சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australia: Sydney Foxconn workers expose sweatshop conditions

ஆஸ்திரேலியா: சிட்னி ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் கொத்தடிமை நிலைமைகளை அம்பலப்படுத்துகின்றனர்

By our reporters
13 November 2010

Use this version to print | Send feedback

ஊடகங்கள், அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களால் பல ஆண்டு காலமாக கண்டுகொள்ளப்படாமல் இருக்கும், சிட்னியின் மேற்கு புறநகரில் உள்ள முற்றிலும் எந்த ஒரு வசதிகளும் இல்லாத தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், இந்தவாரம் தங்களது முதலாளியான ஃபாக்ஸ்டெக் (Foxteq) கம்ப்யூட்டர் அசெம்ப்ளிங் நிறுவனத்தால் திணிக்கப்படுகின்ற மந்தநிலை காலத்து-பாணியிலான நிலைகளுக்கு எதிராகப் பேசினார்கள்.

Rydalmere புறநகரில் உள்ள தொழிற்சாலையில், 200 தொழிலாளர்கள் அடுத்த நாள் காலை 6.30 மணிக்கு தாங்கள் வேலைக்கு தேவைப்படுவோமா என்பதை முந்தைய இரவில் தான் தெரிந்துகொள்ள முடியும். வாரஇறுதி நாட்கள் உள்பட, வாரத்தின் எந்த நாளிலும் வேலை செய்ய அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதோடு, விரைவான அசெம்பிளி லைன் வேலைகளில் இருப்பவர்களுக்குத் தான் அடுத்த நாளில் வேலை வழங்கப்படுகிறது என்பதால் தொடர்ந்து தொழிலாளர்கள் ஒருவருக்கு எதிராய் ஒருவர் நிற்கும்படி செய்யப்படுகிறார்கள். அந்த நிறுவனம் தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்தின் துணைநிறுவனம் ஆகும். பாக்ஸ்கான் நிறுவனம் Hewlett-Packard,Apple, Dell மற்றும் Nokia போன்ற மிகப்பெரிய சர்வதேச நிறுவனங்களுக்கான மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்து தரும் உலகின் மிகப்பெரிய அவுட்சோர்ஸிங் நிறுவனம். சீனாவில் இந்த நிறுவனத்தின் 900,000 க்கும் கூடுதலான தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் 16 முதல் 24 வயதுக்கு இடையேயானவர்கள்தான். இந்த ஆண்டு தொடக்கத்தில் இளவயது ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் குறைந்தது 13 பேர் தற்கொலைக்கு முயற்சித்த பின்னர் இந்நிறுவனத்தின் தொழிலாளர் அடக்குமுறை ஆட்சியானது சீன மற்றும் சர்வதேச அளவில் பரவலாக கோபத்தை தூண்டியது.

இந்தியாவில், தமிழகத்தின் தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூலி உயர்வு, அடிப்படை பாதுகாப்பு உத்தரவாதம், சுகாதார பரிசோதனைகள் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் கோரி செப்டம்பர் 21 லிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை நசுக்க தமிழக அரசு பெருமளவிலான கைது நடவடிக்கைகளை பயன்படுத்தியது.

சிடனியில் உள்ள ஃபாக்ஸ்டெக்ஸ் தொழிலாளர்களது நிலையும் இதேபோன்றுதான் உள்ளதாக Sydney Morning Herald முதலில் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து உ.சோ.வ.த. விடம் அத்தொழிலாளர்கள் பேசினார்கள். அந்த தொழிற்சாலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சில தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறபோதிலும், Westaff, என்கிற தொழிலாளர் ஒப்பந்த நிறுவனத்தால் அமர்த்தப்படுகிற நிரந்தரமற்ற தொழிலாளர்களால்தான் ஒட்டுமொத்த பணியும் செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்தார்கள்.

ஒவ்வொரு இரவிலும், அடுத்தநாள் தங்களுக்கு வேலை இருக்கிறதா என்பதை பார்க்க, தகவல் செய்திக்காக, இரவு 8 மணி வரைக்கும் கூட அது வரும், தொழிலாளர்கள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும், காலையில் அவர்கள் அழைக்கப்பட்டு, அந்த நாளில் அவர்கள் எவ்வளவு மணி நேரம் வேலை செய்யப்போகிறார்கள் என்பது சொல்லப்படுகிறது. அவை வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே இருக்கலாம். அது அவர்களது பிரயாண செலவை மட்டுமே பூர்த்திசெய்ய போதுமானது. எப்போதாவது உடல் நலக்குறைவாலோ அல்லது காயத்தினலோ கூட ஒரு ஷிப்டுக்கு தொழிலாளர்கள் இல்லாமல்போனால் கூட, பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். வேலையிலோ, ஒதுக்கீடு அளவை நிறைவேற்றவேண்டிய தொடர் நிர்ப்பந்தத்தின் கீழே அவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். தங்களது நிலைமைகளின் எந்த அம்சம் குறித்தும் அவர்கள் புகார் தெரிவித்தால் பாக்ஸ்டெக்ஸில் அவர்கள் ஒருபோதும் வேலை செய்யமுடியாது.

உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசிய ஒரு இளம் தொழிலாளி,"வேலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை, எதுவும் உறுதியில்லை" என்றார். "எதையாவது பற்றி நீங்கள் பேசினால், உங்களுக்கு நாளையிலிருந்து வேலை இருக்காது. எந்திரங்கள் போன்று கம்பெனி எங்களை நடத்துகிறது. 60 கிலோ வரையிலான எடையை நாங்கள் சுமக்கவேண்டும், அல்லது வீட்டுக்கு அனுப்பப்படுவோம்." ஃபாக்ஸ்டெக்கில் ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக வேலை பார்த்த மற்றொரு தொழிலாளி கூறுகையில்," ஃபாக்ஸ்கான் தற்கொலைகள் குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம். இங்கு நடத்தப்படும்விதமும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நாங்கள் இன்னொரு நாட்டில் இருப்பது போன்று உள்ளது. நிர்வாகத்தில் சிலர் சரியாக இருந்தாலும் மற்றவர்கள் எங்களை ஏறக்குறைய மிருகங்களைப் போலதான் நடத்துகின்றனர். எங்களுக்கு நீண்ட ஷிப்ட் கிடைக்குமா அல்லது குறைந்த ஷிப்ட் கிடைக்குமா என்பது குறித்து விவாதிப்பதற்காக ஒவ்வொரு நாள் காலையிலும் நாங்கள் கூடவேண்டியதுள்ளது. உண்மையிலேயே ஒவ்வொரு மணி நேரமாகத் தான் நாங்கள் வேலை செய்ய வேண்டியதுள்ளது!"

ஃபாக்ஸ்டெக்கின் நிலைமைகள் தனித்துவமானது என்பதிலிருந்து வெகு தூரம் உள்ளது. சிட்னியிலும் இளம் தொழிலாளர்களுக்கு இதேபோன்ற நிரந்தரமற்ற வேலைகள் அதிகரித்துக்கொண்டுள்ளன. ஒரு இளைய சீன தொழிலாளி குறிப்பிட்டார்: "ஃபாக்ஸ்டெக் இங்கே சுமார் 15 ஆண்டு காலமாக உள்ளது, அது எப்போதுமே இப்படித்தான் இருக்கிறது என்று என்னிடம் சொன்னார்கள். நான் முதலில் இங்கே வந்தபோது, இது அதிர்ச்சியளிப்பதாக நான் நினைத்தேன், ஆனால் எங்கே வேலைபார்த்தாலும் இதே கதைதான் என்று எனது நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள்."

Sydney Morning Herald இடம் பேசிய Tan Cuong Vo என்ற அவர்களது சக தொழிலாளி, உடனடியாக வேலையை விட்டு நீக்கப்பட்ட விவரத்தை தொழிலாளர்கள் தெரிவித்தனர். தனது மகள் பிறந்த நாளுக்காக மூன்று நாட்கள் விடுமுறை கேட்டபோது வேலையைவிட்டு நீக்கப்படுவேன் என்று தாம் மிரட்டப்பட்டதாக Cuong Vo அந்த பத்திரிகையிடம் கூறியிருந்தார்.

ஃபாக்ஸ்டெக் தொழிலாளர்களில் அதிகம்பேர் ஆப்கானிஸ்தான், இந்தியா, இலங்கை, சீனா, வியட்நாம், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து உள்பட உலகம் முழுவதுமிருந்து வேலை தேடி வந்த இளவயது தொழிலாளர்களாகத்தான் உள்ளனர்." நாங்கள் பலநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர் படையை வைத்துள்ளோம்" என்கிறார் சூடான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர். ஒவ்வொரு நாளும், அசெம்பிள் செய்யப்பட்டு மூட்டைக்கட்டப்படும் Hewlett-Packard கம்ப்யூட்டர்கள், பாதுகாப்பு துறை, NSW தீயணைப்பு படை மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பிரபலமான தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

ஒரு ஷிப்டுக்கு ஒரு பிரிவில் குறைந்தபட்ச இலக்கு 400 கம்ப்யூட்டர்கள் என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு வரிசையின் விளைபொருட்களும் கவனமாகக் கணக்கிடப்பட்டு அந்த விவரங்கள் தொழிலாளர்களின் உற்பத்தி விகிதங்களை அதிகரிப்பதற்கு அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சிறந்த வரிசையில் இருப்பவர்கள் மறுநாள் வேலைக்கு முதலில் தெரிவு செய்யப்படுவார்கள். ஒரு சீன பெண் தொழிலாளி கூறினார்: "இங்கே நாங்கள் உண்மையிலேயே கடினமாக வேலை செய்ய வேண்டியதுள்ளது. எங்களுக்கான ஒதுக்கீடை நாங்கள் நிறைவு செய்தே தீரவேண்டும்". இந்த நிலைமைகள் குறித்து அரசாங்கம் ஏதாவது செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆனாலும், தான் இதில் தலையிட முடியாது என்று New South Wales அரசாங்கம் கூறுகிறது. ஆஸ்திரேலிய ஒலிபரப்பு கழக வானொலிக்கு பேட்டியளித்த தொழில் உறவுகள் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் Paul Lynch, வேலை தொடர்பான விடயங்கள் Fair Work Australia (FWA) சம்பந்தப்பட்டவை என்று கூறினார். கொள்முதல் விதிமுறை மீறல்கள் ஏதாவது உள்ளதா என்பதை மட்டுமே தமது துறை சோதனை செய்யும் என்றும் Lynch கூறினார்.

FWA வோ அல்லது கில்லார்ட் அரசாங்கத்தின் பணியிட உறவுகள் துறை அமைச்சர் Chris Evans ஸோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. பாக்ஸ்டெக்கில் காணப்படுவதைப்போன்ற நிலைகளை அமல்படுத்துவதற்குத்தான் உண்மையிலேயே தொழிலாளரின் பணியிட ஆட்சியே வடிவமைக்கப்பட்டுள்ளது. FWA வால் அதிகாரமளிக்கப்பட்டு, தனித்தனியான தொழிற்சாலைகளில் தொழில் நிறுவன ஒப்பந்தங்களுக்காக பேரம் நடத்தப்படும் காலக்கட்டத்தை தவிர, அனைத்து தொழிற்சாலை நடவடிக்கையையும் நியாய வேலைச் சட்டங்கள் தடுக்கிறது. மேலும், பிரதமர் ஜூலியா கில்லர்ட், தாம் பொருளாதார மறுசீரமைப்பின் ஒரு புதிய அலையை அமல்படுத்தப்போவதாக தொழிலதிபர்களுக்கு அளித்த வாக்குறுதியை கடந்த மாதம் வலியுறுத்தியதோடு, "கட்டுப்பாடு மற்றும் கடுமை" யுடன் சந்தைக்கு சாதகமான ஒரு செயல்திட்டத்தை தமது அரசு பின்பற்றப்போவதாகவும் அறிவித்தார்.

தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்தும் நிறுவனமான Westaff, தொழிலாளர்களுக்கு அவர்களது ஷிப்ட் குறித்து முந்தைய இரவு தகவல் தெரிவிக்கும் முறையை நியாயப்படுத்துவதற்காக சந்தையின் உத்தரவுகளை கையிலெடுத்துள்ளது. தாங்கள் கடைபிடிக்கும் இந்த நிரந்தரமற்ற போக்கு பரவலான ஒன்று தான் Sydney Morning Herald க்கு தெரிவித்த கருத்தில் Westaff கூறியுள்ளது." Hewlett-Packard ஒவ்வொரு நாளும் தங்களது ஆர்டர்களை வைக்கிறது, எனவே அவர்களுக்கு எவ்வளவு பணியாளர்கள் தேவை என்பதை தெரிந்துகொள்வது மிகக்கடினமானது" என்று கூறுகிறார் Westaff NSW பொதுமேலாளர் Vic Aruli. "குறுகிய கால அறிவிப்பில் பணியாளர்கள் தேவையாக உள்ளவர்களுக்கு, அதனை நிறைவேற்றிக்கொடுப்பதே எங்களது வேலை. இந்த வகையான வேலை எல்லோருக்கும் கிடையாது, ஆனால் இது சட்ட விரோதமானதல்ல. ஆஸ்திரேலியாவில் கம்ப்யூட்டர்களை தயாரிப்பது மலிவானதல்ல. இந்த வகையான ஏற்பாடுகள் ஏராளமாக நடக்கின்றன."

2008 ன் பிற்பகுதியில், சர்வதேச பொருளாதார வீழ்ச்சியின் உச்சத்தில், உலகம் முழுவதும் 400 க்கும் அதிகமான அலுவலகங்களைக் கொண்டிருந்த ஒரு அமெரிக்க நிறுவனத்தின் ஒரு அங்கமாக முன்னர் இருந்த Westaff ன் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து செயல்பாடுகளை ஒரு தனியார் equity பின்னணி கொண்ட குழுமம் வாங்கியது. Humanis Group என்ற அந்த தனியார் equity கம்பெனி, "வங்கி முதலீடு, நிதி மற்றும் நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில் அனுபவம் வாய்ந்த" ஒரு புதிய பிரிவு என்று ஊடக செய்திகள் தெரிவித்தன.

Westaff மற்றும் Foxteq ஆகியவற்றின் வழிமுறைகள் தனக்குத் தெரியாது என்பதாய் Hewlett-Packard பாவனை செய்கிறது. Sydney Morning Herald ல் வெளியான குற்றச்சாற்றுக்கள் குறித்து விசாரணை நடத்துவதாக அது ஊடகங்களிடம் சொன்னது. ஆனாலும் தொழிலாளர்களை சப்ளையர்கள் "கவுரவத்துடனும், மரியாதையுடனும்" உயர்ந்த இடத்தில் வைத்து நடத்துவதை உறுதி செய்வதற்கு, "சமூக மற்றும் சூழ்நிலை பொறுப்புடன் சப்ளை சங்கிலியில்" "ஒரு "அங்கீகரிக்கப்பட்ட தலைவராக" இருப்போம் என்று அது கூறியது. யதார்த்தத்தில், Hewlett-Packard இதே வழிகளைத் தான் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிது. இந்த வாரத்தில் தான் தான் முன்னர் அறிவித்த கடல்கடந்த அவுட்சோர்சிங்கில் 1 பில்லியன் டாலர் முதலீடு குறித்த கூடுதல் விவரங்களையும் வெளியிட்டது. அந்நிறுவனம் அதன் சர்வதேச விநியோக மையங்களாக—பல்கேரியா, சீனா, கோஸ்டா ரிக்கா, இந்தியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ்—ஆகிய ஆறு நாடுகளை தேர்வு செய்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை சேவை அளிக்கும் EDS நிறுவனத்தை இரண்டாண்டுகளுக்கு முன்னர் கையகப்படுத்திய இந்நிறுவனம், இந்த மறுசீரமைப்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்த 9,000 வேலை இழப்புகளும் இருக்கும் என்று தெரிவித்தது.

தனது தொழில் நடைமுறைகளை நிறுவனம் மேம்படுத்துவதற்கு தாம் அழுத்தம் கொடுக்கப்போவதுபோன்ற ஒரு எண்ணத்தை ஆஸ்திரேலிய உற்பத்தித் துறை தொழிலாளர்கள் சங்கம் (AMWU) ஊடகங்களிடமும், பாக்ஸ்டெக் தொழிலாளர்களிடமும் கொடுத்துள்ளது.

AMWU மாநில செயலாளர் Tim Ayres, "தனது தொழிலாளர்க்ளுக்கு சரியானவற்றை செய்து, அவர்களுக்கு நேரடி மற்றும் நிரந்தர வேலையை அளிக்கவேண்டும் என்று பாக்ஸ்டெக்கை தொழிற்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாக" தெரிவித்தார். "நிறுவனத்திற்கு மிக நன்றாக பொருந்தியிருக்கிற ஒரு ஏற்பாடை மாற்ற இந்த ஃபாக்ஸ்கான் துணை நிறுவனம் விருப்பமில்லாதிருப்பதை" அவர் ஒப்புக்கொண்டார். தொழிற்சங்கம் அடுத்தபடியாக, Hewlett-Packard, "தனது நிறுவனத்தின் சொந்த சமூக பொறுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதற்கும், அதன் விநியோக வரிசை முழுவதும் தொழிலாளர்கள் நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கும்" சங்கம் கேட்கும் என்றார் Ayres.

உண்மையில், இந்த நிலைமைகளை தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாக ஃபாக்ஸ்டெக் மற்றும் வேறெங்கிலும் அனுமதித்துள்ளதோடு, இந்த நிறுவனங்களுக்கு எதிராக எந்த ஒரு உண்மையான போராட்டத்தை அனுமதிக்கும் எண்ணத்தையும் கொண்டிருக்கவில்லை. கடந்த முப்பது ஆண்டு காலங்களில் AMWU, மீதமுள்ள தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, தொழிலாளர்கள் போராட்டத்தை நசுக்கி, வேலைகள் மற்றும் அடிப்படை நிலைமைகளை அழிப்பதை அமல்படுத்தி, வணிகம் மற்றும் அரசாங்கத்திற்காக வேலைசெய்யும் இரக்கமற்ற கண்காணிப்பு முகமைகளாக உருமாற்றம் கண்டிருக்கின்றன.