சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Mother of Sri Lankan worker facing Saudi death sentence speaks to WSWS

சவுதியில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கை பணிப்பெண்ணின் தாய் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசுகிறார்

By S. Ajithan and Panini Wijesiriwardena
10 November 2010

Use this version to print | Send feedback

சவுதி அரேபிய உயர் நீதிமன்றம் ஒரு இளம் இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணான ரிஸானா நஃபீக் மீது மரண தண்டனையை உறுதி செய்தது. நஃபீக் 2005 மே மாதம் தனது 17வது வயதில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தனது கிராமத்தில் இருந்து வெளியேறினார். தொழிலுக்கு ஏற்றவாறு அவரது வயதை மாற்றிக்கொள்ளுமாறு நஃபீக்கின் தொழில் முகவர் கேட்டுக்கொண்டார். இரண்டு வாரங்களின் பின்னர், அவர் பணிப் பெண்ணாக வேலை செய்த குடும்பத்தில் நான்கு மாதக் குழந்தையொன்றை கொன்றதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. (பார்க்க: சவுதி நீதிமன்றம் இலங்கை தொழிலாளியின் மரண தண்டனையை உறுதிப்படுத்தியது.)

2007 ஜூலையில் நஃபீக்கை குற்றவாளியாகக் கண்ட சவுதி நீதிமன்றம் அவரது தலையை துண்டித்து மரணதண்டனை நிறைவேற்ற தீர்ப்பளித்தது. பொலிசாரால் கறக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தால் கைவிடப்பட்ட அவரால், சட்ட உதவிகளையோ நீதிமன்றில் முறையான மொழிபெயர்ப்பாளரையோ பெறமுடியாமல் போனது. இறுதியாக, ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியுடன் ஒரு சட்ட மேன்முறையீடு செய்யப்பட்டது. அவருக்கு பொருத்தமான மொழிபெயர்ப்பாளர் கிடைத்தவுடன், நஃபீக் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்தார். குழந்தையின் மரணம் ஒரு விபத்து என அவர் உயர் நீதிமன்றுக்கு விளக்கினார். குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது குழந்தை மூச்சுத் திணறியதோடு அவரால் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போனது.

அவரது சாட்சியை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அவரது மரணதண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்துமாறு சவுதி மன்னருக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதும், அவர் அதற்குப் பிரதிபலிக்கவில்லை. சவுதி ஆளும் தட்டுக்கு மலிவு உழைப்பை விற்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான பரந்தளவிலான அச்சுறுத்தல்களையே நஃபீக்கின் தலைவிதி விளக்குகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானத்தின் மூலம் இலங்கையின் பிரதான அந்நிய செலாவணிக்கு கிடைக்கும் நன்மைக்கு இடைஞ்சல் செய்ய விரும்பாததால், இராஜபக்ஷ அரசாங்கம் நஃபீக்குக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களையிட்டு முற்றிலும் அலட்சியமாக இருந்தது. 500,000 க்கும் அதிகமான இலங்கையர்கள், அநேகமாக இளைஞர்கள் சவுதி அரேபியாவில் வேலை செய்கின்றார்கள்.

உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் அண்மையில் இலங்கையில் யுத்தத்தால் அழிந்து போன கிழக்கு மாகாணத்தில் உள்ள நஃபீக்கின் கிராமத்துக்கு சென்றிருந்தனர். அவர்கள் அங்கு நபீக்கின் தாயார், நண்பர்கள் மற்றும் அயலவர்களுடனும் பேசினார்கள்.

***

மூதூர் நகரம் கொழும்பில் இருந்து 280 கிலோமீட்டர் தூரத்திலும் கிழக்கு மாகாண தலைநகரான திருகோணமலையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், திருகோணமலை துறைமுகத்திலிருந்து தென் பகுதியிலும் அமைந்துள்ளது. திருகோணமலையில் இருந்து குறைந்தபட்சம் ஒரு மணித்தியாலம் எடுக்கும் மூதூருக்கான படகுச் சேவை, ஆறுமாதங்களாக இயங்கவில்லை. வீதிகள் மிகவும் மோசமாக இருந்தமையினால், சிறிய ஆறுகளை தெப்பத்தின் மூலம் கடந்து, நமது நிருபர்கள் திருகோணமலையில் இருந்து மூதூருக்கு இரண்டு மணித்தியாலங்கள்  பயணித்தனர்.

நஃபீக் வாழ்ந்துவந்த சாஃபி நகர், மூதூர் பிரதேசத்தில் வறுமை தலைவிரித்தாடும் முஸ்லிம் கிராமங்களில் ஒன்றாகும். விறகு வெட்டுவதும், நெல் மற்றும் மரக்கறி பயிர்ச் செய்வதும் மற்றும் கால்நடைகளை வளர்ப்பதுமே இந்த கிராமத்தவர்களின் பிரதான ஜீவனோபாயகும். மொத்தத்தில் எல்லா குடியிருப்பாளர்களும் மண் அல்லது கற் சுவர்கள் கொண்ட ஓலைக் கூரைகள் கொண்ட சிறிய குடிசைகளிலேயே வாழ்கின்றனர்.

தனக்கும் தனது குடும்பத்துக்கும் வருமானம் தேடி ஏங்கிய காரணத்தால் நஃபீக் சவுதி அரேபியாவில் வேலை தேடிக்கொண்டார். வறுமையில் இருந்து மீள வேறு வழி இல்லாததால், புலம் பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கொடூரமான நிலைமைகளைப் பற்றி கேள்விப்பட்டும் கூட, பல இளம் யுவதிகள் மத்திய கிழக்கில் தொழில் தேடுகின்றார்கள்.

WSWS குழு நஃபீக்கின் வீட்டுக்குச் சென்ற போது, அவரது தாய் ரஃபீனா நஃபீக் சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். ரிஸானா நஃபீக்கின் இரு சகோதரிகளும் சகோதரனும் பாடசாலைக்கு சென்றிருந்தனர். அவரது அப்பா ஆஸ்பத்திரியில் இருந்தார். அவர்களது வீடு ஒரு வெறும் குடிசையாகும். சுவர்களுக்கு அரைகுறையாக கற்கள் அடுக்கப்பட்டிருந்ததுடன் கூரை ஓலையில் வேயப்பட்டிருந்தது.


ரஃபீனா
(வலது) ஒரு அயலவருடன் தனது சமையலறைக்கு அருகில் இருக்கின்றார்.

ரஃபீனா நஃபீக் தனது மூத்த மகளின் விடுதலைக்காக ஐந்து ஆண்டுகள் காத்திருந்து கவலையும் களைப்பும் அடைந்திருந்தார். முதலில் அவர் பேசுவதற்குத் தயங்கிய போதும் பின்னர் விளக்கினார்: “பாவம் எனது பிள்ளை அவளது மரண வாசலில் இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாள். நான் பல பேட்டிகளைக் கொடுத்துள்ளேன். நாம் வறுமையில் வாடியதனால் எங்களது குடும்பத்துக்கு உதவி செய்ய அவள் பெரிதும் எதிர்பார்த்தாள். ஒரு நல்ல வீட்டை கட்டுவதும், குடும்பத்தில் மற்றவர்களை நன்றாகப் படிக்க வைப்பதும் தான் அவளது முதல் கனவாக இருந்தது.

“2005ல் அவள் சென்று சில நாட்களின் பின்னர், அவளிடம் இருந்து ஒரு கடிதம் கிடைத்தது. அவள் பத்து பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டியிருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவள் சந்தோசமில்லாமல் இருந்ததுடன் வேலைசெய்யும் இடத்தையும் மாற்ற விரும்பினாள். அவரது கடிதத்தின் படி, ரிஸானா நாளாந்தம் அதிகளவு வேலை செய்துள்ளார். அவர் காலை மூன்று மணிக்கு எழும்பி பின்னிரவு வரை வேலை செய்ய வேண்டும்.

பின்னர் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் அவரை சவுதி பொலிசார் கைது செய்துள்ளதாக நஃபீக்கின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், 2007ல், தமது மகளைப் பார்ப்பதற்காக ரியாத்தில் உள்ள சிறைச்சாலைக்கு ரிஸானாவின் பெற்றோர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். “நான் கொலைகாரி அல்ல என ரிஸானா அழுதுகொண்டே எம்மிடம் கூறினார்.

ஒரு பாடசாலை ஆசிரியரான மொஹமட் ஜிஹாட், நஃபீக்கின் குடும்பத்தை அறிந்திருந்தார். சாஃபி நகர் இமாம் பாடசாலையில் ரிஸான படித்த போது, அவர் அங்கு ஆசிரியராக பணியாற்றினார். “வீட்டுப் பணிப்பெண்களை அவர்களது எஜமான்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதையும் ரிஸானாவுக்கு எதிராக சவுதி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஈவிரக்கமற்ற சட்ட நடவடிக்கைகளையும் பற்றி பெருமளவில் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன, என அவர் கூறினார்.

ஆம், சவுதி எஜமான்கள் நடத்தும் விதம் மனிதாபிமானமற்றவைதான். மற்றும் சட்ட நடவடிக்கைகள் முற்றிலும் நியாயமற்றவை. அதே சமயம், தனக்கு 17 வயதாகும் போதே, இந்த இளம் யுவதி நாட்டை விட்டு வெளியேறியது ஏன்? என்ற கேள்வி எழுகின்றது. அவளது குடும்பத்தை வாட்டிய கடும் வறுமையினால் அவள் 9ம் வகுப்பிலேயே கல்வியை நிறுத்திவிட்டு தனது குடும்பத்துக்காக தொழிலைத் தேடிக்கொள்ளத் தள்ளப்பட்டார்.

இலங்கையில் நிலவும் தாங்கமுடியாத நிலைமைகளின் காரணமாக, வயது குறைந்த பெண் பிள்ளைகள் உட்பட பல இளம் யுவதிகள் வேலைக்காக மத்திய கிழக்குக்கு சென்றுள்ளனர். என மொஹமட் விளக்கினார். “தொழில் முகவர்களைப் பொருத்தளவில் பிறந்த திகதியை மாற்றுவது பெரும் விவகாரம் அல்ல. அவர்களுக்கு பணம் மட்டுமே தேவையென்பதால் ரிஸான நஃபீக் போன்ற பல இளம் வயது பெண்பிள்ளைகளுக்கு அவர்கள் அதைச் செய்திருக்கின்றார்கள்.

ரிஸானா அழகான, ஒழுக்கமான மற்றும் அப்பாவிப் பிள்ளை. அவள் நன்றாகப் படித்தாள். அவள் பாடசாலையை விட்டு வெளியேறுவதற்கு சற்று முன்னர்தான் அவளை சிறந்தவளாக ஆசிரியர்கள் குறிப்பிட்டார்கள். அவளுக்கு வாய்ப்பிருந்திருந்தால் நிச்சயமாக அவள் படிப்பை தொடர்ந்திருப்பாள் என அவர் மேலும் கூறினார்.

அந்தப் பாடசாலையில் இருந்த நிலைமைகளைப் பற்றியும் மொஹமட் விளக்கினார். சாஃபி நகர் கிராம இமாம் பாடசாலை பழைய கட்டிடத்திலேயே இயங்குகின்றது. அங்கு 300 பேருக்கு மேல் படித்தாலும், 13 ஆசிரியர்களே உள்ளனர். தரம் 9 கற்ற பின்னர், உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள், அல்மினா பாடசாலைக்கு இரண்டரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அந்த பாடசாலையில் நான்கு வகுப்புகள் மர நிழலின் கீழ் நடத்தப்படுகின்றன. அங்கு எல்லா பாடசாலைகளிலும் குறிப்பாக ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.

நஃபீக் குடும்பத்தின் அயலவர் ஒருவர் இலங்கை அரசாங்கத்தின் பதிலிறுப்பைப் பற்றி விமர்சித்தார். இந்த அப்பாவிப் பிள்ளைக்கு மன்னிப்புக் கேட்டு சவுதி மன்னருக்கு ஜனாதிபதி [மஹிந்த இராஜபக்ஷ] கடிதமொன்றை அனுப்பியிருப்பதாக நாம் கேள்விப்பட்டோம். அது ஒரு ஏமாற்று மட்டுமே. அதிகாரிகள் வெளிநாட்டு நாணய வருமானத்தைப் பற்றி மட்டுமே அக்கறை செலுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

சவுதி அரேபியில் உள்ள இலங்கை தூதரகத்தை கண்டனம் செய்து அவர் மேலும் தெரிவித்ததாவது: அவர்கள் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் தொழில் நிலைமைகளை மற்றும் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கு தக்க நடவடிக்கைகள் எதையும் எடுக்கிறார்கள் இல்லை. ரிஸானா நபீக்கின் விடயத்தில், அவர்கள் வழக்கை நெருக்கமாக அவதானிக்கவில்லை. அல்லது உயர் நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படும் வரை மரண தண்டனை பற்றி அவர்கள் தெரிந்திருக்கவில்லை.

இலங்கை இராணுவத்துக்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் போது, மக்கள் அதிக பதட்ட நிலைமையிலேயே வாழ்ந்தனர். அவர்கள் மூதூர் பிரதேசத்தை விட்டு இரு முறை வெளியேறத் தள்ளப்பட்டார்கள். முதிலில் 1987ல் வெளியேறினார்கள். அப்போது இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்துக்கு உதவுவதற்காக வந்து வடக்கு மற்றும் கிழக்கில் நிலைகொண்டிருந்தது. மக்கள் அகதி முகாங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

உள்நாட்டு யுத்தம் பூராவும், சாஃபி நகர் ஒரு எல்லைக் கிராமமாக இருந்து வந்துள்ளது. ஒரு பக்கம் அரசாங்க ஆட்சியிலான பிரதேசம். மற்றைய பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் விறகு தேடுவதற்காக காட்டுக்குச் சென்றிருந்த போது பல கிராமத்தவர்களை கொன்றிருந்தனர். அப்போதிருந்து கிராமத்தவர்கள் விறகு வெட்ட செல்லத் தயங்கியதால் அவர்களது வருமானம் துரிதமாக வீழ்ச்சி கண்டது.

2006 ஆகஸ்ட்டில், அந்த ஆண்டு ஜூலையில் இராஜபக்ஷ அரசாங்கம் யுத்தத்தை மீண்டும் தொடங்கிய பின்னர், இராணுவம் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்தது. சாஃபி நகர் உட்பட மூதூரில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்தனர். அநேகமானவர்கள் உடுத்தியிருந்த உடுப்புகளுடன் மட்டும் இடம்பெயர்ந்திருந்தனர். அவர்கள் கிழக்கில் யுத்தம் முடிந்தவுடன் அங்கு திரும்பியிருந்த போதும், அதிலிருந்து வாழ்க்கைத் தரம் மேலும் சீரழிந்து வந்தது.

யுத்தத்தின் பின்னரும், பலரால் வீடுகளில் இருந்து தூரத்தில் அமைந்துள்ள தமது சிறிய நிலத் துண்டுகளில் விவசாயம் செய்ய முடியாமல் போனது. அவர்கள் அங்கு செல்வதை பாதுகாப்புப் படையினர் தடுப்பதுடன், அந்த நிலங்களை அரசாங்கம் தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்தவுள்ளதா என குடியிருப்பாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

ஒரு குடும்பத் தலைவியான பஃரீனா, நிலைமைகள் சீரழிந்து வருவதையிட்டு கோபத்தை வெளிப்படுத்தினார்: யுத்தம் முடிவடைந்தவுடன் வாக்குறுதியளித்தவாறு எங்களுக்கு ஒரு நல்ல காலத்தை அரசாங்கம் ஏற்படுத்தித் தரும் என நாம் நினைத்தோம். ஆனால் ஒன்றும் முன்னேறவில்லை. மாறாக, அது மேலும் கசப்பாகியுள்ளது. எங்களது கனவன்மார்களால் விறகு வெட்டுவதை சுதந்திரமாக செய்து சம்பாதிக்க முடியும் என நாம் நினைத்தோம். ஆனால், இன்னமும் விறகுக்கு கேள்வி இல்லாமல் இருப்பதோடு அவர்களை அதை அற்ப காசுக்கு விற்கத் தள்ளப்பட்டுள்ளார்கள். வானளாவ உயரும் வாழ்க்கைச் செலவின் மத்தியில், எங்களது நிலைமை மேலும் மேலும் அநாதரவாகி வருகின்றது.