சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French state, unions seek to disarm strikes against pension cuts

பிரெஞ்சு அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை நிராயுதபாணியாக்க முற்படுகின்றன

By Alex Lantier
29 September 2010

Use this version to print | Send feedback

செப்டம்பர் 23 நடவடிக்கை தினத்தன்று ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 3 மில்லியன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு, ஆளும் வர்க்கம் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக மக்கள் எதிர்ப்பைத் தான் பெரிதும் குறைத்துமதிப்பிட்டு விட்டதாக முடிவிற்கு வந்துள்ளது. இந்த வெட்டுக்களானது ஓய்வூதியம் பெறும் குறைந்த வயதை 60ல் இருந்து 62க்கு உயரத்தியிருப்பதுடன் முழு ஓய்வூதியம் பெறும் தகுதியை 65 வயதிலிருந்து 67 ஆகவும் உயர்த்தியுள்ளது. இவ்வெட்டுக்கள் தொழிலாளர்களுக்கு 4 பில்லியன் யூரோக்கள் ஆண்டு ஒன்றிற்கு இழப்பு ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவை ஒரு சிலவரின் நலன்களின் ஆணையின் பேரில் வந்துள்ளன என்றும் பரந்த முறையில் காணப்படுகிறது.

இப்பொழுது அரசியல்வாதிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் சட்டத்தில் சிறு மாறுதல்கள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இதற்கிடையில் இன்னும் பல திறனற்ற “நடவடிக்கை தினங்களுக்கான” அழைப்புக்களும் விடுக்கப்பட்டுள்ளன. இந்த இழிந்த தந்திரங்கள் ஒரு அடிப்படை உண்மையை மறைக்கும் நோக்கத்தை உடையவை. அதாவது தொழிற்சங்கங்கள், அரசிடமிருந்து முற்றிலும் பிரிந்து அவற்றிற்கு எதிராக சுயாதீனமாக நடத்தப்படும் வெகுஜனத் தொழில்துறை நடவடிக்கைதான் தொழிலாளர்களுக்கு வெட்டுக்களைக் குறைக்கும் ஒரே வழியாகும் என்பதே அது.

வெட்டுக்களில் வெறும் பூச்சுக்கள் மாற்றத்திற்கு மட்டும் அழைப்புவிடும் வலதுசாரி அமைப்புக்களில் அரசாங்கமும் உள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் UMP யின் வெள்ளி நடந்த கூட்டத்தில் பிரதம மந்திரி பிரான்சுவா பியோன் கூறினார்: “நாங்கள் தயாரித்துள்ள சீர்திருத்தத்தை திரும்பப் பெறுவதாக இல்லை, ஏனெனில் அது தேவையானது, நியாயமானதும் கூட.” ஆனால் வெட்டுக்களுக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டிய செனட் மாற்றங்கள் பற்றி “விவாதித்து”, “அனைத்துத் திட்டங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

UMP செனட் தலைவரான Gérard Larcher தான் 65 வயதான, பல குழந்தைகள் உடைய பெண்களுக்கு ஓய்வூதிய வயது 65லேயே இருக்கலாம் என்பதற்கு ஆதரவு கொடுக்கக்கூடும் என்றார். இது வெட்டுக்களின் குறைப்பை பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம அளவாக உடையதாக செய்யலாம் என்றார்.

ஆனால் இதற்கு ஒரே நிபந்தனை, “சீர்திருத்தத்தின் முக்கிய கருத்துக்கள், அதன் நிதியச் சமசீர் நிலை” மாற்றப்படக்கூடாது என்பதுதான் என்று பியோன் கூறினார். அதாவது தொழிலாளர்கள் கூட்டாக மாற்றத்திற்கு முன்பு போலவே, பின்னரும் நிதியப் பிரபுத்துவத்திற்கு இழக்க வேண்டும்.

சார்க்கோசியை எதிர்ப்பதாகக் கூறும் அனைத்து சக்திகளைப் போலவே, முதலாளித்துவ “இடது” சோசலிஸ்ட் கட்சி (Parti Socialiste) முற்றிலும் கருத்தை மாற்றிக் கொண்டுவிட்டது. இந்த வசந்த காலத்தில் அதன் பிராந்திய தேர்தல் வெற்றிக்குப் பின்னர், இது தன் தடையற்ற சந்தை ஆதரவுப் பிரிவினரை சமூகக் கொள்கை பற்றி பேச அனுப்பியது. PS ன் பிரதிநிதி Manuel Valls, Le Monde இடம் கூறினார்: “ஓய்வூதிய முறை குறித்து இடது வாதிடலாம், எத்தனை பணிக்காலம் இருந்தால் ஓய்வூதியம் கிடைக்கும் என்பது பற்றியும் பேசலாம்.”

ஆனால் இப்பொழுது PS ஆனது 60 வயதில் ஓய்வு என்பதை உறுதியாக பாதுகாக்க விரும்புகிறது. நடவடிக்கை தினத்தன்று PS ன் செயலர் மார்டின் ஆப்ரி 1970 களின் தெளிவற்ற “தீவிரபோக்குத்தன” சொல்லாட்சியை நினைவுகூர இயன்றதைச் செய்தார். “என்னுடைய ஒரே நோக்கம் மற்றொருவித பிரான்ஸும் வரக்கூடும், அது நியாயமாகவும், திறைமையாகவும் இருக்கும் என்பதைக் காட்டுவதுதான்.”

தொழிற்சங்கங்களும் அவற்றின் தொனியை மாற்றுகின்றன. ஜூனை மாதம் வெட்டுக்களுக்குப் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர் CGT யின் பொதுச் செயலர் பேர்னார்ட் திபோ வெட்டுக்களுக்கு எதிரான பொதுவேலை நிறுத்தங்களுக்கான அழைப்புக்களை “முட்டாள்தனமானவை” என்று கண்டித்தார்—அவர்கள்தான் இப்பொழுது செயல்படுத்துவதில் எச்சரிக்கை வேண்டும் என்று கூறுகின்றனர்.

செப்டம்பர் 24 அன்று கூட்டுத் தொழிற்சங்கங்களின் அறிக்கை கூறியது: “இப்பொழுது வெளியிடப்படும் ஆழ்ந்த சீற்றத்தைப் புறக்கணிப்பதின் விளைவுகள் பற்றி தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன… குடியரசு ஜனாதிபதிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தங்கள் ஒருமித்த பகிரங்கக் கடிதத்தில் கூறப்பட்ட, “இச்சட்டத்திற்காக வாக்களித்தல் அதன் தற்போதைய தர்க்க முறையில், செயற்பட்டியலில் இப்பொழுது இல்லை” என்பதை உறுதிபடுத்துகின்றன.

அக்டோபர் 2, மற்றும் அக்டோபர் 12 அன்று புதிய நடவடிக்கைகள் தினங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தொழிற்சங்கங்கள் அடுத்த அணிதிரள்வை ஒரு சனிக்கிழமையில் நடத்தும் என்னும் முடிவு, வேலைநிறுத்த நடவடிக்கையை 19 நாட்களுக்கு ஒத்தி வைப்பது என்பது மிக கவனமாக தொடர்ச்சியான தொழில்துறை நடவடிக்கை வகையில் செயற்பாடு நெரிக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்திற்கொண்டு நிர்ணயிக்கப்படுபவை.

முன்னாள் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் கூட—UMP யில் சார்க்கோசிக்குப் போட்டியாளர், இப்பொழுதும் Cleasrstream விவகாரத்தில் சார்க்கோசியிடம் இருந்து சட்டபூர்வ குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருப்பவர்— ஓய்வூதிய வெட்டுக்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். செல்வாக்கற்ற வலதுசாரி அரசியல்வாதியான இவர், 2006 வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் அவருடைய முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (CPE) க்கு எதிராக நடந்ததையடுத்து பதவி இழந்தார். இவர் இப்பொழுது தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ “இடதின் குறைகூறல்களைத்தான் எதிரொலிக்கிறார்.

அவர் கூறுவது: “நாம் ஒரு சீர்திருத்தத்தை இயற்றலாம், ஆனால் அது ஒரு அடிப்படைப் பிரச்சினை அல்ல. சீர்திருத்தம் எல்லா பிரெஞ்சு மக்களுக்கும் நியாயமாகவும், நல்லதாகவும் இருக்க வேண்டும். CPE யின் போது ஒரு தொழிற்சங்கத் தலைவர், நான் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தமுடியாது, அது இளைஞர்களிடையே இயக்கத்தைத் தூண்டும், பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் போகும் என்று கூறியதை நான் நினைவில் கொண்டுள்ளேன். அவர்கள் சொல்வதைக் கேட்பதற்குத் தக்க காரணம் உண்டு—அதுவும் 2006ல் அப்பொழுது இருந்ததைவிட அதிகமாக.”

தொழிலாளர்கள் இந்த ஸ்ராலினிச தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் கூட்டணியின்பால், சமீபத்தில் செல்வாக்கு இழந்த “சோசலிசம்” பற்றிப் பேசும், தடையற்ற சந்தையின் உயர்குருமார்கள் மீது எந்த நம்பிக்கையும் கொள்ள முடியாது —இவர்கள் “நாங்கள் கூறுகிறபடி செய்யுங்கள், நாங்கள் செய்வது போல் இல்லை” என்ற கொள்கையை சார்க்கோசிக்குக் கூறுகின்றனர். அவர்கள் சமூகச் சிக்கன நடவடிக்கையை எதிர்க்கவில்லை— அதிகாரத்தில் இருக்கும்போது சுமத்த உதவினர். ஆனால் வெட்டுக்களைத் தாமதப்படுத்த முற்படுகின்றனர். அது தொழிலாளர் வர்க்கத்தின் கட்டுப்பாடற்ற எதிர்ப்பைத் தூண்டுவதைத் தவிர்க்கும்.

வெட்டுக்களுக்கான ஊக்கம் சார்க்கோசியின் சொந்த தன்னைப் பற்றிய பெரும் கருத்தையொட்டி வரவில்லை, உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியினால் வந்துள்ளது. ஆசியா, இலத்தீன் அமெரிக்காவில் குறைவூதிய தொழிலாள வர்க்கம் உற்பத்தியாளர்களின் போட்டியை எதிர்கொண்ட நிலையில், பழைய ஏகாதிபத்திய சக்திகள் இலாபங்களை உயர்த்தவும் தங்கள் போட்டித்தன்மையை மீண்டும் நிறுவவும் ஊதியங்கள் குறைப்பு, சமூகநலச் செலவினக் குறைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த முற்படுகின்றனர். குறிப்பாக பிரெஞ்சு அரசு அதன் ஆண்டு வரவு-செலவுப் பற்றாக்குறையை 100 பில்லியன் யூரோக்களாவது தொழிலாளர்களின் இழப்பில் ஈடுசெய்ய விரும்புகிறது.

CGT இன்னும் பிற தொழிற்சங்கங்களும் அவற்றின் அரசியல் பிணைப்புக்களும் வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுக்கின்றன. இவற்றிற்கு எதிராக தொழில்துறை நடவடிக்கையை ஏற்பாடு செய்யவில்லை. ஏனெனில் அவை பிரஞ்சு முதலாளித்துவத்தின் போட்டித்தன்மையை பாதுகாக்க விரும்புகின்றன.

L’Oreal சொத்துக்களுக்கு வாரிசான பில்லியனர் லில்லியன் பெத்தன்கூர், முன்னாள் பாசிசக் குடும்பத்திலிருந்து வாரிசாக வந்தவருக்கு, வெட்டுக்களைச் செயல்படுத்தும் பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ள முன்னாள் தொழில்துறை மந்திரி எரிக் வெர்த்திற்கு உதவியுள்ளமையானது இக்கொள்கையின் வர்க்கத்தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

தொழிலாள வர்க்கத்திடையே ஒரு நாள் எதிர்ப்புக்கள் சார்க்கோசியின் சிக்கன நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. ஜூன் மாதத்திய கருத்துக் கணிப்பு மக்களில் 58 சதவிகிதத்தினர் இவை வெட்டுக்களைக் குறைக்கும் என்று நம்பவில்லை என்று கூறுகிறது. 67 சதவிகிதம் பேர் ஒரு பொதுவேலை நிறுத்தம் இன்னும் திறமையான எதிர்ப்பாக இருக்கும் என்று கருதுகின்றனர். கிரேக்கத்தில் பலமுறை நடந்த ஒரு நாள் எதிர்ப்புக்களின் விளைவுகள்—சமூக ஜனநாயகப் பிரதமர் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் பாரிய வெட்டுக்களைக் குறைக்கவில்லை—சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஆகும்.

ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் இந்த வளர்ச்சிக்கு எதிராகவும் ஆயுதங்களை வளர்த்துள்ளது—குறிப்பாக குட்டி முதலாளித்துவ புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA ) மற்றும் தொழிற்சங்கங்கள் அரசியல் ஸ்தாபனம் குறித்து போலித்தோற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகளை இருமடங்காக ஆக்கியுள்ளது. செப்டம்பர் 24ம் திகதி ஒரு அறிக்கையை விட்டதில் தொழிற்சங்கங்கள் இன்னும் அதிக நடவடிக்கை தினங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதை வரவேற்றுள்ளது.

CPE போராட்டத்திற்கு அது நீண்டகாலம் பாராட்டிய தன்மையில், அது சார்க்கோசியுடையது போன்ற அரசாங்கங்கள் பல முறை “திடீரென இழிவான பின்வாங்கல் என்னும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளன. இப்படித்தான் டிசம்பர் 1995ல் யுப்பேயின் திட்டத்திற்கு (ஓய்வூதியக் குறைப்புக்கள்) எதிராகவும் 2005ல் வில்ப்பனின் CPE க்கு எதிராகவும் நிகழ்ந்தன.” என்று எழுதியுள்ளது.

NPA ஐப் பொறுத்தவரை, அரசாங்கம் 1995 மற்றும் 2006 ஆண்டுகளில் ஓரளவு பின்வாங்கியதே அதிகாரத்துவம் மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின் ஒத்துழைப்பு இலாபகரமானதாக இருக்கும் என்பதற்கு நிரூபணம் ஆகும். இது தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் நிலைமைக்கு முற்றிலும் அதன் பொருட்படுத்தா தன்மையைத்தான் பிரதிபலிக்கிறது. அந்த நிகழ்வுகளின் உண்மையான படிப்பினைகள் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.

1995 மற்றும் 2006 போராட்டங்கள் ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும், அதன் வெட்டுக்கள் என்னும் செயற்பட்டியலுக்கு எதிராகவும் அரசியல் போராட்டங்களாக வளராததால், முதலாளித்துவம் அதன் அரசியல் செயலர்களை மறு ஒழுங்கு செய்யும் வாய்ப்புக்கள் ஆயின. இது 1997 தேர்தலில் PS அரசாங்கம் ஒன்று வருவதற்கு வழிவகுத்து, பொதுநிறுவனங்கள் ஏராளமாக தனியார்மயமாக்கப்பட்டன. 2007ம் ஆண்டில் சார்க்கோசி ஒரு தடையற்ற சந்தை மற்றும் சிக்கன நடவடிக்கை அரங்கின் மூலம் தேர்ந்தெடுக்கவும் உதவின.

சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் இருக்கும் கட்சிகளுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் பெரும் தொழில்துறை நடவடிக்கை மூலம் செயல்படுத்துவதுதான் திறமையான எதிர்ப்பாக இருக்கும்.

அத்தகைய போராட்டம் அரசியல் வாழ்வை, புரட்சிகர உட்குறிப்புக்களை கொண்டதாக மாற்றும். பிரெஞ்சு மற்றும் சர்வதேச நிதிய மூலதனத்தின் உலக நிலைமையின் அடிப்படை நலன்களை அச்சுறுத்தும் வகையில், அது மிக உறுதியான எதிர்ப்பைக் காணும். சமீபத்தில் கிரேக்க பார சாரதிகளின் வேலைநிறுத்தங்களை முறிக்க இராணுவம் பயன்படுத்தப்பட்டது, ஸ்பெயின் அரசாங்கம் மாட்ரிட் நிலத்திடி இரயில் தொழிலாளர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு எதிராக அம்முறையை அச்சுறுத்தியது என்பவற்றை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

வரவிருக்கும் தொழிலாள வர்க்கத்தின் பெரும் தீவிரமயமாதல் போக்கு மற்றும் அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிராக என்பது தான் இன்றைய முக்கியப் பிரச்சினை என்பது ஆளும் வர்க்கத்தால் கூட உட்குறிப்பாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

சனிக்கிழமை தலையங்கம் ஒன்றில் பிரான்ஸின் “மைய-இடது” நாளேடான Le Monde எழுதியது: “”ஓய்வூதியக் குறைப்புக்களில் தான் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாக மக்களை நினைக்க வைத்துவிடலாம் என்று நிக்கோலா சார்க்கோசி கருதினால், அது அறிவார்ந்த செயலாக இருக்காது.” வெட்டுக்கள் “தரம் பிரிக்கும் அமைப்புக்களின் நிதியக் கருத்துக்களால் உந்தப்பெறுபவை” என்பதை அது ஒப்புக் கொண்டுள்ளது. தொழிற்சங்கங்கள் தங்கள் வெற்றி குறித்து “மிகையான போலித் தோற்றங்களை” கொண்டிருக்கவில்லை என்றும் அது கூறியுள்ளது. அக்டோபர் மாதம் செனட் குறைப்பு பற்றி வாக்களிக்கவுள்ளது.

ஆனால் தொழிற்சங்கங்களின் தொழிலாளர்கள் போராட்டத்தை நெரிக்கும் திறனை அழிப்பதுதான் முக்கிய பணி என்பதை அது விளக்கியுள்ளது: “திரு சார்க்கோசியை எதிர்கொள்ளும் நிலையில், தொழிற்சங்கங்கள் பெரும் பொறுப்புடன் நடந்துள்ளன. பேர்னார்ட் திபோ தன்னுடைய தளத்தில் கூடுதல் நடவடிக்கைகள் வேண்டும் என்ற விழைவுகளை எதிர்க்கிறார், சீர்திருத்தங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று கோருவதில் கவனமாக உள்ளார். ஆனால் திரு சார்க்கோசி வளைந்து கொடுக்கா தன்மையில் உள்ளார், கணிசமான சலுகைகளைக் கொடுக்கவில்லை என்றால், தொழிற்சங்கங்கள்—தங்கள் போராட்டங்களில் இருந்து ஆதாயம் இன்றி நலிந்து வெளிப்படக்கூடும்—தீவிரத்தனப் போக்கு ஆவியை ஒதுக்கி வைக்க இயலாது. திரு சார்க்கோசியின் வெற்றி அதன்பின் ஒரு பிர்ஹிக் வெற்றியாகும் [மிக மிக அதிக விலை கொடுத்துப் பெறப்படும் வெற்றி].”

மார்க்சிசம் முடிந்துவிட்டது, தொழிலாள வர்க்கம் ஒரு வரலாற்று அல்லது அரசியல் காரணி இனி இல்லை என்று எழுதியவர்களுக்கு இது பேரழிவு தரும் மறுப்பு ஆகும். கார்ல் மார்க்ஸும் பிரெடெரிக் ஏங்கல்ஸும் 160 ஆண்டுகளுக்கு முன்பு Communist Manifesto எழுதியதற்கு பின்னும், ஐரோப்பாவை கம்யூனிசம் என்னும் ஆவியுரு துரத்துகிறது, ஆளும் வர்க்கங்கள் தொழிலாள வர்க்கமானது அரசியல் ஸ்தாபனம் மற்றும் அதன் “இடது” சேவையாளர்களுடன் போரிடும் என்ற அச்சத்தை மீண்டும் கொண்டுள்ளன.