சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

  WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Drastic social cutbacks unveiled throughout Europe

ஐரோப்பா முழுவதும் கடுமையான சமூகநலச் செலவு வெட்டுக்கள் பகிரங்கமாக அறிவிக்கப்படுகிறது

By Bill Van Auken
14 May 2010

Use this version to print | Send feedback

இந்த வார ஆரம்பத்தில் 1 டிரில்லியன் யூரோ பிணை எடுப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்களானது வேலைகள், ஊதியங்கள் மற்றும் அடிப்படை சமூக உரிமைகள் மீது பெரும் தாக்குதல்கள் கொண்ட சிக்கன நடவடிக்கைகள் எடுப்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றன.

ஐரோப்பிய நிதி மந்திரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தினால் திரட்டப்பட்டுள்ள கிட்டத்தட்ட 1 ரில்லியன் டாலர்கள் பொதியானது அரசாங்கக் கடன் நெருக்கடியின் பிடிக்குள் உள்ள கிரேக்கம் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் திவாலாவதை தடுக்கும் நோக்கத்தை மட்டும் கொள்ளவில்லை என்பது இப்பொழுது மிகவும் தெளிவாகியுள்ளது.

பெரும்பாலான மக்களுடைய சமூகச் சொத்துக்களை சர்வதேச வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களுக்கு மாற்றும் வடிவத்தை இது கொண்டுள்ளது. மேலும் கண்டம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள், நூறாயிரக்கணக்கான கிரேக்க தொழிலாளர்களை வேலைநிறுத்தங்கள் வெகுஜன எதிர்ப்புக்கள் எனத் தெருக்களுக்கு கொண்டுவந்த கடுமையான தாக்குதல்கள், எல்லா இடங்களிலும் கடைபிடிக்கப்பட்டு இதற்கு விலை கொடுக்கப்பட வேண்டும் என்ற வடிவத்தையும் கொண்டதாகும்.

ஐரோப்பிய முதலாளித்துவம் “ஒரு நெருக்கடியை வீணே சென்றுவிட ஒரு போதும் அனுமதிக்காது’ என்ற இழிந்த பழமொழியின்படி செயல்படுகிறது. கிரேக்கத்தில் நடக்கும் வியத்தகு நடவடிக்கைகள் மற்றும் நிதிய உயரடுக்கின் சொந்த ஊக நடவடிக்கையின் விளைவினால் ஏற்பட்டுள்ள, உலகெங்கிலும் உள்ள நிதியக் கரைப்பை பயன்படுத்தி, அது ஐரோப்பிய தொழிலாளர்களின் நிலைமைகள் மீதான தாக்குதல்களை தீவிரமாக்கியுள்ளது. இது இரண்டாம் உலகப் போர் முடிவின்போது கண்டம் முழுவதும் முன்னோடியில்லாத வகையில் அழிவுற்று இருந்த தன்மையைத்தான் மீண்டும் கொண்டுவரும்.

பிணையெடுப்பு பற்றிய இந்த உடன்பாட்டின் அறிவிக்கப்படாத ஒரு துணைச் செயல் திங்கள் காலையில் பிரஸ்ஸல்ஸை அடைந்தது, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் சிக்கன நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டது என்பதே ஆகும். அங்கு பொதுப் பற்றாக்குறைகள் அவற்றை சர்வதேச ஊக வணிகர்களின் இலக்குகளாக செய்துள்ளது. அவர்கள் கொழுத்த இலாபங்களை, நாடுகளுக்கு கொடுக்கப்படும் கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை உயர்த்துவதின் மூலம் காண முற்பட்டுள்ளனர்.

திங்களன்று கிறுகிறுக்க வைக்கும் விதத்தில் ஸ்பெயினின் பங்குச் சந்தை 14.4 சதவிகிதம் என உயர்ந்தவுடன், “கிரேக்கம் அல்ல, ஐபீரியத் தீபகற்பம்தான் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நிதியம் கட்டவிழ்த்துவிட்டுள்ள நிதிய “திடீர்த் தாக்குலுக்கு” இலக்கு தாங்கள்தாம் என்பது காலம் கடந்து ஸ்பெயின் மக்களிடம் உணரப்பட்டது” என்று பைனான்சியில் டைம்ஸ் புதனன்று கருத்துத் தெரிவித்தது.

‘யூரோப்பகுதியின் மூன்றாவது மிகப் பெரிய பொதுப் பற்றாக்குறையை கொண்டுள்ளது என்ற நிலையில், ஸ்பெயின் பெருகிய முறையில் நிதிய ஊகவணிகர்களால் இலக்கு கொள்ளப்பட்டு வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கு மிக அதிக வட்டி விகிதங்களை கொடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் சமூக ஜனநாயகக் கட்சி பிரதம மந்திரியான ஜோஸ் லூயி ரோட்ரிக்ஸ் சபாதேரோ புதனன்று பாராளுமன்றத்திற்கு சென்று தொடர்ச்சியான கடும் சிக்கன நடவடிக்கைகளை அறிவிக்கும் கட்டாயம் வந்தது—இதில் பொதுத் துறை ஊழியர்களுக்கு ஐந்து சதவிகித ஊதியக்குறைப்பு, ஊதிய நிலைத் தேக்கம், பெரும்பாலான ஓய்வூதியத் தேக்கம், cheque-bebé எனப்பட்ட புதிய குழந்தைகள் பிறந்துள்ள குடும்பங்களுக்கு 2,500 யூரோக்கள் அரசாங்க உதவி நிதி அகற்றப்படுதல், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு நிதித் திட்டம் அகற்றப்படுதல் மற்றும் சில மருந்துகளுக்கு பொது நிதி அளித்தல் அகற்றப்படுவது ஆகியவை அடங்கியுள்ளன.

இன்னும் வெட்டிற்கு உட்படப்போவது, பொது முதலீட்டில் பொதுப் போக்குவரத்து திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 6 பில்லியன் யூரோக்களுக்கும் மேலான தொகை ஆகும். இன்னும் பல பில்லியன்கள், உள்ளூர் அரசாங்கங்களுக்கு கொடுக்கப்படும் நிதி மற்றும் வளர்ச்சி நிதியில் இருந்து வெட்டப்படும். இவை அனைத்தும் கூடுதலான பணிநீக்கங்கள், ஊதியக் குறைப்புக்களுக்கு வழி செய்யும்.

நாட்டின் உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் ஏற்கனவே 20 சதவிகிதத்தை விட சற்று உயர்ந்துள்ள நிலையில், சிக்கன நடவடிக்கைத் திட்டத்தின் பொருள் இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் வேலையின்மையில் தள்ளப்படுவர், நாட்டின் பொருளாதாரம், நுகர்வு குறைக்கப்படுகையில் இன்னும் சரியும் என்பதுதான்.

வியாழனன்று போர்த்துக்கல் இதைத் தொடர்ந்து தன்னுடைய பொதுச்செலவுகளை குறைத்தல், குறைந்த வருமானங்களுக்கு மதிப்புக்கூட்டு வரிகளை அதிகரித்தல் என்ற உடனடி செயல்களை தொடங்கியது.

”நம் பற்றாக்குறையை குறைப்பதற்கு நம்பகத்தன்மை உடைய நடவடிக்கைகளை செயல்படுத்துவோம் என்பதைக் காட்டுவதற்குத் தவறினால், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கக் கூடிய கடன்கள் நின்றுவிடும்” என்று போர்த்துக்கல்லின் நிதி மந்திரியான Fernando Teixeira dos Santos பாராளுமன்ற உறுப்பினர்களிடம் திட்டமிடப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கை விவாதத்தின் போது கூறினார்.

பிரதம மந்திரி ஜோஸ் சோக்ரட்ஸின் சமூக ஜனநாயக அரசாங்கம் வரவு-செலவுத் திட்டக் குறைப்பின் இலக்கு எங்கு விழும் என்பது பற்றிய விவரங்களைக் கூறவில்லை. ஆனால் உள்ளூர் அரசாங்கங்களுக்கு கொடுக்கப்படும் நிதியங்களில் குறைவு அதில் அடங்கும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கும் அதிகமாக பொதுத்துறை வேலைகள் அகற்றப்படுதல், வேலையின்மை நலன்கள் குறைப்பு, ஊதியத் தேக்கம் மற்றும் பொது நிறுவனங்களின் விற்பனை ஆகியவை அடங்கும் என்று குறிப்புக் காட்டியுள்ளார்.

ஐரோப்பிய மற்றும் சர்வதேச வங்கிகளின் சார்பில் பேசிய ஐரோப்பிய ஆணையமானது பல்கேரியா, சைப்ரஸ், டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகியவற்றை அவற்றின் வரவு-செலவுப் பற்றாக்குறைகள் மிக அதிகம் என்றும் அவை “கடுமையான பற்றாக்குறை நடவடிக்கைகளுக்கு (EDP)“ உட்படுத்தப்படும், பொதுநலச் செலவுகளை குறைக்க காலக்கெடுக்கள் நிர்ணயிக்கப்படும், என புதனன்று எச்சரித்தது.

இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயல்படும் சர்வதேச நாணய நிதியம் ருமேனியாவிற்கு கொடுக்கப்படவுள்ள “மீட்புப்பொதி” பற்றி ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் துல்லியமாக ருமேனியக் கடனில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிதிய நலன்களுக்கு உதவுவதற்கு.

20 பில்லியன் யூரோப் பொதியை (12 பில்லியன் யூரோக்கள் இதுவரை கொடுக்கப்பட்டுவிட்டன) வெளியிடுவதற்கான நிபந்தனை, அடுத்த ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனில் 4.4 சதவிகிதமாக பொதுப் பற்றாக்குறையைக் குறைக்கும் பொருளாதாரத் திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் கொடுத்ததாகும். 2009ல் இது 7.2 சதவிகிதம் என்று இருந்தது.

ருமேனிய அரசாங்கம் பேரழிவு தரக்கூடிய வரவு-செலவுத் திட்டக் குறைப்புக்களை கொண்டுவந்துள்ளது. இதில் பொதுச்சேவை ஊழியர்களின் ஊதியங்கள் 25 சதவிகிதம் குறைக்கப்படுவதுடன் அரச ஓய்வூதியங்கள் 15 சதவிகிதத்தால் குறைக்கப்படுதலும் அடங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகளினால் கால் மில்லியன் வேலைகள் அழிக்கப்படக்கூடும் என்ற பொருளை இது தருகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறுவோரை தூண்டிவிட்டு, முதிய ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் தலைநகர் புகாரெஸ்ட்டில் பாதுகாப்புப் படைகளுடன் மோதும் காட்சிகளை கண்டது. அடுத்த வாரம் சில வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

&ருமேனியாவில் ஏற்கனவே வேலையின்மை விகிதம் 10 சதவிகிதத்தில் உள்ளது. அதே நேரத்தில் சில மதிப்பீடுகளின்படி மக்களில் மூன்றில் இரு பகுதியினர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர் என்று தெரிகிறது.

இத்தகைய முன்னோடியற்ற தாக்குதல்கள் ஐரோப்பா முழுவதும் நடத்தப்பட உள்ளன. ஜேர்மனியில் அதிபர் அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவரும், நோய்வாய்ப்பட்டிருக்கும் நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌபிலுக்குப் பதிலாக அப்பதவிக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுபவருமான ரோலண்ட் Koch ஜேர்மனி அதன் சொந்த 10 பில்லியன் யூரோ நிதிப் பற்றாக்குறை மற்றும் ஐரோப்பிய மீட்புப் பொதிக்கு அதன் அளிப்பான 123 பில்லியன் செலவு ஆகியவற்றை எதிர்கொள்கையில் எந்த வெட்டுக்களும் “உகந்தவை” அல்ல எனக் கருதப்படக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

ஹெஸ் மாநிலத்தின் அமைச்சர் தலைவராக உள்ள Koch, மூன்று வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் மழலையர் கல்வி கொடுக்கும் திட்டம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். இக்கருத்து பெரும் சீற்றத்தை தூண்டியுள்ளது. “இத்தகைய கருத்துக்களை வெளியிடும் எவரும் தீவைப்பவர் போல் செயல்படுகின்றனர்” என்று பவேரியாவின் சமூக நலத்துறை மந்திரி கிறிஸ்டின் ஹடர்ட்ஹர் Passauer Neue Presse இடம் தெரிவித்தார். “கல்வி, குடும்பப் பிரிவுகளிலும் சிவப்புக் கோடுகளை போட்டால், நம்முடைய வருங்காலத்துடன் பந்தயம் வைக்கிறோம்.”

இதற்கிடையில் பொருளாதார வல்லுனர்கள், யூரோ மதிப்புச்சரிவு ஜேர்மனியிலும், ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் உண்மை ஊதியங்களை வெட்டிவிடும் என்று கணித்துள்ளனர். “அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்கம் தீவிரமாக உயரும் என நாம் எதிர்பார்க்கலாம் என்று ஜேர்மனிய பொருளாதார வல்லுனர் Wolfgang Brachinger பிரிட்டனின் கார்டியனிடம் கூறினார். ”யூரோ அதன் மதிப்பை இழந்து வருகிறது. நுகர்வோர் இதையொட்டி தங்கள் பைகளில் இருந்து அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.”

பிரிட்டனில் புதிய டோரி-லிபரல் டெமக்ராட் கூட்டணி அதன் வலதுசாரி செயற்பட்டியலான “அவசரக்கால நடவடிக்கைகளை” இப்பொழுது ஆரம்பிக்க இருக்கையில், பாங்க் ஆப் இங்கிலாந்தின் கவர்னர் மெர்வின் கிங் ஒரு பற்றாக்குறை குறைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் இனியும் காலதாமதம் கூடாது என்றார்.

கிரேக்க நெருக்கடி “மிக அதிக நிதிய வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை சமாளிக்க” ஒரு வாய்ப்பு என்று கிங் விவரித்தார். “தற்போதைய மிகப் பெரிய இடர், அதுவும் கடந்த இரு வாரங்கள் அனுபவத்தில், ஒரு புதிய அரசாங்கம் ஒரு தெளிவான, நம்பகத் தன்மை உடைய நடவடிக்கைகளை நிதியப் பற்றாக்குறையை சமாளிக்க முன்வைக்காமல் இருந்துவிடுவதுதான்.” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

அட்லான்டிக்கின் மறுபுறத்தில், ஒபாமா நிர்வாகத்தின் தலைமை வரவு-செலவுத் திட்ட அதிகாரிகள் இதேபோன்ற தன்மையை எதிரொலிக்கும் வகையில் வாஷிங்டன் அதன் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்தார். இது இப்பொழுது இந்த ஆண்டு 1.5 டிரில்லின் டாலருக்கும் அதிகமாகப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிடின் “கிரேக்கம் இப்பொழுது எதிர்கொண்டுள்ள வகையிலான விருப்புரிமைகளைத்தான் முகங்கொடுக்க நேரிடும்.”

“பின்னர் என்பதைவிட இதை முன்னதாகவே தீர்க்க விரும்புகிறேன்” என்று வெள்ளை மாளிகையில் வரவு-செலவுத் திட்ட இயக்குனர் பீட்டர் ஓர்சக் புதன்கிழமையன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறினார். குறிப்பான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க ஓர்சக் மறுத்துவிட்டார். ஒபாமா அமைத்துள்ள ஒரு இருகட்சிக் குழு அதன் பணியை முடிக்க நிர்வாகம் அனுதிக்க விரும்புகிறது என்று காரணம் கூறினார்.

நலன்கள் திட்டம், சமூகப் பாதுகாப்பு, மருத்துவ வசதி, மருத்துவ உதவி அடங்கியவற்றை இக்குழு இலக்காகக் கொண்டுள்ளது. முன்னாள் குடியரசுக் கட்சி வையோமிங் செனட்டரான ஆலன் சிம்சர் உள்ளார். அதுபோல் ஒரு முன்னாள் கிளின்டன் நிர்வாக அதிகாரியும் முதலீட்டு வங்கியாளருமான எர்ஸ்கின் பௌல்ஸும் இதன் இணைத்தலைவர்கள் ஆவர். மோர்கன் ஸ்டான்லி எனப்படும் வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பௌல்ஸ் உள்ளார். அங்கு அவர் அதன் ஊதியக் குழுத் தலைவராக இருந்து எட்டு இலக்க ஊதியங்கள், போனஸ்கள் என்று நிர்வாகிகளுக்குக் கொடுக்கப்படுவதற்கு ஒப்புதல் கொடுக்கிறார்.

இத்தகைய நபர் இந்த இரு பாத்திரங்களையும் இணைத்துச் செயலாற்ற முடியும் என்பது தொடரப்படும் பொருளாதாரக் கொள்கைகளின் வர்க்கத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி அமெரிக்காவில் செய்வது என்று மட்டும் இல்லாமல் ஐரோப்பா, சர்வதேச அளவில் எல்லா அரசாங்கங்களாலும் நடத்தப்படுகிறது. இவை அனைத்தும் நிதிய நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின்மீது சுமத்த முற்படுகின்றன. அதே நேரத்தில் பெரும் சமூக நிதிகளை நெருக்கடிக்கு காரணமான நிதிய ஒட்டுண்ணிகள் மீது மாற்றுகின்றன.