WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
NATO summit reveals cracks in Atlantic
Alliance
நேட்டோ உச்சிமாநாடு அட்லான்டிக் உடன்பாட்டில் விரிசல்களை வெளிப்படுத்துகிறது
By Peter
Schwarz
22 November 2010
Back to
screen version
நவம்பர்
20
அன்று
லிஸ்பனில்
நேட்டோ
ஒரு
புதிய
மூலோபாயக்
கருத்தை
ஏற்றது.
இது
அதன்
61
ஆண்டுகால
இராணுவ
உடன்பாட்டில்
ஏழாவதும்,
1999ல்
இருந்து
முதலாவதும்
ஆகும்.
உச்சி
மாநாட்டிற்கு
முன்னதாக
பல
மாதங்கள்
தயாரிப்புக்களும்,
விவாதங்களும்
இருந்தன.
முன்னாள்
அமெரிக்க
வெளிவிவகார
செயலர்
மாடலீன்
ஆல்பிரைட்
தலைமையில்
ஒரு
வல்லுனர்கள்
குழு
மே
மாதமே
புதிய
மூலோபாயத்திற்கான
பரிந்துரைகளை
வெளியிட்டிருந்தது.
ஒரு
நீடித்த
இழுபறிக்குப்
பின்னர்
மூலோபாயக்
கருத்து
இப்பொழுது
ஏற்கப்பட்டு,
லிஸ்பனில்
பகிரங்கமாக
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உச்சிமாநாட்டில்
கலந்து
கொள்பவர்கள்
அதை
வரலாற்றுத்
தன்மை
நிறைந்தது
என்று
கொண்டாடியுள்ளனர்.
ஜேர்மனியின்
சான்ஸ்லர்
அங்கேலா
மேர்க்கெல்
கூறினார்:
“இந்த
உச்சி
மாநாடு
வரலாற்றில்
இடம்
பெறும்.
மூலோபாய
அணுகுமுறை
தெளிவாக
உள்ளது,
நாம்
அனைவரும்
ஒரு
நிலைப்பாட்டில்
இருந்துதான்
பணிபுரிகிறோம்
என்பதைக்
காட்டுகிறது.”
உண்மையில்
இந்த
11
பக்க
ஆவணம்
உலகின்
மிகப்
பெரிய
இராணுவ
உடன்பாட்டில்
28
உறுப்பினர்களுக்கு
இடையே
ஏற்பட்டுள்ள
விரிசல்களை
ஓரளவிற்குத்தான்
மூடிமறைக்க
முடிந்துள்ளது.
பல
மாறுபட்ட
நலன்களுக்கு
இடையே
ஒரு
சொல்லளவு
சமரசத்தைத்தான்
இது
கொண்டுள்ளது.
கடைசி
நிமிடத்தில்தான்
பல
கருத்துக்கள்
பற்றி
வெவ்வேறு
பிரிவுகள்
உடன்பட
முடிந்தது.
இராணுவம்
இன்னும்
மிக
முக்கியமான
பங்கை
அரசியல்,
சமூக
வாழ்வில்
கொள்ள
வேண்டும்
என்பதுதான்
உச்சிமாநாட்டின்
ஒருமனதான
முடிவு
ஆகும்.
மரபார்ந்த,
மற்றும்
அணுவாயுதங்கள்
என்ற
முறையில்
கூட்டுப் பாதுகாப்பைத்
தவிர,
புதிய
மூலோபாயம்
பலவிதங்களில்
சர்வதேச தலையீடுகளை,
நேட்டோ
ஏற்கனவே
முன்னாள்
யூகோஸ்லேவியாவில்
நடத்தியது
போலவும்,
இப்பொழுது
ஆப்கானிஸ்தான்,
ஆப்பிரிக்கக்
கொம்பு
மற்றும்
உலகின்
பிற
இடங்களில்
நடத்துவது
போலவும்
செயல்படுத்த
அனுமதிக்கிறது.
பல்வேறுவகைப்பட்ட காரணங்களின் மூலோபாயக் கருத்தின் பட்டியலானது எதிர்காலத்தில்
யுத்தத்திற்கான ஒரு பொய்க் காரணத்தை கொடுக்க நேட்டோவிற்கு சேவை செய்யும். அவைகளாக
இருப்பன,
‘பலிஸ்டிக்
ஏவுகணைகளின் பெருக்கம், அணுவாயுதப் பெருக்கம் மற்றும் மக்கள்திரளை அழிக்கும் மற்றய
ஆயுதங்களின் பெருக்கம்,’
‘உறுதிப்பாடின்மை,
அதிதீவிரவாத, தீவிரவாதம் மற்றும் பன்னாட்டு சட்டவிரோத செயற்பாடுகளின் வளர்ச்சி
அதாவது ஆயுத, போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தல்கள்,’
மேலும் முக்கிய தகவல்தொடர்பு, போக்குவரத்து, சர்வதேச வர்த்தக மாற்றுப் பாதைகள்,
எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தங்கியிருக்கும் வளங்களை சீர்குலைத்தல் மற்றும்
தாக்குதல் நடத்துதல்.
சுற்றுச்சூழல்
பிரச்சினைகளிலும்கூட
இராணுவ
நோக்கங்களுக்காகப்
பயன்படுத்தப்படலாம்.
“முக்கிய
சுற்றுச்சூழல்
மற்றும்
ஆதாரத்
தடைகள்,
சுகாதார
இடர்கள்,
காலநிலை
மாற்றங்கள்,
தணிணீர்த் தட்டுப்பாடு
மற்றும்
பெருகிய
எரிசக்தித்
தேவைகள்
போன்றவை
நேட்டோவிற்கு
அக்கறையுள்ள
இடங்களின்
வருங்காலப்
பாதுகாப்புச்
சூழ்நிலையை
மேலும்
உருவாக்கும்,
இவை
நேட்டோவின்
திட்டமிடுதல்,
செயற்பாடுகள்
ஆகியவற்றைக்
கணிசமாகப்
பாதிக்கும்
திறன்
உடையவை”
என்று
ஆவணம்
கூறுகிறது.
முன்பு
பொதுவாக
இராணுவத்தின்
பிடிகளுக்கு
பெரும்பாலும்
முற்றிலும்
அப்பால்
இருந்த
புதிய
பகுதிகளிலும்
நேட்டோ
தீவிரமாகச்
செயல்படும்.
இவற்றுள்
“சைபர்
தாக்குதல்களைத்
தடுக்கும்
திறன்,
அவற்றைக்
கண்டுபிடித்து
அவற்றிற்கு
எதிராகக்
பாதுகாத்தல்,
தகவல்களை
மீட்டல்
ஆகிய
திறன்கள்
அடங்கும்”
என்பதுடன்
“வெளிப்பட்டுவரும்
பாதுகாப்புத்
தொழில்நுட்பங்களின்
பாதிப்புக்களும்
மதிப்பீடு
செய்யப்படும்.”
தொடர்பாடல்
துறையில்
முக்கிய
வழிவகைகளான
இணையம்,
அறிவியல்
மற்றும்
தொழில்நுட்ப
ஆராய்ச்சி
ஆகியவையும்
இராணுவத்தின்
நேரடிச்
செல்வாக்கு,
கட்டுப்பாட்டின்கீழ்
இதேபோல்
கொண்டுவரப்படும்.
இவற்றின்
விளைவு
ஜனநாயக
உரிமைகளை
அரித்தல்,
இராணுவம்
உள்நாட்டு
அரசியலில்
ஈடுபடுதல்,
இராணுவம்,
பொலிஸ்
மற்றும்
உளவுத்துறைகளை
இணைத்தல்
என இருக்கும்.
லிஸ்பன்
உச்சிமாநாட்டில்
பங்கு
பெற்ற
நாடுகள்
பொதுவாக
இராணுவத்தின்
பெருகும்
பங்கு
பற்றி
உடன்பட்டாலும்,
உடன்பாட்டின்
மூலோபாயத்
தடை
பற்றி
கருத்து
வேறுபாடுகள்
இருந்தன.
இவை
கணிசமான
இடரில்தான்
மறைக்கப்பட்டன.
குறிப்பாக
ரஷ்யாவிடம்
அணுகுமுறை
பற்றி
ஆழ்ந்த
வேறுபாடுகள்
உள்ளன.
கிழக்கு
ஐரோப்பிய நாடுகளானது வார்சோ
உடன்பாடு,
சோவியத்
ஒன்றியம்
ஆகியவை
சரிந்தபின்
அட்லான்டிக் உடன்பாட்டில்
சேர்ந்தவை,
ரஷ்யாவிற்கு
எதிராக
பிரதேசப்
பாதுகாப்பு
உடன்பாடாக
நேட்டோ
இருக்க
வேண்டிய
பங்கைப்
பற்றி
வலியுறுத்தியுள்ளன.
ஐரோப்பாவில்
அமெரிக்க
இராணுவம்
வலுவாக
நிலை
கொள்ள
வேண்டும்
என்று
வலியுறுத்துகின்றன.
ஜேர்மனி அல்லது
பிரான்ஸுக்கும்
ரஷ்யாவிற்கும்
இடையே
ஒருவேளை
நல்லிணக்கம்
ஏற்பட்டுவிட்டால்
அதற்கு
எதிரான
பாதுகாப்பு
இதுதான்
என
அவை
கருதுகின்றன.
ஆனால்
கிழக்கு
ஐரோப்பாவுடன்
நெருக்கமான
பொருளாதார
உறவுகளைக்
கொண்டு,
ரஷ்யாவிடம்
எரிசக்தி வழங்குதலுக்கு
நம்பியிருக்கும்
ஜேர்மனி
நேட்டோவிற்கும்
ரஷ்யாவிற்கும்
இடையே
நல்ல
உறவுகள்
வேண்டும்
என்று
குரல்
கொடுத்துள்ளது.
உலகின்
இரு
பெரிய
அணுவாயுத
நாடுகளுக்கு
நடுவே
மீண்டும்
சிக்கிக்
கொள்வதை
அது
தவிர்க்க
விரும்புகிறது.
பனிப் போர்க்காலத்தில்
அதனுடைய
வலுவின்
அளவு
வெளி நடவடிக்கைகளுக்கு
மட்டுமே கட்டுப்படுத்தி
இருந்தது
என்பது
குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி
ஜோர்ஜ்
டபுள்யூ
புஷ்ஷின்
கீழ்
வாஷிங்டன்
ரஷ்யாவை
பெரும்
அழுத்தத்தில்
ஆழ்த்தியது.
இது
நேட்டோவை
கிழக்கு
ஐரோப்பாவில்
விரிவுபடுத்தியது,
அதற்காக
ஒரு
ஏவுகணைக்
கேடயத்தை
கட்டமைப்பதற்குத்
திட்டமிட்டது,
மற்றும்
முன்னாள்
சோவியத்
குடியரசுகளில்
“வண்ணப்
புரட்சிகள்”
என்று
அழைக்கப்பட்டவற்றிற்கு
ஆதரவைக்
கொடுத்தது.
“பழைய”,
“புதிய”
ஐரோப்பாவிற்கு
இடையே
இருந்த
முரண்பாடுகளை
அமெரிக்கா
தன்
நிலையை
ஐரோப்பாவில்
வலுப்படுத்தப்
பயன்படுத்திக்
கொண்டது.
உக்ரைன்
மற்றும்
ஜோர்ஜியாவை
நேட்டோவிற்குள்
சேர்ப்பது
என்பது
மாஸ்கோவின்
கடுமையான
எதிர்ப்பைச்
சந்தித்தது.
2008ம்
ஆண்டு
ஜோர்ஜியாவில்
ரஷ்யாவிற்கும்
அமெரிக்கப்
படைகளுக்கும்
இடையேயான
ஆயுதமேந்திய
மோதல்
மிகக்
குறுகிய
விதத்தில்தான்
தவிர்க்கப்பட்டது.
ஒபாமாவின்கீழ்
ரஷ்யாவும்
அமெரிக்காவும்
மீண்டும்
ஒருமித்து
உள்ளன.
முதலில்
அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில்
ரஷ்யாவின்
ஆதரவை
விரும்புகிறது.
ஓரளவிற்கு
சீனாவுடன்
மோதலில்
அதிக
கவனம்
செலுத்துவதால்
பெய்ஜிங்
பக்கம்
சாயாமல்
இருக்கவும்
ரஷ்யா
விரும்புகிறது.
இந்த
ஆண்டு
ஏப்ரல்
மாதம்
ஒபாமாவும்
ரஷ்ய
ஜனாதிபதி
மெட்வெடேவும்
START
என்னும்
புதிய
உடன்பாட்டில்
கையெழுத்திட்டு
மூலோபாய
அணுசக்தி
ஆயுதங்களை
வரம்பிற்குள்
கொண்டுவருகின்றன.
கிழக்கு
ஐரோப்பிய
நாடுகளுக்கு
ஒரு
சலுகை
என்னும்
முறையில்,
புதிய
நேட்டோ
மூலோபாயம்
வட
அட்லான்டிக்
உடன்பாட்டின்
5வது
விதியின்
கீழ்
கூட்டுப் பாதுகாப்பு
பற்றித்
தெளிவான
உறுதியை
அளிக்கிறது.
5வது
விதி
அனைத்து
நேட்டோ
நாடுகளும்
ஒரு
நாட்டின்
பாதுகாப்பு
அச்சுறுத்தப்பட்டால்
மற்ற
உறுப்பு
நாடுகள்
இராணுவ
உதவியை
அளிக்க
வேண்டும்
என்ற
கட்டாயத்தைக்
கொடுத்துள்ளது.
உதாரணமாக,
ரஷ்யாவிற்கும்
நேட்டோவில்
இருக்கும்
பால்டிக்
உறுப்பு
நாடுகள்
எதற்கேனும்
மோதல்
வந்தால்,
இனவழிச்
சிறுபான்மை
பற்றிய
தீர்க்கப்படாத
பிரச்சினைகள்
இருந்தால்,
நேட்டோ
ரஷ்யாவிற்கு
எதிராக
இராணுவரீதியாகத்
தலையிடும்
கட்டாயத்தில்
உள்ளது.
நேட்டோ
உறுப்பு
நாடான
ருமேனியாவின்
எல்லையில்
இருக்கும்
மோல்டோவா,
அதன்
பிரிவினை
மாநிலம்
டிரான்ஸ்நிஸ்ட்ரியா
ரஷ்யா
இராணுவப்
பாதுகாப்பின்கீழ்
இருக்கும்
நிலையில்,
மோதலுக்கான
மற்றொரு
ஆதாரமாக
அமையலாம்.
புதிய
மூலோபாயம்
உக்ரைன்
மற்றும்
ஜோர்ஜியா
ஆகியவை
நேட்டோவில்
சேரக்கூடிய
வாய்ப்பையும்
காட்டுகிறது.
“அனைத்து
ஐரோப்பிய
ஜனநாயக
நாடுகளும்,
நேட்டோவின்
தரங்களைக்
கொண்டவற்றிற்கு
உடன்பாட்டில்
உறுப்பினர்
தன்மைக்கான
கதவு
திறந்தே
இருக்கும்”
என்று
அது
வலியுறுத்தியுள்ளது.
அதன்
நோக்கம்
“உக்ரைன்
மற்றும்
ஜோர்ஜியாவுடன்
பங்காளித்தனங்களைத்
தொடர்ந்து,
வளர்ப்பதும்
ஆகும்”
என்றும்
கூறியுள்ளது.
விவாதத்திற்குரிய
ஏவுகணைப்
பாதுகாப்புக்
கேடயம்
கூட
2020ல்
கட்டப்படவுள்ளது—புஷ்
திட்டமிட்டபடி
ஒரு
அமெரிக்கத்
திட்டம்
என்று
இல்லாமல்
ஒரு
நேட்டோ
கட்டமைப்பாக.
மூலோபாயக்
கருத்து
ஒரு
ஏவுகணைத்
தாக்குதல்
ஆபத்தை
எந்த
நாடு
கொடுக்கும்
என்ற
வினாவை
எழுப்பவில்லை.
ஏனெனில்
ஈரானைப்
பெயரிடக்கூடாது
என்று
துருக்கி
வலுவாக
வற்புறுத்தியுள்ளது.
ரஷ்யாவிற்கு
உறுதியளிக்கும்
வகையில்
மாஸ்கோவும்
ஏவுகணைப்
பாதுகாப்புக்
கேடயத்தில்
சேருமாறு
அழைக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய
ஜனாதிபதி
ட்மிட்ரி
மெட்வெடேவ்
லிஸ்பனுக்கு
வந்து,
இதற்கு
நேரிய
வகையில்
வரவேற்பு
கொடுத்துள்ளார்.
சில
தகவல்களின்படி
அவர்
நேட்டோவிற்கு
ஆப்கானிஸ்தானிற்குச்
செல்லவேண்டிய
இராணுவத்
தளவாடங்களுக்காக
கூடுதலான
ரஷ்ய
போக்குவரத்தை
அணுகும்
சலுகையைக்
கொடுத்துள்ளார்.
குறிப்பாக
ஜேர்மனியில்
இந்த
ரஷ்யாவுடனான
ஒத்துழைப்பு
“வரலாற்றுத்
திருப்புமுனை”
என்று
கொண்டாடப்பட்டது.
“நேட்டோவின்
தலைமைச்
செயலர்
Rasmussen
இதை
ஒரு
முன்னோடியில்லாத
நடவடிக்கை
என்று
விவரித்தார்.
“வரலாற்றில்
முதல்
தடவையாக
நேட்டோ
நாடுகளும்
ரஷ்யாவும்
தங்கள்
பாதுகாப்பில்
ஒத்துழைத்துக்
கொண்டிருக்கின்றன”
என்று
அவர்
கூறினார்.
உண்மையில்
எதுவும்
உறுதிப்படுத்தப்படவில்லை.
ரஷ்ய
ஜனாதிபதியே
உறுதியாக
எதையும்
கூறவில்லை.
இன்னும்
கூடுதலான
பேச்சுக்களுக்குத்
தான்
தயார்
என்று
கூறிய
அவர்
எச்சரிக்கையும்
கொடுத்தார்:
“நாங்கள்
ஒரு
சமமான
தன்மையில்தான்
தொடர்பு
கொள்ளுவோம்,
இல்லாவிடில்
இதில்
பங்கு
பெறமாட்டோம்.”
மேலும்
ரஷ்யாவிலுள்ள
அரசியல்,
இராணுவ
உயரடுக்குகளில்
பல
பிரிவுகள்,
பிரதம
மந்திரி
விளாடிமிர்
புட்டின்
உட்பட,
நேட்டோவின்
ஒத்துழைப்பு
பற்றி
அவநம்பிக்கைத்தன்மைதான்
கொண்டுள்ளனர்.
சமீபத்திய
அமெரிக்கத்
தேர்தல்களை
அடுத்து,
ரஷ்யாவுடன்
நெருக்கமான
ஒத்துழைப்பு
என்னும்
கருத்திற்கு
எதிரானவர்கள்
அதிக
செல்வாக்கைக்
கொண்டுள்ளனர்.
ஏப்ரல்
மாதம்
கையெழுத்திடப்பட்ட
START
க்கு
காங்கிரஸ்
ஒப்புதல்
கொடுக்குமா
என்பது
கேள்விக்கு
உரியதுதான்.
ஜேர்மனியிலும்
இது
கவலையை
எழுப்பியுள்ளது.
ஆயுதம்
களைதலுக்கு
உதட்டளவு
ஆதரவு
கொடுத்தாலும்,
புதிய
நேட்டோ
மூலோபாயம்
அணுசக்கித்
தடுப்பு
முறையில்
உறுதியாக
உள்ளது.
நேட்டோ
“அணுவாயுதங்கள்
இல்லா
உலகத்திற்கான
சூழ்நிலையை
உருவாக்குதலை
நோக்கமாகக்
கொண்டு
தொடர்கிறது.”
என்று
அது
தொடங்கினாலும்,
அடுத்த
சொற்றொடரில்,
“உலகில்
அணுவாயுதங்கள்
இருக்கும்
வரை,
நேட்டோவும்
ஒரு
அணுவாயுத
சக்தியாகத்தான்
இருக்கும்”
என்று
கூறுகிறது.
அணுவாயுதம்
இல்லாத
உலகத்திற்கு
உறுதி
என்பது
ஜேர்மனியின்
வலியுறுத்தலின்
பேரில்
சேர்க்கப்பட்டது.
அணுவாயுதம்
இல்லாத
நாடு
என்னும்
முறையில்
அது
ஐரோப்பாவிலிருந்து
அமெரிக்க
அணுவாயுதங்கள்
திரும்பப்
பெறப்பட
வேண்டும்
என்று
வலியுறுத்தி
வருகிறது.
அப்பொழுதுதான்
அது
அமெரிக்காவின் மீது
கொண்டுள்ள
இராணுவரீதியான
நம்பியிருக்கும்
நிலை
குறையும்.
ஆனால்
தன்னுடைய
சொந்த
அணுவாயுதங்களைக்
கொண்டுள்ள
பிரான்ஸ்
அதைக்
கைவிட
மறுக்கிறது.
தன்னுடைய
அணுவாயுதத்
திறனை
அது
வலுவான
–சக்தி,
ஐரோப்பாவில்
தன்னுடைய
அதிகார
நிலைப்பாட்டை
உறுதிப்படுத்துவது
என்று
கருதுகிறது.
நேட்டோ
இது
பற்றி
ஏதும்
கூறக்கூடாது
என்றும்
சொல்லுகிறது.
குறிப்பாக
ஐரோப்பிய
ஏவுகணைத்
தடுப்புக்
கேடயம்
அணுவாயுதத்
தடுப்பு
முறைக்கு
மாற்றீடு
என்று
விவரிக்கப்படுவதை
பிரான்ஸ்
எதிர்க்கிறது.
ஜேர்மனிக்கும்
பிரான்ஸுக்கும்
இடையே
உள்ள
மோதல்
ஜனாதிபதி
சார்க்கோசி
மற்றும்
சான்ஸ்லர்
மேர்க்கெல்
உச்சிமாநாட்டு
நேரத்தில்
பேசியபோது
தீர்க்கப்பட்டது.
மூலோபாயக்
கருத்தில்
நிதி
பிரச்சினையை
முற்றிலும்
ஒதுக்கி
வைத்துள்ளது.
இது
உச்சிமாநாட்டிற்கு
முன்பு
கணிசமான
அழுத்தங்களை
ஏற்படுத்தியிருந்தது.
பென்டகன்
தன்னுடைய
ஆண்டு
இராணுவச்
செலவுகளை
2001ல்
$403
பில்லியன்
என்பதில்
இருந்து
$708
பில்லியன்
ஆக
உயர்த்தியுள்ள
நிலையில்,
ஐரோப்பிய
இராணவச்
செலவுகள்
இதே
காலக்கட்டத்தில்
ஆண்டிற்கு
2
சதவிகிதம்
குறைந்தது.
$295
பில்லியன்
மொத்தம்
என்ற
நிலையில்
இது
அமெரிக்கச்
செலவுகளில்
பாதிகூடக்
கிடையாது.
பைனான்சியல்
டைம்ஸ்
ஒரு
பாதுகாப்புத்
துறை
வல்லுனரை
மேற்கோளிட்டுள்ளது,
நிதிய
இடைவெளியையொட்டி
அவர்
லிஸ்பன்
உச்சமாநாட்டை
ஒரு
“மிகுயதார்த்த
நாடகம்”
என்று
ஒப்பிட்டுள்ளார்.
நேட்டோ
புதிய
விழைவுகளை
நிர்ணயித்துள்ளது.
“இருந்தும்
கூட
ஐரோப்பாவில்
இந்த
அழுத்தங்களைச்
சமாளிக்க
வேண்டிய
ஆதாரங்களை
பெருமளவிற்குக்
குறைக்கப்படுகின்றன”
என்று
அவர்
கூறினார்.
சமூக
நலச்
செலவுகளில்
பாரிய
வெட்டுக்கள்
நடக்கையில்,
எந்த
ஐரோப்பிய
அரசாங்கமும்
பெரிதும்
மக்கள்
எதிர்ப்பிற்கு
உட்பட்ட
இராணுவச்
செலவுகளை
மிகவும்
அதிகரிக்கும்
நிலையில்
இருக்காது.
மாறாக
இராணுவம்
மறுசீரமைத்தல்,
மறுகட்டமைத்தல்
ஆகியவற்றிற்குத்தான்
உட்படுகிறது.
பிரான்ஸும்
பிரிட்டனுமே
சமீபத்தில்
தங்கள்
ஆயுதப்
படைகளின்
சர்வதேசத்
திறன்களைப் பாதுகாக்கும்
பொருட்டு
நெருக்கமான
இராணுவ
ஒத்துழைப்பிற்கு
ஒப்புக்
கொண்டுள்ளன.
ஜேர்மனி
கட்டாய
இராணுவ
சேவையை
அகற்றிவிட்டது.
அதன்
துருப்புக்கள்
எண்ணிக்கையையும்
குறைத்துவிட்டது.
அதே
நேரத்தில்
சர்வதேச
செயற்பாடுகளுக்கு
ஒதுக்கப்படும்
படையினர்களின்
எண்ணிக்கையை
அதிகரித்துள்ளது.
ஜேர்மனியின்
கண்ணோட்டத்திலிருந்து,
ரஷ்யாவுடன்
கூடுதலான
சுமுக
உறவு
என்பது
சர்வதேச
அளவில்
இராணுவ
நடவடிக்கைத்
திறனுக்கு
இருக்க
வேண்டிய
முன்னிபந்தனை
ஆகும்.
கிழக்கு
ஐரோப்பிய
நாடுகளுக்கு
அமெரிக்கா
ஆதரவு
கொடுத்தல்,
மற்றும்
வாஷிங்டனுக்கும்
மாஸ்கோவிற்கும்
இடையே
உள்ள
புதிய
அழுத்தங்கள்
இப்பொழுது
பேர்லினில்
பெருகிய
வெறுப்புடன்
எதிர்கொள்ளப்படுகின்றன.
ஐரோப்பிய
இராணுவப்
படைகள்
மறுசீரமைப்பு
என்பது
ஐரோப்பிய
பாதுகாப்புத்
தொழில்கள்
குவிப்பையும்
இணைத்து
நிற்கும்.
அவை
அவற்றின்
அமெரிக்க
நிறுவனங்களுடன்
போட்டியில்
ஆழ்ந்தவை.
ஜேர்மனி,
பிரான்ஸ் மற்றும்
ஸ்பெயின்
ஆகியவை
தங்கள்
விமானப் பிரிவுத்
தொழில்துறைகளை
பத்து
ஆண்டுகளுக்கு
முன்னரே
இணைந்து
EADS
ஐ
உருவாக்கின.
ஏயர்பஸ்
உற்பத்தியாளர்
EADS
வணிக
விமானத்துறையில்
போயிங்கிற்கு
மிகப்
பெரிய
போட்டி
நிறுவனம்
மட்டும்
இல்லாமல்,
ஐரோப்பாவில்
இரண்டாவது
பெரிய
ஆயுதத்
தளவாடங்கள்
தயாரிக்கும்
நிறுவனமும்
ஆகும்.
ஐரோப்பிய
ஆயுதத்
தயாரிப்பாளர்கள்
ரஷ்யாவிற்கும்
சீனாவிற்கும்
தளவாடங்களைக்
கொடுப்பது
பற்றி
வாஷிங்டன்
குறிப்பாக
எரிச்சல்
அடைந்துள்ளது.
உதாரணமாக
பிரான்ஸ்
ரஷ்யாவிற்கு
Mistral
பிரிவு
ஹெலிகாப்டர்களை
விற்க
முயல்கிறது.
நேட்டோவில்
அதிகரிக்கும்
விரிசல்கள்
சர்வதேச
உறவுகளில்
அடிப்படை
மாற்றங்களைப்
பிரதிபலிக்கின்றன.
குறிப்பாக
2008
நிதிய
நெருக்கடியும்
அதன்
விளைவுகளும்
நேட்டோ
உறுப்பு
நாடுகளிடையே
பொருளாதார,
அரசியல்
வேறுபாடுகளைத்
தீவிரப்படுத்தியுள்ளன.
நாணய
முறை
மற்றும்
ஏற்றுமதி
விஷயங்களைப்
பொறுத்தவரை
பேர்லினுக்கும்
வாஷிங்டனுக்கும்
இடையே
தீவிர மோதல்கள்
உள்ளன.
பசிபிக்கில்
பெருகிய
முறையில்
குவிப்புக்காட்டி,
சீனாவுடன்
மோதலுக்கும்
குவிப்புக்
காட்டும்
அமெரிக்கா
ஐரோப்பாவிலுள்ள
அதன்
பொருளாதாரப்
போட்டி
நாடுகளுக்கு
இராணுவரீதியாக
ஊக்கம்
கொடுப்பதில்
அதிக
அக்கறை
கொள்ளவில்லை.
ஜேர்மனி,
பிரான்ஸ் மற்றும்
பிரிட்டன்
இவற்றிற்கு
இடையேயும்
மேற்கு
ஐரோப்பா,
கிழக்கு
ஐரோப்பா,
மற்றும்
ஐரோப்பாவிற்கும்
ரஷ்யாவிற்கும்
இடையேயான
அழுத்தங்கள்
ஆகியவை
ஐரோப்பிய
அரசியல்
நிலையைத்
திரித்து
அதைத்
தன்
கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருப்பதற்குப்
பல
வாய்ப்புக்களை
வாஷிங்டனுக்கு அளிக்கின்றன.
லிஸ்பனில்
நேட்டோ
உறுப்பு
நாடுகள்
ஆப்கானிஸ்தான்
இராணுவ
நிலைப்பாட்டை
2014
வரை
விரிவாக்க
ஒப்புக்
கொண்டுள்ளன.
அதன்பின்
நாட்டில்
அதிக
இராணுவப்
படைகள்
மட்டும்
இருக்கும்.
ஆப்கானிஸ்தானில்
தோல்வி
என்பது
பல
ஐரோப்பிய
தலைநகர்களிலும்
நேட்டோவிற்கு
மரண
தண்டனை
என்பது
போல்
காணப்படுகிறது.
அதையொட்டி
சொல்லொணா
விளைவுகள்
வரும்
என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால்
அமெரிக்காவிற்கு
அடிபணிந்த
வருங்கால
சர்வதேச
இராணுவ
நடவடிக்கைகளில்
விருப்பம்
என்பது
பெரிதும்
பெரும்பாலான
ஐரோப்பிய
தலைநகரங்களில்
குறைந்துவிட்டது. |