சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Former Nazi soldier appointed to Latvian parliamentary committee

லத்வியன் பாராளுமன்ற குழுவுக்கு முன்னாள் நாஜி சிப்பாய் நியமனம்

By Markus Salzmann
20 November 2010

Use this version to print | Send feedback

பால்ட்டிக் அரசிலுள்ள ரஷ்ய சிறுபான்மையினரை கையாள்வதற்கான பொறுப்புடைய லத்வியன் அரசாங்கத்தின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக National Socialist Waffen SS ன் முன்னாள் உறுப்பினர் நவம்பர் 8ம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

86 வயதுடைய பாராளுமன்ற உறுப்பினர்  Visvaldis Lacis, புதிய தேசிய சட்டங்களை அமூல்படுத்துவதற்கான பொறுப்புடைய பாராளுமன்றக் குழுவுக்கு தலைமை வகிப்பார். லத்வியாவிற்கே அனைத்தும் (All for Latvia! ) என்ற நவ பாசிச கட்சியின் உறுப்பினராக Lacis இருக்கிறார். அக்டோபர் 2 ஆம் தேதியன்று நடந்த தேர்தல்களைத் தொடர்ந்து அக்கட்சி பாராளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளது. ரஷ்ய மொழியை பள்ளிகளில் தடை செய்ய வேண்டும் மற்றும் அந்த நாட்டில் வசிப்பவர்களில் சுமார் கால்வாசியாகவுள்ள ரஷ்ய இனத்தவர்களை நாடுகடத்த வேண்டும் என்று அந்த கட்சி கோருகிறது. 

இரண்டாம் உலகப்போரில், Waffen SS ன் லத்வியன் லெஜனின் (Legion) முன்னாள் உறுப்பினராக சோவியத் யூனியனை எதிர்த்து போராடிய Lacis, ஹிட்லரின் ஜேர்மனியைப் புகழ்ந்தும், Waffen SS மற்றும் சோவியத் யூனியனுக்கு எதிரான போர் பற்றியும் ஏராளமான கட்டுரைகளையும், புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். லத்வியனின் நவ பாசிஸ்ட்டுகளால் போற்றப்பட்ட அவர், தீவிர வலதுசாரிக் குண்டர்கள் மற்றும் சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளுக்கு காரணமான அமைப்புகளுடன் நெருக்கமான தொடர்பை பராமரித்து வந்தார். அதுபோன்ற சக்திகளுடன் ஒன்று சேர்ந்து, 1941 ல் ஜேர்மனிய துருப்புகளால் மேற்கொள்ளப்பட்ட சோவியத் யூனியன் மேலான படையெடுப்பை Lacis வழக்கமாக கொண்டாடுகிறார். 

சோவியத் யூனியனிலிருந்து நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து நடைமுறையில் அனைத்து லத்வியன் அரசாங்கங்களும் தீவிர வலது-சாரி, கம்யூனிச எதிர்ப்புச் சக்திகளை அணிதிரட்டக் கோரியுள்ளன. சோவியத் யூனியனுக்கு எதிரான தனது சாதனைக்காக Lacis அரசாங்கத்தின் கெளரவத்தைப் பெற்றுள்ளார். ஆனாலும் ஒரு அதிகாரபூர்வ பாராளுமன்றக் குழுப் பிரதிநிதிகளின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டதானது நவ-பாசிஸ்ட்களுடனான ஒத்துழைப்பின் அளவு இதுவரை அறியப்படாமல் உள்ளதேயே குறிக்கிறது.  

39 வயதுடைய அரசாங்கத் தலைவர் Valdis Dombrovskis, தனது புதிய அரசாங்கத்தில் நவ-பாசிஸ்டுகளை சேர்ப்பதற்காக பெரிதாக முயற்சித்தாலும், அவரது சொந்த வலதுசாரிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்பு, நவ-தாராளவாத தேர்தல் உடன்படிக்கை, Unity கட்சி போன்றவற்றால் அதிலிருந்து பின்வாங்க வேண்டியதாகிவிட்டது.  

புதிய அரசாங்கத்தின் கூட்டுகள் குறித்து நான்கு வார காலம் நடத்திய விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கூட்டாட்சி தேர்தல்கள் அக்டோபர் தொடக்கத்தில் நடந்தன. பதவி விலகும் அரசாங்கத்தின் கட்சிகளான Unity கட்சி, பசுமைக் கட்சி மற்றும் விவசாயிகள் கட்சிகள் புதிய பாராளுமன்றத்தின் 100 க்கு 55 இடங்களை கோரியதோடு, பிரதமர் Dombrovskis ன் கீழ் தங்களது கூட்டணியை தொடரவும் சீக்கிரமாக ஒப்புக்கொண்டன. ஆனால் அதற்கு பின்னர் அரசாங்கத்தினுள் அதிதீவிர-வலதுசாரி சக்திகளை கொண்டுவருவதா வேண்டாமா என்பது குறித்த ஒரு நீண்ட விவாதம் இடம்பெற்றது. 

இறுதியில், அரசாங்கத்தினுள் அதிதீவிர-வலதுசாரி சக்திகளை அதிகாரபூர்வமாக அனுமதிப்பதில்லை என்று பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டாலும், லத்வியாவிற்கே அனைத்தும், தந்தைநாடு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிலிருந்தே எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் Dombrovski க்கு ஆதரவாக வாக்களித்து அவர் பிரதமராக நியமிக்கப்படுவதை உறுதி செய்தனர்.

அதற்கு முற்றிலும் மாறாக எந்த உடன்பாடுகள் இருந்தபோதிலும், அரசாங்கம் முற்றிலும் அதிதீவிர-வலதுசாரி நபர்களைக் கொண்டுள்ளது. 

வெளி விவகார அமைச்சரும் தலைவருமான Girts Valdis Kristovskis லாட்வியாவுக்கே அனைத்தும் என்ற அப்பட்டமான இனவாத வகை தீர்வை அமெரிக்காவில் வசிக்கும் லத்வியன் மருத்துவர் ஒருவருடன் ஈ மெயிலில் தெரிவித்துப் பகிர்ந்துகொண்டதை கடந்தவாரம் அவர் ஒப்புக்கொண்ட பின்னர், நம்பிக்கையில்லா தீர்மான வாக்குகெடுப்பில் மயிரிழையில் பிரதமர் Dombrovski ன் Unity கட்சியானது தப்பி பிழைத்தது. பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா விவாதத்தில் அவரது மிக முக்கிய பாதுகாவலராக விளங்கியது முன்னாள் SS நபர் Lacis தான்.  

புதிய அரசாங்கத்தில் துணை பிரதமராகவும், பாதுகாப்பு செயலராகவும் இருப்பது முன்னாள் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் ஆர்ட்டிஸ் பாப்ரிக்ஸ். அவர் ஐரோப்பிய-சார்பு கொள்கை மற்றும் ரஷ்யாவிடமிருந்து துல்லியமான எல்லைக்கோட்டுக்கான ஒரு உறுதியான நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார்.

நவ-பாசிஸ்டுகளை ஊக்குவிப்பது மற்றும் ரஷ்ய சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத பதட்டங்களை தூண்டிவிடுவது ஆகியவை நாட்டின் பொருளாதார பிரச்சனைகளுடன் நெருக்கமாக பின்னிப்பிணைந்துள்ளதோடு, தொழிலாள வர்க்கத்தினர் மீதான தாக்குதலுடனும் தொடர்புள்ளதாக இருக்கின்றன. வேறு எந்த ஐரோப்பிய நாட்டையும் போன்றதல்லாமல் சர்வதேச பொருளாதார நெருக்கடியால் லத்வியா பாதிக்கப்பட்டுள்ளது. 2009 ல் பொருளாதாரம் மொத்தமாக 18 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.  இதன் காரணமாக உள்நாட்டு மொத்த உற்பத்தியானது (GDP) இந்த ஆண்டு குறைந்தது 3 சதவிகிதமாக வீழ்ச்சியடையும் என்று லத்வியன் தேசிய திறைசேரி தெரிவிக்கிறது.

முன்னாள் 'பால்டிக் புலி'யின் பிரச்சனைகள் சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கு முன்னரே ஏற்கனவே தொடங்கிவிட்டன. ரியல் எஸ்டேட் குமிழி வெடிப்பினைத் தொடர்ந்து, 2008ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் GDP ஏற்கனவே அபாய அளவுக்கு சரிந்தது. 2008 இறுதிவாக்கில் திவால்நிலையை எதிர்கொண்ட லத்வியா, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட மொத்தம் 7.5 பில்லியன் ஈரோக்கள் அவசர கடனால் மட்டுமே காப்பாற்றப்பட்டது.   

 இதற்கு கைமாறாக தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வரும் சிக்கனக் கொள்கையை பின்பற்ற அரசாங்கம் தனக்கு தானே உறுதிபூண்டுகொண்டது. முந்தைய வரவு-செலவுத் திட்டக் வெட்டுக்கள் வாழ்க்கை தரங்களை மிகமோசமாக்கியுள்ளது என்ற உண்மைக்கிடையேயும், மேலும் 600 மில்லியன் ஈரோக்களை சேமிக்க புதிய அரசாங்கம் இதுவரை உறுதிபூண்டுள்ளது.

நாட்டிலுள்ள பாதி மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதோடு, எந்த வகையான போதுமான வசதிகளும் இல்லை. மீதமுள்ள மருத்துவமனைகளிலும் மருந்து பற்றாக்குறை உள்ளன. முக்கிய அறுவை சிகிச்சைகளை நீண்ட நாட்களுக்கு செய்ய முடியாது என்ற நிலைக்கு மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன.

பொது ஊழியர்களுக்கான சம்பளங்கள் 60 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளதோடு, மூத்த சிவில் ஊழியர்களுக்கு கூட செலவுகளை சமாளிப்பதற்கு இரண்டாவது வேலை தேவையாக உள்ளது. தங்களது குளிர்கால வெப்பமாக்கல் செலவுகளை கூட செய்ய முடியாதவர்களிடையே பல இறப்புகள் ஏற்படலாம் என்ற கடுமையான குளிர்காலம் குறித்த அச்சம் பரவலாக காணப்படுகிறது. 

சமூக விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், Dombrovski யும் அவரது அரசாங்கமும் தங்களது சிக்கன நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளன.

புதிய அமைச்சரவை, லத்வியன் அரசியல்வாதிகளின் பழைய மற்றும் புதிய முகங்களின் கலவையாக உள்ளது. Artis Kampars ஐ நிதியமைச்சராகவும், Andris Vilks ஐ பொருளாதார அமைச்சராகவும் நியமித்து தனது நெருக்கமான ஆதரவாளர்களுடன் இரண்டு முக்கிய பதவிகளை நிரப்பியுள்ளார் Dombrovski. சமீப காலம் வரை சுவிஸ் வங்கியான SEB ன் தலைமைப் பகுப்பாய்வாளராக இருந்தவர் Vilks. பால்டிக் நாடுகளில் பெருமளவு முதலீடு செய்துள்ள சுவிஸ் வங்கிகள், தங்களது நஷ்டத்தை குறைப்பதற்காக இன்னும் கடுமையான வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை வலியுறுத்தி வருகின்றன.   

அரசாங்கத்தில் அதிதீவிர வலது-சாரி சக்திகளை வேண்டுமென்றே சேர்த்தமை அரசாங்கத்தின் சமூக விளைவுகள் கொள்கைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்ப வேண்டும் மற்றும் அதன் அடிப்படை சிக்கனத்திற்கான எதிர்ப்பை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆகும்.