World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama's "anger and frustration" at the BP oil spill

பிரிட்டிஷ் பெட்ரோலிய எண்ணெய்க் கசிவு பற்றி ஒபாமாவின் "சீற்றமும் அதிருப்தியும்"

David Walsh
15 May 2010

Back to screen version

ஜனாதிபதி பாரக் ஒபாமா வெள்ளி நண்பகல் வெள்ளை மாளிகை ரோசாத் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு கொடுக்க இருக்கும் அறிக்கையில் மெக்சிகோ வளைகுடா எண்ணெய் கசிவுப் பேரழிவு பற்றிய தன் "சீற்றத்தையும் அதிருப்தியையும்" வெளிவிட உள்ளார் என்று அமெரிக்கச் செய்தி ஊடகம் வியாழன் இரவு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. கசிவு பற்றியும், பிரிட்டிஷ் பெட்ரோலியம் அதைத் தடுத்து நிறுத்த இயலாமை பற்றியும் அவர் "பெரும் சீற்றத்திற்கும் அப்பால்" உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் விவரித்தனர்.

சரியாக திட்டமிட்டபடி, தன்னுடைய தயாரிக்கப்பட்டிருந்த கருத்துரையின் இரண்டாம் பத்தியில், ஒபாமா வளைகுடாவிலுள்ள மக்களின் "சீற்றம் மற்றும் அதிருப்தியையும்" நேரடியாகக் கண்டதாக விளக்கினார். "ஒரு ஜனாதிபதி என்னும் முறையில் இந்த சீற்றத்தையும், அதிருப்தியையும் நானும் பகிர்ந்து கொள்ளுகிறேன் என்று தெரிவிக்க விரும்புகிறேன்." என விளக்கினார்.

இது ஒபாமாவின் நடைமுறை வாடிக்கைச் செயலாகிவிட்டது. ஜனவரி 2010 கடைசியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஒபாமா, "மேலதிக்கொடுப்பனவுகளில் பில்லியன் கணக்கில் அள்ளும் வோல்ஸ்ட்ரீட் பெருமுதலைகளை கோபத்துடன் கண்டித்தார்" (அசோசியேட்டட் பிரஸ்). அவருடைய செய்தி ஊடகச் செயலர் ரோபர்ட் கிப்ஸ், "ஜனாதிபதி இதைப் பற்றிய அமெரிக்க மக்களின் சீற்றத்தில் பங்கு கொள்கிறார்" என்று புலப்படுத்தினார். ஆனால் எப்படியும் மேலதிக்கொடுப்பனவுகள் கொடுக்கப்பட்டன. ஒரு வோல் ஸ்ட்ரீட் ஆய்வாளர் விளங்கத்தக்கமுறையில் பின்வருமாறு குறிப்பிட்டார், "அவர் அவ்வாறு கூறுவது நல்ல அரசியல் ஆகும்."

மார்ச் 2009ல் ஒபாமா, பாரியளவு மேலதிக்கொடுப்பனவுகள் AIG நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படுவது பற்றி "ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும்" பகிரங்கமாக வெளிப்படுத்த முன்வந்தார்; அந்நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து முந்தைய ஆறு மாதங்களில் $173 பில்லியன்களை பிணை எடுப்பின் மூலம் பெற்றிருந்தது. "நான் ஒன்றும் சீற்றத்தைத் தணிக்க விரும்பவில்லை--மக்கள் கோபம் கொள்ளுவதில் நியாயம் உள்ளது என்று நினைக்கிறேன். நானும் கோபம் கொண்டுள்ளேன்."

இவ்விதமாகப் பலமுறை வெள்ளியன்று ஒரு குற்றம்காணும் வர்ணனையாளர் "நாளை கோபத்துடன் கூடிய ஒபாமா எதிர்பார்க்கப்படுகிறார்" என்ற தலைப்பில் வந்த செய்தி ஒன்று பற்றிக் கூறுகையில் அது அவருக்கு "வானிலை கணிப்பு" பற்றி நினைவூட்டியது என்றார். ஆம், வானிலை ஒன்றுதான் ஓரளவிற்கு கணித்துக்கூறக்கூடிய தன்மை உடையது.

ஒபாமாவின் வெள்ளை மாளிகை அமெரிக்க பெருவணிகத்தின் நலன்களை வரலாற்றின் வேறு எந்த நிர்வாகத்தை போலவே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரதிபலிக்கிறது. பொதுக் கருவூலத்தில் இருந்து ஏராளமான நிதியங்களை அது வோல் ஸ்ட்ரீட்டிற்கு உதவியது; கார்த் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை அழிக்க குறுக்கிட்டது, ஆப்கானிஸ்தானில் மிருகத்தனப் போரை விரிவாக்கியது, மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான புஷ் அரசாங்கத்தின் முழுத் தாக்குதல்களையும் தொடர்கிறது.

மக்களில் ஏராளமானவர்களை பாதிக்கும் சமூகப் பேரழிவுகளுக்கு ஜனாதிபதி உள்ளுணர்வுடன் எதிர்கொள்ளும் முறை, அவருடைய நிர்வாகத்தின் வர்க்கத் தன்மை மற்றும் அவருடைய சொந்த வரலாறு, தனித்தன்மை போன்றவற்றுடன் பொருந்தியிருப்பதுடன், இது எவ்வித அக்கறையும் அற்று இருப்பது என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும்.

உதாரணமாக, ஏப்ரல் 30 செய்தியாளர் கூட்டத்தில், லூயிசியான கடற்கரைக்குத் தொலைவில் எண்ணெய்க்கசிவு வெடிப்பு ஏற்பட்டு, அதற்குள் பேரழிவின் பாரிய தன்மை அது தொடர்பாக கவனம் காட்டுவோர் அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்திருந்த பத்து நாட்களுக்கு பின்னர் ஒபாமா ஒரு வாடிக்கையான அறிக்கையை வெளியிட்டார். இறந்த 11 தொழிலாளர்கள் பற்றி ஒரு குறிப்பைக்கூட அவர் காட்டவில்லை. அதேபோல் மிகப் பெரிய எண்ணெய்க் கசிவின் பாதிப்பினால் சுற்றுச் சூழல் மற்றும் பொருளாதாரப் பாதிப்பின் பேரழிவுத் தன்மையின் தாக்கம் பற்றியும் ஒன்றும் கூறவில்லை.

மாறாக, ஏப்ரல் 30 அன்று தன்னுடைய சுருக்கமான கருத்துரையின் இறுதிப் பகுதியை உட்குறிப்பின் மூலம் அவருடைய அரசாங்கம் கடலோரத்திற்கு அப்பால் நடத்தப்படும் எண்ணெய்த் தோண்டுதலுக்கு கொடுக்கும் ஆதரவைத் தெரிவித்து, "உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி நம்முடைய எரிசக்தியின் மொத்த மூலோபாயத்தின் முக்கிய பகுதி என்று நம்புவதாகத்" தொடர்ந்து கூறினார். மனித உயிர், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்தவரை, இக்கருத்துக்கள் சிறிதும் கருத்தில் கொண்டதாக அமையவில்லை.

ஆனால் கடலின் கீழிருந்து எண்ணெய் ஆறு தொடர்ந்து வந்து, வரலாற்றிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாகலாம் என்ற அச்சுறுத்தலைக் கொடுத்தபோது, பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு எதிராக மக்கள் சீற்றம் அதிகரித்த போது, இவருக்கு மீண்டும் "சீற்றமுடைய ஒபாமா" காட்சி கொடுப்பது தேவையாயிற்று.

மக்களை திருப்திப்படுத்தும் வலுவற்ற அவருடைய முயற்சி ஒருபுறம் இருந்தாலும், வெள்ளியன்று ஒபாமா விடுத்த அறிக்கை, அவருடைய நிர்வாகத்தின் சார்பாக--மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு சார்பாக-- நடக்கும் சேதக்கட்டுப்பாட்டில் ஒரு நேர்மையற்ற நடவடிக்கை ஆகும். கசிவின் அளவு பற்றி குழப்பத்தை அவர் தூவினார்; அது பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூறியதை விட பத்து மடங்கு அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவரோ, "எவரும் கீழே நேரே சென்று பார்க்க முடியாது என்பதால், ஒரு மட்டத்திலான உறுதியற்ற தன்மை உண்டு என்பதை நாம் அறிவோம்" என்றார்.

"நம்முடைய தயாரிப்பும் மற்றும் முயற்சிகளும் ஒரு பேரழிவு நிகழ்வின் சாத்தியப்பாடுகளை சமாளிக்கும் விதத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன" என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். இது முற்றிலும் பொய்யானது ஆகும். தயாரிப்பு நடவடிக்கைகளும் மற்றும் எதிர்கொள்ளும் முயற்சிகளும் நேரடியாக பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத வரை, முக்கியமாக இலாபங்களை காப்பதிலும் எண்ணெய் பெருநிறுவனத்தின் "உரிமை நலன்களை" காப்பதிலும்தான் உள்ளது.

எண்ணெய் தோண்டுதல் நலன்களை கட்டுப்படுத்துவதாக கூறப்படும் மத்திய அமைப்பான Mindrals Manaement Serfvice (MMS), முந்தைய நிர்வாகங்களில் இருந்தது போல் ஒபாமா நிர்வாகத்தின் கீழும் எரிசக்தி நிறுவனங்களின் பின்னிணைப்புப்போல்தான் செயல்படுகிறது. The Center for Biological Diversity என்னும் அமைப்பு மே 7 அன்று MMS 27 புதிய கடலோரத்திற்கு அப்பாலுள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும், இவை "பேரழிவு கொடுத்த பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் தோண்டுதலுக்கு ஒப்புதல் கொடுக்கப் பயன்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பரிசீலனையின் கீழ்தான் உள்ளது" என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. அதுவும் ஏப்ரல் ஆழ்கடல் பிராந்திய வெடிப்பிற்குப் பின்னர் இது நடந்துள்ளது. இது வெள்ளியன்று தான் "எண்ணெய் நிறுவனங்களுக்கும் அவற்றைத் தோண்ட அனுமதிக்கும் கூட்டாட்சி நிறுவனத்திற்கும் இடையே உள்ள சுமுகஉறவுகளுக்கு" தான் முற்றுப்புள்ளி வைப்பதாக அவர் கூறியதில் உள்ள பொய்யை அம்பலப்படுத்துகிறது.

ஒபாமாவின் ரோசாத் தோட்டத் தோற்றம் பற்றிய அனைத்தும் ஒரு பொய்யான, சடங்குமுறைத் தன்மையைத்தான் கொண்டிருந்தது. அமெரிக்காவின் பெருநிறுவன உயரடுக்கு நடத்தும் கொடுமை பற்றி ஜனாதிபதி கவலை கொண்டுள்ளார், தங்கள் உணர்வுகளில் பங்கு பெறுகிறார் என்று கூறப்பட்டால் அதில் என்ன எதிர்பார்ப்பதற்கு உள்ளது என்பது பற்றி இப்பொழுது மக்கள் நன்கு அறிந்துள்ளனர். ஒரு இறுக்கமான முகத்துடன் தோன்றுகிறார், தன்னுடை குரலைத் தாழ்த்திக் கொள்ளுகிறார், நிதானமாகப் பேசுகிறார், சுருக்கமாக என்றாலும் பொது நலனைப் பற்றிக் கவலைப்படுவது போல் காட்டிக் கொள்ளுகிறார்.

கடுமையான யதார்த்தம் தன்னைத்தானே உணரவைக்கும் ஒரு வழியை கொண்டுள்ளது, இச்செயல் மிகவும் நலிந்த தன்மை உடையது ஆகும். ஒரு சிறிய தாராளவாதிகளும், இடதுசாரி தாராளவாத வக்காலத்து வாங்குபவர்களும் ஜனநாயகக் கட்சி பற்றியும் ஒபாமா பற்றியும் நப்பாசைகளை பெருக்க முற்படுகின்றனர்.

உதாரணமாக, நிர்வாகத்தின் பிற்போக்குத்தன கொள்கைகளின் முடிவுகள் அல்லது தீவிர வலதிற்கு இழிந்த நிபந்தனையற்ற சரணாகதியும் நடந்த பின்னர், Nation ஏடு தன்னுடைய வாசகர்களுக்கு ஒரு மாபெரும் கணம் வந்துவிட்டது என்றும், ஒபாமா நிர்வாகம் அமெரிக்க மக்களுக்காக உள்ளதா, பெருநிறுவன உயரடுக்கிற்காக உள்ளதா என்பது பற்றி ஒரேயடியாக தீர்மானிக்கவேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த நெருக்கடி பற்றியும் அதே போல், Nation உடைய ஆசிரியர்கள் எழுதுகின்றனர்: "பிரிட்டிஷ் பெட்ரோலிய பேரழிவு…. ஒரு சுற்றுச்சூழல் அழிவை மட்டும் பிரதிபலிக்கவில்லை, ஒரு அறநெறி நெருக்கடியையும் பிரதிபலிக்கிறது --சுற்றுச்சூழல் பற்றிக்கவலை கொண்டுள்ளவர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி ஒபாமா உட்பட அனைத்து அரசியல்வாதிகளையும் மக்கள் முன் நிறுத்திவைத்து நாம் அடிப்படையில் ஒரு புதிய திசையில் செல்ல வேண்டும் என்று கோரும் விதத்தில் தாக்குதலை மீண்டும் தொடரும் வாய்ப்பை கொடுத்துள்ளது. ஒபாமாவின் நிர்வாகத்தின் தன்மை ஒரு பகிரங்க கேள்வியாகவும், பரந்த மக்களின் அழுத்தங்களின் ஆளுமைக்குடபடுத்தப்படக்கூடியது என்பதுபோல்.

பல தசாப்தங்களாக நடைபெறும் தனியார்மயம், கட்டுப்பாடுகள் தளர்த்தல், தடையற்ற சந்தையின் விந்தைகளைப் பற்றிய பிரச்சாரம் மற்றும் முழுக் கடந்த காலத்தின் சமூகப் பொருளாதார மற்றும் சிந்தனைப் போக்கு நிலைமைகளில் இருந்து வெளிவரும் ஆளும் உயரடுக்கின் சேகரிக்கப்பட்டுள்ள பேராசை, பொறுமை ஆகியவை பிரிட்டிஷ் பெட்ரோலிய எண்ணெய்க் கசிவை, அல்லது அது போன்றதை, தவிர்க்க முடியாதது எனச் செய்துவிட்டது. அமெரிக்க நிதிய பிரபுத்துவத்தைப் பொறுத்தவரை, உலக மக்கள் மற்றும் கிரகத்தின் இயற்கை மூலவளங்கள், அதன் பாரிய செல்வத்தை அதிகரிக்கும் கூறுபாடுகள்தான் என்று கருதப்படுகின்றன.

ஒபாமாவும் அவரைச் சுற்றி இருப்பவர்களும் மக்கள் அதிருப்தியைக் குறைக்க, அவர்களிடம் ஒரு மந்திர சக்தி உள்ளது மற்றும் மந்திரக் கோல் அசைவினால் மக்களின் உறவினை மாற்றிவிடலாம் என நினைப்பதாகத் தோன்றுகிறது. அவர்கள் கருத்தின்படி ஜனாதிபதி சரியான தோற்றத்தைக் கொண்டு நம்பத்தகுந்த சமாதானத்தைக் கூறி, தக்க பொய்யைக் கூறினால் அமெரிக்க மக்கள் கேட்டுக் கொள்ளுவர் என்று உள்ளது.

தொழிற்சங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ தாராளவாதத்தின் பயனற்ற தன்மையினால் ஆளும் உயரடுக்கு அதன் கொடுமைகளுக்கு முறையான எதிர்ப்பு இல்லாததை மக்கள் எதிர்ப்பு இல்லை என்று தவறாக நினைத்தால் அது தப்புக் கணக்காகும். மக்கள் சீற்றத்துடன் உள்ளனர்; ஏதேனும் நடப்பதற்கு அது காத்திருக்க முடியாது. ஆனால் அது என்ன செய்ய வேண்டும் என்பதில் அதிக குழப்பம் உள்ளது.

தற்போதைய சமூகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களை பொறுமையுடன் விளக்குவது சோசலிஸ்ட்டுக்களின் கடமையாக உள்ளதுடன், அதற்கான மாற்றீட்டையும் முன்வைக்க வேண்டும். அராஜகமான, காலம்கடந்துவிட்ட, பகுத்தறிவற்ற இலாபமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை தொழில்துறை, நிதியப்பிரிவு, இராணுவத்தில் அல்லது சுற்றுச் சூழலில் தொழிலாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பேரழிவை எதிர்கொள்வர்.