WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஐரோப்பா :
அயர்லாந்து
அயர்லாந்திற்கான ஐரோப்பிய ஒன்றிய “மீட்பு” நடவடிக்கையால் யூரோ நெருக்கடி தீவிரம்
By Barry Grey and Stefan Steinberg
18 November 2010
Use
this version to print | Send
feedback
பிரஸ்ஸல்ஸில் நெருக்கடி குறித்து இரு நாள் கூட்டங்களையடுத்து, ஐரோப்பிய நிதி மந்திரிகள், ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றில் இருந்து ஒரு அதிகாரிகள் குழுவை அயர்லாந்தின் வங்கிகள் கணக்குகளை ஆராய்வதற்கும், ஒரு “மீட்புத் திட்டத்தை” தயாரிப்பதற்கு வழிவகுக்கவும் அனுப்பியது. இது அயர்லாந்தின் அரசியல் இறைமையை சிதைப்பதுடன் இன்னும் மிருகத்தனமான தாக்குதல்களையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும்.
ஐரோப்பிய மற்றும் IMF தலையீடு உலக வங்கியாளர்களால் ஆணையிடப்படுகிறது. அவர்கள் அயர்லாந்தின் வங்கிமுறையின் கரைப்பினால் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்புக்களை அயர்லாந்து மக்கள் மீது மாற்றவும், இதேபோன்ற “உறுதியாக்கல் திட்டங்கள்” ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் அதிக கடன்களைக் கொண்டுள்ள நாடுகளில் நிறுவுவதற்கான முன்னோடியாகும்.
சமீபத்திய வாரங்களில் அயர்லாந்து அரசாங்கம் மற்றும் நாட்டின் முக்கியமான திவால்தன்மையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு எதிராகவும் நிதியாளர்களும் ஊக வணிகர்களும் மிகப் பெரிய அளவில் பந்தயம் கட்டினார்கள். இது ஓரளவு அக்டோபர் மாதம் வந்த திட்டத்திற்கு விடையிறுப்பது ஆகும். பின்னர் அது ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஐரோப்பாவிற்குள் வருங்கால பிணையெடுப்புக்கள் தனியார் bond பத்திரம் வைத்திருப்போர் மீது கூடுதல் இழப்புக்கள் வேண்டும் என்று கூறியிருந்தார்.
கடன் வாங்குவதற்கான செலவினங்கள் அயர்லாந்தில் மட்டுமின்றி, போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றிலும் உயர்ந்து விட்டன. இது மீண்டும் உலக நிதிய முறையில் சரிவைத் தூண்டக்கூடிய வங்கி மற்றும் அரசாங்கக் கடன்களில் தவறு ஏற்படும் சங்கிலித் தொடர் விளைவு என்னும் பயங்கரத்தை மீண்டும் எழுப்புகிறது. கிரேக்க பிணை எடுப்பு மற்றும் 440 பில்லியன் யூரோக்கள் கொண்ட ஐரோப்பிய நிதிய உறுதிப்பாடு அமைப்பு (EFSF) கடந்த வசந்த காலத்தில் நிறுவப்பட்டதானது ஒற்றை ஐரோப்பிய நாணயம் முறிவதற்கு இருந்த அச்சத்தைப் போக்கியது, இப்பொழுது அது மீண்டும் வெளிப்பட்டுவிட்டது.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் Herman Van Rompuy செவ்வாயன்று அறிவித்தார்: “நாம் பெரும் தப்பிப் பிழைக்க வேண்டிய நெருக்கடிக்குள் உள்ளோம்”; மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வருங்காலமே ஆபத்தில் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார். ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் “அனைத்துமே பேரிடரில் உள்ளன. யூரோ தோற்றால், ஐரோப்பாவும் தோற்கும், அது தோற்றால் ஐரோப்பிய மதிப்புக்களும் ஐக்கியமும் சரியும்.”
ஐரோப்பியக் கடன் மற்றும் யூரோ நாணய நெருக்கடியே பரந்த உலக நெருக்கடியின் குவிப்பு மிகுந்த ஒரு வெளிப்பாடுதான். ஐரோப்பிய ஒன்றியம் நிகழ்த்திய நெருக்கடி பற்றிய நடவடிக்கைகள் சியோலில் முக்கிய பொருளாதாரங்கள் பொருளாதார சமச்சீரற்ற நிலை பெருகுதல், கடுமையான நாணய மோதல்கள் அதிகரிப்பு இவற்றைத் தீர்ப்பதில் G20 உச்சிமாநாட்டில் தீர்க்க முடியாமல் போன சில நாட்களுக்கு பின்னர் வந்துள்ளது. அவ்வணிக மோதல்கள் குறிப்பாக முக்கிய பற்றாக்குறை நாடான அமெரிக்காவிற்கும் மிகப் பெரிய உபரி நாடான சீனாவிற்கும் இடையே உள்ளவை ஆகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகப் பொருளாதார உறவு முறைகள் முறிந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் முதலாவதாக பரந்த பொருளாதாரச் சரிவும் அமெரிக்க முதலாளித்துவத்தின் சிதைவும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தையும் இதன் ஒற்றைய நாணய முறையையும் தகர்த்துக் கொண்டிருக்கும் சிதறுண்டு போகச் செய்யும் சக்திகளின் வளர்ச்சியும் சர்வதேச நெருக்கடியின் ஒரு வெளிப்பாடுதான்.
குறிப்பாக ஒப்புமையில் குறைந்த அளவு கடன்கள், ஆனால் தற்பொழுது வளர்ச்சியை கொண்டிருக்கும் நாடுகளுக்கு இடையே அழுத்தங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன—ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து போன்றவை இவையாகும். இதைத்தவிர ஏராளமான பிற நாடுகள் பெருகிய கடன்களையும் மந்த நிலை அல்லது தேக்க நிலையிலுள்ள பொருளாதாரங்களையும் சுமையாகக் கொண்டுள்ளன. அதாவது, அயர்லாந்து, போர்த்துக்கல், கிரேக்கம் மற்றும் ஸ்பெயின் ஆகியவை.
பெருகும் அழுத்தங்களின் மற்றொரு அடையாளத்தில், ஆஸ்திரிய அரசாங்கம் திங்களன்று கிரேக்கத்திற்கு கொடுக்க வேண்டிய அவசரகால நெருக்கடிக் கடன்களின் அடுத்த தவணையில் தன் பங்கைக் கொடுக்க தாமதப்படுத்த நேரிடும் என்று அச்சுறுத்தியுள்ளது. ஏனெனில் ஏதென்ஸ் உடன்பட்டிருந்த பற்றாக்குறைக் குறைப்பு இலக்கைச் சந்திக்க இயலவில்லை. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ஸ்லோவாக்கியா ஏற்கனவே 110 பில்லியன் யூரோ மீட்புத் திட்டத்தில் பங்கு பெற மறுத்துவிட்டது. அது கிரேக்கத்தை விட வறிய நாடு என்றும் இதற்காக வாதிட்டுள்ளது.
ஒரு வாரம் முன்பு, ஐரோப்பிய பாராளுமன்றம் அதன் 2011 க்கான தன் வரவு-செலவு திட்டத்தை இயற்றமுடியவில்லை. இதற்கு முக்கியமாக பிரிட்டன் மற்றும் நெதர்லாந்தும் எழுப்பிய எதிர்ப்புக்களை தொடர்ந்து இவ்வாறு ஏற்பட்டுள்ளது.
யூரோப் பகுதி நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் அது முறையாக EFSF மூலம் பிணை எடுப்பை நாட வேண்டும் என்னும் கோரிக்கைகளை அயர்லாந்து அரசாங்கம் எதிர்த்து வந்துள்ளது. இது அங்குள்ள பொருளாதார, அரசியல் காரணங்களையொட்டி நிகழ்வதாகும்.
ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றிய பிணை எடுப்புப் பொதி, 80 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளதற்கு ஈடாக அயர்லாந்து அதன் நிதிய, பொருளாதாரக் கொள்கைகள் மீது கட்டுப்பாட்டை இழக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. குடியரசுத் தேசியவாத Fianna Fall உடைய அரசாங்கம்—மற்றும் முழு அயர்லாந்தின் முதலாளித்துவமும்—குறிப்பிடத்தக்க வகையில் அயர்லாந்து கட்டாயமாக அதன் பெருநிறுவனத்தள வரிவிகிதமான 12.5 ஐ உயர்த்தும் கட்டாயத்திற்கு உடன்பட வேண்டும் என்பதைப் பற்றிக் கவலை கொண்டுள்ளது.
டப்ளின் ஐரோப்பிய ஒன்றியம் கோரும் 8 சதவிகிதம் எனவுள்ள உயர் வட்டிவிகிதம் பற்றியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சர்வதேச bond பத்திரச் சந்தைகள் விதிக்கும் உயர் விகிதங்களைவிட இது குறைவு என்றாலும், இது ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் IMF ஆகியவற்றிற்கு கட்டுப்படக்கூடியவிதத்தில் அயர்லாந்திற்கு போதிய சுமையைக் கொடுக்கும்
1990 களின் நடுப்பகுதியிலிருந்து 2008 வரை அயர்லாந்து தன்னுடைய குறைந்த வரி விகிதத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து முதலீட்டை, குறிப்பாக அமெரிக்காவில் இருந்து ஈர்த்தது. “செல்டிக் புலி” என்று அழைக்கப்பட்ட நாடு மிக அதிக வளர்ச்சி விகிதங்களை வங்கி முறையில் ஊகப் பணங்கள் பாய்ந்ததால் பதிவு செய்தது. ஆனால் இது வங்கிகளின் அடிப்படைத் திவால் தன்மையை அம்பலப்படுத்தும் வகையில் ஒரு புதிய சொத்துக்குமிழிக்கு வகை செய்தது. அது இரு ஆண்டுகளுக்கு முன் வெடித்தது.
அயர்லாந்தில் வெளிநாட்டு வங்கிகள் பணத்தைக் கொட்டி ஏற்றக் காலத்தில் பெரும் இலாபங்களை அடைந்தன. இவை இப்பொழுது குமிழிக்கு விலை கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளன. மாறாக சுமையை அயர்லாந்து மக்களிடம் தள்ளிவிட விரும்புகின்றன. அவர்கள்தான் அயர்லாந்து வங்கிகளின் பிணை எடுப்பிற்கு விலை கொடுப்பதற்காக வேலையின்மை மூலம் அவதியுற்றனர். அது இப்பொழுது 13.9 சதவிகிதத்தையும் விட அதிகமாக உள்ளது. அதையும் தவிர ஊதிய மற்றும் சமூகநலத் திட்டங்கள் ஆகியவற்றில் மிருகத்தமான வெட்டுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நான்கு மில்லியன் குடிமக்களையே கொண்டுள்ள அயர்லாந்து ஏற்கனவே அதன் வரவு-செலவுத் திட்டத்திலிருந்து 2009 முதல் 14 மில்லியன் யூரோக்களுக்கும் மேலாகக் குறைத்துவிட்டது. வரவிருக்கும் நான்கு ஆண்டுகளில் இன்னும் 15 பில்லியன் யூரோக்களை வெட்டுக்கள் மூலம் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. மக்கள் அடிப்படையில் தலா நபருக்கு இது பிரிட்டனில் கன்சர்வேடிவ்-லிபரல் ஜனநாயக காமெரோன் அரசாங்கம் அறிமுகப்படுத்திய பெரும் வெட்டுக்களின் பரப்பைப் போல் நன்கு மடங்கு அதிகமாகும்.
சமீபத்திய வாரங்கள் முக்கிய அயர்லாந்து வங்கிகளில் இருந்து சேமிப்புக்கள் திருப்பி எடுக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளன. இந்த வங்கிகள் இப்பொழுது தாங்கள் தப்பிப் பிழைக்கவே ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து கடன்களை எதிர்நோக்கியுள்ளன. வெளிநாட்டு வங்கிகளும் இந்த வங்கிகளில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளன, பிரிட்டனுடானது மிக அதிகமாகும்—140 பில்லியன் பவுண்டுகள் என்று Bank for International Settlements கொடுத்துள்ள புதிய புள்ளிவிவரங்களில் இருந்து தெரிய வருகிறது. ஆனால் ஜேர்மன், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க வங்கிகளும் பல பில்லியன்களை அயர்லாந்தின் வங்கி முறையில் முதலீடு செய்துள்ளன.
Fiannal Fail அரசாங்கம் EU மற்றும் IMF கோரிக்கைகளான பிணை எடுப்பு அளிப்பை ஏற்க வேண்டிய நிபந்தனைகளை நிராகரிக்க அரசியல் காரணங்களைக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தில் மிகக் குறைந்த பெரும்பான்மையை கொண்டுள்ள நிலையில் இது நவம்பர் 25ல் ஒரு முக்கிய இடைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. கன்சர்வேடிவ் Fine Gael கட்சியிடம் இருந்து தாக்குதலில் உள்ளது. இது அயர்லாந்தின் இறைமையை நீக்குவதாகவும் EU மற்றும் IMF க்கு தாழ்ந்து செயல்படுவதாகவும் Fine Gael குற்றம் சாட்டியுள்ளது.
Fiannal Fail ன் பிரதம மந்திரி பிரியன் கோவன் அடுத்த இடைத் தேர்தல் வரை சமாளித்துத் தொடரலாம் என்றும் டிசம்பர் மாதம் அதன் 2011 வரவு-செலவுத் திட்டத்தை அளிக்கலாம் என்றும் நம்புகிறார். ஆனால் புதன்கிழமை அவரும் மற்ற அரசாங்க அதிகாரிகளும் பகிரங்கமாக வங்கிகளால் EU, IMF மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி மூலம் ஆணையிடப்பட்ட பொதியை ஏற்கும் தவிர்க்கமுடியாத கட்டாயத்திற்கு அடையாளம் காட்டினர். இது இன்று தொடங்க இருக்கும் அயர்லாந்து வங்கிகளின் கணக்குகளை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள் குழுவை வரவேற்றல் ஆகும்.
இது ஒரு “தொழில்நுட்பமுடைய” வருகை என்று கோவன் அழைத்து, அயர்லாந்து பிணை எடுப்புக் கடனுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் வலியுறுத்தினார். ஆனால் ஐரோப்பிய விவகாரங்கள் மந்திரி டிக் ரோஷ் இன்னும் வெளிப்படையாக “சந்தை” அரசாங்கத்தின் தொடக்கச் சுற்று சிக்கன நடவடிக்கைகளுக்கு “இணங்கவில்லை” என்றும் “நாம் கசப்பான மருந்தை உட்கொண்டிருக்கிறோம், இன்னும் கூடுதலாக எடுத்துக் கொள்ளவும் தயார்” என்றார்.
செவ்வாயன்று வெளியிட்ட ஒரு தலையங்கத்தில் பைனான்சியல் டைம்ஸ் அசாதாரண முறையில் EU-IMF அயர்லாந்திற்கான திட்டத்தில் கொண்டிருக்கும் தளத்தின் அடிப்படை சமூகக் கொள்கை பற்றி வெளிப்படையான மதிப்பீட்டைக் கொடுத்தது. இத்திட்டம் ஐரோப்பிய கடன் நெருக்கடியை தீவிரப்படுத்தத்தான் செய்யும் என்று வாதிட்ட செய்தித்தாள் எழுதியது: “இது உத்தியோகபூர்வ ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஐரோப்பாவின் கறைபடிந்த இரகசியத்தை அறியவும் செய்யும்—“பொதுக் கருவூங்கள் தனியார் வங்கிகளுக்கு கடன் கொடுத்தவர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யும்.”
டைம்ஸ் கூறும் “கறைபடிந்த இரகசியம்” ஒவ்வொரு நாட்டிலும் கடைபிடைக்கப்படும் வர்க்கக் கொள்கைதான். அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா வரை இதுதான் நடைபெறுகிறது —2008 நிதிய முறிவை எதிர்கொள்வதற்கு: அதாவது பொது நிதிகளைக் கொள்ளையடித்து உலக நிதிய உயரடுக்கின் ஊகக் கடன்களைத் தீர்த்தல்.
புதனன்று “ஐரோப்பா மீண்டும் புயலில் சிக்குகிறது” என்ற கடுமையான தலைப்பில், பைனான்சியல் டைம்ஸ் அயர்லாந்தின் நெருக்கடி இன்னும் பரந்த சரிவிற்கு ஒரு முன்னோடிதான் என்று எச்சரித்துள்ளது.
“ஒரு குறுகிய தப்பித்தலுக்கு பாராட்டிக் கொண்ட ஒரு சில மாதங்களுக்குள் யூரோப்பகுதி மீண்டும் தொற்றுத்தனமாக கடன் தவறுகளுக்கு திரும்பிவிட்டது. அயர்லாந்து வங்கி முறையின் வெடிப்புத்தன்மை உடைய உறுதியற்ற நிலைக்கு இதன் தடுமாறும் அணுகுமுறை ஐரோப்பியப் பொருளாதாரங்களில் நிறைந்துள்ள எந்நேரமும் வெடிக்கும் குண்டுகள் வெடிக்காமல் செய்யப்படலாம் என்பற்கு அதிக நம்பிக்கை கொடுக்கவில்லை.
“அயர்லாந்தின் அடிப்படைப் பிரச்சினை அது தன்னுடைய அரசாங்கத் திவால்தன்மையை காப்பாற்றுதல் மற்றும் அதன் வங்கிகளின் திவால்தன்மையை காப்பாற்றுதல் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். மற்ற ஐரோப்பிய நாடுகள் —யூரோப் பகுதிக்குள்ளும் வெளியேயும் இருப்பவை— விரைவில் இதே விருப்பத் தேர்வைத்தான் மேற்கொள்ளும். அத்தகைய உலகில், வங்கிகளை பொது மூலதனத்தின் மூலம் தக்க வைத்தல் என்பது இறைமையை தாக்குகிறது, அத்துடன் முழு வங்கி முறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.”
|