சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

  WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

European politicians deny US claims of terror threat

ஐரோப்பிய அரசியல்வாதிகள் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த அமெரிக்க கூற்றுகளை மறுக்கின்றனர்

By Stefan Steinberg
7 October 2010

Use this version to print | Send feedback

ஐரோப்பாவில் எங்கோ வெகுசீக்கிரத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறும் சமீபத்திய அமெரிக்க கூற்றுகளை ஐரோப்பாவின் முன்னணி அரசியல்வாதிகளில் பலரும் வெளிப்படையாக மறுத்துள்ளனர். சென்ற ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க வெளியுறவுத் துறை விநியோகித்திருந்த ஒரு தெளிவில்லாத அறிக்கையில், ஐரோப்பாவிற்கு பயணம் செய்யும் அமெரிக்கர்கள் மீது அல்கெய்தாவுடன் தொடர்புபட்ட பயங்கரவாத அமைப்புகள் மூலமாக தாக்குதல் நிகழக்கூடிய அபாயம் இருப்பதாய் கூறப்பட்டிருந்தது. வெளியுறவுத் துறையின் அறிக்கையில் எந்த குறிப்பிட்ட நாட்டின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

அதே நாளில் ரூபர்ட் முர்டோக்குக்கு சொந்தமான ஊடகங்களான அமெரிக்காவில் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியும் இங்கிலாந்தில் நியூஸ் ஆஃப் தி வேர்ல்டும் குறிப்பிட்ட ஐரோப்பிய நாடுகளில் மும்பை பாணி பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கும் சாத்தியம் குறித்து எச்சரிக்கும் பரபரப்பான தகவல்களைக் கூறின. இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளை பயங்கரவாத தாக்குதல்களுக்கான “பெரும் அச்சுறுத்தல்” கொண்ட இலக்குகள் என்று அவை கூறின. ஈபிள் கோபுரம், பாரிஸின் நோத்ர் டாம் கதீட்ரல், பேர்லின் பிரதான இரயில் வண்டி நிலையம், அதன் தொலைக்காட்சி கோபுரம், மற்றும் அதன் பிரதான விடுதியான ஆத்லான் என புகழ்பெற்ற சுற்றுலாப் புகழ் இடங்களின் பெயர்களையும் அவை குறிப்பிட்டன.

பிரிட்டன், ஜப்பான், சுவீடன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் அமெரிக்க சைகையை சிரத்தையாய் பின்பற்றி, ஐரோப்பாவில் பயணம் செய்யும் தங்களது குடிமக்களுக்கும் கூடுதல் முன்னெச்சரிக்கைகளுக்கான எச்சரிக்கைகளை வழங்கின. இந்த வார ஆரம்பத்தில், பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் ஏர்வே மோறன் மற்றும் உள்துறை அமைச்சர் Brice Hortefeux ஆகியோரும் அமெரிக்க முன்முயற்சியை பின்பற்றி ஐரோப்பாவில் ஒரு புதிய பயங்கரவாத அச்சுறுத்தல் எழுந்திருப்பதன் மீதான தங்களது கவலையை வெளிப்படுத்தினர். தொலைபேசி வழி மிரட்டல்களைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் இரண்டாம் முறையாக பிரெஞ்சு போலிசார் ஈபிள் கோபுரத்தில் இருந்தோரை வெளியேற்றினர். செவ்வாயன்று பிரான்சின் பாதுகாப்பு படையினர் இஸ்லாமிய தீவிரவாத வட்டங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி 11 பேரைக் கைது செய்தனர்.

ஆயினும் மற்ற முன்னணி ஐரோப்பிய அரசியல்வாதிகள் பலரும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் கூற்றுகளை வெளிப்படையாக மறுத்துள்ளனர். ஜேர்மன் கொன்ராட் அடினவர் அறக்கட்டளையால் செவ்வாயன்று (அக்டோபர் 6) நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதித்துறை ஆணையரான விவியேன் ரேடிங் ஐரோப்பாவில் உடனடி பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் இருப்பதை மறுத்தார்.

ஐரோப்பாவுக்கான அமெரிக்காவின் பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கை எந்த புதிய பாதுகாப்பு அபிவிருத்திகளையும் அடிப்படையாகக் கொண்டதில்லை என்றும் எனவே கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் அவசியப்படவில்லை என்றும் ரேடிங் கூட்டத்தில் தெரிவித்தார்: “அமெரிக்க பயங்கரவாத தாக்குதல் விடயத்தைப் பொறுத்தவரை, சில ஐரோப்பிய அமைச்சர்கள் ஏற்கனவே பதிலளித்து விட்டார்கள் - புதிதாக எதுவுமில்லை என்றும், இந்த அச்சுறுத்தல்கள் பல ஆண்டுகளாகவே இருந்து வருவன தான் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.”

”ஐரோப்பிய அமைச்சர்கள்” என்று ரேடிங் கூறுகையில் குறிப்பாக ஜேர்மனிய உள்துறை அமைச்சரான Thomas de Maizière (கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்) கூறிய கருத்துகளைத் தான் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அமைச்சர் திங்களன்று அமெரிக்க எச்சரிக்கையைத் தொடர்ந்த உஷார்நிலை பரபரப்பு வழக்கத்திற்கு எதிராக எச்சரித்தார். புதனன்று வெளியிட்ட உத்தியோகப்பூர்வ அரசாங்க அறிக்கை ஒன்றில் De Maizière மீண்டுமொரு முறை வலியுறுத்தினார்: “சுருக்கமாய் சொல்வதானால், ஜேர்மனியில் இப்போது உடனடி தாக்குதல்களுக்கான உறுதியான அறிகுறிகள் எதுவும் இல்லை.”

ரேடிங் மற்றும் De Maizière அறிக்கைகள் வார இறுதியில் அமெரிக்க வெளியுறவுத் துறையால் கூறப்பட்ட கூற்றுகளை தெளிவுபட மறுத்திருக்கின்றன. அவர்களது கருத்துகளில் இருந்த பட்டவர்த்தனமான தன்மை அசாதாரணமானது, ஆனால் அது அமெரிக்க அறிக்கைகள் மீது ஏராளமான பாதுகாப்பு நிபுணர்கள் வெளியிட்டுள்ள சந்தேகங்களின் அதே வரிசையில் நிற்கிறது. ஆப்கானிஸ்தானில் ஜூலை மாதத்தில் நேட்டோ படைகளால் பிடிக்கப்பட்ட 36 வயது ஜேர்மானியர் ஒருவரது வாக்குமூலமே சமீபத்திய அமெரிக்காவிடமிருந்தான பயங்கரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கைக்கு மூலமாகக் கருதப்படுகிறது. அகமது சித்திக் என்னும் அந்த நபர் இப்போது காபூலுக்கு அருகிலுள்ள அமெரிக்க இராணுவத்தின் பக்ராம் வான்படைத் தளத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார், அங்கு அமெரிக்க அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய அமெரிக்க நடைமுறையைக் கொண்டு பார்த்தால் சித்திக் அநேகமாய் சித்திரவதை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார். சித்திக்கிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ஒரு பயங்கரவாத செயல்பாட்டுடன் தொடர்புபட்ட எந்த உறுதியான நடவடிக்கைகளுக்கான சான்றையும் வழங்கவில்லை என்பதையே உளவுத் துறை ஆதாரங்களிடம் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்கள் காட்டுவதாக ஏராளமான பாதுகாப்பு நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.

சித்திக்கிடம் பேசுவதற்கு ஒரு ஜேர்மன் அதிகாரியும் அனுமதிக்கப்பட்டிருந்தார். சித்திக்குடனான அவரது நேர்காணலின் அடிப்படையில், உடனடியான பயங்கரவாத தாக்குதல் நிகழப் போவதாய் நம்புவதற்கான முகாந்திரங்கள் எதுவும் இல்லை என்று அந்த அதிகாரி ஜேர்மன் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்திருந்தார். ஜேர்மன் ஊடகங்களிலான சில கருத்துகளும் ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதலுக்கான சாத்தியத்தை தணித்தே மதிப்பிட்டிருந்தன. அமெரிக்கா-தலைமையிலான பயங்கரவாத பீதிகள் எல்லாம் பிரதானமாக உள்நாட்டு நோக்கத்திற்கே சேவை செய்ததை அவை குறிப்பிட்டன.

உடனடியான பயங்கரவாத தாக்குதல் அபாயம் குறித்து ஜேர்மன் உள்துறை அமைச்சர் புதனன்று தான் தனது மிக சமீபத்திய மறுப்பை வெளியிட்டிருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து திங்களன்று நடத்தப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் ஏராளமான ஜேர்மனிய குடிமக்கள் கொல்லப்பட்டதாய் தகவல்கள் வந்தன.

ஊடக தகவல்களின் படி, ஆப்கானிஸ்தானுடனான பாகிஸ்தானின் எல்லைக்கருகில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அமைந்திருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மறைவிடம் ஒன்றின் மீது அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் பல ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஜேர்மன் குடிமக்களின் மரணங்கள் குறித்த ஆரம்ப தகவல்கள் பெருமளவில் முரண்பட்டதாய் இருந்தன. ராய்டர்ஸ் மற்றும் DPA ஆகிய இரண்டு முன்னணி செய்தி நிறுவனங்கள் எட்டு ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டதாய் கூற, மற்ற இரண்டு நிறுவனங்களோ (அசோசியேடட் பிரஸ் மற்றும் AFP) ஐந்து ஜேர்மனியர்கள் எனக் குறிப்பிட்டன. தாக்குதலில் பலியான மற்ற நாட்டினர் குறித்தும் முரண்பட்ட செய்திகள் வெளியாயின.

தாக்குதலின் இலக்கு குறித்தும் மாறுபாடான தகவல் வெளிவந்தது. ஆளில்லா விமானத் தாக்குதலின் இலக்கு ஒரு தனியார் வீடு தான் என்று அநேக செய்திகள் கூறிய அதே சமயத்தில், தாக்குதல் தொடுக்கப்பட்டு முழுமையாய் சிதைக்கப்பட்ட கட்டிடம் ஒரு மசூதி என்று ராய்டர்ஸ் கூறியது. ஏவுகணை தாக்கிய சமயத்தில் மக்கள் மசூதியில் தொழுவதற்காக கூடியிருந்ததாக ஒரு உள்ளூர்வாசி அந்த செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார். பின் தாக்குதல் தளம் வெளிப்படையாக கிளர்ச்சியாளர்களின் பாதுகாப்பு சூழுகைக்குள் கொண்டு வரப்பட்டது. ஐரோப்பாவில் உடனடியான பயங்கரவாத தாக்குதல் குறித்த அமெரிக்க கூற்றை நிராகரித்த ஜேர்மன் உள்துறை அமைச்சர் திங்களன்றான ஆளில்லா விமானத் தாக்குதல் சம்பவம் குறித்த அமெரிக்க தகவல் குறித்தும் பகிரங்கமாய் வினா எழுப்பியிருந்தார்.

De Maizière புதனன்று Deutschlandfunk வானொலிக்கு கூறினார்: “என்னை ஆச்சரியப்படுத்துவது என்னவென்றால் ஆளில்லா விமானம் மூலமான இந்த தாக்குதல் அணுகமுடியா பகுதியில் நேற்றுக்கு முந்தைய நாள் நிகழ்ந்திருக்கிறது என்பது வெளிப்படை, அப்படியிருந்த போதிலும் அடையாள ஆவணங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றனவே”. ஜேர்மனியில் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கான சாத்தியம் “அனுமானமாகவே” தொடர்வதாய் அதே நேர்காணலில் அவர் அறிவிக்கச் சென்றார்.

De Maizière (ரேடிங் போலவே) ஒரு கன்சர்வேடிவ் அரசியல்வாதியும் ஆப்கானிஸ்தானில் வலுவிலான அமெரிக்க போரை தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கும் ஜேர்மன் அரசாங்கத்தின் ஒரு முன்னணி உறுப்பினரும் ஆவார். அப்படியிருந்த போதிலும், போர் ஒரு படுதோல்வியாக மாற அச்சுறுத்தும் நிலையில், பாகிஸ்தானை ஒரு புதிய யுத்த களமாக மாற்றும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு அந்நாட்டிற்குள் எதிர்ப்பு பெருகிக் கொண்டிருக்கும் சமயத்தில், சமீபத்திய அமெரிக்க பயங்கரவாத பீதி மீதான De Maizière மறுப்புகள் அட்லாண்டிக் கடந்த கூட்டாளிகளுக்கு இடையே பதட்டங்கள் பெருகுவதைச் சுட்டிக் காட்டுகின்றன.

துருப்புகளுக்கான உறுதிப்பாடுகளை அதிகரிப்பதற்கும் அதே சமயத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் கூடுதல் மூர்க்கமான இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவும் சமீபத்திய காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளோடு சேர்த்து ஜேர்மனி மீதும் அமெரிக்கா தொடர்ந்த நெருக்குதலளித்து வருவதைத் தொடர்ந்து உரசல் ஏற்கனவே எழுந்திருந்தது. இப்போது வரை, ஜேர்மனிய அரசாங்கம் தொடர்ந்து பின்வாங்குவதும் அமெரிக்க கோரிக்கைகளுக்கு இடமளிக்க முயல்வதுமாய் உள்ளது.

மிக சமீபத்தில், மரபணு மாதிரிகள், கைரேகை விவரங்கள், குற்றவியல் பதிவேடுகள் மற்றும் பிற விவரங்கள் கொண்ட ஐரோப்பிய போலிஸின் கூடுதல் தரவுத்தளங்களுக்கான அணுகலை அமெரிக்க முகமைகளுக்கு வழங்க வேண்டும் என்பதான நெருக்குதலை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மீது அமெரிக்கா தீவிரமாய் அளித்தது, அத்தனையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்கிற பெயரில். ஜேர்மனியும் ஏராளமான பிற ஐரோப்பிய நாடுகளும் மீண்டும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் விருப்பங்களுக்கு தலைவணங்கியுள்ளன.

ஆயினும், இப்போது ஐரோப்பாவில் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்கவிருப்பதை முறியடிக்க வேலை செய்வதாகக் கூறி பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீசுவதை தீவிரப்படுத்தியிருப்பதை நியாயப்படுத்த அமெரிக்க அதிகாரிகள் தலைப்படுகின்றனர். தங்களது சொந்த உள்நாட்டு நோக்கங்களுக்காக அமெரிக்க பயங்கரவாத பீதி பிரச்சாரத்தை பெற்றுக் கொள்ளும் நாடுகள் - இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்றவை - பாகிஸ்தானுக்குள் அமெரிக்க இராணுவ விரிவாக்கத்திற்கான தங்களது ஆதரவை தானாக அளிக்கின்றன.

பெருங்கேடாய் முடிந்து, ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் உண்மையிலேயே பயங்கரவாத வழி பதிலிறுப்பு அபாயத்தைக் கொண்டு வந்து விட அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிலான அமெரிக்க போரை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதில் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் சில பிரிவுகளிடையே தயக்கம் பெருகி வருகிறது என்பதையே அமெரிக்காவின் பயங்கரவாதப் பீதி பிரச்சாரத்தை மறுத்து ரேடிங் மற்றும் De Maizière அளித்திருக்கும் சமீபத்திய கருத்துகள் சுட்டிக் காட்டுகின்றன.