சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil :

After the General Election

The task facing British workers

பொதுத் தேர்தலுக்கு பின்னர்

பிரிட்டிஷ் தொழிலாளர் எதிர்கொள்ளும் பணி

Statement of the Socialist Equality Party (Britain)
15 May 2010

Use this version to print | Send feedback

பிரிட்டனில் உள்ள தொழிலாளர்கள் பல தலைமுறைகளில் இல்லாத அளவிற்கு கன்சர்வேடிவ் - லிபரல் டெமக்ராட்டுக்களின் கூட்டணி முன்வைக்கவுள்ள, 1930களுக்கு பின்னர் காணாத வரவுசெலவு திட்ட வெட்டுக்களுக்கு எதிரான பெரும் போராட்டங்களை எதிர்கொள்ளுகின்றனர்.

தன்னுடைய முதல் அமைச்சரவை கூட்டத்தை டோரிக் கட்சித் தலைவர் டேவிட் காமிரோன் தன் அரசாங்கம் "நடவடிக்கைகளுக்கு தயாரிக்கிறது" என்ற அறிவிப்போடு கூட்டினார். இதைத் தொடர்ந்து வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக், பிரிட்டிஷ் மக்களில் மூன்றில் இருபகுதி எதிர்க்கும் ஆப்கானிய போருக்கு அரசாங்கத்தின் தொடர்ந்த ஆதரவை உறுதிகூறுவதற்கு வாஷிங்டனுக்கு பறந்து சென்றார்.

கூட்டணி அரசாங்கம் அதன் முன்னுரிமை, பிரிட்டனின் வங்கிகளுக்கு பல பில்லியன் பவுண்டுகள் பிணை எடுப்பிற்கு கொடுத்ததை அடுத்து ஏற்பட்டுள்ள இங்கிலாந்தின் 163 பில்லியன் பவுண்டுகள் பற்றாக்குறையைச் சமாளிப்பதாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.

முன்பு தொழிற்கட்சியால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 15 பில்லியன் பவுண்டை தவிர இன்னும் 6 பில்லியன் பவுண்டுகள் குறைப்புக்களில் சிலவற்றைப் பற்றி அது அடிக்கோடிட்டுக் காட்டியது; இது ஜூலை மாதம் அவசரக்கால வரவு-செலவு திட்டத்தின் உள்ளடக்கமாக இருக்கும்.

இத்தகைய வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் பொதுப் பணிகளில் தாக்குதல் விரிவாக்கத்திற்கான ஆசிகள் பாங்க் ஆப் இங்கிலாந்தின் ஆளுனர் மேர்வின் கிங்கினால் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் டோரி ஏடான Spectator "அயர்லாந்து மாதிரியிலான வரவிருக்கும் வெட்டுக்கள்" பற்றி குறிப்பிட்டது.

கிட்டத்தட்ட 20 சதவிகித பொதுச் செலவுக் குறைப்புக்கள் திட்டமிடப்பட்டுள்ளன; இவற்றில் "திறமையான சேமிப்புக்கள்" என்ற மறைப்பின் கீழ் சுகாதார பாதுகாப்புச் செலவுகளும் பாதிக்கப்படும். சுகாதார அத்தியாவசியத்தின் (Health Emergency) ஜெப் மார்ட்டின் "ஏற்கனவே ஆதரவு கொடுக்கப்பட்டுள்ள மருத்துவமனை பற்றிய வரவு-செலவுத் திட்டங்களில் உள்ள 20 பில்லியன் பவுண்டுகளை தவிர, நாம் பல ஆயிரக்கணக்கான படுக்கை இழப்புக்கள், வேலை வெட்டுக்கள் மற்றும் விபத்துக்கள், அவசர உதவிகள், தாய்மைப் பேறு உதவி மூடல்கள் ஆகியவற்றை இங்கிலாந்து முழுவதும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளோம். எந்தப்பகுதியும் இதில் இருந்து தப்பாது." எனக் கூறினார்.

பிரிட்டனின் 2.5 மில்லியன் வேலை இல்லாதவர்கள் பொதுநலச் செலவுகள் குறைப்பின் ஒரு பகுதியாக இலக்கு கொள்ளப்படுவர். டோரிக்களும் லிபரல் டெமக்ராட்டுக்களும் ஒப்புக்கொண்ட கூட்டு உடன்பாட்டின்படி, வேலையின்மை உதவிநலன்கள் "வேலை செய்யும் விருப்பத்துடன்" நிபந்தனையாக ஆக்கப்பட உள்ளது. வேலை வாய்ப்பை மறுக்கும் எவரும் நலன்களை மூன்று ஆண்டுகள் பெறும் தன்மையில் இருந்து தடுக்கப்படுபவர் என்று காமிரோன் முன்பே வலியுறுத்தியிருந்தார்.

பொருளாதார வல்லுனர்களும் மதிப்புக்கூட்ட வரிகள் (VAT) 17.5 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் உயர்த்தப்படும் என்று கணித்துள்ளனர். அத்தகைய ஏற்றம் பிரிட்டனில் ஒவ்வொரு வீட்டிற்கும் 425 பவுண்டுகள் கூடுதல் செலவைக் கொடுக்கும்.

ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பொதுத்தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த ஆரம்ப நடவடிக்கைகள் உள்ளன. ஆளும் உயரடுக்கு உலக நெருக்கடியைப் பயன்படுத்தி பொருளாதார மற்றும் சமூக உறவுகளை பெரு வணிகத்தின் நலன்களுக்காக ஒரு அடிப்படை மறுகட்டமைப்பை செய்வதற்கு பயன்படுத்துகிறது.

ஞாயிறன்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 500 பில்லியன் யூரோக்கள் கொண்ட "அவசரக்கால நிதி" வங்கிகளுக்கும் மற்ற கடன் கொடுத்தவர்களுக்கும் திருப்பிக் கொடுக்கத்தான் முற்றிலும் பயன்படுத்தப்படும். இதற்கான விலை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து சுரண்டி எடுக்கப்படும். நிதியை பெறுவதற்கு நாடுகள் "விரிவான, கடுமையான" சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவோம் என்று உறுதியளிப்பது நிபந்தனையாக இருக்கும்.

அயர்லாந்து ஏற்கனவே 3 பில்லியன் யூரோக்கள் செலவுகளைக் குறைத்து பொதுத்துறைப் பணியாளர்களின் ஊதியங்களிலும் 15 சதவிகிதம் வெட்டியுள்ளது. இதைத்தவிர ஒரு 7 சதவிகித "ஓய்வூதிய வரியும்" கொடுக்கப்பட வேண்டும். பொதுநலச் செலவுகள், கல்விநிதி ஆகியவையும் 6 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளன. இதுகூட ஐரோப்பிய ஒன்றியத்தால் மிகக்குறைவு என்று கருதப்படுகிறது; இது அயர்லாந்து தனது பற்றாக்குறைகளை இன்னும் குறைக்கவில்லை என்றால் அதன் மீது அபராதங்கள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

கிரேக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 30 பில்லியன் யூரோ சிக்கனத் திட்டம் 20 அல்லது அதற்கும் மேலான சதவிகித ஊதியக் குறைப்பு, அடிப்படை அரசாங்க மாதாந்த ஓய்வூதியத்தில் 10 சதவிகித குறைப்பு மற்றும் சமூகநலப் பணிகள் தூக்கி எறியப்பட்டது ஆகியவற்றை அடக்கியுள்ளது.

இந்த வாரம் ஸ்பெயின் ஒரு உடனடி 5 சதவிகித வெட்டை பொதுத்துறை ஊதியத்தில் அறிவித்துள்ளது. இத்துடன் ஊதிய அதிகரிப்பின்மை தொடரும். இதைத் தொடர்ந்து போர்த்துக்கல் தன் பற்றாக்குறை குறைப்புத் திட்டத்தை விரைவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளது. இதைத்தவிர ஏற்கனவே அங்கு பொதுத்துறை ஊதியங்களில் அதிகரிப்பின்மை அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நடவடிக்கைகளுக்கு ஐரோப்பா முழுவதும் எதிர்ப்பு பெருகிக் கொண்டு வருகிறது; எதிர்வரவிருக்கும் காலம் பிரிட்டனில் மகாத்தான சமூகப் போராட்டங்களை காணும். மிக அதிகளவு சாத்தியமான தொழில்துறை, சமூக, அரசியல் அணிதிரளல் இத்தாக்குதல்களுக்கு எதிராக வரவேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது. ஆனால் அதன் வெற்றி தொழிலாளர் வர்க்கப் போராட்டத்திற்கு புதிய அமைப்புகளை வளர்த்தல் மற்றும் தங்கள் சுயாதீன நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முன்னோக்கு ஆகியவற்றில்தான் உள்ளது.

டோரி-லிபரல் டெமக்ராடிக் கூட்டணியை வீழ்த்துவது மட்டும் போதாது; சோசலிச கொள்கைகளை அடித்தளமாகக் கொண்ட அரசாங்கம் என்ற மாற்றீட்டிற்கும் தயாரிப்பு வேண்டும்.

தொழிற் கட்சி மற்றும் அதன் தொழிற்சங்க ஆதரவாளர்களுடன் ஒரு நேரடி மோதலை தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கிறது. அவர்கள்தான் டோரிக்கள் அதிகாரத்திற்கு மீண்டும் வருவதற்குப் பொறுப்புடையவர்கள். 13 ஆண்டுகளாக தொழிற் கட்சி பெரும் செல்வந்தர்களின் குரலாக செயல்பட்டு, மில்லியன் கணக்கான மக்களின் வெறுப்பை ஈட்டிய சமூக சமத்துவமின்மையின் வரலாற்றுத் தன்மை வாய்ந்த அதிகரிப்பையும் செயல்படுத்தியது.

பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் வாக்குகள் 2005 உடன் ஒப்பிடும்போது 1 மில்லியன் சரிந்தன. இது கிட்டத்தட்ட "முற்றிலும் கைவேலை செய்யும் தொழிலாளர்களால் (manual worker) ஏற்பட்டது" என்று தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் டிரிக்கட் கூறியுள்ளார். 1997ல் இருந்து கட்சி முழுமையாக 5 மில்லியன் வாக்குகளை இழந்துவிட்டது. இளைஞர்களிடையே இது கிட்டத்தட்ட எந்த ஆதரவையும் கொண்டிருக்கவில்லை.

தொழிற் கட்சி அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய நிலையில் இருந்தால், அதுவும் இப்பொழுது தற்போதைய அரசாங்கம் போல் இதேவிதமான தாக்குதல்களைத்தான் நடத்தியிருக்கும். எனவேதான் முன்னாள் பிரதம மந்திரி கோர்டன் பிரௌன், டோரிக்களுக்கும் மற்றும் லிபரல் டெமக்ராட்டுக்களுக்கும் இடையலான பேச்சுக்கள் தள்ளி வைக்க வழிவகுத்தார். இந்தப் பேச்சுக்கள் தேக்க நிலையை அடைந்து, பவுண்டிற்கு பாதிப்பு வரும்போல் தோன்றியபோது, தொழிற் கட்சி-லிபரல் டெமக்ராட்டு கூட்டாட்சியை ஒரு மாற்றீடாக கொள்வதை சாத்தியமாவதற்கு உதவ பதவியை விட்டு இறங்குவதாக அறிவித்தார்; "வலுவான அரசாங்கம்…. போதிய அதிகாரத்துடன் வரவிருக்கும் சவால்களைச் சமாளிக்க வேண்டும்." என்பதே அவரின் நோக்கமாகும்.

ஆனால் அவருடைய கட்சித் தலைமையில் பெரும்பான்மையினர் தம்முடன் அடிப்படையில் வேறுபாடுகள் இல்லாத டோரிக்களுக்கு அதிகாரத்தை கொடுப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெளிவாக்கியபின் ஒரே நாளில் அவர் இராஜிநாமா செய்தார். பின்னர் டேவிட் ப்ளங்கட் மற்றும் ஜாக் ஸ்ட்ரோ போன்றவர்கள் "வாக்காளர்களின் விருப்பங்களை" மதிக்கும் பொறுப்பு உடையவர்கள் எனக்கூறி, தொழிற் கட்சியை ஒரு எதிர்க் கட்சியாக "வலுப்படுத்த", "புதுப்பிக்க" விரும்புவதாக கூறியமை முற்றிலும் தன்னலத்திற்குத்தான்.

அரசாங்கத்தில் ஈராக், ஆப்கானிஸ்தானில் போர்களை தொடங்கிய, மக்கள் ஆதரவில்லாத நடவடிக்கைகளை செயல்படுத்தியதில் தான் தயாராக இருந்தது பற்றி தொழிற் கட்சி பெருமிதம் கொண்டிருந்தது. இதில் குடி உரிமைகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தியது ஆகியவை அடங்கும். இதற்கு ஸ்ட்ரோ மற்றும் ப்ளங்கட் ஆகியோர் நேரடிப் பொறுப்பைக் கொண்டவர்கள். தொழிற் கட்சி தலைமையிலான கூட்டணி ரூபர்ட் மேர்டோக் போன்றவர்களின் ஆதரவைப் பெற முடியும் என்று நம்பியிருந்தால்தான் அவர்களுக்குக் கூறப்பட்டதை அவர்கள் செய்திருக்க முடியும்.

இதற்கு எதிராக தொழிற் கட்சி நிதியத் தன்னலக் குழுவின் நலன்களை தொடர்ந்து ஆதரிக்கும்; இதற்கு அது தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைத்து சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் எதிர்ப்பை நெரிக்க முற்படும். இதுதான் இப்பொழுது நடக்க இருக்கும் தொழிற் கட்சி தலைமைக்கான தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பதை நிர்ணயிக்கும். வெற்றி பெறுபவர் ப்ளங்கட் மற்றும் ஸ்ட்ரோ முன்வைக்கும் ஆணைகளின் படி "நாட்டின் நலன்களைப் பொறுப்பாகச் செய்வதற்கும்", மற்றும் குடியேற்றம், நலன்கள், நியாயம் போன்ற பிரச்சினைகளில்" "கௌரவமான, கடினமாக உழைக்கும் குடும்பங்களின் "மறு இணைப்பு" போன்றவற்றையும் பின்பற்றுவர்.

இத்தகவல்தான் முன்னாள் அமைசரவை உறுப்பினர் ஜோன் டென்ஹாமினால் எதிரொலிக்கப்பட்டது. தொழிற் கட்சி பதவியில் இருந்தபோது செய்த தவறுகள் "நியாயமற்றவை" என்று கருதப்பட்ட "பெரும் குடியேற்றங்களை அனுமதித்தது", "உழைக்காதவர்களுக்கு" வெகுமதி அளித்த முறையில் "வறுமையைக் கையாண்டது", "குடும்ப மதிப்புக்கள் கௌரவமான நடத்தை, உழைப்பதில் பொறுப்புக் காட்டுபவர்கள், சட்டத்திற்கு கீழ்ப்படிபவர்கள் பற்றி ஏதும் கூறாமல் இருந்து விட்டது" ஆகியவை என்றார். "சமத்துவமின்மைக்கு எதிராக உந்துதல் என்பது நம்மை இன்னும் சமமாக்கும் அனைத்துமே நியாயம் என்று கூறமுடியாது'' என்று அவர் அறிவித்தார்.

முன்வைக்கப்படுவது ஒரு வலதுசாரி நிகழ்ச்சி நிரல் ஆகும். இது தொழிலாள வர்க்கத்தை பிரித்தலை நோக்கமாகக் கொண்டு, வேலைகள், ஊதியங்கள், பணிகள் மீதான தாக்குல்களை நியாயப்படுத்த , டோரி-லிபரல் டெமக்ராட்டுக்கள் குடியேறுபவர்கள் மற்றும் பொதுநல உரிமை கோருவோரை பலிகடாக்களாக ஆக்ககுவதை தீவிரப்படுத்தும். அரசியல் இப்பொழுது வர்க்க வழிவகையில் மறு சீரமைக்கப்படுவது தவிர்க்க முடியாதது என ஆகும். உலக முதலாளித்துவ இலாப முறை பரந்த தொழிலாளர்கள், இளைஞர்கள் அடுக்கிற்கு ஒரு புரட்சிகர அடிப்படையில் அரசியல் நிலைநோக்கை வளங்கத் தேவையான நிலைமைகளை தோற்றுவித்துள்ளது..

இந்த வளர்ச்சிகள் மத்தியதர வர்க்கத்தின் போலி இடது குழுக்கள் பிரதிபலிக்கும் உண்மையான சமூக நலன்களின் தன்மை பற்றியும் அம்பலப்படுத்துகின்றன. பொதுத் தேர்தல் இந்த அமைப்புக்கள் தொழிற்சங்கவாத அல்லது சோசலிச கூட்டணி என அமைக்கப்பட்டு அவற்றின் ஆதரவு தொழிற் கட்சி அரசாங்கம் மறு வெற்றி பெறுவதற்கு ஆதரவு கொடுப்பதைக் கண்டது. தேர்தலுக்குப்பின், அவற்றின் அதிகாரத்துவத்துவ சார்பு வலுவடைவதைக் காட்டியுள்ளது.

ஒரு சடங்கு போல் வாடிக்கையாக தொழிற் கட்சி ஒரு முதலாளித்துவக் கட்சி என்று தன் நிலைப்பாட்டை பழையபடி கூறும் சோசலிச கட்சி அதன் பிரச்சாரம் புதிய தொழிற் கட்சி தொழிற்சங்கங்கள் மூலம் "மீட்பது" என்பது "ஒரு பெரிய முற்போக்கான பாதை" என்றும் "நாங்கள் அத்தகைய ஒரு வளர்ச்சியை நோக்கி திரும்புவோர்" என்றும் அறிவித்துள்ளது. தொழிற் கட்சி எம்.பி. ஜோன் மக்டோனல் தொழிற் கட்சி தலைமைத் தேர்தலில் போட்டியிட்டால், "தொழிலாளர்களின் நலன்களுக்கு பாடுபடக்கூடிய ஒரே வேட்பாளர்" என்ற முறையில் தமது ஆதரவை கொடுப்பதாக அது அறிவித்தது.

சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) இன்னும் ஒரு படி மேலே செல்கிறது. தொழிற் கட்சி ஒரு தொழிலாளர் கட்சியாக இருப்பதற்குக் காரணம் "அதன் தொழிற்சங்கங்கத்துடன் உள்ள இணைப்புக்கள் மூலம் ஒழுங்கமைக்கமைக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்துடன் பிணைப்புக்கள் கொண்டுள்ளதினால்தான்" என்று வாதிட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய பகுப்பாய்வில் அது இப்பொழுது தேர்தல் முடிவு "தொழிற் கட்சிவாதத்தின் நீடித்த வலுவைக் காட்டுகிறது" என்றும் "தொழிற் கட்சியை நோக்கி திரும்புதலின்" ஆரம்பத்தையும் காட்டுகிறது என்று கூறியுள்ளது.

இத்தகைய போலி உறுதிப்பாடுகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தொழிற் கட்சிக்கு ஆதரவு என்னும் அறிவிப்பிற்கு ஒப்பாகும். தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டிற்கு இடது பக்கமிருந்து வளர்ச்சியுறும் சவாலுக்கு எதிராகச் செயல்படும் என்ற உறுதியைக் காட்டுகிறது. தொழிற் கட்சிக்கு ஆதரவான வாக்கை சோசலிச சமத்துவக் கட்சி எதிர்த்ததுடன், தொழிற் கட்சியை "வர்க்க எதிரியின் கட்சி" என்றும் வரையறுத்தது. தொழிலாளர்கள் ஒரு புதிய, உண்மையான சோசலிச கட்சியைக் கட்டமைக்கும் சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்ற உண்மையை நாம் கூறினோம்.

எமது நோக்கம் "சிக்கன நடவடிக்கை, இராணுவவாதம் போர் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன, அரசியல் இயக்கத்தை" வளர்ப்பதற்கு அடித்தளம் அமைப்பதாகும்.

இது முதலாளித்துவ இலாபமுறைக்கு எதிராக தொடுக்கப்பட வேண்டும். இது சர்வதேசரீதியாக பொது விரோதிக்கு எதிராக அனைத்து தேசிய எல்லைகளையும் கடந்த தொழிலாளர்களை தனியார் இலாபத்திற்கு என்று இல்லாமல் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சோசலிச மறுஒழுங்கமைப்பிற்காக ஐக்கியப்படுத்த வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியில் எப்படி சேருவது என்ற தகவலை அறிய இங்கு அழுத்தவும்.