WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:ஆசியா
:
கொரியா
Artillery exchange heightens tensions on Korean peninsula
பீரங்கித் தாக்குதல்கள்
கொரிய தீபகற்பகத்தில் அழுத்தங்களை அதிகரிக்கின்றன
By Bill Van Auken
24 November 2010
Back to
screen version
வடக்கு மற்றும் தென்
கொரியாவிற்கு இடையே செவ்வாயன்று நடைபெற்ற பீரங்கித் தாக்குதல்கள் வாஷிங்டனில்
இருந்து சீற்றமான கண்டனங்களையும்,
பெய்ஜிங்கிலும் மாஸ்கோவிலும்
இருந்து இந்த இராணுவ அழுத்தங்கள் ஒரு பேரழிவைத் தூண்டும் என்ற எச்சரிக்கைகளையும்
வெளிப்படுத்தின.
இந்த மோதலில் இரு
தரப்பினரும் மற்றவரைக் கூறினர்.
இது வடக்கு எல்லைக்கோட்டிற்கு
அருகே,
பிரச்சனைக்குட்பட்ட மஞ்சள் கடல்
எல்லையில் வெடித்தது. 1953ல்
கொரியப் போருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தால் ஒரு தலைப்பட்சமாக அறிவிக்கப்பட்ட
இந்த எல்லை வட கொரியாவால் ஏற்கப்படாததுடன் மற்றும் பலமுறையும் மோதல்களைத்தான்
கண்டுள்ளது.
ஏராளமான வடகொரிய
பீரங்கிக் குண்டுகள் பிரச்சனைக்குரிய எல்லையில் இருந்து இரு மைல்கள் தூரமே
இருக்கும்
Yeonpyeong
தீவைத் தாக்கின.
இது வட கொரியக் கடலோரப்
பகுதியில் இருந்து எட்டு மைல் தூரத்திலும் தென் கொரியாவில் இருந்து
50
மைல் தொலைவிலும் உள்ளது.
இப்பெரும் தாக்குதல்,
தீவிலுள்ள ஒரு இராணுவத்
தளத்தைத் தாக்கியதுடன்,
இரு தென் கொரிய கடற்படையினரின்
இறப்பையும், 3
பொதுமக்கள் உட்பட
17
பேருக்கு காயத்தையும் ஏற்படுத்தியது.
நூற்றுக்கணக்கான வீடுகள் பற்றி
எரிந்தன,
புகைப்படலம் தீவு முழுவதையும்
சூழ்ந்திருந்ததைக் காணமுடிந்தது.
குண்டுவீச்சைத்
தொடர்ந்து தென் கொரியா யிவோன்பியோங்க் மற்றும் அண்டைத் தீவுகளில் இருந்து
கிட்டத்தட்ட
5,000
குடிமக்களை அப்புறப்படுத்தியது.
பெரும் தாக்குதலைத்
தொடர்ந்து தென்கொரியாவும் வடக்கு கொரியாவிற்குள்
80
குண்டுவீச்சுக்களை நடத்தியதுடன்
தீவின்மீது போர் விமானங்களையும் கண்காணிக்க அனுப்பியது.
தென்கொரியத் தாக்குதலினால்
ஏற்பட்ட இறப்புக்கள் பற்றி உடனடித் தகவல்கள் ஏதும் இல்லை,
ஆனால் தென் கொரிய இராணுவக்
கட்டுப்பாடு வடக்கில்
Gaemeori, Mudo நகரங்களில் உள்ள
கடலோரத் தளங்களில் “கணிசமான
சேதத்தை”
ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளது.
சியோலில் உள்ள
அரசாங்கம்,
வட கொரிய இராணுவம்
ஆத்திரமூட்டப்படாத விதத்தில் முதலில் தாக்கியது என்று குற்றஞ்சாட்டுகையில்,
பியோங்யாங் அரசாங்கம்
தென்கொரியாதான் அதன் நீர்நிலைகளில் முதலில் மோதலைத் தொடக்கும் வகையில் குண்டுகளை
வீசியது என்று குற்றம் சாட்டியுள்ளது.
“தென்
கொரியப் பகைவர்கள்,
பல முறை நாம் எச்சரித்தும்,
தேவையற்ற இராணுவ வகைத்
தூண்டுதல்களை கொடுக்கும் வகையில் பீரங்கிக் குண்டுகளை நம் கடற்பகுதியில் வீசின”
என்று வட கொரியாவின் இராணுவ
உயர் கட்டுப்பாடு கூறியதாக
KCNA செய்தி நிறுவனம்
மேற்கோளிட்டுள்ளது.
கொரிய தீபகற்பகத்தில்
எந்த மோதலும் மற்ற முக்கிய சக்திகளையும் ஈடுபடுத்தும்;
எல்லாவற்றிற்கும் மேலாக
அமெரிக்காவையும் சீனாவையும்.
செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதி
பாரக் ஒபாமா தன்னுடைய அரசு தென் கொரியாவிற்கு பாதுகாப்பு என்ற உறுதியை கொடுத்தார்.
“தென்
கொரியா நம் நட்பு நாடு.
கொரியப் போரில் இருந்தே அது
அவ்வாறுதான் உள்ளது.
அந்தக்கூட்டின் ஒரு பகுதியாக தென்
கொரியாவை பாதுகாப்பது என்னும் நம் உறுதிப்பாட்டை வலுவாகக் கூறுகிறோம்”
என்றார்.
சமீபத்திய மோதல்
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்
70,000
தென் கொரியத் துருப்புக்கள் பங்கு
பெறும் “Hoguk”
இராணுவப் பயிற்சியின்போது
வெடித்தது.
நவம்பர்
30ல்
முடிவடையும் இந்த ஒன்பது நாட்கள் நடக்கும் பயிற்சிகள்,
தென் கொரியத் துருப்புக்கள்
தரையிறங்கும் விதத்தில் நிலங்களை ஆக்கிரமித்தலையும் அடக்கியுள்ளது.
இதை பியோங்யாங் வட கொரியா மீது
படையெடுப்பான ஒரு ஒத்திகை என்று குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா பொதுவாகத் தென்
கொரியாவுடன் இதில் பங்கு பெறும்;
ஆனால் இந்த மாதம் முன்னதாக அது
பயிற்சியில் இருந்து விலகிக் கொண்டது.
தென் கொரிய இராணுவம்
அதன் பயிற்சித் தந்திரங்களின் போது கடலோர நீர்நிலைப் பகுதிகளில் குண்டுவீச்சு
நடத்தியதாகவும் வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் தென் கொரியா தன்னுடைய
குண்டுகள் மேற்கேதான்,
முக்கிய நிலப்பகுதியில்
இருந்தும் பிரச்சனைக்குட்பட்ட எல்லையில் இருந்து தொலைவிலும்தான் வீசப்பட்டன என்று
கூறுகிறது.
வட கொரியாவில் இருந்து ஒரு தொலைபேசித்
தகவல்,
பீரங்கி மோதலைப் பற்றி எச்சரித்து
வந்ததை தென் கொரிய இராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
“தென்
கொரியா வட கொரியாவைச் சார்ந்த நீர்நிலைகளில் குண்டுவீச்சு நடத்தினால் வடக்கு வெறுமே
பார்த்துக் கொண்டிராது”
என்று அதில் கூறப்பட்டிருந்தது.
செவ்வாயன்று பென்டகன்
USS
Washington என்னும் கப்பல் அதன்
ஜப்பானியத் தளத்தில் இருந்து மஞ்சள் கடல் பகுதிக்குப் புறப்பட்டது என்று அறிவித்தது;
இது வட கொரியாவிற்கு எதிரான தன்
சக்தியைக் காட்டுவது போல் ஆகும் என்று கருதப்படுகிறது.
சமீபத்திய பயிற்சிகள்
கடந்த மார்ச் மாதம் தென் கொரிய கப்பல்படைக் கப்பல்
Cheonan
மூழ்கடிக்கப்பட்ட பின் தென் கொரியா
மற்றும் அமெரிக்கா இரண்டும் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டதில் ஒன்றாகும்.
அந்தக் கப்பல் மூழ்கியதில்
46
படையினர் உயிரிழந்தனர்.
இந்த மூழ்கடிப்பு வடக்கு
எல்லைக் கோட்டிற்கு அருகே நடந்தது.
ஒரு தென் கொரிய விசாரணை வடக்கு
கொரியாவின் மூழ்கடிப்புச் செயல்தான் இதற்குப் பொறுப்பு என்ற முடிவைக்
கூறியிருக்கையில்,
பியோங்யாங் அத்தகைய பொறுப்பை
மறுத்துவிட்டது.
ஜூலை மற்றும்
செப்டம்பரில் நடத்தப்பட்ட முந்தைய பயிற்சிகளும் பெய்ஜிங்கில் இருந்து
எதிர்ப்புக்களைத் தூண்டியது;
அதன் நிலப்பகுதியும் மஞ்சள்
கடலை ஒட்டி உள்ளது;
அதன் படைகள் கொரியப்போரில் கிட்டத்தட்ட
ஆறு தசாப்தங்களுக்கு முன்பு போரிட்டன.
அந்தப் போர் ஒரு சமாதான
உடன்படிக்கையில் முடிவடைந்தது;
உடன்பாடு என்பதற்கு மாறாக,
கொரியத் தீபகற்பத்தில் இன்னும்
போர்ச் சூழல் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.
தென் கொரியாவின்
ஜனாதிபதி லீ மையுங்-பாக்
தன்னுடைய அமைச்சரவையை அவசரக் கூட்டத்திற்கு தருவித்து பூசல்கள் நடந்தபின் தன்னுடைய
இராணுவத் தளபதிகளையும் சந்தித்தார்.
அழுத்தங்கள் பெருகுவதற்கு
எதிராக எச்சரித்து,
லீ,
“இன்னும்
ஏதேனும் ஆத்திரமூட்டல்கள்”
வந்தால் வட கொரியாவிற்கு ஏதிராக
ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
யிவோன்பியோங்க் மீது வட கொரியா
பீரங்கித்தாக்குதல் நடத்தியுள்ளமை “தென்கொரிய
நிலப்பகுதி மீதான படையெடுப்பு எனக்கருதப்படலாம்”
என்றும் அவர் கூறினார்.
2008ல்
பதவிக்கு வந்ததில் இருந்து,
வலதுசாரி
Grand National Party (GNP)
உறுப்பினரான லீ,
பியோங்யாங்கிற்கு எதிராகக் கடின
நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளார்;
இது அவருக்கு முன் பதவியில்
இருந்த Sunshine Policy
என்ற கொள்கையில் இருந்து
மாறுபட்டதாகும்;
அது அழுத்தங்களைக் குறைக்கவும் வட
கொரியாவை வெளிநாட்டு மூதலதன திறப்பிற்காக நிதியுதவி,
இராஜதந்திர நெறி
ஆகியவற்றின்மீது கவனத்தைக் காட்டியது.
ஆனால் லீயின் தலைமையின்கீழ்
புதிய முதலீடுகள் நின்றுவிட்டன,
நிதியுதவிகளும் கிட்டத்தட்ட
அகற்றப்பட்டுவிட்டன.
மேலைச் செய்தி
ஊடகத்திலும் சிந்தனைக் குழுக்களிலும் பரந்த முறையில் வட கொரியாவின் நோக்கங்கள்
பற்றி ஊகங்கள் வந்துள்ளன.
மஞ்சள் கடலில் மோதல் என்பது,
அமெரிக்க விஞ்ஞானி ஒருவர்
அந்நாடு ஒரு 2,000
அணுக்களை பிரிக்கும் கருவிகளை கொண்ட
ஆலையை நிறுவியுள்ளது,
அது யுரேனிய அடர்த்திக்காகப்
பயன்படுத்தப்படுகிறது என்று பியோங்யாங் அறிவித்ததைத் தொடர்ந்து வந்துள்ளது.
அணு ஆலை சமாதான
நோக்கங்களுக்காகத்தான் என்று அது வலியுறுத்தினாலும்,
இந்த நிலையம் அணுவாயுதங்களை
தயாரிக்கும் புதிய வழிவகைகளுக்கும் இடமளிக்கிறது.
இந்த நடவடிக்கைகளை பல
ஊடகங்களும் வட கொரியா சியோல் மற்றும் பிற முக்கிய சக்திகள் அறுவர்
பேச்சுவார்த்தைகள் என்று அழைக்கப்படுவது மீண்டும் தொடர்வதற்கு அழுத்தம்
கொடுப்பதற்கான முயற்சி என்று காண்கின்றன.
அணுவாயுதக்களைவு பற்றி
அப்பேச்சு வார்த்தைகள் இரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின;
நாட்டின் வறுமை நிலையில் உள்ள
பொருளாதாரத்தை நெரிக்கும் தடைகளை அகற்றவும்,
உதவிகளை மீண்டும் பெறவும்
அப்பேச்சுவார்த்தைகள் உதவும்.
இராணுவ நடவடிக்கைகள் வட
கொரிய இராணுவத்திற்குள் கிம் ஜோங் யுன்னிற்கான ஆதரவை வலுப்படுத்துவதை நோக்கமாகக்
கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது;
தன்னுடைய
20
களின் நடுப்பகுதயில் இருக்கும் அவர்
தன் தந்தையான,
வடக்கு கொரியாவின் நோயுற்றிருக்கும்
இரண்டாம் கிம் ஜோங்கிற்குப் பின்னர் பதவிக்கு வருவார் என்று கருதப்படுகிறது.
இந்த வாரம் இரண்டாம் கிம் ஜோங்
மரணமடைந்திருக்கக்கூடும் என்ற வதந்திகள் பரவின.
பென்டகன் செய்தித்தொடர்பாளர்
கர்னல் டேவிட் லாபன் செவ்வாயன்று,
“நான்
அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி உறுதியாகக் கூற முடியாது.”
என்றார்.
அமெரிக்க
உளவுத்துறையுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்ட அமெரிக்க சிந்தனைக் குழுவான
Stratfor, மற்றொரு கருத்தையும்
தெரிவித்துள்ளது.
அதாவது வட கொரிய இராணுவம் சுயமாகவே
செயல்படுகிறது என்பதே அது.
“வட
கொரியாவில் தலைமை மாற்றம் நடந்து கொண்டிருக்கையில்,
இராணுவத்திற்குள் அதிருப்தி
என்ற வதந்திகள் வந்துள்ளன;
தற்போதைய நடவடிக்கைகள் தவறான
செய்தித் தொடர்புகளை பிரதிபலிக்கலாம்,
இன்னும் மோசமான விதத்தில் வட
கொரிய கட்டுப்பாடு,
தலைமை கட்டமைப்பிற்குள் கருத்து
வேறுபாடுகள் இருக்கலாம் அல்லது வடகொரியத் தலைமைக்குள் கருத்து வேறுபாடுகள்
வந்திருக்கலாம்.”
என்று
Stratfor
கூறியுள்ளது.
அறுவர்
பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமெரிக்க துணை
வெளிவிவகார செயலர்,
கிறஸ்டோபர் ஹில்,
இதே போன்ற எச்சரிக்கையைத்தான்
கொடுத்துள்ளார்.
“வடக்கு
கொரியா ஒரு கடினமான உள்நாட்டு மாற்ற பிரச்சினையில் உள்ளது.
வட கொரிய இராணுவம் கிம் ஜோங்
II
ல் இருந்து அவருடைய மகனுக்குப் பதவி
போவது பற்றி ஆர்வம் காட்டவில்லை.
அங்கு பல பிரச்சினைகள் உண்டு,
அவர்கள் வெளியுலகத்துடன் நடந்து
கொள்ளும் முறையில் அவை வெளிப்படுவதைத்தான் நாம் காண்கிறோம்”
என்றார் அவர்.
இந்த மோதலுக்கு
விடையிறுக்கும் வகையில் அமெரிக்கா பியோங்யாங்கைக் கடுமையாக கண்டித்துள்ளதோடு
தென்கொரியாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவையும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பாரக் ஒபாமா
வடகொரிய குண்டுவீச்சை
“சீற்றத்தைத்
தரும்,
ஆத்திரமூட்டும் தன்மையுடைய செயல்”
என்று அழைத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் இருந்து
வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று பியோங்யாங்
“அதன்
அடாவடித்தன நடவடிக்கையை நிறுத்த வேண்டும்”
என்று கோரி வாஷிங்டன்
“நம்
நட்பு நாடான கொரியக் குடியரசின் பாதுகாப்பிற்கு உறுதியான உத்தரவாதம் அளிக்கிறது,
அதேபோல் அங்கு பிராந்திய அமைதி,
உறுதிப்பாடு ஆகியவற்றையும்
தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது”
என்று அறிவிக்கிறது.
ஆனால் பென்டகன்
அதிகாரிகள் கூடுதலான இராணுவத் துருப்புக்களை அப்பகுதிக்கு அனுப்பும் நோக்கம் இல்லை
என்றும்,
தென் கொரியாவில் உள்ள
29,000
அமெரிக்கத் துருப்புக்கள் உயர்மட்ட
எச்சரிக்கை நிலையில் வைத்திருக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
உயர்மட்ட அமெரிக்க
இராணுவத் தலைவர்கள் அமெரிக்கா அப்பகுதியில் வட கொரியாவை தாக்குவதற்குப் போதுமான
படைகளைக் கொண்டுள்ளது என்று வலியுறுத்தியுள்ளனர்.
“அங்கு
கணிசமான வான்படை ஆற்றல் உள்ளது,
மேற்கு பசிபிக்கில்
கூட்டுக்குழுவின் திறனும் உள்ளது என்பதில் கேள்விக்கு இடம் இல்லை;
இவை நல்ல தடுப்புச் சக்தி
உடையவை,
வட கொரியா அவற்றை மதிக்கும்”
என்று வாஷிங்டனில் விமானப்படைத்
தலைவர் தளபதி நோர்ட்டன் ஷ்வார்ட்ஸ் நிருபர்களிடம் கூறினார்.
சமீபத்திய மோதலுக்கு
விடையிறுக்கும் வகையில் அறுவர் பேச்சுவார்த்தைகள் மீண்டும் நடப்பது இயலாது என்று
வாஷிங்டன் கூறியுள்ளது.
இதில் இரு கொரியாக்களுடன்,
அமெரிக்கா,
சீனா,
ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகியவை
உள்ளன.
ஜப்பானும் ஒரு கடினப்
போக்கைத்தான் விடையிறுப்பாகக் காட்டுகிறது.
ஜப்பானின் பிரதம மந்திரி நாவோடோ
கான் தன்னுடைய மந்திரிகளிடம் “உரிய
தயாரிப்புக்கள் நடத்துமாறும்,
எதிர்பாரா நிகழ்வுகள்
ஏற்பட்டால்,
நாம் அதையொட்டி உறுதியாக செயல்பட
வேண்டும்.
என்ன நடந்தாலும் அதைச் சமாளிப்பதற்கு
நாம் தயாரிப்புக்களை மேற்கோள்ள வேண்டும்.”
என்று உத்தரவிட்டுள்ளதாகக்
கூறினார்.
ஆனால் சீனாவும்
ரஷ்யாவும் இந்த மோதல் பேச்சுவார்த்தைகள் மீண்டும் உடனடியாக தொடக்க வேண்டியதின்
தேவையைக் காட்டுகிறது என்று வலியுறுத்தியுள்ளன.
“இப்பொழுது
முக்கியமானது அறுவர் பேச்சுவார்த்தைகளை விரைவில் மறுபடியும் தொடக்க வேண்டும்
என்பதுதான்”
என்று சீன வெளியுறவு மந்திரி
ஹாங் லீ பெய்ஜிங்கில் நிருபர்களிடம் கூறினார்.
சீனாவில் இருந்து வந்த
அறிக்கை இப்பூசலில் எந்தப் பக்கதையும் சார்ந்ததாக இல்லை.
“சம்பந்தப்பட்ட
இரு புறத்தவரும் கொரியத் தீபகற்பத்தில் அமைதி,
உறுதிப்பாடு ஆகியவற்றிற்கு
இன்னும் பங்களிப்பு வழங்குவர் என்று நாம் நம்புகிறோம்”
என்று அமைச்சரகத்தின் செய்தித்
தொடர்பாளர் கூறினார்.
மோதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகள்
பற்றித் தெளிவான தவகல்களைப் பெறுவதற்கு சீனா முயல்கிறது என்றும் அவர் கூறினார்.
“நிலைமை
சரியாகக் கவனிக்கப்பட வேண்டும்”
என்றார் அவர்.
ரஷ்ய வெளிநாட்டு
மந்திரி செர்ஜீ லாவ்ரோவ் பெலாருசியத் தலைநகரான மின்ஸ்கிற்குச் சென்றிருக்கையில்,
இரு தரப்பினரும்
“உடனே
எல்லா தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும்”
என்று அழைப்பு விடுத்தார்.
செய்தியாளர்களிடம்,
“மிகப்
பெரிய ஆபத்து உள்ளது,
இது தவிர்க்கப்பட வேண்டும்.
இப்பகுதியில் அழுத்தங்கள்
பெருகிக் கொண்டிருக்கின்றன”
என்றார்.
சமீபத்திய நிகழ்வை
வாஷிங்டன் சீனாவிற்கு எதிராக அழுத்தம் கொடுக்கப் பயன்படுத்துகிறது.
ABC News செவ்வாய் இரவு
பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரி,
ஒபாமா நிர்வாகம்
“சீனாவிற்கு
அவர்கள் வட கொரியா பற்றி உறுதியாக இருப்பதற்கான வலுவான அடையாளத்தைக் கொடுத்துள்ளார்”
என்று கூறியதாக
மேற்கோளிட்டுள்ளது.
வட கொரியாவின் முக்கிய
வணிகப் பங்காளியும் அரசியில் நட்பு நாடுமான சீனாவிற்கு இப்பகுதியில் வட கொரிய
ஆத்திரமூட்டல் என்ற பெயரில் போலித்தனமாக அமெரிக்க இராணுவக் கட்டமைப்பு நிறுவ
வசதியளிப்பதில் அக்கறை இல்லை.
மேலும் பியோங்யாங்கை
முடுக்கிவிடுவது ஒரு அரசியல்,
பொருளாதாரக் கரைப்பிற்கு
இடமளிக்கும்,
அது வட கொரியாவின் கலைப்பில்கூட
முடியும் அதன் எல்லைகளைக் கடந்து அலையென அகதிகள் செல்லுவர் என்றும் அஞ்சுகிறது.
வட,
தென் கொரியாக்களுக்கு இடையே
பீரங்கித் தாக்குதல்கள் பரிமாற்றத்தைப் பின்தள்ளும் வகையில் அமெரிக்காவிற்கும்
சீனாவிற்கும் இடையே ஆசியா முழுவதும் மூலோபாய நலன்கள் பற்றி மோதல்கள் வெளிப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.
கொரியப் போர் முடிந்து ஆறு
தசாப்தங்களுக்குப் பின்னர் எல்லையில் நடக்கும் இந்த மோதல்கள் ஒரு மிகப் பெரிய போர்
விரிவடைவதற்கான சாத்தியத்தை கொண்டுள்ளது |