WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
IMF dictates shock program to Romania
சர்வதேச நாணய நிதியம் ருமேனியாவிற்கு அதிர்ச்சி தரும் திட்டங்களுக்கு ஆணையிடுகிறது
By Andrei Tudora
18 May 2010
Use this version to print | Send
feedback
கடந்த வாரம் ஒரு சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதியுடன் பேச்சுக்களுக்கு பின்னர் வெளியே வந்த ருமேனிய பிரதம மந்திரி எமில் போக், நாடு அடுத்து திட்டமிடப்பட்டுள்ள 20 பில்லியன் யூரோப் பொதியைப் பெறுவதற்கு முன்நிபந்தனையான சிக்கன நடவடிக்கை திட்டத்தை வெளியிட்டார். வெட்டுக்கள் எதிர்பார்க்கப்பட்டன என்றாலும், திட்டமிடப்பட்டுள்ள தாக்குதல்களின் மிகத் தீவிரத் தன்மை மக்களிடையே அதிர்ச்சி மற்றும் சீற்ற அலைகளை பாய வைத்தன.
சிக்கன நடவடிக்கையின் முக்கிய அம்சங்களில், பொதுத் துறை ஊழியர்கள் ஊதியங்களில் 25 சதவிகிதக்குறைவு, ஓய்வூதியங்களில் 15 சதவிகிதச் சரிவு மற்றும் வேலையின்மை நலன்களில் ஒரு 15 சதவிகிதக் குறைவு ஆகியவை அடங்கியிருந்தன. சர்வதேச வங்கியாளர்களுக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டிய கடன்களை தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் சுமத்துவதற்கான இந்த நடவடிக்கைகள் மக்களின் பெரும் பகுதியை வறிய நிலைக்குத் தள்ளுவதற்கு போதுமானவை. ஆனால் திட்டம் தொடர்ந்து சமூகநல அரசாங்கத்தில் எஞ்சியிருந்த அனைத்தையும் கிட்டத்தட்ட தகர்க்கும் விதிகளைத்தான் கொண்டிருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் முன்னாள் கிழக்கு ஐரோப்பிய இடைத்தடை நாடுகளில் ஒன்றான ருமேனியா, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படல், அரசாங்கச் சொத்துக்கள் தனியார்மயம் ஆக்கப்படல், ஆலைகள் மூடல்கள் என்று வரிசையாக நிறைய தடையற்ற சந்தை “சீர்திருத்தங்களை” எதிர்கொண்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆண்ட சமூக ஜனநாயக மற்றும் வலதுசாரி நிர்வாகங்கள் மக்கள் வறுமையில் தள்ளப்படுவதை மேற்பார்வையிட்டன. அதே நேரத்தில் சர்வதேச நிறுவனங்களுக்கு ஒரு குறைவூதிய, நல்ல தகுதி பெற்ற தொழிலாளர் தொகுப்பு, அசாங்க உதவிகள் மற்றும் வரி விலக்குகள் ஆகிவற்றையும் அளித்தன.
IMF இன் தாக்குதலுக்கு ருமேனியா இலக்காகியுள்ளது. முந்தைய IMF ஆணைகள் இழிந்த “கம்யூனிச எதிர்ப்பு” CDR கூட்டாட்சி அரசாங்கத்தால் (1998-2000), 1999ல் நேட்டோ சக்திகள் சேர்பியா மீது நடத்திய தாக்குதலில் வெட்கம் கெட்ட பங்கைக் கொண்டதற்கு நினைவில் கொள்ளப்படுவது கடைப்பிடிக்கப்பட்டன, மேலும் சுரங்கத் துறைத் தகர்ப்பு மற்றும் மிகப் பெரும் தனியார்துறைத் திட்டங்கள் ஆகியவையும் நடத்தப்பட்டன. ஆனால் புதிய தாக்குதல்களின் அளவு அந்த இழிந்த தரங்களையும் விட முன்னோடியில்லாத கடுமையானவை ஆகும். மக்களிடையே பெருகிய முறையில் அரசியல் ஸ்தாபனம் இம்முறை அரசாங்கம் செரிக்க கூடியதைவிட அதிகமாக உட்கொண்டுவிட்டது என்ற உணர்வுதான் உள்ளது.
25 சதவிகித வெட்டுக்கள் குழந்தைகள் நலன்களில், 15 சதவிகித வெட்டுக்கள் இயலாத நபரைக் காப்பாற்றக் கொடுக்கப்படும் நலன்களில், இளம் குடும்பங்குளுக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ள நலன்கள் அகற்றப்படுதல், பணிநீக்கம் செய்யப்பட்ட பொதுத் துறை ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இழப்பீட்டுத் தொகை நிறுத்தப்படல், ஒற்றை பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்ட நலன்கள் முடக்கம், மாணவர்கள், வயதானவர்கர்ளுக்கு கொடுக்கப்பட்டு வந்த போக்குவரத்து உதவி நிதிகள் தகர்ப்பு மற்றும் வீடுகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்த மின்சார உதவித் தொகைகள் ஆகியவை புதிய சிக்கன நடவடிக்கைகளில் அடங்கும்.
புள்ளிவிவரங்களை சுருக்கமாகப் பார்த்தாலே, எந்த அளவிற்கு புதிய நடவடிக்கைகள் தொழிலாளர்களை பாதிக்கிறது என்பது தெரியவரும். ருமேனியாவில் பொதுத்துறை ஊழியர்களின் சராசரி மாத ஊதியம் கிட்டத்தட்ட 400 யூரோக்கள் என்பதால், புதிய வெட்டுக்களுடன் சரிவு 300 யூரோக்கள் என்று அதைக் குறைத்துவிடும். சராசரி வாடகை கிட்டத்தட்ட 300 யூரோக்கள் என்று இருக்கையில் வீட்டுச் செலவுகள் பராமரிப்பு எரிசக்தி நிதிக் குறைப்புக்களால், நகரத்தைப் பொறுத்து, 133ல் இருந்து 268 சதவிகிதம் என்று அதிகரிக்கும், அதாவது சராசரியாக 250 யூரோக்கள்.
ஏற்கனவே வரவு செலவை சரிக்கட்டுவதற்கு சராசரியாக 160 யூரோக்களில் திணறிக் கொண்டிருக்கும் ஓய்வூதியம் பெறுவோர், இப்பொழுது பதினைந்து சதவிகிதக் குறைப்பில் வாழ்க்கை நடத்துவது இயலாது என்பதைத்தான் காண்பர்.
வாழ்க்கைத் தரங்களில் மிகப் பெரிய சரிவு பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு முறையின் இழிசரிவுடன் தொடர்கிறது. குழந்தைகள் நலச் செலவுகளில் 25 சதவிகித வெட்டு என்பது இளம் குழந்தை இறப்பு விகிதத்தை உறுதியாகப் பாதிக்கும். ஏற்கனவே இது ஐரோப்பாவில் மிக அதிகம் ஆகும். பல குழந்தை இறப்புக்களும் அவற்றின் முதலாண்டில் ஏற்படுகின்றன. சிகிச்சை அளிக்கக் கூடிய தொற்றுக்கள் மற்றும் ஊட்டச் சத்தின்மையினால் ஏற்படுகின்றன.
தடுப்பூசித் திட்டமும் தடைக்குட்பட்டுவிட்டது, Cantacuzino National Institute, தடுப்பூசிகள தயாரிக்கும் நிறுவனம் சமீபத்தில் உற்பத்தியை நிறுத்திவிட்டது. பெற்றோர்கள் பெரும் திகைப்புடன் மருந்தகங்களை எலும்புருக்கி BCG தடுப்பூசிகளுக்கு நாடினர். ஏப்ரல் 22ம் திகதி பயிலகத்தின் சுகாதாரப் பணியாளர்கள் தன்னிச்சையான வேலைநிறுத்தம் ஒன்றை நிலைமையை எதிர்த்து நடத்தினர், ஆனால் விடை ஏதும் கொடுக்கப்படவில்லை, பயிலகம் முற்றிலும் மூடப்பட்டுவிடுமோ என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.
IMF உடன்பாட்டிற்கு இணங்க, அரசாங்க சுகாதாரப் பாதுகாப்பை மத்தியக் கட்டுப்பாட்டில் இருந்து அகற்றும் வழிவகையையும் உறுதி செய்துவிட்டது. இதன் உட்குறிப்பு ருமேனியாவின் கிட்டத்தட்ட 400 மருத்துவமனைகளில் 150 ஐ மூடுவது, எஞ்சியவற்றை உள்ளூர் ஆட்சிகளிடம் ஒப்படைத்தல் என்பதாகும். நிதிய நெருக்கடி வந்ததில் இருந்து, பல உள்ளூர் அதிகாரங்களும் நகரவை ஊழியர்களின் சம்பளத்தைக்கூட கொடுக்க முடியவில்லை, மருத்துவமனைகள் தனியார் மயமாக்கப்படுவதை அறிவித்துள்ளன. அரசாங்கமும் எஞ்சியிருக்கும் மருத்துவமனைகள் உள்ளூர் அதிகாரங்களுக்கு ஒப்படைக்கப்படுமுன் தங்கள் கடன்களை அரசாங்க வரவு-செலவுத் திட்டத்திற்கு தீர்த்துவிட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பின்னர் தனியார் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
மருத்துவமனைகள் பல ஆண்டுகள் சிதைந்த நிலையில் விடப்பட்டுவிட்டன. நோயாளிகளும் சுகாதாரப் பணியாளர்களும் மருத்துவத் தேவைகள், மருந்துப் பொருட்களை தாங்களே வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதற்கு முற்றிலும் நிதி இல்லாததுதான் காரணம். இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நெருக்கடிக் கட்டத்தை நிலைமை அடைந்தது. அப்பொழுது இன்னும் பல நிர்வாகிகள் தலைநகரம் புகாரஸ்ட்டில் இருப்பவர்கள் தங்கள் மருத்துவமனைகளில் இனி அறுவை சிகிச்சையும், அவசரச் சிகிச்சையும் அளிப்பதற்கில்லை என்று அறிவித்தனர்.
அரசாங்கத்தின் மற்றொரு திட்டம் சுகாதாரப் பாதுகாப்பு முறையில் இணைக் கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஆகும். முன்னரே திட்டமிட்டபடி இதில் ஓய்வூதியம் பெறுவோர் அல்லது சமூக நலன்கள் பெறுவோர் விதிவிலக்கு பெறமாட்டார்கள். ஆனால் இந்த நடவடிக்கைகள் சரிந்து கொண்டிருக்கும் சுகாதார பாதுகாப்புத் துறைக்கு சரியான பொருத்தம்தான். ஏற்கனவே முன்பு அரசாங்க கட்டிடங்களில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள், புதிய குறைவூதிய தொழிலாளர் தொகுப்பை பொதுமுறையில் இருந்து நியமிப்பவை, இப்பொழுது “மத்திய கட்டுப்பாட்டில் இருந்து அகற்றப்படும் மருத்துவமனைகளையும் எடுத்துக் கொள்ளும், அல்லது அவற்றில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளும். இந்த தனியார்மயமாக்கல்கள் பின்னர் தனியார் காப்பீட்டு நிறுவனங்களையும் தங்கள் பின் அழைத்துக் கொள்ளும்.
வணிக மில்லியனரான ஆட்ரியன் டும்ப்ரவா, மருத்துவ மையத் தொடர் ஒன்றின் உரிமையாளர், தான் “ஏற்கனவே உள்ளூர் அதிகாரங்களிடம் இருந்து மருத்துவமனைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அழைப்புக்களை பெற்றுள்ளதாகவும், இவை கட்டுப்பாட்டு தளர்த்தலுக்கு பின் வந்தவை என்றும் பொது-தனியார் பங்காளித்தனத்திற்கு இது ஒரு சலுகை” என்றும் குறிப்பிட்டார். சுகாதார மந்திரியின் செய்தித் தொடர்பாளர் Oana Grigore இந்தப் போக்குகளை பாராட்டி, ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனர் போல் கூறினார்: “காப்பீட்டாளர் இப்பொழுது ஒரு நபரிடம் வந்து, “எனக்கு மாதம் 2 லீக்கள் கொடு, நான் உனக்குத் தேவைப்படும் மருத்துவ பணிகளுக்காக இணைக் கட்டணத்திற்கு ஒப்பான பணத்தை தருவேன்” என்று கூறலாம்” என்றார்.
அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் பிரச்சினையை நன்கு உணர்ந்துள்ளார். நவம்பர் 2009ல் அமெரிக்க ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (ALICOI) துணை நிறுவனமாக உள்ள AIG Life ன் பொது இயக்குனரான தியோடோர் அலெக்சாண்ட்ரஸ்கு, அரசாங்கச் சுகாதாரப் பாதுகாப்பு முறையின் சீர்திருத்தத்திற்கு தேவையான நடவடிக்கைகள் பற்றிப் பேசினார். “முதலில் மிக முக்கியமானது இணைக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவது ஆகும்”. இப்பொழுது வெளிப்படும் சித்திரம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்பொழுது அது முழு தேசியப் பாதுகாப்பு முறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. தனியார் எடுத்துக் கொண்டபின்னர் மதிப்புக் குறைவு, அதிலும் வணிக நலன்கள் இருக்கும் வழிவகைகளில் என்பது அரசாங்க நிறுவனங்களின் கொள்கைகளில் இருந்து பிரிக்க முடியாதது என்று ஆகிவிட்டது.
இதில் உள்ள கொலைகாரத்தனமான உட்குறிப்புக்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நன்கு வெளிப்படுத்தப்பட்டன. அப்பொழுது ஆயிரக்கணக்கான HIV நோயாளிகள் பல வாரங்கள் மருந்துகள் ஏதுமின்றி கைவிடப்பட்டனர். அவர்களுள் பலர் 1990களின் தொடக்க ஆண்டுகளில் ருமேனிய மருத்துவமனைகளில் தோற்று அடைந்தவர்கள் பலவித சிகிச்சை திட்டங்களைப் பெற்றுவிட்டனர், இந்த தாமதம் பாதிக்கப்பட்டவர் பலர் உயிரிழக்கக்கூடும் என்பதுதான்.
அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டம் ஏற்கனவே மக்களிடம் இருந்து கோபமான விடையிறுப்பைத் தூண்டியுள்ளது. திகைப்புடன் உள்ள ஓய்வூதியம் பெறுபவர்கள் போலீஸ் தடுப்புக்களை மீறுதல், அன்றாடம் பொதுத்துறை ஊழியர்கள் தெருக்களுக்கு வந்து எதிர்ப்புக்கள் நடத்துவது ஆகியவை அரசாங்கம் முழுவதிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி Traian Basescu ஓய்வூதியம் பெறுபவர்கள் “வன்முறைக்கூறுபாடுகளின் ஊடுருவலைக் கொண்டுள்ளனர்” என்று குற்றம் சாட்டி, நாட்டை “கிரேக்க உறவுகள்” மேலாதிக்கம் பெற தான் அனுமதிப்பதாக இல்லை என்றும் அச்சுறுத்தினார்.
இம்முறை தாம் தொழிலாளர்களை கட்டுப்படுத்துவதில் வெற்றி அடையமுடியாது என்று பெருகிய முறையில் தொழிற்சங்கத் தலைவர்கள் அஞ்சுகின்றனர். அதையொட்டி அரசாங்கத்தை பேச்சுவார்த்தைகள் நடத்துமாறு வாதிடுகின்றனர். தொலைக்காட்சி புகைப்படக் கருவிகள் முன், பொருந்தாத விதமாக வெளிப்படையாப் பேசிய ஒரு தொழிற்சங்கத் தலைவர் பிரதம மந்திரி தங்களுடன் பேச வேண்டும் என்று வாதிட்டார், ஏனெனில் “எங்கள் மூலம் தான் மக்களின் உணர்வுகள் ஜனநாயக முறைப்படி வெளிப்படுத்தப்பட முடியும். வேறுவித வழிவகைகள் வராமல் கடவுள்தான் தடுக்க முடியும்.”
மே 19 வரை ஒவ்வொரு நாளும் தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தொழிலாளர்கள் உறுதி பூண்டுள்ளனர். 1989ல் இருந்து மிக அதிக எண்ணிக்கையான 40,000 பேர் அன்று கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|