சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Seven million without shelter months after Pakistan floods

பாகிஸ்தான் வெள்ளத்திற்கு பின் புகலிடமின்றி ஏழு மில்லியன் பேர்

By Sampath Perera
23 October 2010

Use this version to print | Send feedback

இந்த கோடையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மொத்தமுள்ள 21 மில்லியன் பாகிஸ்தானியர்களில் ஏழு மில்லியன் பேர் இன்னமும் புகலிடமின்றி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாகிஸ்தான் அலுவலகம் இந்த வாரம் தெரிவித்துள்ளது. 14 மில்லியன் பேருக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் தேவையாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள், பாகிஸ்தான் ஆட்சியாளர் உயர்தட்டுகளின் திறமையற்ற முன்னேற்பாடின்மையையும், வெள்ள நிவாரண நடவடிக்கைக்கு அவர்கள் குறைந்த நிதியுதவி அளித்ததையும் விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளன.

மேலும் அவை ஏகாதிபத்திய சக்திகளின் குற்றமாகவும் இருக்கின்றன. கடந்த பல பத்தாண்டுகளில் ஏற்படாத மனித இனம் சந்திக்காத உலகின் மிகப்பெரிய நெருக்கடி என்று ஐ.நா. மீண்டும் மீண்டும் எதை கூறியதோ, அதைத்தான் பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ள நிலையில் உள்ளதோடு, பாகிஸ்தானுக்கு உதவ முன்வருமாறு, "சர்வதேச சமூகத்தை" ஐ.நா. மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் கொண்ட ஐஎம்எப் மற்றும் உலக வங்கி ஆகியவை ஒன்று சேர்ந்து, வெள்ள உதவி வேண்டுமெனில் தங்களது கோரிக்கையான சந்தை சீர்திருத்தங்களை அமல்படுத்தபடுத்த வேண்டும் என்றன. இதனிடையே வாஷிங்டன், கூட்டாட்சி நிர்வாகம் கொண்ட பழங்குடியின பகுதிகளில் தாலிபான் - கூட்டணி குழுக்களுக்கு எதிரான கிளர்ச்சி ஒழிப்பு போரை விரிவுபடுத்தவேண்டும் என்று பாகிஸ்தான் மீதான தனது அழுத்தத்தை தீவிரப்படுத்தியது.

பாகிஸ்தானின் வெள்ளம், அதன் வட-கிழக்குப் பகுதியில் ஜூலை கடைசியில் பெய்த கன மழையுடன் தொடங்கி, தொடர்ந்ததோடு அடுத்த இரண்டு மாத காலத்திற்கு வெள்ள நீர் இந்துஸ் பள்ளத்தாக்கு நெடுகச் சென்றது. வெள்ளம் வரலாம் என்று வாரக்கணக்கில் அதிகாரிகள் எச்சரித்தபோதிலும், வேறெங்கும்விட தெற்கு மாகாணமான சிந்துப் பகுதியில் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர். தற்போது புகலிடம் இல்லாமல் இருக்கும் பெரும்பாலானோர்கள் சிந்து பகுதியிலிருந்து வந்தவர்கள்தான்.

வெள்ளம் 1,916 பேரை பலிகொண்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கத்தின் தேசிய பேரழிவு நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் நிவாரண முகாம்களில் பரவி வரும் நோய்கள், போதிய உணவு உதவியின்மை, மற்றும் நாட்டின் உணவு விநியோகத்தில் ஏற்படும் இடையூறு போன்றவற்றின் காரணமாக இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும்.

அக்டோபர் 18 ஆம் தேதியன்று "பாகிஸ்தானில் இப்போது வரையிலான வெள்ள உண்மை" யை வெளியிடுவதற்காக இஸ்லாமாபாத்தில் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஐ.நா. பேச்சாளர் Stacey Winston, " வெள்ளம்-பாதித்த பகுதிகளில்" குறைந்தது ஏழு மில்லியன் மக்களாவது இருப்பிடம் இன்றி உள்ளனர்" என்றார்.

வெள்ளம் 50,000 சதுர கிலோமீட்டர் பகுதியில்—நெதர்லாந்தைவிட பெரிய பகுதி- உள்ள 1.9 மில்லியன் வீடுகளை அழித்தோ அல்லது சேதப்படுத்தியோ இருப்பதோடு, பொது உள்கட்டமைப்புகளையும் நாசமாக்கியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சுமார் 10,000 பள்ளிகள் மற்றும் 558 சுகாதார நிலையங்களும் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி புகலிடம் அளிக்க, கூடாரங்கள் போன்ற, மற்றும் நிரந்தர குடியிருப்புகளை கட்டிமுடிக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்பதால் இடைக்கால குடியிருப்புகள் போன்றவற்றை வழங்க 346 மில்லியன் அமெரிக்க டாலர்களை அளிக்குமாறு சர்வதேச நன்கொடையாளர்களை ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது. இதுவரை அந்த தொகையில் 20 சதவிகிதத்தை மட்டுமே ஐ.நா. பெற்றுள்ளது.

"எங்களிடம் என்ன வளங்கள் இருக்கிறதோ அதைவைத்துக்கொண்டு எங்களால் இயன்றவரை சிறப்பாக செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் குளிர் மாதங்கள் வர இருப்பதால் குடும்பங்களை பாதுகாப்பதற்கான குடியிருப்புகளை அளிக்க கூடுதல் உதவி தேவையாக உள்ளது" என்றார் வின்ஸ்டன்.

குறைந்தது 2.4 மில்லியன் ஹெக்டர் பயிர்கள் வெளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும், 1.2 மில்லியன் கால் நடைகள், 6 மில்லியன் கோழிகள் இறந்துபோனதாகவும் அந்த வெள்ள உண்மை அறிக்கை தெரிவிக்கிறது. "மேலும்" " சரியான உணவு மற்றும் கால்நடை வைத்தியர்கள் இன்றி அதிக உயிரிழப்பு ஏற்படலாம்" என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வெள்ள நீர் வடிந்துவிட்டாலும் கூட, சுத்தமான குடி நீர், கழிப்பிட வசதி மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்காமல் இருப்பதால் கடுமையான சுகாதாரக்கேடு ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஐ.நா. அறிக்கை குறிப்பிடுகிறது.

கடந்த இரு மாதங்களுக்கும் மேலாகவே, ஒரு மில்லியன் பேருக்கும் அதிகமானோருக்கு வயிற்றுப்போக்கு, தோல் நோய், மற்றும் கடுமையான சுவாச தொற்றுகள் போன்ற ஒவ்வொன்றும் ஏற்பட்டுள்ளன. 300,000 பேருக்கு புதிதாக மலேரியா மற்றும் 921 பேருக்கு நிச்சயமாக டெங்கு காய்ச்சலும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு ஐ.நா. ஏஜென்சியான IRIN, பல சுகாதார அச்சுறுத்தல்கள் இருப்பதை மக்கள் அறிந்துள்ளனர் என்றாலும், அந்த தவிர்க்க முடியாத பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

"மலேரியா ஆபத்தானது என்று எங்களுக்கு தெரியும், ஆனால் தூங்குவதற்கே கூரையில்லாமல், வலைகளை கட்டுவதற்கு கூட சரியான கட்டில் இல்லாமல், எல்லா இடங்களிலும் அழுக்கு தண்ணீர் தேங்கிகிடக்கும் ஒரு சூழ்நிலையில் நாங்கள் இருக்கும்பொழுது எதை நாங்கள் எதிர்பார்க்க முடியும்? " என்று IRIN இடம் சிந்துவிலுள்ள தாட்டா என்ற இடத்திலிருந்து வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த சாகிர் முகமத் என்பவர் கூறியுள்ளார்.

தாட்டாவிலுள்ள அரசாங்க அதிகாரி ஒருவர் IRIN இடம் கூறுகையில், மலேரியாவை தோற்றுவிக்கக்கூடிய நுளம்புக்கள் உற்பத்தியாகக்கூடிய அளவிற்கு வெள்ளத்தினால் ஏற்பட்ட குட்டைகளிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு கூட எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை என்றார்." ஆமாம் (குட்டை) தண்ணீர் வெளியேற்றப்பட வேண்டுமென்றும், ஆனால் எங்களிடம் எவ்வித உபகரணமும் இல்லை என்பதுமட்டுமல்ல, அவ்வளவு தண்ணீரை வெளியேற்றுவது என்பது அத்தனை சுலபமான காரியமல்ல."

மற்ற குழுக்கள் மற்றும் முகமைகளும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்தின்மை போன்றவை ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளன.

இந்த குளிர்காலத்தில் வெள்ளப் பாதிப்புக்குள்ளான மில்லியன் கணக்கானோர் பட்டினியை சந்திக்கக்கூடும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்க மற்றும் செம்பிறைச் சங்கக் கூட்டமைப்பு (IFRC) ஆகியவை எச்சரித்துள்ளன. IFRC யின் பொதுச் செயலாளர் Bekele Geleta, "நிலநடுக்கம் போன்றல்லாமல் ஒரு மெதுவான பேரழிவாக இருக்கும் இதன் முழு தாக்கம் வரவிருக்கும் மாதங்களிலும் தெரியாமல் இருக்கலாம்" என்று குறிப்பிடுகிறார்.

பாகிஸ்தான் முழுவதும் ஊட்டச்சத்தின்மை 14 சதவிகிதமாக அதிகரித்துள்ளதோடு, 30 முதல் 50 சதவிகித குழந்தைகள் மிக மோசமான போஷாக்கின்மை அறிகுறியோடு சுகாதார மையங்களுக்கு வந்துகொண்டிருப்பதாக IFRC தெரிவிக்கிறது.

UNICEF வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையை இருட்டடிப்பு செய்து மறைக்கப்பார்க்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட 125,000 குழந்தைகள் மிகமோசமான ஊட்டச்சத்தின்மையினாலும், அரை மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்தின்மையினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயினால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைவிட 10 மடங்கு அதிகமான குழந்தைகள், அதாவது ஊட்டச்சத்தின்மையினால் "மிக மோசமாக" பாதிக்கப்பட்ட 75,500 குழந்தைகள் வெறும் ஊட்டச்சத்தின்மையினால் இறக்கக்கூடும் என்று அது மதிப்பிட்டுள்ளது.

உலக உணவுத் திட்டம் (WFP) கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மோசமான மற்றும் மிதமான ஊட்டச்சத்தின்மை "வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் கடுமையாக அதிகரித்து" வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (WFP) பேச்சாளர் Jackie Dent, "மிகக்குறைவான நிதியை நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறோம். நவம்பர் அளவில் பல்வேறு பொருட்களுக்கு எங்களுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடு இருக்கும்" என்று "சோகத்துடன்" கூறினார்.

பாகிஸ்தானில் 7 மில்லியன் மக்கள் இன்னமும் இருப்பிடம் இல்லாமல் இருக்கின்றனர் என்று ஐ.நா. அறிவிப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர், பாகிஸ்தான் ஜனநாயக நண்பர்கள் (FoDP)— அதாவது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளைக் கொண்ட குழு— பிரஸ்ஸல்ஸில் கூடியது.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி துணை தலைமை வகித்த அந்த கூட்டம், வெள்ளத்தினால் 9.7 பில்லியன் டாலர் சேதங்களானது வீடுகள், பள்ளிகள், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், மறைமுக எதிர்கால பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து வந்திருந்த சமீபத்திய அறிக்கையை பரிசீலித்தது. இது பாகிஸ்தான் அரசாங்கத்தின் தொடக்க மதிப்பீடான 43 பில்லியன் டாலரிலிருந்து மிக அதிக வித்தியாசத்தில் உள்ளது.

ஆனால் குறைவான மதிப்பீடு சரியானதுதான் என்றாலும் கூட, அது பாகிஸ்தானின் ஒரு ஆண்டு தேசிய வரவு-செலவுத் திட்டத்தில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமானதாக உள்ளது.

"பாகிஸ்தான் அரசாங்கம் தனது சீர்திருத்த திட்டங்களின் கீழ் பொருளாதார உறுதித்தன்மையை நோக்கியும், வரி கட்டமைப்பை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பொருளாதார புதுப்பித்தலை தொடரவும், அதிகபட்ச சாத்தியமான பருவ வளர்ச்சியை ஏற்படுத்தவும், அதிகப்படுத்தவும் இதர தேவையான கட்டமைப்பு நடவடிக்கைகளை எடுத்து தொடர்ந்து மேற்கொள்கிற முயற்சிகள்" வெள்ளப் பாதிப்பை சமாளித்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் மக்களின் கோரிக்கைகளை எதிர்கொள்வதை இன்னமும் தடுக்க முடியவில்லை.

இது, நடப்பு நிதியாண்டு காலத்திற்குள்ளாகவே எரிசக்தி விலைகளுக்கான அனைத்து மானியங்களிலிருந்தும் விலக வேண்டும், இல்லையெனில் அரசாங்க செலவினத்தை குறைக்கவேண்டும், மற்றும் ஒரு புதிய மதிப்பு-கூட்டு விற்பனை வரியை கொண்டுவரவேண்டும் என்று ஐஎம்எப் இன் மறுசீரமைப்புத் திட்டத்தை இஸ்லாமாபாத் விரைவுபடுத்துவதற்கான கோரிக்கையாக உள்ளது. 2008 இலையுதிர் காலத்தில் பேச்சுவார்த்தை செய்த கடைசிப் பகுதி 1.3 பில்லியன் டொலர் கடனை ஐஎம்எப் தாமதப்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத்தால் இந்த சமூக கேடுவிளைவிக்கும் நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்ட பின்னர் இந்த நிதி வழங்கப்படும் என்று அது வலியுறுத்துகிறது.

அதிக பேரங்களுடன், பாகிஸ்தானுக்கு பல நூறு மில்லியன் டாலர்களை அளிப்பதாக ஒபாமா நிர்வாகம் உறுதியளித்துள்ளது. ஆனால் 2009 ல் அமல்படுத்தப்பட்ட, Kerry-Lugar மசோதா, ஐந்தாண்டு உதவித் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்து இந்த நிதியை அது எடுக்கிறது. மேலும் பாகிஸ்தானின் மிகப்பெரிய ஏற்றுமதி -வருவாய் ஆக திகழும், பாகிஸ்தான்- தயாரிப்பு பருத்தி பொருட்களுக்கான வரியை குறைக்கவேண்டும் என்ற இஸ்லாமாபாத்தின் நீண்டகால கோரிக்கையை அமெரிக்கா தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருந்துவருகிறது.