WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : கலை
விமர்சனம்
Cinema as an imperialist weapon: Hollywood and World War I
ஏகாதிபத்திய ஆயுதமாக சினிமா: ஹாலிவுட்டும், முதலாம் உலக யுத்தமும்
By Max Alvarez
5 August 2010
Back
to screen version
ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்களின் உதவியுடன், அமெரிக்க ஆளும் மேற்தட்டால் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலினால் வெடித்த ஒரு யுத்தமே - முதலாம் உலக யுத்தம் (1914-1918). அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆற்றல்மிக்க விரிவாக்கத்தாலும், உலகளாவிய பொருளாதாரத்தை அது அதிகப்படியாக சார்ந்திருந்ததன்மையாலும் உந்தப்பட்டிருந்ததால், ஏப்ரல் 1917இல், அந்நாடு தாமதமாக தான் அந்த இரத்த ஆற்றிற்குள் களமிறங்கியது.
ஜேர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ஒட்டோமன் பேரரசு ஆகியவற்றை ஒருபுறத்திலும், ஏனைய நேச நாடுகளை (இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா) மற்றொருபுறத்திலும் கொண்டிருந்த முதலாம் உலக யுத்தத்தில், அந்த பெரும் சக்திகளுக்கு இடையிலான மோதல்களை அமெரிக்கா விலகியிருந்து பார்க்க விரும்பவில்லை.
தன்னுடைய ஏகாதிபத்திய திட்டத்தைப் பொதுமக்களிடம் விற்பது தான் உட்ரோவ் வில்சனின் நிர்வாகம் முகங்கொடுத்திருந்த சவாலாக இருந்தது. இராணுவ நடவடிக்கைக்கு இருந்த பரந்துபட்ட மக்கள் எதிர்ப்பு, அமெரிக்காவில் இருந்த சோசலிச இயக்கத்தின் இடதுசாரி கூறுகளுக்கு ஒருசிலசமயங்களில் ஆதாயமாக இருந்தது என்று வரலாற்றாளர் ஹோவர்ட் ஷின் குறிப்பிட்டுள்ளார். பெருமளவிலான மக்களைக் கொண்ட யுத்த-எதிர்ப்பு பேரணிகள் நடத்திய அவை, அவற்றின் எதிர்ப்பின் விளைவாக முனிசிப்பல் தேர்தல்களில் சில வெற்றிகளைப் பெற்றன. ஆனால் இறுதியில் யுத்தம், ஐரோப்பிய சோசலிசவாதிகளைச் செய்தது போலவே அமெரிக்க சோசலிசவாதிகளையும் பிரித்தது. எடுத்துக்காட்டாக, டைஸ் குழுவிற்கான
(Dies Committee)—பின்னர் இது House Committee on Un-American Activities என்று மாறியது—தம்முடைய 1938 உறுதிமொழி பத்திரத்தில் சோசலிச எழுத்தாளர் உப்டொன் சின்கிளெயர் (Upton Sinclair), முதலாம் உலக யுத்தத்தில் அரசாங்கத்தின் நுழைவிற்கு தம்முடைய ஆதரவை அறிவிப்பதற்காக 1917'இல் சோசலிச கட்சியிலிருந்து தாம் விலகிவிட்டதாக குறிப்பிட்டார். [1]
அதன் இராணுவ தலையீட்டிற்கான மிகவும் மதிப்பார்ந்த மற்றும் ஜனநாயக உந்துதல்களை ஸ்திரப்படுத்துவது மட்டும் தான், மக்களின் யுத்த-ஆதரவை திரட்டுவதற்கான ஒரே வழியாக அமெரிக்க அரசாங்கத்திற்குத் தெரிந்தது. அமெரிக்க முதலாளித்துவத்திடம் அப்போதிருந்த மிதமிஞ்சிய செல்வவளம், ஆதாரவளம் மற்றும் பொருளாதார ஆற்றல் தான், வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களை நோக்கி பெருந்தன்மையை போதிக்க, வில்சனின் ஜனநாயக நிர்வாகத்திற்கு சாத்தியக்கூறை ஏற்படுத்தி இருந்தது. வில்சனுக்கு மிக வசதியாக, அந்நாடு ஏற்கனவே ஒரு பிரச்சார இயந்திரத்தை அதனிடத்தில் கொண்டிருந்தது: அதாவது, அமெரிக்க திரைப்படத்துறையைக் கொண்டிருந்தது. 1917-1918'இன் போது என்ன நிகழ்ந்ததென்றால், ஒரு தீவிர யுத்த-ஆதரவும், இப்போதுவரை கொண்டு செல்லப்பட்டு கொண்டிருப்பதைப் போன்றே, திரைப்படங்கள் மூலமான மக்கள்தொடர்பு பிரச்சாரங்களும் இருந்தன. இறுதி விளைவாக அமெரிக்க (ஹாலிவுட்) முதலாளித்துவத்திற்கு வெற்றியும், மனிதயினத்திற்கு ஒரு துக்ககரமான நிகழ்வும் நிகழ்ந்தது. உலகமெங்கும் செத்துமடிந்து கொண்டிருந்த மில்லியன்கணக்கானவர்களோடு, காயமடைந்த 320,000 அமெரிக்கர்களும் சேர்ந்தார்கள்.
முதலாம் உலக யுத்தத்தில் அமெரிக்கா நுழைந்த அந்த காலக்கட்டத்தில், பாராமவுண்ட், ஃபாக்ஸ், யூனிவர்சல், விடாகிராஃப் (இது தான் வார்னர் பிரதர்ஸின் அடித்தளம்), ஸ்டூடியோ ஆஃப் மெட்ரோ மற்றும் கோல்ட்வென் (இது MGMஇன் மையக்கரு) ஆகியவை ஏற்கனவே முழுவீச்சில் இருந்தன. ஒவ்வொரு நிறுவனமும் ஒன்றோ அல்லது அதற்குமேற்பட்ட தயாரிப்பு அரங்கங்களையோ கொண்டிருந்தன; அவை பிரபலமான நடிகர்கள், நடிகைகளின் கால்ஷீட்டையும் பெற்றிருந்தன; படைப்புத்திறன்மிக்க நபர்கள் பரந்த விளம்பரம்/பிரச்சாரம்/வினியோக கருவிகளின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்கள். குறிப்பிடத்தக்க வகையில், இத்தகைய நிலைமைகளின்கீழ் கலைத்துவ வெளிப்பாடுகள் மறைக்கப்பட்டு இருக்கவில்லை. உண்மையில், 1910'களின் போது துடிப்புமிக்க, உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகள் நிறைய வெளியாகின. இது
D.W. Griffithஇன் Intolerance மற்றும் லூயிஸ் வெப்பரின் The Hypocrites ஆகியவற்றின் (இரண்டுமே 1916'இல் வெளியானவை) சகாப்தமாக இருந்தது. 1917'இன்
Easy Street மற்றும் The Immigrant ஆகியவற்றில் தம்முடைய சிறப்பான நகைச்சுவை காட்சிகளினால் வறுமையையும், வர்க்க அமைப்புமுறையையும் வெளிப்படுத்தி இருந்த நடிகரும், இயக்குனருமான சார்லின் சாப்ளினின் சகாப்தமாக அது இருந்தது. ஜோன் ஃபோர்டு, பிரான்க் போர்ஜாஜ் மற்றும் ரவுல் வால்ஷ் போன்றவர்களின் குறிப்பிடத்தக்க தொழில்வாழ்க்கையை அறிமுகப்படுத்திய தசாப்தமாக அது இருந்தது. 1910'களில் கூட, மக்கள்தொடர்புதுறையின் பெரும் குறுக்கீடுகள் இல்லாமலேயே, அரங்க திரைப்படத்தை உருவாக்குவது அப்போது சாத்தியமாக இருந்தது.
யுத்த-எதிர்ப்பாளரான Intolerance படத்தின் இயக்குனர், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் யுத்த ஆதரவு படமான
Hearts of the World ஐ உருவாக்கும் நிலைக்குத் திரும்பினார் என்பது அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர்களும், 1916க்கு பிந்தைய அவர்களின் பெருநிறுவன முதலீட்டாளர்களும் அரசியல், பொருளாதார அழுத்தங்களை முகங்கொடுத்திருந்தார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. முதல் உலக யுத்தத்தின் முதல் மூன்று ஆண்டுகளின் போது, சில குறிப்பிட்ட ஐரோப்பிய மாகாணங்கள் படப்பிடிப்பிற்குத் திறந்துவிடப்படாததாலும், யுத்த இழப்புகளாலும், புதிய நெறிமுறைகளாலும் மற்றும் யுத்தம் சார்ந்த பேரழிவுகளாலும் அமெரிக்க திரைப்படத்துறை இழப்புகளைச் சந்தித்தது. தந்திரம்மிக்க ஸ்டூடியோ உரிமையாளர்கள் யுத்தத்தின் நீண்டகால மதிப்பை புரிந்து கொண்டார்கள். ஐரோப்பிய திரைப்பட நிறுவனங்களைப் போலில்லாமல், அமெரிக்க ஸ்டூடியோக்கள் ஒரு சிதைவுறாத உள்நாட்டு சந்தையை அனுபவித்ததுடன், யுத்தத்தின் விளைவாக வெளிநாட்டு திரைப்படங்களின் வருகையும் குறையும் என்பதைக் கணித்தார்கள். ஜேர்மன், இத்தாலிய மற்றும் பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்புகள் சரிவடைந்த நிலையில், முதன்முறையாக ஹாலிவுட் அதன் சொந்த சர்வதேச சந்தையைக் கண்டது. [2]
1916 ஜனவரி 27'இல், சுமார் 1,000 மக்கள் கூடியிருந்த திரைப்பட வர்த்தக ஆணையத்தின் (Motion Picture Board of Trade) விருந்தில் ஜனாதிபதி வில்சன் அதை புகழ்ந்த போது தான், அமெரிக்க திரைப்படத் தொழிலுக்கும், வாஷிங்டன் D.C.க்கும் இடையிலான முக்கியத்துவமிக்க முதல் கூட்டணி ஏற்பட்டது. கோடக்கின் ஜோர்ஜ் ஈஸ்ட்மென், பாராமவுண்ட்டின் அடோல்ப் ஜூகூர் மற்றும் சாமுவேல் கோல்ஃப்ஷ் (பின்னர் இவர் கோல்ட்வென் என்று பெயர் மாற்றிக்கொண்டார்) போன்ற தொழில்துறை பிரபலங்கள் விருந்தினர் பட்டியலில் உள்ளடங்கி இருந்தார்கள். அமெரிக்க மாகாணங்களைப் பாதுகாக்க இராணுவ தயாரிப்பின் தேவை குறித்து வரவேற்புரை வழங்கி விட்டாகிராஃபின் J. Stuart Blackton பேசினார். அத்துடன்,
“So fire your forges and dam the bills/For the wings of peace must have iron quills” என்ற வரிகளில் முடியும் யுத்தத்திற்கு ஆதரவான ஒரு கவிதையும் அவர் மேற்கோளிட்டுக் காட்டினார். அந்த இரவு கூட்டத்தினரை நோக்கி வில்சன் பேசும் போது, திரைப்படங்களில் உண்மைக் கதைகளைக் கையாள்வதில் இருந்த தெளிவற்ற கருத்துக்களின் மீது அவர் அவருடைய குறிப்புகளை மிக குறைவாகவே வெளியிட்டார். எந்த நிகழ்விலும், தொழில்துறை தலைவர்களுக்கும், அவர்களின் தலைமை நிர்வாகிகளுக்கும் இடையிலான சந்திப்பானது, துடிப்பார்ந்த அமெரிக்க திரைப்பட வர்த்தகத்திற்குத் தேவையான சட்டமுறைமைகளை (legitimacy) வழங்கியது. [3]
உண்மையில், பல ஸ்டூடியோ நிர்வாகிகள் புலம்பெயர்ந்திருந்தார்கள் என்பதால், தாங்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் உணர்ந்தார்கள். யூனிவர்சல் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் (பின்னர் இது யூனிவர்சல் பிக்சர்ஸ் என்று மாறியது) தலைவர் ஜேர்மன் கார்ல் லெம்லைப் (German Carl Laemmle) பொறுத்தவரையில், பல்வேறு பிரிட்டிஷ் செய்திதாள்கள் 'ஹாலிவுட் திரைப்படங்களுக்கு ஜேர்மன் மூலதனம் பாய்கிறது' என்று குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து 1915'இன் இலையுதிர்காலத்தில் இத்தகைய அச்சங்கள் நியாயமாகவே தெரிந்தன. தம்முடைய கருத்தை வில்சன் நிர்வாகத்திடமிருந்து பெற்ற லெம்ல், விரைவாக அனைத்து ஜேர்மன் கூட்டணிகளிலிருந்தும் அவரைஅவரே விலக்கிக் கொண்டார். 1914'இன் இலையுதிர்காலத்தில் வில்சனின் நிலைப்பாடு நடுநிலையாக (neutrality) இருந்த போது, யூனிவர்சல் இரண்டு ரீல் கொண்ட Be Neutral என்பதை வெளியிட்டது. வில்சன் தயார்நிலையை (preparedness) வலியுறுத்திய போது, யூனிவர்சல் 40 ரீல் நீளமுடைய அசாதாரண பயம் (Xenophobic) சம்பந்தபட்ட தொடரான Liberty என்பதை வெளியிட்டது. 1916 ஜூனில், ஒரு தயார்நிலை அணிவகுப்பைச் செய்து காட்டிய அந்த ஸ்டூடியோ, அதே ஆண்டு செப்டம்பரில் Lon Chaney-Dorothy Phillipsஇன் யுத்தத் திரைப்படமான If My Country Should Call என்பதை வினியோகித்தது. [4]
1917 ஏப்ரல் 6இல், ஜேர்மனியின்மீது ஜனாதிபதி வில்சன் யுத்த அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, யூனிவர்சலின் தயார்நிலை தயாரிப்புகளை (Preparedness Productions) யூனிவர்சல் அறிவித்தது. அதில் Uncle Sam at Work, The War Waif, The Birth of Patriotism மற்றும்Uncle Sam’s Gun Shops போன்ற தலைப்புகளுடன் நெடுந்தொடர்களும், குறுந்தொடர்களும், திரைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. ரூபெர்ட் ஜூலியனின் The Kaiser, The Beast of Berlin (1918) மற்றும் ஒரு நையாண்டி படமான The Geezer of Berlin (1918) ஆகியவற்றை வெளியிட்டதன் மூலமாக கூடுதல் பிரச்சார புள்ளிகளையும் அந்த ஸ்டூடியோ சேர்த்துக்கொண்டது. Kaiserக்கு எதிரான பிரச்சாரம் அதன் வேலையை வெளிப்படையாகவே சிறப்பாக செய்தது. லோவாவின் டேவன்போர்ட்டில் The Beast of Berlin திரையிடப்பட்ட ஓரிடத்தில், ஒருவர் ஒரு துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு உரத்த கூச்சலுடன், திரையரங்கத்தின் நடுபாதையில் ஓடிவந்து திரையை நோக்கி இருமுறை சுடத்தொடங்கிவிட்டார்; இதனால் அந்த காட்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. [5]
1917'இன் இலையுதிர்காலத்தில், யூனிவர்சல் உத்தியோகப்பூர்வ அரசு திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான அதன் முதல் அரசாங்க ஒப்பந்தத்தை அமெரிக்க வேளாண்துறையிடமிருந்து பெற்றது. 1918'இன் கோடைகாலத்தின் போது, லெம்லியின் ஸ்டூடியோ The Wonders of Our War Work என்பதன் மீது தொடர்ச்சியாக ஒரு ரீல் திரைப்படங்களைத் தயாரித்தது. அவை ஒவ்வொன்றும் "பொதுமக்கள் செய்திதொடர்பு ஆணையத்தின் உத்தியோகபூர்வ ஒப்புதலையும், அங்கீகாரத்தையும்" பெற்றிருந்தன. 'யுத்த காலக்கட்டத்தின் போது திரைப்பட வியாபாரத்தில் யூனிவர்சல் மட்டும் விரிவடைந்து கொண்டிருக்கிறது' என்ற "தவறான தண்டோரா முழக்கங்களைச்" சரிகட்ட, திரைப்படத்துறையின் யுத்த நடவடிக்கைகளுக்கு சார்பாக செய்தித்தாள்களின் ஆதரவையும் அது திரட்டி வைத்திருந்தது.
பிரபலமான ஹென்றி எர்விங் டோட்ஜின் கதையான The Yellow Dogஐ படமாக்கியதன் மூலமாகவும், வர்த்தக கழகங்கள் மற்றும் பல்வேறு தேசியவாத அமைப்புகளுடன் சேர்ந்து “win the war" படத்தை வெளியிட்டதன் மூலமாகவும், நாட்டுப்பற்று மிகுந்திருந்த அப்போதைய சூழலில் அவை 'யூனிவர்சலின் முத்தான தயாரிப்புகள்' என்ற முத்திரையைப் பெற்றன. இந்த படங்கள் மட்டுமே கூட அமெரிக்க அரசாங்கத்திற்குப் போதியதாக இல்லை. 1918'இன் இலையுதிர்காலத்தில், பிரேசிலிய கிளை மேலாளரை "ஜேர்மானிய ஆதரவாளர்" என்று குற்றஞ்சாட்டி, அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்து, யூனிவர்சலின் திரைப்படங்களை நீதித்துறை பிரேசிலுக்கு கப்பலேற்ற உத்தரவிட்டது. (ஆனால் இதற்கு யூனிவர்சல் கீழ்படிந்ததா என்பது அறியப்படவில்லை.) [6] இவை அனைத்தையும் மனதில் கொண்டு தான், லிவீஸ் மைல்ஸ்டோனின் சிறந்த யுத்த எதிர்ப்பு படைப்பான All Quiet on the Western Front படத்திற்கு (1930இல் இப்படம் யூனிவர்சினால் வெளியிடப்பட்டது) லெம்ல் வெளிப்படையாகவே ஆதரவளித்தார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதுவொன்றும் அவருடைய ஸ்டூடியோவினால் கையாளப்பட்டு வந்த முதலாம் உலக யுத்த நடவடிக்கைகளில் சிலவற்றைக் குறைப்பதற்கான ஒரு நனவுபூர்வமற்ற முயற்சியல்ல.
அரசாங்கத்தைக் கைக்குள் வைத்திருந்த பல சீமான்களில் லெம்லியும் ஒருவராக இருந்தார். 1917இன் தொடக்கத்தில், விடாகிராஃப்பின் நிர்வாகிகளும், இத்துறையில் முக்கிய பங்கு வகித்து வந்த லாஸ்கி (அப்போது இதுதான் பாராமவுண்டின் உத்தியோகப்பூர்வ பெயராக இருந்தது), மியூச்சுவல், ஃபாக்ஸ் மற்றும் பல்வேறு வர்த்தக இதழ்களும், “நம்முடைய நாட்டையும், அதன் நலன்களையும் பாதுகாப்பதற்கான ஓர் ஒருங்கிணைந்த ஆதரவை" வலியுறுத்தி ஜனாதிபதி வில்சனுக்கு ஒரு தந்தி அனுப்புவதில் யூனிவர்சலுடன் கைகோர்த்தன. 12 மில்லியன் அன்றாட பார்வையாளர்கள் மீதிருக்கும் ஹாலிவுட்டின் தாக்கம் குறித்து வில்சனுக்குச் சுட்டிக்காட்டவும், “திரைப்படத்துறையை மிகவும் புத்திசாலித்தனமாகவும், பயனுள்ள வகையிலும் அவரின் சேவையில் கொண்டு வருவதற்கான ஓர் அமைப்பை உருவாக்கவும் அவர்கள் கையெழுத்திட்டார்கள். அந்த ஆண்டின் ஜூலையில், அரசாங்கத்தின் மக்கள்தொடர்பு குழுவோடு இணைந்த ஓர் அமைப்பான திரைப்படத்துறைக்கான தேசிய ஆணையத்தைத் (National Association of the Motion Picture Industry-NAMPI) தலைமையேற்று நடத்த சர்வதேச திரைப்படத்துறைச் சேர்ந்த William A. Brady'ஐ வில்சன் நியமித்தார். "அமெரிக்காவின் ஒட்டுமொத்த திரைப்படத்துறையும் ஒற்றுமையுடன் பெரும் முயற்சிகளையும், தேசப்பற்றுடன் கூடிய ஆதரவையும் அளிக்கும்; நான் உங்களின் பணிவுள்ள சேவகனாக இருப்பேன்," என்று Brady வில்சனுக்கு உறுதியளித்தார்.
அந்த பணிவார்ந்த Brady'யும், அவருடைய ஸ்டூடியோவும் யுத்தத்தில் அமெரிக்கா ஈடுபட்டிருந்த இறுதிவரையில் கூட்டாளிகளாக இருந்தார்கள். விரைவிலேயே "பிரச்சாரம்" தொழில்துறையின் தொடர்ச்சியான கூச்சலாக மாறியது. அமெரிக்கா யுத்த திட்டங்களை வகுத்த போது, “யுத்தத்திற்கான அங்கிள் சாமின் தயாரிப்புகளோடு ஒட்டுமொத்தமாக தொடர்புபட்டிருந்த திரைப்பட நிறுவனங்கள்", அரசாங்கம் தரைப்படை மற்றும் கப்பற்படையில் ஆட்சேர்ப்பதற்கு திரைப்படங்களையே "பிரச்சாரத்திற்குப் பயன்படுத்த" திட்டமிட்டு கொண்டிருந்தது என்ற உண்மையில் உற்சாகமாக இருந்தன என்பதை Variety அறிவிக்கப்பட்டது.
NAMPIஇன் புதிய இங்கிலாந்து (New England) யுத்த பிரச்சாரத்திற்கு முழு பொறுப்பேற்றிருந்த வினியோகஸ்தர் லூயிஸ் பி. மேயர் (பின்னர் இவர் MGMஇன் தலைவரானார்), "திரைப்படங்கள் பொதுமக்களுக்கும், வாஷிங்டன் அரசாங்கத்திற்கும் இடையில் மிகச்சிறந்த பாலமாக இருக்கின்றன," என்று போஸ்டன் தியேட்டர் உரிமையாளர்களுக்கு அறிவித்தார். பரந்த திரைப்பட கண்காட்சிகள், “அரசாங்கத்திற்கும் அதன் பல்வேறு பிரச்சாரங்களுக்கும் மதிப்பிட முடியாத உதவியைச் செய்திருந்ததாக" மேயர் குறிப்பிட்டார். 1918 மே மாதம், லோஸ் ஏஞ்சல்ஸில் நடந்த Motion Picture War Relief Associationஇன் முதல் கூட்டத்தில், 2,000 பேர் கூடியிருந்த கூட்டத்தை நோக்கி, பாராமவுண்ட்/லாஸ்கி இயக்குனர் சிசெல் பி. டெ மில்லெ குறிப்பிட்டதாவது: “மிக சக்திவாய்ந்த பிரச்சாரக்கருவியாக இருக்கும் திரைப்படங்கள், கேமரா மூலமாக செய்திகளை அனுப்புகின்றன; அவற்றை எப்படிப்பட்ட திறமையான இராஜாங்க அதிகாரிகளாலும் மாற்ற முடியாது." [8] (புரட்சிக்குப் பிந்தைய சோவியத் அரசாங்கம் தான் திரைப்பட பிரச்சாரத்தைக் கொண்டு வந்தது என்ற வாதத்தை இதுபோன்ற கருத்துக்கள் பொய்மைபடுத்தி காட்டுகின்றன என்பதை போகிறபோக்கில் குறிப்பிட்டாக வேண்டும்)
1917 ஆகஸ்டில், பிரபலமான திரைப்படத்துறையினரை NAMPI அரசாங்க கிளைகளில் நியமித்தது. திரைப்பட நட்சத்திரங்களான மேரி பிக்போர்டு மற்றும் அனிதா ஸ்டீவர்டு இருவரும் பெண்கள் பாதுகாப்பு குழுவில் நியமிக்கப்பட்டார்கள். அலோஃப் ஜூகூரும், செல்வாக்குமிக்க மார்கஸ் லொவ்வும் கருவூலத்துறைக்கு அனுப்பப்பட்டார்கள். கண்காட்சி ஏற்பாட்டாளர் Samuel (“Roxy”) Rothapfel மற்றும் மெட்ரோ பிக்சர்ஸின் தலைவர் இருவரும் உள்துறைக்கு (Department of the Interior) அனுப்பப்பட்டார்கள். William Fox, Jesse Lasky, Edwin S. Porter (1903இல் The Great Train Robbery படத்தை இயக்கியவர்) மற்றும் இலஸ்கியின் நட்சத்திரமான Douglas Fairbanks ஆகியோர் அமெரிக்க செஞ்சிலுவையின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை கிளைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டார்கள்.
யுத்தத்தை ஊக்குவிப்பதில் நட்சத்திரங்கள் நேரடியாக காட்சி தருவதும் முக்கியமாக இருந்தது. 1917 டிசம்பரில், கனடாவில் பிறந்தவரான பிக்போர்டு, கடற்படை வீரர்களின் வாத்தியக்குழுவை சந்தைத்தெரு வழியாக இட்டு செல்வதற்காக, "கடற்படை வீரர்களின் உடுப்பைப் போன்றதொரு ஆடை அணிந்து கொண்டு”, சான்பிரான்ஸிற்கோவில் நடந்துவந்த Amarillo of Clothesline Alley படப்பிடிப்பிலிருந்து பாதியிலேயே சென்றார். 1918 ஜூலையில், லோஸ் ஏஞ்சல்ஸில் Motion Picture War Relief Association ஓர் அணிவகுப்பை நடத்தியது. அதற்கு Fairbacks தலைமை தளபதியாக இருந்து, தேவையான 200 உதவிகளை முன்னெடுத்து சென்றார். சர்வதேச இயக்குனரான லூயிஸ் வெப்பர் (ஜனரஞ்சரீதியில் அப்போது இவர் Griffithக்கு இணையாக இருந்தார்) அந்த அணிவகுப்பின் பெண்கள் பிரிவிற்குத் தலைமை ஏற்று நடத்தினார். அதில் ஆயிரக்கணக்கான அணிவகுப்பு ஆண்களும், 47 வாத்தியக்குழுவும் இடம்பெற்றிருந்தனர். சுதந்திர யுத்த பத்திரங்களை (Liberty war bonds) விற்க மன்ஹட்டனில் கூடிய கூட்டத்தில் திரைப்பட நட்சத்திரங்கள் பிக்போர்டு, சாப்ளின் மற்றும் Fairbacks ஆகியோர் ஒரேமேடையில் உரையாற்றினார்கள். அத்துடன் அதைத்தொடர்ந்து தனித்தனியாகவும் அவர்கள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள். 1918 அக்டோபர் 12 அன்று நியூயோர்க்கில் "சுதந்திர தினத்திற்காக", ஜூகோர் அவருடைய மன்ஹட்டன், போர்ட்லீ, நியூஜெர்ஸி திரைப்பட ஸ்டூடியோக்களிலிருந்து "கவர்ச்சிகரமான பத்திர விற்பனையாளர்களின் நிகழ்வு" என்ற பெயரில் யுத்த பத்திரங்களை விற்பனை செய்ய முக்கிய தெருமுனைகளில் ஒரு நடமாடும் திரையரங்கத்தை ஏற்பாடு செய்தார். [10]
நேரடியான களத்தில் தோன்றியமை ஒருபுறமிருக்க, அரசாங்கத்தின் யுத்த பத்திரங்களைத் திரைப்படத்துறையைத் வேறெதுவும் அந்தளவிற்கு விளம்பரப்படுத்தவில்லை. “Liberty Loans" என்றழைக்கப்பட்டதைக் கொண்டு செல்வதற்கான பிரச்சார குறும்படங்களைத் தயாரிக்க பிரசித்திபெற்ற ஸ்டூடியோக்களை NAMPI ஏற்பாடு செய்தது. 1917இன் இலையுதிர் காலத்தில் இரண்டாவது Liberty Loan உந்துதலானது, நாடக மற்றும் திரைக்கலைஞர்களையும், முன்னனி நட்சத்திரங்களையும் கொண்ட ஐந்தி திரைப்படங்களால் முன்னுக்குத் தள்ளப்பட்டது. மூன்றாவது Liberty Loan பிரச்சாரத்திற்காக, Swat the kaiser எனும் குறும்படத்தில் Douglas Fairbanks நடித்தார். நான்காவது Liberty Loan பிரச்சாரத்திற்காக, 37 நட்சத்திரங்களுடன் 12 திரைப்பட நிறுவனங்களிடமிருந்து 40 Liberty Loan சிறப்புப்படங்களைத் தயாரிக்க ஏற்பாடு செய்ததன் மூலமாக NAMPI தலைவர் ஜூகோர் கருவூலத்துறையைச் சமாதானப்படுத்தினார். மேரி பிக்போர்டு நடித்த 100% American, Fairbanks நடித்த Sic ‘Em, Sam, Mae Murray நடித்த The Taming of the Kaiser Bull, மற்றும் சார்லின் சாப்ளின் நடித்த The Bond ஆகியவை அவற்றில் சில படங்களாகும். நடிகை லில்லியன் கிஷ் (ஜேர்மானியர்களை ஆக்கிரமிப்பு செய்வது போல கனவுகாணும் படம்) மற்றும் நகைச்சுவை நடிகர் Roscoe Arbuckle (பேர்லினில் கெய்சரை எதிர்ப்பது போன்றிருந்த படம்) ஆகியோரிடமிருந்து கடுமையான தோல்வியைத் தழுவியவையும் வெளியாயின. இத்தகைய ஹாலிவுட் பிரசார நடவடிக்கைகளால் போதியளவிற்கு ஈர்க்கப்பட்டிருந்த ஜனாதிபதி வில்சன், வாஷிங்டனில் நடந்த தேசிய பத்திரிக்கையாளர் கழகத்தில் திரைப்படத்துறைக்குப் பாராட்டுகீதம் பாடினார். பல்வேறு Liberty Loan திரைப்படங்கள், அமெரிக்க செனட்டர் சபையின் வளாகத்திலும், அவர்களின் வாழ்க்கை துணைவியருக்கும் மற்றும் செனட் பணியாளர்களுக்கும் காட்டப்பட்டன. [11]
அந்த காலக்கட்டத்தில் அரசியல் திரைப்படங்கள் முழுவீச்சில் தணிக்கை செய்யப்பட்டன. ஜேர்மன்-அமெரிக்க மக்கள் அதிகமிருந்த நகரங்களில், யுத்தத்திற்கு ஆதரவான திரைப்படங்கள் கூட இலக்காக்கப்பட்டன. பிக்போர்டு நடித்த De Milleஇன் The Little American படத்தில் ஜேர்மன் படைவீரர்களைக் குறித்த தவறான ஓவியங்கள் இடம்பெற்றிருந்ததற்காக அது ஆரம்பத்தில் சிக்காக்கோவில் தடை செய்யப்பட்டது. எவ்வாறிருப்பினும், படங்கள் உத்தியோகப்பூர்வ அரசாங்க போக்கிற்கு அடியில் வராத போது தான் பெரும்பாலான தணிக்கை நிகழ்ந்தது. இராணுவ பயிற்சியை அபாயத்திற்குள்ளாக்க கூடிய காட்சிகளைக் கொண்ட சினிமாக்களின் உரிமம் இரத்துசெய்யப்படும் என்று பென்சில்வேனியாவில், அரசு தலைமை நீதிபதி அறுச்சுறுத்தினார். இதேபோன்ற முறைமைகள் நியூயோர்க் அரசினாலும் விவாதிக்கப்பட்டது. சிறியளவில் யுத்த எதிர்ப்பு உணர்வுகளைக் கொண்டிருந்த அல்லது யுத்தகள படுகொலைகளின் அதிர்ச்சிகரமான காட்சிகளைக் கொண்டிருந்த ஒப்புதல்பெற்ற முந்தைய திரைப்படங்களையும் கூட திருப்பிப்பார்க்க செய்ய மேரிலாந்தின் ஆளுநர் அரசு தணிக்கை ஆணையத்தோடு இணைந்து ஏற்பாடு செய்தார். பால்டிமோரின் The Evening Sun செய்தியிதழ், யுத்தம் குறித்த அருவருப்பான யுத்த-எதிர்ப்பு படங்கள் மற்றும் மேலதிகமாக எடுத்துக்காட்டும் படங்கள் ஆகியவற்றிற்கு தடை விதித்த" நடவடிக்கைகளைப் பாராட்டியது. ஒரு முக்கிய செய்தி அறிவிப்பில் அந்த பத்திரிகை, “இப்போதைய நிலையில் அரசாங்கத்திற்குக் குழிபறிக்கும் மற்றும் இழிவுபடுத்தும் எவ்வித முயற்சிகளும், திரையில் ஏதோசில பெண்கள் அரைகுறை ஆடையுடன் துள்ளுவதைப் பார்த்து கொண்டிருப்பதைவிட மிகவும் ஆபத்தானதாக இருக்கின்றன,” என்று எழுதும் அளவிற்குச் சென்றது.
1917 ஜூனில் எஸ்பியோனேஜ் சட்டத்தில் (Espionage Act) வில்சன் கையெழுத்திட்டதன் மூலமாக கடுமையான தணிக்கை சூழல் உருவாக்கப்பட்டது. எஸ்பியோனேஜ் சட்டம், யுத்தத்தை விமர்சிக்கும் வகையிலான எவ்வித பேச்சுவடிவத்திற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதுபோன்ற நிலைமைகளின்கீழ், பல திரைப்பட பிரபலங்கள் கைது செய்யப்பட்டார்கள். Varietyஇன் கருத்துப்படி, “ஜேர்மானிய இராணுவவாதத்தை உயர்மதிப்புடைய ஒன்றாக எடுத்துக்காட்டிய" “ஜேர்மனுக்கு ஆதரவு காட்டிய" திரைப்படங்களைக் காட்டியமைக்காக பிரெஞ்சு குடிமகனான Frank J. Godsell, அமெரிக்க அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். ஜேர்மன் பிரச்சாரத்தைக் குறைத்துக்காட்ட அதன் நிஜமான பதிப்பின் உள்வசனங்களை Godsell மாற்றியிருந்த போதினும் கூட; அவருடைய படம் வாஷிங்டனில் தேசிய பத்திரிக்கையாளர்கள் கழகத்தில் திரையிடப்பட்டிருந்த போதினும், நியூயோர்க்கின் தலைமை நீதிமன்ற அலுவலகம் அந்த படத்தைக் கைப்பற்றியது.
சுயாதீனமான புரட்சிகர யுத்த படமான The Spirit of ’76 தடைசெய்யப்பட்டதே, முதலாம் உலக யுத்தத்தை எடுத்துரைத்த மிகவும் பிரசித்திப்பெறாத ஒரு திரைப்படத்தின் தணிக்கை விஷயமாக இருந்தது. ரோபர்ட் கோல்ட்ஸ்டெயினால் (Griffithஇன் அடிமைமுறைக்கு ஆதரவான வெற்றிப்படமான The Birth of a Nation படத்திற்கு, நிஜமாக முதலீடு செய்தவர் இவர் தான்) தயாரிக்கப்பட்ட அந்த படம், 1917 மே மாதம், எஸ்பியோனேஜ் சட்டம் கையெழுத்தாவதற்கு வெறும் ஒரு மாதத்திற்கு முன்னர், சிக்காக்கோ தணிக்கைகளால் ஒடுக்கப்பட்ட பின்னர் அரசாங்கத்தின் தாக்குதலுக்கும் மையமாக ஆனது. லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்படத்தின் மீதான கட்டுப்பாட்டை கோல்ட்வென் மீண்டும் பெற்றார் என்ற போதினும், Spirit of ’76 படம் நீதித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் தயாரிப்பாளர்மீதும் எஸ்பியோனேஜ் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்க ஆதரவிலான துடிப்புமிக்க நாட்டுப்பற்று செய்திகளுக்கு இடையிலும், புரட்சிகர யுத்தத்தின் போது இங்கிலாந்தின் விரோத வெளிப்பாடுகளின் காரணமாக, அந்த படம் இங்கிலாந்து யுத்தத்திற்கு ஓர் அச்சுறுத்தலுக்கு நிகராக இருந்தது. மே 1918இல், அதிர்ச்சிகரமாக கோல்ட்வெனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், $5,000 அபராதமும் விதிக்கப்பட்டது (ஆனால் இறுதியில் அவர் முன்னதாகவே விடுதலை பெற்றார்).
"ஜேர்மன் ஆதரவிலான" எவ்வித உணர்வுகளையும் வெளிப்படுத்திய தனிநபர்களையும், வியாபாரங்களையும் கவனத்தில் கொண்டிருந்த நிலைமை, வில்சன் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட மனநிலையின் ஒரு பகுதியாகவும், தொகுப்பாகவும் இருந்தது. 1917இன் இறுதியில், Associated Motion Picture Advertisersஇன் ஒரு நிர்வாகி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அது ஜேர்மனிக்கு ஆதரவான பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வதில் திரைப்பட நிறுவனங்களை அதைரியப்படுத்தியது. அரை ஆண்டுக்குப் பின்னர், Fox Film பெருநிறுவனத்தின் ஹங்கேரிய திரைப்பட சீமான் வில்லியம் ஃபாக்ஸ், “100 சதவீதம் அமெரிக்கர்களாக" அல்லாத எந்த ஃபார்க்ஸ் தொழிலாளியும் வேலையை விட்டு நீக்கப்படுவார் என்று அச்சுறுத்தினார். "உண்மையான அமெரிக்கர்களாக இல்லை என்று எவரையும் சந்தேகித்தாலும் கூட அவர்களைக் குறித்து" இரகசியமாக தகவல்களை அளிக்கும்படி கிளை மேலாளர்களுக்குத் குறிப்புகள் அனுப்பப்பட்டிருந்ததாக ஒரு வர்த்தக வட்டாரம் குறிப்பிட்டது. “இந்த தகவல்கள், முழுவதுமாக ஆராயப்படும்; பின்னர் ஃபாக்ஸின் படையில் இருக்கும் யாரேனும், சிறிதளவிற்கு ஜேர்மன் ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்பட்டாலும்கூட, அவர் வேலையை விட்டு நீக்கப்படுவார்," என்று திரு. ஃபாக்ஸ் அறிவித்தார். [15]
1940கள் மற்றும் 1950களின் பிற்பகுதியில், HUAC ஹாலிவுட் மீதான பனிப்போரை நடத்திய போது, இடதுசாரி மற்றும் தாராளவாத திரைப்பட தொழிலாளர்கள் குறிவைக்கப்பட்டு, நீக்கப்பட்டதற்கு நிச்சயாமாக இதுபோன்ற நடவடிக்கைகள் அறிகுறிகளாக இருக்கின்றன.
அமெரிக்க அரசாங்கம் சினிமா திரைகளில் ஒருவிதமான அரசியல் முரண்பாடுகள் வெளிப்படுவதற்கும் அனுமதித்தது. கடுமையான செமிட்டிக் இன எதிர்ப்பாளரும், தலையிடா கொள்கையாளருமான வாகனத்துறை சீமான் ஹென்றி ஃபோர்டு, யுத்தம் ஏற்படுத்திய சேதங்களுக்காக அதன் விளைவை எதிர்த்தார். அது அவருடைய வியாபார செயல்பாடுகளுக்கு உதவும் என்று அவர் கருதினார் (ஆனால் இவரே பின்னர் அமெரிக்க தலையீட்டிற்கு ஒரு தீவிர ஆதரவாளர் ஆனார்). அப்போது வரையில் அமெரிக்கா உத்தியோகப்பூர்வமாக யுத்தத்தை அறிவித்து வந்தது. அப்போதும் கூட, யூனிவர்சல் ஒளிப்பதிவாளர்களுக்கு ஃபோர்டின் ஐரோப்பாவிற்கான "அமைதி யாத்ரீகர்களில்" உள்ளடங்க சாத்தியமாக தான் இருந்தது. 1916 உதித்த போது, பிரெஞ்சுக்கு சொந்தமான Pathé Exchange, மூன்று ரீல் யுத்த-எதிர்ப்பு படமான The Horrors of War என்பதை வினியோகித்தது. அப்படம் யுத்தத்தில் இலாபமடையும் ஃபோர்டை வெளிப்படையாக குறிப்பிட்டுக் காட்டி இருந்தது. மிகவும் குறுகிய மற்றும் முக்கியத்துவம்மிக்க ஒரு ஆண்டுக்குப் பின்னர், இதுபோன்ற ஒரு படத்தை அரசியல் ஒடுக்குமுறை க்கு அஞ்சி தியேட்டர்களில் காட்டாமல் இருக்க எந்தவொரு அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளரும் பயப்படவில்லை. யுத்தத்திற்கு ஆதரவான ஸ்டூடியோ-வினியோகித்த நியூஸ் ரீல்களும், அரசாங்க திரைப்படங்களுக்கு மாற்றாக விரைவிலேயே, “யுத்த பயங்கரங்கள்" குறித்த ஆவணப்படங்கள் இடம் பிடித்தன. [16]
இதுபோன்றதொரு மாறுபட்ட சூழலில், Liberty Loan பொதுவெளியீடுகளும், திரைப்படத்தின் வருகையும் சார்ளின் சாப்ளினை அவருடைய Shoulder Arms செய்வதிலிருந்து மனதை மாற்றிவிடவில்லை. இப்படம் 1918இல் போர் முடிவிற்கு வந்த குறுகிய காலத்திற்குப் பின்னர் வெளியானது. அதிகளவில் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டிருந்த "சிவப்பு-எதிர்ப்பு" (“anti-red”) பிரமை நிலவிய சூழலும் கூட, The Answer (1918) என்றழைக்கப்பட்ட சோசலிசத்திற்கான ஓர் அனுதாப படத்தை அளிப்பதிலிருந்து Triangle Film Corp.இன் முடிவை மாற்றிவிடவில்லை. இந்த படம் ரஷ்ய புரட்சி நிகழ்ந்த ஐந்து மாதங்களுக்குப் பின்னர் வெளியானது. எவ்வாறிருப்பினும், ஓர் ஆழமான பிற்போக்குத்தன சூழலிலும் விதிவிலக்காக இருந்தவை.
முதலாம் உலக யுத்தத்தின் அழுத்தத்திலிருந்த மக்களை நீண்ட காலத்திற்கு முட்டாள்களாக ஆக்க முடியவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்த உடனேயே, யுத்த-ஆதரவு பற்றீடுபாடு பொறிந்தது. பேரழிவுமிக்க யுத்தத்தின் விளைவுகளால் சமஅளவிற்கு கதிகலங்கி போயிருந்த ஹாலிவுட் எழுத்தாளர்களும், இயக்குனர்களும் கலைத்துவ வெறிப்புடன் தங்களின் பிரதிபலிப்பைக் காட்டினார்கள். யுத்தம் முடிந்த வெறும் 27 மாதங்களுக்குப் பின்னர், Rex Ingramஇன் தலைச்சிறந்த ஆழமான படைப்பான he Four Horsemen of the Apocalypse (1921) படத்தை மெட்ரோ பிக்சர்ஸ் வெளியிட்டது. இதுபோன்றதொரு யுத்த-எதிர்ப்பு படம் ஒரு பெறும் வெற்றியைப் பெறக்கூடும் என்பதே அரசாங்கத்தின் 1917-1918 பிரச்சாய இயக்கத்திற்கு எதிரான வெளிப்படையான பின்னடைவுக்கு ஓர் ஆதாரமாக இருக்கிறது. பெருமந்த நிலைமை ஆண்டுகள் முழுவதும் யுத்தம் மீதான விரோதம் தொடர்ந்திருந்தது. மேலும் King Vidor’இன் The Big Parade (MGM 1925) மற்றும் Milestone’இன் All Quiet on the Western Front போன்ற குறிப்பிடத்தக்க யுத்த-எதிர்ப்பு படங்களுடன் ஸ்டூடியோக்கள் பிரதிபலிப்பை வெளிப்படுத்தின.
ஏகாதிபத்திய யுத்தகளத்தின் மீது வெளிப்பட்ட மனிதநேய பிரதிபலிப்பின் மிக சுருக்கமான காலக்கட்டமான இவை அனைத்தும், ஹாலிவுட்டின் அரசியல் தலையங்கத்தின் மிக ஆழமான சுற்றுக்களுக்கு வருந்தத்தக்க வகையில் வழிவிட்டன. இதுபோன்ற தலையங்கத்திற்கு உயர்ந்த விலை கொடுக்க வேண்டி இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமெரிக்க அரசாங்க நடவடிக்கைகளுக்கு திரைப்படத்துறையின் ஆதரவு, 1917 மற்றும் 1918'இன் போது ஹாலிவுட் செய்த அனைத்தையும் தாண்டிச் சென்றுவிட்டது. 1945'இல் அந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அரசாங்கம் ஸ்டூடியோக்களின் ஒத்துழைப்புடன் "கம்யூனிச-எதிரான" துப்புரவாக்கலை நடத்தியன் மூலமாக அதன் நன்றியுணர்ச்சியைக் காட்டியது. இதிலிருந்து தான் அமெரிக்க திரைப்பட தயாரிப்புகள் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.
திரைப்படம் என்பது மிகவும் சக்திவாய்ந்த ஊடகம். ஆனால் அமெரிக்காவில் இருப்பது போல அது தனிநபரின் வர்த்தக நலன்களின் உடைமையாக இந்தளவிற்கு உலகின் வேறெங்கும் இருக்க முடியாது. சமூக நெருக்கடி அபிவிருத்தி அடைந்து தொழிலாளர் வர்க்கம் முன்னுக்கு வருகையில், இந்த நலன்கள் மீண்டுமொருமுறை அவற்றின் சமூக முன்னுரிமைகளுடனும், முறையீடுகளுடனும் மூர்க்கத்தனமான முயற்சியில் ஈடுபடும். இரண்டு உலக யுத்தங்களிலேயும், பெருமந்தநிலையிலும் மற்றும் மாய-வேட்டை சகாப்தத்திலும், அமெரிக்க முதலாளித்துவத்திற்கு ஸ்டூடியோ தலைமைகள் அவற்றின் அர்பணிப்பை எடுத்துக்காட்டி இருந்தன.
அதேநேரத்தில், எண்ணிலடங்கா எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் கூட அமெரிக்க சமூகத்தை விமர்சிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதும், அதை எதிர்ப்பதில் அவர்கள் வெல்வார்கள் என்பதும் உண்மை தான். இந்த வரலாறைக் குறித்த அறிவு அவர்களுக்கும் முக்கியமானதாக இருக்கிறது.
Notes:
[1] Zinn, Howard, A
People’s History of the United States (Harper & Row, 1980), pp. 355-56.
Bentley, Eric, editor, Thirty Years of Treason: Excerpts from Hearings
Before the House Committee on Un-American Activities, 1938-1968 (New York:
Thunder’s Mouth Press/Nation Books, 1971, 2002), p. 48.
[2] “The War’s Effect
on the Movies,” The Billboard (19 December 1914), p. 153.
[3] Bush, W. Stephen,
“Motion Picture Men Greet President,” Moving Picture World (12 February
1916), pps. 923+. “First Board of Trade Banquet, Attended by President Wilson,
Marks New Era in Industry,” Motion Picture News (12 February 1916), pp.
817-18.
[4] Variety
(20 August 1915), p. 17. “Universal Backs Wilson on Neutrality”, Motion
Picture News (19 September 1914), p. 57. The Billboard (19
September 1914), p. 46. Moving Picture World (22 July 1916), p. 644.
Motion Picture News (12 August 1916), p. 927. Universal advertisement,
ibid, pp. 928-29. Moving Picture World (9 September 1916), p. 1629.
[5] Universal
advertisement, Moving Picture World (5 May 1917), p. 706. Ibid, p. 810.
Universal advertisement, ibid, p. 820. Moving Picture World (3 August
1918), p. 703. “Shot ‘Beast of Berlin,’” Variety (12 April 1918), p.
47.
[6] “Universal Gets
Government Contract,” Moving Picture World (15 September 1917), p.
1774. “Universal Puts Out Stirring Training Film,” Moving Picture World
(4 May 1918). “Universal to Make Films for Government,”
Moving Picture World (22 June 1918), p. 1724. “Universal Appeals to
Newspapers,” Moving Picture World (29 June 1918), p. 1850. “Roosevelt
Backs Anti-Yellow Dogism,” Moving Picture World (17 August 1918), p.
992. “Jewel’s Anti-Yellow Dog Campaign Is Spreading Fast,” Moving Picture
World (24 August 1918), p. 1137. Variety (13 September 1918), p.
49. Variety (20 September 1918), p. 49.
[7] “President Wilson
Offered Aid of Film Men,” Motion Picture News (24 February 1917), p.
1197. “President Wilson Calls Upon Film Industry,” Moving Picture World
(14 July 1917), p. 217.
[8] “Gov’t to Look at
Films,” Variety (4 May 1917), p. 16. “War Work Under Way in Boston,”
Moving Picture World (1 September 1917), p. 1350. “Industry in West to
Black the Government,” Moving Picture World (15 June 1918), pp.
1549-50.
[9] “Motion Pictures
Mobilized for War,” Moving Picture World (11 August 1917), p. 918.
[10] “Mary Pickford
Leads Parade,” Moving Picture World (5 January 1918), p. 127.
Variety
(16 August 1918), p.
40. “Industry in West to Black the Government,” Moving Picture World
(15 June 1918), pp. 1549-50. “Industry to Back Liberty Loan,” Moving Picture
World (9 June 1917), p. 1617. “Industry’s Drive Under Full Speed,”
Moving Picture World (19 October 1918), p. 352. “Motion Picture Industry
Boosting Bond Sale,” Moving Picture World (4 May 1918), pp. 672-74.
“Public Responds to Players’ Appeals,” Moving Picture World (18 May
1918), p. 972.
[11] NAMPI
advertisement, Variety (12 October 1917), pps. 36-37. “Five Hundred
Prints for Liberty Film,” Moving Picture World (13 October 1917), p.
209. “Zukor Committee Announces Plan for Loan Drive,” Moving Picture World
(3 August 1918), p. 665. “Liberty Loan Distribution Arranged for Special
Films,” Variety (30 August 1918), p. 41. “Synopses of Liberty Loan
Specials,” Moving Picture World (5 October 1918), p. 122. “Great Array
of Star Films to Boom Liberty Loan Drive,” Variety (20 September 1918),
p. 49. “Fifty Stars Contribute to Loan,” Moving Picture World (7
September 1918), p. 1407. “Industry’s Drive Under Full Speed,” Moving
Picture World (19 October 1918), pp. 351-52. NAMPI advertisement,
Variety (27 September 1918), pp. 44-45.
[12] “That Chicago
Censor,” Variety (6 July 1917), p. 17. “Bans All Films That Discourage
Enlisting,” Moving Picture World (5 May 1917), p. 832. “Shall Horrors
of War in Film be Banned?” Moving Picture World (5 May 1917), p. 834.
“Maryland Censors Recall Certain War Films,” Moving Picture World (12
May 1917), p. 997.
[13] “Juggling
Propaganda,” Variety (22 March 1918), p. 57.
[14] AFI Catalogue
of Motion Pictures Produced in the United States; Feature Films, 1911-1920
(Berkeley/Los Angeles/London: University of California Press, 1988), p. 875.
[15] “Pro-German Papers
Cut Off,” Variety (2 November 1917), p. 53. “William Fox Will Dismiss
Pro-Germans,” Moving Picture World (29 June 1918), p. 1859. “What
William Fox Is Doing to Help Win the War,” Moving Picture World (21
September 1918), p. 1745. “How Fox Organized the War Drive,” Moving Picture
World (30 November 1918), pp. 923-24.
[16] Moving Picture
World (26 February 1916), p. 1273. Pathé advertisement, Moving Picture
World (8 January 1916), pps. 192-193, quoting Ford in 3 December 1915
New York Journal. “Patriotism Pervades Hearst-Pathe News,” Moving
Picture World (17 April 1917), p. 2921. “Triangle to Distribute ‘Booster’
Picture,”
Moving Picture World 27 (October 1917), p. 509. |