WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஆங் சான் சூகியும்
பர்மாவில் ஜனநாயகமும்
K.
Ratnayake
26 November 2010
Use
this version to print | Send
feedback
நவம்பர்
14 அன்று பர்மாவின்
எதிர்க்கட்சித் தலைவரான ஆங் சான் சூகி விடுதலை செய்யப்பட்டிருப்பதானது இந்த
“ஜனநாயக சின்னத்தின்”
மீது ஊடகங்கள்
மீண்டும் போற்றுதல் மழை பொழிவதற்கும் அந்நாட்டில்
“சீர்திருத்தம்”
மற்றும்
“ஜனநாயக”த்தின்
சாத்தியங்கள் குறித்த ஊகங்களுக்குமான ஒரு சந்தர்ப்பமாக ஆகியுள்ளது.
ஆயினும்
பர்மாவின் இராணுவ ஆட்சிக்குழுவுக்கு சவால் விடும் நோக்கம் தனக்கு இல்லை என்பதை சூகி
ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்.
அதற்குப் பதிலாக,
குறிப்பாக
அமெரிக்காவின் ஆதரவுடன்,
நாட்டின் இராணுவத்
தளபதிகளுடன் ஒரு உடன்பாட்டிற்கு வர அவர் தலைப்படுகிறார்.
எல்லாம் பர்மிய
மக்களுக்கு உதவுகின்றதன் பேரில்,
தனது முந்தைய
நிலைப்பாட்டைத் மாற்றிக் கொள்வதற்கும் தளபதிகளிடம் இருந்தான சலுகைகளுக்கு
பிரதிபலனாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தடைகளை தளர்த்துவதற்கு அல்லது அகற்றுவதற்கு
அழைப்பு விடுப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக அவர் சூசகமாய் தெரிவித்துள்ளார்.
சூகியின்
இந்த அரசியல் தந்திரங்களுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கான அல்லது பர்மிய மக்களின்
பரிதாபகரமான வாழ்க்கை நிலைமைகளுக்கான கவலைக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது.
இராணுவ
ஆட்சிக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அவரது விருப்பம்
2009 செப்டம்பர்
தொடங்கி ஒபாமா நிர்வாகத்தால் பின்பற்றப்பட்டு வரும் தந்திரோபாய மாற்றத்துடன்
பிணைந்திருக்கிறது.
பர்மாவின் இராணுவத்
தளபதிகளைப் பொறுத்தவரை அமெரிக்கா
“கரட் மற்றும்
தடிக்குச்சி”
அணுகுமுறையைத் தான்
கொண்டிருக்கிறது:
சூகியுடன் இணைந்து
சமரசம் செய்து கொண்டால் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான
சலுகை,
அப்படி செய்யவில்லை என்றால்
இராணுவ ஆட்சிக்குழுவின் தலைவர்களுக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட
இன்னும் கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்வதற்கான அச்சுறுத்தல்.
பர்மாவை
நோக்கிய ஒபாமாவின் கொள்கை என்பது ஆசியா முழுவதிலும் அமெரிக்காவின் எதிரியான
சீனாவின் செல்வாக்கைப் பலவீனப்படுத்துவதற்கான தீவிரமான அமெரிக்க செயல்பாடுகளின்
பாகம் ஆகும்.
ஜப்பான் மற்றும்
தென்கொரியா உட்பட நடப்பு இராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்துகின்ற வகையிலும்,
இந்தியா போன்ற
நாடுகளுடன் நெருக்கமான மூலோபாய கூட்டுகளை உருவாக்குவதற்கும்,
மற்றும் பர்மா போன்ற
சீனாவுடன் நெருக்கமான நாடுகளை சீனாவின் செல்வாக்கில் இருந்து நெம்பி வெளியே
கொண்டுவருவதற்குமாய் வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான இராஜதந்திர நடவடிக்கைகளில்
ஒபாமாவும் அவரது அதிகாரிகளும் ஈடுபட்டிருக்கின்றனர்.
பர்மாவில்
“ஜனநாயகம்”
கோரி அமெரிக்கா
விடுக்கும் அழைப்புகள் சர்வாதிகார ஆட்சியுடன் பேச்சு நடத்துவதற்கு வசதியான ஒரு
திரையாக அமைகிறது.
மேம்பட்ட
உறவுகளுக்கான முன்நிபந்தனையாக சூகியை விடுதலை செய்ய ஒபாமா கோரியிருக்கிறார் என்றால்
அதன் காரணம் சூகி
“ஜனநாயக
வாகைசூடியவர்”
என்பதல்ல.
மாறாக நாட்டை,
மேற்கை நோக்கிய,
நாடுகடந்த
பெருநிறுவனங்களுக்கான மலிவு கூலி உழைப்புக் களமாக இன்னும் உருமாற்றுவதை நோக்கிய
நோக்குநிலை கொண்டு அமைந்திருக்கும் பர்மிய முதலாளித்துவத்தின் பிரிவுகளை அவர்
பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதால்.
அத்துடன்
இராணுவ ஆட்சிக்குழுவின் அடக்குமுறை ஆட்சிக்கு பரந்த உழைக்கும் மக்களிடையே ஆழமாய்
இருக்கும் வெறுப்புணர்ச்சியினால் சூகி ஒரு பயனுள்ள பாதுகாப்பு வால்வாகவும்
இருப்பார்.
கடந்த காலத்தில்
இராணுவத்திற்கு எதிரான எதிர்ப்பு இயக்கங்களை சலுகைகளுக்கு நெருக்குவதற்காக
சுரண்டிக் கொண்டு அதேசமயத்தில் எதிர்ப்புகள் முதலாளித்துவ ஆட்சியின்
அஸ்திவாரங்களுக்கு அச்சுறுத்தலாகி விடாமல் தவிர்ப்பதில் அவர் தலைப்பட்டார்.
எல்லாவற்றுக்கும்
மேலாய்,
இது தான்
1988
ஆகஸ்ட்-செப்டம்பர்
காலத்தின் கொந்தளிப்பான நிகழ்வுகளில் சூகியும் அவரது கட்சியும் ஆற்றிய பாத்திரமாக
இருந்தது.
1988ன்
ஆரம்பத்தில் ஆட்சிக்கு எதிரான மாணவர் ஆர்ப்பாட்டங்களில்,
ஜனநாயக உரிமை இன்றி
வாழ்க்கைத் தரங்களும் சீரழிந்து கொண்டிருக்க போலிஸ் அடக்குமுறையையும் சந்தித்ததில்
வெறுப்புற்றிருந்த பரந்த மக்களும் பங்கேற்கத் தொடங்கியிருந்தனர்.
இராணுவ ஆட்சிக்
குழுவின் தலைவரான ஜெனரல் நெ வின் ஜூலையில் பதவி விலகி அவருக்குப் பதிலாக
அடக்குமுறைக்குப் பெயர்போன செயின் லுவின் அதிகாரத்திற்கு வந்தபின் இந்த
ஆர்ப்பாட்டங்கள் மிகப்பெருமளவாய் அதிகரித்தது.
ஆகஸ்டு
8 அன்று
நடக்கவிருந்த தேசிய அளவிலான ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்திற்கான தயாரிப்பில்,
பல சிறிய
ஆர்ப்பாட்டங்கள்,
பங்கேற்புக்
குழுக்கள் மற்றும் வேலைநிறுத்தக் குழுக்களை உருவாக்குவது மற்றும் ஒரு பொது
வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு ஆகியவை தொடர்ச்சியாய் நடந்து கொண்டிருந்தன.
ஆகஸ்டு
8 அன்று நடந்த
பெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு கூட்டத்திற்குள் துப்பாக்கி சூடு நடத்தியதன் மூலம்
இராணுவ ஆட்சிக்குழு பதிலிறுப்பு செய்தது,
இதில்
நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்.
ஆனாலும் பொது
வேலைநிறுத்தம் தொடர்ந்தது,
ஆர்ப்பாட்டங்களும்
தொடர்ந்தன.
ரங்கூன்,
மண்டாலே மற்றும் பிற
நகரங்களில் நடந்த மறியல்களில் அரசாங்க ஊழியர்கள்,
எண்ணெய்
தொழிலாளர்கள்,
தொடர்வண்டித்
தொழிலாளர்கள்,
கப்பல்துறைத்
தொழிலாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு போக்குவரத்தையும் பொருளாதார
நடவடிக்கைகளையும் ஸ்தம்பிக்க செய்தனர்.
ரங்கூனில் மொத்த
பங்கேற்புக் குழுக்களும் எதிர்ப்புக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இயங்கின.
நாட்டுப்புறங்களில்,
விவசாயிகள் தங்களின்
கோரிக்கைகளுக்கு ஆதரவாய் ஆர்ப்பாட்டத்தை தொடக்கினர்
ஒரு
மாதத்திற்கும் அதிகமான காலத்திற்கு,
இராணுவ
ஆட்சிக்குழுவே ஸ்தம்பித்தது.
ஆகஸ்ட்
12 அன்று லுவின்
விளக்கமளிக்காமல் இராஜினாமா செய்தார்.
அவருக்குப் பதில்
இராணுவ ஆட்சிக்குழுவிற்கு சாதாரண தரப்பிலிருந்தான ஆதரவாளராய் இருந்த சாதுவாய்
தோற்றமளித்த மவுங் மவுங் ஆட்சியில் அமர்ந்தார்.
இவர் இராணுவச்
சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததோடு பல கட்சி ஆட்சிக்கு கருத்துக்கணிப்புக்கும்
வாக்குறுதியளித்தார்.
படையினர்களும்
போலிசும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொண்டனர்,
இது எதிர்ப்புப்
போராட்டத்தில் இன்னும் கூடுதலான மக்கள் பங்கேற்க ஊக்கமளித்தது.
ஆகஸ்ட்
22 அன்று தேசிய
அளவிலான புதிய ஆர்ப்பாட்டங்களில் நூறாயிரக்கணக்கான மக்கள் இணைந்து கொண்டனர்.
ஆகஸ்ட்
26 வரை சூகி,
மற்ற முதலாளித்துவ
எதிர்க்கட்சி புள்ளிகளுடன் சேர்ந்து,
காலடி எடுத்து
வைக்கவில்லை,
இராணுவ
ஆட்சிக்குழுவை ஏறக்குறைய வீழ்ச்சியின் விளிம்பு வரை கொண்டு வந்து விட்டிருந்த
வெகுஜன இயக்கத்தின்,
குறிப்பாக தொழிலாளர்
இயக்கத்தின் மீது தடையாக செயல்படுவதற்கு.
அன்று சுமார் அரை
மில்லியன் பேர் பங்கேற்றிருக்கக் கூடிய அந்த கூட்டத்தில் பேசிய அவர்,
மக்கள்
“நடந்து விட்டனவற்றை
மறக்க முயற்சிக்க வேண்டும்”
என்று
வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள்
“இராணுவத்தின் மீதான
பாசத்தை விட்டுவிடக் கூடாது”
என்றும் தங்கள்
கோரிக்கைகளை அவர்கள்
“அமைதியான வழியில்”
சாதிக்க வேண்டும்
என்று வலியுறுத்தினார்.
சூகியின்
தலையீட்டால் இராணுவ ஆட்சிக்குழுவிற்கு தவிர்க்கவியலாமல் அவசியமாயிருந்த முக்கியமான
ஆசுவாச காலம் கிடைத்தது.
கருத்துக்கணிப்புக்கான மவுங்கின் திட்டத்தை நிராகரித்த சூகி உழைக்கும் மக்களின்
கோரிக்கைகளை ஒரு தேர்தலின் வழியாகத் தான் பூர்த்தி செய்ய முடியும் என்பதான மரணகரமான
பிரமையை ஊக்குவித்தார்.
செப்டம்பர்
18 அன்று
இராணுவரீதியான ஒடுக்குதல் நேரும் வரையிலும்,
மவுங் ஒரு இடைக்கால
அரசாங்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைப்பார் என்பதிலும் சுதந்திரமான தேர்தலை
அனுமதிப்பார் என்பதிலும் தாங்கள் திடமாய் இருப்பதாகக் கூறி மக்கள்
“பொறுமையுடன்”
இருக்க
எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர்.
மாறாக
ஜெனரல் சா மவுங்,
அரசாங்கத்தை நீக்கி
விட்டு,
அரசு சட்டம் மற்றும் மீட்சி
மன்றத்தை (SLRC)
ஸ்தாபித்து,
இராணுவச் சட்டத்தை
அறிவித்து,
அத்துடன்
ஆர்ப்பாட்டங்களை துருப்புகளைக் கொண்டு நசுக்குவதற்கும் உத்தரவிட்டார்.
ரங்கூனில் மட்டும்
குறைந்தது 3,000
பேர் கொல்லப்பட்டனர்,
மண்டாலே மற்றும்
மற்ற பகுதிகளில் இன்னும் பலர் கொல்லப்பட்டனர்.
ஆயிரக்கணக்கானோர்
கைது செய்யப்பட்டனர்.
மற்றவர்கள் நாட்டை
விட்டோ அல்லது நாட்டுப்புறப் பகுதிகளுக்கோ தப்பியோடினர்.
சூகி
அடக்குமுறையைக் கண்டித்தார்,
ஆனால் ஆட்சி
வாக்குறுதியளித்திருந்த தேர்தல் வரை காத்திருக்குமாறு மக்களை வலியுறுத்தினார்.
1990 தேர்தலில்
அவரது ஜனநாயகத்திற்கான தேசியக் கழகம்
(NLD) வரலாற்று
வெற்றியைப் பெற,
இராணுவ
ஆட்சிக்குழுவோ நாட்டின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டிருந்த
நிலையில்,
முடிவினை நிராகரித்தது.
இந்த ஜெனரல்கள்
சூகியை வீட்டுக் காவலில் வைத்தனர்;
மற்ற
NLD புள்ளிகளையும்
கைதுசெய்தனர் அத்துடன் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளால்
திணிக்கப்பட்ட தடைகளை உதாசீனப்படுத்தினர்.
2007ல்
இராணுவ ஆட்சிக்குழுவுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தபோதும்
(இவை
ஆரம்பத்தில் பிட்சுகளின் ஆர்ப்பாட்டங்களால் தூண்டப்பட்டது)
சூகியும்
NLDயும்
இதேபோன்றதொரு பாத்திரத்தையே ஆற்றினர்.
ஆரம்பத்தில் இருந்தே,
இயக்கமானது
ஜெனரல்களுக்கு சவால் செய்யக் கூடாது என்பதை சூகி வலியுறுத்தினார்.
“இராணுவ ஆட்சியைக்
கவிழ்ப்பதற்கு எந்த கிளர்ச்சியும் இருக்கக் கூடாது.
இது இராணுவ
பதிலடியைக் கண்டு மக்களை அஞ்சுமாறு செய்து விடும்,
இயக்கத்தில் கலந்து
கொள்ள மக்கள் தயக்கம் காட்டுவர்”
என்று அவர் கூறினார்.
1988
அரசியல் எழுச்சிகளில்
இருந்தே சூகி புகுத்த தலைப்பட்டிருக்கும் முடிவு என்னவென்றால்,
ஆர்ப்பாட்டங்கள்
அளவை விஞ்சி விட்டன,
இராணுவ
அடக்குமுறையைத் தூண்டி விட்டன,
எனவே அவ்வாறு
திரும்ப நிகழக் கூடாது என்பது தான்.
உண்மையில் நேர்மாறான
நிலைமை தான் இருந்தது.
எதிர்ப்பு
இயக்கமானது சூகி போன்ற புள்ளிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது,
அவர்களோ ஜெனரல்கள்
மிகவும் பலவீனமாய் இருந்த அந்த புள்ளியில் தான் கனகச்சிதமாக பின்னிழுத்துக்
கொண்டனர்.
இராணுவ ஆட்சிக் குழுவை
மண்டி போடச் செய்வதில் மையமான பாத்திரத்தை ஆற்றியிருந்த தொழிலாள வர்க்கம்,
NLDஐ சவால்
செய்யவும் சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையிலமைந்த ஒரு தொழிலாளர்கள் மற்றும்
விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு மனுச் செய்யவும் அவசியமான தலைமை
இல்லாதிருந்தது.
லியோன்
ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியின்
(பர்மா போன்ற
தாமதமான முதலாளித்துவ அபிவிருத்தி நாடுகளில் முதலாளித்துவத்தின் எந்த பிரிவும்
உழைக்கும் மக்களின் ஜனநாயக இலட்சியங்களையும் சமூகத் தேவைகளையும் பூர்த்தி
செய்வதற்கு உயிர்த் திறனற்றவை என்பதை இது விளங்கப்படுத்துகிறது)
கண்முன்னாலான விளக்க
உதாரணமே 1988
முதல்
1990 வரையான
நிகழ்வுகளாகும்.
தொழிலாள வர்க்கம்
மட்டுமே,
நகர்ப்புற மற்றும்
கிராமப்புற ஏழைகளின் நம்பிக்கையை வெல்வதன் மூலமாக,
தென்கிழக்கு
ஆசியாவிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின்
பாகமாக இந்த கடைமைகளை நிறைவேற்ற இயலும்.
அந்த
புரட்சிகர முன்னோக்கிற்காகவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு போராடுகிறது.
எங்களது வரலாறு
மற்றும் வேலைத்திட்டத்தை தீவிரமாய் கற்கவும் பர்மாவில் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின்
ஒரு பிரிவினைக் கட்டும் சவாலை கையிலெடுக்கவும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும்
நாங்கள் வலியுறுத்துகிறோம்.
|