WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Workers Struggles: The Americas
தொழிலாளர் போராட்டங்கள்: அமெரிக்கா
12 October 2010
Latin America
Back to
screen version
இலத்தீன் அமெரிக்கா
உருகுவே தொழிற்சங்க கூட்டமைப்பு 24 மணிநேர பொது வேலைநிறுத்தம் செய்கிறது
ஜனாதிபதி José “Pepe” Mujicaஆல் முன்வைக்கப்பட்டு, தற்போது கீழ்சபையில் விவாதிக்கப்பட்டு வரும் நிதியறிக்கையை எதிர்த்து அக்டோபர் 7இல் உருகுவே தொழிலாளர்கள் 24 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிதியறிக்கையின் இறுதிதேதி அக்டோபர் 15ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
PIT-CNT தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் COFE பொதுத்துறை தொழிலாளர் அமைப்புகளால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த இந்த வேலைநிறுத்தம், தலைநகர் மொன்டிவிடோவில் உயர்தளவில் ஆதரவைப் பெற்றிருந்தது. “இந்த நிறுத்தம் அனைத்து பொது நிர்வாகத்தையும், வங்கிகளையும், தொலைதொடர்பு நடவடிக்கைகளையும் பாதித்தது... ஜோன் கேஸ்டில்லோவின் கருத்துப்படி, (PIT-CNT) ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர்... கட்டுமானம், துறைமுகம் மற்றும் உலோகவியல் துறைகளில் நூறு சதவீத ஆதரவு இருந்தது" என்று Página 12 குறிப்பிட்டது. பொது போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள், மருத்துவமனை தொழிலாளர்கள் செய்ததைப் போன்றே அவசரகால சேவைகளில் மட்டும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்திருந்தனர்.
நாட்டின் ஏனைய நகரங்களிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் இருந்தன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்வி நிதிஒதுக்கீட்டை ஆறு சதவீதத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதே வேலைநிறுத்தத்தின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. முஜிக்காவால் முன்வைக்கப்பட்ட நிதியறிக்கையில் 4.5 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அத்துடன், சம்பள உயர்வு, செல்வவளத்தின் முறையான வினியோகம், கல்வி, சுகாதாரம் மற்றும் குடியிருப்புத்துறையில் மேம்பாடுகள் ஆகியவையும் கோரிக்கைகளில் சேர்க்கப்பட்டிருந்தன.
கடந்த மார்ச்சில் Frente Amplio (மாபெரும் முன்னணி) கூட்டணியின் ஓர் உறுப்பினரான முஜிக்கா தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து நடந்த பல நடவடிக்கைகளின் சமீபத்திய ஒன்றாக இந்த பெரும் ஐக்கியம் இருந்தது. முற்போக்கான சீர்த்திருத்தங்கள் மீது அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் முஜிக்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் இருந்து இதுவரை, அவற்றில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆகஸ்டில், PIT-CNT மற்றும் COFE அழைப்பின்பேரில் இதே பிரச்சினைகளுக்காக ஒரு நான்கு-மணிநேர வேலைநிறுத்தம் நடந்தது.
தேர்தல்களில் PIT-CNT மற்றும் ஏனைய சங்கங்களால் பலமாக ஆதரிக்கப்பட்டிருந்த முஜிக்காவிற்கு சவால்விட, சங்க அதிகாரத்துவம் விருப்பமின்றியுள்ளது. உண்மையில், Argentina Independent குறிப்பிட்டதைப் போல, “அரசாங்கத்திற்கும், தீவிர கொள்கையினருக்கும் நெருக்கமான பழமைவாத உட்கூறுகளுக்கு இடையே உருகுவே மத்திய தொழிற்சங்கத்திற்குள் ஏற்பட்ட ஓர் உட்பூசலுக்கு இடையில் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு மிக நெருக்கமாக இருக்கும் அந்த குழு, தெருக்களில் இறங்க வேண்டாம் என்று தங்களின் ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டிருந்தது."
“இந்த முறை சம்பவங்கள் எதுவுமில்லாமல் பிரதிபலிப்புகளை மட்டும் காட்டும் ஒருநாளாக இது இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம்," என்று கூறி கேஸ்டில்லோவே குறிப்பிட்டிருந்த போதினும், மொன்டிவிடோவிலும், ஏனைய இடங்களிலும் முற்றுகைகள், போராட்டங்கள் உட்பட சில சம்பவங்கள் நடந்தன.
அவரும், Frente Amplioவும் "அவர்களால் முடிந்தளவிற்கு அனைத்தையும்" செய்திருப்பதாகவும், இந்த வேலைநிறுத்தம் "நாளிதழ்களுக்கும், செய்திகளுக்கும் மட்டும் தான் தீனி" அளித்திருப்பதாகவும் கூறி முஜிக்கா இந்த வேலைநிறுத்தத்தை நிராகரித்தார்.
அர்ஜென்டினா காகித ஆலையில் காகித தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
அக்டோபர் 6இல் அர்ஜென்டினாவின் Papel Prensa காகித ஆலை தொழிலாளர்கள் கூலிப் பிரச்சினைகளுக்காக ஆலையை முடக்கினர். El Clarín மற்றும் La Nación ஆகிய நாளிதழ்கள் உட்பட பத்திரிகைகளுக்கு இந்த ஆலை செய்திதாள்களை உருவாக்குகிறது. இந்த வேலைநிறுத்தம் உற்பத்தியை மட்டும் நிறுத்தவில்லை, மாறாக, வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லப்படும் வினியோகத்தையும் தாமதப்படுத்தி இருந்தது.
ஆலையில் நியமிக்கப்பட்டிருக்கும் சுமார் 500 தொழிலாளர்களில் 300 நபர்கள் காகித தொழிற்துறை சங்கத்தின் (Paper Industry Union) உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஆண்டின் மார்ச்சில் இருந்து அடுத்த ஆண்டின் மார்ச் வரையில் 23 சதவீத சம்பள உயர்விற்குச் தொழிற்சங்கம் ஒத்துக்கொண்டிருந்த போதினும், பணவீக்க விகிதம் இந்த உயர்வை முழுங்கிவிட்டது. சுமார் 250 தொழிற்சங்க உறுப்பினர்கள் இருந்த ஒரு சபையில், தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடர வாக்களித்தனர். நிறுவனம் அளிக்கும் 3 சதவீதத்திற்கு எதிர்பலமாக, இந்த தொழிலாளர்கள் 20 சதவீத உயர்வைக் கோரி வருகிறார்கள். வெள்ளியன்று, தொழிலாளர்துறை அமைச்சகத்தில் நடந்த ஒரு கூட்டமும் இந்த வேறுபாடுகளைத் தீர்க்கத் தவறியது.
தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப எச்சரித்து, நிறுவனம் 300 தந்திகளை அதன் தொழிலாளர்களுக்குச் சமீபத்தில் அனுப்பி இருந்தது.
தற்போது ஜேர்மனியில் இருக்கும் ஜனாதிபதி Cristina Fernández de Kirschner, தொழிற்சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
பணவீக்க விகிதம் குறித்த நிறுவனத்தின் முறையீடுகள் ட்விட்டர் மூலமாக கேட்கப்பட்ட போது, கூலிகளை அதிகரிப்பதில் உள்ள அதன் வரம்புகளை அது முறையிடுகிறது. Papel Prensa ஆலையின் ஊதியங்கள் ஏற்கனவே நியாயமாக இருப்பதாகவும், காகித ஆலைகளில் குறைந்தபட்ச கூலி சுமார் 1,800 பெசோஸாக (அதாவது 454 அமெரிக்க டாலராக) இருக்கும் போதினும், PPஇல் குறைந்தபட்ச கூலி ஏறத்தாழ 4,000 பெசோஸாக (1,000 அமெரிக்க டாலர்) இருப்பதாக நிறுவனம் முறையிடுகிறது.
El Clarín மற்றும் La Nación இரண்டும் தொழிலாளர்களுக்கு எதிராக அவற்றின் மூலப்பொருள் வழங்குனர்களை ஆதரிக்கின்றன என்பது மட்டுமில்லாமல், Papel Prensaவிலும் அவற்றின் பங்குகளைக் கொண்டிருக்கின்றன. இரண்டு நாளிதழ்களுமே வரவிருக்கும் தேர்தல்களில் Fernández de Kirschnerஐ எதிர்க்கின்றன.
El Clarín குறிப்பிட்டதாவது: “இந்த பதட்டங்களுக்கு இடையில், 'ஒருமித்த கருத்து எட்டப்படவில்லையெனில், Commerce Guillermo Morenoஇன் செயலாளர் அழைக்கப்படக்கூடும் என்று எதிர்ப்பார்ப்பதாக கூறி தொழிற்சங்க வழக்கறிஞர் நழுவுகிறார். இந்த முரண்பாடுகளுக்குப் பின்னால் காசா ரோசாடாவின் நலன்கள் இருப்பதாக தெரிகிறது என்ற ஆய்விற்கு Commerce Guillermo Moreno முட்டுக்கொடுக்கிறது.” காசா ரோசாடா அல்லது "பின்க் ஹவுஸ்" என்பது ஜனாதிபதி அலுவலகங்களின் பதவி ஆகும்.
இந்த அறிக்கையானது, நடந்து கொண்டிருக்கும் ஏனைய பிரச்சினைகளையும் எடுத்துரைக்கிறது. ஒருதலைபட்சமாக எழுதுகிறது என்று Fernándezஆல் குறைகூறப்படும் Grupo Clarin பத்திரிகை, அதன் உண்மையான உரிமையாளர்களான Grupo Graiverயிடம் இருந்து 1976இல் இராணுவ சர்வாதிகாரத்தின் சிக்கல்களுடன் La Razónஆலும், மேலும் இரண்டு பத்திரிகைகளாலும் வாங்கப்பட்டது. அந்த பத்திரிகையின் உரிமையாளர் Lida Papleo Graiver பின்னர், சர்வாதிகாரத்தால் கடத்தப்பட்டார். இந்த ஆண்டின் ஆகஸ்ட் 24ல், Papel Prensaஇன் மனிதாபிமான மற்றும் சட்டவிரோத கையகப்படுத்தலுக்கு எதிராக மூன்று அநியாயமான குற்றங்களைக் காரணங்காட்டி அரசாங்கம் ஒரு வழக்கு பதிவுசெய்தது.
அமெரிக்கா
பல்வேறு மாகாணங்களில் சேவை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் இறங்குகிறார்கள்
ஜோர்ஜியா, லூசியானா மற்றும் ஓஹியாவின் சேவை தொழிலாளர்கள் கடந்த வாரம் பிரெஞ்சு பன்நாட்டு பெருநிறுவனமான சொடெக்ஸோவிற்கு எதிராக, குறைந்த சம்பளம் மற்றும் மோசமான வேலையிட நிலைமைகளுக்காக போராட்டத்தில் இறங்கினார்கள். அட்லாண்டா, ஜோர்ஜியாவிலிருக்கும் மோர்ஹவுஸ் கல்லூரியின் உணவக தொழிலாளர்கள் (cafeteria workers) ஏற்கனவே கூலிகள் மற்றும் நலன்கள் மீது செய்யப்பட்ட அநியாயமான தொழிலாளர் நடைமுறைகளுக்காக வெளிநடப்பு செய்தார்கள்.
பாடசாலை பொறுப்பாளர்களும், ஏனைய தொழிலாளர்களும் அக்டோபர் 1இல் அவர்களின் ஒப்பந்தம் முடிவுற்றதில் இருந்து தொழிற்சங்க பேச்சுவார்த்தைகள் இல்லாததை எதிர்க்க, லூசியானாவிலுள்ள சுமார் 52 Recovery School District பாடசாலைகளில் இருந்து வெளியேறி ஊர்வலம் நடத்தினர். “வியாபார தேவைகள் மாறுவதாக" கூறி சொடெக்ஸோ வேலைக்குறைப்புகளை செய்யத் தொடங்கியதால், எஞ்சிய தொழிலாளர்கள் மீது பணிச்சுமை அதிகரித்தது. இத்துடன், ஒருமணி நேரத்திற்கு $8 முதல் $12 டாலர் வரைக்குமான வறிய மட்டத்தில் கூலிகளையும் அவர்கள் முகங்கொடுக்கிறார்கள். உணவுச்சேவை தொழிலாளர்கள், ஒஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட விளையாட்டின் போது ஒரு சிறிய வேலைநிறுத்தத்தை நடத்தினார்கள். OSU மைதானத்தில் சொடெக்ஸோவின்கீழ் உணவு சலுகைகளையும், சுத்திகரிப்பு சேவைகளையும் ஒரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முழு-நேரமாகவும், பகுதி-நேரமாகவும் அளிக்கிறார்கள். சொடெக்ஸோ 80 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 2009இல், அதன் வருவாய் $20.6 பில்லியனாக இருந்தது.
இதற்கிடையில், துலானே மற்றும் லயோலாவின் லூசியானா பல்கலைக்கழகங்களில் உணவுச்சேவை மற்றும் ஏனைய தொழிற்சங்கத்தில்-அல்லாத தொழிலாளர்கள் நிறுவனத்தின் அநியாயமான நடைமுறைகளைக் குற்றஞ்சாட்டி போராட்டங்களை அங்கீகரித்திருக்கிறார்கள்.
புளோரிடா தொழிற்சாலை விபத்தில் தொழிலாளரின் கை பறிபோனது
புளோரிடாவின் சைப்ரஸில் உள்ள ஸ்பானிஷ் ட்ரையல் லூம்பர் (Spanish Trail Lumber) ஆலையில் அக்டோபர் 8இல், மண்தோண்டும் சுருள்கம்பியில் ஒரு தொழிலாளரின் கை மாட்டிக் கொண்டதால், அவருடைய கரம் சிகிச்சைக்குப் பின் நீக்கப்பட்டது. மருத்துவமனைக்குக் கூட்டி செல்லப்பட்ட அந்த நபர், மோசமான நிலைமையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டார். இது இந்த ஆலையில் சமீபத்தில் நடந்திருக்கும் இரண்டாவது நிகழ்வாகும்.
2009 மார்ச்சில், ஒரு பிளேனர் இயந்திரத்தால் 12 அடி, 2x4 அளவுள்ள பொருள் தூக்கப்பட்ட போது, 48 வயதான ரூபஸ் டுட்லே கொல்லப்பட்டார். மரத்தின் துண்டு டுட்லேயின் உடலில் குத்தியது. அவர் இடத்திலேயே மரணமடைந்தார்.
கனடா
திட்டமிடப்பட்டிருந்த பலசரக்குக்கடை தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொழிற்சங்கம் கைவிட்டது
தெற்கு ஒடாரியோவிலுள்ள லொப்லாவிற்குச் (Loblaw) சொந்தமான ஒன்பது பலசரக்குக்கடைகளில் அக்டோபர் 8இல் நடத்த இருந்த ஒரு வேலைநிறுத்தம், ஓர் ஒப்பந்தத்தின் மீது இரண்டாவது வாக்கெடுப்பு நடத்துவதென்று தொழிற்சங்க தலைவர்கள் தீர்மானித்ததைத் தொடர்ந்து இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஏற்கனவே தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட்டு, முதன்மை பதவிகளில் இருப்பவர்களிடம் ஒரு பெரும் எதிர்ப்பையும் தூண்டியிருந்தது.
ஆயிரத்து எண்ணூறு தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாக ஒப்பந்தத்தைக் கைவிட்டு, அந்த பெரும் பலசரக்கு வியாபார நிறுவனத்தின் முக்கியமான ஒரு சூழ்நிலையில்—வாரயிறுதியில் நடைபெற இருந்த நன்றிகூறும் நிகழ்வின் போது—வேலைநிறுத்தத்தில் இறங்க இருந்தார்கள். ஆனால் United Food and Commercial Workers union (UFCW) பேச்சுவார்த்தையாளர்கள் எந்தவிதமான வெளிப்படையான விளக்கத்தையும் அளிக்காமல் இந்த வேலைநிறுத்தத்தைக் கைவிட அழைப்புவிடுத்தார்கள்.
அந்த மாகாணத்திலிருக்கும் ஏனைய பலசரக்குக் கடைகளின் தொழிற்சங்க-தொழிலாளர்கள் கடந்த வாரம் அளிக்கப்பட்ட அதே சலுகை-நிறைந்த ஒப்பந்தத்தை, சங்கம் ஒருமனதாக பரிந்துரை அளித்தது என்பதற்காக விருப்பமில்லாமல் ஏற்றார்கள். வேலைநிறுத்தம் ஒரு "சிக்கலான முடிவாக" உள்ளது என்று கூறி அந்த வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதற்கான காரணத்தை தொழிற்சங்கம் நியாயப்படுத்தியது. மேலும் அரசு-பார்வையில் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படும் வரையில் அதே பழைய ஒப்பந்தமே நடைமுறையில் இருக்கும் என்றும் அது உறுதியளிக்கிறது. |