சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Police attack students involved in nationwide protests in UK

பிரிட்டனில் நாடு தழுவிய எதிர்ப்பு  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸ் தாக்குதல்

By Robert Stevens
26 November 2010

Use this version to print | Send feedback

பல ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களும் மற்றும் பள்ளியில் படிக்கும் வயதிலுள்ள இளைஞர்களும் புதனன்று இங்கிலாந்து முழுவதும் உயர்த்தப்பட்டுள்ள கல்விக் கட்டணம் மற்றும் உயர்கல்வியில் கூடுதலான வெட்டுக்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

கிட்டத்தட்ட 10,000 பேர் கலந்து கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் லண்டனில் நடைபெற்றது. பர்மிங்காம், மான்செஸ்டர், ஆக்ஸ்போர்ட், லீட்ஸ், ஷெப்பீல்ட், நியூகாஸ்டில், போர்ன்மத், கிளாஸ்கோ மற்றும் கார்டிப் போன்ற சிறு நகரங்கள், பெரிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பலரும் உயர்கல்வி மாணவர்கள் 16ல் இருந்து 18 வயதிற்குள் இருப்பவர்கள் ஆவர். சீருடையில் இருந்த பல மாணவர்களும் வகுப்புக்களில் இருந்து வெளியேறி லண்டன், மான்செஸ்டர், ஷெபீல்ட், வின்செஸ்டர் மற்றும் லீட்ஸ் நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை ஆதரித்தனர். இவ்வயதுக் குழுவினர் ஆர்ப்பாட்டத்திற்காக எழுப்பிய பிரச்சினைகளில் அரசாங்கத் திட்டங்களால் கல்விப் பராமரிப்பு உதவிப் படியை அகற்றுதல் எதிர்ப்பும் இருந்தது. இது தற்பொழுது குறைவூதிய மாணவர்களுக்கு வாரம் 30 பவுண்டுகள் வரை உதவித் தொகையாக முழு நேரக்கல்வி முறைக்கு, பள்ளியைவிட்டு 16 வயதில் நீங்கியபின் கொடுக்கப்படுகிறது.

புதன்கிழமை நடைபெற்ற எதிர்ப்புக்கள் பெரும்பாலும் தற்காலிக அடிப்படையில் கல்விமுறை மீது அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்து வெளிவந்துள்ள உள்ளூர் அமைப்புக்களால் நடத்தப்பட்டன. வீட்டில் தயாரிக்கப்பட்ட பதாகைகள், கோஷ அட்டைகள் ஆகியவை இவற்றிற்குச் சான்றாக இருந்தன. இளைஞர்களும் மாணவர்களும் தேசிய மாணவர்கள் சங்கம், பல்கலைக்கழக, கல்லூரி சங்கங்கள் மற்றும் எதிர்கட்சியான தொழிற் கட்சி ஆகியவை மீது கொண்டுள்ள இகழ்வுணர்வின் தெளிவான வெளிப்பாடாக இந்த எதிர்ப்புக்கள் இருந்தன. அவை அனைத்தும் அரசாங்கத்துடன் சேர்ந்து இரு வாரம் முன்பு லண்டனில் நடத்திய மாணவர் எதிர்ப்புக்களைக் கண்டித்தன. அவையும் அதைத்தொடர்ந்து ஏதும் செய்யவும் இல்லை.

லண்டனில் எதிர்ப்பாளர்கள் நண்பகலில் Trafalgar சதுக்கத்தில் கூடினர். அதன் பின் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிர்வாக மையம் இருக்கும் Whitehall க்குப் புறப்பட்டனர். எந்த நிகழ்வும் இன்றி அணிவகுப்பு சீராக நடந்திருக்க வேண்டியதாகும். ஆனால் பொலிசார் சிக்கன நடவடிக்கை, வெட்டுக்கள் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இதை ஒரு முன் உதாரணமாக காட்ட விரும்பினர். இரு வாரங்களுக்கு முன்பு அரசாங்கம் தூண்டிவிட்டு நடந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான கடும் வேட்டையைப் போல் இதையும் மேற்கொள்ள விரும்பினர்.

இறுதியில் நகரசபை பொலிசார் புதன் ஆர்ப்பாட்டத்தை பெரிய அளவில் முக்கியமாக பள்ளிக்குச் செல்லும் இளைஞர்களுக்கு எதிராக தாக்குதலை நடத்தப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வலிமையை காட்ட முற்பட்டனர். கடந்த தசாப்தத்தில் பொலிஸ் இதைவிடப் பெரிய அணிவகுப்புக்கள், நிகழ்வுகளை சமாளித்துள்ளது. குறிப்பாக ஆப்கானிய மற்றும் ஈராக்கியப் போர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை.

லண்டன் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, முன்னாள் நகரசபை பொலிசின் ஆணையர் பிரயன் பாடிக், பொலிஸ் எதிர்ப்பாளர்கள் மீதுசமையலறைக் கழிவைவீசி எறியும் என்றார். நகரசபை பொலிசார் 1,500 அதிகாரிகளை லண்டன் அணிவகுப்பினரை கட்டுப்படுத்தத் திரட்டினர்இது இரு வாரங்களுக்கு முன்பு இருந்த அதிகாரிகளைப் போல் 7 மடங்கு அதிகம் ஆகும். இவர்களுள் Territorial Support Group, மெட்ரோ கலகம் அடக்கும் பிரிவுப் பொலிஸ் ஆகியோரும் இருந்தனர்.

கடந்த ஆண்டு G-20 ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்பட்டபோது பெரிதும் கண்டனத்திற்கு உள்ளான சுற்றிவளைத்துவிடும்மூலோபாயம் என்ற இழிந்துவிட்ட முறை மீண்டும் வந்ததைத்தான் புதன்கிழமை கண்டது. சுற்றிவளைத்துவிடுவது “kettling” என்பது ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை சிறு பகுதியில் பல மணி நேரம் உணவு, குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமல் சூழ்ந்து அடைத்துக் கொள்ளும் முறையாகும். இது முறையான சட்ட வழியில்லாமல் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டாயச் சிறைவைப்பது போலாகும். இந்த நடவடிக்கைகளின் விளைவாக கடந்த G20 எதிர்ப்புக்களின் போது பணியில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த செய்தித்தாள் விற்கும் Ian Tomlinson என்பவர் பொலிசின் மிருகத்தன்மையினால் கொல்லப்பட்டுவிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டம் பொலிசால், அது பாராளுமன்ற சதுக்கத்தை அடையுமுன், வொயிட்ஹாலில் நிறுத்தப்பட்டது. லிபரல் டெமக்ராட்டுகள் தலைமையகத்திற்கு செல்லும் பாதையும் மூடப்பட்டது. அணிவகுப்பாளர்கள் அங்கும் துணைப் பிரதம மந்திரி நிக் கிளெக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் திட்டத்தைக் கொண்டிருந்தனர். அவர் பொதுத் தேர்தலுக்கு முன்பு லிப் டெமக்ராட்டுக்கள் கல்விக் கட்டணத்தில் எதிர்ப்பிற்கு எதிராக வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால் கன்சர்வேடிவ்களுடன் பங்கு கொண்டு அதிகாரம் ஏற்பதற்கு முன்னரே இக்கொள்கை தனியே கைவிடப்பட்டது. லிபரல்கள் ஆண்டு ஒன்றிற்கு 9,000 பவுண்டுகள் என மும்மடங்கு உயரும் கட்டண உயர்விற்கு ஆதரவைக் கொடுத்தனர்.

மூடப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், வொயிட்ஹால் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டவர்கள், பின் கைத்தடிகளினால் தாக்கப்பட்டனர். மாலை 6 மணிக்குப் பின்னர் பொலிஸார் இறுதியில் 1,000 ஆர்ப்பாட்டக்காரர்களை அடைக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளியேற அனுமதித்தனர். டிரபால்கர் சதுக்கத்திற்கு அருகே குதிரைப்படை பொலிசார் தாக்கியதில் கூடுதல் வன்முறை வெளிப்பட்டது. சில எதிர்ப்பாளர்கள், பள்ளிச் சிறுவர்கள் உட்பட, நள்ளிரவில் தெருவில் கைது என்பதற்கு ஒப்பான விதத்தில்  இன்னும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

நகரபொலிசார் தலைநகரத்தில் 29 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று கூறியுள்ளனர். BBC “11 பொலிசார்காயமுற்றனர் என்று தகவல் கொடுத்துள்ளது.

வெப்பநிலையின் அளவு கிட்டத்தட்ட பூஜ்யம் என்று சரிந்த அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வலதுசாரி டெய்லி மெயில்சில பள்ளிச் சிறுவர்கள் தங்கள் புத்தகங்களில் இருந்து பக்கங்களைக் கிழித்து எரியவிட்டனர், மற்றும் சிலர் வீட்டில் செய்யப்பட வேண்டிய பயிற்சிகளைச் செய்தனர் என்றும் தாங்கள் குளிரில் வாடுவதாகவும், களைப்புடனும் பசியுடனும் இருப்பதாகக் கூறினர் என்றும் தெரிவித்துள்ளது.

இச்சூழ்நிலையில் எதிர்ப்பாளர்களை பல மணி நேரம் சுற்றிவளைத்துப் போட்டமை தொடர்புடையவர்களின் பாதுகாப்பு, உடல் நலம் ஆகியவற்றிற்கு ஆபத்தைக் கொடுத்தது. இதுபற்றி வொயிட்ஹாலில் நடவடிக்கை தொடங்கியபோதே பொலிசார் நன்கு அறிந்திருந்தனர். Sky News இடம் பேசிய முன்னாள் நகர பொலிஸ் பொது ஒழுங்கு உளவுத்துறை அதிகாரி கிரஹாம் வெட்டோன்இது ஒரு வெற்றிகரமான நடவடிக்கை. நீங்கள் எகிறிக் குதித்துக் கொண்டிருக்கும்போது சூடாக இருக்கும்; ஆனால் அசையாமல் நின்றால் விரைவில் குளிரில் நடுங்க நேரிடும்என்றார்.

நகர பொலிசின் முன்கூட்டிய உளவுப்பிரிவுக் குழுக்களும் வொயிட்ஹாலில் மாணவர்களை சுற்றிவளைப்பதற்கு முன்பும் அங்கு இருந்தபோதும் புகைப்படங்களை எடுத்தனர்.

பொலிஸ் மிருகத்தன நிகழ்ச்சிகளும் மான்செஸ்டர் போன்ற பிற நகரங்களிலும் நடைபெற்றன. அங்கு ஆர்ப்பாட்டக்காரர்களை பெரிய பொலிஸ் கும்பல் தாக்கியது. இதில் குதிரைப்படை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதும் அடங்கும். ஆக்ஸ்போர்ட் சாலையில் நடந்த அமரும் போராட்டம் எதிர்ப்பாளர்களைக் கட்டாயமாக அகற்றுவதற்கு வழி வகுத்தது. ஒரு மாணவர் கார்டியனிடம் கூறினார்: “மோதல்கள் அடிக்கடி நடந்தன. பல பெண்களுடைய தலைமுடியும் பொலிசால் பற்றி இழுக்கப்பட்டன, ஒரு ITV செய்தியாளர் பொலிசாரால் புகைப்படம் எடுத்ததற்காக விரட்டப்பட்டார்.

இதற்குப் பின் நாங்கள் தன்னார்வத்துடன் ஆக்ஸ்போர்ட் சாலைக்கு நடந்தோம். பொலிசார் Rusholme க்கு அருகே சாலையைத் தடுப்புச்செய்து, எதிர்ப்பாளர்களைத் தாக்கி, சாலைகளில் செல்ல முயன்றவர்களைக் கைது செய்வதாக மிரட்டினர்.

இந்த மாலை எதிர்ப்பில் நிறைய மக்களை கைது செய்யப்பட்டதுபோல் தோன்றியது. Oxford சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் நின்று போயிருக்கும்.”

கடந்த சில வாரங்களாக செய்தி ஊடகம் அரசாங்கத்துடன் பெரிதும் இணைந்து ஒப்புமையில் சிறு அளவிலான உடைப்புக்கள், மீறி நடத்தல் என்று இரு வாரங்களுக்கு முன்பு நடந்தவற்றைக் கண்டித்தது. இது வெட்கம் கெட்ட முறையில் புதனன்றும் தொடர்ந்தது. அரசாங்க ஒலிபரப்பு அமைப்பான BBC கிட்டத்தட்ட பிரச்சார அமைச்சரகம் போல் செயல்பட்டது. லண்டன் எதிர்ப்பை BBC நேரடி ஒளிபரப்பாகக் காட்டியது, பொலிஸ் நடவடிக்கையை பாராட்டும் ஒவ்வொரு வாயப்பையும் பயன்படுத்தி, ஆர்ப்பாட்டக்காரர்களைக் குற்றமும் கூறியது.

“Look East” உடைய Anna Todd, ஒரு அறிக்கையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக செனட் மன்றத்தில் நடந்த உள்ளிருப்பு எதிர்ப்பில்  கலந்து கொள்ளும் முயற்சியில் தடுப்புக்களை தாண்டிக் குதித்துச் சென்ற மாணவர்களைப் பற்றிய கருத்தில், தொடர்புடையவர்களைஇழிந்தவர்கள்என்று குறிப்பிட்டார்.

மாணவ எதிர்ப்பாளர்களை வன்முறைக் குண்டர்கள், தீவிரவாதிகள் என்று சித்தரிப்பது வாடிக்கையாக அரசாங்கத்தில் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வெளிப்படும் தீவிரமான எதிர்ப்புக்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் குற்றத் தன்மையாக்குவதற்கு வாடிக்கையாகப் பயன்படுத்தப்படும் முறையாகிவிட்டது. புதன் கிழமை எதிர்ப்புக்கள் நடைபெற்று வந்தபோதே, கல்வி மந்திரி மைக்கேல் க்ரோவ் லண்டன் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் முழு ஆற்றலுடன் செலுத்தப்பட வேண்டும் என்று கோரினார்.

 “அரசாங்கம்…. வன்முறையால் நாங்கள் அக்கொள்கையைக் கைவிட்டால் முற்றிலும் தவறான கருத்தை அது அனுப்பிவிடும், விவாதங்களுக்கு நான் விடையிறுப்பேன், வன்முறைக்கு அல்ல.” என்று கோவ் அறிவித்தார்.

எதிர்ப்பாளர்களுக்கு விளம்பரம் என்னும் மூச்சுக்காற்றுஊடகத்தால் மறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இச்சொற்றொடர் கன்சர்வேடிவ் பிரதம மந்திரி மார்க்கரெட் தாட்சரால் 1985ல் அவர் பயங்கரவாதிகள், கடத்தல்காரர்கள்என்று கண்டனம் செய்த IRA வைப் பற்றிக் குறிப்பிடப்பட்டதாகும்.

மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் எதிர்ப்புக்கள் தொடர்கின்றன. குறைந்தது 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளாவது புதனன்று ஆக்கிரமிக்கப்பட்டன. இவற்றுள் Oxford பல்கலைக்கழகத்தின் Bodleian Library, லீட்ஸ் பல்கலைக்கழக மாணவர் சங்கம், Aston Webb கட்டிடம் என்று பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் இருப்பது, Royal Holloway, Plymouth, Warwick, London South Bank, UCL, Essex, UWE பிரிஸ்டல், கிளாஸ்கோ, Strathclyde, Dundee பல்கலைக் கழகங்கள் அனைத்தும் அடங்கும். இவை School of Oriential and African Studies, Mancheser Metropolitan University, University of the West of England ஆகியவற்றில் புதன் ஆர்ப்பாட்டங்களுக்கு முந்தைய நாட்களிலேயே நடந்த ஆக்கிரமிப்புக்களை தொடர்ந்து வந்துள்ளன.

கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்.

இங்கிலாந்தில் மாணவர்கள் கட்டண அதிகரிப்பு, கல்விச் செலவுக்குறைப்புக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்