சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Toronto International Film Festival 2010

A conversation with Ken Loach

டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழா 2010 கென் லோச்சுடன் ஓர் உரையாடல்

By David Walsh
21 OCTOBER 2010

Use this version to print | Send feedback

டேவிட் வோல்ஷூம், ஜோஆன் லோறியரும் சமீபத்தில் நடைபெற்ற டொரொண்டோ திரைப்பட விழாவில் இயக்குனர் கென் லோச்சுடன் அவருடைய சமீபத்திய திரைப்படம் ROUTE IRISH குறித்து உரையாடினார்கள். அவருடன் திரைக்கதை எழுத்தாளர் போல் லாவர்டியும் பங்கு பெற்றிருந்தார்.


கென் லோச்

டேவிட் வோல்ஷ்: ஈராக்கிய யுத்தத்தை ஓர் அசாதாரண அணுகுமுறையில் கையாளும் ROUTE IRISH திரைப்படத்தின் கரு எவ்வாறு உருவானது?

கென் லோச்: ஈராக்கிய யுத்தம் பேசப்படாமல் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். மேலும் எங்களைப் பொறுத்த வரையில் அதுவொரு மிகப்பெரிய பிரச்சினை. ஈராக்கிய யுத்தம் குறித்தோ அல்லது ஈராக்கிய யுத்தத்தில் பிரிட்டிஷின் நடவடிக்கைகள் குறித்தோ நீங்கள் ஒரு படத்தை உருவாக்க ஆரம்பித்தால், அதில் பல சதிவேலைகளைக் காண முடியும். அவற்றையும் தாண்டி, யுத்தத்தின் சட்டமீறல்கள் மற்றும் ஈராக்கியர்களின் படுகொலைகள், யுத்தத்திற்கான அரசியல் காரணங்கள் மற்றும் எரிபொருள் தேவை... இது போல எத்தனை எத்தனையோ குறித்து ஒரு படத்தை நீங்கள் உருவாக்க முனைந்தால்... மாறாக, அது அனுமானமாக தான் அமையும்.

ஆகவே தான் யுத்தத்தில் இருந்த தனியார்மயமாக்கம், வன்முறையைத் தனியார்மயமாக்கியது மற்றும் எவ்வாறு அது மறைக்கப்பட்டிருக்கிறது என்பனவற்றையும் குறித்தும் நாங்கள் பேசினோம். அத்துடன் எவ்வாறு எவரும் அதை விரும்பவில்லை என்பதையும், தேர்தல் ஆணையம் "இது தான் எங்களுக்கு வேண்டும்" என்று ஒருபோதும் கூறவில்லை என்பதையும் எடுத்தாண்டோம். ஆனால் எவ்வாறிருப்பினும், அது தான் நடந்திருந்தது, அதாவது இராணுவ நடவடிக்கைகள் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

போல் [லாவர்டி] அந்த இஃபெர்கஸ் என்ற கதாபாத்திரத்தைப் படைத்திருந்தார். அது தான் தொடக்க-புள்ளி என்று நினைக்கிறேன். ஒரு முன்னாள் சிப்பாயாக இருந்த அவர், ஒரு தனியார் இராணுவ ஒப்பந்த நிறுவனத்திற்காக பணியாற்ற செல்கிறார். அதன்பின்னர் தான் ஒரு நண்பரின் மரணத்தைக் குறித்த யோசனை போலுக்குத் தோன்றியது. அந்த மரணத்தைக் குறித்த விசாரணையும், அந்த விசாரணையின் போக்கும் யுத்தத்தை தனியார்மயமாக்கியதை குறித்து கூற வேண்டிய அனைத்தையும் பொருத்தமாக வெளிக் கொணர்ந்தது.

டேவிட்: இதுவொரு சிக்கலான மற்றும் சவாலான அணுகுமுறையாக உள்ளது.

கென்: உண்மை தான். இதுவொரு கடினமான படமாக, வெளியிடுவதற்கும் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய படமாக அமையும் என்பதை நாங்கள் எப்போதும் புரிந்து கொண்டிருந்தோம் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் உடனடியாக அனுதாபத்தைப் பெற முடியாத ஒரு கதாநாயகனை நீங்கள் கையாள்கிறீர்கள். மேலும் அவருடைய சிதைவு, அவர் பின்னர் பெற்ற உளவியல்ரீதியான அழுத்தம் ஆகிவற்றையும் அது கையாள்கிறது. இறுதியில் அனுமானிக்க முடியாத "பைத்தியக்கார நடிப்பு" நிறைய எங்களுக்குத் தேவைப்பட்டதால், படம் எடுக்கப்பட்டு கொண்டிருந்த போது, நடிகர்களின் நடிப்பை தீர்மானிப்பதில் நான் சிக்கலை உணர்ந்தேன். “பைத்தியக்காரத்தனத்தில்" அம்மாதிரியான நபர்கள் காட்டும் அந்த அனைத்து அறிகுறியையும் மார்க் மிகவும் உள்ளார்ந்த முறையில் நடித்திருக்கிறார்―அது தேவையானதை வெளிப்படுத்தி இருப்பதாகவே நான் நம்புகிறேன்.

வேறொரு விஷயமும் சவாலாக இருந்தது.... யுத்தம் குறித்த திரைப்படங்களில் ―அவை வியட்நாம் குறித்தவையாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு நாடுகள் ஈடுபட்ட ஏனைய பிற யுத்தங்களாக இருந்தாலும் சரி― உண்மையிலேயே பலவீனமாக இருப்பதாக நாங்கள் நினைத்த விஷயங்களில் ஒன்று என்னவென்றால், எப்போதுமே யுத்தங்கள் மேற்கத்தியவர்களுக்கு, குறிப்பாக அமெரிக்கர்களுக்குத் துக்கத்தை அளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுவதாக நாங்கள் உணர்ந்தோம். உண்மையில், முதலாவதாகவும் முற்றிலுமாகவும், தாக்குதலுக்கு உள்ளான மக்களுக்கு அதுபோன்ற ஒரு யுத்தம் துக்ககரமானது தான்.

ஆங்கிலேயரான நம்முடைய அனுதாபி, அவருடைய சொந்த சோகத்தைக் கொண்டிருக்கிறார். ஆனால் ஈராக்கியர்கள் அதற்கும் மேலாக பாதிப்பை அனுபவித்தார்கள் என்ற உணர்வுடன் பார்வையாளர்கள் வெளியில் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதை சம அளவில் கொண்டு வர உண்மையிலேயே மிகவும் கடினமாக இருந்தது... ஏனென்றால் இந்த படத்தை எங்களால் ஈராக்கில் செய்ய முடியவில்லை―எனக்கோ அந்த மொழி பேசத் தெரியாது. அந்த உலகத்திற்குள் ஒரு திரைப்பட இயக்குனராக உங்களால் உள்ளேயே நுழைய முடியாது. ஆனால், இருந்த போதினும், ஈராக்கியர்கள் தான் அந்த சோகத்தை அனுபவித்தார்கள் என்ற உணர்விற்குள் பார்வையாளர்களை நாங்கள் கொண்டு வர விரும்பினோம். அதற்காக தான் அந்த தாயின், குழந்தையின் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன...


கென் லோச், போல் லாவர்டி

போல் லாவர்டி: இங்கே, உண்மையிலேயே முக்கியமான ஒன்றாக நான் கருதும் ஒருவிஷயத்தைச் சேர்க்க விரும்புகிறேன். இந்த பிரச்சினை முடிந்து போன ஒன்றாக, "ஈராக் பலவீனமாகிவிட்டதாக” மக்கள் பேசுவதை நீங்கள் கேட்கக்கூடும். குறிப்பிடத்தக்க தற்பெருமையுடன், டோனி பிளேயர் அவருடைய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் ஈராக்கில் என்ன நிகழ்ந்ததோ அதற்காக மேற்கு எவ்வாறு அதன் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் பேசுகிறார். அவர் நிறைய கூறுகிறார்... மேற்கின் மூலமாக, அவர் அவரையும் இங்கிலாந்தையுமே குறிப்பிடுகிறார்.

“இப்படி நடக்கும் என்று நான் காணவில்லை; இதுவொரு பயங்கரமான சிக்கல் தான்; உண்மையிலேயே இதற்காக நான் வருந்துகிறேன்,” என்று பிளேயர் கூறுகிறார். ஆனால் இதன் விளைவாக, அடுத்த 10 ஆண்டுகளில் என்ன நடக்க இருக்கிறது? நாங்கள் ஒரு பெரும் ஆய்வை மேற்கொண்டோம்; அத்துடன் முன்னாள் சிப்பாய்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுடன் நிறைய நேரம் செலவிட்டோம். அத்தகைய அமைப்புகளில் ஒன்று COMBAT STRESS என்றழைக்கப்படுவது. ஏனைய யுத்தங்களில் இருந்து, முதல் வளைகுடா யுத்தத்தில் இருந்து, அயர்லாந்தில் இருந்து, இன்னும் ஏனையவைகளில் இருந்து வந்த மக்கள் அதில் இருந்தார்கள் என்பதே குறிப்பிடத்தக்கதாகும். “அடுத்த தசாப்தத்தில் சிகிச்சைக்குப் பிந்தைய அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பெரும் அலையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று பணியாளர்கள் தெரிவித்தார்கள். மேலும் மக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதை அவர்கள் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

நம்முடைய சமூகங்களில் உள்ள சிப்பாய்களின் தலைகளில் யுத்தம் திரும்பி வருகிறது. மீண்டும், அது ஈராக்கின் முற்றிலுமான சீரழிவுடன் ஒப்பிட முடியாத ஒரு சோகமாகும். ஆனால் அது தான் நடக்க போகிறது.

டேவிட்: அது தான் நான் கேட்க இருந்த அடுத்த கேள்வியாக இருந்தது. நிச்சயமாக, பிரிட்டனுக்கு யுத்தம் திரும்ப வரப்போகிறது என்பதையே படம் விளக்குகிறது.

கென்: நாங்கள் வெளிப்படுத்த விரும்பிய இன்னொரு கருத்து இது. நிச்சயமாக போலின் திரைக்கதையின் நோக்கத்தில் அதுவும் இருந்தது. அதாவது, பிரிட்டனுக்கு ஒரு யுத்தத்தைக் கொண்டு வந்து காட்டுவது, உள்நாட்டில் யுத்தத்தின் உண்மையான தாக்கத்தை கொண்டு வந்து காட்டுவது. இதைத் தான் சித்திரவதையும், அதன்பின்னர் வரும் கார் வெடிகுண்டு வெடிப்பும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இங்கே விளைவுகள் இல்லாமல் அங்கே அவற்றை எல்லாம் நீங்கள் செய்துவிட முடியாது.

டேவிட்: “என்னால் வித்தியாசமான மக்களாக இருக்க முடியாது" என்று கதாபாத்திரம் கூறுகிறது. பிராங்கி மற்றும் ஃபேர்கஸூம் அவர்களுக்கு அவர்களே கொடூரமான சுமைகளைச் செய்திருப்பதால், அவர்கள் செய்யும் பயங்கரமான விஷயங்கள் அந்த கதாபாத்திரங்களுக்கு பொருந்தாத வகையில் படத்தின் காட்சிகளில் இருப்பதாக தோன்றுகிறதே.

லாவர்டி: சுவாரசியமான கேள்வி. நாங்கள் நிறைய முன்னாள் சிப்பாய்களோடு பேசினோம், தொடக்கத்தில் இத்தகைய மையங்களில் ஒன்றில் நான் நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். பல்வேறு உரையாடல்கள் மனதிற்குள் வந்தன. ஆனால் ஃபேர்கஸின் கதாபாத்திரத்திற்குப் பொருந்தக்கூடிய பல கருத்துக்களும் அவற்றில் இருந்தன. நான் ஒருமுறை ஒரு வயதான செவிலிய பெண்ணோடு பேசிக் கொண்டிருந்தேன். உணர்வுபூர்வமாக குழம்பிப்போயிருந்த முன்னாள் சிப்பாய்களோடு அவர் அவர்தம் வாழ்க்கையை கழித்திருந்தவர். நான் அவரிடம், 'அவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் ஏதாவது உண்டா?' என்று கேட்டேன். அவர், “ஆம் உண்டு, அவர்கள் அனைவரும் அவர்களின் முந்தைய நாட்களின் துக்கங்களில் மூழ்கி இருக்கிறார்கள்" என்று சொன்னார்.

முதல் ஈராக் யுத்தத்திலிருந்து இருந்து வரும் ஒருவரை நான் பார்த்தேன். உண்மையில் அவர் கொன்ற மக்களைப் பார்த்து அவரே ஒட்டுமொத்தமாக துக்கத்தில் இருந்தார். அத்துடன் அவர் அவர்களைப் படமும் எடுத்து வைத்திருந்தார். அவற்றிற்கு கீழே, “என்னுடைய பழைய சுயம் எனக்குத் திரும்ப வேண்டும்" என்று எழுதியிருந்தார்.

கென்: நீர் குறிப்பிட்டிருந்த அந்த வரி, பொதுவாக நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. நாம் யாரோடு இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நாம் வேறுபட்டவர்களாக இருக்கிறோம். நீங்கள் சிலரோடு நன்கு பழகுபவராக இருக்கலாம், ஆனால் எல்லோருடனும் அவ்வாறு முடியாது.

ஆம், மக்களும் கொடூரமான விஷயங்களில் ஈடுபடுவார்கள் என்பதைக் குறிப்பிட்டுக் காட்ட நாங்கள் விரும்பினோம். சூழ்நிலையும், கலாச்சாரமும், பொதுவான நிலைமைகளும் அதைத் தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் போது, நீங்கள் என்ன செய்வீர்கள். இவ்வாறான விஷயங்களை செய்யச் சொல்லி கலாச்சாரமும், சமுதாயமும் அவர்களை நிர்பந்திக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னால், தேசிய சேவைகளில் நாங்கள் ஈடுபட்டபோது, ஓர் எதிர்தரப்பு சிப்பாயைக் குத்துவதென்பது சாதாரணமான ஒரு இராணுவ பயிற்சியாக இருந்தது. அதை நீங்கள் நிறைய முறை செய்திருப்பீர்கள். துப்பாக்கி முனையில் இருக்கும் கத்தியை ஒருவர்மீது சொருகி, அதை திருகி, பின்னர் வெளியில் எடுத்திருப்பீர்கள். அந்த நிலைமை உங்களை அவ்வாறு மாற்றியது... நல்லது. நம்மால் நாம் விரும்பியபடி மாற முடியாது, ஏனென்றால் சவால்களை எதிர்கொள்ள முடியாத சிறுகுழந்தைகளின் நம்பிக்கையற்ற தொகுப்புகளால் நாம் இருக்கிறோம்... ஆனால் நிலைமை உங்களை வேறேதோ ஒன்றிற்குள் மாற்றியது என்பது தான் தத்துவமாக இருந்தது.

ஜோஆன் லோறியர்: ஏனென்றால் யுத்தம் ஒரு கொச்சை மொழியில் காலனித்துவமாக யுத்தமாக இருக்கிறது. ஒரு விதத்தில் சிப்பாய்கள் இதில் வஞ்சிக்கப்படுகிறார்கள். யுத்தத்தின் தன்மை அதற்கே உரிய ஒரு முழுமையான விளைவைக் கொண்டிருக்கிறது. அல்ஜீரியா, வியட்நாம்...

டேவிட்: சில காலமாக நான் இந்த வேலையைத் தான் செய்து வருகிறேன். திரைப்பட இயக்குனர்களோடு நான் பேசும் போதும், அவர்கள் வியந்து போற்றும் நபர்களைக் குறித்து அவர்களை கேட்கும் போதும், பெரும்பாலும் உங்களுடைய பெயர் வந்துவிடுகிறது. கொள்கைக்காக நிற்பவராகவும், சமூக பிரச்சினைகளிலும், தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியிலும் ஆர்வம் கொண்டிருப்பவராகவும் நீங்கள் மக்களால் பார்க்கப்படுகிறீர்கள். ஒரு வித்தியாசமான காலக்கட்டத்தில் இந்த பணியைத் தொடர எந்த வரலாற்று, கலைத்துவ முன்னோக்கு உங்களை அனுமதித்தது என்பது குறித்து ஏதேனும் உங்களுக்குக் கருத்து உண்டா?

கென்: இரண்டு நடைமுறை விஷயங்கள் எனக்கு உதவின என்று நான் நினைக்கிறேன். முன்னர் ஓரளவிற்கு வெற்றிகரமானதாக பார்க்கப்பட்ட இரண்டு விஷயங்களை ஒரேயொருவர் இயக்கி வந்தார், அதாவது தொழில் உலகில் ஏதோவொரு வகையில் நான் வாங்கப்பட்டிருந்தேன் என்பதைத் தான் அது குறித்தது. ஒன்று திரைப்படம் Kes, மற்றொன்று Cathy Come Home தொலைக்காட்சி தொடர். ஆகவே அவை கடந்த பல ஆண்டுகளுக்கு ஓர் அழைப்பு அட்டையாக இருந்தன. அவ்வாறு தான் அவை உதவின.

எழுத்தாளர்களுடன், முதலில் பேரி ஹைன்ஸூடன், பின்னர் ஜிம் அலேனுடன், பின்னர் அங்கே இருந்த அவருடைய கோமானுடன் பணியாற்றி வந்தது தான் அந்த மொத்த நிகழ்ச்சியையும் ஒரே பாதையில் வைத்திருந்த ஓர் ஒழுங்கமைப்பாக இருந்தது. விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு நல்ல குழுவைக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் "எனக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை" என்று நினைக்கும் போது, அது உங்களுக்கு உதவும். ஏனென்றால் அங்கே அதேபோன்ற பகுப்பாய்வை, அதே கருத்தை வேறொருவரும் கொண்டிருப்பார். அது உதவிகரமாக இருக்கும். இரண்டு திசைகளிலுமே இது உண்மை என்று தான் நான் நம்புகிறேன். ஆகவே நீங்கள் எங்கே போய் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் ஒரு சமயோசித உணர்வை நீங்கள் கொண்டிருப்பீர்கள்.

அது மிகவும் முக்கியமானது. மற்றொரு விஷயம், சிக்கலான அமைப்புமுறையினூடாக படத்திற்கு நிதியளிக்க தங்களின் பாதையை ஏற்படுத்தும் தயாரிப்பாளர்களுடன் வேலை செய்வது. நிதி ஏற்பாடு செய்வதற்கு நாங்கள் ஒரு முறையைக் கண்டறிந்தோம். ஓரளவிற்கு எங்களுக்குச் சிறப்பைத் தேடித்தந்த நாடுகளில் இருந்து, குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இத்தாலி, மற்றும் ஓரளவிற்கு ஸ்பெயினில் இருந்தும், ஓரளவிற்கு ஜேர்மனியிலிருந்தும் கூட நிதி கிடைத்தது. ஏனென்றால் நாங்கள் படங்களில் நிறைய பணத்தை வாரி இறைக்கவில்லை. நாங்கள் போதியளிவிற்கு பணத்தைச் சேகரித்தோம். அவை பின்னர் அவற்றிற்குரிய பணத்தையும், அதையும் விட சற்று கூடுதலாகவும் சேகரித்தன. ஆகவே படத்திற்கு தேவையான பொருளாதார ஸ்திரத்தன்மை கிடைத்தது. பின்னர் அது தொடர்ந்து கொண்டிருந்தது. எங்களின் இரண்டு அல்லது மூன்று படங்கள் வர்த்தரீயில் தோல்வி அடைந்திருந்தால், நிச்சயமாக நாங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்போம். மேலும் பெரும் அதிஷ்ட கூறுபாடுகள் நம்மை வந்தடையாமலேயே போயிருக்கும்.

ஜோஆன் லோறியர்: உங்கள் படத்திற்கென இரசிகர்கள் இருக்கிறார்கள். மக்கள் உங்கள் படங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பொறுப்பைக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். வெளிப்படையாக கூற வேண்டுமானால், இதை அவர்களால் வேறெங்கும் பார்க்க முடியவில்லை.

டேவிட்: ஆம், நீங்கள் அந்த சிக்கலை தெளிவாகவும் விரைவாகவும் கடந்து விட்டீர்கள். அதுவொரு வரலாற்றுரீதியிலான பகுப்பாய்வு. எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, பெரும்பாலான மக்கள் 1970இல் இருந்து பாதையிலிருந்து விலகிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த காலகட்டத்தில் இடதுசாரிகளாக இருந்தார்கள். ஆனால் நீங்கள் குறிப்பிட்டளவிற்கு முன்னோக்கைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கென்: அந்தளவிற்கு அது கடுமையானதல்ல. அப்போதைய நிகழ்வுகளில் அதற்கு குழிபறிக்கப்பட்டது, அப்படித்தானே? ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வருடத்திலோ.... நம்பிக்கை காலக்கெடு முடிந்துவிட்டதென்றால், விஷயங்கள் மீண்டும் அதை திணிக்கின்றன. யுத்தம் உங்களின் மீது பகுப்பாய்வைத் திணிக்கிறது; தற்போதைய மாற்றங்கள் அதை திணிக்கின்றன. பொருளாதார பொறிவு அதை திணிக்கிறது. காலத்திற்குக் காலம் அது நிரூபிக்கப்படுகிறது. ஆமாம், வாழ்க்கை அதை எடுத்துக்காட்டுகிறது.

போல்: அவர் மிகவும் எளிமையானவர். 40 ஆண்டுகளுக்கு இதை செய்து கொண்டிருக்க வேண்டுமானால், அதன்மீது நீங்கள் ஓர் ஆழமான உணர்வையும், பொறுப்பையும் ஏற்று கொண்டிருக்க வேண்டும். கடுமையாக நீங்கள் வேலை செய்ய வேண்டியதிருக்கும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

கென்: சரியான வேலை இல்லாமல் இருப்பது தான் உன்னுடைய பிரச்சினை என்று என் தந்தை சொல்வதுண்டு.

டேவிட்: தற்போதைய நிலைமைகளில் சோசலிச திரைப்பட இயக்குனர்களுக்கு ஏதேனும் சிறப்பு பொறுப்புகள் அல்லது கடமைகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

கென்: அவசரமாக செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் நாம் எவ்வாறு கையாளப்போகிறோம் என்பது நமக்கு தெரியவில்லை. நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் இங்கே எல்லாவிதமான விஷயங்களையும் சொல்ல வேண்டும். இதை திரைப்பட வார்த்தைகளில் எப்படி கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை.

எல்லா விஷயங்களுக்கும் அப்பாற்பட்டு, பொறுப்புகளை தோளில் சுமப்பது உங்களுடைய கடமையாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

போல்: பல அருமையான கதைகள் உள்ளன. ஆனால் அந்த விஷயத்திற்குள் மனிதப் பாதையை கண்டறிவது... மிகவும் சிக்கலானதாகும்.

கென்: “விளங்கப்படுத்துவதற்காக" நாங்கள் முன்னனி விமர்சகர்களின் ஏச்சுபேச்சுக்கும் கூட ஆளாகி இருக்கிறோம். ஆனால் நம்பமுடியாத அளவிற்கு விளங்கப்படுத்தக்கூடிய ஜனரஞ்சக படங்களையும் நீங்கள் பார்க்கலாம். அவற்றைக் குறித்து நீங்கள் எதையும் சொல்லவே பயப்படுவீர்கள். ஏனென்றால் அவை பெருங்கூச்சலுடனும், எளிமையாகவும் இருக்கும். அவை அவற்றோடு தான் ஓடுகின்றன.

போல்: வாழ்க்கையின் ஆழமான விஷயங்களைக் கையாளும் எந்த படமும் மந்தமாக தான் இருக்கிறது என்று கூறும் விமர்சகர்களும் இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். அவை வெறுமனே போதிக்கின்றன; அவை விஷயத்திற்குள் இருக்கும் முரண்பாடுகளைக் காண்பதில்லை; நாங்கள் ஒரு படத்தை உருவாக்க முயற்சிக்கும் போது, மல்லுக்கட்ட வேண்டியதிருக்கிறது.

ஜோஆன் லோறியர்: அந்த பிரதிபலிப்பில் ஒரு வர்க்க எதிர்நடவடிக்கை இருக்கிறது. அவர்கள் வேறு ஏதோவொன்றை எதிர்பார்க்கிறார்கள்.

கென்: நல்லது, மைக்கேல் கோவ் இருக்கிறார்; இப்போது அவர் ஒரு கபினெட் மந்திரியாக இருக்கிறார். THE WIND THAT SHAKES THE BARLEY [அயர்லாந்து உள்நாட்டு யுத்தம் குறித்த திரைப்படம்] வெளியான போது அது குறித்து அவர் என்ன சொன்னார்? அயர்லாந்தினர் எப்போதுமே ஒரு ஜனநாயக வாய்ப்பை மறுத்திருந்தார்கள் என்று கூறினார்.

போல்: அவர் அந்த படத்தைப் பார்த்திருக்கக்கூட மாட்டார். அவர் தலையில் ஏற்றிக்கொண்டிருக்கும் வரலாற்றில் இருந்து அவர் பேசுகிறார். பொய் பேசும் ….. (இங்கே போல் மிகவும் அநாகரீகமான வார்த்தையைப் பயன்படுத்துகிறார்). கென்னையும், லெனி ரிபென்ஸ்டஹிலையும் [நாஜிக்களுக்கு ஆதரவான திரைப்பட இயக்குனர்] ஒப்பிட்ட செய்தியாளரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

டேவிட்: சுவாரசியமாக இருக்கிறதே!

கென்: ஆமாம், நான் லெனி ரிபென்ஸ்டஹிலையும் விட மோசமான பிரச்சாரகர் என்று அவர்கள் எழுதினார்கள். இந்த விமர்சனத்தில் எனக்கு மனவருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், அவர்கள் படத்தின் சாராம்சத்தைக் கையாள மாட்டார்கள். எடுத்துக்காட்டாக, ஈராக் யுத்தத்தைக் குறித்து ஒரு புத்தகம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது என்றால், அது புத்தகத்தையும், அதன் உள்ளடக்கத்தையும், யுத்தத்தின் உந்துசக்திகளையும், அதன் விளைவுகளையும் சார்ந்தே விவாதத்தைக் கொண்டு செல்லும். ஆனால் அவற்றில் எதைக் குறித்தும் சிறிதும் விவாதிக்காத ஒன்றை, முன்னணி பத்திரிகையின் ஒரு மதிப்பாய்வில் நம்மால் பார்க்க முடியாது.

நிறைய வர்க்க விரோதம் நிலவுகிறது என்று நான் நினைக்கிறேன். அதேநேரத்தில் "இடதில்", தற்போதைய உத்வேகம் மற்றும் தற்போதைய மனோபாவத்தைக் கைக்கொள்ள முடியாத, காலத்திற்குப் பொருந்தாத, பழைய மாதிரியிலான ஓர் அச்சம் இருக்கிறது. “HIP” (உத்வேகம்) என்பதற்கு இப்போதைய வார்த்தை என்னவாக இருந்தாலும், அவ்வாறு இருப்பதற்கான அழுத்தம் இருக்கிறது என்பது இன்றைய நிமிடம் வரைக்கும் புரிந்து வைத்திருப்பது, பற்றற்று இருப்பது, தணிந்து இருப்பது, தீவிர வெறியோடு இல்லாமல் இருப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது என்பதாக இருக்கிறது. அதை தான் நாங்கள் செய்கிறோம்.