WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
சீன-ஜப்பானிய உறவுகள் முறுகல் நிலையில் உள்ளன
By John Chan
29 October 2010
Use
this version to print | Send
feedback
சீன-ஜப்பானிய உறவுகள் கடந்த மாதம் ஒரு சீன மீன்படிக்கும் கப்பலின் தளபதியை ஜப்பானிய அதிகாரிகள் மோதலுக்கு உட்பட்ட கிழக்குச் சீன கடலிலுள்ள டயாவாயூ தீவுகளுக்கு (ஜப்பானில் சென்காகு என்று அறியப்படும்) அருகே கைது செய்ததைத் தொடர்ந்து தீவிரமான மோதுதலுக்கு உட்பட்டுள்னன. சீனப் பதிலடியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், ஜப்பானிய அரசாங்கம் தளபதியை விடுவித்தாலும் பதட்டங்கள் தொடர்கின்றன.
டயாவோயு/சென்காகுவைச் சுற்றியயுள்ள பகுதி, இப்பொழுது ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ளது, கணிசமான கடலுக்கடி எரிசக்தி இருப்புக்களைக் கொண்டுள்ளது. செப்டம்பர் நடுவே, சீனா ஜப்பானுடன் கிழக்குச் சீனக் கடலில் மோதலுக்கு உட்பட்ட எரிவாயு வயல்களில் கூட்டாக எண்ணெய் எடுப்பது பற்றித் திட்டமிட்டிருந்த பேச்சுக்களை ஒத்தி வைத்தது. டோக்கியோ அரசாங்கம் கூட்டு நடவடிக்கை பற்றிய அதன் 2008 உடன்படிக்கையை சீனா முறித்தால், தான் “பதில் நடவடிக்கைகள்” எடுக்க இருப்பதாக அச்சுறுத்தியது.
கடந்த வாரம் சீனா பெரும் ஷிரகாபா எரிவயலில் (சீனாவில் சுன்ஜியாவோ என அறியப்படுவது) எண்ணெய் எடுப்பதைத் தொடங்கியிருப்பதற்கு “அதிக வாய்ப்பு இருப்பதாக” டோக்கியோ குற்றம் சாட்டியுள்ளது. அதிர்வு ஆய்வுக் கப்பலை அப்பகுதிக்கு அனுப்ப இருக்கும் ஜப்பானியத் திட்டங்கள் சீனாவுடன் மற்றொரு மோதலுக்கு வழிவகுக்கும். ஏனெனில் இப்பகுதியில் சுன்ஜியாவோப் பகுதியில் ரோந்திற்காக பெய்ஜிங் இரு அழிக்கும் திறனுடைய படகுகளை அனுப்பியிருப்பதாக தெரிகிறது. இந்த வாரம் பெய்ஜிங் டயாவோயு/சென்காகு தீவுகளுக்கு அருகே கடல்பகுதியில் கடற்படை ரோந்துக் கப்பல்களை அனுப்பி, ஜப்பானின் கடலோரப் பாதுகாப்புக் கப்பல்களுக்கு சமமான அளவில் 36 ரோந்துக் கப்பல்களை கட்டமைக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
சீனா அபூர்வ நிலத் தாதுப் பொருட்களை ஏற்றமதிகள் செய்வது பற்றிய மோதல்களும் தொடர்ந்துள்ளன. சீனாவிற்கு மின்னணுத் துறை உட்பட அதன் பல உயர்தொழில்நுட்ப பொருட்கள் தயாரிப்பிற்கு இது முக்கியமானதாகும். கடந்த மாத மோதலின் நடுவே சீனா முறைசாரா வகையில் ஜப்பானுக்கு செல்லும் அபூர்வ புவி தாதுப்பொருட்களைத் தடை செய்தது. உலக அபூர்வ தாதுப் பொருட்கள் உற்பத்தியில் சீனா கிட்டத்தட்ட ஏகபோக உரிமை கொண்டுள்ளது. பின்னர், பெய்ஜிங் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் ஏற்றுமதிகளை நிறுத்தியது. இது முன்னதாக எடுத்த முடிவான தன்னுடைய இப்பொருட்களின் இருப்புக்களைப் பாதுகாப்பதற்காக சுமத்தப்பட்டிருந்த ஏற்றுமதி அளவுகளுக்கு இணங்க உள்ளது.
ஏற்றுமதிகளை மீண்டும் தொடக்க வேண்டும் என்னும் பெருகிய அழுத்தங்களுக்கு பெய்ஜிங் உட்பட்டுள்ளது. கடந்த ஞாயிறன்று ஜப்பானிய வணிக மந்திரி அகிஹிடோ ஒகடா பெய்ஜிங் மீண்டும் அபூர்வ புவி தாதுப் பொருட்களை ஜப்பானுக்கு அனுப்ப வேண்டும் என்று முறையிட்டது. ஆனால் வருகை புரிந்திருந்த சீன வணிக மந்திரி ஜியாக் யாவோபிங் இந்த முறையீட்டை நிராகரித்து, சீனாவானது ஜப்பானுக்கும் மற்ற நாடுகளுக்கும் “கடத்தல்-எதிர்ப்பு” நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அதன் ஏற்றுமதிகளைக் குறைத்துக் கொண்டுவருவதாகவும் ஒரு சர்வதேச தடையை சுமத்தவில்லை என்றும் அறிவித்தது.
மிக மலிவான உற்பத்தி முறையால் சீனா இப்பொழுது உலகின் அபூர்வ நிலத் தாதுப் பொருட்கள் ஆண்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 95 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவும் சீன ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளபோது, ஜப்பான் மீது பாதிப்பு மிகக் கடுமையாக உள்ளது. ஏனெனில் அது உலகின் அபூர்வத் தாதுவை அதிக அளவு இறக்குமதி செய்யும் நாடு ஆகும். ஒரு மதிப்பீட்டின்படி ஜப்பானின் நிலத் தாது மூலோபாய இருப்பு இந்த தடையைச் சீனா தொடர்ந்தால் அடுத்த ஏப்ரலுடன் முடிவிற்கு வரும் என்று கூறியுள்ளது. மங்கோலியா மற்றும் வியட்நாமில் இருந்து டோக்கியோ மாற்றீட்டு அளிப்புக்களைப் பெற முயல்கிறது.
நியூ யோர்க் டைம்ஸ் கருத்துப்படி நேற்று சீனா நடைமுறைத் தடையை முடிவிற்கு கொண்டுவந்து, ஜப்பான் உட்பட பல நாடுகளுக்கு தாதுப் பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. பற்றாக்குறைகள் குறுகிய கால அடிப்படையில் குறைந்தாலும். நீண்ட காலப் பிரச்சினை தொடரும். செய்தித்தாள் விளக்குகிறது: “இந்த ஆண்டுப் பகிர்வின்படி—அங்கீகரிக்கப்பட்ட அனுப்புதல்களான 30,300 டன்கள்—ஒரு சில ஆயிரம் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட பாக்கியுள்ளன. இதற்கிடையில் சீன அபூர்வ தாதுப் பொருட்களுக்கான உலகத் தேவை 50,000 டன்களை எட்டியிருக்கையில், தொழில்துறை மதிப்பீடுகளின்படி “சீனாவின் தற்போதைய தடைகள் விலைகளைப் பெரிதும் உயர்த்திவிட்டன.”
அடித்தளத்தில் உள்ள அழுத்தங்கள் ஜப்பானியப் பிரதம மந்திரி நாவோடோ கான் ஜப்பானிய இராணுவத்தை விரிவாக்க எடுத்துள்ள முடிவில் இருந்து தெளிவாகிறது. திங்களன்று படைகளை ஒரு ஆய்வுக் கண்காணிப்பு நடத்தியபோது பேசிய அவர் இன்னும் கூடுதலான இராணுவக் கொள்கையை வலியுறுத்தும் வகையில் சீனாவின் “அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டி” அமெரிக்க-ஜப்பானிய கூட்டு விரிவாக்கப்பட வேண்டிய தேவையையும் கூறினார்.
ஜப்பானின் தேசிய பாதுகாப்புத் திட்ட வழிகாட்டிகள் (2011-2015), டிசம்பரில் வெளியிடப்பட உள்ளது, நாட்டின் நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையை 16ல் இருந்து 22க்கு உயர்த்துவதையும் அடக்கியுள்ளது. 1976ல் சுமத்தப்பட்ட 20 என்ற எண்ணிக்கைக்கு இது முற்றுப்புள்ளி வைக்கிறது. மற்றொரு விவாதத்தில் உள்ள பெரும் மாறுதல் 1967ல் ஜப்பான் மீது ஆயுத ஏற்றுமதிக்கு இருந்த தடையை முடிவிற்கு கொண்டுவருவது ஆகும். அது நாட்டின் திறனை மற்ற நாடுகளுடன் சேர்ந்து கூட்டு முயற்சிகளில் ஈடுபடுத்துவதை குறைத்தது. அதையொட்டி இன்னும் நவீன ஆயுத தொழில்நுட்பத்திற்கு அணுகும் வாய்ப்பு இல்லாமல் போனது.
சீனாவின் மீது கான் கொண்டிருக்கும் கூடுதலான ஆக்கிரோஷ நிலைப்பாடு வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவில் சீனச் செல்வாக்கு படர்வதைத் தீவிரமாகக் குறைக்க முற்பட்டு ஜப்பான் இன்னும் பல கூட்டு நாடுகளை அவ்வாறே செய்யுமாறு வலியுறுத்துகிறது.
நேற்று ஜப்பானிய வெளியுறவு மந்திரி செய்ஜி மச்சாராவுடன் ஹோனோலுலுவில் நடத்திய கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளின்டன் சீனாவுடனான அதன் மோதல்களில் ஜப்பானுக்கு ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். அபூர்வ தாதுப் பொருள் ஏற்றுமதியை சீனா மீண்டும் தொடக்கிய பின் செய்தி ஊடகத்திடம் பேசிய கிளின்டன் “இதன் பொருள் இந்த முக்கியப் பொருட்கள் பற்றிய வணிகம் குறைவின்றி, குறுக்கீடின்றித் தொடரும் என தான் நம்புவதாக” கூறினார்.
டயாவோயு/சென்காகு தீவுகள் பற்றிய மோதலைப் பற்றிக் கேட்கப்பட்டபோது, முந்தைய அமெரிக்க அறிக்கைகளை உறுதிப்படுத்திய விதத்தில் இப்பிரச்சினை அமெரிக்கா-ஜப்பான் பாதுகாப்பு உடன்படிக்கையின் வரம்பிற்குள் உள்ளது என்று மீண்டும் உறுதிபடுத்தினார். இதன் உட்குறிப்புக்களை அவர் விரிவாகக் கூறவில்லை என்றாலும், கிளின்டனின் கருத்துக்கள் அமெரிக்கா ஜப்பானை சீனாவுடனான தீவுகள் பற்றிய எந்த இராணுவ மோதலிலும் ஆதரவு கொடுக்கும் என்பதாகும்.
ஒரு இருவார ஆசியப் பயணத்திலுள்ள கிளின்டன் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் நாளை கலந்து கொள்வார். இது ஹனோயில் நடக்கும் தற்போதைய ஆசியான் மாநாட்டின் ஒரு பகுதியாகும். ஜூலை மாதம் ஆசியான் உச்சிமாநாட்டில் கிளின்டன் வேண்டுமேன்றே சீனாவுடன் அழுத்தங்களை உயர்த்தும் வகையில் ஆசியான் நாடுகளுடன் அவற்றின் தென் சீனக் கடல் பற்றிய சீனாவுடன் கொண்டுள்ள மோதல்களில் அவற்றிற்கு ஆதரவு கொடுத்துப் பேசினார். தென் சீனக் கடலில் “தேசிய நலன்”, “கடலில் செல்லச் சுதந்திரம்” ஆகியவற்றை அமெரிக்கா கொண்டிருக்கிறது என்று அவர் அறிவித்தார். இது வட கிழக்கு ஆசியாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் நடுவில் உள்ள மூலோபாய கடல்வழிப் பாதைகளில் உள்ளது.
சீனாவைத் தொடர்ந்த கூட்டுக்கள் மூலோபாயப் பங்காளித்தனங்கள் வழியே தடைக்கு உட்படுத்தும் வாஷிங்டனின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா இந்தியாவை இன்னும் நெருக்கமாக ஜப்பானுடன் மூலோபாயப் பிரச்சினைகளில் ஒத்துழைக்க ஊக்கம் கொடுத்துள்ளது. அடுத்த மாதம் இந்தியாவிற்கு ஜனாதிபதி ஒபாமா பயணம் பற்றிப் பேசுகையில் ஒரு பெயரிடப்படாத மூத்த அமெரிக்க அதிகாரி திங்களன்று பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்: “இந்தியாவை நாங்கள் ஒரு கிழக்கு ஆசிய சக்தியாகப் பார்க்கிறோம். இந்தியா ஒன்றும் அதன் உடனடி அண்டை நாடுகளின் எல்லைப் பின்னணியுடன் நின்றுவிடவில்லை.”
இந்தியாவுடன் 2008ல் ஜப்பான் ஒரு “பாதுகாப்பு ஒத்துழைப்பு” அறிக்கையில் கையெழுத்திட்டது. 2007ல் இதேபோன்ற ஒரு அறிக்கையை அமெரிக்காவுடன் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து அது நடந்தது. ஒரு முறையான பாதுகாப்பு உடன்படிக்கை இல்லை என்றாலும், அறிக்கை ஒரு அரசியல் ஆவணம் ஆகும். உதாரணமாக “ஜப்பானும் இந்தியாவும் கடல்வழித் தொடர்பு பாதுகாப்புக்களின் பொது நலனைக் கொண்டுள்ளன” என்று கூறப்படுவது சீனாவின் கடற்படை விரிவாக்கத்தை மறைமுகமாக உயர்த்திக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகும்.
புது டெல்லி, NPT எனப்படும் அணுவாயுதப் பரவா உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் ஒரு அணுவாயுதக் கிடங்கை கட்டமைத்துள்ளபோதிலும்கூட, இந்தியாவுடன் ஒரு சிவிலிய அணுசக்தி உடன்பாட்டிற்கு டோக்கியோ பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இத்திட்டமிடப்பட்டுள்ள உடன்பாடு குறிப்பிடத்தக்தாகும். ஏனெனில் ஜப்பான் இந்தியாவில் 1998ல் நடந்த அணுவாயுதச் சோதனைகளை கடுமையாக எதிர்த்திருந்தது. இந்தியாவுடன் வாஷிங்டனுடைய அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்ந்து ஜப்பானின் பேச்சுக்கள் வந்துள்ளன. அதுவோ NPT ஐ திறமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் புது டெல்லிக்கு ஒரு சிறப்பு விதிவிலக்கு கொடுத்திருந்தது.
ஜப்பானுக்கு இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் இந்த வாரம் மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளது இரு நாடுகளுக்கும் இடையே பெருகிவரும் உறவுகளை உயர்த்திக் காட்டியுள்ளது. ஜப்பானுடனான இந்திய வணிகம் சீன-ஜப்பானிய வணிகத்தில் இருபதில் ஒரு பங்குதான். ஆனால் இது விரைவில் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பொருளாதார பங்காளித்தன உடன்படிக்கையை (EPA) கான் மற்றும் சிங்கினால் கையெழுத்திடப்பட்டுள்ளது அடுத்த தசாப்தத்தில் ஜப்பான் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 90 சதவிகிதத்திற்கும் மேலாக காப்புவரிகளை பூஜ்யம் என்று குறைத்துவிடும். இந்த ஆண்டு ஜப்பானிய அரசாங்கம் இந்தியாவில் செய்துள்ள முதலீடு, சீனாவில் அது செய்துள்ள முதலீட்டைவிட முதல்தடவையாக அதிகமாகும். ஜப்பானுக்கு நிலத்தில் கிடைக்கும் தாதுக்களில் காணப்படும் அபூர்வ கனிமங்களை ஏற்றுமதி செய்யக்கூடும் என்று அடையாளம் காட்டியுள்ளது.
தொடர்புடைய பரஸ்பர நலன்கள் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா (TOI) குறிப்பிட்டது: “ஜப்பானுடன் ஒரு மூலோபாயத்தை உறுதிப்படுத்தும் இந்திய முயற்சிகள் இதைவிடச் சிறந்த நேரத்தில் வந்திருக்க முடியாது. இப்பொழுது டோக்கியோ அதன் சீனக் கொள்கை, சிதைவில் உள்ளது என்பதை உணர்ந்துள்ளது. வெளியுறவு மந்திரி கன்வல் சிபல் TOI இடம் கூறியுள்ளபடி, நேரம் இப்பொழுது இந்தியாவிற்குச் சாதகாமாக சீன விரிவாக்கத்திற்கு ஒரு தடுப்புச் சக்தியாக ஜப்பானை கட்டமைக்கும் விதத்தில் உள்ளது. அங்குதான் பெய்ஜிங் “முற்றிலும் தடுக்கப்பட்டுவிட முடியும்”.
சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே தொடரும் மோதல்கள் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் போட்டியின் ஒரு கூறுபாடுதான். அப்போட்டி இப்பகுதி முழுவதையும் மோதல், பிரச்சனைகள் ஆகியவற்றின் தளமாக மாற்றும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. |