சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Confrontation builds between French workers and Sarkozy

பிரெஞ்சுத் தொழிலாளர்களுக்கும் சார்க்கோசிக்கும் இடையே முரண்பாடுகள் உருவாகிறது

By Alex Lantier
19 October 2010

Use this version to print | Send feedback

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கை நேற்றும் பிரான்சில் தொடர்ந்தது. பார ஊர்திச் சாரதிகளும் எரிசக்தித் துறைத் தொழிலாளர்களுடன் வேலைநிறுத்தத்தில் சேர்ந்து கொண்டனர். இது நாடெங்கிலும் பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை குறித்த தகவல்களுக்கு இடையே வந்துள்ளது.

ஓய்வு பெறத் தகுதியுடைய வயது இரு ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டது, அதையொட்டி பணிக் காலத்தில் உயர்வு என்று சட்டமியற்றுபவர்கள் பெரும் எதிர்ப்பை மீறி இயற்றியுள்ள ஓய்வூதியச் “சீர்திருத்தத்தில்” காணப்படுவதற்கு எதிராக எதிர்ப்புக்களை தொழிலாளர்களும் மாணவர்களும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கருத்துக் கணிப்புக்கள் மக்களில் 71 சதவிகிதத்தினர் வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தருவதாகத் தெரிவிக்கின்றன.

வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களின் விரிவாக்கம், தொழிற்சங்கங்களால் வழிநடத்தப்படுகின்றன என்பதற்கு முற்றிலும் மாறாக பெரும்பாலும் தொழிலாளர்கள் தங்களின் முன்முயற்சிகளை அடுத்தே நடைபெறுகின்றன. இந்த எழுச்சியுறும் மோதலை எதிர்கொண்டுள்ள நிலையில், முக்கிய தொழிற்சங்க அதிகாரிகள் செனட்டால் சட்ட வரைவு இயற்றப்பட்ட பின், தாங்கள் வேலைநிறுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் குறைக்க முயல இருப்பதாகக் கூறியுள்ளனர்.

நேற்று செனட்டானது சட்டத்தின் மீது இறுதி வாக்கெடுப்பை ஒரு நாள் தாமதப்படுத்தி வியாழனுக்கு தள்ளி வைத்துள்ளது. கடலோர சுற்றுலாச் சிறுநகரமான Deauville லிருந்து, ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவை அங்கு சந்திக்கும் நிலையில், சார்க்கோசி இந்த வெட்டுக்கள் “இன்றியமையாதவை” என்றும் பிரான்ஸ் “இவற்றைச் செயல்படுத்தத்தான் வேண்டும்” என்றும் அறிக்கை விடுத்துள்ளார்.

அங்கு மூன்று அரசாங்கத் தலைவர்களும் ஐரோப்பிய-ரஷ்ய உறவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் வரம்பு கட்டப்பட்டுள்ள வரவு-செலவுப் பற்றாக்குறையை மீறும் யூரோப் பகுதி நாடுகளுக்கு விதிக்க வேண்டிய நிதிய அபராதம் பற்றியும் விவாதித்தனர்.

ஞாயிறு இரவு ஒரு தொலைக்காட்சியில் பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோன் தான் “எரிபொருள் விநியோக முயற்சி தடைக்கு உட்படுத்துதல் மூலம் பிரெஞ்சுப் பொருளாதாரத்தை திணறடிப்பதற்குத் தான் அனுமதிக்கப் போவதில்லை” என்று அறிவித்தார்.

துறைமுகங்களும் பிரான்சின் 12 சுத்திகரிப்பு ஆலைகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதேபோல் எண்ணெய் இருப்புக் கிடங்குங்களும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் பணியிடங்கள் ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில்துறை புள்ளிவிவரங்களின்படி பிரான்சிலுள்ள 12,500 பெட்ரோல் விநியோக நிலையங்களில் கிட்டத்தட்ட 2,500 நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் முற்றிலும் இல்லை. இதில் 1,500 நிலையங்கள் முக்கிய சில்லறை விற்பனை நிறுவனங்களான Carrefour மற்றும் Leclere ஆகியவையும் சுயாதீனமாக இயக்கும் 1,000 நிலையங்களும் உள்ளன. சில பகுதிகள் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டுள்ளன. 80 சதவிகித எரிபொருள் நிலையங்கள் பாரிஸுக்கு அருகேயுள்ள Essonne பிராந்தியத்தில் மூடப்பட்டுவிட்டன. நோர்மண்டியின் சில பகுதிகளிலும் இதேபோன்ற எண்ணிக்கைதான் உள்ளது. Brittany யில் விநியோகங்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளன என்று பெட்ரோலிய இறக்குமதிச் சங்க தொழில்துறை குழு கூறியுள்ளது.

எண்ணெய் இருப்புக் கிடங்குகளில் முற்றுகைகளும் ஆக்கிரமிப்புக்களும் Reichstett, Dunkirk, Caen மற்றும் Saint-Pierre-des Corps ஆகிய இடங்களில் தொடர்ந்தன. Port-la-Nouvelle மற்றும் Brest ஆகிய இடங்களில் முற்றுகைகள் அகற்றப்பட்டன. அதேபோல் Frontignan மற்றும் Oustreham ஆகிய இடங்களில் பொலிஸ் தலையீட்டால் முற்றுகைகள் அகற்றப்பட்டன. ஆனால் Frontignan தொழிலாளர்கள் முற்றுகை முறியடிக்கப்பட்ட பின்னர் மீண்டும் வேலைநிறுத்தம் செய்தனர்.

பார ஊர்திச் சாரதிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, கிடங்குகளை முற்றுகையிட்டு, முக்கிய பெருஞ்சாலைகளில் போக்குவரத்தின் வேகத்தைக் குறைத்தனர். இதில் பாரிஸ் லில்லைத் தொடர்புபடுத்தும் A1, மற்றும் தெற்கு பாரிஸ் A6 சாலையும் அடங்கும். தொழிலாளர்கள் பல நெடுஞ்சாலைகளில் சாலைவரிப் பணம் வசூலிப்பதை நிறுத்த முயன்று “சாலைவரிச் சாவடி இல்லாத செயல்முறை” வேண்டும் என்றனர். பல சிறு நெடுஞ்சாலைகளும் முற்றுகைக்கு உட்பட்டன.

வேலைநிறுத்தங்கள் பெரும் போக்குவரத்துக் கழகங்களிலும் ஏற்பட்டன. ஏயர் பிரான்ஸ் தொழிலாளர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர். இதில் விமான நிலைய முற்றுகைகளும் அடங்கும். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். DGAC எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்தின் பொது இயக்குனரகம் விமான நிறுவனங்கள் பறக்கும் அட்டவணையை நாடெங்கிலும் 30 சதவிகிதம் குறைக்குமாறும், ஒர்லி விமான நிலையத்தில் 50 சதவிகிதம் குறைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. வேலைநிறுத்தங்கள் SNCF இரயில் பாதையில் எட்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டில் ஒரு இரயில் இன்று ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைநிறுத்தங்கள் கவச வாகனத் தயாரிப்பு நிறுவனங்களான Brink’s மற்றும் Loomis போன்றவற்றிலும் பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் எதிர்ப்பு தொடர்கிறது. கடந்த வாரத்தில் இருந்து இவை அதிகரித்துள்ளன. உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் தேசிய சங்கம் (UNL) திங்களன்று நாட்டிலுள்ள 4,302 உயர்நிலைப் பள்ளிகளில் 950ல் வேலை நிறுத்தம் நடைபெறுவதாகக் கூறியுள்ளது. 600 உயர்நிலைப் பள்ளிகள் முற்றுகைக்கு உட்பட்டுள்ளன. UNEF எனப்படும் பிரெஞ்சு பல்கலைக்கழக மாணவர்கள் தேசிய சங்கமானது மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகப் பொது மன்றங்களில் கூடுவதாகவும் 12 பல்கலைக்கழகங்கள் வேலைநிறுத்தம், ஐந்து முற்றுகை அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன என்றும் தெரிவிக்கிறது.

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் கைபேசிகளை எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கப் பயன்படுத்துகின்றனர். சுற்றுச் சூழல் மந்திரி Jean-Louis Borloo, “இத்தகைய நிகழ்வை இதற்கு முன் நாம் பார்த்ததில்லை. SMS வழியே முற்றுகையிடலை” என்று விவரித்தார்.

மாணவர் எதிர்ப்புக்களானது பிரான்சின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பதிவாயின. Lyon, Nice, Mulhouse மற்றும் Lille ஆகியவற்றில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பொலிசுடன் மோதலுக்கு வகை செய்தன. பொலிசார் கண்ணீர்ப் புகை குண்டைப் போட்டனர். பிரான்ஸ் முழுவதும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடனான மோதலில் 290 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.

உயர்நிலைப் பள்ளிகள் முற்றுகைக்கு உட்பட்டது மற்றும் பொலிசுடன் மோதல் என்பது பாரிஸ் பகுதி முழுவதும் பரவியது. வடக்கே புறநகர் Seine-St-Denis ல் உள்ள தொழிலாள வர்க்கப் பகுதியின் 74 உயர்நிலைப் பள்ளிகளில் பாதிக்கும் மேலானவை முற்றுகைக்கு உட்பட்டன.

பாரிசில் மாணவர்கள் நகரவை முன்னே ஆர்ப்பாட்டம் நடத்தி Champs-Elysees ல் போக்குவரத்தை தடுத்தனர். பொலிசார் மேற்கு புறநகரான Nanterre ல் உள்ள Joliot Curie உயர்நிலைப் பள்ளிக்கு அருகே மாணவர்களுடன் மோதலில் ரப்பர் தோட்டாக்களைச் சுட்டனர், பாரிஸ் கிழக்குப்ப பகுதியில் உள்ள Combs-la-Ville ல் உள்ள தொழில்நுட்ப உயர்நிலை பள்ளியான Jacques Prévert மாணவர்கள் மோலோடோவ் கலவைகளினால் திருப்பித் தாக்கினர்.

முக்கிய பெருநிறுவனங்கள் முழு பெட்ரோல் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு முற்றுகைகளை முறிக்குமாறு கோருகின்றன. Leclerc உரிமையாளர் Edourd Lecler, Le Parisian இடம், “தற்போதைய எரிபொருள் பயன்பாட்டு விகிதத்தில் ஏதேனும் முடிவு இந்த மோதலுக்கு ஏற்பட்டால் ஒழிய, வார இறுதியிலிருந்து பெட்ரோல் கிடைக்காது” என்றார். Carrefour அறிக்கை ஒன்றை வெளியிட்டு “பற்றாக்குறை இடர் உண்மையானது” என்று எச்சரித்து அரசாங்கம் எண்ணெய் இருப்புக் கிடங்குகள் முற்றுகைகளை அகற்ற வேண்டும் என்று முறையிட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்பவர்களுடன் மோதலுக்குத் தயாராகின்றனர். உள்துறை மந்திரி Brice Horgtefeux நேற்று பிற்பகல் எண்ணெய் தட்டுப்பாட்டை அகற்றுவதற்கு ஒரு அவசரகால அமைச்சரக இடைக்கால நெருக்கடிக் குழு ஒன்று தோற்றுவிப்பதை அறிவித்தார். இது எலிசே ஜனாதிபதி அரண்மனையில் Fillon, Hortefeux, Borloo, தொழில்துறை மந்திரி எரிக் வோர்த், தேசிய கல்வி மந்திரி Luc Chatel ஆகியோர் கூடிப்பேசிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பாரிசுக்கு கிழக்கேயுள்ள Grandpuits சுத்திகரிப்பு நிலையத்தில், போலிசார் 30 தொழிலாளர்களை தொழிலில் ஈடுபடுத்தினர்—அதாவது கைது செய்ய நேரிடும் என்ற அச்சுறுத்தலில் அவர்களை வேலைநிறுத்தத்தை கைவிடச் செய்தனர். தொழிலாளர்கள் இதுபற்றி தாங்கள் “பெரும் கோபம்” அடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். நிலையத்தில் முழு வேலை செய்ய மறுக்கின்றனர், அல்லது எல்லா வாடிக்கையாளர்களுக்கும் விநியோகம் நடக்காது என்று கூறியுள்ளனர்.

தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு தொழிற்சங்கவாதி, அவ்விடத்தில் உள்ளவர் விவரித்தார்: “நாங்கள் பொது மருத்துவமனைகள், பொதுப் பணிகளுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். ஆனால் முற்றுகையைக் கைவிடுதல் என்ற கேள்விக்கு இடமில்லை. டோட்டல் நிறுவனங்களுக்கு எண்ணெய் கொடுத்து அவர்கள் சம்பாதிப்பதை அனுமதியோம்.” CGT அதிகாரிகள் Grandpuits நிலைமையை “ஒரு முற்றுகை போல்” உள்ளது என்று குறிப்பிட்டு வேலைநிறுத்தம் முறிக்கப்பட பொலிஸ் தடையீடு வரலாம் என்று தாங்கள் அஞ்சுவதாகக் குறிப்பிட்டனர்.

CRS (குடியரசுப் பாதுகாப்பு கம்பனிகள்) கலகப்பிரிவுப் பொலிசார் ஏற்கனவே பல சுத்திகரிப்பு நிலையங்களின் ஆக்கிரமிப்பை உடைக்கத் தலையிட்டுள்ளனர். இதில் வெள்ளிக்கிழமையன்று மூலோபாய Fos இருப்புக் கிடங்கும் அடங்கும்.

வியாழனன்று சட்டத்தின் மீது வாக்கெடுப்பு முடிந்தவுடன் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை சட்டத்திற்கு எதிர்ப்பைக் கைவிட நம்ப வைக்கும் என்று அரசியல் ஸ்தாபனம் நம்பிக்கை கொண்டுள்ளது. “சமூக உறவுகளில் வல்லுனர் ஒருவரை” மேற்கோளிட்டு “தொழிற்சங்கங்களின் அனைத்துத் தலைவர்களும் நிக்கோலா சார்க்கோசி ஒருபொழுதும் பின்வாங்க மாட்டார் என்பதை அறிவர். அவர்கள் மோதலிருந்து அதிக சேதம் இல்லாமல் மீள முயல்கின்றனர்” என்று அவர் கூறியதாக Le Figaro தெரிவித்துள்ளது.

செனட்டில் சட்டம் தொடர்பாக வரும் வாக்கெடுப்புக் குறித்து பேசுகையில், பிரெஞ்சு மேலாளர்களின் கூட்டமைப்பு-பொது மேலாளர்கள் கூட்டமைப்பு (CFE-CGC) தொழிற்சங்க செயலாளர் Carole Couvert விளக்கியதாவது, ‘செனட் வாக்கெடுப்பின் பின் தொழிற்சங்க கூட்டணி புதிய ஆர்ப்பாட்டத்தை தீர்மானித்தால், நாங்கள் இன்றி அவர்கள் இருப்பார்கள்’. செனட் வாக்கெடுப்பின் பின், ‘நாங்கள் ஒரு புதிய ஒழுங்குமுறையில் இருப்போம்’ என்று தலைமை CFDT தொழிற்சங்க அதிகாரியான Marcel Grignard உடன்பட்டார்.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியானது 1936 ஆண்டு பொது வேலைநிறுத்தத்தை விற்றுவிட்டதை நினைவுகூர்ந்த Le Figaro கூறியது: “1936 ஆண்டு சமூக இயக்கத்திற்குப் பின்னர் Maurice Thorez ‘ஒரு வேலைநிறுத்தம் எப்படி முடிக்கப்பட வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும்” என்று ஒப்புக் கொண்டார்…. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் அப்பொழுது கூறியது இப்பொழுது அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களாலும் எதிரொலிக்கப்படுகிறது.”

CGT இன் தலைவர் பேர்னார்ட் திபோ தான் நாட்டை முற்றுகையிட விரும்பவில்லை என்றும், வெட்டுக்கள் பற்றி மறு பேச்சுக்களைத்தான் விரும்புவதாகவும் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி Le Figaro கூறியுள்ளதாவது: “தன்னுடைய செயற்பாட்டாளர்கள் தளத்தைத் திருப்தி செய்ய திபோ விரும்புகிறார். அதுதான் வேலைநிறுத்தங்கள் தொடர்தலைத் தலைமை தாங்கி நடத்துகிறது. அது ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடாததற்கு அவரிடம் கோபம் கொண்டுள்ளது. அவர் CFDT செயலாளர் François Chérèque உடன் உறவை முறித்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். ஒரு வல்லுனரின் கூற்றுப்படி François Chérèque “வேலைநிறுத்தம் தொடர்வது ஆபத்தானது ஆனால் காட்டிக்கொடுப்பவர் என்ற தோற்றம் அளிக்காமல் எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் உள்ளார்.”

Chérèque, Thibault ஆகியோரின் நிலைப்பாடுகள் அனைத்தும் அடிப்படையில் உத்தியோகபூர்வ “இடதின்” உடையவைதான். இவ்விதத்தில் 1968 ஆண்டு பொது வேலைநிறுத்தத்தின்போது மாணவர் தலைவராக இருந்த டானியல் கோன் பென்டிட், இப்பொழுது பசுமைக் கட்சியின் தலைமையில் உள்ளவர், வேலைநிறுத்தங்களை முடிப்பதற்கும் 2012 ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் கூட்டணிக்கான ஏற்பாட்டிற்கும் தன் மூலோபாயத்தைத் தெரிவித்துள்ளார். இந்த முன்னோக்கானது குட்டி முதலாளித்துவ புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியினால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. (See: பிரெஞ்சு அரசாங்கம் ஓய்வூதிய வெட்டுக்களை பாதுகாக்கையில் வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன”).

கோன்-பென்டின் விளக்கினார்: “அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும். நீங்கள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தால் அரசாங்கம் இராஜிநாமா செய்யும் வரை அதை நடத்த வேண்டும்… அதுதான் தொழிற்சங்கங்கள் இடதுகளுடன் பேச்சுக்கள் நடத்தி மாற்றீட்டு வெட்டுக்களை அமைக்கவும் அதையொட்டி 2012ல் அதிகாரத்திற்கு வந்து “நாங்கள் வெற்றி பெற்றால், இப்படித்தான் நியாயமற்ற தற்போதைய அரசாங்க வெட்டுக்களைச் சீர்திருத்துவோம்” என்று சொல்ல முடியும். அதுதான் பகுத்தறிவார்ந்த செயல்.”

இது தொழிலாள வர்க்கத்தை பல “இடது” துரோகிகளிடம் இருந்து பிரித்துக் காட்டும் வர்க்கப் பிளவிற்கு முக்கிய உதாரணம் ஆகும். அவர்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுவதற்கு எதிரிடையாக உள்ளனர். அதன் பல பலவீனங்கள், பொதுச் செல்வாக்கற்ற தன்மை இருந்தபோதிலும். அவர்கள் சார்க்கோசி அரசாங்கத்தைக் தூக்கியெறிய விரும்பவில்லை. மாறாக வேலைநிறுத்தங்களை திசைதிருப்பி தாங்கள் சார்க்கோசிக்கு பதிலாக பதவிக்கு வந்து சற்றே மாறுபட்ட வெட்டுக்களை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகச் செயல்படுத்த விரும்புகின்றனர்.