World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Pseudo-left critics of French unions sow demoralization about strikes

பிரெஞ்சுத் தொழிற்சங்கங்களின் போலி இடது விமர்சகர்கள் வேலைநிறுத்தங்கள் குறித்து குழப்பத்திற்கு வித்திடுகின்றனர்

By Alex Lantier
8 November 2010

Back to screen version

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரான்சில் கடந்த மாதம் நடைபெற்ற எண்ணெய்த்துறை வேலைநிறுத்தமானது ஐரோப்பாவில் வர்க்க உறவுகள் குறித்த திறனாய்வு அளவுகோலை கொடுக்கிறது. சமூகச் செலவு வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களுக்கு பெரும் மக்கள் ஆதரவைக் காட்டியுள்ளதுடன், தொழிற்சங்கங்கள் மற்றும் “தீவிர இடது” அரசியல் கட்சிகளின் அழுகிய தன்மையையும் புலப்படுத்தியுள்ளது. வெளிப்படையாக எண்ணெய் இருப்புக் கிடங்குகள் வேலைநிறுத்தங்கள் பொலிசாரால் முறியடிக்கப்பட்ட பின்னரும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்போ (CGT), புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியோ (NPA) எண்ணெய்த்துறை தொழிலாளர்களை பாதுகாத்து, சார்க்கோசியின் செல்வாக்கற்ற வெட்டுக்களுக்கு எதிராக தொழில்துறை நடவடிக்கைக்கு அணிதிரட்டவில்லை.

NPA யின் செய்தித்தொடர்பாளர் ஒலிவியே பெசன்ஸெநோ வேலைநிறுத்தக் காலத்தில் பெரும்பாலும் மௌனமாக இருந்தார். ஒரு NPA யின் உயர்கல்வியாளர் பொலிசுக்கு எதிரான “விளையாட்டுத்தனமான” எதிர்ப்புக்கு வாதிட்டார்.

இந்த வேலைநிறுத்தம் பல போலி சோசலிஸ்ட் அல்லது அராஜகவாத குழுக்களின் திவால்தன்மை, ஏமாற்றுத் தன்மை ஆகியவற்றையும் அம்பலப்படுத்தியுள்ளது. அவை “தீவிர இடது” கட்சிகள் என்று பாராட்டப்பட்டு, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அதிக நிலைத்த “விமர்சகர்கள்” போல கூறப்பட்டது. சமூகநல வெட்டுக்களுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டத்தை ஒரு சோசலிச மாற்றீட்டை பிரதிநிதித்துவப்படுத்தி தொடர்வதற்கு பதிலாக இவை மூடி மறைத்துக் கொள்கின்றன அல்லது தீவிர தொழில்துறைப் போராட்டத்தின் முதல் தொடக்கத்திலேயே சரணடைய வேண்டும் என்று உபதேசிக்கின்றன.

இது குறிப்பாக NPA க்குள் உள்ள இரு குழுக்களான Clear Tendency மற்றும் Prometheus இல் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. அவை கடந்த ஆண்டு CGT ஐ, கார்த்தொழிற்துறையில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களை விமர்சித்தும் தனிமைப்படுத்தியும் டிசம்பர் மாதம் அதன் 49வது மாநாட்டை நடத்தியது. அதாவது இன்னும் போராளித்தனமான தொழிற்சங்கங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில்.

ஆர்ஜென்டீனிய சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியுடன் (PTS) இணைந்துள்ள NPA ல் இருக்கும் ஒரு போக்கான Clear Tendency, “வர்க்க முழு நனவுடைய தொழிற்சங்க முறையை” வளர்ப்பதாகக் கூறப்படுவதுடன், “ஒரு புரட்சிகர முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் தேவையையும்” வலியுறுத்துவதாகக் காட்டிக் கொள்கிறது. ஆகஸ்ட் 3ம் திகதி அது ஒரு அறிக்கையை வெளியிட்டதில், அதில் “செப்டம்பர் மாதம் நமக்கு ஒரு இலக்குத்தான்: ஓய்வூதிய சீர்திருத்தத்தை திரும்பப் பெறக் கட்டாயப்படுத்தும் விதத்தில் ஒரு பொது வேலைநிறுத்த தயாரிப்புத்தான் அது.” ஆனால் இதுதான் அவர்கள் வெளியிட்ட கடைசி அறிக்கையாகப் போய்விட்டது.

உண்மையில் வேலைநிறுத்தங்கள் நடந்து கொண்டிருந்தபோது, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் Clear Tendency பாதுகாப்பாக பார்வையில் இருந்து மறைவாகப் போயிற்று. சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு எதிராக ஒரு அரசியல் முன்னோக்கைப் பெற வேண்டும் என்று முயலும் தொழிலாளர்களுக்கு அல்லது சார்க்கோசிக்கு எதிராக ஒரு பொது வேலைநிறுத்தத்தைக் கட்டமைப்பது குறித்து, Clear Tendency யிடம் கூறுவதற்கு ஏதும் இல்லை.

ஆனால் Prometheus குழு ஒப்பிடுகையில் Clear Tendency காட்டிலும் இன்னும் தோற்றத்தில் தைரியசாலியாகக் காட்டுகிறது. தன்னுடைய இலக்கு “அனைத்துச் சூழ்நிலையிலும் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக அரசியல் சுயாதீனம் அடைதலை உறுதிபடுத்திப் பாதுகாத்தல்” என்று அறிவித்த பின்னர், இதன் வலைத் தளம் மே மாதத்தில் இருந்து வலைத் தளத்தில் அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டது.

இந்த நம்பமுடியாத “புரட்சிகர குழுக்கள்”, ஜனாதிபதி சார்க்கோசிக்கு எதிராகத் தொழிலாளர்களால் இயக்கப்பட்ட மிகத் திறமையான வேலைநிறுத்தங்கள் பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை என்பதற்கு இவற்றின் அரசியலில் தீவிரமற்ற தன்மையா அல்லது அரசியல் கோழைத்தனமா எது பெரிய பங்கு கொண்டிருந்தது என்பதைக் கூற இயலாது.

தொழிற்சங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அவற்றின் முன்னோக்கு, அல்லது தொழிற்சங்க வகையிலான செயற்பாடுகளுக்கு புது ஊக்கம் கொடுப்பது என்பது திவால்தன்மையில்தான் உள்ளது. ஒரு பெரிய சமூகநல வெட்டுக்களைத் தவிர வேறு எதிலும் தான் கையெழுத்திடுவதாக இல்லை என்று சார்க்கோசி தெளிவுபடுத்திவிட்டார். உலக சோசலிச வலைத் தளம் விளக்கியுள்ளதுபோல், தொழிலாளர்களை எதிர்கொள்ளும் பணியானது நடைபெறும் இப்போராட்டங்களில் தொழிலாளர்களை பாதுகாப்பதில் ஈடுபடல் மற்றும் சார்க்கோசி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு வெகுஜன அரசியல் வேலைநிறுத்தங்களுக்காக போராடுதல் என்பதாகும். இதுதான் சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு ஒரு தொழிலாளர் அரசாங்கத்தைக் கட்டமைக்கும் போராட்டத்திற்கு அரங்கு அமைக்கும்.

ஆனால் தொழிற்சங்கங்களுடைய அராஜகவாத “விமர்சகர்களின்” நோக்குநிலை முற்றிலும் வேறானது. தொடர்ந்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியிட்டவர்கள் வெறுப்பு மனப்பான்மையுடன் தொழிலாளர்களுக்கு எப்படிக் கூட்டங்கள் நடத்துவது என்று உபதேசித்து, சார்க்கோசியுடன் ஒரு மோதலை ஏற்படுத்தும் எத்தகைய போராட்டத்திற்கும் ஊக்கம் கொடுக்கவில்லை.

சர்வதேச கம்யூனிச போக்கு (CCI), அதன் வெளியீட்டில் ஒன்றான International Revolution என்பதை வெளியிட்டது. இதில் “நம் போராட்டங்களில் எப்படி இறுக்கமான பிடியைக் கொள்வது என்ற பிரச்சினை முழுதாக விவாதிக்கப்பட்டது.” முக்கிய கட்டுரை குறிப்பிட்டது: “இந்த இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லை என்பதை அனைவரும் உணர்கின்றனர். இந்த “ஏதோ ஒன்று” தொழிலாளர்கள் தங்கள் சொந்தப் போராட்டத்தின் மீது தாங்களே கட்டுப்பாட்டைக் கொள்வதாகும்.”

மார்க்சிஸ்ட்டுக்கு, இதன் பொருள் தொழிற்சங்கங்கள் மற்றும் அழுகிய குட்டி முதலாளித்துவ “இடது கட்சிகளுடன்” இரக்கமற்ற முறையில் முறித்துக் கொண்டு சார்க்கோசியின் அரசாங்கத்தை தொழிலாளர்கள் வீழ்த்துவது என்பதாகும். CCI ஐப் பொறுத்த வரை—பாட்டாளி வர்க்கத்திற்கு புரட்சிகரத் தலைமையாக ஒரு புரட்சிகரக் கட்சி என்னும் லெனினிச கோட்பாட்டை எதிர்க்கும் இக்குழு—இப்பிரச்சினை “தொழிற்சங்கப் பொது மன்றங்களில் இல்லாமல் முழு இறைமையுடன் நம்மை நாமே அமைத்துக் கொள்ள முயலுதல்” என்பதாகும்.

இந்த வேறுபாட்டை அதன் வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு உதவியாக CCI, அராஜகவாத-சிண்டிகலிச தேசியத் தொழிலாளர் கூட்டமைப்பின் (CNT) கட்டுரை ஒன்றை மறுபிரசுரிப்புச் செய்து, “எப்படிப் போராடுவது? ஒரு தன்னாட்சி மக்கள் எதிர்ப்பிற்காக” என்ற தலைப்பில், மறு பிரசுரம் செய்தது. தொழிலாளர் தடுப்புக்களை Fos எண்ணெய்க் கிடங்கில் பொலிசார் முதலில் முறியடித்த ஐந்து நாட்களுக்கு பின்னர் அக்டோபர் 20ம் தேதி CCI அதன் அறிக்கையை வெளியிட்டது; அப்பொழுது எண்ணெய்த்துறை வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருந்தது.

மற்ற தொழிற்சங்கங்கள் “சமூக அமைதியை பாதுகாக்கத்தான்” முயல்கின்றன என்று அவற்றைக் கண்டித்த CNT, “இதற்குக் காரணம் எளிது. அவை அரச எந்திரத்தின் ஒரு பகுதியாகும், அவற்றின் ஊழியர்கள் அதில் கருவிகளாக உள்ளனர்—நிறுவனக் குழுக்களில், நிர்வாகக் குழுக்களில், மருத்துவக் காப்பீட்டு முறையின் இணை முகாமைத்துவம், ஓய்வூதிங்கள், இன்னும் பல காப்பீட்டுத் திட்டங்களிலும், பல மாறுபட்ட காரணங்களுக்காக பெரும் உதவி நிதிகளை பெறுகின்றன (தொழிற்சங்கப் பயிற்சி, காங்கிரஸுகள் என), நாம் அப்பட்டமான இலஞ்சத்தையும் மறந்துவிடக் கூடாது (அதுவும் UIMM முதலாளிகள் கூட்டமைப்பு கொண்டுள்ள கறுப்புப் பணக் கணக்குகளில் இருந்து.)” என்றும் சேர்த்துக் கொண்டது.

ஆயினும்கூட, ஸ்தாபனமயப்பட்ட தொழிற்சங்கங்கள் செய்யும் அதே செயற்பாடுகளைத்தான் இதுவும் முன்வைத்தது. தொழிற்சங்கங்களின் பங்கு அரச கருவியில் ஒரு பகுதி என்ற முறையில் என்று அதைப்பற்றி இப்பொழுதுதான் அது கூறியது. மேலும் மன்றங்களின் நிர்மாணிப்பிற்கு அது அழைப்பு விடுத்து “இதில் நாம் விவாதங்கள் நடத்த நேரம் கொடுக்க வேண்டும், முடிவுகள் எடுக்க நேரம் கொடுக்க வேண்டும், இந்த முடிவுகள் உரியனவாகவும் போராட்டத்தில் இருப்பவர்களுடைய முழு நனவுடன் வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும்.” மேலும் “எங்கும் உரத்த குரலில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும், கிட்டத்தட்ட எல்லா இடத்திலும்”, மற்றும் “தெரியும் இடங்களில் எல்லாம் பதாகைகள் வைக்கப்பட வேண்டும்” என்றும் கூறியது.

இத்தகைய திட்டங்கள் ஒற்றுமை இல்லாத தன்மைக்குக் குறிப்பிடத்தக்கவையாகும். இவை எண்ணெய்துறைத் தொழிலாளர்களை பொலிசின் வேலைநிறுத்த முறியடிப்பிலிருந்து பாதுகாக்க அக்கறை கொள்ளவில்லை. மேலும் சார்க்கோசிக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில் ஆழ்ந்த அக்கறையின்மையைத்தான் வெளிப்படுத்தியது. உண்மையில் CCI எண்ணெய்த்துறை வேலைநிறுத்தமே ஒரு மோசமான கருத்து என்று தான் நினைத்ததைத்தான் தெளிவுபடுத்தியது.

“எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தடுப்பிற்கு உட்படுத்துதல்—ஒரு இருமுனைக்கூர்மை உள்ள கத்தி” என்ற தலைப்பில் CCI எண்ணெய்த்துறை வேலைநிறுத்தத்திற்கு எதிரான சார்க்கோசி அரசாங்கத்தின் வாதங்களைத்தான் எடுத்துக் கொண்டு விளக்கியது; “ஒவ்வொரு நாளும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதற்கு எரிபொருள் கிடைக்காத பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.” “போக்குவரத்துத் துறையை முடக்குவது” என்பது, எனவே இயக்க முறையைப் பிளவுபடுத்தி முறிப்பது சார்க்கோசிக்கு மக்கள் எதிர்ப்பை கட்டமைப்பதற்கு எதிரானது என்னும் அச்சறுத்தலைக் கொண்டுள்ளது;” என்றும் CCI சேர்த்துக் கொண்டது.

விமர்சனமற்ற முறையில் சார்க்கோசி அரசாங்கத்தை எதிரொலிக்கும் விதத்தில் CCI ஒரு விவரத்தைத்தான் கூறவில்லை: வேலைநிறுத்தங்கள் பெரிதும் மக்கள் ஆதரவைக் கொண்டவை, மற்றும் அதன் பணி தொழிலாள வர்க்கத்தின் பரந்த தட்டுக்களின் ஆதரவைப் பெற வேண்டும் —அதற்கு மனத்தளர்வு ஏற்படுத்தக்கூடாது. இந்த வாதங்களிலுள்ள தர்க்கங்கள் பற்றி இது இன்னும் நேர்மையாக இருந்திருந்தால், CCI எவ்வித வேலைநிறுத்தத்திற்கு எதிராகவும் வாதிட்டிருக்கும். தாங்கள் வேலைநிறுத்தம் செய்யும் பெருநிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு எதிராக எப்பொழுதும் தொந்திரவு கொடுப்பதால், அவை செய்தி ஊடகத்தினால் குறைகூறப்படும் இடரை எதிர்கொண்டு எதிர்ப்பையும் சந்திக்கின்றனர்.

சார்க்கோசி அரசாங்கம் எரிபொருள் தட்டுப்பாடு பரவியதால் பீதியுற்றவுடன், CCI நம்பிக்கைத் தன்மையோடு தன் வாசகர்களுக்கு தொழிலாளர்கள் இனி “தங்கள் பணியிடங்களை தடைக்கு உட்படுத்தி தங்கள் முதலாளிகளை சலுகைகள் கொடுக்கக் கட்டாயப்படுத்த முடியாது” என்று தெரிவித்தது. இன்று “நிலைமை முற்றிலும் வேறுபட்டது”, CCI விளக்கம் கொடுத்தது; “தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை; அனைத்து மூலதனத்தையும், எல்லாவற்றிற்கும் மேலாக அதனது அரச சக்தியையும் எதிர்கொள்கின்றனர்.”

இதன் முடிவுரை, “உண்மையில் முதலாளித்துவத்திற்கு அச்சம் கொடுக்கும் ஒரே பொருளான போராட்டத்தை விரிவுபடுத்தும் இயக்கத்தை ஊக்குவிக்க தொழிலாளர்கள் அதிக கூட்டங்களை செய்ய வேண்டும்.”

இக்கூற்றுக்கள் “இடது” கட்சிகள் மற்றும் அவற்றின் பல தொங்குதசைகளின் வலதுசாரித்தன ஏமாற்றுவித்தையை அம்பலப்படுத்துகின்றன. இவற்றில் குழப்பமான சொல்லாட்சி வேறுபாடுகள் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அரசியல் போராட்டம் தேவை என்பதை மறைக்கின்றன. அதே நேரத்தில் போராட்டத்தை தளர்வுறச் செய்து, தொழிலாளர்களின் சக்தியை கூக்குரல் நிறைந்த, பயனற்ற எதிர்ப்புக்களில் கரைக்கின்றன. இது CGT ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புக்களில் இருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல. இவை அரச மற்றும் அதன் சிக்கனக் கொள்கைகளின் பக்கங்களிலான ஆதரவுகள்தாம்.