சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

How riot police broke the occupation of the Marseille oil depots

மார்செய் எண்ணெய் கிடங்குகளின் ஆக்கிரமிப்பை கலக தடுப்பு பொலிஸ் எவ்வாறு முறித்தது

By Anthony Torres
21 October 2010

Use this version to print | Send feedback

அக்டோபர் 15, வெள்ளிக்கிழமை காலை, தெற்கு பிரான்சின் மார்செய் இற்கு அருகில் தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட Fos எண்ணெய் கிடங்கின் முற்றுகையை முறியடிக்க CRS கலக எதிர்ப்பு பொலிஸை அனுப்புவதற்கு பிரெஞ்சு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் பிரெஞ்சு துறைமுகங்களை பகுதியாக தனியார்மயமாக்குவது ஆகியவற்றை எதிர்த்து போராட தொழிலாளர்கள் அந்த ஆலையை முடங்கி இருந்தார்கள். தொழிலாளர்கள் பொலிஸிற்கு எந்த எதிர்ப்பையும் காட்ட வேண்டாம் என்று CGT (தொழிலாளர்களுக்கான பொது கூட்டமைப்பு) கேட்டு கொண்டது.

கூடுதல் தகவல்களைப் பெற Martigues மற்றும் Fos-sur-Merஇல் உள்ள CGTஇன் உள்ளூர் கிளைகளின் பிரதிநிதிகளை உலக சோசலிச வலைத் தளம் தொடர்பு கொண்டது.

போலிஸ் தலையீடு செய்வதற்கு ஒருநாள் முன்னர், Fos-sur-Mer எண்ணெய் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட ஒரு பெருந்திரளான ஆர்பாட்டத்திற்கு தொழிற்சங்கள் அழைப்புவிடுத்தன. CGT, CFDT (பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு) மற்றும் Force ouvrière (தொழிலாளர் சக்தி) ஆகிய சங்கங்கள் அதில் கலந்து கொண்டன. துறைமுக தொழிலாளர்களோடு இரயில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள், பொறியியல் மற்றும் உள்ளூர் அரசாங்க தொழிலாளர்களும் அங்கே கூடி இருந்தனர்.

மார்செய்யிற்கு அருகிலிருக்கும் எண்ணெய் கிடங்குகளானது, உயர்தர எரிவாயு, டீசல், மித்தனால், உள்ளூர் பயன்பாட்டு எரிபொருள் மற்றும் சக்திவாய்ந்த எரிபொருள் போன்ற பொருட்களைச் சேமித்து வைப்பதற்காக உயர்ந்த மூலோபாயத்துடன் நிறுவப்பட்டிருக்கின்றன. 1969இல் இருந்து, எண்ணெய் ஏற்றிச்செல்லும் லாரிகள் மூலமாகவோ அல்லது அருகிலிருக்கும் Berre l’Etang எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்து செல்லும் குழாய் இணைப்புகள் மூலமாகவோ இங்கிருந்து ஆண்டுக்கு ஆறு மில்லியன் கனமீட்டர் எண்ணெய் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் கூட, அதுவொரு பெரும் தீவிபத்தாகாமல் தவிர்ப்பதற்காக எரிவாயுவானது வெவ்வேறு இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மிகப்பரந்த 40 பெருந்தொட்டிகளில் சேமிக்கப்படுகின்றன. பின்னர் இவை லாரி, இரயில் மற்றும் கடல் வழியாகவும், அத்துடன் குழாய்வழியாகவும் வினியோகிக்கப்படுகின்றன.

லியோனுக்கு அருகில் பெய்ஜினில் உள்ள பிரெஞ்சு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், Karlsruheஇல் உள்ள ஜேர்மன் MIRO எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, Cressierஇல் உள்ள Swiss Petroplus எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, அத்துடன் பிரெஞ்சு அரசின் மூலோபாய பங்களிப்புகளுக்குத் தேவையான வினியோகத்தை உறுதிசெய்யும் குழாய்வழி இணைப்புகள் ஆகியவற்றிற்கு எண்ணெய் வழங்கும் சுமார் 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான எண்ணெய் குழாய் வலையமைப்பின் இருதயம் போல மார்செய் எண்ணெய் கிடங்கு செயல்பட்டு வருகிறது.

தொழிற்சங்க கருத்துக்களின்படி, பத்திரிகை செய்திகள் தவறாக இருக்கின்றன. கலக தடுப்பு பொலிஸை ஏற்றிய 50 பேருந்துகள் Fos-sur-Mer ஆலையின் முற்றுகையை உடைக்க அனுப்பப்பட்டிருந்ததாக பத்திரிக்கை செய்திகள் குறிப்பிட்டிருந்தன. உண்மையில், ஆலையில் தலையீடு செய்யப்பட்ட போது, பாதுகாப்பு படைகள் குறைந்த எண்ணிக்கையில் தான் இருந்தன. அந்த நேரத்தில் நடைமுறை தேவைக்காக CGTஆல் ஆலை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கவில்லை.

Martigues CGT பிரதிநிதி ஒருவரின் கருத்துப்படி, “கிடங்கை முற்றுகையிட்ட சம்பவம் நடந்த அந்த நாளுக்குப் பின்னர், CGT அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தது. வெறுமனே அங்கே இருந்த 15 பேர் மட்டும், தங்கள் விருப்பம் போல் செயல்பட்டு கொண்டிருந்தார்கள்”.

Fos-sur-Mer சங்கக்கிளை பிரதிநிதி ஒருவர் கூறியதாவது, “ஐம்பது பேருந்துகள் என்பது அர்த்தமற்றது. CRS தலையீடு செய்த பின்னர் ஒன்றரை மணி நேரம் கழித்து நான் அந்த வழியாக சென்றபோது, அங்கே வெறுமனே 10 பேருந்துகள் மட்டுமே இருந்தன”.

தொழிலாள வர்க்கத்தின் சமூக தேட்டங்கள் மீது செய்யப்படும் அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்து போராட, இந்த மூலோபாய ஆலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் CGT மற்றும் ஏனைய சங்கங்களுக்கு இல்லை என்பதால், CRS அதன் முழு சக்தியுடன் தலையீடு செய்ய வேண்டிய அவசியமே அதற்கு ஏற்படவில்லை. Martigueஇல் இருந்த ஒரு CGT பிரதிநிதியும் இதை உறுதி செய்தார்: அவர் கூறுகையில், “இந்த கிடங்கை முற்றுகை இடுவதற்கான நோக்கம் எப்போதுமே (ad vitam aeternam) அதை கைப்பற்றி வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அல்ல” என்றார்.

இதுவொரு குறிப்பிடத்தக்க அறிக்கையாகும். எரிபொருள் பற்றாக்குறையானது, நாடு முழுவதும் விஷயத்தைக் கவனத்திற்குக் கொண்டு வர தொடங்கி இருக்கிறது. மேலும் அது ஸ்விட்சர்லாந்து, ஜேர்மனி போன்ற ஏனைய நாடுகளுக்கான எண்ணெய் வினியோகத்திலும் பிரச்சினைகளை முன் கொண்டு வந்திருக்கிறது. பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்களிடமிருந்து வெளிப்படும் கட்டுப்படுத்த முடியாத பயம், பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் செய்யப்படும் சமூக தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களின் முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக இருக்கிறது.

எவ்வாறிருப்பினும், ஒரு முக்கியமான எண்ணெய் சேமிப்பு ஆலையின் ஆக்கிரமிப்பு பிரச்சினையை CGT தொழிலாள வர்க்கத்தின் ஒரு மூலோபாய பிரச்சினையாக மாற்றவில்லை. அது போர்குணம் கொண்டிருப்பதைப் போன்று வெளிப்பாட்டை காட்டுகிறதே அன்றி, ஆனால் அது அவ்வாறு இல்லை. உண்மையில், பிரெஞ்சு பொருளாதாரத்தை முடக்க தாம் விரும்பவில்லை என்பதை CGT பொதுச்செயலாளர் பேர்னார்ட் திபோ பல்வேறு நிகழ்ச்சிகளில் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் சார்க்கோசியால் செய்யப்பட்ட ஓய்வூதியங்கள் மற்றும் வேலைகள் மீதான தாக்குதல்களில் வெறுமனே அவர் மறுபேச்சுவார்த்தை நடத்தவே பார்க்கிறார்.

மறுபுறம், இவ்வாறான ஓர் ஆலையின் ஆக்கிரமிப்பானது தொழில்வழங்குனர்களின் மீது வீசப்பட்டிருக்கும் வெளிப்படையான ஒரு சவாலாக இருக்கிறது. இவ்வாறு நடப்பதை தடுக்கவே CGT வேலை செய்து கொண்டிருக்கிறது. ஏனென்றால், அரசாங்கத்துடன் தொழிலாளர்கள் ஓர் அரசியல் மோதலில் இறங்குவதை அது விரும்பவில்லை. அதனால் தான் CRS வசம் ஒரு முக்கிய ஆலையைக் கைவிட்டுவிட்டு, DPFஐ தொழிலாளர்கள் கைப்பற்றுவதையும் CGT கைவிட்டது.

CRS குறுக்கீடு செய்த பின்னர், அருகில் சுற்றியிருந்த தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதற்கான ஒரு முயற்சி அங்கே இருந்ததா என்பதில் கூட இரண்டு CGT பிரதிநிதிகளுக்கு ஒரே மாதிரியான கண்ணோட்டம் இல்லை. Fos-sur-Mer பிரதிநிதி கூறுகையில், “ஆம், ஐக்கியப்படுவதற்கு முன்னரும், அதன் பின்னரும், CGT அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றுதிரட்ட முயன்று கொண்டிருந்தது என்பது உண்மை தான்," என்றார்.

'தொழிலாளர்களை ஒன்றுதிரட்ட வேண்டிய அவசியமே அங்கே இருக்கவில்லை; CRS தலையீட்டின் மீது தொங்கி கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை' என்று Martigues CGT பிரதிநிதி தெரிவித்தார். CRS தலையீட்டை தொடர்ந்து CGTஆல் அளிக்கப்பட்ட முறையீடுகள் குறித்து அவர் கூறுகையில், “விஷயம் அப்படியே தான் இருக்கிறது. அதாவது, ஒருமாற்று சீர்திருத்தம் - வேலைகள் - ஊதியத்திற்கான போராட்டம்; செனட்டில் ஓய்வூதிய சீர்திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பிற்குப் பின்னரும் கூட ஐக்கியப்படுத்தல்கள் நிற்காது" என்றார்.

2006இல் CPEஇன் (இளைஞர்களுக்கான முதல் ஒப்பந்த வேலை) அனுபவத்திலிருந்து அவர் அவருடைய வாதத்தை வைக்கிறார். அப்போது பிரதம மந்திரியாக இருந்த Dominique de Villepin, CPE மீதான சட்டத்தைக் கொண்டு வந்தார். அது இளம் தொழிலாளர்களுக்கு எந்த பணி பாதுகாப்பையும் அளிக்கவில்லை. நிக்கோலா சார்க்கோசியின் ஒத்துழைப்புடன், தொழிற்சங்கங்கள் CPEஐ திரும்பப் பெற செய்தன. தொழிற்சங்கங்களும், LCR (புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம்) உட்பட "இடது" கட்சிகளும் இதை தொழிலாளர்களுக்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய வெற்றியாக கண்டன. ஆனால் இதுவரையில், ஒருபாதி வெற்றியாக இருந்த அது விரைவிலேயே ஒரு தோல்விக்கு வழி வகுத்தது: அதாவது, இந்த வெற்றியின் கௌரவத்திலிருந்து சார்க்கோசி சிறிது இலாபம் அடைந்தார்; அது 2007 தேர்தலில் அவர் ஜனாதிபதியாக வருவதற்கு உதவியது; அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல்களை வேகப்படுத்தவும் உதவியது.

ஒரு மாற்று சீர்திருத்தத்திற்காக CGT போராடி வருகிறது என்று தொழிற்சங்கவாதிகள் கூறும் போது, ஓய்வூதியங்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல் கொள்கையை CGT ஒப்புக்கொள்கிறது என்பதையே அது குறிக்கிறது. ஆனால் சில விஷயங்களில் ஒத்துப்போகாமலும் இருக்கிறது—அதாவது, தொழிலாளர்களின் ஒரு குறிப்பிட்ட அடுக்குகளுக்கு மட்டும் தனிச்சலுகைகளை அளிப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தைப் பிரித்துவைக்க பயன்படுத்திய கடினமான வேலை நிலைமைகளின் பிரச்சினை போன்றவற்றில் அது உடன்படாமல் இருக்கிறது.

தொழிலாளர்களின் சமூக ஆதாயங்களைக் காப்பாற்ற, தொழிலாளர்களின் சுயாதீனமான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க CGT விரும்பவில்லை என்பதையே, ஒரு புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு அது ஆதரவளிப்பது எடுத்துக்காட்டுகிறது. இருக்கும் அமைப்புமுறையைக் காப்பாற்ற முயலும் இந்த தொழிற்சங்கங்கள் அளிக்கும் குறுகிய முன்னோக்கிற்குள் தொழிலாள வர்க்கம் இருந்து கொண்டிருந்தால், இந்த ஆலைகள் முடக்கமும், ஆர்ப்பாட்டங்களும் ஆக்கபூர்வமாக இருக்காது.

இதற்காக தான், உலக சோசலிச வலைத் தளம் சமூக தேட்டங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழுக்களை (committees of action) உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. அது ஒரு சோசலிச மற்றும் சர்வதேச அரசியல் முன்னோக்கின் அடித்தளத்திலிருந்து தொழிற்துறை போராட்டத்தின் நீட்சியைக் கொண்டு வரும். CGTஆல் முன்வைக்கப்பட்ட மூலோபாயத்திற்கு முரணாக, பணியிடங்களிலும், சுற்றியிருக்கும் இடங்களிலும் தொழிலாளர்கள் சாமானிய (rant-and-file) குழுக்களை அமைக்க வேண்டும். சார்க்கோசி அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்கி, அதற்கு மாற்றாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஓர் அரசியல்ரீதியான போராட்டத்துடன், தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கும் சமூக போராட்டங்களின் தீவிரத்தனத்தைத் தான், எண்ணெய் கிடங்குகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை முறிப்பதற்கான அரசின் முடிவு எடுத்துக்காட்டுகிறது.