WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Obama press conference
Lies and evasions in defense of BP
ஒபாமா செய்தியாளர் கூட்டம்
பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு ஆதரவான பொய்களும், தட்டிக்கழித்தல்களும்
Patrick Martin
28 May 2010
Use this version to print | Send
feedback
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பின்னர் ஜனாதாபதி பாரக் ஒபாமாவால் வியாழனன்று நடாத்தப்பட்ட வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டம் அவருடைய நிர்வாகம் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு குற்றேவல் புரியும் அமைப்பு என்பதற்கு மாறாக வளைகுடா எண்ணெய்க் கசிவுப் பேரழிவில் ஒரு தீவிர நெருக்கடிக்கால நிர்வாகத் திறமையைக் காட்டியது என்று காட்ட பயன்பட்டது. எண்ணெய் பெருநிறுவனத்தின் இலாப உந்துதல்தான் அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவிற்குக் காரணம் ஆகும்.
"சீற்றம், வெறுப்பும்" என்று இப்பொழுது வாடிக்கையாகிவிட்ட சொற்களைத் தவிர, ஒபாமா பொருட்படுத்தா தன்மையைத்தான் காட்டினார். அவர் பேசுவதற்கு சற்று முன், ஏற்கனவே வளைகுடாவிற்குள் வெளியிடப்பட்டுள்ள எண்ணெயின் அளவு 1989 எக்சன் வால்டேஸ் எண்ணெய்க் கசிவை விட மிக அதிகமாயிற்று என்பதை உறுதி செய்த புதிய மதிப்பீடுகள் பற்றிய தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தன்னுடைய ஆரம்ப உரையில் இந்த உண்மை பற்றி ஒபாமா குறிப்பிடவில்லை.
அரசாங்கத்தின் செயற்பாடற்ற, கிட்டத்தட்ட எதையும் வெளியிடாத விடையிறுப்பு இப்பொழுது மிகவும் வெளிப்படையாகிவிட்ட நிலையில், அது ஜனாதிபதியின் சொந்தக் கட்சியில் இருந்தே குறைகூறலுக்கு உட்பட்டுவிட்ட பின்னர், ஒபாமா பிரிட்டிஷ் பெட்ரோலியம் அல்ல மத்திய அரசாங்கம்தான் Deepwater Horizon எண்ணெய் கிணறு கசிவை மூடும் செயலுக்குப் பொறுப்பு என்றும் மற்றும் நச்சுக் கச்சா எண்ணெயின் பெரும் வெளிப்பாட்டினால் தாக்கப்பட்டுள்ள, இப்பொழுது பெரும் ஆபத்துக்கள் நிறைந்துவிட்ட கடலோரப்பகுதியின் நூற்றுக்கணக்கான மைல்களை காக்கும் முயற்சிகள் பற்றிய கருத்துக்களில் தன்னுடையை கவனத்தை காட்டினார்.
"மத்திய அரசாங்கத்தால் தொழில்நுட்ப ரீதியாக நிதியம் அளிக்கப்படும் ஒரு குழு இயக்க அனுமதி பெற்றால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் நம்முடைய குழுக்கள் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை இயக்கும் விதிகளுக்கு அனுமதி பெற்றிருந்தன." என்று அவர் கூறினார்.
இந்தக் கூற்று உண்மை என்றால், கடந்த ஒரு மாதமாக பிரிட்டிஷ் பெட்ரோலியம் எடுக்கும் நடவடிக்கைகளான கசிவின் பரிமாணத்தை மூடிமறைத்தது, எண்ணெய் கிணறை மூடாமற் போனது மற்றும் தூய்மைப்படுத்தும் செயல்களை தீவிரமாக தடுத்தது போன்றவற்றிற்கு அவருடைய நிர்வாகம்தான் பொறுப்பு என்று அவர் அறிவித்துள்ளதால் அது ஒபாமாவிற்கு இன்னும் மோசமான விளைவைத்தான் தரும்.
உண்மை என்னவென்றால், வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு டிரில்லியன் டாலர் பிணையெடுப்புக் கோரிக்கையின் எதிரே கைகட்டி வாய்புதைத்து வணங்கி நின்றது போல்தான் அமெரிக்க அரசாங்கம் மாபெரும் சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் சக்திக்கு முன் இப்பொழுதும் நிற்கிறது. அரசாங்கத்தின் மீதான கட்டுப்பாட்டை மாறிமாறிக் எடுத்துக்கொள்ளும் இரு கட்சிகளும் பெரு வணிகத்தின் அரசியல் அமைப்புகளாகும். இவற்றின் முன்னுரிமை, அதுவும் குறிப்பாக ஒரு நெருக்கடிச் சூழ்நிலையில், நிதிய பிரபுத்துவத்தின் நலன்களை பாதுகாப்பதாகும்.
செய்தியாளர் கூட்டத்தில் தான் கூறிய கருத்துக்களில், ஒபாமா "எண்ணெய் நிறுவனங்களுக்கும் அவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பிற்கும் இடையே நெருக்கமான ஊழல் நலிந்த உறவுகள், அப்பட்டமான, அவதூறுகள் நிறைந்த நெருக்கமான உறவு உள்ளது" என்பதை ஒபாமா ஒப்புக் கொண்டார். ஆனால் இந்த உறவு புஷ் நிர்வாகத்தின்கீழ் நிறுவப்பட்டது என்றும் தற்பொழுது இல்லை என்றும் கருத்துக் கூறினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற செய்தி ஊடக நிகழ்வில் அவர் கூறிய பல பொய்களில் அதுவும் ஒன்றுதான்.
ஒபாமாவும் அவருடைய உள்நாட்டு செயலாளருமான பென் சலாசரும்--எண்ணெய் தொழில்துறை மீது மிகவும் கட்டுப்பாட்டை வைத்ததாக புஷ் நிர்வாகத்தை வலதில் இருந்து குறைகூறிய சான்றுகளைக் கொண்டவர். இவர்கள் கடந்த 16 மாதங்களில் வளைகுடாப் பகுதியில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதற்கு பல நடவடிக்கைகள் எடுத்தனர் என்பதைச் சான்றுகள் காட்டுகின்றன.
உலக சோசலிச வலைத் தளம் அதன் மே 10ம் திகதிப் பதிப்பில் குறிப்பிட்டது போல் ("Obama administration blocked efforts to stop BP oil drilling before explosion"), நிர்வாகம் மெக்சிகோ வளைகுடா எண்ணெய் தோண்டுதலுக்கு ஆதரவாக ஒரு மத்திய நீதிமன்ற வழக்கில் தலையீடு செய்தது. குறிப்பாக சலாசர் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் Deepwater Horizon செயற்பாடுகள் பற்றி அது அனுமதிக்கப்பட வேண்டியவற்றுள் ஒன்று என்று கூறியிருந்தார்.
ஒபாமா பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு அதன் Deepwater Horizon வலைய தோண்டுதலுக்கு சுற்றுச்சூழல் விதிவிலக்கு அளித்த சில நாட்களுக்குள் கொடுக்கப்பட்ட ஒரு ஆரம்ப நீதிமன்றத் தீர்ப்பு, வளைகுடாப் பகுதியில் எண்ணெய் கிணறு தோண்டுதல் அதன் பாதிப்பு பற்றிய போதுமான ஆய்வு இல்லாமல் நடத்தப்படுகிறது என்று கூறியது. இதன்பின் ஜூல் 2009ல் அளிக்கப்பட்டிருந்த ஒரு நீதிமன்றத் தீர்ப்பை சலாசர் பாராட்டினார். அது பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் திட்டத்தைச் செய்லபடுத்தும்படி கூறியதனூடாக அமெரிக்க வளைகுடா கடலோரப்பகுதி பெரும்பாலானவற்றை சுற்றுச்சூழல் பேரழிவிற்கு உட்படுத்திவிட்டது.
பேரழிவிற்கு பதிலளிக்க ஒபாமா முன்வைக்கும் திட்டங்கள் எண்ணெய் ஏகபோக உரிமை நிறுவனங்களுக்கு நிர்வாகம் தாழ்ந்திருக்கும் தன்மைக்கு இன்னமும் கூடுதலான நிரூபணம் ஆகும். புதிய ஆழ்கடல் கிணறுகள் ஆறு மாத காலத்திற்கு தோண்டப்படக்கூடாது என்று தடுப்பு உத்தரவை தான் நீட்டிக்க இருப்பதாக கூறிய அவர் அலாஸ்கா, வேர்ஜீனியா மற்றும் மேற்கு வளைகுடா பகுதியில் புதிய திட்டங்கள் ஒத்திப் போடப்படும் அல்லது இரத்து செய்யப்படும் என்று கூறினார்; பரந்து விரிந்துள்ள மக்கள் சீற்றச் சூழ்நிலையில் தற்பொழுது வெள்ளை மாளிகை குறைந்த பட்சம் இதைத்தான் செய்யமுடியும். மேலும் 33 "ஆய்வு" தோண்டுதல்களும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்தது; ஆனால் அப்பகுதியில் பெரும்பாலான எண்ணெய்க் கிணறு தோண்டுதல்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது குறிப்பிடப்படவில்லை.
பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு எதிராக அல்லது எண்ணெய் தொழில்துறைக்கு எதிராக எவ்வித அபராத நடவடிக்கைகளையும் ஜனாதிபதி அறிவிக்கவில்லை. எண்ணெய் தொழில்துறை "ஊழல்" உறவுகளை மத்திய ஆட்சி அதிகாரிகளுடன் கொண்டிருந்தது என்பதை ஒப்புக்கொண்ட ஒபாமா எந்த பெருநிறுவன நிர்வாகியும் அத்தகைய நடவடிக்கைக்கு குற்ற விசாரணையை ஏற்க வேண்டும் என்று கூறவில்லை.
மாபெரும் சர்வதேச எண்ணெய் நிறுவனத்தின் மீது மில்லியன் கணக்கான மக்கள் கொண்டிருக்கும் சீற்றத்தையும், வெறுப்பையும் வெளிப்படுத்தும் தன்மையை ஒபாமா கொண்டிருக்கவில்லை அல்லது விரும்பவில்லை என்று தோன்றியது. மாறாக, பொது மக்கள் உணர்வுகளுக்கு அக்கறைகாட்டாது கிட்டத்தட்ட ஆத்திரமூட்டும் தன்மையில் வந்த சொற்களில், "பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் நலன்கள் பொது நலன்களுடன் பிணைந்தவை. கிணறு மூடப்பட வேண்டும் என்பதில் அதுவும் பகிர்ந்து கொள்ளுகிறது. அவர்கள் வணிகத்திற்கும் இது மோசம், அவர்கள் நிலைப்பாட்டிற்கும் இது மோசமானது. மிக அதிக அளவு இழப்பீட்டை அவர்கள் கொடுத்தாக வேண்டும்."
முக்கிய ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளிடம் இருந்து பிரிட்டிஷ் பெட்ரோலிய நிர்வாகிகள் கைது செய்யப்பட வேண்டும், விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும், சிறையில் அடைக்கப்பட வேண்டும் அல்லது மகத்தான சர்வதேச நிறுவனத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அது சொல்லொணா சேதம் விளைவித்ததற்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் போன்ற அழைப்புக்கள் வரவில்லை. பிரிட்டிஷ் பெட்ரோலிய நிர்வாகிகளையே கசிவை மூடுவதற்கு பயன்படுத்திய முடிவு பின்னர் வந்த நிலைமைகளை அடுத்து அப்படிக் கோரியிருந்தால் அது வெகுஜன ஆதரவைப் பெற்றிருக்கும். அவ்வாறான ஒரு முடிவு எப்படியும் அத்தகைய விருப்புரிமை நலன்கள் நிறைந்த விளைவுகளைத்தான் கொடுத்திருக்கும்.
பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் இதேபோல் பொதுமக்கள் கோபத்திற்கு செவிமடுக்கவில்லை. ஒபாமாவின் செய்தியாளர் கூட்டத்தில் ஊடகப் பிரதிநிதிகளிடம் இருந்து ஒரு கேள்வி கூட பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு எதிராக அபராத நடவடிக்கைகள் வேண்டும் என்ற கருத்தைத் தெரிவிக்கவில்லை. இந்த மௌனம் இன்னும் குறிப்பிடத்தக்க விதத்தில் முக்கியமானது. ஏனெனில் கடந்த சில நாட்களாக முக்கிய நாளேடுகளான நியூயோர்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூட பரந்த அளவில் பிரிட்டிஷ் பெட்ரோலிய அதிகாரிகளின் நடவடிக்கைகள் Deepwater Horizon வெடிப்பிற்கு முன்னரான நாட்கள், மணித்தியாலங்களில் எப்படி இருந்தன என்பது பற்றி பரந்த அளவில் செய்திகள் அம்பலப்படுத்தி வந்திருந்தன. அவை குற்றம் சார்ந்த புறக்கணிப்பைத்தான் காட்டியிருந்தன.
Fox News இல் இருந்து வந்த ஒரு கேள்வி ஒபாமா நிர்வாகத்தின் வனப்புரை சில மிக அதிகமான பெருநிறுவன விரோதப் போக்கு பற்றி குறைகூறியது. சலாச் "அவர்கள் தொண்டையின் மீது பூட்சை அழுத்தவேண்டும்" என்று கூறியது. சலாசர் கருத்தை விரைவில் ஒபாமா ஒதுக்கித் தள்ளிய விதத்தில் "அத்தகைய சொல்லாட்சியை நாம் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை" என்று கூறிவிட்டார்.
அத்தகைய சொல்லாட்சி மிகைப்படுத்தப்பட்டது என்பதற்கு அப்பாற்பட்டு, மில்லியன் கணக்கான மக்கள் பெருமந்த நிலைக்குப் பின்னர் மிக ஆழ்ந்த பொருளாதார சரிவு மற்றும் மிகப் பெரிய நிதிய நெருக்கடியை முதலில் தோற்றுவித்த மாபெரும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பற்றியும், இப்பொழுது அமெரிக்க வரலாற்றில், ஒருவேளை உலக வரலாற்றில் என்று கூட கூறலாம், மிகப் பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது பற்றியும், உணர்ந்திருக்கும் வெறுப்புணர்ச்சியின் மங்கிய பிரதிபலிப்புத்தான் இது.
கட்டுரையாளர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்;
இலாப முறையும் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவன எண்ணெய் கசிவுப் பேரழிவும்
பிரிட்டிஷ் பெட்ரோலிய எண்ணெய்க் கசிவு
பற்றி ஒபாமாவின் சீற்றமும் அதிருப்தியும் |