சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : அயர்லாந்து

Bankers dictate brutal cuts as part of EU-IMF bailout of Ireland

அயர்லாந்து பிணை எடுப்பின் EU-IMF பாகமாக வங்கியாளர்கள் மிருகத்தனமான வெட்டுக்களுக்கு ஆணையிடல்


By Stefan Steinberg
23 November 2010

Use this version to print | Send feedback

சர்வதேச நிதியச் சந்தைகள் மற்றும் ஐரோப்பிய அமைப்புக்களிலிருந்து பல வாரங்கள் தீவிரமான அழுத்தத்தை அடுத்து அயர்லாந்து அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக 90 பில்லியன் ஈரோக்கள் பிணைஎடுப்புப் பொதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) தலையிட்டு, 40 பில்லியன் ஈரோக்கள் மதிப்புள்ள அயர்லாந்துப் bond பத்திரங்களை அயர்லாந்து வங்கிகள் சரிவதைத் தடுக்க வாங்கியுள்ளமை, ஐரோப்பா முழுவதும் பேரழிவுதரும் பின்விளைவுகளைக் கொடுத்துள்ளது. ஐரோப்பிய நிதி மந்திரிகளுடன் கடந்த வாரம் நடத்திய பேச்சுக்களில் ECB தலைவர் Jean Claude Trichet மத்திய வங்கியானது அயர்லாந்தின் அடிப்படையாய் திவாலாகிவிட்ட வங்கிகளை முட்டுக்கொடுப்பதற்கு தொடர்ந்து நிதியை உட்செலுத்த முடியாது என்றும் ஐரோப்பிய நிதிய உறுதித்தன்மை அமைப்பு (European Financial Stability Facility -EFSF) அவசரக்கால நிதி என்று கடந்த மே மாதம் ஐரோப்பிய ஒன்றியம் நிறுவியுள்ள நிதியத்தைச் செயல்படுத்துவது அவசியம் என்றும்  கூறினார்.

பிரயன் கோவன் தலைமையிலுள்ள அயர்லாந்து அரசாங்கம் இப்பொழுது ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கைக்கு ஒப்புக் கொண்டுள்ளது. மொத்தம் 90 பில்லியன் யூரோக்கள் என்பதில் 15 பில்லியன் உடனடியாக அயர்லாந்து வங்கிகளுக்குப் புதிய பங்குகளுக்கு கொடுக்கப்படும், எஞ்சியவை அயர்லாந்தின் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்திற்கான 19 பில்லியன் யூரோக்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் ஈடுகட்டுவதற்கு ஒதுக்கப்படும். இப்பணத்தில் பெரும்பாலானவை வங்கிகளின் கருவூலங்களுச் சென்று இறுதியில் அயர்லாந்திற்குக் கடன் கொடுத்துள்ள சர்வதேச நிதிய அமைப்புக்களுக்கு போகும்.

BBC வலைத் தளத்தில் வந்துள்ள அறிக்கை ஒன்றின்படி, இந்த உடன்பாட்டினால் அயர்லாந்தின் மூத்த கடன் கொடுத்தவர்கள் இழப்புப் பெற மாட்டார்கள் என்று போகும். எந்த திவாலான அரசுகள் மற்றும் வங்கிகளை மீட்பதற்குத் தேவையான அளிப்புக்களில் முக்கிய பத்திர உரிமையாளர்கள் பங்கு கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை சமீபத்தில் ஜேர்மனிய அரசாங்கத்தால் எழுப்பப்பட்டு பிரான்சினாலும் ஆதரவு கொடுக்கப்பட்டது. உலகத்திலுள்ள வங்கிகள் இதற்கு பதிலளிக்கும் வகையில் அயர்லாந்து மீது தாக்குதல் நடத்தி, அது யூரோப் பகுதியிலேயே மிக வலுவற்ற பிணைப்பு என்று தனித்துக் காட்டியுள்ளனர். ஜேர்மனியின் அங்கேலா மேர்க்கெலும், பிரான்சின் நிக்கோலா சார்க்கோசி இருவரும் தங்கள் திட்டத்தை அவசரமாகக் கைவிட்டு நிதியச் சந்தைகள் நலன்களுக்கு அடிபணிந்தனர்.

BBC வலைத் தளத்தில் எழுதிய Stephanie Flanders, “லெஹ்மன் சரிவிற்குப் பின்னர் இப்பாதையில் மேற்கொண்டிருந்த அதே அணுகுமுறையைத்தான் யூரோப் பகுதி தொடர்ந்து பின்பற்றி வருகிறது. அதாவது, சந்தேகம் ஏற்பட்டால், மற்றொரு ரொக்கம் கூறப்படாத காசோலையில் கையெழுத்திட்டு, தனியார்பிரிவு கடன் கொடுத்தவர்களிடம் வழங்கவும், பணத்தைப் பற்றியோ, அறநெறி இடரையோ பற்றிச் சிந்திக்க வேண்டாம்என்று முடித்துள்ளார்.

இந்த ஆண்டு இப்பொழுது  EU-IMF நிதியத்தைப் பெறும் இரண்டாவது ஐரோப்பிய நாடாக அயர்லாந்து உள்ளது. மே மாதம் கிரேக்கம் 110 பில்லியன் ஈரோக்களை EU மற்றும் IMF இடமிருந்து தொடர்ந்து ஒருங்கிணைந்த நிதியச் சந்தைகளின் வலியுறுத்தல், தரம் நிர்ணயிக்கும் அமைப்புக்களின் நடவடிக்கைகள் கிரேக்க அரசாங்கத்தின் bond பத்திரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, நாட்டை திவால்தன்மைக்கு தள்ளத் தொடங்கியபோது ஏற்றது.

கிரேக்கப் பிணை எடுப்பை அடுத்து,  EU மற்றும் IMF இரண்டும் மொத்தமாக 750 பில்லியன் ஈரோ நெருக்கடி நிதியை யூரோ கரைத்துவிடுவதைத் தடுக்க ஒதுக்கின. EFSF பிணைஎடுப்பு நிதி நிறுவப்பட்டபோது, ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்கள் இந்த நிதியம் யூரோவிற்குஒரு பாதுகாப்புக் குடை போல் செயல்படும் என்றனர். ஏனெனில் மற்ற நாடுகளும் இதை நாட வேண்டிவரும் என்று அவை எதிர்பார்க்கவில்லை.

ஆறு மாதங்களுக்குப் பின்னர் அயர்லாந்தும் அதையேதான் செய்துள்ளது.

அயர்லாந்திற்கான ஐரோப்பிய ஒன்றியத் திட்டத்திலுள்ள முக்கிய ஐரோப்பியப் பொருளாதாரங்கள் தர்மம் எதையும் செய்யவில்லை. அயர்லாந்து வங்கிகளிலுள்ள முதலீடுகளை வைத்திருப்பவற்றில் ஜேர்மனியும் ஒன்று ஆகும். ஜேர்மனியின் மத்திய வங்கியான Bundesbank ன் கருத்துப்படி ஜேர்மனிய வங்கிகள் அயர்லாந்திற்கு கடன் கொடுத்திருப்பவற்றுள் பெரிதாக உள்ளன. மொத்தம் 166 பில்லியன் ஈரோக்கள் ($226 பில்லியன்) என்ற அளவிற்கு. அவற்றுள் பெரும்பாலானவை குறுகிய கால இடர் நிறைந்த கடன்கள் ஆகும்.

பிரிட்டிஷ் நிதிய அமைப்புக்களாலும் இதையொத்த தொகை வைத்திருக்கப்பட்டுள்ளது. இதுதான் பிரிட்டிஷ் அரசாங்கம் அயர்லாந்திற்கு 7 முதல் 20 பில்லியன் ஈரோக்கள் வரையிலான துணைக் கடன் கொடுக்க முன்வருவதை விளக்குகிறது.

கிரேக்கத்தின் பிணை எடுப்பு மற்றும் இப்பொழுது அயர்லாந்துப் பிணை எடுப்பு என்பது நாடுகள் தங்கள் பொருளாதாரங்கள் மற்றும் வரவு-செலவுத் திட்டக் கொள்கைகள் மீது கட்டுப்பாட்டை இழந்து அவற்றை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் IMF ன் தேர்ந்தெடுக்கப்படாத வல்லுனர்களிடம் அளிக்கின்றனர் என்ற பொருளைத் தரும். கடந்த வியாழன் முதல் EU மற்றும் IMF அதிகாரிகள் நிறைந்த ஒரு குழு கடனின் நிபந்தனைகள் பற்றியும், புதிய சுற்றுச் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவது பற்றியும் முடிவெடுக்க டப்ளினில் உள்ளது.

கடந்த ஆண்டில் அயர்லாந்து ஏற்கனவே மேற்கு ஐரோப்பாவிலேயே மிக விரிவான சமூக, பொதுநல வெட்டுக்களை அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக நாட்டில் ஊதிய அளவுகள் ஏற்கனவே 20 சதவிகிதம் என்று பெரும் சரிவிற்கு உட்பட்டுள்ளன. இப்பொழுது EU மற்றும் IMF இரண்டுமே மற்றொரு சுற்று கடும் சிக்கன நடவடிக்கைகளைக் கோருகின்றன. இது அயர்லாந்து மக்களுக்கு பேரழிவு விளைவுகளைத்தான் கொடுக்கும்.

ஐரோப்பிய ஒன்றியக் கடனுக்கு ஈடாக அயர்லாந்து அரசாங்கத்திடம் இருந்து தொடக்கத்தில் கோரப்பட்ட முக்கிய சலுகைகளில் ஒன்று பெருநிறுவன வரி மிகக் குறைவாக 12.5 சதவிகிதம் என்று அது கொண்டிருப்பதை அதிகப்படுத்த வேண்டும் என்பதாகும். இந்த முக்கிய நடவடிக்கை 1990 களின் நடுப்பகுதியில் அரசாங்கத்தால் சர்வதேச நிறுவனங்களை ஈர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. குறைந்த பெருநிறுவன வரிவிகிதம் அயர்லாந்துசெல்டிக் புலிஎன்று வெளிப்படும் நிகழ்வில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கைக் கொண்டது ஆகும்.

கடந்த வாரம், கூகிள், மைக்ரோசாப்ட், இன்டெல் உட்பட பல நிறுவனங்கள் வணிக வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டால் தாங்கள் அந்நாட்டில் செயல்படுவது பற்றி மறுபரிசீலனை செய்யப்போவதாக குறிப்புக் காட்டியுள்ளன.

இப்பொழுது கொண்டுள்ள உடன்பாட்டின்படி அயர்லாந்து அதன் குறைந்த பெருநிறுவன வரிவிதிப்பைத் தக்க வைத்துக் கொண்டு அதற்கு ஈடாக இன்னும் அதிக சமூகநலச் செலவு வெட்டுக்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.

அயர்லாந்தின் பெருநிறுவன வரிவிதிப்பு பற்றி மிக வெளிப்படையாகக் குறைகூறும்அயர்லாந்தின் நிதி மந்திரி  பிரயன் லெனிஹன்கருத்துப்படிஇப்பிரச்சினை கைவிடப்படலாம் என்று தெரிகிறது. அயர்லாந்து காபினெட் கூட்டத்திற்கு முன்பு பேசிய லெனிஹன், “ஜனாதிபதி சார்க்கோசி பெருவணிகத்தின் மீது அயர்லாந்தின் வரிவிதிப்பு விகிதங்கள் இந்த விவாதங்களில் அல்லது பேச்சுக்களில் ஒரு பிரச்சினையாக வராது என்று குறித்துள்ள உண்மையை நான் பெரிதும் வரவேற்கிறேன்என்றார்.

பிரிட்டனும் IMF ம் சமீபத்திய விவாதங்களில் வரி விகிதத்தில் மாற்றங்கள் எதையும் கோரவில்லை என்றும் லெனிஹன் கூறினார். “எனவே செயற்பட்டியலில் இப்பிரச்சினை இப்பொழுது இல்லை, அது பற்றி நாம் தெளிவாக இருக்க வேண்டும்என்று முடித்தார்.

மாறாக, அயர்லாந்து அரசாங்கம் ஒரு புதிய சுற்று சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்தும், இவை புதன்கிழமை அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே செய்தி ஊடகத்தில் தொடர்ச்சியான திட்டங்கள் பற்றிய கருத்துக்கள் சுற்றறிக்கையில் உள்ளன. இதில் 28,000 பொதுத்துறை வேலைகள் தகர்க்கப்படல், சொத்து, நீர்வரிகளில் கணிசமான அதிகரிப்புக்கள், சமூக நலன் செலவுகளில் இன்னும் 10 சதவிகித வெட்டுக்கள், தற்பொழுது விலக்கு பெற்றுள்ள குறைவூதியம் பெறும் தொழிலாளர்கள் ஊதியத்திலும் வரி சுமத்தப்படுதல் ஆகியவை அடங்கும்.

மிகக் குறைந்த வருமானம் உடையவர்களை தண்டிப்பதோடு அல்லாமல், அரசாங்கம் நாட்டின் குறைந்தபட்ச ஊதியம் 8.65 ஈரோக்கள் என்பதையும் குறைத்து, தொழிலாளர்கள் அத்தகைய குறைந்த ஊதிய விகிதங்களிலும் பணியை எடுத்துக்கொள்ள உறுதிபடுத்துகிறது.

டச்சு நாட்டின் நிதி மந்திரி Jan Kees de Jager கருத்துப்படி, “அயர்லாந்து விரைவிலும் மிக அதிகமாகவும் வெட்டுக்களைக் கொண்டுவரவேண்டும்.” வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டம் பற்றி பைனான்சியல் டைம்ஸில் ஒரு கட்டுரைஅயர்லாந்து குடிமக்கள் முன் வரவிருக்கும் பெரும் வேதனைபற்றிக் கூறியுள்ளது.

EU-IMF பொதியை டப்ளின் ஏற்றுள்ளது, அயர்லாந்து அரசாங்கம் இராஜிநாமா செய்யவேண்டும் என்று மொத்தமாக வந்துள்ள கூக்குரலால் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் அயர்லாந்தின் முக்கிய நாளேடான Irish Times ம் அடங்கும். ஆனால் அரசியல் வட்டங்களில் அரசாங்கம் எப்படி அரசியலளவில் மாற்றப்பட்டாலும், அதற்கு முன் புதிய சிக்கன நடவடிக்கைத் திட்டம் வெற்றிகரமாக இயற்றப்பட வேண்டும் என்று ஒருமித்த உணர்வு உள்ளது.

Fine Gael என்னும் எதிர்க்கட்சி, தான் Fianna Fail  அரசாங்கம் முன்வைத்துள்ள எந்த வரவு-செலவுத் திட்டத்திற்கும் ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் மூன்று மந்திரிகளைக் கொண்ட பசுமைக் கட்சி, தான் மந்திரிகளை திரும்பப் பெறப்போவதாகவும் புதிய தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில் தான் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட வோட்டுக்களுக்கு ஆதரவு தருவதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

கிரேக்கம், அயர்லாந்து ஆகியவற்றின் மீது சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்தியபின் இவை பல தசாப்தங்கள் போராடிப் பெற்ற சமூக சீர்திருத்தங்கள், ஊதிய நலன்கள், பணி நிலைமைகள் ஆகியவற்றை வெட்டிவிடும்நிதியப் பிரபுத்துவம் இப்பொழுது போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் மீது தன் பார்வையைச் செலுத்துகிறது.

பிரிட்டனின் Economist  இதழ் ஏற்கனவே அயர்லாந்திற்குக் கொடுத்த EU மற்றும் IMF உடன்பாடு போல் போர்த்துக்கல்லுக்கும் கொடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. போர்த்துக்கல்லின் பொருளாதார இடர்கள் ஒருவேளை இன்னும் தீவிரமாக இருக்கும் என்றும் அது வாதிட்டுள்ளது.