WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
New Anti-capitalist Party covers for union betrayal of French oil strike
பிரெஞ்சு எண்ணெய்த்துறை வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கம் காட்டிக் கொடுத்ததை புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மூடி மறைக்கிறது
By Alex Lantier
1 November 2010
Back to
screen version
பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஒய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான பிரெஞ்சு எண்ணெய்த்துறை வேலைநிறுத்தம் தனிமைப்படுத்தப்பட்டு, காட்டிக்கொடுக்கப்பட்டது சர்வதேச அளவிலும் இன்னும் சார்க்கோசிக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஒரு முக்கிய அரசியல் படிப்பினை ஆகும். தொழிற்சங்கங்கள் எந்தவித வெகுஜன எதிர்ப்புக்களையும் வேலைநிறுத்தங்களுக்கு பரிவுணர்வையும் காட்டாத நிலையில், இரண்டு வார வேலைநிறுத்தங்கள் மற்றும் பொலிசார் வேலைநிறுத்த முறியடிப்பில் ஈடுபட்டபின் எண்ணெய்த்துறைத் தொழிலாளர்கள் வெள்ளியன்று மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கு வாக்களித்தனர்.
ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் விளைவு NPA எனப்படும் ஒலிவியே பெசன்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் வர்க்க ஒத்துழைப்புக் கொள்கை அம்பலப்படுத்தப்பட்டது ஆகும். இந்நிகழ்விற்கு அது வெட்கம் கெட்டத்தனமாக தொழிற்சங்கள் மற்றும் முதலாளித்துவ “இடது” காட்டிக் கொடுத்துள்ளதற்கு மறைப்புக் கொடுக்கும் விதத்தில் ஏமாற்றுத்தனமான போலி தீவிரப்போக்கு வனப்புரைகளைக் கூறியுள்ளது.
NPAஇன் அரசியல் அம்பலமாகியுள்ளது தொழிலாளர்களின் வர்க்க மூலோபாய பிரச்சினையில் முக்கிய தன்மையுடையது. அதன் பொதுநிலைச் செயல்பாடு தொழிலாளர்களை தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து முறித்துக் கொள்ளாமல் தடுக்க வேண்டும் என்பதாகும். பிந்தையதோ தன்னுடைய மூலோபாயத்தைத் தெளிவாக்கிவிட்டது: அதாவது சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு எதிராகப் போராடும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் தனிமைப்படுத்தி விற்றல் என்பதே அது. தொழிற்சங்கங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் உலக சோசலிச வலைத் தளம் முன்வைத்துள்ள மூலோபாயத்தின் நேரடி விரோதியாக NPA செயல்படுகிறது. தொழிற்சங்கங்கள், மற்றும் “இடது” கட்சிகளிடம் இருந்து சுயாதீனமாக நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, சார்க்கோசி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு வெகுஜன அரசியல் வேலைநிறுத்தங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உலக சோசலிச வலைத் தளம் கூறியுள்ளது.
எண்ணெய்த் துறை வேலைநிறுத்தத்தின் போது கடைசி வாரத்தில் மௌனமாக இருந்த பெசன்ஸநோ நேற்று Le Parisien னுக்கு ஒரு விரிவான பேட்டி கொடுத்தார். சார்க்கோசியின் வேலைநிறுத்த முயற்சி மற்றும் தொழிற்சங்கங்களின் உடந்தை பற்றி முற்றிலும் மௌனமாக இருந்த அவர் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ “இடது” கட்சிகளுக்கு ஒரு தேர்ச்சியையே கொடுத்தார்.
“வேலைநிறுத்த இயக்கம் தளர்ச்சி அடைந்தது” பற்றிக் கேட்கப்பட்டதற்கு பெசன்ஸநோ கூறினார்: “ஒரு நீண்ட கால பொது வேலைநிறுத்தம் நடத்தும் முயற்சிக்கு வெகு அருகில் நாம் இருந்தோம்.”
எப்படி இந்த முடிவிற்கு பெசன்ஸநோ வந்திருக்க முடியும் என்பது பற்றி வியப்புத்தான் ஏற்படுகிறது. ஒரு பொது வேலைநிறுத்தம் அமைப்பது பற்றி எந்தத் தீவிர முயற்சியும் இல்லை என்பதுடன், ஒரு பொது வேலைநிறுத்தத்தை பகிரங்கமாக எதிர்த்தவர்கள் பற்றியும் எந்தப் போராட்டமும் இல்லை. இவற்றுள் CGT எனப்படும் பொது தொழிலாளர் கூட்டமைப்பு ஒன்றியமும் அதன் தலைவர் பேர்னார்ட் தீபோ தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மற்ற பிரிவுகளும் அடங்கியிருந்தன.
தீபோ பொது வேலைநிறுத்தத்தை “புரிந்து கொள்ள முடியாதது, தெளிவற்றது” என்று கண்டித்தார். ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு தீபோவின் எதிர்ப்பு வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தி நிர்வாகத்துடன் தொழிலாளர்களின் முதுகுக்குபின் புறம் பேச்சுவார்த்தைகள் நடத்தும் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். தீபோ அரசாங்கத் தாக்குதலில் இருந்து எண்ணெய்த்துறை தொழிலாளர்களை காப்பதிலிருந்து ஒதுங்கினார் என்பது மட்டும் இல்லாமல், CGT இப்பொழுது அது பேச்சுவார்த்தை நடத்திக் கொண்ட உடன்பாட்டின் விவரங்களை வெளியிடவும் மறுக்கிறது. இதன்படித்தான் மார்செய் எண்ணெய் இருப்பு சேமிப்புப் பகுதிகள் மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளன.
ஆயினும்கூட “இடது” அரசியல் ஸ்தாபனத்தில் ஒரு அமைப்புக்கூட CGT கொண்டிருந்த அழுகிய பங்கை அம்பலப்படுத்த முயற்சிக்கவில்லை. Le Monde கடந்த வாரம் நன்றியுடன் குறிப்பிட்டதுபோல், பெசன்ஸநோ மற்றும் திபோ இன்னும் மற்ற அதிகாரத்துவத்தினரைக் குறைகூறவதைத் தவிர்த்தவர்களில் பெசன்ஸநோவும் இருந்தார் என்று அது எழுதியது: “அக்டோபர் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில், ஒலிவியே பெசன்ஸநோ தொழிற்சங்கங்களை பற்றிய அவருடைய குறைகூறல்களை ஒதுக்கி வைத்தார். அவற்றை அவர் சற்று வலுவற்றது என்றார், இப்பொழுது ஒரு “புதிய மே1968” க்கு அழைப்பு விடுக்கிறார்.
தொழிற்சங்கங்கள் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு நெருக்கமாக இருந்தன என்று கூறுவது தொழிலாளர்களின் போராட்டத்தை அவை காட்டிக் கொடுத்தது பற்றி வெட்கமில்லாமல் கூறும் பொய் ஆகும்.
Le Parsien பேட்டியின் மற்ற பகுதிகள் NPA ஆனது சோசலிஸ்ட் கட்சி (PS) உடன், பிரான்சின் முக்கிய “இடது” முதலாளித்துவ அரசாங்க கட்சியுடனான உறவு பற்றிக் குவிப்புக் காட்டியது.
PS, சார்க்கோசியின் வெட்டுக்களுடன் அது கொண்டுள்ள உடன்பாட்டை மறைப்பதற்குப் பல குழப்பம் நிறைந்த அறிக்கைகளை வெளியிட்டது. இது 60ல் இருந்து 62 என ஓய்வு பெறுவதற்கு குறைந்த வயதை உயர்த்தும் சார்க்கோசியின் திட்டத்தை எதிர்த்தது, ஆனால் அதே நேரத்தில் முழு ஓய்வூதியம் பெறுவதற்குப் பணிக்காலத்தை 41 ஆண்டுகள், பின்னர் 41.25 என உயர்த்துவதற்கு ஆதரவு கொடுத்தது. தொழிலாளர்களுடைய பயிற்சிக்காலம், நிறுவனத்துள் தொடக்கக் காலம் ஆகியவை பொதுவாக பணிக்காலத்திற்குள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை என்பதால் பணிக்கால அதிகரிப்பு என்பதே குறைந்த ஓய்வூதிய வயதை 60 களில் நடுவில் இருந்து 60களின் கடைசிப் பகுதிக்குக் கொண்டு சென்றுவிடும்.
PS உடனான அவருடைய உறவுகளைப் பற்றி கேட்கப்பட்டபோது, பெசன்ஸநோ விளக்கினார்: “PS ஆனது 60 வயதில் ஓய்வு என்பதை பாதுகாக்க ஒரு ஒற்றுமையான பிரச்சாரத்தில் பங்கு பெறத் தயாராக இருந்தது. அரசாங்கத்தின் சீர்திருத்தம் நியாயமற்றது என்று கூறுவதற்கும். போராட்டத்துடன் நாங்கள் உடன்பட்டுள்ளோம், ஆனால் எங்கள் வேறுபாடுகள் நாம் எதை அடைய விரும்புகிறோம் என்பதில் உள்ளது. PS போல் ஓய்வூதிய வயது 60 என்பதைக் காக்க வேண்டும், அதே நேரத்தில் பணிக்கால அதிகரிப்பு வேண்டும் என்பது முற்றிலும் முரணானது ஆகும்.”
Le Parisien வாசகர்களுக்கு இந்த PS ன் கொள்கைகளின் ஆதாரத்தில் உள்ள அப்பட்டமான முரண்பாடுகளை விளக்கவில்லை. ஆனால் தான் NPA ஒரு “இடது” அரசாங்கக் கூட்டில் பங்கு பெறுவதற்கு விரும்பவில்லை, அதுவும் “ஒற்றுமை என்ற பெயரால் இடது கொள்கைகளை செயல்படுத்தாத அரசாங்கத்திற்கு கேடயமாகப் பணி புரிய விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த தெளிவற்ற சொற்றொடரின் பொருள் வருமாறு: பெசன்ஸநோவிற்கு PS வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டுள்ளது என்பது தெரியும் ஆனால் எப்படியும் அவர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் (“போராடுதல்”) என்றும் உள்ளது. அவருடைய முக்கிய அக்கறை PS ஐ மிகவும் வெளிப்படையாக அவர் ஆதரித்தால், தன்னையும் இழிவுபடுத்திய விதத்தில் முடியும் என்பதுதான்.
PS ஒய்வூதிய வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுத்து தொழிலாளர்களின் போராட்டங்களை எதிர்க்கிறது. ஆனால் அது அவ்வாறு பகிரங்கமாகக் கூறவதில்லை. ஏனெனில் மக்களில் 70 சதவிகிதம் பேர் சார்க்கோசியின் வெட்டுக்களை எதிர்க்கின்றனர். PS ஆனது 2012 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சார்க்கோசிக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்த விரும்புவதுடன், சார்க்கோசிக்கு ஒரு “இடது மாற்றீடு” என்று காட்டிக் கொள்ளவும் விழைகிறது. எனவே ஒரு விதத்தில் சார்க்கோசியை “எதிர்க்க” விரும்புகிறது—குறைந்தபட்ச ஓய்வூதிய வயது—மற்ற குறைப்புக்களுக்கு ஆதரவளிப்பது என்பது அதன் “எதிர்ப்பை” பொருளற்றது ஆக்கிவிடுகிறது.
PS ன் சமூகக் கொள்கையின் வலதுசாரித் தன்மையும் 2012 ல் அநேகமாக PS ன் வேட்பாளராக வரக்கூடியவர் என்று கருதப்படும் நபரின் அடையாளம் பரிசீலிக்கப்பட்டால்: அவர்தான் டொமினிக் ஸ்ட்ராஸ் கான், IMF ன் தலைவர். IMF தலைவர் என்னும் முறையில் ஸ்ட்ராஸ் கான் கடன்பட்டுள்ள நாடுகளில் பெரும் சமூகநலச் செலவு வெட்டுக்கள் சுமத்தப்பட உதவியுள்ளார். இதற்கு ஈடாக அவற்றிற்கு பிணை எடுப்பு நிதி கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த வசந்த காலத்தில் கிரேக்கக் கடன் நெருக்கடி நேரத்தில் கிரேக்கத்திற்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. PS ஆனது ஐரோப்பிய-IMF பிணை எடுப்பு என்று இவர் ஏற்பாடு செய்ததற்கு ஆர்வத்துடன் வாக்களித்தது. அது கிரேக்கத் தொழிலாளர்கள் மீது பெரும் வெட்டுக்களைச் சுமத்தியது.
NPA உடைய பங்கு PS ஒரு ”இடது” கட்சி என்ற போலித்தனத்தைத் தக்க வைத்து இந்த வர்க்க விரோதப் பிரிவை தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்களில் இழுப்பது ஆகும். இதை அது முழு நனவுடன் செய்கிறது.
அக்டோபர் 27 கட்டுரை, NPA வலைத் தளத்தில் (“Enouch with Sarkozyism: Let’s Prepare the Anti-Capitalist Alternative”) என்பதில் முக்கிய NPA உறுப்பினர் பிரெட் போரஸ் எழுதினார்: “PS ன் நிலைப்பாடும உண்மையில் அரசாங்ககத்தின் ஓய்வூதிங்கள் பிரச்சினையில் மாறுபட்டிருக்கவில்லை. மார்செயிலுள்ள PS ன் தலைவர் [Jean-Noël, PS ன் பிரதிநிதி] Guérini அனைத்து முடிவுகளையும் முன்வைத்து, “வேலைநிறுத்தத்தின் தலைநகரில்” [கன்சர்வேடிவ் மார்செய் மேயர் ஜோன் குளோட்) குளோட்டுடன்.. வேலைநிறுத்தத்தை முடிக்க அழைப்புவிடுத்தார்.”
ஆயினும்கூட PS உறுப்பினர்கள் “ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்—அது நல்லதுதான்” என்று அவர் பாராட்டினார்.
இது ஒரு வினாவை எழுப்புகிறது: “NPA எதற்காக PS உடன் பெசன்ஸநோ கூறுவது போல் “பூசலிட” ஒரே பக்கத்தில் இருக்க விரும்புகிறது, மேலும் சார்க்கோசியின் வேலைநிறுத்த முறியடிப்பிற்கு CGT ஒப்புக் கொண்டது பற்றி மௌனமாக இருக்கிறது?
எல்லாவற்றிற்கும் மேலாக இது வர்க்க நலன்கள் பற்றிய பிரச்சினை ஆகும். உயர்கல்விக் கூடப் பிரிவுகளில் இருந்தும், LCR என்னும் புரட்சிகர கம்யூனிஸ்ட் லீக்கின் ஒரு பகுதியான 1968 மாணவர் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து வெளிப்பட்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிரிவுகளில் இருந்தும் வந்துள்ள இவர்கள் மத்தியதரவகுப்பு அடுக்கிற்காகப் பேசுகின்றனர். அதற்கோ நீண்டகால தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தை மறைத்த வரலாறு உண்டு. கடந்த 30 ஆண்டுகளில் நிதியப் பிரபுத்துவமும், சற்றே குறைந்த அளவிற்கு தொழிற்சங்க, NPA தலைமைகளும் மாபெரும் இலாபங்களை சமூக வெட்டுக்கள் மற்றும் பிற தோல்விகளில் இருந்து அடைந்துள்ளன. NPA மற்றும் PS உடன் ஆழ்ந்த அரசியல் பிணைப்புக்களைக் கொண்டுள்ளது.
எனவே PS ஒரு “இடது” கட்சி என்னும் கட்டுக்கதையைத் தக்க வைத்தல், மற்றும் தொழிற்சங்கங்கள் “போராட்டத்தின்” கருவிகள் அரசியல் வருங்காலத்தை வளர்க்க அவற்றை NPA நம்பலாம் என்பதையும் தக்க வைத்தல் முக்கியமாகும்.
NPA அதன் போலித்தன தீவிரப்போக்கு வனப்புரையைப் பயன்படுத்தி வலதுசாரி, தொழிலாளர் எதிர்ப்புச் சக்திகளுடனான அதன் கூட்டை மறைக்கிறது. போரஸ் மற்றொரு மனத்தை உணர்ச்சியற்றதாக்கும் உதாரணத்தைக் கட்டுரை முடிவில் கொடுக்கிறார்: “சார்க்கோசியத்தின் மனப்பாங்கு குடியரசு நிறுவங்களின் இழிந்த தன்மையையும் அவை முதலாளித்துவத்தின் நலன்களைக் காப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ளது பற்றியும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உண்மையான பிளவு என்பது ஒரே நேரத்தில், உற்பத்திக் கருவிகளை சமூகம் எடுத்துக் கொள்ளுதல், செல்வம் மறுபகிர்விற்கு உட்படுதல், ஆதாரவளங்கள் பாதுகாக்கப்படல், நிறுவனங்களுடனான முறிப்பு ஆகியவற்றைத் தளமாகக் கொண்ட ஒரு முதலாளித்துவ எதிர்ப்புத் திட்டப்படி செயல்படுவது ஆகும்.”
NPA இன் ஏமாற்றுத்தன்மை தற்போதைய வேலைநிறுத்தத்தில் தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பு பற்றிய அதன் கோழைத்தன, கொள்கையற்ற மௌனத்தினால் அம்பலமாகிறது. இது ஆளும் வர்க்கத்துடன் முழுமையாகப் பிணைந்துள்ளது. எனவே அது கலகத்தடுப்புப் பிரிவு பொலிஸ் வேலைநிறுத்தங்களை முறியடித்தது பற்றி எதிர்ப்புத் தெரிவிக்க மறுக்கிறது. அதுவும் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு அரசாங்கத்தை எதிர்க்கும் நிலையில். இது ஒரு சர்வதேச வாழ்வா-சாவாப் போராட்டத்தை பிரெஞ்சுக் குடியரசைக் கவிழ்க்கவும் நிதியப் பிரபுத்துவத்தின் முறைதவறிய பணச்சேகரிப்புக்களையும் “எடுத்துக் கொள்ளும்” என்று எவரேனும் நம்ப முடியமா?
பிரெஞ்சு அரசியல் நடைமுறைக்கு தொழிலாள-வர்க்க எதிர்ப்பில் இருந்து ஒரு கேடயத்தை, ஒரு முழு நனவுடன் NPA பிரதிபலிக்கிறது. சார்க்கோசியின் சமூகச் செலவுகள் பற்றிய சிக்கனக் கொள்கைகளுக்கும் நிதியப் பிரபுத்துவத்திற்கும் எதிராகப் போராடுபவர்கள் ஒரு சுயாதீன தொழிலாள வர்க்கப் போராட்டத்தை வளர்த்து முதலாளித்துவ ஸ்தாபனத்தை NPA கோழைத்தனமாக பாதுகாப்பது குறித்து அம்பலப்படுத்த வேண்டும்.
|