சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Korean crisis and the threat of a wider war

கொரிய நெருக்கடியும் பரந்த போருக்கான அச்சுறுத்தலும்

Bill Van Auken
27 November 2010

Use this version to print | Send feedback

கொரியப் போரில் சீனா வலுக்கட்டாயமாய் நுழைந்த 60 ஆவது ஆண்டு இந்த வாரத்தில் வருகிறது. சுமார் 300,000 சீன துருப்புகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க இராணுவம் தன் ஒட்டுமொத்த வரலாற்றில் மிக அதிர்ச்சிகரமான தோல்விகளில் ஒன்றை சந்திக்க வேண்டியதானது.

அதனையடுத்து நீடித்த குருதி தோய்ந்த முன்பின்நகர முடியாத ஒரு நிலை தோன்றிய பின் 1953 ஜூலையில் ஒரு போர் இடை ஓய்வு அறிவிக்கப்பட்டது. இந்த போர் நான்கு மில்லியன்களுக்கும் அதிகமான மக்களை காவு கொண்டிருந்தது. இதில் பெரும்பாலோர் அப்பாவி கொரிய மக்களாவர்.

யாலூ நதியின் தெற்கில் அமெரிக்க மற்றும் சீன துருப்புகள் கடுமையான நேருக்கு நேர் மோதல் நடத்திய ஆறு தசாப்தங்களுக்குப் பின்னர், இப்போது கொரிய தீபகற்பப் பகுதியில் பதட்டங்கள் மீண்டும் அவற்றின் உச்ச நிலையை எட்டியிருக்கின்றன. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான மோதல்களால் எரியூட்டப்படும் இந்த பதட்டங்கள் மோதல்களை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

யுஎஸ்எஸ் ஜோர்ஜ் வாஷிங்டன் என்கின்ற அமெரிக்காவின் அணுசக்தி விமானங்களைத் தாங்கிய கடற்படைப் போர்க் குழு இந்த வார இறுதியில் மஞ்சள் கடலுக்கு வந்து சேர்ந்ததானது நடப்பு நெருக்கடியில் இன்னொரு அதிகரிப்பின் சமிக்ஞையாகும்.

செவ்வாயன்று வடகொரியாவின் தரப்பில் இருந்து இயோன்பியோங் தீவின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இரண்டு தென் கொரியக் கப்பல்களும் இரண்டு கட்டுமானத் தொழிலாளர்களும் உயிரிழந்ததை அடுத்து உடனடியாக இந்த பெரும் போர்க்கப்பலின் வருகை அறிவிக்கப்பட்டது.

வடகொரியாவில் கடல் எல்லையில் இருந்தான சில மைல்கள் தூரத்தில் நடந்த போர்ப் பயிற்சிகளின் சமயத்தில் தென் கொரிய இராணுவத்தால் தனது பிராந்திய நீர்ப்பகுதிகளுக்குள் குண்டுகள் வந்து விழுந்ததற்குப் பதிலடியாகவே தான் குண்டுவீசியதாக வடகொரியா தெரிவித்திருக்கிறது. தென்கொரியா தானும் ஒரு பதிலடித் தாக்குதலை நடத்தி கணிசமான சேதாரத்தை அது ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. ஆயினும் வடக்கில் உயிர்சேதம் குறித்து ஏதும் தகவல் இல்லை. இப்போது பாரிய அமெரிக்க பாகத்துடனான புதிய போர் ஒத்திகைகள் இன்னொரு மோதலுக்கான நிலைமைகளை உருவாக்குகின்றன.

இருபக்கமும் இருக்கின்ற கொரியாவின் இராணுவமயமாகா மண்டலத்தின் மீதான நெருக்கடியுடன், பற்றவைக்கிற வாய்வீச்சும் கைகோர்த்து நிற்கிறது. வெள்ளியன்று, உத்தேசிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க-தென்கொரிய கூட்டுப் பயிற்சிகள் கோபமூட்டும் நடவடிக்கை என்று கண்டனம் செய்த வடகொரியா, “கொரிய வளைகுடா நிலைமை போரின் விளிம்புக்கு நெருங்கிக் கொண்டிருப்பதாக எச்சரித்தது.

தென் கொரியாவில், அரசாங்கம் தனது பாதுகாப்பு அமைச்சரை நீக்கி விட்டு இராணுவத்தின் கூட்டுப்படை தலைவர்களின் முன்னாள் தலைவரை அந்த இடத்தில் அமர்த்தியதோடு, வடக்கில் இருந்தான தாக்குதல்களுக்கு இராணுவம் கூடுதலான திறனுடன் எதிர்தாக்குதல் செய்யும் வகையில் சண்டைக்கான புதிய விதிகளை தழுவிக் கொண்டது. இதனிடையே இயோன்பியோங் (வட கொரியா கடற்கரையில் இருந்து வெறும் ஏழு மைல்கள் தொலைவில் இருக்கிறது) கூடுதல் துருப்புகள் மற்றும் கனரக ஆயுதங்களால் அரண் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வட கொரியாவுக்கு எதிராக வான் தாக்குதல்களின் பயன்பாடு உள்ளிட்ட கூடுதல் கடுமையான நடவடிக்கையை எடுக்கத் தவறியதற்காக ஜனாதிபதி லீ மியுங்-பேகின் அரசாங்கத்தை நாடாளுமன்றத்தின் வலது சாரிகள் கண்டனம் செய்திருக்கின்றனர்.

லீயும் அவரது மகா தேசியக் கட்சியும் (Grand National Party) [இக்கட்சி அமெரிக்க ஆதரவுடன் தென் கொரியாவை ஆண்ட முன்னாள் இராணுவ சர்வாதிகாரிகளின் கட்சி ஆகும்] வடகொரியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொள்வதாக வாக்குறுதியளித்தே அதிகாரத்திற்கு வந்தன. உதவிகளை நிறுத்தியதும்சூரியவெளிச்ச கொள்கையை (இக்கொள்கையின் மூலமாக முந்தைய தென் கொரிய அரசாங்கங்கள்  முதலீடுகள் மற்றும் உதவியின் மூலமாக சமரசத்திற்கு முயன்றன) நிராகரித்ததும் மோதலை அதிகப்படுத்தத் தூண்டுவதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றியுள்ளன. இப்போது லீ தனது கடுமையான வாய்ப் பேச்சுக்கு நியாயமாய் நடந்து கொள்வதற்கு அவரது சொந்த ஆதரவாளர்களிடமிருந்தும் இராணுவத்திற்குள்ளான கூறுகளிடம் இருந்தும் நெருக்குதலை எதிர்கொண்டு வருகிறார்.

கொரிய தீபகற்பத்தில் ஒரு பேரழிவான மோதல் தோன்றுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. இன்னுமொரு இராணுவ மோதல் வந்தால் தென் கொரிய இராணுவம் பெரும் அளவிலான பதிலடி கொடுக்கத் தூண்டப்படும் என்பதை எண்ணிப் பார்ப்பது சிரமமில்லை.

அமெரிக்கா இந்த பிராந்தியத்தில் அதிலும் குறிப்பாக சீனாவிற்கு எதிராக தனது சொந்த மூலோபாய நலன்களை முன்னெடுப்பதற்கு இந்த சூழலை சுரண்டுவது மிகக் கடுமையான அபாயம் கொண்டிருப்பதாக நிலைமையை ஆகியிருக்கிறது.  

வட கொரியாவின் அளவுக்கு சீனாவைக் குறிவைத்தும் தான் யுஎஸ்எஸ் வாஷிங்டன் கப்பலையும் அதனுடன் பிற பாதுகாப்புக் கப்பல்களையும் மஞ்சள் கடல் பகுதிக்கு அனுப்பியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.

இந்த பிராந்தியத்தில் அமெரிக்க விமானந் தாங்கி கப்பல் கூட்டத்தை நிறுத்துவதை முடுக்கி விடுவதற்கான ஒபாமாவின் முடிவு சீனாவை எரிச்சலூட்டத் தான் என்று நியூயோர்க் டைம்ஸ் வியாழனன்று கூறியிருந்தது. சீனாவின் கடல்பகுதிகளிலேயே அமெரிக்க கைவரிசை விரிவடைவது என்னும் சீனாவுக்கு எரிச்சலூட்டுகின்ற ஒரு முடிவை அந்நாட்டிற்கு வழங்குவதன் மூலம், வடகொரியாவுக்கு நெருக்குதல் அளிப்பதே இரண்டு தீமைகளில் குறைவான தீமையாய் இருக்கும் என சீனா தீர்மானிக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர்.

நிர்வாகத் துறையின் ஒரு மூத்த அதிகாரி புதனன்று நியூயோர்க் டைம்ஸ் இதழிடம் கூறினார்: “சீனாவைப் பொறுத்தவரை செய்தி இது தான், அணு செறிவூட்டல் அல்லது எங்களது நலன்களைப் பாதிக்கும் வகையில் தென் கொரியா மீதான தாக்குதல் இதுபோன்ற நடவடிக்கைகளை வட கொரியா எடுக்குமானால், சீன நலன்களை எதிர்மறையாகப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா பதிலடி கொடுக்கும். இந்த பதில் வடகொரியாவுக்கான செய்தியாகவும் தென் கொரியாவுக்கு அளிக்கப்பட்ட உறுதியாகவும் தான் அளிக்கப்பட்டிருக்கிறது, ஆயினும், அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பல்களை உதாரணமாக மஞ்சள் கடலில் காண்பதில் சீனாவுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை என்பது தெளிவு.”

சென்ற ஜூலையில்  மஞ்சள் கடலில்  அமெரிக்க-தென் கொரிய இராணுவக் கூட்டுப் பயிற்சிகளை நடத்துவதற்கு அமெரிக்கா அச்சுறுத்தி இருந்தது (வெளித்தோற்றத்தில் தென் கொரியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கி 46 மாலுமிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியானதாகத் தோன்றியது). கொரியப் போரின் முடிவில் அமெரிக்காவால் திணிக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கடல் எல்லைக்கு அருகே இக்கப்பல் கடலில் மூழ்கியது. தென் கொரியா வட கொரியா மீது குற்றம் சாட்டியது. ஆனால் வடகொரியா தான் இதற்குப் பொறுப்பில்லை என்று மறுத்தது.

சீனாவின் கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து, ஒபாமா நிர்வாகம் அந்தப் பயிற்சிகளை சீனக் கடல் பகுதிக்கு வெளியே ஜப்பான் கடலுக்கு நகர்த்தி விட்டது.  

இந்த முறை சீனாவுக்கு எதிரான இராணுவ மேலாதிக்கத்தைக் காட்டும் முகமாக மஞ்சள் கடலில் தனது மிகவும் சக்திவாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றை அமெரிக்கா நிறுத்திக் கொண்டிருக்கிறது.

சீன அரசாங்கம் இந்த ஒத்திகை குறித்து மிகவும் கவனமான ஒரு எச்சரிக்கையை விநியோகித்தது. சீனக் கரையில் இருந்து 200 மைல்கள் தூரத்திற்கு நீளும்எங்களது பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் நடக்கும் எந்த இராணுவ நடவடிக்கைகளையும் எதிர்ப்பதாக அது கூறியது. சீன அரசாங்கத்திற்கும் மற்றும் அதன் இராணுவத்திற்கும் நெருக்கமான மற்றவர்கள் அமெரிக்க கைவரிசைகளை கடுமையாகக் கண்டனம் செய்தனர்.

இந்த கோபமூட்டும் நடவடிக்கைக்கான உடனடிச் சாக்குப்போக்கு கொரிய மோதலாய் இருந்தாலும், இது ஆசியாவில் அமெரிக்காவின் தீவிரநடவடிக்கை கொள்கையின் வழிவருவதாகும். தென் சீனக் கடலில், சீனாவுக்கு எதிராக ஜப்பான், வியட்நாம் மற்றும் பிற ASEAN நாடுகளை ஆதரித்து பிராந்திய மோதல்களுக்குள் தன்னை செருகிக் கொள்ளும் அமெரிக்க முயற்சியும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நோக்கம் சீனாவுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தின் கூட்டணிகளையும் ஆதரவுகளையும் உருவாக்கி அமைப்பதாகும். இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தொடங்கி தென்கிழக்கு ஆசியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் வரை நீள்கிறது.

உலக முதலாளித்துவ நிதிப் பொறிவை அடுத்து, புவிமூலோபாய தாக்குதலானது சீனாவின் நாணயமதிப்பு திருத்தம் மற்றும் வர்த்தக சலுகைகளுக்கான ஆவேசமான கோரிக்கைகளுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது.

அடிப்படையாக, அமெரிக்கா சீனா இடையிலான பெருகும் பதட்டங்கள் உலகப் பொருளாதாரத்தில் ஆழமடையும் நகர்வுகளிலும் உலகளாவிய ரீதியாக சக்திகளின் சமநிலை மாறுவதிலும் (ஒருபக்கம் சீனா உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரமாக ஜப்பானைப் பின்தள்ளி எழுகிறது, இன்னொரு பக்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வீழ்ச்சியும் அதனைச் சரிக்கட்ட அந்நாடு இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்துவது அதிகரிப்பதும் நிகழ்கிறது) வேர்கொண்டிருக்கின்றன.

இந்த மோதல் வடகிழக்கு ஆசியாவையும் ஒட்டுமொத்த கோளத்தையுமே ஒரு மோதலில் வெடிக்கும் நெருப்பாக மாற்ற அச்சுறுத்துகிறது. முதலாம் உலகப் போருக்கு முந்தைய காலகட்டத்தை ஒத்த வகையில், சிறு சக்திகளுக்கு இடையிலான தனிமைப்பட்ட பிராந்திய மோதல்களாய் தோன்றக் கூடியவை ஒரு உலகளாவிய பற்றியெரிதலாக முடியும் சாத்தியத்தை அடக்கியிருக்கின்றன. இந்த முறை இந்த மோதல் அணு ஆயுதம் தாங்கிய விரோதிகளுக்கு இடையில் நடந்திருக்கிறது.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே இத்தகையதொரு பெருங்கேடு தவிர்க்கப்பட முடியும்.