World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

A government of the financial elite for the financial elite

British coalition government announces attack on public sector

நிதிய உயரடுக்கிற்காக நிதிய உயரடுக்கின் அரசாங்கம்

பிரிட்டிஷ் கூட்டணி அரசாங்கம் பொதுத் துறை மீது தாக்குதல்களை அறிவிக்கிறது

By Chris Talbot
25 May 2010

Back to screen version

கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த நிதி மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்ன் மற்றும் நிதித்துறையின் தலைமைச் செயலர் லிபரல் டெமக்ராட் டேவிட் லாஸ் இருவரும் அருகருகே நின்று திங்களன்று 6 பில்லியன் பவுண்டுகளுக்கான வெட்டுப் பொதிகளை அறிவித்தனர். இந்த அறிவிப்பு அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையிலும் “”ஒரு அதிர்ச்சி அலையை” தோற்றுவிக்கும் நோக்கத்தைக் கொண்டது என்று லாஸ் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வேலைகள், ஊதியங்கள் மற்றும் பிற நலன்களின் மீது திட்டமிட்ட தாக்குதலின் முதல் கட்டத்தைத்தான் பிரதிபலிக்கிறது. ஜூன் மாதம் அரசாங்கம் ஒரு நெருக்கடிக்கால வரவு-செலவுத் திட்டத்தை அறிவிக்கும், அதைத் தொடர்ந்து ஒரு விரிவான செலவு பற்றிய பரிசீலனை இலையுதிர்காலத்தில் நடத்தப்படும்.

லண்டன் நகர நிதிய வணிகங்கள் இந்த வெட்டுக்கள் தொகுப்பை வரவேற்றது. ஆனால் இன்னும் அதிக குறைப்புக்களை கோரியுள்ளது. காபிடல் எகனாமிக்ஸில் தலைமை ஐரோப்பிய பொருளாதார வல்லுனராக இருக்கும் லோய்ன்ஸ் கூறினார்: “இன்று புதிய அரசாங்கத்தால் விவரிக்கப்பட்டுள்ள திட்டமிட்ட திறமையான சேமிப்புக்கள் பனிப்பாறையின் உச்சியைத்தான் குறிப்பிடும். இன்னும் அதிக வெட்டுக்கள், அவற்றுடன் பெரும் வரிவிதிப்பு அதிகரிப்புக்கள் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்கு அவசியமாகும்.”

தேர்தலின்போது லிபரல் டெமக்ராட்டுக்களும் கன்சர்வேடிவ்களும் பொதுச் செலவுகளை உடனே குறைக்க தொடங்குவதின் தேவை பற்றி கருத்து வேறுபாடு கொண்டிருந்தன. ஜோர்ஜ் ஓஸ்போர்னும் டேவிட் லாஸும் இப்பொழுது தங்கள் கட்சிகளுக்கு இடையே முன்னால் இருந்த எப்பொழுது தொடக்குவது என்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் இப்பொழுது கிரேக்கத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் கரைந்துவிட்டன என்பதை தெளிவாக்கியுள்ளனர்.

“கிரேக்கத்தின் நிதிய நெருக்கடி, சந்தைகளின் நம்பகத்தன்மையை இழந்தால் அதற்காக அரசாங்கங்கள் கொடுக்க வேண்டிய விலையைக் காட்டியுள்ளது” என்று எகானமிஸ்ட் சுட்டிக் காட்டியுள்ளது. “புதிய அரசாங்கம் தீவிர செயற்பாட்டில் ஈடுபடும் என்னும் தேவை பற்றிய டோரிக்களின் கருத்துக்களுடன் லிபரல் டெமக்ராட்டுகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்…..”

இந்த வெட்டுப் பொதியானது கடந்த வாரம் கூட்டணியின் அரசாங்கத்திற்கான திட்டம் என்று போன வாரம் முடிவு செய்யப்பட்டதில் இருக்கும் முன்னுரிமையை பிரதிபலிக்கிறது. கன்சர்வேடிவ் பிரதம மந்திரி டேவிட் காமிரோனும் அவருடைய லிபரல் டெமக்ராட் துணைப் பிரதமருமான நிக் கிளெக்கும் டோரி வலதில் இருந்த சற்று பதட்டத்திற்கு இடையே வெளியிட்டனர். அந்த வலது தங்கள் இயல்பான வர்க்க நலன்கள் அரசாங்கத்தில் லிபரல் டெமக்ராட்டுக்கள் இருப்பதால் அந்நலன்கள் சற்று குறைக்கப்பட்டுவிடுமோ என்று பயந்தன. ஆனால் டெய்லி டெலிகிராப் உடனடியாக நன்கு அறிந்துள்ளபடி, “சில வெளிப்படையான லிப் டெம் சொல்லாட்சிக்குப்பின், கடின டோரி கொள்கைகள் கிட்டத்தட்ட துல்லியமாகத் தப்பி பிழைத்துள்ளன.”

காமிரோடனும் கிளெக்கும் கூட்டணி எதிர்கொண்டுள்ள மிக அவசரப் பணி 145 பில்லியன் பவுண்டுகள் பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறைச் செலவுகளை குறைப்பதாகும் என்று வலியுறுத்தியுள்ளனர். இப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்திற்கு சற்றே அதிகமாக உள்ளது. சற்று திருப்தியுடன் பைனான்சியில் டைம்ஸ், “ஊதியங்கள், கூடுதல் மணி நேரத்திற்கு சம்பளம் மற்றும் பணிநீக்கத்தில் இருந்து பாதுகாப்பு ஆகியவை பற்றிய கடின நிலைப்பாடு கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் டெமக்ராட் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருப்பதை விட அதிகமாகவே சென்றுள்ளது” என்று எழுதியுள்ளது.

கிரேக்கம் மற்றும் யூரோவிற்கு எதிரான சந்தைகளின் நடவடிக்கை கூட்டணி விரைந்து செயல்பட ஊக்கம் கொடுத்துள்ளது. இதற்கு உறுப்பினர்கள் ஏற்கனவே ஒரு பொது வர்க்க நிலைப்பாட்டைப் பகிர்ந்து கொள்ளுகின்றனர். புதிய காபினெட் உறுப்பினர்கள் 29 பேரில் 23 பேர் ஸ்டெர்லிங் மில்லியனர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. லிபரல் டெமக்ராட்டுகளில் செல்வந்தர்களின் விகிதம் டோரிக்களுடையதை போலவே உயர்ந்தது ஆகும். சுருங்கக் கூறின், இந்த அரசாங்கம் நிதிய உயரடுக்கிற்காக செயல்படும் நிதிய உயரடுக்கின் அரசாங்கம் ஆகும்.

டேவிட் லாஸ் ஒரு முன்னாள் முதலீட்டு வங்கியாளர் ஆவார். அவர் ஜே.பி.மோர்கனில் 1987ல் இருந்து 1992 வரை துணைத் தலைவராக இருந்து, பின் அமெரிக்க டொலர் மற்றும் ஸ்டெர்லிங் கருவுலங்களுக்கு பார்க்ளேஸ் டி ஜோட் வெட்டில் (Barclays de Zoete Wedd) நிர்வாக இயக்குனராகவும், தலைவராகவும் இருந்தார். லண்டன் சிட்டி நிதிய வணிகத்தில் இருந்து இவர் 28 வயதில் பெரும் சொந்தச் செல்வச் செழிப்புடன் ஓய்வு பெற்றார்.

ஆரம்பத்தில் லிபரல் டெமக்ராட், வின்ஸ் கேபிளை அரசாங்கத்தில் வணிக மந்திரியாக சேர்த்துக் கொள்வதில் சற்று தயக்கம் இருந்தது. கேபிளின் நியமனத்தில் லண்டன் நகரத்தில் நிலவிய “பீதியைப் பற்றி” டெய்லி டெலிகிராப் குறிப்பிட்டிருந்தது. இந்தக் கவலைக்குக் காரணம் கேபிள், வரி மிக வறியவர்களுக்கு அதிகப்படுத்தப்படலாம் என்று தெரிவித்திருந்ததுடன், வங்கியாளர்கள் போனஸ் பற்றி பேசியும் நிதியச் சீர்திருத்தத்திற்கு அழைப்பு விட்டிருந்ததும்தான்.

ஆனால் அரசாங்கத்தில் கேபிள் இடம் பெற்றிருப்பது பற்றிய கவலை அல்லது அவர் ஒரு நிதானப் போக்கிற்கான செல்வாக்காக நிரூபிப்பார் என்ற நம்பிக்கை தவறான ஆதாரம் உடையதாயிற்று. அவருடைய அமைச்சரகம் செலவினங்களில் மிகப் பெரிய குறைப்பை எடுத்துக் கொள்ளும் அதன் வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து அது 836 மில்லியன் பவுண்டுகளை இழக்கும். இது முழுப் பொதியிலும் மிகப் பெரிய ஒற்றைச் செயற்பாடு ஆகும்.

எப்படி இதை கேபிள் எதிர்கொண்டார் என்று வினவப்பட்டதற்கு டேவிட் லாஸ், கேபிள் தன்னுடைய பங்கிற்கு வெட்டுக்களில் ஈடுபட்டிருப்பது பற்றி “பெரும் மகிழ்ச்சியைத்தான் கொண்டார்” என்று குறிப்பிட்டார். “கேபிள் பற்றாக்குறைப் பருந்தின் உகந்த நபராகும்” என்றும் குறிப்பிட்டார்.

வணிகத் துறையில் வெட்டுக்களில் குறைப்புகளுடைய உட்குறிப்புக்கள் கூட்டணியின் உட்பூசல்களுக்கு அப்பால் செல்கின்றன. பிராந்திய வரவு-செலவுத் திட்டம் மற்றும் பல்கலைக்கழகங்களின் வரவு-செலவுத் திட்டம் இத்துறையின் வரம்பிற்குள் வருகின்றன. 82 மில்லியன் பவுண்டுகள் பல்கலைக்கழக வரவு-செலவு திட்டங்களில் இருந்து அகற்றப்படும், மற்றும் ஒரு 74 பில்லியன் பவுண்டுகள் வட்டார வளர்ச்சியில் இருந்து நீக்கப்படும்.

இதில் பாதிப்பிற்குட்படக்கூடிய பிரிவு ஷெபீல்டில் உள்ள Forgemasters ஆலையாகும். இது அதன் அணுசக்தித் தொழிலின் கூறுபாடுகளைக் கட்டமைக்க உதவுவதற்கு பிராந்திய வளர்ச்சிக் கடனை எதிர்பார்த்திருந்தது. இத்திட்டம் நூற்றுக்கணக்கான புதிய வேலைகளை தோற்றுவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மற்றொரு பெரும் பாதிப்பிற்கு உட்பட்ட துறை போக்குவரத்து ஆகும். இது சேமிப்பின் மூலம் 683 மில்லியன் பவுண்டுகளைப் பெற வேண்டும். இதன் பொருள் சாலைப் பராமரிப்பு மற்றும் கட்டமைத்தல் குறைக்கப்படுதல் தவிர்க்க முடியாது என்பதாகும், அதையொட்டி பல ஆயிரக் கணக்கான வேலைகள் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுவிடும்.

BBC யின் ஸ்டீபானி பிளாண்டர்ஸ் வெட்டுக்களில் 27 சதவிகிதம் மத்திய, உள்ளூர் அரசாங்கங்களுக்கு பணிபுரியும் தனியார் ஒப்பந்தக்காரர்கள் மீது விழும் என்று மதிப்பிட்டுள்ளார். ஓஸ்போர்னும் லாஸும் இந்த ஆண்டு எத்தனை பொதுத் துறை வேலைகள் அகற்றப்படும் என்று கூற மறுத்துவிட்டனர். சில மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கை குறைந்தது 300,000 என்றும் சில மிக அதிகமாக 700.000 என்றும் தேசிய சுகாதாரத் துறை மற்றும் பரந்த பொதுத்துறை எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது ஆகும் என்று தெரிவிக்கின்றன.

கல்வி மற்றும் சுகாதாரப் பிரிவுகளில் செலவுகள் பாதுகாக்கப்படும் என்று ஓஸ்போர்னும் லாஸும் கூறுகின்றனர். ஆனால் கூட்டணி மத்திய அரசாங்கம் உள்ளூர் அதிகாரங்களுக்குக் கொடுக்கும் மானியங்களில் இருந்து 1.165 பில்லியன் பவுண்டுகளைக் குறைக்கும் விருப்பத்தை கொண்டுள்ளது. சமூகங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் துறை அதன் வரவு-செலவுத் திட்டத்தில் 7.4 சதவிகிதக் குறைப்புக்களை எதிர்கொண்டுள்ளது. இது பள்ளிகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், சமூகப் பணிகள் மற்றும் தொடர்ச்சியான பல முக்கிய பொதுப் பணிகளைப்பாதிக்கும்—அதில் குப்பைகளைச் சேகரிப்பதும் அடங்கும். இதைத்தவிர, குழுக்களுக்கு தங்கள் வரவு-செலவு திட்ட ஒதுக்கீட்டில் கூடுதல் விருப்புரிமை கொடுக்கப்படும். அதையொட்டி செலவினங்களின் எப்பகுதியும் வேலி போடப்படமாட்டாது.

கல்வித்துறை, 670 மில்லியனை வெட்டுக்களில் கொள்ளும். கல்விச் செலவினம் பாதுகாக்கப்படும் என்ற போலித்தன உறுதி இருந்தபோதிலும், நிலைமை இதுதான். இக்குறைப்புக்கள் வீணடித்தலை குறைப்பதன் மூலம் சாதிக்கப்படும் என்று லாஸ் கூறினார். மேலும் பள்ளிகள் மற்றும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசாங்கத்தின் திட்டமான Sure Shot பாதிப்பிற்கு உட்படுத்தப்பட மாட்டாது என்றும் கூறினார் ஆனால் பள்ளி நிதியத்தின் முக்கிய பகுதிகளான கணணித்துறை போன்றவை அரசாங்கத்தின் தாக்குதல் பட்டியலில் உள்ளன. பள்ளிகள் பெருகிய முறையில் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் நிதியெழுப்பும் முயற்சிகளை நவீன கல்விக்கு மிக அடிப்படையான தொழில்நுட்பத்திற்கு தேவையானவற்றிற்கு நம்ப வேண்டியிருக்கும்.

தேசிய பாதுகாப்பு சேவையை (NHS) பொறுத்தவரை, கூட்டணியின் உறுதிமொழி முன்னணியில் இருக்கும் பணிகள் காக்கப்படும் என்று கூறியிருப்பது ஒரு மோசடி ஆகும். ஏற்கனவே 20 மில்லியன் பவுண்டுகள் பற்றாக்குறை நிதியில் தொழிற் கட்சி அரசாங்கத்தின் செயலினால் உள்ளது. அது சுகாதார செலவுகளை முடக்கி வைத்தது. இருக்கும் திட்டங்களின் கீழ் கிட்டத்தட்ட 100,000 NHS ஊழியர்கள் வேலையிழப்பை எதிர்நோக்குகின்றனர். சில பகுதிகளில் NHS ல் 10 சதவிகித ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்.

செலவுக் குறைப்பு நடவடிக்கைளில் மருத்துவமனைப் பகுதிகள் மூடப்படல், அவசர சிகிச்சை வசதிகள் மூடப்படல் மற்றும் சிகிச்சைக்கான வாய்ப்புக்களைக் குறைத்தல், சிகிச்சை மறுப்புக்களாக மூட்டுகள் மாற்றும் சத்திர சிகிச்சை மறுக்கப்படல், சில சுகாதாரப் பகுதிகளின் பொறுப்பை சமூக நலத் துறைகளுக்கு மாற்றுவது ஆகியவை அடங்கியுள்ளன. லண்டன் மட்டும் தேசிய சுகாதார சேவை (NHS) வெட்டுக்களில் 5 பில்லியன் பவுண்டுகளை எதிர்கொள்கிறது.

அரசின் செவிலியர் கல்லூரியானது, தொழிற் கட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட வெட்டுக்களினால் பல ஆண்டுகள் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு காத்திருத்தல், தாழ்வாரங்களில் டிராலிகளில் சிகிச்சைக்கு உட்படல் ஆகிய நாட்கள் மீண்டும் வரும் என்று எச்சரித்துள்ளது.

ஆனால் ஓஸ்போர்னும் லாஸும் தெளிவாக்கியுள்ளது, காமிரோனும் கிளெக்கும் கூட்டணி அரசாங்கத்தின் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளதைப் போல், இது ஒரு தொடக்கந்தான். பைனான்சியல் டைம்ஸிடம் லாஸ் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை குறைக்கப்படுவதற்கான திட்டங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிக அதிகமான “ஆக்கிரோஷ” குறைப்புக்களை கொண்டிருக்கும் என்றும் விருப்புரிமை, “ஏற்றுக்கொள்ள முடியாததிற்கும் பேரழிவிற்கும் இடையே” என்றும் கூறினார்.

“ஒரு செழிப்பான காலத்தில் இருந்து பொது நிதியில் கடும் சிக்கன காலத்திற்குள் நாம் நகர்கிறோம். இன்னும் பல கடுமையான முடிவுகள் வரவிருக்கின்றன” என்றார் அவர்.