநியோகங்கள் 48 மணி நேரத்திற்குள் சீராகவில்லை என்றால் முற்றிலும் நின்றுவிடும்” என்று கூறுகிறது.
தொழிலாள வர்க்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே போராட்டம் பெரிதாக வரவுள்ளது. பொலிசார் எண்ணெய்த்துறை வேலைநிறுத்தத்தை முறியடித்து விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர முயல்கையில் இது நிகழலாம். சார்க்கோசியின் வெட்டுக்கள் இயற்றப்படுவதற்கு எதிரான தொழிலாளர்களின் மிகச் சக்திவாய்ந்த ஆயுதத்தை பொலிஸ் களைய முற்படுகிறது. மார்செய்க்கு வெளியே எண்ணெய்த்துறைத் தொழிலாளர்களுக்கு எதிராக CRS கலகப்பிரிவு பொலிசார் வேலைநிறுத்த முறியடிப்பை மேற்கொள்ளுவதைத் தவிர, Grandputis தொழிலாளர்கள் “முறையாக” 5 ஆண்டு சிறை தண்டனை விதிகளின்படி வேலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.
ஒரு தகவல்படி, மேலாண்மையாளர்கள் இரகசியமாக ஒரு படகில் Le Havre யிலுள்ள வேலைநிறுத்த எண்ணைக் கிடங்கிற்கு மீண்டும் Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்திற்கு kerosene வினியோகத்தைத் தொடங்க வந்தனர். kerosene உற்பத்தி செய்யும் கருவியை மேலாண்மையாளர்கள் திருப்திகரமாக இயக்கத் தாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று தொழிலாளர்கள் எச்சரித்தனர். Cean எண்ணெய்க் கிடங்கு ஒன்றில் பொலிசார் தொழிலாளர்களின் தடுப்புக்களை புல்டோசர் மூலம் தகர்த்தனர். அதன்பின் பரா ஊர்திகள் பொருட்களை எடுத்துச் செல்ல வந்தன.
முற்றுகைகளுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய சட்டபூர்வ நடவடிக்கைகளை செய்தி ஊடகம் அச்சுறுத்தும் வகையில் பட்டியலிட்டுக் கூறியுள்ளது. தொழிலாளர்கள் எந்த விடுப்பு ஊதியமுமின்றி உடனடியாகப் பணி நீக்கத்தை எதிர்கொள்ளலாம் என்று வக்கீல்கள் கூறியதைச் Le Monde சுட்டிக்காட்டியுள்ளது. செய்தி ஊடகத்தின்படி, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உடனடி தற்காலிக படிப்பு நிறுத்தம் பெறக்கூடும் என்பதுடன் தங்கள் பள்ளி இல்லாமல் வேறொன்றில் முற்றுகையில் பங்கு பெற்றால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 45,000 யூரோக்கள் அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளன.
தேசிய தொழிற்சங்கத் தலைமைகள் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைப் பாதுகாக்க எவ்வித பிரச்சாரத்தையும் மேற்கோள்ளவில்லை. விற்றுவிடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் தான் அவர்கள் அரசாங்கத்துடன் ஐயத்திற்கு இடமின்றி ஈடுபட்டுள்ளனர். முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கள் வியாழனன்று அடுத்த நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க கூட உள்ளன.
நேற்றைய எதிர்ப்பு அணியில் ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிணைந்துள்ள CGT தலைவர் பேர்னார்ட் திபோ “நியாயமாக நடந்து கொள்ளுங்கள், தொழிற்சங்கத் தலைவர்களுடன் விவாதம் நடத்தவும். ஒருதலைப்பட்ச முடிவில் எங்களிடம் இருந்து பிரிந்து செல்லாதீர்கள்” என்று சார்க்கோசியிடம் முறையிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை பற்றி தெளிவற்ற முறையில் திபோ அறிவித்து “இவை எங்களை மற்ற முயற்சிகளையும் மேற்கொள்ள அனுமதிக்கின்றன” என்றார். ஆனால் முந்தைய நடவடிக்கை தினங்களைப் போல் இல்லாமல், அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டுக்களும் அடுத்த நடவடிக்கை தினத்திற்கு தேதி குறிப்பிடவில்லை.
பிரான்சின் இரண்டாவது மிகப் பெரிய செல்வாக்குக் கொண்ட தொழிற்சங்கமான CFDT, அரசியல் அளவில் சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானது, செனட்டினால் சட்டம் இயற்றப்பட்டுவிட்டால் வெட்டுக்களுக்கு எதிரான மற்ற நடவடிக்கைகளைத் தான் எதிர்க்கும் என்று அடையாளம் காட்டியுள்ளது. CFDT அலுவலர்கள் Les Echos இடம் “வேலைநிறுத்தங்கள் தொடர்ந்து, விரிவடைந்தால், நாங்கள் அதைத் தொடர்வோம். ஆனால் அவை கடின மோதலுக்கு சில தொழில்துறை பிரிவுகளில் வகை செய்தால், அதற்குக் காலவரையற்ற ஒப்புதலை நாங்கள் கொடுக்க இயலாது.” என்றனர்.
இது CGT உடன் முறிவிற்கு வகை செய்யாது என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறினார். ஏனெனில் திபோ அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுக்கிறார். “நிலைமை சவாலாகத்தான் எங்களுக்கு உள்ளது. ஆனால் CGT க்கும் அப்படித்தான் உள்ளது. பேர்னார்ட் திபோ பெரும் முயற்சி எடுக்கிறார். ஆனால் அவருடைய மிகத் தீவிரப் பிரிவிற்கு ஊக்கம் கொடுக்க அதிகமாக ஏதும் அவரால் செய்ய முடியாது. அதுவோ அவருடைய சங்கத் தலைமைக்கு உள்ளிருந்து போட்டியிட விரும்புகிறது.”
திபோவின் வலதுசாரித்தன வரலாறு தொழிலாளர்களிடையே கணிசமான எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. இதில் CGT யில் உள்ளவர்களும் அடங்குவர். கடந்த ஆண்டு CGT யின் கார்ப் பிரிவு பிரதிநிதி Xavier Mathieu அவரை மூடுதலுக்கு இலக்காகியுள்ள கார் ஆலைகளுக்கு உதவ ஏதும் செய்யவில்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். திபோ போன்றவர்கள்தான் “இழிந்தவர்கள்” என்றும் Mathieu கூறினார். “அவர்கள் அரசாங்கத்துடன் பேசுவதற்குத்தான் இலாயக்கானவர்கள், அதையொட்டி மக்களைச் சமாதானம் செய்வர்” என்றார்.
2007ல் சார்க்கோசியுடன் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய வெட்டுக்களுக்குப் பேச்சு வார்த்தைகள் நடத்தியதற்காகவும் திபோ குறைக்குள்ளானார். அதேபோல் கடந்த ஆண்டு பாரிசில் CGT அலுவலங்களில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த வேலைநிறுத்தம் செய்துவந்த ஆவணமற்ற தொழிலாளர்களுக்கு எதிராக CRS பொலிஸ் மற்றும் CGT குண்டர்களைத் திரட்டியதற்கும் குறைகூறலுக்கு உட்பட்டார்.
தொழிற்சங்கங்கள் திறமையுடன், எப்படி வெட்டுக்களைச் சுமத்துவது என்பது பற்றி சார்க்கோசிக்கு ஆலோசனை கூறுபவர்களாக நடந்து கொள்கின்றனர். ஓய்வூதியச் சட்டத்தை இயற்றுவதில் விரைவாக இருக்க வேண்டாம் என்றும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுகின்றனர். இல்லாவிடின் தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கட்டுப்படுத்த முடியாத தூண்டுதல் தன்மை ஏற்பட்டுவிடும்.
CGT அதிகாரி Nadine Prigent, Agence France-Presse இடம் கூறினார்: “ஓய்வுதிய வெட்டுக்களுக்கு செனட் ஒப்புதல் கொடுத்துவிடுவது அனைத்தையும் சமாதானப்படுத்திவிடுவதாக இருக்காது.” UNSA எனப்படும் தேசிய தன்னாட்சி தொழிற்சங்கங்களின் ஒன்றியம் எச்சரித்தது: “இந்த வாக்கெடுப்பின் விளைவு எப்படி இருக்கும் என்று எவரும் கூற இயலாது.” |