World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Lame duck US Congress moves to cut taxes for rich, end benefits for unemployed

செல்வந்தர்களுக்கான வரிகளை வெட்டி, வேலை இல்லாதோருக்கான நலன்களுக்கு முடிவுகட்ட அதிகார கையளிப்பிற்கு முன்னால் நடத்தும் அமெரிக்க காங்கிரஸ் நகர்வு

By Tom Eley
16 November 2010

Back to screen version

ஜனநாயகக் கட்சி-கட்டுப்பாட்டிலுள்ள 111 வது அமெரிக்க காங்கிரஸ், புஷ்- காலத்திய அமெரிக்க செல்வந்தர்களுக்கான வரி வெட்டுக்களை நீட்டிக்க வேண்டும் என்ற குடியரசுக் கட்சியினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் தங்களது விருப்பத்தை வெளியிட்ட ஜனநாயகக் கட்சித் தலைவர்களின் சமிக்ஞையுடன், அதன் இறுதி கூட்டத்தொடருக்குள் நுழைந்தது. இதனிடையே, நவம்பர் 30ம் தேதியன்று நிதியை அளிப்பது காலாவதியாகும்போது நீண்டகாலமாக வேலையில்லாமல் இருப்போருக்கான அரச நலன்களை நீட்டிக்க காங்கிரஸ் தவறிவிடும் என்று பெரும்பாலான விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த "அதிகார கையளிப்பிற்கு முன்னால் நடத்தும் அமெரிக்க காங்கிரஸ் அமர்வுத்" தொடர் -அப்படி அழைக்கப்படுவது எதற்காகவெனில் நவம்பர் தேர்தல்களுக்கும் ஜனவரியில் புதிய காங்கிரஸ் கூடுவதற்கும் இடையே அது கூடுவதால்- 2001 மற்றும் 2003 வரி வெட்டுக்களில் எது மற்றும் யாருக்காக என்பதை முடிவு செய்து, டிசம்பர் 31ம் தேதியை இறுதி நாளாக அமைத்து, இருக்கும்.

இடைக்கால தேர்தல்களில் அவர்கள் வெற்றி பெற்றதிலிருந்துமிக உயர்ந்த வருவாய் பிரிவினர்கள் உட்பட, வரிசெலுத்தும் அனைவருக்கும் நிரந்தர வரி வெட்டுக்களை செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் கோரி வருகின்றனர். ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியினர், ஆண்டுக்கு 250,000 டாலருக்கும் குறைவான வருமானம் கொண்ட திருமணம் செய்துகொண்ட தம்பதியர் அல்லது ஆண்டுக்கு 200,000 டாலருக்கும் குறைவான வருமானம் கொண்ட தனிநபருக்கு மட்டுமே வரிகுறைப்புகள் நீட்டிக்கப்படும் என்ற வாக்குறுதி மீது பிரச்சாரம் செய்திருந்தனர்

முக்கியமாக வெளியே காட்டுவதற்காக ஜனநாயக கட்சியினரிடமிருந்து வந்த இந்த எதிர்ப்பு, செல்வந்தர்களுக்கான வரிகுறைப்புகளை தற்காலிகமாக நீட்டித்தால்தான் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரி குறைப்பை செயல்படுத்த முடியும் என்பதால் தாம் அதனை ஏற்க விருப்பம் கொண்டுள்ளதாக சமீப நாட்களாக சூசகமாக உணர்த்திய, முதலிடத்திலிருந்த ஒபாமாவால் விரைவாக கைவிடப்பட்டது. தற்காலிக நீட்டிப்பு என்று அழைக்கப்படும் இதன் அர்த்தம்நிரந்தரமாக அமல்படுத்தும் வரிகுறைப்புகளுகளை விட எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்று எந்த ஒரு அக்கறை கொண்ட சந்தேகப்பட முடியாது.

உண்மையில், தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்ற குடியரசு கட்சி தலைமை, இரண்டு-ஆண்டு நீட்டிப்பை மட்டுமே கோரியதால், ஒபாமாவும் அவர்களது நிலைக்கு பலமாக சரண்டைந்தார். தெற்கு கரோலினாவைச் சேர்ந்த செனட்டர் Jim DeMint மற்றும் செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட Kentucky  உடைய Rand Paul  ஆகிய இரண்டு தீவிர-வலது குடியரசுக் கட்சியினர், தனியாக ஞாயிறு செய்திகள் நிகழ்ச்சிகளில் தோன்றி, அதுபோன்றதொரு "சமரசத்தை" ஏற்றுக்கொள்ளும் தங்களது விருப்பத்தை சூசகமாக வெளிப்படுத்தினர். "மொத்தத்தில் இவ்வளவுதான் நம்மால் பெற முடிந்தால், ஒன்றுமே இல்லாததைவிட அது நல்லதுதானே" என்று CBS ல் Paul கூறினார்

காங்கிரஸ் ஜனநாயக கட்சித் தலைமை, தனது பங்கிற்கு, தொடக்கத்திலிருந்து தேர்தல் வரை இந்த சட்ட மசோதா நடுத்தர வர்க்க குடும்பத்தினருக்காக மட்டுமே வரிகுறைப்பை நீட்டிக்கும் என்பதோடு, எந்த ஒரு வரி அதிகரிப்பும் -பெரும் செல்வந்தர்களுக்கு கூட- அரசியல் ரீதியாக பரந்த மக்களின் ஆதரவற்றது என்று கூறி அம்மசோதாவை நிறுத்த திட்டமிட்டனர்.

இதர முன்னணி ஜனநாயகக் கட்சியினர்,  உதாரணமாக நியூயோர்க்கைச் சேர்ந்த செனட்டர் Charles Schumer கூட சமரசத்திற்கான தங்களது விருப்பத்தை அறிவித்தனர். ஆண்டுக்கு 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாக ஈட்டுவோரை, உத்தேசமாக அமெரிக்க Áìகளின் 0.02% (அதிகூடிய பத்தில் இரண்டைத் தவிர ஒவ்வொருவருக்கும்) இனருக்கு வரிக்குறைப்புகள் நீட்டிக்கப்படும் ஒரு திட்டத்தை சமீபத்தில் Schumer கொண்டுவந்தார்.  

அதிக வாக்கு வித்தியாசத்தில் ஒபாமா மற்றும் Schumer முற்றிலும் செயலிழந்துபோனதான் அடிப்படையில், தலைமையையும், காங்கிரசையும் தற்போது கட்டுப்படுத்துபவர்கள் குடியரசு கட்சியினர்கள்தானே தவிர ஜனநாயக கட்சியினர்கள் அல்ல என்ற முடிவுக்கு ஒருவர் வரமுடியும்.

செல்வந்தர்களுக்கான வரிகுறைப்புகள் நீட்டிக்கப்படுமானால் -அவர்களும் இருப்பார்கள் என்றுதான் அனைத்து சமிக்ஞைகளும் தெரிவிக்கிறது- அது ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கும் ஒரு தீவிர கண்டனமாக இருக்கும். பெரும் மந்தநிலையிலிருலிருந்து ஏற்பட்ட மோசமான சமூக நெருக்கடி நிலைகளின் கீழ், ஒரு சிறிய தட்டுப் பிரிவினர்,- பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பொறுப்பற்ற நிதிய ஊக வாணிகம் செய்யும் அதே தட்டினர்தான்-அடுத்த பத்தாண்டுகளில் 700 டாலர் பில்லியன் மதிப்பிலான போனஸை பெற இருக்கிறார்கள். தற்போது முடிவடையும் அமெரிக்க மீட்பு மற்றும் மறுமுதலீடு சட்டத்தின்படி அதிக வரிவிகித முடிவின் பெரும் மந்தநிலை, 1929 ல் 24 சதவிகிதத்திலிருந்து 1940 ல் 81 சதவிகிதமாக உண்மையில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது) ஊக்கப் பொதியாக ஒதுக்கப்பட்ட அதே தொகைதான் இது.

கணிசமான எண்ணிக்கையிலான வெளிப்படையான விமர்சகர்கள் கூறியபடி, செல்வந்தர்களுக்கான வரி குறைப்புகளை நீட்டிப்பதை நோக்கிய ஜனநாயக கட்சியினர்களின் நடவடிக்கை ஒரு தவறான கொள்கையோ அல்லது தவறான அரசியல் கணக்கோ அல்ல. ஜனநாயகக் கட்சியினர்கள், குடியரசுக் கட்சியினர்கள் போன்றே அதே அளவுக்கு உயர்தட்டினரின் நிதி சேவகர்களாக உள்ளனர்- ஒபாமாவின் நிதி பொறுப்புக்கான தேசிய ஆணையத்தால், இந்த வாரம் வலியுறுத்தப்பட்ட ஒரு உண்மை, அந்த ஆணையத்தின் தலைவர், இதேபோன்ற நிறுவன வரி விகிதத்தோடு, உண்மையிலேயே வருமான வரி விகிதத்தை மூன்றில் ஒரு பங்காக உச்சியிலிருந்து கீழாக 35 சதவிகிதத்திலிருந்து 23 சதவிகிதமாக குறைக்கும் வரி "சீர்திருத்த" திட்டத்தை தெரிவித்தார். வரவு-செலவுத் திட்டத்தை சமன்படுத்துவது என்பது சமூக பாதுகாப்பிலிருந்து மருத்துவ நலன், புதிய வரிகளை திரும்பபெறுவது, மற்றும் வேலை மற்றும் அரசாங்க ஊழியர்களின் சம்பள குறைப்புகள் மூலமான தொழிலாள வர்க்கத்தின் செலவில்தான் முற்றிலும் இருக்கும்.

செல்வந்தர்களுக்கான வரி குறைப்புகள் நீட்டிப்பு நிச்சயம் அருகிலேயே காணப்படுகிற அதே நேரத்தில், நீண்டகாலமாக வேலையற்று உள்ள அமெரிக்க தொழிலாளர்கள் சுமார் 2 மில்லியன் பேருக்கான சிறப்பு நிதி நீட்டிப்பு, கெடு தேதியான நவம்பர் 30 ல் செய்யப்படாமலேயே இருக்கலாம். இதன் அர்த்தம் என்னவென்றால் 800,000 தொழிலாளர்களுக்கான உதவிகள் உடனடியாக இல்லாமல்போய், அதனைத் தொடர்ந்து டிசம்பர் இறுதிவாக்கில் 1.2 மில்லியன் தொழிலாளர்களுக்கும் அதே கதி ஏற்பட்டுவிடும்.

நவம்பர் 30 வாக்கில் வேலை இல்லாதோர்களுக்கான நலன்கள் நீட்டிப்பு சட்டம் இயற்றப்படுவதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே பெரும்பாலான ஊடக கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு, அடுத்த ஆண்டு வரை நீண்ட கால உதவிகளை நீட்டிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்திற்காகசெல்வந்தர்களுக்கான வரி குறைப்புகள் பேச்சுவார்த்தையிலிருந்து தாராளவாத ஜனநாயக கட்சியினர்கள் விலகிச் செல்லும்போது, அந்த திட்டம் ஏறக்குறைய கைவிடப்படலாம். ஆனால் உதவிகளை படிப்படியக குறைக்கும் திட்டம் கொண்ட ஒரு மசோதாவை தாங்கள் தெரிவிக்கக்கூடும் என்று மற்ற ஜனநாயகக் கட்சியினர்கள் சூசகமாக தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி உறுப்பினரின் உதவியாளர் ஒருவர், வாரங்களில் செய்யப்படும் குறைப்பு நாட்டின் பொருளாதாரத்துடன் தொடர்புடையதாக ஏதேனும் இருக்குமா என்பதை பார்க்கும் விருப்பம் உள்ளது" என்று Wall Street Journal பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

வேலை இல்லாதோர்களுக்கான உதவிகள் மற்றும் செல்வந்தர்களுக்கான வரி குறைப்புகள் ஆகிய இந்த இரண்டு நீட்டிப்புகளின் கதை செலவழிப்புகள் வருவாய்க்கு மீறியுள்ளதாக பாவித்து ஆளும் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்ட கவலையின் அப்பட்டமான ஏமாற்றை அம்பலப்படுத்தியது. வேலைஇல்லாதோருக்கான நீண்ட கால உதவிகளுக்கான விலை ஆறு மாதங்களுக்கு சுமார் 35 பில்லியன் டாலராக இருக்கலாம்,  இதே விலை குறியீடுதான், செல்வந்தர்களுக்கான வரி குறைப்புகள் மீதான நீட்டிப்பின் விலையாகவும் இருப்பதைப்போன்று, ஓராண்டு அடிப்படையில் உள்ளது

ஆனாலும், பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் ஒத்துக்கொண்டுள்ளபடிவேலை இல்லாதோர்கள் அத்தியாவசிய நுகர்வு பொருட்கள் தேவைக்காக பணத்தை விரைவாக செலவழித்துவிடுவதால், வேலைஇல்லாதோருக்கான உதவிகள் பொருளாதாரத்திற்கான உடனடி பலன்களை கொண்டுள்ளது.

" வேலை இல்லாதோருக்கு நீங்கள் ஒரு டாலரை கொடுக்கும்போது,  அவர்கள் அதை பெரும்பாலும் செலவழித்துவிடுவார்கள்," என்று கூறுகிறார் தொழிலாளர் துறையின் தலைமை நிதி நிபுணரான Betsey Stevenson. "பொருளாதார தூண்டலை உண்மையிலேயே நீங்கள் பெறக்கூடிய ஒரு இடம் அது". வேலை இல்லாதோருக்கான உதவி நீட்டிப்பின் காலாவதி உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) வளர்ச்சியை 0.5 சதவிகிதம் அளவுக்கு குறைத்துவிடும் என்கிறார் Goldman Sachs ன் நிதி நிபுணரான Alec Phillips. IMPAQ  என்ற பொருளாதாரா ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை, வேலை இல்லாதோருக்கான உதவிகள் பொருளாதார மந்தநிலையின்போது ஒவ்வொரு காலாண்டிலும் சராசரியாக 1.6 மில்லியன் வேலைகளை பாதுகாத்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது.  

டிசம்பர் 3 ஆம் தேதியோடு முடிவடைய உள்ள "அதிகார கையளிப்பிற்கு முன்னால் நடத்தும் அமெரிக்க காங்கிரஸ் அமர்வு" கூட்டத் தொடரின்போது, விவாதிக்கப்பட இருக்கும் மற்றொரு முக்கிய சட்ட அம்சம்,  அரசாங்கம் தனக்கு தானே நிதியளித்துக்கொள்வதுதான். அடுத்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் பெருமளவானவற்றை தீர்மானிக்கும் ஒரு டஜனுக்கும் அதிமான தனித்தனியான செலவு மசோதாக்களை 1.108 டிரில்லியன் டாலர் தொகைக்குள் அடைத்து, ஒன்றிணைக்கவே ஜனநாயக கட்சியினர் விரும்புகின்றனர். அவர்களது திட்டம் ஒபாமா கேட்டுக்கொண்டதைவிட குறைவானதாகவும், குடியரசு கட்சியின் சிறுபான்மை செனட் தலைவர் Mitch McConnell  ஆதரிப்பதாக கூறியதன் மாதிரியாக இருக்கவேண்டும் என்பதுதான். சபை குடியரசு கட்சியினர் அதற்குப் பதிலாக, அடுத்த ஆண்டு துவக்கத்தில் சமூக செலவுக்கான ஒரு புதிய சுற்றுக் குறைப்புகளை அமல்படுத்துவதற்கு தங்களது புதிய பெரும்பான்மையை அனுமதிக்கும் ஒரு குறுகிய கால செலவு தொகைக்காக போராடுவார்கள்

வெளிப்படையான ஆண், பெண் ஓரினச் சேர்க்கை இராணுவத்தினர்களுக்கு எதிரான இராணுவத்தின் தடையை இரத்து செய்யும் சட்டம் முன்கூட்டியே எதிர்பார்க்கப்படவில்லை. வதிவிட பத்திரமற்றவர்கள் குடியேற்றக்காரர்கள் இராணுவத்தில் பட்டியலிடப்பட்டிருந்தாலோ அல்லது கல்லூரிக்கு வந்திருந்தாலோ அவர்களது குழந்தைகளுக்கு குடியுரிமை அளிக்கும் கனவு சட்டம் இரண்டும் கெட்டானாகவே உள்ளது.

அதிகார கையளிப்பிற்கு முன்னால் நடத்தும் அமெரிக்க காங்கிரஸ் கூட்டத் தொடரிலிருந்து மேலும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யாவுடனான ஒரு புதிய அணு ஆயுத உடன்படிக்கைக்கான ஒப்புதலும் கிடைக்கவில்லை