WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : கலை
விமர்சனம்
Threefilms: Conviction, It’s Kind of a Funny Story, Inside Job
மூன்று திரைப்படங்கள்:
Conviction, It’s Kind of a Funny Story, Inside Job
By Joanne Laurier
9 November 2010
Back to
screen version
2010 டொரொண்டோ திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட மற்றும் முன்னரே நாம் விமர்சனம் செய்திருந்த பல படங்கள் வட அமெரிக்காவில் வெளியாகி உள்ளன. அதே விமர்சனங்களை இன்று நாம் மறு-பிரசுரம் செய்கிறோம்.
டோனி கோல்ட்வெனால் (பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும், செயலதிகாரியுமான சாமுவேல் கோல்ட்வெனின் பேரன்) இயக்கப்பட்ட Conviction, நாடகபாணியில் அமைந்திருக்கும் ஒரு கருத்தாழம்மிக்க படமாக இருக்கிறது. மாசசூசெட்ஸில் தம்முடைய சகோதரரின் மீது ஒரு பெண்ணைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டி சிறைக்கு அனுப்பிய தீர்ப்பை மாற்றுவதற்காக நடைபெறும் ஒரு பெண்ணின் 18 வருட போராட்டத்தை நினைத்துப் பார்ப்பது போன்று இப்படம் அமைந்துள்ளது.
ஹிலாரி ஸ்வான்க்கினால், பெட்டி அன் வாட்டர்ஸ் (Betty Anne Waters) கதாபாத்திரம் மனப்பூர்வமாக நடிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய சகோதரர் கென்னி மாசசூசெட்ஸின் சிறிய நகரத்தில் ஒரு கடினமான சூழலில் வளர்க்கப்பட்டவராக இருக்கிறார். அவர்களின் ஆழமான உறவும், [கென்னி வஞ்சம் நிறைந்த பொலிஸ் ஒருவரால் (மெலிசா லியோவின் கதாபாத்திரம்) கட்டம் கட்டப்படுகிறார்] பொலிஸின் மற்றும் சட்ட அமைப்புமுறையின் அநீதிகளும் பெட்டி அன்-ஐ சட்டத்துறையில் ஒரு பட்டம் வாங்கும் நிலைக்கு தள்ளிச் செல்கின்றன. இது அவருடைய தனிப்பட்ட வாழக்கையைப் பெரிதும் இழந்துவிடச் செய்கிறது.
சிறுவயது சகோதர-சகோதரியின் பழைய நினைவுகள் சிறிது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், கென்னி ஒரு குற்றவாளி அல்ல என்பதை நிலைநாட்ட படத்தில் காட்டப்பட்டிருக்கும் பெட்டி அன்-இன் தீவிர போராட்டம் மிக அருமையாக செய்யப்பட்டிருக்கிறது. இது சுவாரசியப்படுத்துகிறது என்றாலும் கூட, நிதானமான உத்வேகமாக காட்டப்படுகிறது. லியோ, மின்னி டிரைவர், பீட்டர் கலாஹர் மற்றும் ஜூலியட் லிவிஸ் போன்ற துணை நடிகர்கள் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு, படத்தைச் செறிவூட்டுவதற்காக அவர்களின் கதாபாத்திரத்தில் அவர்கள் கொண்டிருந்த பொறுப்புணர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.
Innocence Project இல் (குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கான ஓர் அரசுசாரா அமைப்பின் திட்டம்) வாட்டர்ஸ் பணியாற்றுகிறார். பின்னர் DNA பரிசோதனை மூலமாக 2001இல் அவருடைய தம்பியை அவர் சிறையிலிருந்து விடுவித்து கொண்டு வருகிறார். (ஆனால் சோககரமாக, தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக தம்முடைய வாழ்நாளின் மூன்று மடங்கிற்கும் மேற்பட்ட காலத்தைச் சிறையில் கழிக்கும் கென்னி வாட்டர்ஸ் விடுதலை ஆன ஆறு மாதங்களிலேயே 47 வயதில் இறந்துவிடுகிறார்.)
It’s Kind of a
Funny Story Ned Vizzini எழுதிய சுயசரிதம் போன்ற 2006 ஆம் ஆண்டு நாவலை அடிப்படையாகக் கொண்ட It’s Kind of a Funny Story திரைப்படம், ரெயன் பிளெக் மற்றும் அன்னா போடனின் (Half Nelson and Sugar) சுவாரசியமான எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சமீபத்திய திரைபடமாகும். இப்படம் மன உளைச்சலுக்கு உள்ளான மற்றும் தற்கொலைக்கு முயன்ற விடலைச்சிறுவன் கிரெய்கை (Keir Gilchrist) பற்றிய படமாக இருக்கிறது. இவர் Executive Pro-Professional High Schoolஇல்—“நாளைய தலைவர்களை உருவாக்கும் பள்ளி—சேர்வதற்காக தம்மைத்தாமே “மன உளைச்சலில் இருந்து விடுபடுத்திக் கொள்ளும்” உத்திக்குள் தள்ளப்படுகிறார். பெரும்பாலும் “வாடிக்கையாளர் நெருக்கடிகளில்” சிக்கி இருக்கும் ஒரு தொழிலதிபரான தம்முடைய தந்தையை மகிழ்விக்க கிரெய்க் இதை முயற்சிக்கிறார்.
புரூக்லின் பாலத்திலிருந்து குதிக்க முயற்சிக்கும் அளவிற்கு அவர் நெருங்கி வந்த பின்னர், அமைதியைத் தேடி நகரத்தின் ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அறைக்குச் செல்கிறார். மனநல பிரிவில் அனுமதிக்கப்படும் அவர் அங்கே பரிதாபகரமான நோயாளிகளையும்—அபாயகரமான நோயாளிகளையும் கூட சந்திக்க நேரிடுகிறது. இது அவருக்குள் அவருடைய பிரச்சினைகளில் தெளிவு கிடைக்க உதவுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, அங்கிருக்கும் நிலைமை நிஜத்தில் இருப்பதின் ஒரு மாற்று பதிப்பாக—ஊறுவிளைவிக்காத ஒரு பதிப்பாக—இருக்கிறது.
இருந்தபோதினும், விரக்தி மிகுந்த நகைச்சுவை பாணியில் இப்படம் ஒரு கருத்தாழமிக்க விஷயத்தை இனிமையாக கையாள்கிறது. பாபியாக நடித்திருக்கும் ஜேக் கலிபியானாகிஸ்சின் நடிப்பால் படம் மெருகூட்டப்பட்டிருக்கிறது. ஆறுமுறை தற்கொலைக்கு முயலும் அவர், “சிலர் ஹேம்ப்டன்ஸிற்கு (சுற்றுலாத்தளம்) விடுமுறைக்குச் செல்வதைப் போல,” வழக்கமாக அவர் தம்மைத்தாமே மருத்துவமனையில் அனுமதித்து கொள்கிறார். “He not busy being born is busy dying,” பாடல் உட்பட பாப் டெய்லனின் பாடல்களை ஒப்பிப்பதில் பைத்தியமாக இருக்கும் அவர், அவற்றை தம்முடையது என்றும் கூறிக் கொள்கிறார்.
ஏனைய பிற விஷயங்களோடு சேர்ந்து “இரண்டு யுத்தங்களையும் மற்றும் ஒரு குழப்பமான சமூகத்தையும்” எதிர்க்கொள்ளும் ஒரு விடலைச்சிறுவனின் மீது விழும் தனிப்பட்ட மற்றும் சமூக அழுத்தங்களைக் குறித்து குறிப்பிட்ட அளவிலான உணர்வுகளை இப்படம் கையாண்டிருக்கிறது. மேலும், தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் ஒரு விடலைச்சிறுமி (Emma Roberts), அனாதையாக்கப்பட்ட ஓர் எகிப்திய புலம்பெயர்ந்தவர் மற்றும் “பேட்ரியாட் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் மனம் குழம்பி போன, ஒரு கௌரவம்மிக்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு கருப்பின பகுத்தறிவு கல்வியாளர் ஆகியோர் மருத்துவமனையில் “மறுவாழ்வு அளிக்கப்படுபவர்களாக” காட்டப்படுகிறார்கள். இடுப்பை அசைத்து அசைத்து வரும் ஜெர்மி டேவிஷூம் படத்திற்கு வர்ணம் கூட்டுகிறார்.
நிஜத்தைக் குறித்து கிரெய்க் புதிதாக புரிந்து கொள்ளும் காட்சிகள், படத்தின் சில விஷயங்களை மேலும் பலப்படுத்த உதவி இருக்கின்றன. குறிப்பாக இது, 1980களில் பிரபலமாக இருந்த Queen “Under Pressure” இல் இருந்து “She been around/Kicked my brains around the floor/These are the days it never rains but it pours” போன்ற பாடல்களைக் காட்டும் போது, நோயாளிகளின் கவர்ந்திழுக்கும் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுகிறது.
Inside Job
அமெரிக்க ஆவணப்பட இயக்குனரான சார்லஸ் பெர்குசனால் (No End In Sight) இயக்கப்பட்டிருக்கும் Inside Job திரைப்படம் மதிப்புடைய ஒன்றாக இருக்கிறது. இது 2008 செப்டம்பரில் நிகழ்ந்த உலகளாவிய நிதியியல் பொறிவை விவரமாக கையாள்கிறது. இருபது ட்ரில்லியன் டாலருக்கும் மேலாக மதிப்பிடுவதுடன், உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பிச்சைக்காரர்களின் நிலைமைக்கு ஆளாக்கியது என்று கூறுவதுடன், “நீண்ட காலத்திற்கு அமெரிக்க மக்கள் இதற்கு செலவிட வேண்டியதிருக்கும்” என்று டொரொண்டோவில் நடந்த திரைப்பட கேள்வி-பதில் நிகழ்வில் இயக்குனர் தெரிவித்தார்.
மட் டேமனால் (Matt Damon) நடிக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் ஆவணத்தொகுப்பின் ஆதாரங்களையும், படவிளக்கங்களையும் மற்றும் புள்ளிவிபர விளக்கப்படங்களையும், அத்துடன் டஜன் கணக்கான பிரபலங்களின் கருத்துக்களையும் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களாக இருக்கும் இவர்களில் பெரும்பாலானவர்கள், வெளிப்படுத்தி காட்டுவதற்கு ஆதரவு தெரிவிப்பதிலிருந்து விரோதம் காட்டுவது வரையிலான பிரிவில் அடங்கி உள்ளார்கள். குற்றம்மிக்க நிதியியல் துறை விரிவடைவதில் முந்தைய புஷ் நிர்வாகம் எந்தளவிற்கு பொறுப்பு வகித்ததோ அதே அளவிற்கு ஒபாமாவின் வெள்ளை மாளிகையும் பொறுப்பு வகிக்கிறது என்று இது வாதிடுகிறது.
1980களில் இருந்து நெறிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது தான், பிரச்சினையை இந்தளவிற்குச் சிக்கலுக்குள் கொண்டு வந்து, நெருக்கடிகளுக்கு இட்டுச் சென்றது என்றும், ஆனால் நிதியியல் துறையில் பெருத்த செல்வாக்கின் காரணமாகவும், செல்வசெழிப்பின் காரணமாகவும் குறைந்தளவு எண்ணிக்கையிலான மக்களே இதனால் பாதிக்கப்பட நேர்ந்தது என்றும் Inside Job படத்தின் தயாரிப்பு குறிப்புகள் குறிப்பிடுகின்றன. 2008 நெருக்கடியின் விஷயத்தில், “ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுத்திய மோசடி நடந்திருந்தாலும், ஒருவர் கூட சிறைக்கு அனுப்பப்படவில்லை.”
நிதியியல் உயர்தட்டு மற்றும் அவர்களின் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி முகவர்களின் சமூகரீதியிலான பேரழிவு செயல்பாடுகளை மூடிமறைக்க நுழைக்கப்பட்டிருந்த பெரும் விஷயங்கள், “எல்லாவற்றிற்கும் சிகரமாக சரியான நெறிமுறைகளும், மக்களைச் சிறப்பாக திருத்தும் முறைகளும் இருந்திருந்தால், நிதியியல் பொறிவு முற்றிலும் தகர்த்திருக்கக்கூடியதாகும்” என்று பெர்குசனைத் தீர்மானிக்க இட்டுச் சென்றிருக்கிறது. “நம்முடைய நிதியியல் அமைப்புமுறையில் நேர்மையையும், ஸ்திரப்பாட்டையும் மீண்டும் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தையும் மற்றும் அதை அழித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் யாரும் மறுக்க முடியாது” என்று பெர்குசன் குறிப்பிடுகிறார்.
இது பொறிவின் புறநிலையை, வரலாற்று மற்றும் அமைப்புரீதியிலான பாத்திரத்தை ஒருவரின் பார்வையில் இருந்து ஒன்றும் நிகழாதது போன்று காட்டுவதாகும். இதுபோன்ற கருத்து வெளியிடுவோர், இந்த வியப்பார்ந்த மாற்றங்கள் எவ்வாறு, ஏன் நிகழ்ந்தது என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வதில்லை. அமெரிக்க ஆளும் மேற்தட்டு திடீரென்று அதன் நன்னெறிகளை இழந்துவிட்டதா? மக்களின் ஒழுக்கம் ஏன் இந்தளவிற்கு வீழ்ச்சியுற்றது? ஒரு நெருக்கடியை நோக்கி உந்தித் தள்ளப்பட்ட அமைப்புமுறைக்கு திறந்துவிடப்பட்டிருந்த கூர்மையான வாய்ப்புகளோடு அதற்கு எந்த தொடர்பும் இல்லையா?
பெருவணிக அமெரிக்காவின் ஊழல் மற்றும் அதற்கு அடிமைப்பட்டு கிடந்த தன்மையைக் குறித்த கல்வியாளர்களின் குற்றப்பத்திரிகையும், வெளிப்படுத்தி காட்டியிருப்பதும் தான் படத்தின் வலுவான விஷயமாக இருக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வணிக பள்ளியின் தற்போதைய தலைவர், க்ளீன் ஹப்பர்டு படத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராக வருகிறார். புஷ் நிர்வாகத்தில் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்து, பணக்காரர்களுக்கு 2003 வரி வெட்டுக்களை வடிவமைத்ததில் இவர் கருவியாக இருந்தார். மெட்லைஃப்பின் பொதுக்குழுவில் இடம் பெற்றிருக்கும் இவர், முன்னர் Capmarkஇன் பொதுக்குழுவில் இருந்தார். தயாரிப்பு குறிப்புகளின்படி, அவர் நிதியியல் சேவைகளின் நெறிமுறைகளைத் தளர்த்துவதில் முக்கிய ஆலோசகராக இருக்கிறார்.
|