WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
Global markets plunge as eurozone crisis deepens
யூரோப்பகுதி நெருக்கடி ஆழ்கையில் உலகச் சந்தைகள் சரிகின்றன
By Nick Beams
21 May 2010
Back to screen version
யூரோப்பகுதி நெருக்கடி முழு சர்வதேச நிதிய முறையின் உறுதியையும் அச்சுறுத்தக்கூடும் என்று பெருகிய கவலைகளில் மூன்றாம் நாளாக உலகச் சந்தைகள் நேற்று சரிந்தன.
ஆசியாவில் தொடங்கி வோல்ஸ்ட்ரீட்டின் Dow Jones 376 புள்ளிகளால் அதாவது 3.6 சதவிகிதம் குறைந்த்து. இன்று சந்தைகள் திறக்கும்போது சரிவு தொடரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கடந்த 3 தொடர்நாட்களாக வோல் ஸ்ஸரீட் 825 புள்ளிகள் வீழ்சியடைந்துள்ளது.
மே 6ம் திகதி "திடீர் சரிவு" என்று அழைக்கப்பட்ட மட்டங்களை சந்தை அடைந்துகொண்டிருக்கிறது; அப்பொழுது அது 20 நிமிடங்களுக்குள் 1,000 புள்ளிகள் சரிந்தது. ஆரம்பத்தில், இச்சரிவு "தடித்த விரல்" பிழை தகவல், அதாவது கணினியில் பிழையாக தட்டச்சு செய்ததால் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் பத்திரங்கள், அத்தகைய நிகழ்விற்கு எந்த சான்றையும் கொடுக்கவில்லை.
ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்ட ஒரு நிதிய வணிகரின் கூற்றின்படி, "முக்கிய செயற்பாடு வோல் ஸ்ட்ரீட் சரிவு ஐரோப்பாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அங்கு இன்னும் கடன் நெருக்கடி வங்கி முறைக்கு பரவக்கூடும் என்ற அச்சங்கள் உள்ளன.
மத்திய வங்கிக் கூட்டமைப்பின் ஆளுனர் டான் டாருல்லோ அமெரிக்கக் காங்கிரஸிடம் யூரோப் பகுதி நெருக்கடியின் விளைவாக அமெரிக்க வங்கிகள் "தங்கள் கடன்களை லெஹ்மன் பிரதர்ஸ் திவாலை தொடர்ந்திருந்த நிதியச் சந்தை செயல்படாத்தன்மை கடுமையாக இருந்த நேரத்தில் செய்ததைப் போல் நிறுத்த, திரும்பப்பெறக்கூடும்" என்று கூறினார். அமெரிக்காவின் 10 பெரிய வங்கிகள் ஐரோப்பிய நாடுகளுடன் 60பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகொடுக்கல் வாங்கல்களை செய்வதாகவும், நிதிய பலத்தின் ஒரு நடவடிக்கையாக 9% அவர்களின் முக்கிய மூலதனத்தின் பகுதியாக இது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியம், மீட்புப்பொதியாக 750 பில்லியன் யூரோக்கள் (அமெரிக்க 1 ட்ரில்லியன்) சந்தைகளுக்கு தற்காலிக ஏற்றம் கொடுப்பதற்காக கொடுத்தது முற்றிலும் கரைந்துவிட்ட நிலையில், டாருல்லோ "இப்பொதி தங்களுடைய, உண்மையான, வேதனை தரும் யூரோப் பகுதியான நிதியச் சீர்திருத்தங்களுடைய தேவையை இறுதியில் தீர்க்காது" என்பதை முதலீட்டாளர்கள் அறிவார்கள் என்றார்.
அதிபர் அங்கேலா மேர்க்கெலின் ஜேர்மனிய அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ளாத யூரோப்பகுதி அங்கத்துவநாடுகளின் மீது பெரும் அபராதங்கள் சுமத்தப்பட வேண்டும் என்று கோரியிருப்பது ஏற்கனவே நிதிய ஒன்றியத்தில் உள்ள கணிசமான பிளவுகளை ஆழப்படுத்தும் என்ற அச்சங்களும் உள்ளன.
இந்தப் பிளவுகள் மே 10 அன்று ஐரோப்பிய ஒன்றிய மீட்புப் பொதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு திரைக்குப் பின்னால் நடந்த முரண்பாடுகளில் வெளிப்படையாயின; அவை பொதுப் பார்வைக்கு ஜேர்மனியில் ஒருதலைப்பட்ச இந்த வார முடிவான "அப்பட்டமான குறைந்த விற்பனையை" (Naked short selling) தடை செய்யும் முடிவில் வந்தது. இந்தப் பழக்கத்தின்படி வங்கிகளும் முதலீட்டு நிதியங்களும் சந்தையில் சரிவு ஏற்படும் என்று நம்புவதுடன் அப்பொழுது தாங்கள் சொந்தத்தில் வைத்திருக்காத பத்திரங்களை அல்லது கடன் வாங்கி வைத்திருக்காத பத்திரங்களையும் விற்பர், அதனால் முன்பு விற்றிருந்த பங்குகளை அவர்கள் வாங்குவதின் மூலம் இலாபத்தை அடையமுடியும் என்றும் நம்புகின்றன.
பைனான்சியல் டைம்ஸிடம் ஒரு பேட்டியில் இந்த நடவடிக்கையை ஆதரித்துப் பேசிய ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌய்பிள கடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டுமென்றால் நிதியச் சந்தைகள் கடுமையான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றார். "சந்தைகள் உண்மையில் கட்டுப்பாட்டில் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். எனவேதான் சந்தைச் செயல்முறை முறையாக செயல்படுவதற்கு நமக்கு திறமையான கட்டுப்பாட்டு முறை தேவை" என்று அவர் கூறினார்.
எனவே நிதியச் சந்தைகளின் எதிர்ப்பு பற்றிப் பின்னர் கேட்கப்பட்ட போது, ஷௌய்பிள நிருபர்களிடம் கூறினார்: "ஒரு சதுப்பு நிலத்தைச் சீராக்க வேண்டும் என்றால் நீங்கள் நிலைமை பற்றிய புறநிலை மதிப்பீட்டை ஒருபோதும் தவளைகளிடம் கேட்கமாட்டீர்கள்"
இந்த நடவடிக்கைகள் மட்டும் அதிகமாக ஏதும் செய்யா, ஏனெனில் அவை எளிதில் மாற்றுவழியில் கடக்கப்பட்டுவிடமுடியும். இதுதான் சந்தையின் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஏனெனில் அவை ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே உள்ள பிளவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
ஒரு பிரிட்டிஷ் அதிகாரி தடையை "பண்டிகை வெடிகள் போல்" என்று விவரித்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக பிரான்சின் நிதி மந்திரி கிறிஸ்டின் லாகார்ட், இந்த நடவடிக்கை "விவாதத்திற்கு உரியது, ஏனெனில் இது பற்றிய முந்தைய விவாதம் ஏதும் இல்லை". யூரோ அச்சுறுத்தலில் உள்ளது, பிணை எடுப்புப் பொதி ஒரு தற்காலிக உதவியைத்தான் கொடுக்கும் என்னும் மேர்க்கெலின் எச்சரிக்கைகள் இருந்தாலும் யூரோவிற்கு ஆபத்து ஏதும் இல்லை என்று இவர் வலியுறுத்தியுள்ளார்.
மேர்க்கெலின் யூரோவின் ஆபத்து பற்றிய கருத்துக்கள் மற்ற ஐரோப்பிய தலைவர்களிடம் இருந்தும் கடுமையான பிரதிபலிப்பை கொண்டுவந்தன. யூரோப்பகுதி நிதி மந்திரிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய லுக்சம்பேர்க்கின் பிரதம மந்திரி Jean-Claude Juncker, "என் கருத்துப்படி, சிலர் பேச முன்னர் நன்கு சிந்திப்பது சிறந்ததாகும்... சில நேரம் அவர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தாலே நல்லது" என்றார். பின்னர் அவர் இக்கருத்துக்கள் மேர்க்கெலுக்கு எதிரானவை அல்ல என்றும் வலியுறுத்தினார்.
பெல்ஜியத்தின் பிரதம மந்திரி Yves Leterme இன்னும் நேரடியாவே. "யூரோவை பாதுகாக்க ஒரு உடன்பாட்டை முடிவு செய்தோம். நாம் மேர்க்கெல் அம்மையார் போல் அதன் செயல்பாட்டுத்தன்மையை வினாவிற்கு உட்படுத்தக்கூடாது." எனக் கூறினார்
அமெரிக்கா மீது அதன் தாக்கம் இருந்தாலும், யூரோ நெருக்கடி சீனாவிலும், ஆசியாவின் மற்ற பகுதிகளிலும் கணிசமான பொருளாதாரச் சரிவு பற்றிய அச்சங்களை தூண்டியுள்ளது. சீன வணிக அமைப்பின் இயந்திரங்கள், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதிப் பிரிவுத்துறையின் தகவல் துறை இயக்குனரான க்வி ஜோங்யி, பைனான்சியல் டைம்ஸிடம், பல சீன நிறுவனங்கள் ரென்மின்பிக்கு எதிராக யூரோ 14.5 சதவிகிதம் இந்த ஆண்டு இதுவரை சரிந்ததால் "பெரும் இழப்புக்களை" அடைந்தன என்றார். முழு ஆய்வு இன்னமும் நடத்தப்படவில்லை என்றும், இழப்புக்கள் இயந்திர, மின்னணுப்பொருட்கள் ஏற்றுமதியுடன் நின்றுவிடவில்லை என்றும் அவர் கூறினார்.
சீனாவின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆகும்; கிட்டத்தட்ட 19.7 சதவிகிதம் அல்லது மொத்த ஏற்றுமதியில் இதன் பங்கு கடந்த ஆண்டு ஏற்றமதிகள் 236 பில்லியன் டாலர் என்று இருந்தன. யூரோவின் கடுமையான சரிவு அமெரிக்காவின் திட்டமான தன் சொந்த வணிக நிலைமை முன்னேற்றுவிக்க சீன நாணயம் மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற திட்டத்திற்கு முழுத்தடையாக உள்ளது.
வளர்ச்சியை குறைத்தால் ஐரோப்பிய நெருக்கடி கடுமையாக சீனாவிற்கு விற்பனை செய்யும் இருப்புக்கள் நிறுவனங்களின் இலாபங்களை பாதிக்கும் என்ற அச்சங்களும் உள்ளன. சுரங்கப் பெருநிறுவனமான Rio Tinto வின் தலைமை நிர்வாக அதிகாரி நான்காம் காலாண்டின் சீனாவின் வளர்ச்சியில் முக்கிய பாதிப்பை கடன் சந்தைகள் கொடுத்தது போல், 2008 நெருக்கடியின் மறு ஓட்டம் நிகழலாம் என்று தான் அஞ்சுவதாகக் கூறினார்.
இந்தக் கவலைகள் "ஆஸ்திரேலிய நாணயத்தை விற்கவும்" என்ற அலையில் பிரதிபலிப்பாகின்றன. அந்த அலை நிதியச் சந்தைகள் முழுவதும் ஊடுருவி, ஆஸ்திரேலிய டாலர் சரிவதற்கு வகை செய்துள்ளது. ஆஸ்திரேலிய நாணயம் கடந்த வாரம் இருந்த அமெரிக்க 90 சென்டுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்க 82.5 சென்ட்டுகள் என வீழ்ந்துவிட்டது. கடந்த மாத இறுதியில் அது அமெரிக்க 93 சென்டுகள் என்று இருந்தது. அதன் மதிப்பு சீனப் பொருளாதாரத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள நிலையில், அதன் தொழில்துறை மூலப்பொருட்கள் தேவையுடன் பிணைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய டாலர் அதிகமாக சிக்கலுக்குள்ளாகும் என்றுதான் கருதப்படுகிறது. கடந்த 10 நாட்களில் பெரிதும் சரிந்துள்ள அதன் மதிப்பு விரைவில் எழுச்சி பெற்று வரும் நிதிய, பொருளாதார ஆபத்துக்களின் முக்கியமான அடையாளம் ஆகும்.
|