WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஐரோப்பா :
அயர்லாந்து
Ireland
“on
the brink of significant civil unrest”
அயர்லாந்து
“குறிப்பிடத்தக்க
சமூக அமைதியின்மையின் விளிம்பில் உள்ளது”
By
Chris Marsden
22 November 2010
Back to
screen version
அயர்லாந்தின் மிகப் பெரிய தொழிற்சங்கங்களில் ஒன்றான
Technical Engineering and
Electrical Union (TEEU) வின்
பொதுச் செயலாளர் Eamon Devoy
“இந்நாட்டில்
குறிப்பிடத்தக்க அமைதியின்மையின் விளிம்பில் நாம் உள்ளோம்,
இப்பகுதியில் பல தசாப்தங்களில்
இதைப்போன்ற நிலைமையைப் பார்த்ததில்லை.”
என்று எச்சரித்துள்ளார்.
செவ்வாயன்று விபரமாக
முன்வைக்கப்படவுள்ள இன்னும் ஒரு
€6
பில்லியன் வரவு செலவுத்திட்ட
குறைப்புக்களின் ஒரு பகுதியைப் பற்றிப் பேசும்போது,
அவர் பின்வருமாறு
குறிப்பிட்டார்:
“ஏற்கனவே
மூன்று மிருகத்தனமாக வரவு செலவுத்திட்டங்களில் செயல்படுத்தப்பட்ட
€14.5
பில்லியன் வெட்டுக்களை அடுத்து
இந்தக் கடுமையான திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளும் சுமத்தப்படும்போது,
அயர்லாந்தில் வாழ்க்கை
சகித்துக்கொள்ள முடியாதவாறு இருக்கும்.”
TEEU
மாநாடு ஒரு அவசரக்கால
தீர்மானத்தை விவாதிக்கிறது.
அது
“அரசாங்கத்தை
பொருளாதார நிர்வாகத்தில் குற்றம் நிறைந்த புறக்கணிப்பிற்காக கண்டிப்பதுடன் நாம்
எதிர்கொண்டுள்ள நெருக்கடியின் தீவிரம் பற்றி அயர்லாந்து மக்களைத் தவறாகத்
திசைதிருப்புவதில் வங்கிகளுடன் இணைந்து அது செயல்படுவது பற்றியும் கண்டிக்கிறது.”
TEEU
தீர்மானம்
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை “பொருளாதார
நாசவேலைக் கொள்கை”
என்று விவரித்துள்ளது.
இது
“நம்
நாடு காட்டிக்கொடுக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளதுடன்,
நம் பொருளாதார இறைமையின்
கடைசிக் கூறுகளையும் இழக்கச் செய்துவிட்டது.”
அரசாங்கம் இராஜிநாமா செய்ய
வேண்டும் என்றும் ஒரு பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுத்து,
அயர்லாந்து தொழிற்சங்கங்களின்
கூட்டமைப்பு (ICTU)
“தேர்தலைக்
கட்டாயப்படுத்துவதற்கு ஒத்துழையாமை இயக்கம் ஒன்றிற்கு”
தலைமை தாங்க வேண்டும் என்றும்
கூறியுள்ளது.
இத்தகைய அறிக்கைகள்
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் வாழ்வின்மீது தொடுக்கப்பட்ட பேரழிவுத்
தாக்குதல்களின் மீதான தீவிரமான சீற்றத்தின் பிரதிபலிப்பாக வெளிவிட்ப்பட்டுள்ளன.
உண்மையில் இவை தொழிற்சங்க
அதிகாரத்துவம் பெரு வணிகத்தின் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராகத் தொழிலாளர்
வர்க்கம் சுயாதீனமாக திரள்வதற்கான சாத்தியப்பாட்டை தடுக்கும் முயற்சிதான்.
தொழிற்சங்கங்கள் சமூக,
அரசியல் அதிருப்திகளை
அயர்லாந்தின் இறைமையை அடித்தளமாக கொண்ட ஒரு தேசியவாதப் பிரச்சாரமாக்குகின்றன.
ஐரோப்பிய மத்திய வங்கி,
ஐரோப்பிய ஆணையம் மற்றும்
சர்வதேச நாணய நிதியம்,
சாத்தியமான வகையில்
பிரிட்டனும்கூட அயர்லாந்தின் வங்கித்துறை பிணையெடுப்பிற்கு திட்டமிட்டுள்ள விலையான
அயர்லாந்துத் தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களின் அளவு
அதிர்ச்சியூட்டுமளவிலுள்ளது.
சமீபத்தில் திட்டமிடப்பட்டுள்ள
பொதியின் தொகை €100
பில்லியன் என்றுகூடப் போகலாம்.
இது அயர்லாந்தின் வங்கிகளை
மீட்பதற்காக தெளிவாகத் தோற்றுவிட்ட நடவடிக்கைகளையும் தொடர்ந்து வருகிறது;
அப்பொழுது டப்ளின்
சிக்கலுக்குள்ளான சொத்துக் கடன்களை அரசாங்க உடைமையாக்கிக்கொண்டு,
அவற்றை முற்றாக தேசியமயமாக்கி,
முதலீடுகள் பாதுகாக்கப்படும்
என்று சர்வதேச பங்குபத்திரம் வைத்திரப்போருக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளித்ததற்கான
விலையை தொழிலாள வர்க்கம் கொடுக்குமாறு சுமத்தியது.
தற்பொழுது,
வங்கிகளுக்கு ஆதரவு
கொடுப்பதற்கான செலவுகள் அயர்லாந்தின் பற்றாக்குறையை நாட்டின் மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் (GDP)
இந்த ஆண்டு
32
சதவிகிதம் வரை உயர்த்தும் என்று
கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அளவு உயரத்தான் செய்யும்;
ஏனெனில் வங்கிகள் செயல்பட
வேண்டும் என்பதற்காக பில்லியன் கணக்கில் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தால் அவற்றுள்
உட்செலுத்தப்படுகின்றன.
ஏற்கனவே அயர்லாந்து,
யூரோப்பகுதியில் சொத்துக்களை
பணமாக மாற்றும் வகையில்
(liquidity) ஐரோப்பிய மத்திய
வங்கி (ECB)
உட்செலுத்திய கண்ணில் நீரை வரவழைக்கும்
130
பில்லியன் யூரோ என அக்டோபர் இறுதியில்
கொடுத்துள்ள கடன்களைப் பெற்றுள்ளது.
இவ்வாறு இருந்தும்கூட
அயர்லாந்து வங்கிகள் பத்திரச் சந்தைகளின் முதலீட்டாளர்கள்
7
சதவிகிதத்திற்கும் அதிகமாக வட்டி
கோருவதால் முடங்கி நிற்கின்றன.
இதன் விளைவாக,
வங்கிகள் ஐரோப்பிய
மத்திய வங்கியில் இருந்து
பெறக்கூடிய ரொக்கத்தின் உச்சவரம்பை அடைந்துவிட்டது.
இது அயர்லாந்தின் மத்திய
வங்கியை அசாதாரண சொத்துக்களை பணமாக மாற்றும் உதவிக்கு
20
பில்லியன் யூரோவைக் கடன் கொடுக்க
வைத்துள்ளது.
நாட்டின் இரண்டாம் பெரிய வங்கியான
Anglo Irish Bank
வெள்ளியன்று அதன் வாடிக்கையாளர்கள்
இந்த ஆண்டு €13
பில்லியன் சேமிப்புக்களை
திரும்பப் பெற்றுவிட்டதாகக் கூறியுள்ளது;
இது
17
சதவிகித இருப்புச் சரிவைக் காட்டுகிறது;
மேலும் ஜூன் மாதத்தில் இருந்து
மத்திய வங்கியிடம் நம்பியிருக்கும் தன்மையை மும்மடங்காக ஆக்கிவிட்டது.
Bank of Ireland கடந்த மூன்று
மாதங்களில் சேமிப்புக்கள் 12
சதவிகிதம் குறைந்துவிட்டன என்று
கூறியுள்ளது.
அயர்லாந்தின்
4.5
மில்லியன் மக்கள் ஏற்கனவே தலைக்கு
12,500
யூரோ என்று பிணையெடுப்புச் செலவுகளைச்
சுமக்கின்றனர்.
திட்டமிடப்பட்டுள்ள மீட்புப் பொதி இதை
30,000
யூரோக்கும் மேல் உயர்த்தும்,
இன்னும் இது அதிகமாகும்.
இது வேலை இழப்புக்கள் மூலம்
கொடுக்கப்படுகிறது,
வேலையின்மை தற்பொழுது
14%
என்று உள்ளது;
ஊதியக் குறைப்புக்களினால்
வருமானங்கள் 20
சதவிகிதம் குறைந்துவிட்டன,
மேலும் பொதுப்பணிச்
செலவினங்களும் தகர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் ஏற்கனவே வந்துள்ள
14
பில்லியன் யூரோ வெட்டுக்கள் மற்றும்
6
பில்லியன் யூரோ என்று இந்த ஆண்டு
15
பில்லியன் யூரோ தொகுப்பில் அடுத்த
நான்கு ஆண்டுகளின் ஒரு பகுதியாகத் திட்டமிடப்பட்டுள்ளதும்,
பத்திரச் சந்தைகளின் தேவையைப்
பூர்த்தி செய்ய முடியாது.
அயர்லாந்து தொழிலாளர்கள் பெரும்
வறிய நிலையில் இருக்க வேண்டும்,
தற்கால வகையில் அடிமைகள் போல்
வாழவேண்டும் என்பதுதான் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுடைய கோரிக்கைகளுக்கு நிதி
கிடைப்பதற்கான வழிவகையாக உள்ளது.
இச்சூழ்நிலையில்
தொழிற்சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் அயர்லாந்து முதலாளித்துவத்தை பெரும்
பள்ளத்தில் விழுந்துவிடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
“அயர்லாந்து
வெற்று நாடாகப் போகும் ஆபத்து உண்மையாக உள்ளது,
மதிப்பிழந்த அரசியல் உயரடுக்கு
பெயரளவு அதிகாரத்தைத்தான் கொண்டுள்ளதுடன்,
அதே நேரத்தில் சீற்றம் நிறைந்த,
சீர்குலைந்த,
பெரும் கடனுள் ஆழ்ந்துள்ள,
இல்லாதுபோய்க்கொண்டிருக்கும்
வேலைகளை அதிகளவில் தேடியோடும் வறிய நிலையில் மக்கள் உள்ளபோது அதற்கு எவ்விதமான
சட்டபூர்வ தன்மையுமில்லை”
என்று
Observer
பத்திரிகை
எச்சரித்துள்ளது.
இது ஒரு பொதுத்
தேர்தலுக்கான கோரிக்கைக்கு ஆதாரம் ஆகும்.
இதனால் அரசாங்கம்
வெட்டுக்களைச் செய்வதற்கு ஆதரவை தேர்தலில் பெற்றுக்கொள்ளமுடியும்.
ஆனால்
Fianna Fail
இக்கோரிக்கையை ஏற்றாலும்
ஏற்காவிட்டாலும்,
தொழிற்சங்கங்களின் பங்கு முதலாளித்துவ
முறையை எதிர்த்து அரசியல் சவால் வருவதைத் தடுத்து நிறுத்துதல் என்றுதான் உள்ளது.
தேர்தலுக்கான தன்
அழைப்பில்,
Devoy தொழிற்சங்க உறுப்பினர்கள்
“தொழிலாளர்களின்
தேவைகளை தீர்க்க முடியும் என்று கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்”
என்று கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில்
பெருவணிகத்தின் அரசியல் பிரதிநிதிகள் மேலாதிக்கம் நிறைந்துள்ள நிலையில் அத்தகைய
கட்சி எதுவும் இல்லை. Fine Gael
தொழிற்கட்சியுடனும்
Sinn Fein
உடனும் இணைந்துள்ளது.
ஏனெனில் அது தேசியவாதத்தை
முன்வைக்கின்றது.
இந்த உள்ளடக்கத்தில்தான் அயர்லாந்தின்
12.5
சதவிகிதப் பெருநிறுவன வரிவிகிதத்தை
தக்கவைக்கும் பிரச்சினைக்கு முக்கியத்துவம் காட்டுவதை அது முன்வைத்துள்ளது.
அடுத்த வாரம்
குடியரசின் குறைந்த பெருநிறுவனங்கள் மீதான வரியைக் பாதுகாப்பதற்கு ஒரு பாராளுமன்றத்
தீர்மானத்தை
Fine Gael
முன்வைக்கும்.
இதைத்தான் அது
1990
களில் அது தொழிற்கட்சியுடன்
அரசாங்கத்தை அமைத்தபோது அறிமுகப்படுத்தியது.
இது பிணையெடுப்பிற்கு
ஈடுசெய்யும் வகையில் தியாகம் செய்யப்படக்கூடும் என்ற அச்சம் உள்ளது.
தன்னுடைய பங்கிற்கு
Fianna Fail
இப்பிணையெடுப்பு முறையைப் பல வாரங்கள்
பெரிதும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஏனெனில் பிரான்ஸும் ஜேர்மனியும்
பெருநிறுவன வரியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.
அரசாங்கம்
பெருநிறுவனங்களின் ஆணைகளுக்கு கட்டுப்பட்டு இயங்கும் திறனைக் கொண்ட ஒரு கருவி
என்னும் வகையில் இப்படித்தான்
“அயர்லாந்தின்
இறைமை”
இப்பொழுது
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து முக்கிய
நிறுவனங்களான கூகிள்,
பேஸ்புக்,
மைக்ரோசாப்ட் போன்ற பெரிய
நிறுவனங்களை டப்ளினுக்கு ஈர்த்துள்ளது.
ஆனால் பெருநிறுவன வரி இப்பொழுது
மிகக்குறைவாக இருப்பதால் அது இந்த ஆண்டு
€2.6
பில்லியன்தான் ஈட்ட முடிந்தது.
கூகிளின் அயர்லாந்துப் பிரிவுத்
தலைவர் John Herlihy
“பெருவணிக
வரியை உயர்த்துதல் உட்பட”
வணிகச் செலவுகளை அதிகரிக்கும்
எந்த நடவடிக்கையும்,
“கூகிளைப்
பொறுத்தவரை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படும்”
என்று எச்சரித்துள்ளார்-இந்ந
நிலைப்பாட்டைத்தான் இன்டெல் மற்றும் அமெரிக்க வணிகக் குழு ஆகியவையும் எடுத்துள்ளன.
குறைவூதிய பிரிவினர்
மீது வரிகள் அதிகரிக்கப்பட்டால் ஒரு விட்டுக்கொடுக்கும் அடித்தளத்திலான பெருநிறுவன
வரி சாத்தியம் என்று
Fianna Fail
வெளிப்படையாக வாதிடுகிறது.
எதிர்க்கட்சிகளும்
தொழிற்சங்கங்களும் சற்றே குறைவான நேர்மைத் தன்மையைக் கொண்டு இந்த உண்மையை
மறைப்பதற்காக அயர்லாந்தின் தேசிய விடுதலைக்காக பிரிட்டனுக்கு எதிராகப் பாடுபட்ட
போராட்டங்களை நினைவுகூருகின்றன.
ICTU கருத்துப்படி,
“வெட்டுக்கள்
கொண்டுவரப்படுவதைவிடச் சிறந்த,
நியாயமான வழிவகைகள் உள்ளன”
என்று உள்ளது.
அரசாங்கத்தை
“குற்றத்தன்மை”
உடைய பொருளாதாரத்தைத் தவறாக
நிர்வகித்தது,
“வங்கிகளுடன்
உடந்தையாக இருப்பது”
என்று
Devoy
கண்டிக்கையில்,
அவர் தொழிற்சங்கங்களும்
இக்குற்றத்தில் பங்காளிகள்தான் என்பதைக் குறிப்பிட மறந்து போகிறார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம்தான்
ICTU
நான்கு ஆண்டுகள் வேலைநிறுத்த தடை,
பல பில்லியன் யூரோ
குறைப்புக்கள்,
ஆயிரக்கணக்கான வேலை இழப்புக்கள்,
Croke Park உடன்பாட்டின்படி
தொடர்ந்த ஊதியத் தேக்கம் ஆகியவற்றில் கையெழுத்திட்டது.
இத்தகைய தியாகங்கள்
அயர்லாந்தைப் பொருளாதாரப் புயலில் இருந்து மீட்கும் என்றும் கூறியது.
இந்த உறுதிப்பாட்டின்
அடிப்படையில்,
தொழிற்சங்கங்கள் இரக்கமற்ற முறையில்
அப்பொழுது நடைபெற்றுவந்த பல வேலைநிறுத்தங்கள் நசுக்கி விட்டன.
ICTU
சமீபத்திய தாக்குதல்களை
அது எதிர்ப்புக் குரல்களைக் கொடுக்கும்போதே சுமத்த அழைக்கப்படுகிறது.
சுகாதார மந்திரி மேரி ஹார்னி
கிட்டத்தட்ட 1
பில்லியன் யூரோக்கள் சுகாதாரத்திற்கான
வரவுசெலவுத்திட்ட தொகையான 6
பில்லியன் யூரோக்களில் இருந்து
குறைக்கப்படும் என்ற குறிப்பைக் காட்டியுள்ளார்.
இதற்கு ஊதியத்தில்
“பெரிய
குறைப்பு”
தேவைப்படும் என்று அவர் கூறி,
Crocke Park உடன்பாடு
செயல்படுத்தப்பட வேண்டும்,
“அதுவும்
விரைவில்,”
அவை
“காலம்
கடந்துவிட்ட பணி வழக்கங்கள்,
மறு வேலைகள்,
வளைந்து கொடுக்கும் தன்மை”
ஆகியவற்றை மாற்றும் விதத்தில்
இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தொழிற்சங்கங்களின்
உண்மையான பங்கு,
நிதிய உயரடுக்கின் சார்பில்
சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதுதான்.
இதுதான் ஐரோப்பா முழுவதுமான
அனுபவமாக உள்ளது;
ஆனால் போலித்தனமான சீற்றமும் எதிர்ப்பு
அணிகளை திரட்டுவதும் கிரேக்கம்,
போர்த்துக்கல் இன்னும் பிற
இடங்களில் அரசாங்கம்,
பெருவணிகம்,
வங்கிகள் ஆகியவற்றுடன் தொழிலாள
வர்க்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பை மறைக்க பயன்படுத்தப்படுகின்றன.
அயர்லாந்தின் கடன்
நெருக்கடி முதலில்
2008ம்
ஆண்டு வெடித்த பொருளாதாரப் பேரழிவின் இரண்டாம் சுற்றின் மிக உடனடியான
வெளிப்பாடுதான்;
இது இப்பொழுது பில்லியன் கணக்கான
மக்களை உண்மையான தீயகனாவில் ஆழ்த்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.
வங்கிகளுக்கு அளிக்கப்பட்ட
டிரில்லியன் கணக்கான டாலர்கள் இப்பொழுது எல்லா நாடுகளையும் திவால்தன்மைக்கு முகம்
கொடுக்க வைக்கின்றன.
இதைத்தவிர
“இத்தொற்று”
அயர்லாந்தில் இருந்து கிரேக்கம்,
போர்த்துக்கல்,
ஸ்பெயின் ஆகியவற்றிற்கும் பரவி,
இறுதியில் ஐரோப்பா முழுவதையும்
சூழும்.
யூரோ தப்பிப்பிழைப்பது
என்பது இப்பொழுது வெளிப்படையாக கேள்விக்குரியதாகிவிட்டது.
ஆனால் இந்த நிலைமை
யூரோப்பகுதியுடன் நின்று விடாது.
குறிப்பாக பிரிட்டன் ஒரு
அயர்லாந்துச் சரிவினால் பாதிக்கப்படும்.
அயர்லாந்து இங்கிலாந்தின்
ஐந்தாம் மிகப் பெரிய வணிகப் பங்காளி ஆகும்.
பிரிட்டிஷ் வங்கிகள்
£
140
பில்லியனுக்கும் மேலாக முதலீடு
செய்துள்ளன.
பிரிட்டனில் பல்லாயிரக்கணக்கான மக்கள்
அயர்லாந்து வங்கிகளில் அடைமானம் வைத்துள்ளனர்.
இன்று ஒவ்வொரு
போராட்டமும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய அரசியல் கட்சியைக் கட்டமைப்பது,
புதிய போராட்ட வகைகளை அமைப்பது,
ஐரோப்பா,
உலகெங்கிலும் தொழிலாளர்களை
சோசலிசத்திற்காக அணிதிரட்டுவதை அடித்தளமாக கொள்வது என்ற மத்திய பிரச்சினையை
எழுப்புகிறது.
முதலாளித்துவத்தின் கீழ் கற்பனை உருவான,
தேசிய சுதந்திரம் என்பதற்காக
அல்லாது இப்போராட்டம்தான் அயர்லாந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இலக்காக
இருக்க வேண்டும். |