WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஐரோப்பா :
அயர்லாந்து
Ireland’s main opposition parties signal support for austerity budget
அயர்லாந்தின் முக்கிய
எதிர்க்கட்சிகள் சிக்கன வரவு-செலவுத் திட்டத்திற்கான ஆதரவிற்கு சமிக்கை
காட்டுகின்றன
By Jordan
Shilton
27 November 2010
Back
to screen version
அயர்லாந்து
பாராளுமன்றத்தில்
(Dáil) டிசம்பர்
7ம் திகதி வாக்களிக்கப்படவுள்ள
அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டங்களுக்கு தங்கள் ஆதரவைத் தருவதாக அயர்லாந்தின்
முக்கிய எதிர்க்கட்சிகள் அடையாளம் காட்டியுள்ளன.
2011
ஆண்டு வரவு-செலவுத்
திட்டமானது புதன்கிழமை அன்று
Fianna Fail-பசுமைக் கட்சிக்
கூட்டணி அரசாங்கம் அளிக்கும் நான்காண்டு சிக்கனத் திட்டத்தை தளமாகக் கொண்டுள்ளது.
தேசிய மீட்புத் திட்டம் என
அழைக்கப்படும் இத்திட்டம்
2014 க்குள்
15 பில்லியன் ஈரோக்கள்
வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களைச் செயல்படுத்தும் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதில்
2011ல் மட்டும்
6 பில்லியன் ஈரோக்கள்
வெட்டப்பட்டுவிடும்.
அரசாங்கச் செலவுகளில்
கால் பகுதியைக் குறைக்கும் நோக்கமுடைய இத்திட்டத்தில்
2.8 பில்லியன் ஈரோக்கள்
குறைப்பு சமூகநலச் செலவுகள்,
குறைவூதியங்கள் ஆகியவற்றில்
இருப்பதுடன் குறைந்த வருமானம் உடைய தொழிலாளர்களுக்கு வரி உயர்வுகளும் உள்ளன.
இதைத்தவிர அமெரிக்க முறையில் பணிநிலைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உடனடியாக பொதுச்
செலவுகளும் வெட்டப்பட உள்ளன.
கிட்டத்தட்ட
13,200 பொதுத்துறை வேலைகளும்
தகர்க்கப்படுகின்றன. இவை
2008ல் இருந்து ஏற்கனவே
அகற்றப்பட்டுவிட்ட 12,000
வேலைகளைக் கணக்கில் கொள்ளாது.
இத்திட்டம் ஐரோப்பிய
ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியும் பிணை எடுப்புப் பொதிக்குக் கொடுக்கும் உதவி
நிதியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது அயர்லாந்தின் திவால் தன்மையுடைய வங்கிகளுக்கு
85 பில்லியன் ஈரோக்களை கொடுக்க
உள்ளது.
ஆனால்,
இந்த பெரும் பொது நிதிகளை
வங்கிளுக்குக் கொடுப்பதும்,
வாழ்க்கைத் தரங்களில்
மிருகத்தனமான குறைப்புக்களுடன் இணைந்திருந்தும்,
அவை சர்வதேச நிதியச்
சந்தைகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.
முதலீட்டாளர்கள் அயர்லாந்து
அரசாங்கத்தின் பத்திரங்களுக்கு தொடர்ந்து வட்டிவிகிதத்தை உயர்த்திக்
கொண்டிருக்கின்றனர்.
மற்றய ஐரோப்பிய நாடுகளும்
இடர்ப்படுகின்றன. போர்த்துக்கல் இப்பொழுது கணிசமான,
தொடர்ந்த அழுத்தத்தில்
EU-IMF ஆணைகளை அதன் பின்வரும்
சமூக கடுந்துயர் நிலையுடன் ஏற்பதற்கு டப்ளினைப் பின்பற்றுமாறு உள்ளது.
(See, “Portugal
passes austerity budget as speculative attack on Spain intensifies”)
வங்கிகளுடைய
இழப்புக்களை சரி செய்வதற்கு இன்னும் அதிக பொது நிதி தேவைப்படும் என்பது
தெளிவாகியுள்ள நிலையில் அயர்லாந்து பற்றிய கவலைகள் அதிகமாகியுள்ளன.
வெள்ளியன்று,
முதலீட்டாளர்கள்
Allied Irish Bank மற்றும்
Bank of Ireland ஆகியவற்றின்
பங்குகளை சரியச் செய்தனர். ஏனெனில் இந்நடவடிக்கைகள் வங்கி இழப்புக்களுக்கு குறைந்த
விகிதத்தில் பத்திரம் வைத்திருப்போரும்
பொறுப்பேற்க வேண்டும் என்று
வந்த தகவல்களுக்கு இது விடையிறுப்பு ஆகும்.
யூரோ இன்னும் அதிக
இடருக்கு உட்பட்டிருக்கையில்,
EU-IMF ஆகியவற்றின் பிணை
எடுப்புப் பொதி அயர்லாந்திற்குத் திங்கள் வணிகம் தொடங்குமுன் இறுதிப்படுத்தப்பட
வேண்டும் என்பதற்கான அழுத்தம் அதிகரித்துள்ளது.
யூரோப் பகுதியின் நிதி
மந்திரிகள் நவம்பர் 28
ல் உடன்பாட்டிற்கு இறுதி வடிவம்
கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இச்சூழ்நிலையில்,
அயர்லாந்தின் அரசியல் ஸ்தாபனம்
சிக்கன நடவடிக்கைகள் எப்படியும் தொடரப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
பாராளுமன்றத்திற்கு
வியாழக்கிழமை கொடுத்த அறிக்கை ஒன்றில்,
Taoiseach (பிரதம மந்திரி),
பிரயன் கோவன் வெட்டுக்கள்
ஒன்றுதான் ஒரு வருங்கால அரசாங்கத்திற்கு ஒரே முன்னேற்ற வழி என்று வலியுறுத்தினார்.
இதுதான் தற்போதைய நிலைமை பற்றிய
ஒரு “உண்மையான
மதிப்பீடு”
என்று கூறிய அவர் வேறுவித மாற்றீடுகள்
புதிய அரசாங்கத்திடம் இருந்து வந்தால்,
அவை இதைப்போன்ற அளவில்தான்
வெட்டுக்களைச் சுமத்தும் என்றும் கூறினார்.
முன்னதாக கோவன் இந்த
நடவடிக்கைகள் பற்றிய உடன்பாடு ஏற்பட்ட உடன்,
ஒரு பொதுத் தேர்தல் ஜனவரி மாதம்
நடத்தப்படலாம் என்று ஒப்புக் கொண்டார்.
தேர்தல் முடிவு எப்படி
இருந்தாலும் போக்கில் அடிப்படை மாற்றம் ஏதும் இராது என்றுதான் அவருடயை
பாராளுமன்றத்திற்குக் கொடுத்துள்ள கருத்துக்கள் தெளிவாக்குகின்றன.
பசுமைவாதிகள் ஏற்கனவே
நான்காண்டு திட்டத்திற்கு தங்கள் முழு ஆதரவையும் கொடுத்துள்ளனர்.
ஒரு புதிய பொதுத் தேர்தலுக்கு
அழைப்பு விடுத்தாலும்,
அவர்கள் வரவு-செலவுத் திட்டம்
இயற்றப்பட்டு முடியும் வரை,
2011 ஆண்டு வரை,
நடத்தப்படக்கூடாது என்பதைத்
தெளிவுபடுத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சிகளும்
இதேபோல் திட்டத்தின் அடிப்படைக் கருத்துக்களுக்கு தங்கள் உடன்பாட்டை
அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். சில கூறுபாடுகளைத்தான் குறைகூறியுள்ளனர்.
ஒரு பொதுத் தேர்தல்
Fine Gael/Labour கூட்டணியை
உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு கட்சிகளுமே
2014 ஐ ஒட்டி
15 பில்லியன் ஈரோக்கள்
“சரிசெய்யப்படுதல்”
தேவை என்று ஒப்புக்கொண்டுள்ளன.
Fine Gael
இன் தலைவர்
Enda Kenny, ஐரோப்பிய ஒன்றியத்
தலைவர்களுடன் நடத்திய விவாதத்தில்,
ஒரு புதிய அரசாங்கம்
திட்டத்தின் விவரங்களால் கட்டுப்பட்டிருக்க வேண்டிய தேவையில்லை என்று கூறப்பட்டதாக
தெரிவித்தார்—வெட்டுக்கள்
எவ்வளவு என்பதுதான் பிரச்சினை.
இதற்கு எதிர்க்கட்சி நிதிப்
பிரிவுச் செய்தித் தொடர்பாளர்
Minchael Noonan உடைய ஆதரவு
இருந்தது. அவர் பாராளுமன்றத்தில்
Fine Gael திட்டத்தின்
இலக்குகள் பற்றி உறுதி அளித்துள்ளதே ஒழிய அனைத்துக் குறிப்பான விதிகள் பற்றியும்
அல்ல என்றார்.
Fine Gael
பகிரங்கமாகத்
தான் அடிப்படை ஊதியத்தில் கொண்டுவரப்பட்டுள்ள குறைப்பை மாற்ற இருப்பதாகக்
கூறியுள்ளது.
ஆயினும்கூட இக்கட்சி அடுத்த ஆண்டு
6 பில்லியன் ஈரோக்கள்
வெட்டுக்களை வரவு-செலவுத் திட்டத்தில்
“முன்னுரிமையாக இருப்பதற்கு”
ஆதரவைக் கொடுத்துள்ளது.
அரசாங்கம் திட்டமிட்டுள்ள பொதிக்கு ஆதரவை இன்னும் ஒரு வார காலத்தில் கொடுக்கும்
வாய்ப்பு உண்டு என்பதைத் தெரிவித்துள்ளது.
திட்டத்தின் முக்கிய
கூறுபாடுகளை தொழிற் கட்சியும் ஏற்றுள்ளது. இது வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை
2014க்குள் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 3
சதவிகிதத்திற்கு குறைக்கும்
நோக்கத்தைக் கொண்டது. RET
News க்கு வியாழனன்று கொடுத்த
பேட்டியில் தொழிற் கட்சித் தலைவர்
Eamon Gilmore
தாங்கள் அரசாங்கத்தில் இருந்தால்,
தன்னுடை கட்சி வரவு-செலவுத்
திட்ட முடிவுகளை ஒவ்வொரு பிரிவாக
“அப்பட்டமாக நியாயமற்றவையா”
என ஆராயும் என்றார்.
தொழிற் கட்சி இப்பொழுது
அதன் உறுதிமொழியான வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தின் எந்தப் பிரிவின்
முடிவுகளையும் மாற்றப்போவதில்லை என்பதில் இருந்து பின்வாங்குகிறதா என்று சவால்
விடப்பட்டபோது,
கில்மோர் அத்தகைய கருத்தை
நிராகரித்து,
குறிப்பிட்ட பகுதிகளின் மீதான
கண்ணோட்டம் அது என்றார். “வரவிருக்கும்
தேர்தலில் எவரும் தேர்தலுக்கு பின் நிறைவேற்ற முடியாத உறுதிமொழிகளை அளிக்க முடியும்
என நான் நினைக்கவில்லை”
என்றார்.
தொழிற் கட்சி
இப்பொழுதும்
2011 ல்
6 பில்லியன் ஈரோக்கள்
வெட்டுக்கள் மிக அதிகம் என்றுதான் கருதுகிறது—இது
மாறாக 4.5
பில்லியன் ஈரோக்கள் என்பதை
முன்வைக்கிறது.
ஆனால் இத்தகைய கருத்து வேறுபாடுகள்
பொருளற்றவை.
ஐரிஷ்
டைம்ஸில்
Stephen Collins
எழுதியுள்ளதுபோல், “இந்த
எண்ணிக்கை ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் மற்றும்
IMF ஆல் ஒப்புக் கொள்ளப்பட்டது
என்ற உண்மை இருக்கையில்,
அது எப்படித் தவிர்க்கப்பட
முடியும் என்பது புரியவில்லை.
Fine Gael க்கும் தொழிற்
கட்சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டுத் திறன்கள் வரவு-செலவுத் திட்டம் இயற்றுகையில்
பூசி மெழுகப்படும். ஏனெனில் இரு கட்சிகளும் பெப்ருவரி அல்லது மார்ச் மாதம்
நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு பின்னர் அதிகாரத்தைப் பெற்றால்
6 பில்லியன் ஈரோக்கள்
எண்ணிக்கைக்கு கையெழுத்துப் போடுவதைத் தவிர வேறு விருப்புரிமை இல்லை.”
செய்தி ஊடகமும் அரசியல்
ஸ்தாபனமும் பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும்
அவருடைய உறுதிப்பாடு பற்றி கோவனுக்கு ஆதரவாக நிற்கின்றன.
அதே கட்டுரையில் கோலின்ஸ்
கோவனின் நான்காண்டு திட்ட அளிப்பை,
“ஒரு உறுதியான செயல்பாடு”,
தேவைப்படும்
“கடின,
கசப்பான மருந்து”
செலுத்தப்பட துணையாகிறது என்று கூறியுள்ளார்.
சில
நாட்களுக்கு முன்புதான் செய்தி ஊடகமும் அரசியல் எதிர்க்கட்சிகளும் கோவனுடைய அரசியல்
போக்கு முடிந்துவிட்டது என்று அறிவித்திருந்தன. எதிர்க்கட்சிகள் ஒரு படி மேலே
சென்று பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் நாடின.
Fine Gael
மற்றும் தொழிற்
கட்சி திட்டத்தின் சில கூறுபாடுகளைக் குறைகூறுவது சிக்கன நடவடிக்கைகளுக்கு
மக்களிடையே உள்ள பெரும் எதிர்ப்பைச் சமாதானப்படுத்துவதற்கு ஆகும்.
சனிக்கிழமை
ICTU எனப்படும் அயர்லாந்து
தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பு விடுத்திருந்த டப்ளின் ஆர்ப்பாட்டத்திதல் நாடு
முழுவதில்லுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளுவர் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
ICTU
ஏற்கனவே கிட்டத்தட்ட
2008ல் இருந்து
15 பில்லியன் ஈரோக்கள்
வெட்டுக்கள் அரசாங்கத்துடன் அது கொண்ட வேலைநிறுத்தமின்மைக்கு உடன்பட்ட
Croke Park Agreement படி
சுமத்தப்பட ஒத்துழைத்துள்ளது.
ஆனால் அதிகாரத்துவத்திற்குள்
இருக்கும் முக்கிய நபர்கள் சமூக அமைதியின்மையினால் ஏற்படக்கூடிய ஆபத்து பற்றி
எச்சரித்துள்ளனர். இவற்றை தொழிற்சங்கங்கள் தடுக்க உறுதி கொண்டுள்ளன.
பொதுச் சீற்றத்தில்
மற்றொரு வெளிப்பாடு வியாழனன்று டோனெகல் தென்மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் வந்தது.
அங்கு பெரும் அரசாங்க-விரோத
வாக்களிப்புத்தான் நடைபெற்றது.
Fianna Fail தன் வாக்காளர்
ஆதரவை 50
சதவிகிதத்தில் இருந்து கிட்டத்தட்ட
21 என இழந்துவிட்டதால்
தொகுதியை இழந்துவிட்டது.
இந்த இழப்பையொட்டி
கூட்டணியின் பெரும்பான்மை வரவு-செலவுத் திட்ட வாக்களிப்பிற்கு முன்
2 இடங்கள்தான் என்று உள்ளது.
வரவு-செலவுத் திட்டத்தை
இயற்றவதற்கு இதற்கு 82
உறுப்பினர்கள் தேவை. தற்பொழுது
அது 76
உறுப்பினர்களைத்தான் கொண்டிருக்கிறது.
நான்கு மற்றய கூட்டணியில்
இல்லாத உறுப்பினர்களின் ஆதரவையும் அது நம்ப முடியும். அப்படியும் தேவையான
பெரும்பான்மை எண்ணிக்கை இல்லை.
டோனேகல் தேர்தல்
முடிவின் முக்கிய ஆதாயத்தை
Sinn Fein பெற்றுக்கொண்டதாகும்.
இதன் வேட்பாளர் Pierce
Doherty கிட்டத்தட்ட
வாக்களித்தவர்களில் 40
சதவிகித ஆதரவைப் பெற்றார்.
தேசிய திட்டம் பற்றிய
Sinn Fein உடைய விமர்சனங்கள்
அதற்குச் சில செல்வாக்குகளை அளித்துள்ளது. குறிப்பாக உயர்மட்ட வருமானம்
உடையவர்களின் வருமான வரிவிகிதிம் ஒரு புதிய
48 சதவிகிதமாக இருக்க வேண்டும்
என்பது.
உண்மையில்,
Sinn Fein செலவுகளைக் குறைக்க
வேண்டிய தேவைக்கு ஆதரவைத்தான் கொடுக்கிறது. இது ஒரு நீண்ட கால அளவில் பரந்து
செய்யப்பட வேண்டும் என்றுதான் வாதிடுகிறது.
இம்மாதம் முன்னதாக வெளியிட்ட
அதன் பொருளாதாரத் திட்டத்தில்
Sinn Fein வரி உயர்வுகள்
மற்றும் செலவு வெட்டுக்கள் மூலம்
5
பில்லியன் ஈரோக்கள் திரட்டுவதற்கு
கோடிட்டுக் காட்டியுள்ளது.
இது புதிய வரிவிதிப்பு
நடவடிக்கைகளில் 4.1
பில்லியன் ஈரோக்கள் என்றும் செலவுக்
குறைப்புக்களில் 1
பில்லியன் ஈரோக்கள் சற்று மேல் என்றும்
உள்ளது.
பிந்தையது
“வீண் செலவுகளைத்”
தவிர்த்தல் என்பதின் மூலம்
அடையப்பட முடியும் என்று கருதப்படுகிறது.
Sinn Fein
உடைய
பொருளாதாரத் திட்டம் முழுவதுமே மொத்தமாக நெருக்கடிக்கு தீர்வு ஏதும் கொடுக்கவில்லை.
அடுத்த மூன்றரை ஆண்டுகளில்
பொருளாதார ஊக்கப்பொதி 7
பில்லியன் ஈரோக்களாக இருக்கும்
என்ற முன்கருத்தை அது கொண்டுள்ளது. இதற்கு நிதியம் தேசிய ஓய்வூதிய நிதியிலிருந்து
பணத்தை அகற்றுவதில் மூலம் என்றும் கூறுகிறது.
இது பொருளாதாரத்தை மீண்டும்
உறுதியான வளர்ச்சிக்கு மீட்க அனுமதிக்கும் என்று கூறுகிறது.
மேலும் வடக்கு
அயர்லாந்தில்,
Sinn Fein அரசாங்கத்தில்
Democrtic Unionist Party உடன்
அரசாங்க அதிகாரத்தைக் கொண்டுள்ள பகுதியில்,
6 சதவிகிதத்திற்கும் மேலாக
செலவுகளை வெட்டும் வரவு-செலவுத் திட்டத்தை செயல்படுத்தும் திட்டங்கள் உள்ளன என்பது
குறிப்பிடப்பட வேண்டும். |