WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் : மத்திய
கிழக்கு :
ஈராக்
Iraq parliament meets to ratify power-sharing deal
அதிகாரப் பகிர்வு உடன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுப்பதற்கு ஈராக் பாராளுமன்றம் கூடுகிறது
By Patrick Martin
12 November 2010
Back to
screen version
மார்ச் 7ம் தேதித் தேர்தலுக்குப் பின்னர் ஈராக்கிய பாராளுமன்றம் அதன் முதல் முறையான கூட்டத்தொடரைத் தொடங்கியுள்ளது; இது எட்டுமாத கால அரசியல் நெருக்கடி மற்றும் தேக்கத்தை முடித்துள்ளது. வியாளன் காலை நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து பிரதம மந்திரி நூரி அல்-மாலிகையை பதவியில் தொடரவைக்கும் ஒரு அதிகாரப் பகிர்வு உடன்பாடு மூன்று குறுகியபற்றுடைய, வட்டாரக் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டது.
உடன்பாட்டு விதிகளின்படி, மாலிகியின் State Of Law கட்சி, ஷியைட் தளத்தைக் கொண்டது, நிர்வாகப் பிரிவின்மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும்; இதில் பிரதம மந்திரியின் அலுவலமும் அடங்கும். குர்டிஷ் தலைவர் ஜலால் தலாபனி ஜனாதிபதியாக இருப்பார், பெரிதும் அலங்காரப் பதவிதான் இது. சுன்னித் தளமுடைய ஈராக்கியா முகாம், முன்னாள் பிரதம மந்திரி அயத் அல்லாவியின்கீழ் இருப்பது இரு குறைந்த முக்கியத்துவம் உடைய பதவிகளைக் கொள்ளும்: பாராளமன்ற தலைவர் மற்றும் அல்லாவிக்காக புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பதவியான ஆலோசனைக் குழுவின் தலைமை.
பாராளுமன்றத்தின் முதல் நடவடிக்கையாக ஈராக்கியாவின் ஒசாமா அல்-நுஜைப் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈராக்கியா செய்தித் தொடர்பாளர் பின் தலாபனியை தலைவராக தேர்ந்தெடுக்கப்படுமுன், பாராளுமன்றம் முறையாக சதாம் ஹுசைனின் ஆளும் கட்சி முன்னாள் உறுப்பினர்கள், பெரும்பாலும் சுன்னிகள், பாத்திய முறையை அகற்றுதல் என்ற பெயரில் அரசியல் வாழ்வில் தடைக்கு உட்பட்டிருந்ததை அகற்ற வேண்டும் என்று கோரினர்.
இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, தலாபனிக்கு இரண்டாம் வரைகாலத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது; பாராளுமன்றத்தில் ஈராக்கியா உறுப்பினர்கள் 91 பேரில் மூன்றில் இரு பகுதியினர், அல்லாவி உட்பட, எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர். கூட்டத்தொடர் அவர்கள் இல்லாமலேயே நடந்தது, தாலபனி தேர்ந்தெடுக்கப்படுதல் இரவு மன்றம் மூடப்படுமுன் முடிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முறையாக தலாபனி பதவியில் உறுதிசெய்யப்பட்ட பின்னர், அவர் மாலிகியை பிரதம மந்திரியாக நியமிப்பார், மாலிகி அதன் பின் அமைச்சரவையை தேர்ந்தெடுக்கத் தொடங்குவார்; இந்த வழிவகைகள் முடிய பல வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அமெரிக்க தூதரகத்தில் இருந்து மொக்டாடா அல் சதர் ஷியா இயக்கத்திற்கு முக்கிய பங்கு கொடுக்கக் கூடாது என்ற தீவிர அழுத்தத்தைத் எதிர்கொள்கிறார். அதன் ஆதரவுதான் கடந்த எட்டு மாதங்களாக நிலவி வந்த அரசியல் தேக்கத்தை முறியடித்தது.
முன்னாள் பாத்திஸ்ட்டுகளுக்கு எதிரான அடக்குமுறை என்ற பிரச்சினையை தவிர, ஈராக்கியா National Council on Higher Policy என்று அல்லாவியின் தலைமையில் வரக்கூடிய அமைப்பு உண்மையான அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று கோருகிறது. ஈராக்கியா அதிகாரிகள் தாங்கள் மாலிகிக்கு, குழுவின் பங்கு பற்றி இறுதியாக முடிவெடுப்பதற்கு ஒரு மாத காலம் தருவதாகக் கூறினர்.
மார்ச் 7ம் திகதித் தேர்தலில் ஈராக்கியா அதிக வாக்குகளைப் பெற்றது; ஆனால் அதற்கு கிடைத்த 91 பாராளுமன்ற இடங்கள் மாலிக்கின் State of Law கட்சியுடையதைவிட இரண்டுதான் அதிகம். ஒருபோட்டி ஷியைட் கூட்டணியான ஈராக்கிய தேசிய ஒப்பந்தம் என்பது 70 தொகுதிகளில் வென்றது; இவற்றுள் சதரிஸ்ட்டுக்கள் 40 ஐயும், ஒரு இருகட்சிக் கூட்டணியான குர்டிஷ் தேசியவாதிகள் மற்றும் ஒரு 43 தொகுதிகளிலும் வெற்றிபெற்றனர்.
இரு முக்கிய கட்சிகளும் பாராளுமன்றத்தில் 325 இடங்களில் மூன்றில் ஒரு பகுதியைக் கூடப் பெறவில்லை; இரண்டில் ஏதும் சதரிஸ்ட்டுக்கள் மற்றும் குர்டிஷ் தேசியவாதிகளுடைய ஆதரவைப் பெறாமல் ஒரு கூட்டணி அரசாங்கமும் அமைக்கமுடியாது.
பாராளுமன்றத்தில் எண்ணிக்கை என்பதை விட அரசியல்தான் தடையாக இருந்தது; அமெரிக்க அரசாங்கம், முன்னாள் CIA சொத்தான அல்லாவி எந்தப் புதிய அரசாங்கத்திலும் சேர்க்கப்பட வேண்டும், பிரதம மந்திரியாக அல்லது ஜனாதிபதியாக என்று கோரியது; சதரிஸ்ட்டுக்கள் அல்லாவி மற்றும் மாலிக் இருவரையுமே எதிர்த்தனர்; ஷியைட் கட்சிகள் அனைத்தின்மீதும் கணிசமான செல்வாக்கு கொண்டுள்ள ஈரானிய அரசாங்கம் அல்லாவிக்கு ஆதரவு கொடுப்பதையும் எதிர்க்கிறது.
நீடித்த தேக்கம் இறுதியில் சதரிஸ்ட்டுக்களாலேயே முறிக்கப்பட்டது; கடந்த மாதம் அவர்கள் தங்கள் மாலிக்மீதான எதிர்ப்பைக் கைவிட்டு, அவர் தலைமையில் அரசாங்கத்திற்கு ஒப்புக் கண்டனார்; ஆனால் இதற்கு ஈடாக வெளியிப்படாத செல்வாக்குகள் கோரப்பட்டன; அதுவும் பொலிசைக் கட்டுப்படுத்தும் உள்துறை அமைச்சரகத்தில் இருந்து.
மாலிகி, ஈரான், ஜோர்டான், சிரியா, துருக்கி மற்றும் எகிப்து என்னும் அண்டை நாடுகளுக்குப் பயணித்து தன்னுடைய அரசாங்கம் குர்டிஷ் பிரிவினைவாதத்தை கட்டுப்படுத்தும் என்று உறுதியளித்தார். இது துருக்கி, ஈரான் மற்றும் சிரியாவில் அச்சுறுத்தலாகக் காணப்படுகிறது. அத்துடன் சுன்னி சிறுபான்மையுடனும் உடன்பாடு காண இருப்பதாகக் கூறினார்: இது முக்கியம் என்று பெரும்பாலான சுன்னி நாடுகளால் காணப்படுகிறது (ஈரானைத் தவிர).
அரசாங்கம் நடத்தும் துருக்கிய பெட்ரோலியம் நிறுவனம் இரு பெரும் இலாபம் தரக்கூடிய ஈராக்கிய அரசாங்க ஒப்பந்தங்களை, ஈராக்கிய இயற்கை வாயுத் துறையில் பெற்றபின், மாலிகி துருக்கிக்கு வந்தார். ஈராக்கியாவின் செய்தித்தொடர்பாளர் மாலிகியை அரசியல் ஆதரவை நாடுவதற்கு வணிக உடன்பாடுகளை இணைத்தார் என்று குறைகூறினார்.
ஈரானைப் பொறுத்தவரை, மாலிகி உயர்மட்ட சமய அதிகாரத்தைக் கொண்ட அயாதொல்லா காமெனியிடம் இருந்து ஒப்புதலை நாடி, தான் மொக்ராடா அல் சதரிடம் கொண்டுள்ள உடன்படிக்கையையும் வலுப்படுத்த முற்பட்டார். பிந்தையவர் இப்பொழுது ஈரானிய சமய மையமான கோமில் வாழ்கிறார்.
மாலிகி பயணிக்காத ஒரே பிராந்திய சக்தி சௌதி அரேபியாதான். அதை ஆளும் முடியாட்சி அனைத்து ஷியைட் கட்சிகளையும் உறுதியாக எதிர்க்கிறது; இவற்றை அவர் தன்னுடைய முக்கிய பிராந்தியப் போட்டி நாடான ஈரானுக்காக செயல்படுபவை என்று கருதுகிறது.
அல்லாவி ஈரானைத் தவிர,பெரும்பாலான அண்டை நாடுகளுக்கும் பயணித்த காரணம் ஆதரவை நாடுவதாகும்; இந்த எட்டுமாத தேக்க காலத்தில் ஈராக் தலைநகரில் அதிகம் தென்படவில்லை.
பிரிட்டிஷ் செய்தித்தாள் Guardian கருத்துப்படி அல்லாவி தன்னுடைய கட்சி மாலிக் தலைமையில் உள்ள கூட்டணியில் சேர அனுமதித்து, தான் மட்டும் அரசாங்கத்திற்கு வெளியே இருப்பது என்று முடிவு செய்துள்ளார்; அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா தொபேசியில் அழைத்து இவரை ஒப்புக் கொள்ளுமாறு வற்புறுத்தியபின்தான் இம்முடிவை எடுத்தார்.
பேச்சுவார்த்தைகளின் இறுதி வாரங்களில் ஏராளமான உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகள் வழிவகையைக் கட்டுப்படுத்த முயன்றனர்; வெற்றிபெறவில்லை. துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் பெரும்பாலான முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடினார்; தோல்வி அடைந்த குடியரசுக் கட்சி ஜனதிபதி வேட்பாளர் செனட்டர் ஜோன் மக்கைனும் பாக்தாத்திற்கு தன் நண்பர், வலதுசாரி ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோசப் லிபர்மன்னுடன் வருகை தந்திருந்தார்.
பிடென், மக்கைன் மற்றும் லிபர்மன் அனைவரும் குர்டிஷ் தேசியவாதிகளிடம் செல்வாக்கைச் செலுத்தி அல்லாவி கட்சியில் இருந்து ஒரு சுன்னி முஸ்லிம் ஜனாதிபதி பதவியைக் கொள்ள வேண்டும் என்றனர். ஆனால் ஜனாதிபதி தலபனி மற்றும் குர்டிஷ் பிராந்தியத் தலைவர் மசௌட் பர்ஜானி தலைமையில் உள்ள இரு குர்டிஷ் கட்சிகளும் அமெரிக்க வேண்டுகோளுக்கு சிறிதும் இணங்கவில்லை.
மாலிகி குர்டிஷ் மக்களுக்கு முக்கிய சலுகை கொடுத்ததாகக் கூறப்படுகிறது; அவர்களுடைய நீண்ட காலமாக ஒத்திப்போடப்பட்டுவரும் கோரிக்கையான எண்ணெய் வளமுடைய கிர்குக் நகரமும் அதன் சுற்றுப்பகுதி மாநிலமான தமிமும் குர்டிய பிராந்தியத்துடன் இணைக்கப்பட வேண்டுமா என்பதை முடிவெடுக்க வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே அது. கிர்குக்கின் மக்களில் குர்டியர்கள், சுன்னிகள், அரேபியர்கள் மற்றும் துர்க்மன்கள் ஆகியோர் உள்ளனர். ஆனால் 2003 அமெரிக்கப் படையெடுப்பில் இருந்து குர்டிஷ் எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம்.
அல்லாவியின் ஈராக்கிய முகாம், முக்கியமாக சுன்னிகள் நிறைந்தது, இன்னும் கடினப் போக்கை கிர்குர்க் மேல் கொண்டது; எனவே பாராளுமன்றத்தில் குர்டிஷ் ஆதரவிற்கு ஈடாக அதிகம் கொடுப்பதற்கு இல்லை. இறுதியில் பர்ஜானி “நாங்கள் ஒவ்வொருவரும் சில உரிமைகளை, எவை உரியனவோ, அவற்றைப் பெற்றோம்” என்றார்.
பாராளுமன்றத்தில் இருந்து வியாழனன்று சுன்னிகள் வெளிநடப்பு செய்தது, புதைந்துள்ள மகத்தான அழுத்தங்களின் அடையாளம் ஆகும்; பாராளுமன்ற உடன்பாடு முறிந்தால் இவை மற்றொரு வன்முறைப் பூசல் சுற்றிற்கு வகை செய்யும்.
கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் தீவிரப் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியான குறுகியபற்றுக் கொடுமைகளையும் இடையிடேயே கண்டன. இதில் பாக்தாத்தில் உள்ள ஒரு சிரிய கத்தோலிக்கத் திருச்சபை மீதான தாக்குதலும் அடங்கும்; அதில் குறைந்த பட்சம் 58 பேர் கொல்லப்பட்டனர்; இதைத்தவிர தலைநகரில் தொடர்ந்த ஒருங்கிணைக்கப்பட்ட குண்டுவீச்சு தாக்குதல்கள் 113 பேரைக் கொன்றன; ஷியைட் புனித நகரங்களான நஜப், கர்பலா ஆகியவற்றின்மீது நடந்த தாக்குதல்கள் 11 பேரைக் கொன்று 50 பேருக்கு காயங்களையும் ஏற்படுத்தின.
பிடெனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆன்டனி ஜே. பிளிங்கன் உடன்பாடு பற்றி அதிகக் கவலை இல்லாதது போல் காட்டிக் கொள்ள முயன்றார்; இதை “ஒரு கணிசமான சாதனை, ஈராக்கிய மக்கள் வாக்களித்த முடிவு, உண்மையில் அனைத்தும் அடங்கிய அரசாங்கத்திற்கு”, “அரசாங்க அதிகாரங்கள் முழுவதும் கணிசமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.” என்றார்.
ஆனால் அல்லாவி கட்சிக்கு இன்னும் முக்கிய நிலை பெறுவதற்கு அமெரிக்க அழுத்தம் தோல்வியுற்றது என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த சுன்னிகள் மீண்டும் ஷியைட் தலைமையிலான அரசாங்கம் மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக ஆயுதங்கள் ஏந்தக் கூடிய இடர் உள்ளது.
இந்த உடன்பாடு மாலிகிக்கு ஒரு “பெரிய வெற்றி” என்று Los Angeles Times கூறியுள்ளது; மேலும் “இது வாஷிங்டனுக்கு ஒரு மூலோபாயத் தோல்வி, அதுவோ மாலிகியின் போட்டியாளருக்கு முக்கிய பங்கிற்கு அழுத்தம் கொடுத்திருந்தது; விரைவான போக்குகள் செயலற்று நின்றுவிட்டது போல் தோன்றுகிறது.”
Associated Press எழுதியது: “உடன்பாடு அமெரிக்காவிற்கு பின்னடைவு என்ற திறனைக் கொண்டுள்ளது; இது இன்னும் கூடுதலான சுன்னி அதிகாரத்திற்கு முயன்றது; வட்டாரப் போட்டி நாடான ஈரானுக்கு ஒரு ஏற்றம் இதனால் வந்துள்ளது.”
நிலைமையை மாற்றும் விதத்தில் ஒபாமா நிர்வாகம் அது அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை நீடிக்கக் கூடும் என்று குறிப்புக்களைக் காட்டியுள்ளது. பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் இந்த வாரம் முன்னதாக தான் பாக்தாத்தின் புதிய அரசாங்கத்திடம் இருந்து டிசம்பர் 2011ல் திட்டமிடப்பட்டுள்ள படைகள் திரும்பப் பெறல் காலக் கெடு நீடிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை எதிர்பார்ப்பதாகக் கூறினார். இந்தக் கெடு மாலிகி மற்றும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷினால் 2 ஆண்டுகளுக்கு முன் பேச்சுவார்த்தைகளை அடுத்து ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கை வெற்றி கொண்டதின் முக்கிய நோக்கம் வியாழன் அன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் தெற்கு ஈராக்கில் எண்ணெய் ஏற்றம் பற்றிய நீடித்த கொண்டாட்டம் பற்றி வெளிவந்ததில் அடிக்கோடிடப்பட்டுள்ளது; இக்கொண்டாட்டம் மஜ்னூன் மற்றும் ருமைலா வயல்கள் என்று பஸ்ராவிற்கு அருகே நடைபெற்றது.
“Iraq’s Oil Patch Opens
the Spigot”
என்ற
தலைப்பில் வந்துள்ள அறிக்கையின்படி,
ஈராக்கிய
அதிகாரிகளும் எண்ணெய்த்துறை நிர்வாகிகளும் ருமைலாவில் இந்த மாதம்
10 சதவிகித உற்பத்தி
அதிகரிப்பைச் சந்திக்க உள்ளனர்;
இது திட்டமிட்ட
மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஏற்பட்டுள்ளது.
ஈராக்கிய எண்ணெய்
உற்பத்தியை 2.5
மில்லியன்
பீப்பாய்கள் ஒரு நாளைக்கு என்பதில் இருந்து இத்தசாப்த முடிவிற்குள்
12 மில்லியன்
பீப்பாய்கள் என்று உயர்த்துவதற்கான திட்டங்ஙளில் முதல் படியாகும்.
“Iraq’s Oil Patch Opens the Spigot” என்ற தலைப்பில் வந்துள்ள அறிக்கையின்படி, ஈராக்கிய அதிகாரிகளும் எண்ணெய்த்துறை நிர்வாகிகளும் ருமைலாவில் இந்த மாதம் 10 சதவிகித உற்பத்தி அதிகரிப்பைச் சந்திக்க உள்ளனர்; இது திட்டமிட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஏற்பட்டுள்ளது. ஈராக்கிய எண்ணெய் உற்பத்தியை 2.5 மில்லியன் பீப்பாய்கள் ஒரு நாளைக்கு என்பதில் இருந்து இத்தசாப்த முடிவிற்குள் 12 மில்லியன் பீப்பாய்கள் என்று உயர்த்துவதற்கான திட்டங்ஙளில் முதல் படியாகும்.
ஜேர்னல் தெற்கு ஈராக்கில் உள்ள நிலைமையை ரஷ்யா 1991ல் சோவியத் ஒன்றிய சரிவிற்கு பின்னர் தனியார்மயமாக்கிக் கொள்ளையடித்த நிலையுடன் ஒப்பிட்டுள்ளது. BP யின் ஈராக் பிராந்தியத் தலைவரான மைக்கேல் டௌன்ஷெண்ட் செய்தித் தாளிடம் கூறினார்: “தனித்தனியே அனைத்து வயல்களையும் கணக்கிட்டால், இதுவரை எவரும் சாதித்திராத மிகப் பெரிய அளவு ஆகும் இது.”
|