WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
டெட்ரோய்ட் சிம்பொனி வேலைநிறுத்தப் போராட்டக்காரார்களுக்கு ஹாலிவுட் இசைக் கலைஞர்கள் ஆதரவு தெரிவிப்பு
By Marc Wells
12 November 2010
Use
this version to print | Send
feedback
டெட்ரோய்ட் சிம்பொனி இசைக்குழுவின் உறுப்பினர்கள், அவர்களது வாழ்க்கை தரங்கள் மற்றும் நிலைமைகள் மீது, ஊதியத்தில் 40 சதவிகித அளவு, ஆழமான வெட்டுக்களை கோரும் நிர்வாகத்தின் கோரிக்கைக்கு எதிராக அக்டோபர் 4 திகதியிலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த கோரிக்கைகள், ஒருவேளை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது ஒரு உலக-தர நிறுவனமாக இருக்கும் இசைக்குழுவின் முடிவாக இருக்கும் என்ற அர்த்தமாக இருக்கும் என்று அந்த இசைக்கருவி வாசிப்பாளர்கள் சரியாக நம்புகிறார்கள்.
DSO நிர்வாகம் பிடிவாதமாக இருக்கும், இந்த நிலையில், ஊதிய கோரிக்கைகளை மீறுவதற்கு தைரியமாக இருக்கும் "அதிகம் சம்பளம் கொடுக்கப்படும்" இசைக்கருவி வாசிப்பாளர்களுக்கு எதிரான போராட்டத்தை உள்ளூர் மற்றும் தேசிய ஊடகத்தின் பெரும்பாலான பிரிவு தூண்ட முயற்சிக்கின்றன. பொதுமக்கள் கருத்து மீது பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாத இந்த முயற்சிகள், மேலும் பணக்காரகவும் மிக கர்வமுடையவர்களாகவும் வளரும் உயர் செல்வத் தட்டுக்களால் வலியுறுத்தப்படும் "செலவை குறைக்கும்" முயற்சிகளின் பாகமாக உள்ளதென நியாயமாக சந்தேகிக்க முடியும்.
WSWS சமீபத்தில் ஹாலிவுட்டில் உள்ள பல இசைக் கலைஞர்களிடம் பேசியபோது, அவர்கள் DSO வாசிப்பாளர்களுக்கு உறுதியான ஆதரவை தெரிவித்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸை-சேர்ந்த கிடார் வாசிப்பவர்/தயாரிப்பாளர் மற்றும் இத்தாலிய இசைப் பத்திரிகையான Chitarre ன் நிருபருமான Simone Sello, எங்களுடன் பேசினார்.
Marc Wells: டெட்ரோய்ட் சிம்பொனி இசைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ள ஊதிய வெட்டுக்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Simone Sello Simone Sello: தனிப்பட்ட முறையில், இது என்னை மிகவும் துயரத்திற்குள்ளாக்கியுள்ளது. ஒரு குழந்தையாக, DSO வின் இசை பதிவுகளை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். Prokofiev ன் ஒரு இசைப் பகுதியை நான் வைத்திருந்தேன், அவர்களது இசை மிக சிறப்பானதாக இருந்ததாக நான் கருதினேன். இன்னும் விரிவாக, ஒரு இசைக் கலைஞனாக, பின்னர் நான் அடிக்கடி பார்த்த ஒரு போக்கை இது எனக்கு நினைவூட்டியது: கல்வியில் ஊதிய வெட்டுக்கள் செய்வது ஒட்டுமொத்த கலாச்சார மற்றும் கலை மட்டத்தில் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடும். இசை மொழியில் கல்வி இல்லாமலேயே மக்கள் வளர்வார்கள். DSO நிலைமை இந்த பயங்கரமான போக்குடன் கூடிய ஒரு பாகமாகத்தான் இருக்கிறது.
MW: ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே இது நடந்துள்ளது. இது உங்களை எப்படி பாதித்துள்ளது?
SS: கடந்த இரண்டு ஆண்டுகளில், வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிகள் காணாமல் போனதை மட்டும் நான் பார்க்கவில்லை, ஆனால் எனது வாழ்க்கை தரத்தில் 50 சதவிகிதம் குறைந்துபோனதையும் பார்த்துள்ளேன். இது வழக்கமானதாக இல்லாமல் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, நான் கலைப்பணி வேலைகளை தேடிக்கொண்டும், இசை ஆராய்ச்சி பரிசோதனைகளை செய்துகொண்டு இருந்தேன். இந்த ஆராய்ச்சிக்கு நிதி தேவைப்பட்டது, அது தற்போது என்னிடம் இல்லை. எனது உயிர் வாழ்வின் நிலைத்திருப்பு வரையறுக்கப்பட்டுள்ளது மட்டும் தான் இப்போதைய தேடல். நிதிப் பற்றாக்குறையால் கலைத்துவ முயற்சியில் ஒரு வீழ்ச்சி விளைவாகியிருக்கிறது.
MW: இதுபோன்ற மாற்றங்களினால் ஏற்படும் பரந்தளவிலான தாக்கம் எத்தகையதாக இருக்கும்?
SS: இசை உலகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறதோ அது சமூக-பொருளாதார மாற்றங்களுக்கான துணை, வழிகளில், நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதாக என்று நான் நினைக்கிறேன். கடந்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக கலைகளுக்கான அரசாங்கத்தின் மானியக் குறைப்பு, ஒரு ஆழ்ந்த விளைவைக் கொண்டுள்ளது. நிலையான வேலைகள் வெட்ட்ப்பட்டுவிட்டன. இத்தாலியில், 1960 களின் மதிப்புமிக்க இசைக்குழுக்கள் தற்போது ஒரு நிலையற்ற அடிப்படையில், நிச்சயமில்லாத அடிப்படையாக முன்முயற்சியின்றிய இணைப்பாக மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதை நான் RAI ( இத்தாலிய அரச தொலைக்காட்சி) இல் பார்த்துள்ளேன்.
MW: சமீபத்தில், கூலிக்கு வேலை மற்றும் தொழிற்சங்கங்கள் - அல்லாத வேலைகள் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டன. இந்த பிரச்சனைக்கு தனியான தீர்வு இல்லை என்பது தெளிவாக உள்ளது. அப்புறம் என்ன?
உடனடி தீர்வு ஏதும் இல்லை. ஆனால் எல்லைகளுக்கப்பாலான சில குறிப்பிட்ட வகையான நனவு வளர்ச்சியடைவதுதான் தேவையாக உள்ளதாக நான் நினைக்கிறேன். ஏற்கனவே திரைப்பட துறையில் வெளிப்படுத்தியுள்ளது போல் மூலதனம் உலகின் மலிவான இசைக்குழுக்களை அடித்து செல்கிறது, தேசிய- அடிப்படையிலான தொழிற்சங்கங்கள் இந்த போக்கை எதிர்கொள்ள திராணியற்று இருக்கின்றன. உலகளாவிய, சர்வதேச ஐக்கியம் தேவையாக உள்ளது.
MW: எந்த வகையான முன்னோக்கினால் இதை அமூல்படுத்திட இயலும்?
SS: சமூக அமைப்பின் மாற்றத்தில் அது இருக்க வேண்டும். இந்த வெட்டுக்கள், நாம் பார்த்ததற்கு—மாறான கடைசியானது கிடையாது. தேவையானது என்னவென்றால் தற்போதைய அமைப்பிலிருந்து வெளியே வருவது தான்.
மேலும், தொழிலாளர்களின், அதாவது இசைக் கலைஞர்கள், வழங்கப்பட்ட பிரிவின் அடிப்படையில் இதை தீர்க்கமுடியும் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. தேவையானது என்னவென்றால் சமூக நனவின் வளர்ச்சிதான் என்று நான் நினைக்கிறேன். நான் சொல்வதன் அர்த்தம் என்னவென்றால், நமது சொந்த கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல், ஒரு வர்க்க முன்னோக்கிலிருந்தும் பார்க்கவேண்டியது நமக்கு அவசியமாக உள்ளது என்பதுதான். நாம் இசைக் கலைஞர்கள், ஓவிய கலைஞர்கள், பிளம்பர்கள் அல்லது வாகனத் தொழிலாளர்கள் என யாராக இருந்தாலும், உற்பத்திக்கு நாம் அனைவருமே பங்காற்றுகிறோம்.
Fabrizio Grossi
Los Angeles ஐ சேர்ந்த இசைக் கலைஞர், bass வாசிப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான Fabrizio Grossi, யும் கூட WSWS விடம் பேசினார்.
Marc Wells: DSO க்காக திட்டமிடப்பட்டுள்ள ஊதிய வெட்டுக்கள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Fabrizio Grossi: இது எனக்கு வருத்தமளிக்கிறது; ஆனாலும் இது எனக்கு ஆச்சரியமாக இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் இந்த மாதிரியாகத்தான் ஏராளமான தொழிலாளர்கள் நடத்தப்படுகிறார்கள். அதை நான் இருமடங்காக பார்க்கிறேன்.
இது நமது வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல். ஆனால் அது வேறு ஏதோ ஒன்றாகவும் உள்ளது. மனித கலாச்சாரத்தில் இசையை ஒரு அங்கமாகவே நான் பார்க்கிறேன். கலை மிகவும் முக்கியமானது. அது ஒரு வெளிப்பாட்டின் வழி மட்டுமல்ல, அது நம்மை யோசிக்கவும் வைப்பதோடு, தனிநபர்களுக்கு மட்டுமல்லாது பெரிய அளவில் நம்மை வளர்ச்சியடைய வைக்கிறது. உண்மை என்னவென்றால், நமது பிரிவில் உயர்மட்டத்தில் இருக்கும், சிம்பொனி இசைக் கலைஞர்கள், தாக்கப்பட்டுக்கொண்டிருப்பது, என்னை மிகவும் பாதிக்கச்செய்கிறது. இலாபம் ஈட்ட முடியும் என்று மில்லியன் கணக்கானோர் Lady Gagas ல் முதலீடு செய்வதை பார்ப்பது சகிக்க முடியாததாகிவிட்ட அதே நேரத்தில், கலாச்சாரத்தை வளமூட்டக் கூடிய தீவிர கலை மிகவும் சமரத்திற்குள்ளாகி உள்ளது.
MW: இவை மிகப்பெரிய விளைவுகள் என்று என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
FG: ஒரு இசைக் கலைஞராக, DSO வுக்காக ஒரு மென்மையான இடத்தை நான் வைத்துள்ளேன், ஆனால் இது அனைத்து தொழிலாளர்களுக்குமே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இது அனைத்து தொழிலாளர்களுக்குமே, அவர்கள் இசைக் கலைஞர்களானலும், கடைச்சிப்பந்தியானாலும், வாகனத் தொழிலாளர்களானாலும் சரி ஒரு எச்சரிக்கைதான். தேசிய, மத அல்லது நிறம் மீதான கேள்விகளில் நம்மை பிளவுபடுத்தி ஆளும் வர்க்கங்கள் ஒரு அருமையான காரியத்தை செய்துவிட்டன. சீன தொழிலாளர்கள் நமது வேலையை பறித்துக்கொண்டார்கள் என்பது அவர்கள் கூற்று. அருகேயுள்ள பிரச்சனைகளுக்கு அந்த தொழிலாளர்கள் காரணமல்ல. இசைக் கலைஞர்களிடையே வெறும் ஒற்றுமையை விட அதிகமானவற்றை அது பறித்துவிடும்.
MW: அப்படியானால்?
FG: நான் ஒரு வரலாற்று அல்லது அரசியல் விஞ்ஞான நிபுணர் அல்ல. ஆனால் அரசியல் பேச்சுவார்த்தையை அதிகரித்து, பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, நமது நனவுகளின் கவனத்தை ‘வர்க்கரீதியாக’ ஆக்குவது நமக்கு அவசியமாக உள்ளது என்பதே எனது கருத்து. மாறாக, ஒரே வர்க்கத்திற்குள்ளேயே நாம் எதிரிகளல்ல. சீனாவிலுள்ள bass வாசிப்பாளர் எனது எதிரியல்ல, ஏனெனில் எனது செலவில் அவர் பாதிச் செலவாகத்தான் இருக்கிறார். எங்களுக்கு திறந்த விவாதம் அதற்குத் தேவை மற்றும் எங்களை ஐக்கியப்படுத்துகிற அந்தத் திறனுடைய ஒரு தலைமை இருக்க வேண்டும். அந்த தலைமையாக இருப்பதற்கான நிலையில் நான் இல்லை. நான் அந்த தகுதிக்குக் கீழ் இருப்பதாக உணர்கிறேன், ஆனால் கடைசியில் உண்மையான பிரச்சனையாக அது இருப்பதாக உணர்கின்றேன்.
MW: உலக மக்கள் தொகையின் ஒரு சிறிய பிரிவினர்தான் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை கொண்டிருக்கிறார்கள்.
FG:தொழிலாளர்களிடையே ஏற்பட்ட அனைத்து வகையான பிளவுகளுக்கும் உயர்தட்டினர்கள்தான் காரணம். சீன தொழிலாளர்களை பற்றி இத்தாலிய அல்லது அமெரிக்க தொழிலாளர்கள் புகார் கூறுவதை நான் அடிக்கடி கேட்டுள்ளேன். இது நம்பமுடியாத இலாபத்தை உயர்தட்டினர்களுக்கு உண்டாக்குவதோடு, கூடவே நம்மை ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்திக்கொள்ளச் செய்தது நமது எதிரிகளே தவிர சீன தொழிலாளர்கள் அல்ல என்று அவர்களிடத்தில் சொல்ல அது எனக்கு எப்போதுமே ஒரு நல்ல சந்தர்ப்பமாக உள்ளது. இது ஒருவருக்கு எதிராக மற்றவரை ஒரு போருக்குள்ளும் அனுப்புகிறது, என்ன பெயரில்? அமெரிக்காவில் அது வறிய இளைஞர்கள் மத்தியில் கட்டாய இராணுவ சேர்ப்பு வடிவத்தை எடுக்கிறது
MW: பொருளாதாரத் தேவையின் பலிகடாக்களா?
FG: ஆமாம், மற்ற பல நாடுகளில் உள்ளதைப்போல. கடந்த ஆண்டு NAMM [National Association of Music Merchants] நிகழ்ச்சியில் கொரியன் இசை கருவி தொழிற்சாலையிலிருந்து வந்த சுமார் 30 தொழிலாளர்கள், மனித நிலைக்கு கீழான வேலை செய்யும் நிலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களில் ஒருவர் வேலையின்போது தனது கையில் பாதியை இழந்தார். அதன் காரணமாக வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதுவே எம்மைப்போன்ற மக்களின் உண்மையான நிலையாகும். எம் எல்லோரையும் போலவே அவர்களும் இலாப நோக்கத்தின் பலிகடாக்களாக உள்ளனர். |