சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

UK and France forge military alliance

பிரிட்டனும் பிரான்ஸும் இராணுவ கூட்டை உருவாக்குகின்றன

By Julie Hyland
4 November 2010

Use this version to print | Send feedback

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோனும் பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு பற்றிய உடன்பாடுகளில் கையெழுத்திட்டனர். இது இரு நாடுகளுக்கு இடையே உள்ள இராணுவ உறவுகளில் ஒரு “புதிய அத்தியாயம்” என்று விவரிக்கப்படுகிறது.

உடன்பாடுகளில் உள்ள கட்டமைப்பில் உள்ள கீழ்க்கண்டவை அடங்கியுள்ளன:

• ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 5,000 படையினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இணைந்த கூட்டு முன்னோடிப் படை, பயிற்சிக்காகவும், தேவையானால் செயற்பாடுகளுக்காவும்.

• விமானங்களை எடுத்துச் செல்லுபவற்றை பகிர்ந்து கொள்ளுதல்: காரணம் கூட்டாக உடன்படும் செயற்பாடுகளுக்கு ஒரு “ஒருங்கிணைந்த தாக்குப் படையை” வருங்காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு.

• சைபர்-தாக்குதல்களை சமாளிக்க அதிக ஒத்துழைப்பு மற்றும் ஆளில்லாத வான்வழி ட்ரோன்களை அபிவிருத்தி செய்தல்.

• பயிற்சி, பராமரிப்பு, மற்றும் A4000M போக்குவரத்து விமானம் தொடர்பாக வளங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

அடுத்த 50 ஆண்டுகளில் அணுசக்தி பாதுகாப்பு, சோதனையில் ஒத்துழைப்பை பெருக்குவதற்கான பிரிட்டனில் சோதனைத் தொழில்நுட்பத்திற்கு ஒரு மையத்தை நிறுவவும் மற்றொன்றை சோதனை நடத்துவதற்கு பிரான்சில் நிறுவி அபிவிருத்தி செய்வது.

இந்த உடன்பாடுகள் “முன்னோடி இல்லாத தன்மை உடையவை” மற்றும் “வரலாற்றுச் சிறப்புடையவை” என்று பாராட்டப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக இருக்கும் விரோதப் போக்கின் பின்னணியிலும், குறிப்பாக அரசியல் பொருளாதாரத் துறைகளில் ஐரோப்பிய போக்கு இருக்கும் நிலை, பிரான்ஸ்-ஜேர்மனி கூட்டு மற்றும் இங்கிலாந்தின் அமெரிக்காவுடனான “சிறப்பு உறவுகள்” உள்ள நிலையில் அணுசக்தித் துறை ஒத்துழைப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 1960களில் பிரான்ஸ் தன்னுடைய சுயாதீன அணுசக்தித் தடுப்பு முறைகளை பெருக்கத் தொடங்கியது; ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோலின் கீழ் நேட்டோவில் இருந்தும் விலகியது.

சிக்கன நடவடிக்கை நேரத்தில் கடினமான நடைமுறையை ஒட்டிய விளைவாகத்தான் இந்த உடன்பாடுகள் அனைவராலும் விவரிக்கப்படுகின்றன. மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் உடன்பாடுகளை “சிக்கன இருதரப்பு உடன்பாடு” என்று கூறியுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஏனெனில் இரு நாடுகளும் பொதுச் செலவுகளைக் குறைக்க முற்படுகின்றன. பிரிட்டனின் பாதுகாப்பு மந்திரி, “இங்கிலாந்தும் பிரான்சும் கடுமையான நிதி நிலைமையின் உண்மைகளை எதிர்கொள்கின்றன, நம் சிறந்த நலன்களுக்கு நாம் ஒன்றாக உழைத்து திறன்களை வளர்ப்பதுதான் நம் நாடுகளுடைய தேவையாகும்” என்று கூறினார்.

பிரான்சில் பாதுகாப்புச் செலவுகள் 2012 மற்றும் 2025க்கு இடையேயான உண்மைக் கணக்கில் 1 சதவிகிதம்தான் உயர்கிறது. பிரிட்டனின் கன்சர்வேடிவ்/லிபரல் டெமக்ராட் அரசாங்கம் சமீபத்தில் ஒரு மூலோபாய பாதுகாப்பு ஆய்வை வெளியிட்டது; இதில் செலவினங்கள் 8 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளன; அவற்றுள் 17,000 இராணுவத்தினரின் பணிநீக்கமும் அடங்கும்.

இதன் விளைவாக, பாரிஸும் லண்டனும் செயற்பாட்டிற்கு என ஒவ்வொன்றும் ஒரு விமானம் தாங்கியான Charles de Gaulle மற்றும் Queen Elizabeth இனையே தசாப்தத்தின் இறுதியில் வைத்திருக்கும் 2020 ஐ ஒட்டி Queen Elizabeth விற்கப்பட்டுவிடும் அல்லது செயல்புரியாது. அப்பொழுது அதற்குப் பதிலாக புதிய விமானம் தாங்கியான HMS Prince of Wales செயல்படத் தொடங்கும். ஹரியர் தாக்குதல் விமானத்தை செயல்படுத்தப் போவதில்லை என்ற முடிவை ஒட்டி இங்கிலாந்து ஒரு தசாப்தத்திற்கு விமானம் தாங்கும் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தும் திறனைக் கொண்டிருக்காது.

இரு நாடுகளும் “இடைச் செயற்பாடுகளுக்கு” உடன்பட்டுள்ளன. இதில் ஒரு பிரிட்டிஷ் விமானம் தாங்கிக் கப்பல், உதாரணத்திற்கு, பாக்லாந்தில் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட முடியும், அதே நேரத்தில் ஒரு பிரெஞ்சு விமானம்தாங்கி ஆபிரிக்க கடலோரப் பகுதியில் செயல்புரியலாம். இதன் முக்கியத்துவம் நேட்டோ, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிற்கு இரு நாடுகளும் ஒன்றின் கப்பல் செயல்படாவிட்டால் மற்றொன்றின் கப்பல் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை அளிக்க முடியும்.

HMS Prince of Wales 2020 ஐ ஒட்டி பணியில் இறங்க உள்ளது; அப்பொழுது HMS Queen Elizabeth பாவனைக்கு உதவாததாகிவிடும் அல்லது விற்கப்பட்டுவிடும். Queen Elizabeth விமானம் தாங்கும் கப்பல் புதுப்பிக்கப்பட்டு குறைந்த தன்மை உடைய “catand trap” விமானங்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றப்படும். அவை தற்பொழுது பிரெஞ்சு, அமெரிக்க கடற்படைகளால் பயன்படுத்தப்படுகின்றன. இது பிரிட்டிஷ் விமானம் தாங்கும் கப்பலை பிரான்சின் Rafale ஜெட்டுக்களை ஏற்றிச் செல்ல வகை செய்யும்.

பிரான்ஸ், பிரிட்டனின் திட்டமிடப்பட்டுள்ள புதிய A330 ஏர் டாங்கர்களை வாடகைக்கு விடும் உடன்பாடு ஒன்றைத்தவிர, பாரிஸ் Charles de Gaulle ஐ மாற்றி அமைக்கும் திட்டத்தையும் கொண்டது. இதனால் அது 2010ல் இங்கிலாந்து வாங்க இருக்கும் புதிய கூட்டுத் தாக்குதல் விமான ஜெட்டுக்களைப் பயன்படுத்த முடியும். தன் Bréguet Atlantique கடலோர ரோந்து விமானத்தை பயன்படுத்தச் சொல்லவும் பாரிஸ் முன்வந்துள்ளது. இது இங்கிலாந்தின் முடிவான அதன் Nimrod ரோந்து விமானத்தை அகற்றிவிடுவதால் ஏற்படும் இடைவெளியை பூர்த்தி செய்யும்.

நிதியத் தடைகள் இரு நாடுகளையும் ஒன்றாகக் கொண்டுவந்ததில் பெரும் பங்கு கொண்டுள்ளன என்பதில் ஐயமில்லை. இராணுவச் செலவினங்களில் குறைப்புக்கள் இருந்தாலும் அவை பொதுவாக வேலைகள், ஓய்வூதியங்கள், பொதுநலச் செலவுகள் ஆகியவற்றின்மீது இங்கிலாந்திலும் பிரான்சிலும் நடத்தப்படும் தாக்குதல்களோடு ஒப்பிடும்போது மிகக் குறைவானவையே.

ஆனால் வரவு செலவுத்திட்ட கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், லண்டன் மற்றும் பாரிசின் நோக்கம் ஆப்கானிஸ்தானத்தில் தங்கள் இராணுவ ஈடுபாடுகளைத் தொடரும் திறனைத் தக்க வைத்துக் கொள்ளுதல் என்று உள்ளது. அங்கு அவை இரண்டாம் மற்றும் நான்காம் பெரிய இராணுவப் பிரிவுகளை வழங்கியுள்ளன. மற்றும் உலகெங்கிலும் இவற்றின் படைகள் உள்ளன. அவர்கள் நோக்கம் படைகளை இணைத்து தங்கள் உலகக் கொள்ளை நோக்கங்களைப் பாதுகாப்பதாகும்.

இங்கிலாந்தின் பாதுகாப்பு மீளாய்வு அறிக்கை “உலகில் காணப்படாத அளவிற்கு மிகத் திறனுடைய, அணுசக்தி உந்துதல் பெற்ற வேட்டையாடி-கொல்லும் நீர்மூழ்கிக்கப்பல் தொகுப்புக்களைப் பெறுவதற்கு” உறுதி செய்கிறது. அவை இரகசியமாக உலகின் பெருங்கடல்களில் செயல்படுகின்றன. Tomahawk க்ரூஸ் ஏவுகணைகள் நிலத்தில் உள்ள இலக்குக்கள் மீது செலுத்துகின்றன, மற்ற நீர்மூழ்கிக் கப்பல்களையும் சாதாரண கப்பல்களையும் தாக்கி கடல்பாதை திறந்திருக்குமாறு செய்கின்றன, அணுசக்தித் தடுப்புத் தளவாடங்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கின்றன, இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் உள்ள நம் இராணுவப் பிரிவுகளுக்கு மூலோபாய உளவுத்துறைத் தகவல்களைக் கொடுக்கின்றன.” எனக்குறிப்பிட்டுள்ளது.

பாரிஸும் லண்டனும் தங்கள் குறைந்துவிட்ட இராணவத் திறன் பற்றி தீவிரமாக உணர்ந்துள்ளன. இது அமெரிக்காவிற்கு எதிராக என்று இல்லாமல் சீனா போன்ற எழுச்சி பெற்றுவரும் நாடுகளின் படைகளுக்கு எதிராகவும் பொருந்தும். இன்னும் பரந்த அளவில், இப்பொழுது பிரச்சினை நடுத்தர நாடுகள் இராணுவச் செலவுகளுக்கு எப்படி நிதி அளிக்க முடியும், அதே நேரத்தில் தங்கள் கணிசமான ஏகாதிபத்திய பசிக்கு மக்கள் கிளர்ச்சி இல்லாமல் தீனி போடமுடியும் என்பதுதான்.

இன்னும் அதிக ஒத்துழைப்பு இத்திசையில் முதல் படி என்று காணப்படுகிறது. இங்கிலாந்தும் பிரான்ஸும்தான் ஐரோப்பாவில் அணுவாயுதங்களை கொண்ட நாடுகள்; இரண்டுமே ஐ.நா.பாதுகாப்புக்குழுவில் நிரந்தர அங்கத்துவ நாடுகளாகும். தங்கள் தேசியச் செலவுகளில் 2 சதவிகிதத்திற்கும் அதிகமாக அவை பாதுகாப்புச் செலவுகளுக்கு ஒதுக்குகின்றன. பிரிட்டனும் பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த இராணுவச் செலவுகளில் 45 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன. அதன் இராணுவ ஆராயச்சி, வளச்சியில் 70 சதவிகிதம் கொண்டுள்ளன மற்றும் மொத்த இராணுவத்தின் எண்ணிக்கையில் பாதியைக் கொண்டுள்ளன.

பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இத்தகைய உடன்பாட்டிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன; இது நடக்காவிட்டால் தாம் வேறுநாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆளில்லாத விமான அமைப்புமுறை வணிகத்தை இழந்துவிடுவோம் என்றும் எச்சரித்துள்ளன. செவ்வாய் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இங்கிலாந்தின் BAE Systems, மற்றும் பிரான்ஸின் Dassault Aviation இரண்டும் காமெரோன் மற்றும் சார்க்கோசிக்கு ஒரு கடிதம் எழுதி கீழ்க்கண்டவாறு எச்சரித்தனர்.

“Medium Altitude Long Range (Male) என்பதைத் தயாரிப்பதும் அதன் பின் ஆள் இல்லாத ஆகாயவிமானத்தைத் தயாரிப்பதும் இரு நாடுகளுக்கும் இந்த மூலோபாயப் பிரிவில் உண்மையான பங்குபெறுவதற்கு முக்கியமாகும். “

செலவுக் குறைப்புக்கள் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஐரோப்பிய நிறுவனங்களுக்குப் பதிலாக கருவிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க நேரிடும் என்ற கவலைகளைக் கொடுத்துள்ளன. Financial Times பெயரிடாத ஒரு ஆதாரத்தை மேற்கோளிட்டு, “பிரான்சின் Rafale, EurofighterTyphoon க்கு மாற்றீடு காணவேண்டிய பெரும் சவாலை ஒரு நாள் எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஒரு புதிய அமெரிக்க விமானம் அல்லது ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் புதிய விமானம் வரும். எனவே நம் அரசாங்கங்களுக்கு நாம் உரிய விருப்பத் தேர்வுகளைக் கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

ஆயினும்கூட, உச்சிமாநாட்டின்போது சார்க்கோசியும் காமரோனும் “தேசிய இறைமை” அல்லது ஆயுதங்கள் முறையில் “பகிர்வு” என்பது இருக்காது என வலியுறுத்துவதற்குப் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டனர். பிரான்சின் பாதுகாப்பு மந்திரி Hervé Morin பிரிட்டனும் பிரான்ஸும் மற்ற நாட்டின் விமானம் தாங்கும் கப்பலை, “தத்தம் நலன்கள் மாறுபட்டு இருக்கும்போது ஏற்படக்கூடிய பூசல் அல்லது நெருக்கடிக்காலத்தில்” கோரமுடியாது என்றார். காமெரோன் கூட்டு படைப்பிரிவுகள் ஈடுபடுத்தப்டுவதற்கு “அரசியல் உடன்பாடு” இருக்க வேண்டும் என்றார்.

இந்த உடன்பாடு பழைமைவாதிகளால் கையெழுத்திடப்பட்டுள்ளது. மரபார்ந்த முறையில் பிரிட்டனின் உத்தியோகபூர்வக் கட்சிகளில் இது மிகுந்த “ஐரோப்பிய அவநம்பிக்கை” கொண்டது. முக்கிய டோரிகள் உடன்பாட்டை பிரிட்டனின் “தேசிய நலன்களுக்கு” ஏற்றவை என்று ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளனர்.

நேட்டோவில் மீண்டும் நுழைதல் என்னும் பிரான்சின் முடிவுதான் முக்கிய மாற்றம் ஆகும். 1998ல் முன்னாள் இங்கிலாந்து பிரதம மந்திரி டோனி பிளேயர் மற்றும் முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் ஆகியோர் ஆங்கில-பிரெஞ்சு இராணுவ ஒத்துழைப்பிற்கு உறுதி கொடுத்து ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தனர். ஆனால் இது ஐரோப்பியப் பாதுகாப்பு முனைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது வாஷிங்டனுடன் இன்னும் உறுதியாகப் பிணைப்பு கொள்ள வேண்டுமா என்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் உள்ளன. 2003ல் அமெரிக்க தலைமையிலான ஈராக்கின் மீதான படையெடுப்பிற்கு ஆதரவு கொடுப்பது என்னும் முடிவு இறுதியில் அத்தகைய ஒத்துழைப்பை நிறுத்தி வைத்தது.

சார்க்கோசி அமெரிக்கா மீது சார்பைக் கொண்டுள்ள நிலையில், பிரான்சை மீண்டும் நேட்டோவிற்குள் கொண்டுவந்த நிலையில், லண்டன் பாரிஸுக்கும் பேர்லினுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த ஒரு வாய்ப்பை காண்கிறது. மூலோபாய பாதுகாப்புப் பரிசீலனை பிரான்சை தன் அட்லான்டிக் சார்பான இராணுவ மூலோபாயத்தில் மற்றொரு முக்கியமான தூண் என்று விவரிக்கிறது.

Telegraph ல் எழுதிய பாதுகாப்பு மந்திரி லியம் பொக்ஸ் சார்க்கோசியின் “பிரான்சை நேட்டோவில் ஆழ்ந்து கொண்டுவருவதற்கான” முயற்சிகளுக்கு பாராட்டி இந்த உடன்பாடு “ஐரோப்பிய ஒன்றியம் மூலம் நடக்கும் ஆழ்ந்த இராணுவ ஒத்துழைப்புடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை. அதேபோல் ஒரு ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கு அழுத்தமும் அல்ல, அதை நாங்கள் எதிர்க்கிறோம். இது உண்மைத் திறன் மற்றும் அடையக்கூடிய விளைவுகளைச் சாதிப்பது பற்றியது ஆகும். ஐரோப்பாவில் ஒற்றுமை என்பது எப்பொழுதுமே ஐரோப்பிய ஒன்றிய மட்டத்தில் இருக்க வேண்டியதில்லை என்பதை நிரூபிக்கவும் அது நாடுகளுக்கு இடையிலான அடித்தளத்திலும் இருக்கலாம் என நிரூபிக்கவும் ஆகும்.” என்றார்.

உடன்பாட்டிற்கு வாஷங்டன் ஆதரவு கொடுப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகள் பிரிட்டனின் இராணுவ வரவு செலவுத் திட்டத்திற்கு மிக அதிக குறைப்புக்களுக்கு எதிராக எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அவை நேட்டோ உடன்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளனர். இது வாஷிங்டன் ஐரோப்பாவில் இருந்து “அகன்றுவிடக்கூடும்” அந்த வழிவகறையில் இங்கிலாந்தை ஒதுக்கிவிடக்கூடும் என்ற கவலையை பிரிட்டனின் ஆளும் வட்டங்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சை பொறுத்தவரை, நீண்டகாலமாக அது கொண்டுள்ள விழைவான ஐரோப்பா-தழுவிய பாதுகாப்பு மூலோபாயம் என்பது கிட்டவில்லை. பாரிசில் உள்ள Institut Français des Relations Internationales இன் Elienne de Durand ஐ பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டு, «இராணுவத் திறன்களில் அதிக செலவுகள் செய்ய ஜேர்மனி கொண்டுள்ள விருப்பமின்மையை பிரான்ஸும் உணரத் தொடங்கிவிட்டது. எனவே தற்போதைக்கு ஐரோப்பா தழுவிய பாதுகாப்புக் கட்டமைப்புக்கள் ஒரு குறுகியகால நெருக்கடி நிர்வாகத்தை தவிர ஏதும் செய்யாது” என்று கூறியதாகத் தெரிவித்துள்ளது.

பிரிட்டனும் பிரான்ஸும் “தங்கள் முயற்சியிலேயே பாதுகாப்புப் பிரிவில் விரும்பும் பங்கைக் கொள்ள முடியாத நிலையில் உள்ளன. இந்தச் சவால் எளிமையானது. இது இருதரப்புக் கூட்டு அல்லது ஒன்றுமில்லாமல் போய்விடுவது என்பவற்றைத்தான் எதிர்கொள்ளும்” என்று அவர் தொடர்ந்து கூறினார்.

ஒரு கொண்டாட்ட மகிழ்ச்சி இருந்தாலும், பிரான்சிற்கும் பிரிட்டனுக்கும் இடையே பல முக்கிய பிரச்சினைகளில் வேறுபாடுகள் உள்ளன. அவற்றின் உலக விழைவுகள் ஒற்றுமை என்பதற்குப் பதிலாக போட்டியைத்தான் காட்டியுள்ளன.

பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் இருதரப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது, ஐரோப்பா, சர்வதேச அளவில் மன வேறுபாடுகள் வந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. உடன்பாடு பற்றி ஒரு ஐரோப்பிய ஒன்றிய அளவிலோ அல்லது ஜேர்மனியுடனோ கலந்து ஆலோசனை கேட்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. முந்தைய வாரம்தான் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுக்கு தான் விருந்தோம்பியவராக இருந்தது பற்றி காமெரோன் பெரிதுபடுத்தாமல் கூறினார்.

அழுத்தங்கள் ஏற்கனவே “உங்கள் அண்டை நாட்டவரைப் பிச்சைக்காரர்கள் ஆக்குக” என்ற பொருளாதாரக் கருத்தின் வெளிப்பாட்டிற்கு வழிவகுக்கும் சூழ்நிலையில், ஆங்கில-பிரெஞ்சு உடன்பாடு இராணுவக் கொள்கையில் அதன் அனைத்து சாத்தியமான பரவுதல்களுடன் என்ன வரவிருக்கிறது என்பதன் அடையாளம் ஆகும்.