WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Gulf oil spill: Why is BP in charge?
வளைகுடா எண்ணெய் கசிவு: ஏன் BP இதற்கு பொறுப்பைக் கொண்டுள்ளது?
Tom Eley
27 May 2010
Back to screen version
டீப்வாட்டர் ஹொரைசன் (Deepwater Horizon) எண்ணெய் தோண்டி எடுத்தலில் ஏற்பட்ட ஆபத்தான வெடிப்பை தோற்றுவித்த BP யின் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளானது சமீபத்திய காங்கிரஸ் விசாரணையில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டதோடு அதன் கசிவை எதிர்கொண்ட விதத்தில் இருக்கும் திறமையின்மை மற்றும் பேராசை ஆகியவை மக்களின் சீற்றத்தை பெருகிய முறையில் தூண்டிவிட்டுள்ளன. அதன் நிர்வாகிகள் கைவிலங்கிடப்பட்டு, போலீஸ் கார்களில் ஏற்றப்படுதல், அவர்கள் பாஸ்போர்ட் இரத்து செய்யப்படல், அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படல் மற்றும் BP யின் பரந்த இருப்புக்கள் முற்றிலும் கசிவை நிறுத்துவதற்கும் மெக்சிகோ வளைகுடாவை தூய்மைப்படுத்துவதற்கும் உபயோகிக்கப்படல் ஆகிய வீடியோ காட்சிகளை தாங்கள் ஏன் இன்னமும் காணவில்லை என்றுதான் மில்லியன் கணக்கான மக்கள் வியந்து நிற்கின்றனர்.
இதற்கு மாறாக ஒபாமா நிர்வாகம் ஆரம்பத்தில் இருந்தே, BP கசிவுத் தளம் மற்றும் தூய்மைப்படுத்தலுக்கு முழு அதிகாரத்தையும் கொண்டிருக்கும் என்று வலியுறுத்தி வந்துள்ளது. BP தான் இதைக் கையாள்வதற்கான திறனைக் கொண்டுள்ளது என்று நிர்வாகத்தின் அதிகாரிகள் பலமுறை கூறிவருகின்றனர்.
இது அப்பட்டமான அபத்தமாகும். அதுவும் பல்லாயிரக்கணக்கான வேலை இழப்புக்கள் மற்றும் முன்னோடியில்லாத அளவிற்கு ஒரு சுற்றுச்சூழல், தாவர விலங்குகளின் சூழலுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ள தன்மையில் குற்றம் இழைத்தவரையே குற்றத் தளத்திற்குப் பொறுப்பாக்குவதற்கு ஒப்பாகும்.
லூயிசியானா கடலோரப் பகுதியில் இருந்து பெருங்கடல் அடிப்பகுதியில் ஏற்பட்டுள்ள கசிவை நிறுத்தும் முயற்சியில் எண்ணெய் பெருநிறுவனமானது ஒரு சங்கடத்தில் இருந்து அடுத்த சங்கடத்திற்கு தடுமாற்றம் அடைந்து நிற்பதுடன் அதன் முயற்சிகள் ஒவ்வொரு கட்டத்திலும் இலாப நலன்கள் என முதலாளித்துவத்தின் கீழ் உள்ள மற்ற பிரச்சினைகளை அமுக்கிவிடும் தன்மையினால் ஆபத்திற்கு உள்ளாக்கக்கூடிய சமரசத்திற்கும் உட்பட்டுள்ளன. டீப்வாட்டர் ஹொரைசன் பேரழிவு குருட்டுத்தன இலாப உந்துதலால் தோற்றவிக்கப்பட்டுள்ளதைப் போல், BP யின் விடையிறுப்பும் அந்த இலாப நலன்களைக் காப்பதை முதன்மையாகக் கொண்டுள்ளது.
வெடிப்பிற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னர் BP கடந்த வாரம் அதன் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஹேவர்ட் கூறிய “மிக, மிகச் சுமாராக” பாதிப்பு இருக்கும் என்ற கூற்றை முரண்பாட்டிற்கு உட்படுத்திய வீடியோ சாட்சியத்தை மறைத்தது.
ஆயிரக்கணக்கான வளைகுடா கடலோர மீன்பிடிப்பவர்கள் கசிவினால் வேலையிழந்து நிற்கின்றனர். இவர்களுக்கு வேலையின்மை காப்பீட்டுத் தொகைக்கான வாய்ப்பும் இல்லை. அவர்களும் அவர்களுடைய படகுகளும் தூய்மைப்படுத்தவதில் இணைந்து கொள்வதற்குத் தயாராக உள்ளனர். ஆனால் BP ஒரு சிறிய சதவிகிதத்தினரைத்தான் வேலைக்கு எடுத்துள்ளது—அதுவும் நஷ்ட ஈட்டிற்கான அவர்கள் உரிமைகளை மீனவர்கள் கைவிட்டுவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்.
BP கிட்டத்தட்ட 800,000 கலன்கள் இராசயன கலைப்புப் பொருளான Corexit ஐப் பயன்படுத்தியுள்ளது. இது சந்தையில் எளிதில் கிடைக்கும் மற்ற கலைப்பான்களைவிட அதிக நச்சுத் தன்மை கொண்டது, ஆனால் குறைந்த திறமையைத்தான் கொண்டது. Corexit ன் ஒரே ஆதாயம் அதை விற்கும் நிறுவனமான நால்கோ ஆனது BP மற்றும் எக்சோன் நிறுவனங்களுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்ட நிர்வாகிகளின் ஆதிக்கத்தில் அது இருப்பதுதான்.
இன்னும் திறமையான வழிவகைகள் எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்தி அகற்றுவதற்கு பயன்படுத்தியிருக்க முடியும்—உதாரணமாக உறிஞ்சிக் கொள்ளும் ஏற்றக் கொடிகள் எண்ணெயை தோய்த்து எடுத்திக் கொள்ளும். எண்ணெய் மேலும் கீழும் கடந்து விட வகை செய்துவிடும் பிளாஸ்டிக் ஏற்றங்கள் போல் இல்லாமல். அதே போல் அதையொட்டி வளைகுடா கடலோரப் பகுதி முழுவதும் தடுப்புத் தீவுகள் ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் இவையும் மற்றய வாய்ப்புக்களும் செலவினங்களை ஒட்டித் தட்டிக் கழிக்கப்பட்டுவிட்டன.
கசிவுத் தொடர்புடைய செலவுகளில் இதுவரை $760 மில்லியனை செலவழித்துள்ளதாக BP கூறியுள்ளது. இது உண்மையாக இருந்தாலும், ஒப்புமையில் அது குறைவான பணம்தான். பான்மியர் கோர்டனின் பீட்டர் ஹிச்சென்ஸ் வோல் ஸ்ட்ரீட் ஜர்னலிடம், BP எளிதில் $20 பில்லியன் செலவை கசிவு தொடர்புடைய செலவுகளில் “ஏற்றுக் கொண்டிருக்க முடியும்” என்றார். “இதை ஒரே ஒருமுறை நடக்கும் செயலாகத்தான் BP காண விரும்பும்” என்றும் அவர் கூறினார்.
இக்கசிவு வரவிருக்கும் BP பங்குதாரர்களுக்குக் கொடுக்க இருக்கும் நிதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. டீப்வாட்டர் ஹொரைசனின் உரிமையாளரும் செயல்படுத்தும் நிறுவனமும் ஆன டிரான்ஸ் ஓஷன் சமீபத்தில் அதன் பங்குதாரர்களுக்கு $1 பில்லியனை இலாபமாகக் கொடுத்தது. வெடிப்பில் இறந்து போன, காயமுற்ற தொழிலாளிகள் குடும்பங்களுக்கு அதன் பொறுப்பை வரம்பிற்குட்படுத்த அது நீதிமன்றத்தில் $27 மில்லியனுக்குள் நிறுத்த வழக்காடினாலும், நிலைமை இப்படித்தான் உள்ளது.
பேரழிவின் தன்மை ஒவ்வொரு நாளும் அதிகமாகத் தெரிகையில், ஒபாமா நிர்வாகத்தின் வலியுறுத்தலான BP கசிவுக் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது, ஆளும் வட்டாரங்களிடைய பதட்டத்தைத் தூண்டியுள்ளது. செனட்டர் டெனசியின் லாமர் அலெக்சாண்டர் வார இறுதிச் செய்திக் கூட்டத்தில் “இருக்கும் சட்டத்தின்படி கூட்டாட்சி அரசாங்கம் விரும்பினால் இக்கசிவு விவகாரத்தை எடுத்துக் கொண்டுவிடலாம்” என்றார். நீண்டகால ஜனநாயக கட்சியின் மூலோபாயம் இயற்றுபவர், லூயிசியானாவின் ஜேம்ஸ் கார்வில்லே ஒபாமாவுடன் வாதிட்டார்: “நீங்கள் இங்கு வந்து இதன் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பொறுப்பாக எவரையேனும் நியமிக்க வேண்டும். இதை விரைவில் செயல்படுத்த வேண்டும்.” என்றார். “நாங்கள் இங்கு இறக்க உள்ளோம்.”
கசிவு பற்றி மக்களுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது பற்றி அரசியல்வாதிகள் எச்சரிக்கை அடைந்துள்ளனர். சமீபத்திய USA Today/Gallup கருத்துக் கணிப்பின்படி அமெரிக்கர்களில் 60 சதவிகிதத்தினர் இப்பொழுது பேரழிவிற்கு கூட்டாட்சி அரசாங்கத்தின் விடையிறுப்பு “மட்டமானது” என்று மதிப்பிட்டுள்ளனர். கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் BP யின் எதிர்கொள்ளல் பற்றியும் அவ்வாறே கூறியுள்ளனர்.
ஒபாமா நிர்வாகத்தின் விடையிறுப்பில் நிரந்தரமாக இருக்கும் கூறுபாடு—பேரழிவிற்குப்பின் முதல் நாட்களில் ஆழ்கடல் தோண்டுதலைக் காப்பதற்கு உரக்கக் குரல் கொடுத்ததில் இருந்து பெருநிறுவன நலன்கள் பற்றிய உட்குறிப்புக்கள்மீது செயலற்ற குறைகூறல்கள் வரை—BP தான் கட்டுப்படுத்தும் பொறுப்பைக் கொள்ளும் என்று உள்ளது. ஏன்?
கடந்த சில தசாப்தங்களாக அமெரிக்க முதலாளித்துவமானது பெருநிறுவனம் இலாபத்தை அடைவதற்கு குறுக்கே இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து வரம்புகளையும் அகற்றுவது என்ற தளத்தைக் கொண்டுள்ளது. கட்டுப்பாடுகள் அகற்றுவது—பெரிய தொழில்துறை நலன்களை தங்கள் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் செயல் ஆகியவற்றை அவையே மேற்பார்வையிடச் செய்துள்ளது—பொருளாதாரத்தின் மீது ஒரு இறுக்கமான பிடியைக் கொண்டுவந்துள்ளது. நிதிப்பிரிவு, ஏயர்லைன்ஸ், எரிசக்தித் துறை அனைத்திலும் கட்டுப்பாட்டுத் தளர்வானது அமெரிக்க மக்களுக்கு பேரழிவைத்தான் தோற்றுவித்துள்ளது.
அரசாங்கம் மற்றும் அதன் அனைத்துப் பிரிவுகளின் முழுக் கருவிகளும், இரு முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் அவை விலைக்கு வாங்கியுள்ள அரசியல்வாதிகளும், பெருவணிகம் மற்றும் வோல் ஸ்ட்ரீட் கட்டமைப்புடன் ஆழ்ந்த முறையில் ஒருங்கிணைந்துள்ளது. அவர்களை முற்றிலும் பெருநிறுவன நலன்களுக்குத் தாழ்த்திக் கொண்டது, அரசாங்கக் கட்டுப்பாட்டை உறுதி செய்வது என்பதை நினைத்தும் பார்க்க முடியாததாகச் செய்துவிட்டது.
இச்சூழ்நிலையில், ஒபாமா நிர்வாகம் மிகச் சிறிய அரசாங்கக் கட்டுப்பாடானது கசிவு பற்றி வந்தாலும், அது இதே போன்ற நடவடிக்கை பொருளாதாரத்தின் மற்ற துறைகளிலும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையைத் தூண்டிவிடும் என்று அஞ்சுகிறது. பொதுச் சொத்துக்கள் டிரில்லியன்கள் இழப்பு என்ற நிலையில், பொருளாதாரத் “தூய்மைப்படுத்துதலுக்கு” கட்டுப்பாட்டை எந்த நிதிய நலன்கள் உலகைப் பொருளாதாரச் சரிவிற்கு கொண்டு சென்றதோ, அதனிடமே ஏன் விட்டுவைக்க வேண்டும்?
அமெரிக்க கடலோரப் பாதுகாப்புப் பிரிவின் தளபதி தாட் ஆலென் இந்த வாரம் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் BP கசிவைச் சமாளிக்க முடியும், ஏனெனில் “அதுதான் உற்பத்தி வகைக்கு உரிமையாளர்” என்று அறிவித்த விதத்தில் வாய்தவறி மைய நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார். ஆனால் BPயோ அல்லது எந்த நிறுவனமோ உற்பத்தி வழிவகையின்மீது உரிமை கொண்டாட அனுமதிக்கப்பட வேண்டும், இவை தொழிலாளர் வர்க்கத்தின் கூட்டு உழைப்பில் விளைந்ததாக இருக்கும்போது, அவை ஏன் தலைமை நிர்வாக அதிகாரிகள், வங்கியாளர்கள், பெரு முதலீட்டாளர்களின் நலன்களுக்காகவும் இலாபத்திற்காகவும் முற்றிலும் பயன்படுத்தப்பட வேண்டும்?
உண்மையில் வளைகுடாப் பேரழிவு எண்ணெய்க் கசிவைத் தோற்றுவித்த குற்றவாளிகளின் கரங்களில் இருந்து உற்பத்தி வழிவகைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று உரக்கத் தெரிவிக்கிறது.
இப்பேரழிவு ஒரு புறநிலை, விஞ்ஞான மதிப்பீடு என்ன நடந்தது என்பது பற்றி மேற்கொள்ளப்பட்டு அதன் தளத்தில்தான் சுற்றுச்சூழல், பொருளாதாரச் சேதம் எவ்வாறு கையாளப்படவேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும். இதற்கு ஒரு சமூக விடையிறுப்பு தேவை, பல ஆயிரக்கணக்கானவர்கள் மிகச் சிறந்த விஞ்ஞான அறிவைக் கொண்டு வழிநடத்தப்பட வேண்டும்.
அத்தகைய பெரும் முயற்சிக்கான இருப்புக்கள் எளிதில் BP, டிரான்ஸ் ஓஷன் மற்றும் ஹாலிபரட்டன் ஆகியவற்றின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதின் மூலம் அடையமுடியும். அவற்றின் நிர்வாகிகளுடைய தனிப்பட்டச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு குற்ற விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நிதிய நிறுவனங்களைப் போலவே பெரும் எரிசத்தி நிறுவனங்களும் தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் இருத்தப்பட்டு தனியார் இலாபத்தைத் தோற்றுவிப்பதற்கு என்று இல்லாமல் சமூகத் தேவைகளை நிறைவு செய்யச் செயல்படுத்தப்பட வேண்டும். இத்தகைய அடிப்படையில்தான் மக்களுடைய எரிசக்தித் தேவைகள் மலிவாகவும், பாதுகாப்பாகவும் பூர்த்தி செய்யப்பட முடியும்.
இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இன்னும் அதிக கசிவுகளும், சுற்றுச்சூழல் பேரழிவுகளும் ஏற்படும். அவை நாகரிகம் தப்பிப் பிழைப்பதையே வினாவிற்கு உட்படுத்தும். சுருங்கக் கூறின், டீப்வாட்டர் ஹொரைசன் சோசலிசத்திற்கான உடனடித் தேவையை எழுப்புகிறது. |